Home Uncategorizedவல்லவனின் வன்முத்தம் 3

வல்லவனின் வன்முத்தம் 3

by Layas Tamil Novel
70 views

வன்முத்தம் 3

“மேடம்! நீங்களா? ” என்று அதிர்ந்து கேட்டான் சிபி வளவன்.

தன் அம்மா விஜயலட்சுமியை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு தன் பைக்கில் கிளம்பி இருந்த சிபிவளவன் அவனுக்கு முன்னாலேயே ஹாஸ்பிடல் வந்திருந்த  நிலாவினியை பார்த்து அதிர்ச்சியானான்.

மெல்லிய ஷிப்பான் சேலையில் தங்கமென ஜோலித்தாள். அவள் சிவந்த நிற மேனிக்கு அந்த நீல நிற சேலை அம்சமாக இருந்தது. அவனையும் அறியாமல் அவள் அழகை அவன் கண்கள் உள்வாங்கிக் கொண்டிருந்தது.

விஜயலக்ஷ்மி நடந்துகொண்டிருக்க.. அவரை கைத் தாங்களாக பிடித்திருந்தவள் வளவன் தன்னை ரசிப்பதை கவனிக்கவில்லை. ஆனால் அவன் அம்மா கவனித்துவிட்டார்..

புதிதாக திருமணம் செய்தவர்கள் அதுவும் 1 நாள் தான் ஆகி இருக்கிறது. இந்த பார்வைகள் எல்லாம் சகஜம் என்று நினைத்தவர். 

“ம்க்கும்..” என்று குரல் எழுப்பி “என்னடா என் மருமகளை மேடம்னு இன்னும் கூப்பிட்டு இருக்க? ” என்று   விஜயலட்சுமி கேட்டார்.

“ஹா! அம்மா அது.. ஆபீஸ்ல கூப்பிட்டு அப்படியே பழகிடுச்சு, கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறேன்” என்றவன் “நீ என்ன இவ்ளோ சாதாரணமா நடந்துட்டு இருக்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு ஆபரேஷன் நினைவிருக்கா? இல்லையா? கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே என்று தன் அம்மாவின் கைப்பிடித்து மீண்டும் கட்டிலில் அழைத்து வந்து அமர வைத்தான்.

“டேய் எவ்வளவு நேரம் தாண்டா அந்த பெட்லயே படுத்திருக்கிறது. ஹாஸ்பிடல் பெட் ரொம்ப சூடா இருக்கு. என்னால ஒரே இடத்துல படுக்க முடியல” என்றார். 

“அத்தை ஆப்ரேஷன் முடிஞ்சு உங்களுக்கு உடம்பு முழுவதும் குணமான பிறகு நீங்க என்ன வேணா செய்யுங்க, இப்போ அமைதியா கொஞ்ச நேரம் படுங்க . எப்படியும் கொஞ்ச நேரத்தில் ஆபரேஷன் தியேட்டர்க்கு உங்கள கூட்டிட்டு போக வந்துருவாங்க” என்று அவரை கைத்தங்கலாக படுக்கையில் படுக்க வைத்த நிலாவினி போர்வையை எடுத்து அவர் மார்புவரை போர்த்தி விட்டாள்.  

நிலாவினி அக்கறையாக தன் அம்மாவை கவனிப்பதை பார்த்தான். அது பொய் இல்லை என்று அவள் காட்டும் அக்கறையிலேயே புரிந்தது.

“வெற்றி,உமையால் எங்க போனாங்க. இங்க யாரையுமே காணோம். அவங்களை உங்க கூடவே இருந்து பாத்துக்க தானே சொலிருந்தேன். இப்படி பொறுப்பில்லாம எங்க போனாங்க ரெண்டு பேரும்.” என்று தன் தம்பி தங்கைகளை கேட்டான்.

“டேய்!டேய்! எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற. அவங்க இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தாங்க. என் மருமக என்னை பாத்துக்க வந்ததும் நான் தான் அவங்க ரெண்டு பேரையும் குளிச்சிட்டு சாப்பிட்டு வர சொன்னேன். சீக்கிரம் வந்திருவாங்க டா ” என்றார்.

“மேடம் வந்ததுனால சாப்பிட குளிக்க அனுப்பினீங்க. இல்லேன்னா இங்க தானே ரெண்டு பேரும் இருந்திருபாங்க” என்றவன் “இவங்க டைம் பாஸ்க்கு இங்க வந்திருக்காங்க. என் அம்மாவை நல்லா பாத்துக்க இவங்களுக்கு எங்கிருந்து அக்கறை எல்லாம் வரும்” என்று முனுமுனுத்த படி அங்கிருந்த பிளாஸ்க்கில் இருந்த காபியை ஊற்றி அவன் அம்மாவுக்கு கொண்டு வந்தான்.

அவர் அருகில் கட்டிலில் அமர்ந்து இருந்த நிலாவின் மீது அவன் பார்வை படியவே இல்லை. அதை நிலாவும் கவனித்தாள்.

“அம்மா! இந்தாங்க காபி ” என்று கப்பை அவர் முன் நீட்டினான்.

“ஆபரேஷன் பண்ண போற பேசியேண்ட் குறைஞ்சது 4 மணி நேரமாச்சும் எதுவும் சாப்பிடாம இருக்கணும்னு சொல்லுவாங்க. அவங்களுக்கு காபி வேண்டாம் வளவன்” என்றாள்.

“ஆமா டா, நர்ஸ் பொண்ணு நேரமே வந்து என் மருமக சொன்னதை தான் என்கிட்டேயும் சொல்லிட்டு போச்சு” என்றார்.

“சரிம்மா, அப்போ இந்த காப்பியை திரும்ப பிளாஸ்க்ல ஊத்தி வெச்சுடறேன்” என்றான்.

“கப்ல ஊத்தினதை எதுக்கு வளவன் வேஸ்ட் பண்றிங்க. கொடுங்க அந்த காபியை நான் குடிச்சுகிறேன்” என்று அவன் கையில் இருந்த காபியை. வாங்கிக்கொண்டாள்.

காலையில் தான் இருவரும் வாக்குவாதம் செய்துவிட்டு உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தும் இல்லை என்று பேசிக்கொண்டோம். அதெல்லாம் எதுவும் நடந்தது போலவே காட்டிகொள்ளாமல் இப்பொது மிக சாதாரணமாக தன் அம்மாவின் முன் பேசிவைத்தது போல தன்னிடம் யதார்த்தமாக பேசுபவலை ஆச்சர்யமாக பார்த்தான்.

அவனை பார்த்துக்கொண்டே காபியை குடித்தாள். 

வளவன் அவள் பார்வையை தவிர்த்துவிட்டு  அவன் அம்மாவிடம் சென்றது. அவரிடம் பேசிகொண்டிருந்தான். இருவரும் பேசுவதை கவனித்தவாரு காபி குடித்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் அங்கு வந்த நர்ஸ் கையில் ஆபரேஷனுக்கு போடும் உடையையும் கூடவே ஒரு போர்வையையும் கொண்டு வந்து கொடுத்தவர். “சார், இந்த டிரஸ்ஸை அவங்களை போட்டுக்க சொலிருங்க.. அவங்க தலைமுடியை ரெண்டா பிரிச்சு பின்னிவிட்ருங்க.. டிரஸ் மாத்தின அப்பறோம் இது போர்த்திவிட்டுக்கோங்க” என்று கொடுத்துவிட்டுப் போனார்.

அதை வளவன் கையில் வாங்கிக்கொண்டு பார்த்தவன். “உமையால் இன்னும் வரல, உங்கள ரெடியா இருக்க சொல்லிட்டு போய்ட்டாங்க நர்ஸ், இப்போ பாருங்க யாரு மாத்தி விடுவாங்க இதை உங்களுக்கு” என்று கவலைப்பட்டான்.

“ஏன் வளவன் அத்தைக்கு நான் மாத்திவிட மாட்டேனா? அதை என்கிட்டே கொடுத்துட்டு நீங்க வெளிய வெய்ட் பண்ணுங்க” என்று அவன் கையில் இருந்த உடையை வாங்கிகொண்டாள்.

“இல்ல பரவால்ல உங்களுக்கு ஏன் மேடம் சிரமம், உமையால். வரட்டும் அவளை மாத்திவிட சொல்றேன்” என்றான்.

“அவங்க வரட்டும் அதுவரை அத்தையை அப்படியே உக்கார வெச்சிருக்க முடியுமா?” என்றவள் “நீங்க வெளிய இருங்க” என்றாள்.

“இல்ல மேடம்..” என்று வளவன் மறுக்க..

“டேய், சும்மா சும்மா மேடம் மேடம்னு ஏண்டா கூப்பிடற. அதை ஆபீஸ்ல வெச்சுக்கோ முதல்ல ஒழுங்கா என் மருமகளை பேர் சொல்லி கூப்பிடு டா…” என்றார் விஜயலஷ்மி.

“ஏன் விஜி, அண்ணனை இப்படி அதட்டுற” என்று உமையாலும், வெற்றியும் அங்கு வர.. 

“பின்ன என்ன டி, அவன் பொண்டாட்டியை அழகா பேர் சொல்லி கூப்பிடாம மேடம்னு சொல்லிட்டு இருக்கான். அதான் திட்டுவிட்டேன்” என்றார்

“அம்மா இப்போ அது ரொம்ப முக்கியமா? உமையாலே வந்துட்டா அவளையே உங்களுக்கு டிரஸ் மாத்தி விட சொல்லுங்க. நாங்க வெளியே வெயிட் பண்றோம்” என்றான்.

“அதெல்லாம் அப்பறோம் இருக்கட்டும் டா, ஒரு நிமிஷம் இரு” என்ற விஜயலக்ஷ்மி. “உமையால் நான் சொன்னதை எடுத்துட்டு வந்தியா?” என்றார்.

“ம்ம்.. கொண்டு வந்துட்டேன் விஜி. வெற்றிகிட்டே இருக்கு ” என்றாள்.

வெற்றி தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு பெட்டியை விஜயலக்ஷ்மியிடம் கொடுத்தான்.

அதை வாங்கி  அதில் ஒரு சிறிய தங்க சங்கிலி இருந்தது அதை வளவனிடம் நீட்டியவர். “டேய் வளவா, இந்த இந்த செயினை என் மருமக கழுத்துல போட்டுவிடு” என்றார்.

அவர் கையில் இருந்த செயினை பார்த்தவன். “அம்மா! இது என்னோட செயின் தானே? சின்ன வயசுல பாட்டி எனக்கு ஆசையா போட்டது பத்திரமா வெச்சுக்கணும்னு சொன்னிங்க.. அதை கொண்டி போய்… இவங்களுக்கு கொடுக்கணும்னு சொல்றிங்க” என்றான்.

அவன் அப்படிக் கேட்டதும். நிலாவின் முகம் வாடிவிட்டது. 

“டேய் பத்திரமா வெச்சுக்கணும்னு தான் சொன்னேன். அதான் உன்னை பாத்துக்க என் மருமக வந்துட்டாளே இது அவளுக்கு சேர வேண்டுயது. நீ இதை அவ கழுத்தில போட்டு விடு. உனக்கு சொந்தமானது எல்லாமே அவளுக்கும் சொந்தம் டா.” என்றார்.

“ம்ஹும்.. அவங்க எனக்கே சொந்தம் இல்ல. இதுல என்னுது எல்லாம் அவங்களுக்கு. சொந்தமா?” என்று நினைத்து நக்கலாக சிரித்தான். அதை நிலாவும் கவனித்தாள்.

“அண்ணா செயினை வாங்கி அண்ணிக்கு போட்டுவிடுங்க..” என்றான் வெற்றி.

நிலா ஆர்வமாக அவனையே பார்க்க..

“ம்ச்.. அண்ணா என்ன யோசிச்சிட்டு இருக்க, இந்தா பிடி போட்டுவிடு அண்ணிக்கு” என்று விஜயலட்சுமியிடம் இருந்த செயினை வாங்கி அவன் கையில் திணித்தாள்.

செயினை கையில் வாங்கியவன் தயக்கத்தோடு பார்க்க.. ” இவன் எதுக்கு டி இப்படி முழிக்குறான்” என்றார் விஜயா.

“அத்தை விடுங்க, அவருக்கு அந்த செயினை எனக்கு கொடுக்க மனசு வரல போல..” என்றாள் நிலாவினி.

“ஏண்டா அப்டியா!?” என்றார் விஜயா.

வளவன் நிலாவை முறைக்க..

அவளோ நமட்டு சிரிப்புடன் அவனைப் பார்த்தாள்.

“ஏண்டா தங்கமாட்டம் என் மருமக இருக்கா. அவளுக்கு அவ தங்க மனசுக்கு எவ்ளோ கொடுத்தாலும் போதாது. நீ இந்த செயினை அவ கழுத்துல போட்டுவிட இவ்ளோ யோசிக்கிற..” என்று மூச்சு வாங்க பேசினார்..

“அம்மா, நீங்க அதிகம் பேசாதீங்க. பாருங்க மூச்சுவிட கஷ்டமா இருக்கு உங்களுக்கு” என்றான்.

“அப்போ விஜியை பேசவைக்காம அந்த செயினை அண்ணிக்கு போட்டு விடு ண்ணா” என்றான் வெற்றி.

“எல்லாரும் வந்த ஒரே நாள்ல இவளை இந்த தாங்கு தாங்குறாங்க.  போதாதுக்கு என்னோட செயினை வேற அவளுக்கு போட்டுவிட சொல்றாங்க” என்று நினைத்தவன். வேறு வழி. இல்லாமல்

 “மேடம் கொஞ்சம் திரும்பி உக்காருறிங்களா?” என்றான்.

