EPISODE 35
கருப்பாத்தாளில் தொந்தரவு தாங்காமல் கொள்ளைப்புறம் சென்றாள் ரோஜா அங்கே சட்டையை கழட்டி விட்டு அவளைப் பார்த்து சிரித்தபடி நின்று இருந்தான் சித்து.
அவனை அப்படி பார்த்ததும் அதிர்ந்தவள் அதை காட்டிக் கொள்ளாமல் அங்க இருக்க கிணறுல வாலியும் கயிறு இருக்கு தண்ணி மொண்டு ஊத்தி குளிச்சுட்டு சீக்கிரம் உள்ள வந்திருங்க ரொம்ப வெயிலா இருக்கு உங்க ஸ்கின்னுக்கு செட்டாகாது என்றாள்
அவன் சினிமாவில் நடிப்பதால் மேனி பராமரிப்பு மிகவும் முக்கியம் என்று ரோஜாவிற்கும் நன்கு தெரியும் அதனால் தான் அவளிடம் அப்படி கூறினாள்
எனக்கு அது எப்படி பண்றதுன்னு தெரியாது நீயே தண்ணி எடுத்துக் கொடு நான் குளிச்சுக்குறேன் என்றான்
தெரியாதா என்று அவனைப் பார்த்தவன் வாஸ்தவம் தான் பான் வித் சில்வர் ஸ்பூன் இல்ல நீங்க உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்றுவள் கத்துக்கோங்க ஒன்னும் தப்பில்ல நான் சொல்லிக் கொடுக்கிறேன் என்று கிண்ணத்தில் வீட்டில் இருந்து வாலியை ஒரு கையில் எடுத்தவள் மற்றொரு கையால் அங்கிருந்து கயிற்றைப் பிடித்துக் கொண்டு அதை மெல்ல கிணற்றுள் இறக்க…
இதுக்குள்ள இருந்து இப்படித்தான் தண்ணிய எடுப்பீங்களா என்றவாறு அவள் பின்னே வந்து ரோஜாவின் இடையை கட்டிக்கொண்டு நின்றபடி கேட்டான்
உங்கள வேடிக்கை பார்க்க சொல்லல நான் எப்படி தண்ணி எடுக்குறேன்னு கத்துக்க சொன்னேன் முதல்ல என்ன விடுங்க என்று உடலை நெளித்தாள்
அதைத்தான் நான் பண்ணிட்டு இருக்கேன் நீ ஒருவாட்டி எப்படி பண்ணனும்னு சொல்லிக் கொடு அதை அப்படியே கேட்ச் பண்ணி நானும் செய்றேன் என்று அவளை மேலும் இறுக்கி அணைத்தவாரு பேச
இவன திருத்த முடியாது என்று நினைத்தபடி வாலியில் தண்ணீரை உண்டு வெளியே எழுத்துவள் அதை அருகில் இருந்த பெரிய அண்டாவில் ஊற்றினாள்
நான் எப்படி தண்ணி எடுத்தேன்னு பாத்தீங்களா இந்தாங்க நீங்களும் அதே போல செஞ்சு இந்த பாத்ரூம் ஃபுல்லா ஃபில் பண்ணிட்டு அதுக்கப்புறம் குளிங்க என்றாள்
ஏய் இது என்ன பெரிய விஷயமா குடு நான் ட்ரை பண்றேன் என்று அவர் கையில் இருந்த வாலியை வாங்கியவன் ஒரு கையால் கயிறு பிடித்துக் கொண்டு கையில் இருந்த வாலியை கிணற்றுக்குள் தூக்கி வீசினான்
ஐயோ சின்னையா என்ன பண்றீங்க என்று அவள் வேகமாக ஓடி வர அதற்குள் வாலியும் கயிறும் கிணற்றுக்குள் விழுந்திருந்தது
ஓடிவந்தவளை தடுத்து பிடித்தவன் ரோஜாவை இழுத்து அவள் இதழை கவ்வி இருந்தான்.
இவனுக்கு இதே வேலையா போயிருச்சு அவசரத்துல சின்னய்யான்னு சொல்லிட்டேன் இது தான் சாக்குனு என் உதட்டை கடிச்சு திங்க வேண்டியது என்று புலம்பியவள்
அவன் தோளில் கை வைத்து சித்துவை பின்னால் தள்ளியவள் வாலி போச்சே என்று கிணற்றை எட்டி பார்த்தாள்
அது போகட்டும் நீ வா என்று அவளை விடாமல் இம்சை செய்தான் சித்து
ஐயோ கொஞ்ச நேரமாவது கையை காலை வெச்சிட்டு சும்மா இருக்கியா டா நீ இப்போ எப்படி டா லூசு குளிப்ப என்றாள் கோபத்தில்
ஹேய் என்ன டி அப்படியே என்னை டா போட்டு பேசுற லூசுன்னு வேற சொல்ற பொண்டாட்டியை ஆசையா கொஞ்ச வந்தா நீ என்ன இவ்ளோ பேசுற என்ன என்று கோபமானவன்
பாட்டி அத்த நான் ஊருக்கே கிளம்பறேன் இவ என்னை கண்டபடி திட்டுறா என்று வீட்டிற்குள் இருந்தவர்களிடம் ரோஜாவை போட்டுக் கொடுத்தான்
அவன் குரல் கேட்டதும் இருவரும் அவரவர் வேலையை அப்படியே போட்டுவிட்டு கொள்ளை புறம் வந்தனர்
அங்கே வெறும் பேண்ட் மட்டும் அணிந்து நின்ற சித்தவை பார்த்ததும் சின்ன பொண்ணு வேறு பக்கம் திரும்பிக் கொண்டு தம்பி என்ன ஆச்சு ஏன் சத்தம் போட்டீங்க என்றார்
ஏண்டி ரோசா என்னடி பண்ண தம்பியை எதுக்கு கத்துச்சு இப்போ என்றார் கருப்பு
ஐயோ கருப்பு நான் ஒன்னும் பண்ணல இவன்தான் தண்ணீர் சேர்ந்த வெச்சிருந்த வாலியை கயத்தோட கிணத்துக்குள்ள விட்டுட்டான் அதுக்கு தான் திட்டினேன் என்றாள் ரோஜா
என்னது வாலியும் கயிறும் கிணத்துக்குள்ள விழுந்துடுச்சா என்று வேக வேகமாக கிணற்றடிக்கு வந்தவர் உள்ளே எட்டிப் பார்க்க சித்துப் போட்ட வாலியும் கயிறும் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது
ஏண்டா கட்டையில போறவனே எத்தனை படம் நடிச்சிருப்ப ஒரு தண்ணி இறைக்க தெரியல உனக்கு இப்படி வாலியோட சேர்த்து கயித்தையும் உள்ளே விட்டுட்டியே டா என்று சித்துவை அர்ச்சனை செய்தவர்
வா டா நீ முதல்ல இங்க வா நீதானே உள்ள போட்ட போய் நீயே எடுத்து கொடு என்று அவன் கையை பிடித்து கிணற்றருகே இழுத்து வந்தார்
ஐயோ பாட்டி என்னை இப்படி கொள்ள பாக்குறியே எனக்கு இதுல எல்லாம் எப்படி ஸ்விம் பண்றதுன்னு தெரியாது என்றான்
என்ன தெரியாது என்று அவர் புரியாமால் கேட்க..
பாட்டி உன்னை போய் நான் கூப்பிட்டேன் பாரு என்றவன் அவரிடம் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் விழிக்க
நான் ராசம்மா கிட்டே போயி கயிறு வாங்கிட்டு வரேன் என்று சின்னப்பொண்ணு சென்றுவிட
அவன் திண்டாட்டத்தை கண்டு சத்தமாக சிரித்த ரோஜா ஐயோ கருப்பு வாலி தானே வேணும் உனக்கு நான் வாங்கி தரேன் நீ வா முதல்ல என்று அவரை தன் பக்கம் இழுத்தவள் நீ போய் எங்களுக்கு சாப்பிட சமைச்சு வை நாங்க பின்னாடியே வரோம் என்று அவரை அனுப்ப முயன்றாள்
வாங்கி தருவே இல்ல என்றார் கருப்பு
நான் வாங்கி தரலையின்னாலும் இதோ இருக்காரே உன்னோட சினி ஸ்டார் அவர் கண்டிப்பா வாங்கி தருவார் என்று சித்துவின் மேல் இருந்த கோபம் அகன்று சிரித்தாள்
அதை சித்துவும் கவனித்தான்
அங்க என்ன டா பார்வை ரோசா சொன்னது மாதிரி எனக்கு நீ வாங்கி கொடுக்கல அப்பறோம் நான் என்ன செய்வேன்னே தெரியாது என்றவர் வீட்டிற்குள் சென்று வேறு வாலியையும் கயிற்றையும் பக்கத்து வீட்டில் இருந்து வாங்கி வந்து கொடுத்தவர் . இதையும் உள்ள போட்ட அப்பறோம் உன்னை தூக்கி கிணத்துக்குள்ள போட்டுட்டுடுவேன் பாத்துக்கோ என்று அவனை எச்சரித்துவிட்டு சென்றார்.
பாவமேன்னு கிணத்தடியில் குளிக்க அனுப்பினா கடன்காரன் எனக்கு இல்ல செலவு வெச்சுட்டான் என்று புலம்பியபடி உள்ளே செல்ல..
அவரை நம்பமுடியாமல் பார்த்த சித்துவிடம் வந்த ரோஜா சாரி சித்து கருப்பு கொஞ்சம் எமோஷன் ஆகிருச்சு என்றாள்
பரவால்ல ரெட் ரோஸ் அவங்க எமோஷன் ஆனதுல எனக்கு நல்லது தான் நடந்திருக்கு என்று அவளை இழுத்து அணைத்தான்.
அயோ என்ன இது விடுங்க கருப்பு வந்திற போகுது என்று நெளிந்தாள்
வரட்டும் பேசிக்கிறேன் என்ன பேச்சு பேசிட்டாங்க என்னை நீ டா போட்டு பேசுற அவங்க என்னை கடன்காரன்னு சொல்றாங்க எல்லாம் என் நேரம் என்று பெருமூச்சுவிட்டான்
அவங்க அப்படி தான் நான் தான் அவங்களுக்கும் சேர்த்து சாரி கேட்டுட்டேன் என்றாள் ரோஜா
எனக்கு சாரி இப்படி கேட்டா பிடிக்காது என்றவன் தன் உதடு குவித்து ரோஜாவை நெருங்க போதும் இதெல்லாம் அப்பறோம் வெச்சுக்கலாம் முதல்ல குளிங்க என்று கிணற்றில் இருந்து ரோஜா தண்ணீரை மொண்டு ஊற்ற சித்துவிற்கு இந்த குளியல் அனுபவம் புதிதாக ஆனால் பிடித்தமான இருந்தது
நேரம் செல்ல செல்ல ரோஜாவின் கோபம் முற்றிலும் காணாமல் போய் இருந்தது.
நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு தூங்குங்க நானும் அம்மாவும் பக்கத்துல வீட்ல படுத்துகிறோம் என்றார் சின்னப்பொண்ணு
ஏன்ம்மா இங்கையே தூங்க வேண்டியது தானே ஏன் ராசம்மா அக்கா வீட்டுக்கு போறீங்க என்றாள் ரோஜா
இங்க ஒரே புழுக்கமா இருக்கு டி நீங்க ரெண்டு பேரும் பிரீயா இருங்க என்று கருப்பை அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள்
ஏன் டி இவ என்ன இவ்ளோ தத்தியா இருக்கா அவளும் அவ புருசனும் சண்டை போட்டு திரும்ப சேர்ந்திருக்காங்க தனியா இருக்கட்டும்னு நாம கிளம்புனா இவ என்ன டி அது புரியாம கேள்வி கேட்டுட்டு இருக்கா என்று கருப்பு ரோஜாவை கழுவி ஊதினார்
அவ சின்ன பொண்ணு தானே ம்மா எந்த விபரமும் தெரியல எல்லாம் அவ புருஷன் பாத்துக்குவார் என்றார்
அவர்கள் சென்றதும் கதைவடைத்தவள் டிவி பார்த்துக்கொண்டு இருந்தவனிடம் வந்தவள் டிவி பார்த்தது போதும் என்று அவன் கையில் இருந்த ரிமோட்டை பிடுங்கி சோபாவில் வீசியவள் அவன் மடியில் போய் அமர்ந்து கொண்டாள்
இதை சித்து எதிர்பார்க்கவில்லை ஏய் என்ன டி ரெட் ரோஸ் என்றான் ஆச்சர்யமாக
ம்ம்ம்… எனக்கு வேணும் என்றாள் நேரடியாக
அந்த அதிரடியில் சித்து அதிர
என்ன பாக்குறீங்க ஒண்ணுமே தெரியாம இருந்த சின்ன பொண்ணு நான் ஆனா நீங்க சும்மா இல்லாம எனக்கு எல்லாமும் காட்டி பழக்கிட்டிங்க உங்ககிட்டே சண்டை போட்டுட்டு வந்துட்டாலும் என் மனசு உங்களையே தான் தேடுச்சு என்றாள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கூறினாள்
அப்பறோம் ஏன் டி என் போனை அட்டென்ட் பண்ணல என்றான்
நீங்க செய்த காரியத்துக்கு நான் இப்போ கோபத்தை குறைச்சுட்டு வந்ததே பெரிய விஷயம் என்றவள் இப்போ எனக்கு முத்தம் வேணும் கொடு டா என்றாள்
ஹே ரோஜா நீ இவ்ளோ மாறிட்டேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல என்றான்
நீங்க பேசி நேரத்தை வீண் பண்ணுங்க எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன் என்று எழுந்து பெட் ரூம் செல்ல
ஏய் ரோஜா நில்லுடி என்று எழுந்து அவள் பின்னே வந்தவன் அவளை தூக்கிக்கொண்டு பெட் ரூமிற்கு தூக்கி சென்றான்
தன் பேத்தியை தத்தி என்று சின்னப் பொண்ணிடம் கருப்பு புலம்பிக்கொண்டு இருக்க
இங்கே அந்த தத்தி பேத்தி கட்டிலில் களவியல் பாடம் அவள் கணவனிடம் கற்றுக்கொண்டு இருந்தாள்
