வன்முத்தம் 13
உமையாளும், வஜ்ரவேலும் காரிடரில் நடந்து வந்து கொண்டிருக்க அப்போது அவள் முன்பு சர்ப்ரைஸ் என்று குறித்த ரவியை பார்த்து சந்தோசமாக சிரித்தால் அவள்.
தன்னுடன் வந்தபோது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வந்தவள் இப்போது சிரித்த முகமாக இருப்பதைக் கண்ட வஜ்ரவேலுவாள்
அவள் சிரிப்பதை ரசிக்க முடியவில்லை . அவன் பார்வை இப்பொது உமையாளின் கையில் நின்றது.
அவள் கையை ரவி பற்றிக்கொண்டு நின்று இருந்தான்.
“இல்ல புஜ்ஜி! நீ வேற அம்மாவுக்கு உடம்பு சரி இல்லேன்னு காலேஜ் வந்து எவ்ளோ நாள் ஆச்சு. உன்னை பக்காம என்னால இருக்க முடியல. அதுவும் இல்லாம இன்னிக்கு என்ன டே” என்றான்.
“புஜ்ஜியா!?” என்று வஜ்ரவேல் கடுப்பானவன். “யாரு இவன் ஆளும் முடியு, மூஞ்சியும் பார்க்க அப்படியே புல்லிங்கோ மாதிரி இருக்கான், இவன் ட்ரஸிங்கை பாரு” என்று ரவியை மேலிருந்து கீழே பார்த்தான்.
“என்ன டே?'” என்று அவளும் வேண்டுமென்றே அவனையே கேட்க.
“ஆஹ்!” என்று இந்த க்ரிஞ்சை பார்க்க சகிக்காமல் வஜ்ரவேல் கண்களை மூடித்திறந்தவன்.
“என்ன டே ” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு அவனே கேட்டான்.
அவனை பார்த்த ரவி “யாரு புஜ்ஜி இது?” என்றான்.
“அவர் என் அம்மாவை ட்ரீட் பண்ற டாக்டர்” என்றவள் “நீ சொல்லு ” என்று அவன் கையை பிடித்துக்கொண்டு இங்கும் அங்கும் ஆட்டிக்கொண்டே பேச..
“இன்னிக்கு வேலண்டைன் டே புஜ்ஜி , நீயும் நானும் லவ் பண்ண ஆரம்பிச்சு இன்னியோட 1 இயர் ஆச்சு” என்றான்.
“ஹா! ஆமா இல்ல.. ” என்று உமையாள் மேலும் சந்தோசமாக.
அவள் காதலிக்கும் விஷயம் கேட்டு வஜ்ஜிரவேலின் முகம் இறுக்கி விட்டது.
அதைவிட அடுத்தவன் செய்த செயலை பார்த்து நொந்து விட்டான் வஜ்ரவேல்.
சுற்றிலும் ஒரு முறை நோட்டம் விட்ட ரவி பச்சக்கென்று உமையாளின் கன்னத்தில் முத்தமிட்டு விட..
இதை சற்றும் எதிர்பாராத வஜ்ரவேல் அப்படியே உறைந்து போய் அதிர்ச்சியில் நின்றிருந்தான்.
அவனை ஒரு பொருட்டாகவே உமையாள் மதிக்கவில்லை.
வஜ்ரவேலுவோ அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல் விறுவிறுவன அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்
அவனை சட்டை செய்யாத உமையாள் ரவி தந்த முத்தத்தில் வெட்கப்பட்டு கொண்டே சினிங்கியவள் “டேய் ரவி! இது ஹாஸ்பிடல் டா” என்று சுற்றிலும் பார்த்தவள். “சரி சரி நீ முதலில் சீக்கிரம் கிளம்பு, என் வீட்டுல இருந்து யாராவது வந்துடப் போறாங்க” என்று அவசரமாக அவனை ஹாஸ்பிடல் இருந்து கிளப்பினாள் உமையாள்.
“ சரி சரி போறேன் புஜ்ஜி ஒரு நிமிஷம் இரு” என்றவன். “ எப்போ நீ திரும்ப காலேஜ் வருவ அதை முதல்ல சொல்லு நீ இல்லாம எனக்கு காலேஜ் போகவே பிடிக்கல” என்றான்.
“அம்மாவை இன்னும் ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்றதா டாக்டர் சொல்லி இருக்காரு. அம்மா வீட்டுக்கு வந்ததும் ஒரு 2 டேஸ் அவங்க கூட இருந்துட்டு அதுக்கப்புறம் காலேஜ் வந்துருவேன், அனேகமா அடுத்த வாரம் செவ்வாய் புதன் போல வருவேண்டா” என்றாள்.
“ அடுத்த வாரமா!” என்று சாக்காண ரவி “ சரிடி முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வர பாரு நான் கிளம்புறேன்” என்று அவள் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்துவிட்டு ரவி அங்கிருந்து கிளம்ப.. அவன் முத்தம் வைத்து கன்னத்தை தடவியப்படியே வெட்கப்பட்டு கொண்டு சென்றாள் உமையாள்.
இங்கே தன் கேப்டனுக்கு வந்த வஜ்ரவேலுவாள் ரவி உமையாளின் கன்னத்தில் முத்தம் வைத்ததை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அறைக்குள் வந்து கதவை வேகமாக சாற்றியவன் ஸ்டெதஸ்கோப்பை தூக்கி டேபிளில் வீசிவிட்டு குறுக்கும் நெடுக்கம் நடந்தான்.
“யார் அவன் பார்த்தட்தா சுண்டக்கா பையன் மாதிரி இருக்கான். அவனப் போய் என் தக்காளி காதலிக்கிறாளே, ரெண்டு பேரும் கொலஞ்சு கொலஞ்சி பேசுவதை பாத்தா எனக்கு ஆத்திரமாக வருது. ச்சே அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவன வேற இவ லவ் பண்றா அவளுக்கு அறிவே இல்லையா? இல்ல கண்ணு தான் தெரியாதா? “ என்று புலம்பிக்கொண்டே நடந்தான்.
“ என் தக்காளி சின்ன பொண்ணு அவளுக்கு ஒன்னும் தெரியாது அந்த சுண்டக்கா பையன் தான் இவளை எதுவும் செஞ்சு மயக்கி வச்சிருக்கான். இது சரியில்ல அவன பாத்தாலும் நல்லவனா எனக்கு தோணவே இல்ல, முதல்ல இது என்னன்னு கவனிக்கணும்” என்று யோசிக்கலானான்.
வெற்றி நிலாவினை சொன்னதை எல்லாம் வாங்கி வந்துவிட்டான்
அவனை கண்டதுமே தாராவின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது.
வெற்றியும் உள்ளே வந்ததும் தாராவைத்தான் கவனித்தான்.
அவளோ அவனைக் கண்டதும் கண்ணடித்து ஹாய் என்று கையைசைத்தால் யாரும் பார்க்கா வண்ணம்.
“இவளுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா, இத்தனை பேர் இருக்காங்க கொஞ்சமும் பயம் இல்லாமல் என்ன பார்த்து கண்ணடிக்கிறா. யாராவது பார்த்தா என்ன ஆகும்” என்று உள்ளுக்குள்ள அவளைத் திட்டிக் கொண்டான்.
அவன் ஏதோ வாய்க்குள் முணுமுணுப்பதை தாராவும் கவனித்தாள்.
உடனே முகத்தை சுருக்கி கொண்டு அவனைப் பார்த்தவள் “என்னதான் ஏதோ திட்றான், தனியா மாட்டட்டும் ஒரு கிஸ் டார்ச்சர போட்டுற வேண்டியதுதான் ” என்று நினைத்தவள் அவனை குறுகுறுவென பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அப்போதுதான் ஆபீஸிலிருந்து வளவனும், நிலாவும் அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் விஜயலட்சுமியின் முகம் மலர்ந்தது.
உள்ளே வரும்போது நிலா மாஸ்க் அணிந்திருந்தாள். தேன் மொழியும் மாஸ்கணிந்திருக்க..
அவர்கள் இருவரையும் வித்தியாசமாக பார்த்தார் விஜி.
“என்ன ஆச்சு? ரெண்டு பேரும் மாஸ்க் போட்டு இருக்கீங்க. உடம்புக்கு எதுவும் சரி இல்லையா?” என்றார்.
“அது ஒன்னும் இல்ல அண்ணே எனக்கும் நிலாவுக்கும் ஹாஸ்பிடல்னா கொஞ்சம் அலர்ஜி, உங்களுக்கு ஆபரேஷன் பண்ணின அன்னைக்கு அவளுக்கு உடம்பு முடியாம போயிடுச்சு. ஒரே வாந்தி மயக்கம், எனக்கும் கொஞ்சம் உடம்பு முடியாம போயிடுச்சு அதனாலதான் இன்னைக்கு முன் ஜாக்கிரதையா மாசுக்கு மாத்திரையும் போட்டுக்கிட்டேன்” என்று சிரித்தார்.
“அப்போ எதுக்கு இன்னைக்கு வந்தீங்க பேசாம ரெண்டு பேரும் வீட்ல இருந்துக்கலாமே” என்றவர் “ஏண்டா என் மருமகளுக்கு தான் உடம்பு முடியலன்னு தெரியுமில்ல அவளை எதற்கு சிரமப்படுத்தி இங்க கூட்டிட்டு வந்த” என்று வளவனை கடிந்து கொண்டார் விஜயலட்சுமி
“ஐயோ அத்தை, அவர ஏதும் சொல்லாதீங்க அவர் என்ன வேண்டாம் வீட்ல ரெஸ்ட் எடுன்னு சொன்னார். நான் தான் கேட்காம உங்களை பார்க்க வந்தேன்” என்று வளவனை விட்டுக் கொடுக்காமல் சொன்னாள்
“ பாருடா வளவா உன் பொண்டாட்டி உன் மேல எவ்வளவு பாசம்னு, கல்யாணம் ஆயி ரெண்டு நாள் கூட ஆகல உன்ன விட்டுக் கொடுக்காம பேசுறாளே” என்று சிரித்தார்
பின் நிலாவினி வளவனின் அம்மாவிடமும் மற்றவர்களிடமும் அவனுக்கு வாங்கிய காரை காட்டி சந்தோசப்பட்டால். அவளுடன் விஜயலட்சுமியும் உமையாளும் நன்கு ஒட்டிக் கொண்டனர். இருவரும் நிலாவினியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
வழக்கம்போல ஆறு மணிக்கு மேல் இருவரையும் ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பச் சொல்லி இருந்தார் தேன்மொழி.
கார் அவர்கள் வீட்டை நோக்கி கிளம்பியது.
கார் கிளம்பி இதிலிருந்து நிலா எதுவும் பேசவில்லை அமைதியாக வெளியே பார்த்தபடி அவள் அமர்ந்திருக்க..
காரை ஓட்டிக்கொண்டே அவளை திரும்பிப் பார்த்தான் வளவன்.
கார் ஜன்னலை திறந்துவிட்டுக்கொண்டு அவள் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
காற்றில் அவள் கேசம் அசைந்தாட அதை ஒதுக்கக் கூட தோன்றாமல் அமர்ந்து இருந்தாள்.
கையை கண்ணத்தில் வைத்து இருந்தாள். அவள் அணிந்த சேலை காற்றின் வேகத்தில் அசைந்தாடியது.
அதில் அவள் மாராப்பு லேசாக விலகி வலது பக்கம் முழுதும் அவன் பார்வையில் பட்டுவிட.. காளையவன் எண்ணம் மீண்டும் முதல் இரவு நோக்கி சென்றது. அவள் விழும்போது அவள் கனிகளை தன் கைகளில் ஏந்திய சிந்தனை வந்து அவனை அழைக்களித்தது
சட்டென தன் பார்வையை திருப்பி சாலையில் கவனம் வைத்தான்.
சற்று நேரத்தில் மீண்டும் தானாக அவன் கண்கள் அவள் பக்கம் திரும்பியது.
நிலாவினி இன்னமும் அப்படியே தான் அமர்ந்து இருந்தாள். அவள் முகத்தை தாண்டி அவன் கண்கள் தானாக கீழே இறங்க.. கண்களை இருக்க மூடித் திறந்தவன் மீண்டும் சாலையில் கவனம் வைத்தவனுக்கு அப்போது தான் தோன்றியது உடனே அவளை பார்த்தான்.
இம்முறை அவள் முகத்தை தான் ஆழ்ந்து பார்த்தான்
ஹாஸ்பிடல் வந்து இன்றும் அவளுக்கு ஒத்துக் கொள்ளவில்லையோ என்று நினைத்தவன் “நிலா!” என்று அழைத்தான்.
“ஹும்..” என்று அப்படியே திரும்பிப் பார்த்தாள்.
“உடம்பு எதுவும் முடியலையா?” என்று அவள் முகத்தை ஆராய்ந்த படியே கேட்டான்
“இல்லையே ஏன்?” என்றாள்.
அவள் முகத்தை ஆராய்ந்து படியே “இல்ல நாம கிளம்பினதுல இருந்து அமைதியா இருக்க. உன் முகமும் பார்க்க டல்லா இருக்கு” என்றான்.
“பரவாயில்லையே என் முகத்தை பார்த்து சட்டுனு கண்டு பிடிச்சிட்டீங்க” என்றவள் “டல்லா எல்லாம் இல்ல ஆனா லைட்டா பசிக்குது” என்றாள்.
அவள் பசிக்கிறது என்று சொன்னதும் காரை ஓரமாக நிறுத்தியவன். “ என்ன நிலா இது பசிச்சா சொல்ல வேண்டியது தானே, எதுவும் சாப்பிட வாங்கி கொடுத்திருப்பேனே ஹாஸ்பிடல்ல குடுத்த ஸ்னாக்ஸை கூட வேண்டாம்னு சொல்லிட்டியே” என்றான்.
அவள் பதியே ஏதும் பேசாமல் வளவனையே பார்த்துக் கொண்டிருக்க..
அவளிடம் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் காரை கிளப்பி ஒரு பெரிய ஹோட்டல் முன்பு நிறுத்தி இருந்தான்.
நிலா வீட்டிற்க்கே போய்விடலாம் என்று சொல்ல அதைக் கேட்காமல் அவளை அழைத்து வந்து அவளுக்கு வேண்டியது வாங்கி கொடுத்து சாப்பிட வைத்த பின்பு தான் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
நிலாவோ செல்லும் வழி எல்லாம் வளவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கோ ஏதோ போல இருந்தது. அவளிடம் எதுவும் கேட்டால் குதர்க்கமாக பேசுவாள் என்று அமைதியாக காரை வீட்டில் வந்து நிறுத்தி இருந்தான்.
மல்லிகாவிடம் இருவரும் வெளியே சாப்பிட்டு விட்டதால் உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டு அறைக்கு வந்து பிரஷ் ஆகி உறங்கச் சென்றனர் இருவரும்
வழக்கம்போல போர்வையை எடுத்துக்கொண்டு சோபாவில் படுக்கச் சென்றான் வளவன். கட்டிலில் அமர்ந்திருந்த நிலா வளவன் “ஒன் மினிட்” என்று அவனை அழைத்தாள்.
அவளை அவன் திரும்பிப் பார்க்க
“என் கூட இங்க கட்டில்லையே வந்து படுக்கலாமே நான் உங்களை எதுவும் செய்திட மாட்டேன்” என்று சிரித்தாள்.
வேண்டாம் என்று மறுக்க தான் தோன்றியது அவனுக்கு. ஆனால் அவள் கள்ளமில்லா சிரிப்பை கண்டவன் மறுப்பேதும் சொல்லத் தோன்றாமல் முன்னே சென்ற தன் கால்களை அவள் இருந்த திசை பக்கம் நகர்த்தினான்.
அவள் அருகில் வர..
அவன் அமர நகர்த்து வழி விட்டவள். நீங்க இங்க தூங்குங்க நான் அந்த பக்கம் படுத்துக்கிறேன் என்று அப்படியே படுக்கையில் திரும்பி மறுபுறம் சென்று படுத்துக்கொண்டாள்.
அவனும் படுக்க பெட் லாம்ப்பை மட்டும் ஒளிர விட்டு ஆளுக்கு ஒரு பக்கம் முதுகு காட்டி படுத்துவிட்டார்கள்.
முதல் படி முன்னேறி இருக்கிறார்கள் இருவரும் பார்க்கலாம் சீக்கிரமே நெருங்கி வருகிறார்களா என்று