“இவனை என்ன டி செய்றது” என்று தலையில் அடித்துக்கொண்டவர்.

“டேய் அவளை பேர் சொல்லி உரிமையா கூப்பிடு டா..” என்றார் விஜி.

வளவன் அவரை பார்க்க.. “ம்ம் கூப்பிடுடா..” என்று மூச்சு வாங்க அவனை அதட்டினார்.

“நி.. நிலா கொஞ்சம் திரும்பி உக்காரு” என்று மிகவும் கஷ்டப்பட்டு அவள் பெயரை அழைத்தான்.

நிலாவினியும் சிரித்துக்கொண்டே எழுந்து வந்தவள் அவன் முன் இருக்கும் சேரில் அமர்ந்து “ம்ம்.. போட்டுவிடுங்க வளவன்” என்றாள்.

கையில் இருந்த செயினை அவள் கழுத்தில் போட்டவன் அவன் கை அவள் மேல் படாமல் பார்த்துக்கொண்டான். செயினை சேர்த்து  கொக்கியை போட அது லூசாக இருந்தது. அது பழைய செயின் அல்லவா. 

“அம்மா, கொக்கி லூசா இருக்கு”என்றான்.

“பல்லுல கடிச்சு விடுடா, கழடாது” என்றார்.

நிலா சிரித்துக்கொண்டே தலை கவிழ்ந்து தன் முடியை முன்னாள் போட்டவள் “ம்ம்..” என்றாள்.

வளவனுக்கு வேறு வழியே இல்லை. அவளுக்கு போட்டுவிட்டுதானே ஆகவேண்டும். மெல்லக் குனிந்தவன் கொக்கியை தன் பற்களில் வைத்து மெல்லக் கடித்தான்.

அவள் கழுத்துக்கும் அவன் முகத்துக்கும் தொட்டுவிடும் இடைவெளி தான். அவள் மேனியின் வாசமும், புதுத் தாலியின் அவன் நாசியை முழுவதும் நிறைக்க.. அதில் அவன் உடலில் ஒருவித ரசாயன மாற்றம் ஏற்பட்டது. அவனையும் அறியாமல் கண்கள் மூடி அவள் வாசனையை விரும்பி சுவாசித்தான்..

அவன் சூடான மூச்சுகாற்று நிலாவினியின் சங்கு கழுத்தில் பட.. அவள் உடல் சிலிர்த்து பூனை முடிகள் தூக்கிகொண்டது. கண் திறந்து அதை பார்த்தவன் அதற்கு இடையில் ஒரு சிறு புள்ளியாக இருந்த மச்சத்தை பார்த்தான்.

அவன் என்ன ஓட்டம் அந்த மச்சத்தில் முத்தம் வை.. முத்தம் வை என்று அவனுக்கு கட்டளையிட..

தலையை குலுக்கிக்கொண்டு வேகமாக எழுந்துகொண்டவன். உமை சரியா மாட்டிருக்கானு நீ ஒருவாட்டி பாத்திரு. நான் டாக்டரை பார்த்துட்டு வரேன்” என்று அவசரமாக வெளியேறினான்.

வெளியே வந்தவன் தலையை அழுந்தக் கோதிவிட்டவன். தன் சட்டை பட்டன் இரண்டை கழட்டிவிட்டான்.

“ஷ்… ஷ்..” என்று மூச்செடுத்து தன்னை சமநிலைப்படுத்த எண்ணினான்.

நிலாவினியின் இந்த நெருக்கம் வளவனை சற்று நேரத்தில் ஆடிப்படைத்து விட்டிருந்தது.

அவனைப் போலவே நிலாவுக்கும் அதே நிலைத்தான்.

அவன் மூச்சுகாற்றின் ஸ்பரிசம் இன்னமும் அவள் கழுத்தில் குறுகுறுப்பை தந்திருந்தது.

சிறிது நேரத்தில் நர்ஸ் வந்து விஜயாவை கூட்டிக்கொண்டு ஆபரேஷன் தியேட்டருக்கு செல்ல.. 

அவர் கையை பிடித்துக்கொண்டு வளவன், வெற்றி, உமையால் மூவரும் உணர்ச்சி பெருக்கில் நின்றனர்.

அம்மாவுக்கு எதுவும் ஆகாது சிட்டியிலையே பெஸ்ட் டாக்டர் தான் சர்ஜ்ரி பண்றாங்க. என்று ஆறுமுகம் வரா அவரோடு தேன்மொழியும், தாராவும் வந்தனர்.

பின் விஜயாவுக்கு தேன்மொழியும் மற்றவர்களும் தைரியம் சொல்லி ஆபரேஷன் தியேட்டருக்கு அனுப்பி வைத்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured