வன்முத்தம் 2
“வளவன்! வளவன்! எழுந்திருங்க இன்னிக்கு ஹாஸ்பிடல் போகணும்,இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க ” என்று அவன் தோளைத் தட்டி எழுப்பினால் நிலாவினி.
அவள் குரல் கேட்டு அசந்து தூங்கிக் எழுந்தவன் மெல்ல கண்விழித்துப் பார்த்தான்.
தலைக்கு கை கொடுத்து படுத்து இருந்தவன் அந்த கோலத்திலேயே அவன் முன் நின்றிருந்த நிலாவினியைப் பார்த்தான்.
ஷிபான் சேலை அணிந்து ஈரம் படிந்த தலையில் டவலை சுற்றிக்கொண்டு மங்களகரமான முகத்தோடும், சிரித்த முகத்தோடும் கையில் காபி கப்புடன் அவனை எழுப்புகிறாள் என்று அவன் உள்மனம் அவனை அறியாமலேயே எதிர்பார்த்து இருக்கும் போல…
ஆனால் அவன் எதிர்பார்த்தது போல அல்லாமல் அங்கே காட்சி மாறி நின்றிருந்தவளை பார்த்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கரு நீல நிறத்தில் ட்ராக் சூட் அணிந்திருந்தாள். கழுத்தில் இருந்த டவலை எடுத்து முகத்தில் வலிந்த வேர்வையை ஒற்றியபடியே அவனைப் பார்த்து மென்மையாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள் நிலாவினி.
அவள் முகத்தில் இருந்த பார்வை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி அவள் உதட்டில் வந்து நின்றது.
அந்த மெல்லிய புன்னகையில் வளைந்திருந்த உதட்டை அவனையும் அறியாமல் ரசித்தவன் கண்களை இருக்க மூடி மெல்ல திறந்தான்.
நிலாவினி அவன் முன் இல்லை சட்டென்று தலையை திருப்பிப் பார்க்க… அவள் திரும்பி நடந்து கொண்டிருந்தாள்.
எழுந்து மணியை பார்த்தான் ஆறரை என்று காட்டியது திரும்பி நிலாவினியை பார்த்தான் அவள் ஜாக்கிங் சென்று வந்திருப்பாள் போல ட்ராக் சூட் அணிந்து இருந்தால் அது அவள் வளைவுகளை அப்பட்டமாக எடுத்துக்காட்ட அவள் நடந்து செல்லும் போது அவள் பின்னழகு அசைந்து ஆடுவதை தன்னையும் அறியாமல் வளவனின் கண்கள் ரசித்தது.
அங்கிருந்து அவன் பார்வை அகலவில்லை, பெண்களை கண்களை தவிர்த்து வேறெங்கும் பார்க்காதவன் கண்கள் நிலாவினியின் பெண் அழகிலேயே நிலைத்திருந்தது.
அவள் நடக்கும் ஒவ்வொரு அடிக்கும், அவளது பின்னழகு ஒரு தனி தாளம் போட்டது. அந்தத் தாளத்திற்கு ஏற்ப அவன் விரல் தானாக தாளம் போட…
அந்த மெல்லிய இடை அவள் பின்னழகை எப்படித் தாங்குகிறது என்று வியக்கும் அளவுக்குத் திரண்டிருந்தது
ச்சே… என்று தலையை உலுக்கிக் கொண்டு தன் பார்வையை மேலே உயர்த்தினான்.
டிராக்பென்ட்டிற்கும் அவள் ஜாக்கெட்டுக்கும் இடையே இருந்த மெல்லிடையே கண்டான்.
கண்களை இறுக்கி மூடி திறந்தவன் படுக்கையில் இருந்து எழுந்து
அவள் மீது இருந்த பார்வையை திருப்பிக் கொண்டவன் வேகமாக எழுந்து போர்வையை மடித்து வைத்துவிட்டு திரும்ப…
அங்கே அவன் முன் நிலாவின் கையில் ட்ரே உடன் சிரித்து முகமாக நின்றிருந்தாள்.
இதுல காபி இதுல டீ நீங்க எது கொடுப்பீங்கன்னு தெரியல அதான் ரெண்டும் போட்டு எடுத்துட்டு வந்துட்டேன் என்று தட்டை அவன் முன் நீட்டினாள்.
முருவலித்த அவள் இதழ்கள் அவன் கவனத்தை சிதறடித்தது.
அங்கே இருந்து ட்ரெவை பார்க்க பார்வை கீழிறங்க… ட்ரெவு பின்னால் அவள் திரண்ட மார்பின் க்ளிவெஜ் மட்டும் தெரிய அதில் இருந்து அவசரமாக பார்வையை நகர்த்தி அவள் கண்களைப் பார்த்தவன்.
“மேடம்! எனக்காக நீங்க இந்த வேலை எல்லாம் செய்ய வேண்டாம். நான் உங்க பியே, அதுக்கான மரியாதை எனக்கு கிடைச்சா போதும்” என்றவன் திரும்பி தன் பெட்டியில் இருந்த உடையை எடுத்துக்கொண்டு குளிக்க பாத்ரூம் சென்று கதவடைத்துக் கொண்டான்.
உள்ளே வந்தவனுக்கு வேக மூச்சு எடுத்தது. நிலாவினியை இப்படி அங்கம் அங்கமாக ரசிக்க எப்படி தன்னால் முடிந்தது. எங்கிருந்து தனக்கு அந்த துணிவு வந்தது என்று நினைத்தான். அவனுக்கு பதில் கிடைக்கவில்லை.
அவனுக்கு தெரியவில்லை எப்போது நிலாவினியின் கழுத்தில் சிபி வளவன் தாலி கட்டினானோ அன்றே அவன் மனதில் நிலா மனைவி என்ற ஸ்தானத்தில் நுழைந்து விட்டாள் என்று.
டவலை ஹேங்கரில் மாட்டிவிட்டு ஷவரை திறந்து குளிக்க ஆரம்பித்தான்.
இங்கே இன்னமும் கையில் ட்ரெயுடன் நின்று இருந்த நிலாவினிக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.
அவளால் வளவனின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது. இருந்தும் அவன் இப்படி பாராமுகம் காட்டுவது அவளுக்கு மிகவும் வலித்தது.
பியே பியே என்று தன்னை தாழ்த்திக் கொள்வதும். அவளை மேடம்.. மேடம்.. என்று உயிர்த்தி இருவருக்கும் இடையில் ஒரு சுவற்றை எழுப்பி வைத்திருக்கிறானே என்று இருந்தது அவளுக்கு.
பெருமூச்சை எடுத்துவிட்டவள் ட்ரெயை மேஜையில் வைத்துவிட்டு காபியை எடுத்து கட்டிலில் அமர்ந்து பொறுமையாக குடிக்க ஆரம்பித்தாள்.
பாத்ரூம் திறக்கும் சத்தம் கேட்டது. குளித்து முடித்து டவலை கட்டிக்கொண்டு மேலே மற்றொரு டவலை போர்த்தி வந்தவனை பார்த்தவள் சட்டென்று திரும்பிக்கொண்டாள்.
அவளை ஓரக் கண்ணால் பார்த்தவள் காபியை குடித்துவிட்டு எழுந்தவள். உடை மாற்ற இடம் தேடிக்கொண்டு நின்றிருந்தவன் அருகில் சென்றாள்.
அவளை தவிர்க்க நினைத்து வளவன் திரும்பிக்கொள்ள..
அவன் கையில் இருந்த உடையை வாங்கியவள் அதை ஒரு கையில் வைத்துக்கொண்டு மற்றொரு கையில் அவன் சூய்ட் கேஸை இழுத்துக்கொண்டு தன் ட்ரெஸ்ஸிங் ரூம் நோக்கி நடந்தாள்.
“மேம்! என்ன பண்றீங்க?”
“நீங்க வேணா என்னை மேடமா நினைச்சுக்கோங்க வளவன். நான் உங்களை என் புருஷனா தான் நினைக்குறேன். சோ இது நம்ம ரூம். நீங்க பிரீயா நம்ம ரூமை யூஸ் பண்ணலாம் mr. ஹஸ்பண்ட்” என்று சிரித்தவள் திரும்பி நடக்க..
