Home Uncategorizedவல்லவனின் வன்முத்தம் 5

வல்லவனின் வன்முத்தம் 5

by Layas Tamil Novel
68 views

வன்முத்தம் –  5

மருத்துவமனையின் அந்தத் தனி அறை, நிலாவினியின் மௌனத்தாலும் வளவனின் ஆக்ரோஷமான மூச்சுக்காற்றாலும் நிறைந்து கிடந்தது. அறைக்குள் நுழைந்த நிலாவினியை அவன் இழுத்துச் சுவரோடு சாய்த்த அந்த வேகம், அவளது இதயத் துடிப்பை எகிற வைத்தது.

வளவனின் கண்கள் சிவந்திருந்தன. அந்தக் கண்களில் கோபம் மட்டும் இருக்கவில்லை; எரியும் தணலாய் ஒருவிதமான உரிமையுணர்வும், தான் நேசிக்கும் ஒரு பொருள் மற்றவர் கைக்குச் செல்வதைத் தாங்க முடியாத ஒரு பொறாமையும் கலந்திருந்தது.

“என்ன ஆச்சு வளவன்? ஏன் இப்படி நடந்துக்கிறீங்க?” – நிலாவினி கேட்ட விதம் நிதானமாக இருந்தாலும், அவளது உள்ளுக்குள் ஒரு நடுக்கம் இருந்தது.

“தைரியம்… உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா, நான் அங்கே நின்னுகிட்டு இருக்கும்போதே அந்த டாக்டர் கையைப் பிடிச்சுப் பேசுவ? நான் யாருன்னே உனக்குத் தெரியாம போயிடுச்சா?” என்று சீறினான். அவன் முகம் அவள் முகத்திற்கு மிக அருகில் வர, அவனது வெப்பமான மூச்சுக்காற்று அவள் நாசியில் உரசியது. அந்த நெருக்கம் அவளை ஒரு நிமிடம் தடுமாறச் செய்தாலும், தன் ஈகோவை விட்டுக்கொடுக்காமல் அவனை ஏறிட்டாள்.

“அவர் என்னோட பிரெண்ட் வளவன். ஒரு டாக்டரா எவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்கான தெரியுமா? அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொன்னது தப்பா? ஜஸ்ட் லீவ் மீ!” என்று அவனைத் தள்ள முயன்றாள்.

ஆனால், வளவன் நகருவதாக இல்லை. அவள் திமிற திமிற, தனது உடலை அவளோடு இன்னும் நெருக்கமாக அழுத்தினான். அந்தத் தொடுதல் நிலாவினியின் நரம்புகளில் மின்னலைப் பாய்ச்சியது. அது கோபமா அல்லது உரிமையாக அவன் தன்னிடம் நடந்து கொள்கிறானா? என்று புரியாத அளவிற்குத் தீவிரம் ததும்பியது.

“தேங்க்ஸ் சொல்லக் கையைப் பிடிக்கணுமா? அந்த டாக்டர் உன் கையைத் தொடும்போது உனக்கு ஒண்ணுமே தோணலையா? ஆனா எனக்கு தோணுது … எனக்குத் தோணுது! நீ என்னைத் தவிர வேற யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கக் கூடாதுன்னு தோணுது. இதுக்கு பேர் பொறாமைன்னு நீ சொன்னா, ஆமா… நான் பொறாமைப்படுறேன்!” என்று கத்தினான்.

அவள் கழுத்தில் அவன் கரம் லேசாக அழுத்தம் கொடுத்தது. அது வலியைத் தந்தாலும், அந்த வலியில் ஒரு  உரிமை இருப்பதை அவளால் உணர முடிந்தது.

“வளவன், லிமிட் க்ராஸ் பண்றீங்க… நான் என்னோட பிரெண்டுக்கு ஹேண்ட் ஷேக் பண்ணது ஒரு குத்தமா? இதுக்கு ஏன் இப்படி ரியாக்ட் பண்றீங்க? நீங்க என்னோட பிஏ தானே? அந்த லிமிட்டோட இருங்க!” என்று அவள் முகத்தில் அடித்தாற்போலச் சொன்னாள்.

அந்த வார்த்தை… அது ஒரு கூர்மையான அம்பாக வளவனின் நெஞ்சைத் துளைத்தது. ‘பிஏ’ – அலுவலக ரீதியாக அவன் அவளுக்குப் பணியாளன் தான். ஆனால், மனதளவில் அவளை எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை, அந்த வார்த்தை ஒரு பெரிய அவமானமாகத் தெரிந்தது.

அவன் பிடி மெல்லத் தளர்ந்தது. அவனது கண்கள் கலங்கியது போன்ற ஒரு பிம்பம் தோன்றி மறைந்தது. சட்டென்று அவளிடமிருந்து விலகி, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்.

அறைக்கு வெளியே வந்த வளவனுக்குத் தலை வெடிப்பது போல இருந்தது. வராண்டாவில் வேக வேகமாக நடந்தான். 

அங்கே நிற்க முடியாமல் ஆப்ரேஷன் தியேட்டர் நோக்கிச் சென்றான்.

“பிஏ… ஆமா, நான் வெறும் பிஏ தான். அப்புறம் எதுக்கு எனக்கு இந்த வலி? அவ வேற யாரோட கையைப் பிடிச்சா எனக்கு என்ன வந்துச்சு” – தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான்.

அவனுக்குள் இருப்பது வெறும் கடமை அல்ல, அது  உரிமை என்பதை அவன் உணர மறுத்தான். 

ஆனால், அவளது சிறு தீண்டல் கூட மற்றவர்களுக்குச் சொந்தமாகி விடக்கூடாது என்பதில் அவன் காட்டிய அந்தத் தீவிரம், அவர்கள் இருவருக்குமே அது காதல்தான் என்பதை மௌனமாகச் சொல்லிக் கொண்டிருந்தது.

நிலாவினியோ அறைக்குள் அப்படியே அமர்ந்துவிட்டாள். வளவனின் அந்தப் பார்வையில் ஒருவித கோபம் இருந்தது. அவன் காட்டிய அந்தப் பொசசிவ்னஸ் அவளுக்குப் பிடித்திருந்ததா தெரியவில்லை. 

திடீர் என்று வந்து இப்படி பேசுபவனை என்னவென்று சொல்வது. நேற்றில் இருந்து தன்னிடம் விலகி நின்றவன். இப்பொது திடீர் என்று வந்து உரிமையாக பேசுவதை அவள் என்னவென்று எடுத்துக் கொள்வாள்.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் தன் கழுத்தைத் தடவிப் பார்த்தாள். அங்கே வளவனின் விரல்கள் பதித்த தடம் இன்னும் அனலாய் எரிந்து கொண்டிருந்தது.

அப்படியே எழுந்து வாஷ்ரூம் சென்றவள் முகத்தை கழுவிவிட்டு வெளியே வந்தாள்.

ஆனால் அந்த அறையை விட்டு அவள் வெளியே வரவில்லை.

அங்கே ஆபரேஷன் தியேட்டர் முன் அமர்ந்து இருந்தவன் நிலாவை தான எதிர் பார்த்தான். ஆனால் அவள் வரவே இல்லை. 

இதில் இருந்தே அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று தெளிவாக புரிந்துகொண்டான் வளவன்.

“ச்சே! நான் தான் தேவை இல்லாம எமோஷன் ஆகிட்டேன். எதுக்கு இந்த வேண்டாத வேலை. அப்பறோம் ஏன் இப்படி நான் அவமானபடனும். நான் பியே தானே. என் அம்மாவோட ஆபரேஷன்க்காக தான் இந்த கல்யாணமே பண்ணினேன். அப்போ என் லிமிட் என்ன? சமூகத்துல நிலாவுக்கு ஒரு அந்தஸ்து கிடைக்கணும்னு அவ அப்பா என்னை. அவளுக்கு கட்டி வெச்சார். அப்போ நானும் அதே இடத்துல இருந்துக்கிறேன், தேவை இல்லாம நான் ஏன் கண்டதை பத்தி யோசிக்கணும்” என்று நினைத்திருக்க.. அவன் அம்மாவை அழைத்துக்கொண்டு நர்ஸ்கள் வெளியே வந்தனர்.

வேகமாக எழுந்து செல்ல.. விஜயலக்ஷ்மியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர்.

அவரை அந்த கோலத்தில் பார்த்தவனுக்கு இதயம் கனத்தது. இருந்தும் அவர் சர்ஜரி நல்லவிதமாக முடிந்ததை எண்ணி சந்தோசமாகவும் இருந்தது.

ஆனால் அவன் தாயை நல்ல முறையில் மீட்டுக் கொண்டு வந்தவனை கண்டு தான் கோபம். ஏன் அவனுக்கு இப்படி ஒரு எண்ணம் உருவானது என்று அவனுக்கே தெரியவில்லை.

விஜயலக்ஷ்மி லேசான மயக்கத்தில் இருந்தார். வளவனை பார்த்ததும் “ வளவா.. நாம் சாகல டா..  திரும்ப வந்துட்டேன் …” என்று மெல்ல முனுமுனுத்தார்.

“உங்களை அவ்ளோ சீக்கிரத்துல போக விட்டிருவேனா அத்தை. நீங்களும் நானும் பேச நிறைய விஷயம் இருக்கு” என்றவள் பார்வை வளவன் மீது பட்டுத் திரும்பியது.

அவள் குரல் கேட்டு நிமிர்ந்தவன் நிலாவின் முகத்தை பார்க்க..

அவளோ அவன் பார்க்கிறான் என்று தெரிந்ததும் தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

இருவரும் மனதிலும் என்ன இருக்கிறது என்று அவர்கள் இருவரும் தான் வெளிச்சம்.

“ரொம்ப நேரம் இங்க வெச்சிருக்க கூடாது சார். இவங்களை ரூம்ல படுக்க வெச்சிடலாம் என்று விஜயலக்ஷ்மியை அவர் அறையில் கொண்டு வந்து விட்டனர்.

அவரை படுக்க வைத்துவிட்டு  “இவங்களை பாத்துக்க வேற நர்ஸ் அப்பாயிண்ட் பண்ணிருக்காரு டாக்டர். அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவார்” என்றவர்.

“மேடம் அவங்க அதிகம் ஸ்ட்ரைன் பண்ணக்கூடாது. அதிகம் பேசக்கூடாது. அப்படி பேசினா அதிகம் மூச்சு வாங்கிமும். அப்பறோம் அவங்களுக்கு தான் சிரமம். அவங்கள அதிவம் பேச வெக்க வேணாம்” என்றார்.

பிறகு மற்ற சில முக்கியமான விஷயங்களை சொல்லி விட்டு நற்செயல் அங்கிருந்து நகர்ந்து விட நிலாவினி விஜயலட்சுமி கையைப் பிடித்துக் கொண்டு அவர் அருகில் கட்டிலில் அமர்ந்தாள். 

 அவர்கள்  தன்னருகில் இருப்பதை விஜயலட்சுமி தெரிந்து கொண்டாளும், அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை லேசாக தூக்கமும், மயக்கமும் ஒரு சேர வருவது போலவே இருக்க அவர் கண்கள் மூடி அமைதியாக படித்து விட்டார்.

மற்றவர்கள் எல்லாம் ஆறுதலாக சில வார்த்தைகள் பேசி மருத்துவமனையில் அட்மிட் செய்திருந்தவருக்கு ஆறுதல்  சொன்னார்கள்.

மணி ஆரை கடக்கவும் தேன்மொழி வந்து நிலாவினியிடம் “மாப்பிள்ளையும் நீயும் வீட்டுக்கு கிளம்பி போங்க, 6:00 மணிக்கு மேல வெளியே இருக்கக் கூடாது வேற எங்கேயும் சுத்தமா நேரா வீட்டுக்கு போயிடுங்க” என்றார்  

 “அம்மா அத்தைக்கு ஆபரேஷன் பண்ணி இருக்கு இந்த நேரத்துல நானும் அவரும் கூட இருக்கணும்,நீங்க என்னடான்னா எங்க ரெண்டு பேரையும் கிளம்பி வீட்டுக்கு போக சொல்றீங்க”என்றாள்.

இங்க பாருடி புதுசா கல்யாணம் ஆனவங்க சாயங்காலம் வெளிய போகக்கூடாதுனு  சொல்லுவாங்க. அதுவும் புது தாலி வேற இருக்கு. மாலை நேரத்துக்கு மேல வெளியே சுத்த கூடாது சொன்னா கேளு ரெண்டு பேரும் கிளம்பி போங்க என்று தேன்மொழி கூறவும்.

“ சரிம்மா போறோம்” என்றவள். “ “நீங்க மூணு பேரும் எப்போ வரிங்க நாங்க மட்டும் வீட்ல தனியா இருக்கணும்” என்றாள்.

“நாங்க கொஞ்ச நேரத்துல கிளம்பி வரோம் டா..  நீ போ…  தாரா வெற்றி 

 உமையாள் மூணு பேரையும் நான் வரும்போது கூட்டிட்டு வந்துடறேன்” என்றார் ஆறுமுகம்.

“ சார் ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க எல்லாரும் வேணா கிளம்பி போங்க நான் என் அம்மா கூட இருந்துக்கறேன்” என்றான் சிபி.

“ இல்ல மாப்ள உங்க ரெண்டு பேருக்கும் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு இந்த நேரத்துக்கு மேல வெளியே சுத்த கூடாதுன்னு சொல்லுவாங்க. நீங்க போங்க வஜ்ரன் உங்க அம்மாவ பாத்துக்குறதுக்கு நர்சுகளை போட்டு இருக்கானே,  அவங்க நல்லா பாத்துக்கோங்க நீங்க கிளம்புங்க “ என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

உமையாள் விஜயலட்சுமிக்கு வேண்டியதை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள.. வஜ்ரனை பார்க்க ஆறுமுகம் தேன்மொழியும் சென்று விட்டனர். 

விஜயலட்சுமி வலி அதிகமாக இருக்கிறது என்று புலம்பவும் அவருக்கு இன்ஜெக்ஷன் செய்வதற்காக வைக்கிறேன் ஒரு மருந்தை எழுதிக் கொடுத்திருந்தான் அதை வாங்க வெற்றி சென்றிருந்தான்.

மருந்து வாங்கிவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தான் மாலை நேரம் என்பதால் ஹாஸ்பிடலில் கூட்டமும் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது.

அந்த நேரத்தில் தூணுக்கு பின்னால் இருந்த ஒரு கை அவனை வெடுக்கென தன் பக்கம் இழுத்து இருக்க… தன் முன் இருந்தவளை பார்த்ததும் வெற்றிக்கு கோபம் தான் வந்தது.

“ ஹே! உனக்கு அறிவு இல்ல இப்படியா கைய புடிச்சு இழுப்ப.. யாராவது பார்த்தா நம்மளை என்ன நினைப்பாங்க. கையில் வேற மருந்து வச்சிருக்கேன் கீழே விழுந்து கொட்டிடிச்சின்னா என்ன பண்றது”என்றான்.

“ யாரு பார்த்தாலும் எனக்கு பிரச்சனை இல்ல மருந்து கொட்டுடுச்சுன்னா வேற வாங்கிக்கலாம் வெற்றி, இப்போ எதுக்கு இவ்வளவு கோபப்படுற, நீயும் நானும் தனியா மீட் பண்றதே பெரிய விஷயம். அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு என்கிட்ட கொஞ்சம் நல்லா பேசலாம்னு உனக்கு தோணுதா இப்படி கோபமா பேசுறியே” என்றாள் தாரா.

“ உங்ககிட்ட இருக்கிற காசுக்கு இந்த மாதிரி எத்தனை மருந்து வேணா வாங்கலாம். ஆனா நாங்க அப்படி கிடையாது. இப்படி ஒரு பொருளோட மதிப்பு தெரியாம பேசாத” என்றவன் “உனக்கும் எனக்கும் தனியா பேச என்ன இருக்கு?” என்று அங்கிருந்து செல்ல போக..

“தனியா பேச ஒன்னும் இல்ல. ஆனா கொடுக்க நிறைய இருக்கு” என்றவள் அங்கிருந்து செல்ல போனவன் சட்டையை பிடித்து தன் பக்கம் இழுத்து அவன் இதழில் தன் இதழை பொருத்தி இருந்தாள்.

தாராவின் இந்த அதிரடியான முத்தத்தை வெற்றி சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவனையும் மறந்து கண்களை இருக்க மூடிக்கொண்டான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured