Home Uncategorizedமோகம் முத்தாடுதே 22

மோகம் முத்தாடுதே 22

by Layas Tamil Novel
338 views

EPISODE 22

“ஒரு பொண்ணுகிட்ட அவ விருப்பம் இல்லாமல் இப்படித்தான் அத்துமீறுவீங்களா? அப்படி எல்லாம் பண்ணினால் நான் உங்க மேல போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்துடுவேன்” என்றாள்.

“ஓஹோ! என்னோட ஆபீஸுக்கே வந்து என் மேலேயே ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்கிறேன்னு சொல்றியா?” என்றவன், “‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்கிறதுதான் கொடுக்கிற… அப்படியே இதுக்கும் சேர்த்து ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுத்துடு” என்று எழுந்து அவள் அருகில் நெருக்கமாக வர, அதற்குள் ரசிகா சேரில் இருந்து எழுந்து வெளியே செல்லப் போனாள். அவள் கையைப் பிடித்து ‘வெடுக்’கென தன் அருகில் இழுத்தவன், கைவளைவிற்குள் அவளைக் கொண்டு வந்து நிறுத்தியவன், அவள் முகத்திற்கு அருகே முத்தம் கொடுக்கக் குனிந்தான்.

அதை பார்த்துப் பதறிய அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தவள், நொடிப்பொழுதில் சுதாரித்து, தன் கையால் அவன் வாயை மூடி, அவன் முகத்தைப் பின்னால் தள்ளியவள், தன் முகத்தையும் சேர்த்துப் பின்னால் எடுத்துக்கொண்டாள்.

அவளை ஒற்றைக் கையால் இடை மறித்துப் பிடித்துக்கொண்டவன், மற்றொரு கையால் தன் வாயிலிருந்த அவள் கையை விலக்கிப் பிடித்தவன், அவளை நோக்கி மீண்டும் முத்தமிடுவதற்கு குனிய… அர்ஜுன் தன்னை நோக்கி குனிந்து வருவதைப் பார்த்த ரசிகா, தன்னால் எவ்வளவு வளைய முடியுமோ அவ்வளவு தூரம் பின்னால் வளைந்தாள்.

ரசிகா பின்னால் வளையவும், அர்ஜுன் முன்னாள் அவளை நோக்கி குனிந்தது சரியாக இருக்க, அவன் முகம் சரியாக ரசிகாவின் மார்புக் கூட்டுக்கு நடுவில் மிக அருகில் வந்தது.

அப்படியே குனிந்து நின்றபடியே கண்களை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்தவன் குறும்புத்தனமாகச் சிரித்துவிட்டு, அவள் மார்புக் கூட்டுக்குள் முகம் புதைத்து அழுந்த முத்தம் வைத்தான். இதை சற்றும் எதிர்பாராத ரசிகா, பின்னால் வளைந்தவள், அதிர்ச்சியோடு தலையைத் தூக்கி அவனைப் பார்க்க… அவள் மார்புக்குழிக்குள் முகத்தை அழுந்தப் புதைத்து முத்தம் வைத்தவாறு, கண்களை நிமிர்த்தி, ‘அவளை நேருக்கு நேராக ஊடுருவினேன்’ என்று உருவத்தை உயர்த்தி, ‘எப்படி?’ என்பதுபோல அவளைப் பார்க்க… சட்டென்று அவன் தோளில் கை கொடுத்து மேலே எழுந்தவள், அர்ஜுனை வேகமாகப் பின்னால் தள்ளிவிட்டாள்.

அவள் மென்மையின் ஸ்பரிசமும், அவளுடைய இறுக்கமாக வாசல் அணிந்திருந்த சேலையைத் தாண்டி அவளுக்கு முத்தம் கொடுத்ததில் அர்ஜுன் உணர்ந்திருக்க… இங்கே ரசிகாவோ, இப்படி ஒரு நிகழ்வு தனக்கு நடக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்காதவள். அவன் நெருக்கம் ரசிகாவின் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தி இருக்க… அவளையும் அறியாமல் தன் கைகளை மார்புக்குக் குறுக்கே இறுக்கி அணைத்தபடி, வேகமாக மூச்சு எடுத்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

அர்ஜுன், அவனை அறியாமல் ரசிகாவின் நெருக்கமும், அவளுடைய மகரந்த வாசனையும் அவனை அறியாமல் அவள் பால் ஈர்க்க, அவள் மேல் தனக்கு உரிமை இருக்கிறது என்று குனிந்து மார்புக் கூட்டுக்குள் முகம் வைத்து முத்தமிட்டிருந்த உணர்வு அவன் உடலைச் சூடேற்றி இருக்க… அவனும் மூச்சு வாங்க நின்று இருந்தான்.

அவனை கண்கள் சிவக்க ரசிகா முறைத்துக்கொண்டிருக்க… அர்ஜுனோ தன் தலையைக் கோதியபடி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளைப் பார்க்க… குளிர்ந்திருந்த அவள் கண்கள் அவனை மேலும் சுண்டி இழுத்தது. அவள் பார்வையைத் தவிர்ப்பதற்காக, சட்டென்று தன் முகத்தை அவளிடம் இருந்து திருப்பிக்கொள்ள…

“எதுக்காக இப்படிச் செஞ்சீங்க? நீங்க பண்றது உங்களுக்குச் சரியா இருக்கா? அன்னைக்கும் இப்படித்தான் உங்க ஊருக்குள்ள வெச்சு என்ன எங்கெங்கயோ தொட்டு இம்சை பண்ணுவீங்க. இப்போ அதையும் தாண்டி என்ன… என்ன… என்ன… மு.. முத்தம்… அதுவும்…” என்று அடுத்த வார்த்தை பேச முடியாமல் தன் கீழ் உதட்டை ரசிகா கடித்துக்கொள்ள… அர்ஜுன் ரசிகாவைத் திரும்பிப் பார்த்தவன், அவள் தன் ஆரஞ்சு சுளை உதட்டைக் கடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தவன், வேகமாக அவள் அருகில் வந்து அவள் உதட்டைப் பிடித்து வெளியே இழுத்தவன், “இது எனக்கு மட்டும் சொந்தம். இதை நான் மட்டும்தான் ருசிக்கணும், கடிக்கணும், அனுபவிக்கணும். அந்த உரிமை உனக்குக்கூட கிடையாது” என்று அவள் இதழை நோக்கி அர்ஜுன் குனிய…

அவளோ, தான் இத்தனை சொல்லியும் மீண்டும் தன்னிடம் அர்ஜுன் நெருக்கம் காட்டுவதை தாங்க முடியாமல், அவனைத் தன்னிடம் இருந்து விளக்க முயற்சித்தவள். அது முடியாமல் போகவே, ஆத்திரமும், அழுகையும், கோபமும் ஒன்றாக ரசிகா அர்ஜுன் கன்னத்தில் ‘பளார்’ என்று ஓங்கி அறைந்தாள்.

அவள் அடித்ததும், அவளை விட்டு அர்ஜுன் சட்டென்று பின்னால் வர… சரியாக அந்த நேரம் பார்த்துப் பூவிழியும் அவன் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

அங்கு போடப்பட்டிருந்த டேபிளுக்கு ஒரு முனையில் ரசிகா நின்றிருக்க… மறுமுனையில் அர்ஜுன் கன்னத்தில் கை வைத்தபடி நின்று இருக்க… அவர்கள் இருவரையும் பூவிழி மாறி மாறிப் பார்த்தாள். ரசிகாவிற்கும் பூவிழியைப் பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் தன் கைகளைப் பிசைந்தபடி தன் உதட்டைப் பதட்டத்தில் மீண்டும் கழிக்க… அவள் உதடு கடிப்பதைக் கண்டதும் அர்ஜுன் தன் கண்களை உருட்டி அவளைப் பார்வையாலேயே மிரட்டவும்… அவளை அறியாமல் உதட்டைக் கடிப்பதை நிறுத்திவிட்டாள்.

பூவிழி உள்ளே வந்தவள் அர்ஜுனைப் பார்த்து, “என்ன அர்ஜுன், கன்னத்தில் கை வைத்து நின்னுட்டு இருக்க? அவளும் ஏதோப் பதட்டமாக இருக்கிற மாதிரி தெரியுது?” என்றாள் சந்தேகமாக அவர்கள் இருவரையும் பார்த்து.

“அது ஒண்ணும் இல்லை அண்ணி. கன்னத்துல ஒரு எறும்பு கடிச்சிடுச்சு. அதைத்தான் தேய்ச்சிட்டு இருந்தேன்” என்றவன், “உங்க ஃப்ரெண்டு வந்ததிலிருந்து வாயைத் திறக்க மாட்டேங்குறாங்க. என்ன விஷயம் என்று கேட்டுப் பார்த்துவிட்டேன். என்கிட்ட எதுவுமே சொல்ல மாட்டேங்கிறாங்க. நீங்களாவது கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன். எனக்கு அவங்ககிட்ட கேட்டு கேட்டுப் பொறுமை இழந்திருச்சு. நான் கேட்டதைக் கொடுத்தா தானே என்னால அடுத்தடுத்த கட்டத்துக்குப் போக முடியும்?” என்று குதர்க்கமாக ரசிகாவைக் கண்களாலேயே பருகியபடி பூவிழியிடம் பேசிக்கொண்டிருந்தான்.

அவன் ரசிகாவிடம் தனக்கு உரிமை எடுத்துக்கொள்ளும் விதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க… பூவிழியோ, அவர்கள் ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்க வந்த விஷயத்தைப் பற்றி கேட்கிறான் என நினைத்து, ரசிகாவைப் பார்த்தவள், “எதுக்காக நான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்தேன்? இப்படி வாயைத் திறக்காமல் ‘உம்’மென்று நிக்கிறதுக்கா? அர்ஜுன் கேட்டதை ஒழுங்காகச் சொல்லி தொலைக்க வேண்டியதுதானே? எங்கே போனாலும் இப்படிப் பயந்து சாகுற. அப்புறம் போறவன் எல்லாம் உன்னை ‘யூஸ்’ பண்ணிக்கிட்டுப் போயிட்டே இருப்பானுங்க” என்றாள்.

“ஆமாம்டி. நான் இப்படிப் பயந்து சாகிறதுனாலதான் எல்லாரும் என்கிட்ட ரொம்ப ‘ஓவராக’ ‘அட்வான்டேஜ்’ எடுத்துக்கிட்டு என்ன ‘யூஸ்’ பண்ண பார்க்கிறாங்க. நான் மட்டும் கொஞ்சம் இடம் கொடுத்தால், என்னை ‘யூஸ்’ பண்ணிட்டுத் தூக்கிப் போடவும் அவங்க தயங்க மாட்டாங்க” என்று அர்ஜுனை எரிக்கும் விழிகளால் பார்த்தபடி ரசிகா பேச…

அவள் பேசியதன் அர்த்தம் அர்ஜுனுக்குப் புரிந்தது. தான் அவளிடம் உரிமையாக நடந்து கொள்வதை, அவள் மற்றவர்களைப் போலத் தன்னையும் நினைத்துக்கொண்டு இப்படிப் பேசுகிறாள் என்று நினைத்ததும் அர்ஜுனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அதை அவளிடம் காட்ட முடியாமல் தன் கைகளை இறுக்க மூடியவன், மேஜையில் ஓங்கி குத்தினான்.

மரம் மேஜையின் மீது அந்த மேஜையின் அளவிற்குப் பெரிய கண்ணாடி வைத்து ஒட்டப்பட்டு இருக்க, அர்ஜுன் கோபத்தில் குத்தியதும் மேலே இருந்த கண்ணாடி சில்லு சில்லாக உடைந்து அவன் கைகளில் ஏறியது.

அதைப் பார்த்த பூவிழி பதட்டமடைந்து அவனிடம் வந்தவள், “என்ன அர்ஜுன்! ஆச்சு? இப்போ எதுக்காக இப்படி கோபமாக மேஜையைக் குத்தறீங்க?” என்று அவனைக் கேட்க…

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை அண்ணி. உங்க ஃப்ரெண்டு முதல்ல தைரியமாக இருக்கச் சொல்லுங்க. அவங்களை ‘யூஸ்’ பண்ணிக்கறதுக்காக யார் அவங்ககிட்ட பழகுறாங்க? அவங்ககிட்ட உரிமையோடு யார் பழகுறாங்கன்னு முதல்ல பிரிச்சுப் பார்த்துத் தெரிஞ்சுக்கச் சொல்லுங்க. இவ்வளவு பெருசா வளர்ந்து என்ன பிரயோஜனம்? அவங்ககிட்ட யாரு உண்மையா பழகுறாங்கன்னு கூட அவங்களால தெரிஞ்சுக்க முடியல” என்றான்.

பூவிழிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ‘அவள் பேசுவது ஒரு மாதிரி ஒரு விதமாக இருந்தால், இவனும் ஒரு விதமாகப் பேசுகிறானே! இவர்கள் இருவருக்கும் என்ன ஆனது?’ என்று குழம்பியவள், “அர்ஜுன், நீ இங்க வா” என்று அவன் கையைப் பிடித்து அருகில் இருந்த சோபாவில் அமர வைத்தவள், “இங்கே ‘ஃபர்ஸ்ட் எய்டு கிட்’ எதுவும் இருக்கா அர்ஜுன்?” என்று கேட்டாள் பூவிழி.

அவன் கைகள் நீட்டி, தன் அறையின் மூலையில் ‘ஃபர்ஸ்ட் எய்டு கிட்’ இருக்கும் இடத்தைக் காட்ட… பூவிழி அதை எடுக்கச் சென்றாள். ரசிகாவோ அர்ஜுன் கைகளில் கண்ணாடி சில்லுகள் நிறைய ஏறி அவன் கையில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருப்பதையே பார்த்தவள் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. அவள் ஜடம் போல நின்றிருப்பதைப் பார்த்து அர்ஜுனுக்கு ஆத்திரமாக வந்தது. பூவிழி இருந்ததனால், அமைதியாகக் கோபத்தோடு அவளைப் பார்த்தவாறு சோபாவில் அர்ஜுன் அமர்ந்திருக்க… ‘ஃபர்ஸ்ட் எய்டு கிட்’டை எடுத்து வந்த பூவிழி, அதிலிருந்து பஞ்சை எடுத்து அவன் கையில் வழிந்து கொண்டிருந்த இரத்தத்தைத் துடைக்க முற்பட… அவன் கைகளில் சுற்றிலும் கண்ணாடி சில்லுகள் ஏறி இருக்க, அதை எப்படி அப்புறப்படுத்தி சுத்தம் செய்வது என்று தெரியாமல் பூவிழி தடுமாறினாள்.

அதைப் பார்த்ததும் அவ்வளவு நேரம் அசையாமல் நின்றிருந்த ரசிகா பொறுமை இழந்து வேகமாகப் பூவிழியிடம் வந்தவள், பூவிழி கையில் இருந்த பஞ்சை வாங்கியவள், “நீ நகரு பூவிழி” என்றாள்.

“அட ஆமாம் இல்ல? இங்கேயே ஒரு டாக்டர் வெச்சுக்கிட்டு நான் என்னவோ பெரிய இவள மாதிரி அர்ஜுனுக்குக் கட்டுப்பட பார்க்கிறேன்” என்று சொன்ன பூவிழி, எழுந்து ரசிகாவிற்கு வழி விட… அவனுக்குக் கீழே முழங்காளிட்டு அமர்ந்த ரசிகா, அர்ஜுனின் கையைப் பிடித்து அதிலிருந்து கண்ணாடிச் சில்லுகளை மெதுமெதுவாக அதன் சில்லுகள் எதுவும் அவன் கைகளில் ஏறிவிடாதவாறு எடுத்துப் போட்டாள். கண்ணாடி சில்லுகள் மொத்தமும் எடுத்த பிறகு, பஞ்சைக் கொண்டு முதலில் வழிந்த இரத்தத்தைச் சுத்தம் செய்து, ‘டிஞ்சர்’ கொண்டு அவன் கையில் காயம் ஏற்பட்டிருந்த இடத்தில் எல்லாம் சுத்தம் செய்தாள்.

அதில் அவனுக்கு வலி எடுக்கவே, “ஷ்…” என்று தன் வலியைப் பொறுக்க மாட்டாமல் சட்டெனக் குனிந்து ரசிகாவின் தோளில் கை வைத்து அழுத்தினான். அதைக் கவனித்த ரசிகாவும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவள் வேலையில் தீவிரமாக இருக்க…

“என்ன அர்ஜுன், நீ பாரு, உன் கையெல்லாம் எவ்வளவு காயம் ஆகி இருக்கு? ஏன்தான் இப்படி எல்லாம் நடந்துக்கிறியா தெரியல” என்று புலம்பிய பூவிழி, “இவள என்கூட ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்க கூட்டிட்டு வந்ததே தப்பா போயிடுச்சு. அவ ஏதோ பேசப் போய், நீ பதிலுக்குத் திரும்பப் பேசி, கோபம் வந்து இப்படி உனக்குத்தான் காயம் ஆச்சு” என்றாள் பூவிழி.

வலியில் தன் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டவன், பூவிழி பேசியதைக் கேட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை அண்ணி. நான் வேற ஏதோ ‘டென்ஷன்’ல இருந்தேன். அதை விடுங்க. சரி, சொல்லுங்க. இவங்க எதுக்காக ‘கம்ப்ளெயிண்ட்’ கொடுக்க வந்திருக்காங்க?” என்றான் ரசிகாவை ஓரக்கண்ணால் பார்த்து.

“அர்ஜுன், நான் சொன்னேனே. ‘ஃபார்ச்சூன்’ மருத்துவமனையில் ‘பீடியட்ரிஷன்’ ஆக ஒரு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் அந்த மருத்துவமனையில் வேலை இருந்தா. அந்த மருத்துவமனை ‘டீனுக்கு’ ரசிகா மேல ஒரு கண்ணு. அதனாலேயே இவளை அடிக்கடி தனக்கு அசிஸ்டண்ட்டாகவோ அல்லது மருத்துவ சம்பந்தமாக எதுவும் ‘வொர்க்’ இருந்தா ரசிகாவைக் கூப்பிட்டு, தன்னுடைய அறையில் வெச்சு அவளை வேலை வாங்கித் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தான். ரசிகாவும் அப்போதைக்கு என்ன செய்யறதுன்னு தெரியாமல் இதையெல்லாம் பொறுத்துக்கிட்டு அங்க வேலை பார்த்துட்டு இருந்தா.

“ஒரு நாள் ‘நைட் டியூட்டி’ என்று சொல்லி அந்த மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருக்கான். அப்போ…” என்று அங்கு நடந்ததை விவரிக்க ஆரம்பித்தாள் பூவிழி.

மருத்துவமனைக்குள் நுழையும்போதே ரசிகா ஏகக் கடுப்பில் நுழைந்தாள். ‘பீடியட்ரிஷனுக்கு’ காலையும், மாலையும் ஓ.பி. பார்ப்பதற்கு மட்டுமே அங்கே வேலை என்பதால், இவள் அந்த வேலையைச் செய்வதால் தேவையில்லாமல் தன்னை ‘நைட் டியூட்டி’ என்று சொல்லி மருத்துவமனைக்கு வரச் சொன்ன ‘டீன்’ மீது ஆத்திரமாக வந்தது. ‘இன்று அவனைப் பார்த்து நறுக்கென்று கேட்டுவிட வேண்டும். மருத்துவமனை தனக்கு வேலையே இல்லை என்றாலும் பரவாயில்லை’ என நினைத்து மருத்துவமனை வந்தவள், வேகமாக ‘டீன்’ இருந்த அவன் அறைக்குச் சென்றாள்.

கதவைத் தட்டிக்கொண்டு அவன் அறைக்குப் போக, அறையில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தான் அந்த ‘டீன்’. அவனை அந்த நிலையில் பார்த்ததுமே ரசிகாவிற்கு அதிர்ச்சியாகிவிட்டது. வேகமாக அவனிடம் வந்தவள், “என்ன சார் இப்படி நீங்க பொறுப்பே இல்லாமல் மருத்துவமனையில் இருக்கிற நேரத்துல ‘ட்ரிங்ஸ்’ பண்ணிட்டு இருக்கீங்க? இது உங்களுக்குச் சரியா படுதா சொல்லுங்க? ‘எமர்ஜென்சி’னு ஏதாவது கேஸ் வந்தா, இந்த நிலைமையில் போய் நீங்க ‘ஆப்பரேட்’ பண்ணுவீங்க?” என்று அவனைக் கேட்க…

“எமர்ஜென்சி கேஸ் தானே? அது வந்தா பார்த்துக்கலாம். ரசிகா, வா… வா… நான் உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருந்தேன். இப்படி வந்து உட்காரு” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து அவளை வலுக்கட்டாயமாகத் தன் அருகில் இருந்த சோபாவில் இழுத்து அமர வைத்தான்.

அதில் அதிர்ந்த ரசிகா, “சார், என்ன இது? என்னை விடுங்க” என்று சோபாவில் இருந்து எழுந்திருக்கப் போக, “எங்கே போற ‘டார்லிங்’? உனக்காகத்தான் நான் இவ்வளவு நேரம் ‘வெயிட்’ பண்ணிட்டு இருந்தேன்” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து இழுக்க… அவன் இழுத்த வேகத்தில் அந்த ‘டீன்’ மீது போய் ரசிகா விழுந்தாள்.

அவள் தன் மடி மீது விழுந்ததும், ரசிகாவை விடாமல் இருக்கக் கட்டிக்கொண்டவன், அவளிடம் அத்துமீற முயற்சிக்க… அதில் அதிர்ந்த ரசிகா, தன்னால் முடிந்த பலம் கொண்டு மட்டும் தன்னிடம் இருந்து அந்த ‘டீனை’ முரட்டுத்தனமாகத் தள்ளியவள், அவனை அடிக்கத் துவங்கினாள். சட்டெனத் தன் மடியில் அமர்ந்திருந்தவளைத் தூக்கி சோபாவில் கிடத்திய ‘டீன்’, அவளை முத்தமிடக் குனிய… இதை சற்றும் எதிர்பாராத ரசிகா, தன்னை நெருங்க விடாமல் ‘டீனின்’ சட்டையைப் பிடித்து உலுக்கியவள், “தயவு செய்து என்னை விடுங்க சார். ப்ளீஸ். எதுக்காக இப்படி எல்லாம் நடத்துகிறீங்க? உங்க வயசு என்ன? என் வயசு என்ன? தயவு செய்து என்னை விட்டுடுங்க” என்று கெஞ்சிக்கொண்டே அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவள், தன்னிடம் நெருங்க விடாமல் கஷ்டப்பட்டுப் போராடிக்கொண்டிருக்க… அந்த நேரம் பார்த்து அவர்கள் அறைக்கதவைத் திறந்துகொண்டு ‘டீனின்’ மனைவி உள்ளே நுழைந்தார்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured