Home Uncategorizedவல்லவனின் வன்முத்தம் 10

வல்லவனின் வன்முத்தம் 10

by Layas Tamil Novel
62 views

வன்முத்தம் 10

“எஸ், கம் இன்” என்று குரல் கொடுத்துவிட்டு தீவிரமாக தனது பைல்களை பார்த்துக்கொண்டிருந்தாள் நிலாவினி.

“என்ன மேடெம் கல்யாணம் ஆன உடனே ஆபீஸ் வந்திருக்கீங்க. நான் கூட ஹனிமூன் போயிருப்பீங்கன்னு இல்ல நினைச்சேன்” என்று உள்ளே நுழைந்தாள் நிலாவினியின் தோழியும் அவள் ஆஃபிஸில் மென்பொருள் பிரிவில் டீம் லீடாகவும் உள்ள கௌரி.

“நீயா! ” என்று மீண்டும் தன் பைலில் பார்வையை பதிய விட்ட நிலாவினி. “அவர் அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணிருக்கு. அதனால இது எல்லாம் யோசிக்கல” என்று சொன்னாள் நிலாவினி.

“என்ன டி சொன்ன..” என்று ஆர்வமாக கௌரி நிலாவின் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவள் அவள் முகத்தை ஆராய.

“என்ன?” என்று விழிகளை மட்டும் உயர்த்தி அவளிடம் கேட்டாள் நிலா.

“இல்ல அவருன்னு … சொன்னியே அது யாரு? வளவனையா?”” என்று தெரியாதவள் போல சிரித்துக் கேட்டாள் கௌரி.

“ம்ம்..” என்று மட்டும் பதில் பேசினாள் நிலா.

“ஹே! என்ன டி ரொம்ப தான் பண்ற, நான் தான் பேசிட்டு இருக்கேன் இல்ல என்னை பார்த்து பேசு டி” என்று எழுந்து வந்து நிலாவின் கையில் இருந்த பைலை பிடுங்கியவள் “நிலா.. என்னை பாரு” என்று அவள் முகத்தை நிமிர்த்தினாள் கௌரி.

நிலாவின் முகத்தில் இருந்த அமைதியைக் கண்டு கௌரிக்கு ஏனோ போல ஆனது.

“ஏய்! என்ன டி புதுசா கல்யாணம் ஆணவ மாதிரியா இருக்கு உன்னை பார்த்தா. ஏன் டி என்னவோ போல இருக்க” என்று கேட்டாள் கௌரி.

அந்த கேள்வியில் நிலாவின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க.. “ஹே! நிலா என்ன டி , ஏன் டி அழற?” என்று பதறினாள்.

இந்த இரண்டு நாட்களாக யாரிடமும் மனம் விட்டு பேச முடியாமல் தவித்தவளுக்கு கௌரியின் அக்கறையான விசாரிப்பு அவளின் அடக்கி வைத்த உணர்வுகளை மொத்தமாக அவளிடம் கொட்டி தீர்க்க ஆரம்பித்து இருந்தது.

தன் கழுத்தில் தாலி ஏறியதில் இருந்து இன்று காலை நடந்தது வரை சொன்ன நிலா அமைதியாக அமர்ந்து இருக்க..

அதை கேட்டு நிலாவை பாவமாக பார்த்த கௌரி “ஏன் டி இந்த ஆம்பளைங்க எல்லாமே இப்படி இருக்காங்க. பொண்ணுங்க மனசை போட்டு பாடா படுத்துரானுங்க” என்று சலித்துக்கொண்டாள்.

“விடு டி , அவர் நிலைமையில் இருந்து பார்த்தா தான் கஷ்டம் புரியும்” என்றாள்.

“அடிப்பாவி அவன் இவ்ளோ பேசியும் அவனை உனக்கு விட்டுக்கொடுக்க மனசு வரல பார்த்தியா?” என்று சிரித்தாள் கௌரி.

“ஹே! விடு கௌரி, நீ மீட்டிங்க்கு எல்லாம் ரெடி பண்ணிட்டியா” என்றாள்.

“சரி டி இனி இதை பத்தி பேசாத போய் வேலையைப் பாருன்னு சொல்ற அப்படித்தானே” என்றாள் கௌரி.

“புரிஞ்சா சரி” என்று தன் வேளைகளில் மூழ்கினாள் நிலா.

சிறிது நேரத்தில் மீட்டிங்கும் ஸ்டார்ட் ஆனது. மீட்டிங்கிற்காக அனைத்தையும் தயார் செய்துவிட்டு பைல்களுடன் வந்த வளவன் அந்த மீட்டிங் ஹாலை திறந்து கொண்டு உள்ளே வந்த நிலாவையும், அவள் பின்னால் வந்த கௌரியையும் பார்த்தான்.

கௌரி அவனை பார்த்து ஹாய் என்று கையாடியவள் மீட்டிங் முடிந்ததும் பேசலாம் என்று அவனிடம் சைகை செய்துவிட்டு போய்  இருக்கையில் அமர்ந்தாள்.

“வெல்! எல்லாரும் வந்தாச்சுனு நினைக்கிறன்” என்று வந்திருந்தவர்களை ஒருமுரை பார்த்தவள். “மிஸ்டர் வளவன் , நம்ம ப்ராஜெக்ட் பத்தி நீங்க எக்ஸ்பிளேன் பண்ணிடுங்க” என்று தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள் நிலாவினி.

“என்ன டா இது, ரெண்டு நாள் முன்ன தான் மேடமுக்கும், அந்த வளவனுக்கும் கல்யாணம் ஆச்சு.. ஆனா இன்னிக்கே வேளைக்கு வந்துட்டாங்க. வந்ததும் இல்லாம புருஷன்னு கூட பாக்காம எப்பவும் போல அவனை ஒரு பியே போலவே நடத்துறாங்க” என்று தன்னுடன் அமர்ந்த சக ஊழியரிடம் கேட்டான் ரமேஷ்.

“டேய்! மேடம் பத்தி தான் தெரியுமே வேலையில யாரு என்னனு பாக்க மாட்டாங்க. அது அந்த வளவனுக்கும் பொருந்தும் தானே.. இல்லேன்னா இந்த நேரத்துக்கு மேடமை கல்யாணம் பண்ணினத்துக்கு இவனை மேடமுக்கு ஈகுவலா போஸ்டிங் கொடுத்து இல்ல உக்கார வெச்சிருப்பாங்க” என்றான் ரமேஷ் அருகில் அமர்ந்து இருந்த மணிகண்டன்.

“அது அவங்க இஷ்டம் மணி, நீங்க வந்த வேலையை மட்டும் பாருங்க ” என்று இவர்கள் பேசியது கேட்டு கடுப்பான அருண் மீட்டிங்கை கவனிக்க ஆரம்பித்தான்.

நிலாவின் தந்தை ஒரு சிறிய அளவில் ஆரம்பித்த பேப்பர் பிசினஸ் அவரின் கடின உழைப்பால் முன்னேறியவர். அவர் உழைப்பை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றிருந்தாள் நிலாவினி . தமிழ்நாட்டளவில் செய்து கொண்டிருந்த அவரது பிசினஸை, நிலாவினி பொறுப்பேற்றவள்  அரசாங்கப் பத்திரங்கள், வெளிநாட்டுப்  கார்ரேன்சி  பேப்பர் , மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத உயர்தர காகிதங்களை உலகளவில் சப்ளை செய்பவளாக மாற்றி இருந்தாள்.

“உலகம் டிஜிட்டலா மாறினாலும், ஒரு அதிகாரப்பூர்வமான கையெழுத்து போட ஒரு பேப்பர் வேணும். அந்தப் பேப்பர் நம்ம பிராண்டா தான் இருக்கணும். லக்ஸுரி பேக்கேஜிங் செக்மெண்ட்ல நாம தான் கிங்” என்று ஆரம்பித்த வளவன்.

“இந்த வருஷம் ஒரு ஐரோப்பிய நாட்டோட கரன்சி தயாரிக்கிற காண்ட்ராக்ட் நமக்கு கிடைச்சிருக்கு.” என்றான்.

அதை கேட்டதும் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். அவர்களை பார்த்து சிரித்த நிலாவினி “தேங்க்ஸ் கைஸ், அந்த காகிதத்துல இருக்குற ‘வாட்டர்மார்க்’ மற்றும் ‘செக்யூரிட்டி த்ரெட்’  ரகசியம் நம்ம லேப் விட்டு வெளிய போகக்கூடாது. மீறினா அந்த நிமிஷமே நீங்க வேலையில இருக்க மாட்டீங்க.” என்று கறாராக சொன்னாள் .

அவள் சொன்னதை ஆமோதிப்பதாக தலையாட்டினாள் அனைவரும் . பிறகு அனைவரும் ஒன்றாக எழுந்து “ஹாப்பி மேரீட் லைப்” என்று கோரஸாக இருவருக்கும் வாழ்த்து சொன்னார்கள். அதை இருவரும் சேர்த்து மெலிய புன்னகையை உதிர்த்தார்.

“அப்பறோம் இன்னோரு முக்கியமான விஷயம் எல்லாரும் உக்காருங்க” என்றாள் நிலாவினி.

அனைவரும் அமர … வளவனும் புரியாமல் அமர்ந்தான்.

அப்போது சரியாக மீட்டிங் ஹால் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் ஆறுமுகம் அவரை பார்த்ததும் அனைவரும் எழுந்து நிற்க..

“உக்காருங்க” என்று சொல்லிவிட்டு நேராக வளவனிடம் வந்தார்.

வளவன் அவரை ஏறிட..

“நான் இன்னிக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல தான் இங்க வந்திருக்கேன். நம்ம ஆஃபிஸில் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் எல்லோரையும் வேளைக்கு எடுத்திருக்கோம். அதே போல தான் என்னோட மாப்பிள்ளையும், அவர் இங்க சேர்ந்த நாளில் இருந்து கடுமையா உழைச்சு இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்கார். அவரோட உழைப்பு, வேளையில் இருக்கும் நேர்த்தி, பொறுமை  இதெல்லாம் பார்த்தது தான் என் பொண்ணையே நான் அவருக்கு கல்யாணம் செய்து கொடுத்தேன்” என்றார்.

“ஆமா, இது ரொம்ப முக்கியம் . இந்த ஆள் எதுக்கு இங்க வந்து அந்த வளவன் புராணத்தை பாடிட்டு இருக்காரு.” என்று சடைந்து கொண்டான் ரமேஷ்.

“டேய் சும்மா இருடா அந்த அருண் வேற கிட்டையே உக்காந்திருக்கான், நாம பேசுறதை கேட்டுடபோறான்” என்றான் மணி.

“இப்போ நமக்கு கிடைச்சிருக்கு நியூ ப்ராஜெக்ட் பத்தி என் மாப்பிள்ளை சொல்லி இருப்பார். அந்த ப்ரொஜெக்ட்டை நமக்கு நல்ல முரையில் பேசி முடிச்சு இவ்ளோ பெரிய ப்ரொஜெக்ட்டை நமக்கு எடுத்து கொடுத்ததும் என்னோட மாப்பிள்ள தான் ” என்று பெருமையாக வளவனை பார்க்க.

அவனுக்கோ தர்ம சங்கடமாக இருந்தது , வந்ததில் இருந்து வார்த்தைக்கு வார்த்தை மாப்பிள்ளை என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே இவர்.

“அந்த ப்ரொஜெக்டை அவர் முடிச்சு கொடுத்துட்டா அவருக்கு நம்ம ஆபீஸ்ல ப்ரோமோஷன் கொடுக்கிறதா நான் முடிவு பண்ணி வெச்சிருக்கேன்.” என்றார்.

அதை கேட்டு ரமேஷ்,மணி இருவரும் அதிர்ந்தனர்.

“டேய்! என்ன டா இது இவனுக்கு ப்ரோமோஷனா!” என்று ஆச்சர்யமாக மணி ரமேஷிடம் கேட்க.

“அவன் தான் இப்போ அவங்க வீட்டோட மாப்பிள்ளை இல்ல. அவனுக்கு இன்னமும் இந்த ஆபிஸ்ல பிஏ வேலையா கொடுப்பாங்க. இப்படி தகுதியே இல்லாதவனுக்கு ப்ரோமோஷனை தூக்கி தான் கொடுப்பாங்க” என்றான் ரமேஷ்.

“கிட்டத்தட்ட 3 மாசமா இந்த வேலைக்காக அவர் கடுமையா உழைச்சிருக்கார். அப்போவே நான் இந்த முடிவை எடுத்துட்டேன். அதுக்கு பிறகு தான் என் பொண்ணு கல்யாண விஷயமே பேச ஆரம்பிச்சு கடைசியில என் மாப்பிள்ளைக்கும் , என் பொண்ணுக்கும் கல்யாணம் முடிவாச்சு, அவரோட கல்யாண பரிசா இந்த ப்ரோமோஷனை கொடுக்கலாம்னு நான் முடிவெடுத்து வெச்சிருந்தேன்” என்றவர் “மாப்பிள்ளை நீங்க தான் அந்த ஜேர்மன் ப்ராஜெக்ட் முழுசும் முடிக்க போறீங்க. நீங்க தான் அந்த ப்ரொஜெக்ட்க்கு தலைமை பொறுப்பை ஏர்க்கப்போறிங்க, இனி இந்த ஆபீஸ்ல நிலாவுக்கு என்ன உரிமை இருக்கோ , அதே உரிமை உங்களுக்கும் இருக்கு . நீங்களும் நிலாவும் சேர்ந்து என்னோட இந்த பிசினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போவிங்கன்னு நான் நம்புறேன்” என்றார்.

அவர் சொன்னது கேட்டு வளவன் இல்லை என்று தலையை ஆட்ட..

அவரோ அதை கவனிக்காமல் திரும்பி ” என் மாப்பிள்ளைக்கு நீங்க எல்லாரும் கோ ஆபரேட் பண்ணி அவரோட சேர்ந்து வேலை பார்ப்பீங்கன்னு நம்புறேன்” என்றவர் அங்கிருந்து விடைபெற்று வெளியேறி இருக்க..

வளவனுக்கோ அவரின் இந்த முடிவில் சுத்தமாக விருப்பம் இல்லை. அவன் இப்பொது வேலை செய்யும் பிஏ வேலையே அவனுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் இப்படி தன்னை கூட கேட்காமல் அவர் முடிவெடுத்துவிட்டு வந்து அனைவரிடமும் சொன்னது அவனுக்கு பிடிக்கவில்லை.

அவன் குழப்பான முகத்தை பார்த்த நிலாவிற்கு “என்ன ஆச்சு இவருக்கு, ஏன் ஒரு மாதிரியா இருக்காரு ” என்று அவனையே பார்த்து இருந்தாள்.

அனைவரும் எழுந்த வந்து வளவனுக்கு வாழ்த்து கூறினர்.

“காங்கிராட்ஸ் வளவன் யூ டீசெர்வ்ட் இட்” என்று வந்து முதலில் அவனுக்கு வாழ்த்து கூறியது என்னவோ கௌரி தான். அதன் பின் ஒவ்வொருவராக வந்து அவனுக்கு வாழ்த்து கூற.

அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளலாமா? வேண்டாமா? என்ற மனநிலையில் இருந்தான் அவன்.

அனைவரும் அந்த மீட்டிங் ஹாலை விட்டு வெளியேறி இருக்க.. கடைசியாக அவனிடம் வந்தது என்னவோ நிலா தான்.

அவன் அதே குழப்பத்தோடு அவனை பார்க்க..

“வளவன் இது உங்க உழைப்புக்காக கிடைச்ச ப்ரோமோஷன். நீங்க வீணா கண்டதை மனசுல போட்டு குழப்பிக்காதீங்க., ” என்று அவன் மனநிலையை படித்து சொன்னவள் . “காங்கிராட்ஸ்” என்று அவனை பார்க்க..

அவனும் அவளை பார்த்தவன் அவள் தன் மனக்குழப்பத்தை புரிந்து கொண்டு பேசுவது புரிந்தவன் அவள் முன் கை நீட்ட..

அவன் கையை பிடித்து தன் பக்கம் இழுத்த நிலா அவனை தோளோடு அணைத்து “வாழ்த்துக்கள்” என்றாள்.

இப்படி தன்னை நிலா அணைப்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்க வில்லை. அவன் அபப்டியே உறைந்திருக்க.. 

அவன் கன்னத்தில் முத்தம் வைத்து  அவனை விட்டு விலகியவள் மென்மையாக சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட…

இங்கே நம்ம ஹீரோவுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. இது என்ன என்ற ரீதியில் நின்று இருந்தான் வளவன்.

நிலாவினிக்கு அவன் மேல் காதல் இருக்கிறது. அதை அவள் முத்தத்தால் உணர்த்திவிட்டாள். 

அதை வளவன் உணர்வானா? நீங்க என்ன நினைக்கறீங்க டியர்ஸ் கமெண்ட்ல சொல்லுங்க.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured