EPISODE 9
“யாருடா பாவம் நீ? நீயாடா பாவம்? என்னை ஏமாத்தி கல்யாணம் செய்தது மட்டும் பத்தாம நேத்து நைட்டு… நேத்து… நைட்டு…” என்று அவன் கையிலிருந்து தன் கையை உதறிவிட்டு வீராவின் மார்பில் அடித்தாள்.
“ரோஸ் மில்க்… என்ன செய்யற?” என்று அவளிடம் இருந்து பின்னால் சென்றவாறே… அவள் கையைப் பிடிக்க… அப்போது அங்கே அவர்களுக்கு இடையில் வந்த கவினும், ராகவும், “ஏய், என்னடி இவன் உன்னை ‘ரோஸ் மில்க்’னு கூப்பிடறான்?” என்று சொல்லிச் சிரித்தார்கள்.
அவர்களைத் திரும்பி முறைத்த பூவிழி, “அதை ஏன்டா என்கிட்ட கேட்குறீங்க? இதோ, என்னை இப்படி கூப்பிடுறவன் உங்க முன்னாடிதானே நிக்குறான்? அவன்கிட்டேயே கேளுங்க…” என்றவள், திரும்பி வீராவை முறைத்தாள்.
“உன்னை… உன்னை… நேத்து ராத்திரி என்னை என்ன எல்லாம் செய்யப் பார்த்தே…” என்று அவனை நோக்கிச் செல்ல… வீராவும் அவள் பேசுவதை ரசித்துக்கொண்டு பின்னால் சென்றவன், அங்கே இருந்த சுவற்றில் மோதி நின்றான்.
அவனை முறைத்தவள், “டேய் பொறுக்கி… அப்போகூட உன்னை இவ்ளோ மோசமா நான் நினைக்கலடா… ஆனா, நீ… நீ… என்னை…” என்று ஆத்திரமும், கோபமுமாய் வீராவை அடிக்க கை ஓங்கினாள்.
அவள் கையைப் பிடித்துக்கொண்டு பூவிழியின் கோபத்தை ரசித்தவன், “ஏய் ரோஸ் மில்க், பேசாம இரு. நமக்குள்ள நடந்ததை எல்லாம் இவனுங்க முன்னாடி சொல்லாத…” என்று அவளை எச்சரித்தான்.
“ஏன் சொல்லக் கூடாது? அப்படித்தான்டா சொல்லுவேன். அப்போதான் நீ எப்படின்னு இவனுங்களுக்குத் தெரியும். நீ பண்ணின பொறுக்கித்தனம் புரியும்” என்று அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொள்ள முயற்சித்துக்கொண்டே வீராவை அர்ச்சனை செய்தாள் அவன் ‘ரோஸ் மில்க்’.
பூவிழி பேசியதைக் கேட்டதும் நால்வருக்கும் ஆர்வம் வந்துவிட, வேகமாக அவர்களிடம் வந்த நால்வரும், “ஏய், அவன் என்னடி செய்தான் உன்னை… சொல்லு சொல்லு… எங்களுக்குத் தெரிய வேணாமா? நேத்து நைட் இவன் ஏதோ பொறுக்கித்தனம் செய்தான்னு சொன்னியே… அது என்னனு சொல்லு” என்று ஆர்வமாகக் கவின் கேட்க…
மற்றவர்களும் வீரா என்ன செய்தான் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டு, பூவிழி என்ன சொல்லப் போகிறாள் என்று அவளையே பார்த்தனர்.
அந்த காபி ஷாப்பில் இருந்த சிலரும், அங்கு வேலை பார்ப்பவர்களும் கூட ஆர்வமாகப் பூவிழியையே பார்க்க…
அதை எல்லாம் கவனித்த வீரா, பூவிழி “வேண்டாம் சொன்னா கேளு… எல்லாரும் நம்மளையே பார்க்குறாங்க… நீ பேசுறதை எல்லாம் அவங்க கேட்டுட்டு இருக்காங்க…” என்று அவளை எச்சரித்தான்.
“பார்த்தா பார்க்கட்டுமே… கேட்டா கேட்கட்டுமே… நான் சொல்லுவேன்டா…” என்று கவினைப் பார்த்தவள், “டேய், நேத்து நைட் இந்தப் பொறுக்கி ரூமுக்குள்ள நான் போன அப்போ, இவன் என்னை என்ன செய்தான் தெரியுமா?” என்றவள்…
திரும்பி வீராவை முறைத்து, “உன் வண்டவாளம் எல்லாம் நான் இன்னைக்குத் தண்டவாளம் ஏற்றல, என் பேரு பூவிழி இல்லைடா…” என்றவள், திரும்பி கவினையும் மற்றவர்களையும் பார்த்து, “நேத்து நைட்டு… நான்…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன், அவள் கைகளைப் பிடித்திருந்த வீரா அவளைத் தன் பக்கம் திருப்பி, அவள் முகத்தைப் பிடித்து அடுத்து எதுவும் பேசாத வண்ணம், அவள் இதழைச் சிறை செய்திருந்தான்.
அதை அவள் மட்டும் இல்லை, அங்கே இருந்தவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.
சட்டென அவர்கள் இருவரின் நண்பர்கள் நால்வரும் திரும்பிக்கொள்ள, மற்றவர்கள் சிரித்துக்கொண்டே… அங்கே எதுவுமே நடக்காததுபோலத் திரும்பிக்கொண்டார்கள்.
தன் நண்பர்கள் முன்பு வீரா இந்த மாதிரி ஒரு செயலைச் செய்வான் என்று அவளால் நம்ப முடியவில்லை. அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவன் தோளிலும், மார்பிலும் மாறி மாறி அடித்தாள் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள…
ஆனால், வீரா… அதற்கு எல்லாம் எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல், ‘கருமமே கண்ணாக, காரியத்தில் குறியாக’ அவள் சிவந்த உதட்டை மேலும் சிவக்க வைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தான்.
அவசரப்படாமல் அவள் உதட்டில் மெல்ல மெல்ல தன் உதட்டால் தழுவிக்கொண்டு முத்தம் வைத்தான். அவளுக்கு அவ்வப்போது மூச்சுவிடச் சிறிது இடைவெளி விடும் வேளையில் எல்லாம் பூவிழி ஏதாவது பேச வர… அவளைப் பேசவிடாமல் தடுப்பதற்கு என்று மீண்டும் மீண்டும் முத்தம் வைத்தான்.
கண்கள் மூடி இதைப் பார்க்க முடியாமல் திரும்பிக்கொண்டிருந்தவர்கள், மெதுவாகத் திரும்பி இவர்கள் இருவரையும் பார்க்க… வீரா நன்றாகச் சுவற்றில் சாய்ந்து, தன் கால்கள் இரண்டையும் அவள் உயரத்திற்கு வரும் அளவிற்கு இருபுறமும் பரப்பிக்கொண்டு நின்று, அவளை இடையோடு சேர்த்து அணைத்து, அவள் இதழில் அதிதீவிரமாக முத்தம் வைத்துக்கொண்டிருந்தான்.
அவன் பூவிழி இதழிலிருந்து தன் இதழைப் பிரிக்க, ஆத்திரம்கொண்ட பூவிழி… “டேய், நேத்து இவன் இப்படித்தான்…” என்று மறுபடியும் பூவிழி ஆரம்பிக்க…
மீண்டும் அவள் இதழை வீரா கவ்வினான். அதைக் கவனித்துக்கொண்டிருந்த கவினும், ஸ்ரீயும் “மீண்டும்… மீண்டும்மா?” என்று சொல்லித் தங்களைத் திரும்பிப் பார்த்தது பெருமூச்சுவிட்டனர்.
“ம்ஹூ… டேய், இவன் வாழறாண்டா… நம்ம முன்னாடியே பூவிழியை இவ்வளவு விடாமல் இப்படி கிஸ் அடிக்கிறானே… அப்போ நேத்து என்னென்ன செஞ்சிருப்பான்?” என்று ராகவ் மித்ரனிடம் கூற…
“ஆமாம்டா… அப்போ உண்மையாவே வீரா பூவிழியை லவ் பண்ணிட்டு இருந்தானா இத்தனை வருஷமும்? ஏன்டா என்கிட்டே யாருமே சொல்லலை?” என்றான் மித்ரன், வீரா செய்யும் வேலையைப் பார்த்துக்கொண்டே.
“நீயும் பூவிழியும், ஸ்ரீயும் ரொம்ப க்ளோஸ். நாங்ககூட அப்போ அப்போ பேசிக்குவோம். ஆனா, எங்களுக்குக் காலேஜ் டேஸ்லயே வீரா பூவிழியைத் தீவிரமா லவ் பண்றான்னு தெரியும். உன்கிட்டே இந்த விஷயத்தைச் சொன்னா நீ அதை பூவிழி கிட்டே உடனே போய் சொல்லிடுவ… அப்புறம் அங்கே ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா இருக்குறது கெட்டுப் போயிடும்னு அவன் தான்டா சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டான்” என்றான் ராகவ்.
“சரிடா, நீ சொல்றதும் சரிதான். அதுக்கு பிறகுதான் இவன் பூவிழி கூடச் சண்டை போட்டுட்டானே… அப்புறமாவது சொல்லி இருக்கலாமே?” என்றான் மித்ரன்.
“ஏற்கனவே அவனுக்கும் அவளுக்கும் பேச்சுவார்த்தை இல்லை… இதுல இந்த விஷயம் தெரிஞ்சா சுத்தமாப் பேசாமப் போயிடுவாளோன்னுதான் சொல்லலை” என்றான் ராகவ்.
“ஆக மொத்தம், எங்க கிட்ட இருந்து மறைக்கணும்னு முடிவு பண்ணி இருக்கீங்க… ம்ஹூம்… சரி விடுங்க… எப்படியோ அவ நினைச்ச மாதிரி பூவிழியை கல்யாணம் செய்துகிட்டான். ஆனா, இந்த பூவிழி பண்றதை எல்லாம் பார்த்தா அவனைப் பிடிக்காததுபோல இல்ல. அப்புறம் எப்படிடா அவனுக்கும் அவளுக்கும் செட் ஆகும்?” என்றான் மித்ரன் புரியாமல்.
“டேய், நம்ம பூவிழி கிளி வந்து வசமா வீராவோட காதல் கூண்டுக்குள்ள மாட்டிக்கிச்சு… இனி அவளுக்கு வேற சாய்ஸ் கிடையாது. வீராவை பூவிழி லவ் பண்ணித்தான் ஆகணும், அவன் கூட வாழ்ந்துதான் ஆகணும். அப்படியே அவளுக்குப் பிடிக்கலைன்னா… அவளுக்கு அவனைப் பிடிக்க வெக்குற மாதிரி வீரா பூவிழியைத் தன் வழிக்குக் கொண்டு வந்திருவான்” என்றான் ராகவ்.
“என்னவோ போ. ஆக மொத்தம் கிளி வந்து தொக்கா மாட்டிக்கிச்சு…” என்று பூவிழியைப் பார்த்துக் கூறினான் மித்ரன்.
“ஆமாம்டா மாப்பிள்ளை…” என்ற ராகவ், “மாட்டிக்கிச்சு… மாட்டிக்கிச்சு… மாட்டிக்கிச்சு…” என்று சினிமா பாடலை ஹம் செய்துகொண்டே… “சரி வாடா, இவனை விட்டா நாள் பூரா அவள் உதட்டைப் பிச்சுத் தின்னுட்டு இருப்பான். வா… நாம போய் அவங்களை விலக்கி விடலாம்” என்றான் ராகவ்.
“டேய், அவங்க ரெண்டு பேரும் என்ன சண்டையா போடுறாங்க பிரிச்சு விடுறதுக்கு? பேசாம வாடா. நாம ஆர்டர் செய்த காபி வந்திருச்சு. அதையாச்சும் போய் குடிப்போம்” என்று மற்றவர்களையும் இழுத்துக்கொண்டு போய் அவர்கள் டேபிளில் அமர்ந்தனர். இவர்கள் இருவரும் வரும்போது வரட்டும் என்று.
சிறிது நேரம் கழித்து பூவிழியின் இதழை விட்டவன், அவள் முகத்தைப் பார்க்க… அவள் உதடு அவள் பெயருக்கு ஏற்றதுபோலச் சிவந்திருந்தது. அவன் முத்தம் தந்த உணர்வு அவளையுமறியாமல் பூவிழியின் கன்னங்களையும் சேர்த்துச் சிவக்க வைத்திருந்தது.
அதை ரசித்தவன், அவளைத் தன்னிடமிருந்து விலக்கி நிற்க வைத்து, அவள் அணிந்திருந்த ஆடையைச் சரி செய்தவன், பூவிழியின் கை பிடித்து அழைத்து வர… அவன் கையை உதறிவிட்டுப் போன பூவிழி, வேகமாக அவனைத் தாண்டி வந்து மித்ரனுக்கும், கவினுக்கும் இடையில் சென்று அமர்ந்துகொண்டாள், வீரா அருகில் அமராமல்.
வீராவும் அவளைப் பார்வையால் விழுங்கிக்கொண்டே வந்து, அவளுக்கு எதிரே இருந்த சேரை இழுத்துப்போட்டு அதில் அமர்ந்தான்.
வீராவின் பார்வை பூவிழியை விட்டுத் துளியும் விலகாமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்க… பூவிழிக்கு அவன் பார்வையை எதிர்கொள்ளச் சிரமமாக இருந்தது. “டேய், என்னையே ஏன்டா பார்க்குற?” என்று மீண்டும் பூவிழி சண்டையை ஆரம்பிக்க… அவள் அருகில் அமர்ந்திருந்த கவின், “அம்மா தாயே பூவிழி, உன் வாயைக் கொஞ்சம் மூடு… அதான் நீ பேச வர அப்போ எல்லாம் இவன் விடாம உன் உதட்டைப் பிச்சுத் திங்குறானே? மறுபடியும் அவன்கிட்டே போய் மாட்டிக்கணுமா? பேசாம இரு. இப்போ என்ன? உனக்கு அவன் உன்னைப் பார்க்கக் கூடாது அவ்வளவுதானே?” என்றான் கவின்.
பூவிழி, வீராவை முறைத்துக்கொண்டு “ஆமாம்” என்று தலையை ஆட்ட…
கவின் திரும்பி வீராவைப் பார்த்தான். அவன் திரும்பி கவினை முறைக்கவும், “ம்ஹூம்… இவன்கிட்டே பேசி நம்ம வாயைப் புண்ணாக்க வேண்டாம். வேற எதும் பண்ணுவோம்” என்று யோசித்தவன்…
தனக்கு முன்னாள் டிஷ்யூ பேப்பர் இருக்க… அதை எடுத்துப் பிரித்தவன், திரும்பித் தன் அருகில் அமர்ந்திருந்த பூவிழியின் முகத்தில் அந்த டிஷ்யூ பேப்பரை போர்த்திவிட்டு, அவள் முகத்தை வீரா பார்க்காத வண்ணம் மூடிவிட்டான். அதைப் பார்த்த வீரா முதற்கொண்டு மற்றவர்கள் சிரிக்க… பூவிழிக்குக் கடுப்பாகவும், தன் முகத்தில் இருந்த டிஷ்யூ பேப்பரை ‘வெடுக்கென்று’ இழுத்தாள். அவள் தலைமுடி கலைந்துவிட… அப்படியே அவள் எதிரில் இருந்த வீராவை முறைத்துக்கொண்டு அமர்ந்திருக்க…
“ஹே ரோஸ் மில்க், இப்படி முகத்தை வெச்சுட்டு என்னை முறைக்காத. அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது” என்று சொல்லிக்கொண்டு, தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து எட்டி, அவள் கலைந்த தலைமுடியைச் சரி செய்துவிட்டான்.
அவன் கையைத் தட்டி விட்டவள் வேகமாக எழுந்து மற்றவர்களைப் பார்த்து, “நான் வீட்டுக்குப் போறேன்” என்று அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் செல்லவும் வீராவும், “சரிடா, நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல்ல கவின்? பூவிழி மேல கம்ப்ளைன்ட் கொடுத்தவங்களை என்ன செய்யணுமோ செஞ்சுரு” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
“என்னடா இவன்? அவ மேல இப்படிப் பைத்தியமா இருக்கான்?” என்று ஸ்ரீ, பூவிழியின் பின்னால் வம்பு வளர்த்துக்கொண்டே செல்லும் வீராவைப் பார்த்துக் கேட்டான். “உங்களுக்கு இன்னைக்குத்தான் தெரியும். எங்களுக்கு அவன் அவளை லவ் பண்ணிட்டு இருந்தபோதிருந்து தெரியும். எங்களை எல்லாம் எப்படி டார்ச்சர் பண்ணுவான்னு தெரியுமா?” என்று கவினும், ராகவும் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, வீராவுடன் காரில் ஏற மறுத்த பூவிழியை குண்டுகட்டாகத் தூக்கி காரில் அமர வைத்துக்கொண்டிருந்தவனைப் பார்த்து கூறினர்.