“Mr. ஹஸ்பண்ட்? அப்படி நீங்க நினைச்சிருந்தா உங்க ரெண்டாவது கல்யாண ஆசைக்கு என்னை இணங்க வைக்க என் அம்மா உயிரை பனையம் வெச்சிருக்க வேண்டிய அவசியம் இல்ல.. அதுவும் இல்லாம நீங்க சரின்னு சொன்னா உங்களை கல்யாணம் பண்ணிக்க பல பிசினஸ் மேன்கள் வரிசையில் நிக்குற அப்போ. என்னை ஏன் செலக்ட் பண்ணீங்க மேடம்”
அவன் கேள்வியில் அப்படியே நின்றவள் “வளவன் என்ன பேசுறீங்க.. நான் தான் நேத்தே சொன்னேனே எனக்கு என் அப்பா உங்ககிட்டே இப்படி எல்லாம் பேசி தான் நம்ம கல்யாணத்தை நடத்தினார்னு சத்தியமா தெரியாது, தவிர எனக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை எதுவும் இல்ல.. என் அம்மா, அப்பா என்னக்கு கல்யாணத்தை பண்ணி பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க. அவங்க ஆசைக்காக தான் நான் ஒத்துக்கிட்டேன். உங்களை செலக்ட் பண்ணினது நான் இல்லை என் பேரெண்ட்ஸ் தான் ” என்றாள்.
“உங்க பேரெண்ட்ஸ் செலக்ட் பண்ணினவன் தானே நான். அப்பறோம் ஏன் இந்த காபி, டீ உபசரிப்பு, Mr. ஹஸ்பண்ட் இதெல்லாம்”
“உங்களை செலக்ட் பண்ணினது என்னவோ அவங்க தான். நீங்க தான் என் கணவராகப் போறிங்கன்னு தெரிஞ்சதும் எனக்குள்ள ஒரு நம்பிக்கை கிடைச்சுது. என்னோட பழைய வாழ்க்கையில் இருந்த மாதிரி கசப்பான விஷயங்கள் எதுவும் உங்ககிட்டே இருந்திங்க வராதுன்னு நம்பினேன். அதனால தான் உங்களை கல்யாணம் செய்துக்கவே நான் சம்மதிச்சேன். இந்த கல்யாணத்தை பிக்ஸ் பண்ணி எனக்கு கணவரா உங்களை சூஸ் பண்ணினது என்னவோ என்னோட பேரண்ட்ஸ் தான் பட் நீங்கன்னு தெரிஞ்சதும் எந்த மறுப்பும் சொல்லாம நான் ஒத்துக்கிட்டேன் ஒத்துக்கிட்டதுக்கு காரணமே உங்களுடைய ஜெனுவனான பழக்க வழக்கம்” என்று அவனை ஏறிட்டாள்.
” உங்ககிட்ட இருக்க பொறுமை, அந்த நிதானம், எதையுமே அவசரப்படாம யோசிச்சு முடிவெடுக்கிறது, உங்க நல்ல மனசு இது மட்டும் தான், மத்தபடி என் அப்பா பண்ணினதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ஆனா என் அப்பா எனக்காக தான் இப்படி பண்ணி இருக்காரு என்று நான் புரிஞ்சுகிட்டேன். அவருக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று கையெடுத்து கும்பிட்டவள்.
“என் மனசுல இருக்குறத நான் வெளிப்படையா உங்க கிட்ட சொல்லிட்டேன் நீங்களும் அதே போல தான் உங்க வெறுப்பையும் என்கிட்ட காட்டிட்டிங்கன்னு நினைக்கிறேன். இதுக்கு மேல நான் பேசி உங்க நேரத்தை வீணடிக்க விரும்பல” என்று அவன் உடைகளை ட்ரெஸ்ஸிங் ரூமில் வைத்தவள். ” உங்களுக்கா எப்போ என்னை முழு மனசோட உங்க மனைவியா ஏத்துக்க தோணுதோ, அப்போ நீங்க என்கிட்ட உரிமையா பேசலாம் அதுவரை நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்” என்றாள்.
“நீங்க ஒரு பிசினஸ் வுமன் ஒரு பிரச்சனையை எப்படி ஸ்மூத்தா ஹேண்டில் பண்ணனும்னு உங்களுக்கு தெரியாதா மேடம். நீங்க இப்படி எல்லாம் பேசினா நான் மனசு மாறிடுவேன்னு நினைச்சீங்களா? அப்படி மனசு மாறி உங்க கூட சேர்ந்து வாழ்வேன்னு யோசிச்சு தான் இதெல்லாம் சொல்றீங்களா? ” என்றான் நக்கலாக
” சிபி! நீங்க ரொம்ப அதிகமா பேசுறீங்க, நீங்க மனசு மாதிரி என்கூட சேர்ந்து வாழணும்னு நினைச்சு இதெல்லாம் நான் சொல்லல. உண்மையாவே என் மனசுல என்ன தோணுதோ நான் என்ன நெனச்சேனோ அத உங்க கிட்ட ஒழிவு மறைவு இல்லாமல் சொல்லணும்னு நினைச்சேன் அவ்வளவுதான். அப்படியே நான் உங்க கூட சேர்ந்து வாழணும்னு நினைக்கவில்லை என்ன தப்பு இருக்கு நீங்க என்ன தொட்டு தாலி கட்டி இருக்கீங்க என் கழுத்துல மூணு முடிச்சு போட்டு இருக்கீங்க என்றாள் “
“உங்களுக்கு இந்த கல்யாணம் ஒன்னும் புதுசு இல்லையே மேடம், இப்ப கூட நீங்க நினைச்சா என்னை வேண்டாம்னு சொல்லி நான் கட்டின இந்த தாலியை கழட்டி கொடுத்துட்டு எனக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு போயிட்டே இருக்கலாமே” என்று வார்த்தைகளில் விஷம் தடவி வீசினான்.
” சிபி! ஸ்டாப்பிட்! இதுக்கு மேல என்னோட கடந்த கால வாழ்க்கையை பத்தி ஒரு வார்த்தை பேசினீங்க, அவ்வளவு தான் சொல்லிட்டேன்”என்று உக்கர காலியாக அவன் முன் விரலை நீட்டி குரலை உயர்த்தி பேசியபடி நின்றாள் நிலாவினி.
அவளின் கோபம் கண்ட பின் தான் எந்த மாதிரியான வார்த்தையை பிரயோகித்து விட்டோம் என்று சிபி வளவனுக்கு உரைத்தது.
“மேடம் சாரி, உங்க அப்பா அப்படி பண்ண கோபத்துல உங்ககிட்ட நான்..” என்று வளவன் பேச..
“ஜஸ்ட் ஸ்டாப்பிட் சிபி. என் கடந்த கால வாழ்க்கையை பற்றி என்ன பத்தி புரிஞ்சுகிட்டு நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்கன்னு நினைச்சிட்டேன். அதுதான் என்னோட முட்டாள்தனம் என் அப்பா உங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டார்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் இறங்கி வந்து உங்ககிட்ட பேசினேன் பார்த்தீங்களா அது அதைவிட பெரிய முட்டாள்தனம். இனி இந்த ரூமுக்குள்ள நீங்களும் நானும் வேற வேற தான். மத்தவங்களுக்கு வேணா நம்ம கணவன் மனைவியா வாழலாம் ஆனால் நிஜத்துல இல்ல “
“மேடம் சாரி ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க நான் தெரியாம தான்”
நீங்க தெரிஞ்சே பேசி இருந்தாலும் எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை சிபி, நான் சொன்னா சொன்னது தான் இனி உங்களுக்கும் எனக்கும் இடையில எதுவுமே இல்ல காட் இட்.. ” என்றாள் கோபமாக.
சிபி அதற்கு மேல் பேச முடியாமல் நின்று இருக்க..
“ஜஸ்ட் ஒரு சின்ன ரெக்வெஸ்ட் மிஸ்டர் சிபி. நம்ம ரெண்டு பேருக்குள்ள எதுவுமே இனி இல்லன்னு முடிவாயிருச்சு. என் பேரன்ஸ் முன்னாடி நீங்க தயவுசெய்து இதை காட்டிக்காதிங்க. அதே போல உங்க அம்மா முன்னாடியும் நான் நமக்குள்ள எதுவும் இல்லைங்கிறத காட்டிக்க மாட்டேன்” என்றவள் திரும்பி பாத்ரூமிற்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள்..
இருவரும் அவரவர் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை நினைத்து ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் வதைத்து கொண்டார்கள்.
இது அத்தனைக்கும் காரணம் நிலாவினியின் அப்பா ஆறுமுகம் தான்.
இங்க அவர் மகளும், மருமகனும் சண்டை போடுவது தெரியாமல் நிலாவினியின் அப்பா கீழே உட்கார்ந்து தேன்மொழி சமைத்த காலை உணவை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தார்.
