வன்முத்தம் 7
வளவனுக்கு பாத்ரூமிற்குள் இருந்து பலத்த சத்தம் கேட்கவும் வந்து கதவை தட்டினான். நிலாவிடம் இருந்து எந்த பதிலும் வாராமல் போகவே வேகமாக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றவன் அங்கே நிலாவினி பிறந்த மேனியாய் தரையில் மயங்கிக் கிடப்பதை பார்த்தவன் அதிர்ந்து போனான்.
வேகமாக உள்ளே வந்தவன் அங்கே அவள் அணிவதற்காக வைத்திருந்த உடையை நிலாவின் உடலில் சுற்றி அவளைத் தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வேகமாக அறையை திறந்து கொண்டு வெளியே வந்தான். அவன் வரவும் அவளுக்கு ஜூஸ் கொண்டு வந்தார் அவர் வீட்டின் வேலையாள் மல்லிகா வந்தார்.
“அக்கா! நிலா பாத்ரூம்ல மயக்கம் போட்டு விழுந்துட்டா நீங்க கொஞ்சம் அவ கூட இருங்க நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்”என்றான்
“அச்சோ! மயங்கிருச்சா பாப்பா ” என்றவர் வேகமாக உள்ளே செல்ல..
கீழே செல்லப்போனவன் “அக்கா! ஒரு நிமிஷம் நிலா.. நிலா டிரஸ் எதுவும் போடல. கொஞ்சம் அவங்களுக்கு டிரஸ் மட்டும் போட்டு விட்ருங்க நான் வந்துடறேன்” என்றுவிட்டு வேகமாக சென்றுவிட்டான்.
உள்ளே வந்த மல்லிகா கட்டிலில் மயங்கி கிடந்த நிலாவை பார்த்துவிட்டு கதவை சாற்றியவர் வந்து அவளுக்கு வேறு உடை எடுத்து வந்தவர் அவள் மீது சுற்றி இருந்த உடையை எடுத்துவிட்டு அவள் உடலில் ஒற்றி இருந்த நீரை துடைத்துவிட்டு அதன் பின் உடை மாற்றி விட்டிருந்தார்.
அவர் முடிக்கவும் வளவன் டாக்டருடன் வரவும் சரியாக இருந்தது.
உள்ளே வந்த டாக்டர் நிலாவை பரிசோதித்து விட்டு “சாதாரண மயக்கம் தான் ஆனா அவங்க ரொம்ப அழுத்தில் இருந்திருக்காங்க ,அவங்க பிரஷர் அதிகமாகிருக்கு. அதனால் தான் மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க.” என்றார்.
அவர் சொன்னதை கேட்டதும் தான் வளவனுக்கு சற்று நிம்மதியானது.
“இதே போல இதுக்கு முன்னாடி நடந்திருக்கா?” என்றார் டாக்டர்.
வளவன் மல்லிகாவை பார்க்க “பாப்பாவுக்கு ஹாஸ்பிடல் போனா ஆகாது. அதுக்கு அந்த ஹாஸ்பிடல் வாடையே பிடிக்காது. இன்னிக்கு பூரா ஹோச்பிடல்ல இருந்திருக்கு வரும்போதே வாந்தி வருது, மயக்கமா இருக்குன்னு சொல்லிச்சு நான் ஜூஸ் கொண்டு வரதுக்குள்ள மயங்கிருச்சு ” என்றவர்.
“இதுக்கு முந்தி வாந்தி மட்டும் வரும். அப்பறோம் சோர்ந்து போய் அந்த நாள் முழுக்க கட்டிலை விட்டு எழுந்திருக்காது. இன்னிக்கு தான் மயங்கி விழுந்திருக்கு” என்றார்.
“ஓ! இவங்களுக்கு ஹாஸ்பிடல் வாடையே ஆகாதா” என்றவர். “இது Vasovagal Syncope ஆஹ் இருக்கும் . ஒரு டெஸ்ட் எடுத்து பார்த்தா இதுக்கு என்ன மாதிரி டிரீட்மென்ட் கொடுக்கலாம்னு தெரிஞ்சுக்கலாம் ” என்று மருந்தை எழுதி கொடுத்தவர் . நாளைக்கு இவங்களை கிளினிக் கூப்டு வாங்க சில டெஸ்ட்கல் எடுத்து பாக்கணும் ” என்றார்.
“டாக்டர் இந்த மருந்து” என்றான் வளவன்.
“ஓஹ்! சாரி ” என்றவர்.
“இவங்க நைட் முழிச்சதும் சாப்பிட ஏதாவது கொடுத்து இந்த டேப்லெட்டை போட சொல்லுங்க, அப்போ தான் திரும்ப வாந்தி வராம இருக்குறதுக்கு , இவங்களை இந்த மாத்திரை நாளைக்கு ஹாஸ்பிடல் எதுவும் போனா அங்க இருக்க சூழலால் இவங்களுக்கு வாந்தி, மயக்கம் வராமல் இருக்க இந்த மாத்திரையை யூஸ் பண்ண சொல்லுங்க” என்று சீட்டை கொடுத்தவர் “நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து கிளம்ப.
“அக்கா நீங்க பாத்துக்கோங்க நான் போய் மருந்து வாங்கிட்டு வந்திடுறேன்” என்று . டாக்டரையும் தன்னோடு அழைத்து சென்று இருந்தான் .
சிறிது நேரத்தில் மருந்துடன் வர.. அங்கே நிலா எழுந்து அமர்ந்து இருந்தாள் “தம்பி, நீங்க பாப்பா கூட இருங்க நான் போய் அதுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்து விடறேன்” என்று கீழே போனார்.
நிலாவின் அருகில் வந்து கட்டிலில் அமர்ந்தவன் “நிலா! இப்போ எப்படி இருக்கு”என்றான்.
“ம்ம்ம் கொஞ்சம் ஓகேவா இருக்கு வளவன்” என்றாள்.
“உங்களுக்கு ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் ஒத்துக்கலையின்னா நீங்க என் அம்மாவை பார்க்க வராமயே இருந்திருக்கலாம் இல்ல. இப்போ பாருங்க உங்களுக்கு தான் சிரமம் “என்றான்.
“அப்படி இல்ல வளவன் எனக்கு எப்பவும் இந்த அளவுக்கு சீரியஸா போனதில்லை.. எப்பவும் லேசா தலை சுத்தல், வாந்தி இந்த மாதிரி தான் இருக்கும். ஆனால் இந்த வாட்டி தான் மயங்கி விழுந்திருக்கேன்’ என்றாள் .
மல்லிகா உணவை கொண்டு வந்து வைத்தவர் “தம்பி பாப்பாவுக்கு மருந்து கொடுக்கனும் நீங்க இந்த தோசையை பிச்சு பாப்பாவுக்கு ஊட்டிவிட்டு அது சாப்பிட்டதும் மருந்தை கொடுத்திடுங்க. நான் கல்லுல அரிசி போட்டுவிட்டிருக்கேன். அது ஓடி முடியுறதுக்குள்ள நான் அதை வழிச்சு வெக்கணும்” என்றவர் கீழே போய்விட்டார்.
வளவனோ கையில் இருந்த உணவு தட்டையும், நிலாவினியையும் மாரி மாரி பார்த்தான்.
அவனின் சங்கடம் புரிந்து கொண்ட நிலா “கொடுங்க வளவன் நானே சாப்பிட்டுக்கிறேன்” என்று கையை நீட்டி தட்டை வாங்கினாள்.
நடுங்கிய விரல்களால் உணவை எடுத்து சாப்பிட போனாள். தோசையை பிட்டு வாயில் போட முடியவில்லை. அது தட்டிலேயே மீண்டும் விழ..
அவளின் நிலையை கண்டு வல்லவனுக்கு கஷ்டமாகிவிட்டது. “நீங்க இவ்ளோ வீக்கா இருப்பீங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல ” என்று அவள் கையில் இருந்து தட்டை வாங்கியவன் தோசையை பிட்டி அவள் முகத்திற்கு அருகில் நீட்டினான்.
அவனை ஏறிட்ட நிலாவினியின் இமைகள் படபடவென துடித்தது. அவள் கண்களை பார்த்தவன் அவள் முகத்தை ஆராய்ந்தான். ஆபீசில் எப்போதும் கம்பீரமாக வளம் வருபவள் இப்படி முகமெல்லாம் வெளுத்துப் போய், மிகவும் சோர்ந்த நிலையில் இருப்பதை பார்க்க அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“ம்ம்… சாப்பிடுங்க” என்று உணவை அவள் வாயின் அருகில் கொண்டு சென்றான்.
அவனை பார்த்துக்கொண்டே வாயை திறந்தாள் கையில் இருந்த தோசையை அவளுக்கு ஊட்டிவிட்டான் .
அவன் ஊறியதும் வாயில் உணவை மென்று சாப்பிட… அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“மேடம் என்ன ஆச்சு கண்ணுல தண்ணி வருது, குழம்பு காரமா?” என்றான்.
அவள் இல்லை என்று தலையை இடவலமாக ஆட்ட..
“அப்பறோம் ஏன் அழறீங்க?” என்றான்.
“நீங்க உங்க முதலாளியா நினைச்சு எனக்கு ஊட்டி விடுறிங்களா? இல்ல உங்க மனைவியா என்னை நினைச்சு ஊட்டி விடுறிங்களா?” என்றாள்.
அவள் கேள்வியில் தடுமாறியவன் தன்னை சுதாரித்துக்கொண்டு. “முதலாளியா இருந்தா ஊட்டி விட்டிருக்க முடியுமான்னு எனக்கு தெரியல, ஆனா ஒரு நோயாளியா தான் நான் உங்களை பாக்குறேன். உடம்பு முடியாம நீங்க இருக்கீங்க , அதுவும் என் அம்மாவை பார்க்க ஹோப்பிடல் வந்து தான் உங்களுக்கு இந்த அளவுக்கு உடம்பு முடியல. அதுவும் ஒரு காரணம்” என்றான்.
“அப்போ நான் உங்க மனைவிக்குற ஒரு சின்ன நினைப்பு கூடவா உங்களுக்கு வரல..” என்றாள் ஒரு வித ஏமாற்றத்தோடு .
“அது எனக்கு பிடிச்சு நடந்திருந்த கல்யாணமா இருந்திருந்தா அப்படி தோணிருக்கலாம்” என்றவன் மறுவாயை அவளுக்கு ஊட்டப் போக..
சட்டென அவன் கையில் இருந்து தட்டை பறித்தவள் “யாரோட மனிதாபிமானமும் எனக்கு தேவை இல்ல” என்று நடுங்கிக்கொண்டே அவள் தோசையை பிட்டு வாயில் வைத்து உன்ன ஆரம்பித்தாள்.
அவள் பதட்டப்படுவதையும், நடுங்கிக்கொண்டே சாப்பிடுவதையும் பார்க்க அவனுக்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அவளிடம் மீண்டும் பேச அவனுக்கு மனம் வரவில்லை. உள்ளே சென்று கை கழுவிவிட்டு வந்தவன் கட்டிலில் இருந்த பெட்ஷீட்டை எடுத்துக்கொண்டு அவளுக்கு எதிரே இருந்த சோபாவில் போய் படுத்தவன் இன்னமும் சாப்பிட திணறிக்கொண்டு இருந்தவளை பார்த்தான்.
இருந்த 2 தோசையை சின்ன சின்னதாக பிய்த்து சாப்பிட அது தட்டில் விழ என்று அவளால் நிம்மதியாக ஒரு வாய் உணவை கூட எடுத்து வாயில் வைக்க முடியாமல் போக.. அதை பார்த்தவன் பொறுமை இழந்துவிட்டான். எழுந்து அவளிடம் வந்தவன் தட்டை அவளிடம் இருந்து பிடுங்கி. தோசையை பிட்டு அவள் வாயில் திணித்தான்.
அவளோ அவனிடம் இருந்து தட்டை வாங்க முற்பட.. எவ்ளோ கோபமா இருந்தாலும் நல்லா சாப்பிட்டு தெம்பா என்னை திட்டுங்க மேடம்” என்று தோசையை ஊட்ட ஆரம்பித்தான்.
“என்னை தான் உங்களுக்கு பிடிக்கலையே வளவன் அப்பறோம் ஏன் இந்த அக்கறை” என்றாள் அவன் பதிலேதும் பேசாமல் அவளுக்கு ஓடிக்கொண்டு இருந்தான்.
அவள் சாப்பிட்டு முடித்ததும் கைகழுவிட்டு வந்தவன் “ஒரு டென் மினிட்ஸ் ரெஸ்ட் எடுங்க அப்பறோம் மாத்திரை சாப்பிடனும்” என்றான் வளவன்.
அவளும் அமைதியாக அங்கே இருந்த தலையணை இழுத்து முதுகுக்கு பின்னால் தன்னால் இயன்ற வரையில் உயர்த்தி நிற்க வைத்தவள் அதில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
அவள் தடுமாறுவதை பார்த்துவிட்டு வந்து பின்னால் இருந்த தலையணையை சரியாக வைத்துவிட்டு போய் தன் மொபைலை எடுத்து பார்க்க ஆரம்பித்தான்.
நிலாவுக்கு இன்னமும் ஒரு மாதிரி வாந்தி வருவது போல இருக்க.. வளவனை பார்த்தாள். அவன் போனில் மூழ்கி இருக்க அவனை அழைக்க நிலாவுக்கு விருப்பம் இல்லை. மெல்ல காலை கீழே வைத்தவள் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு எழுந்து நின்றவள் பாத்ரூம் நோக்கி நடந்தாள். இரண்டு எட்டுக்கள் தான் எடுத்து வைத்திருப்பாள். தலை கிர்ரென்று சுற்ற… அப்படியே பின்னால் சாய்ப்போனாள்.
எங்கே கீழே விழுந்துவிடுவோமோ என்ற ரீதியில் அவள் அம்மா!.. .என்று அலறிவிட.. அவளை விடாமல் ஓடி வந்து அந்த நேரத்தில் பிடித்திருந்தான் வளவன்.
அப்படியே அவன் தோள் மீது பிடித்ததிற்கு சாய்ந்து நின்றுவிட்டாள். அவன் மார்பில் அவள் தலை வைத்து இருக்க.. விழுந்தவளை அப்படியே தன் கைகளில் ஏந்தியவன் ” என்ன ஆச்சு? எதுக்காக எழுந்தீங்க” என்றான்.
“வாந்தி வர மாதிரி இருந்துச்சு. அதான் பாத்ரூம் போலாம்னு எழுந்தேன்” என்றாள்.
“என்கிட்டே சொல்லி இருக்கலாமே..” என்றவன் அவளை தூக்கிக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தவன் அங்கே இருந்த வாஷ்பேசின் முன் அவளை நிற்க வைத்து ஒரு கையால் அவளை தன் தோள் மீது சாய்த்து நிற்க வைத்தவன் அவளை பார்த்தான் நிலாவும் அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“வாந்தி இப்பவும் வருதா?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவள் அவசரமாக குனிந்து வாந்தி எடுத்திருந்தாள்.
அவள் தலை முடியை பின்னுக்கு தள்ளி தலையை ஆதரவாக பிடித்து இருந்தவன் மெல்ல அவள் முதுகை நீவி விடப்படி இருந்தான்.
சாப்பிட்ட இரண்டு தோசையும் வந்திருக்க.. அவள் ஓய்ந்து போய் பேசனை இருபக்கமும் பிடித்துக்கொண்டு நின்று இருந்தாள்.
பைப்பை திருகி தண்ணீரை திறந்து விட்டவன் தண்ணீரை பிடித்து நிலாவின் முகத்தை மென்மையாக துடைத்துவிட்டு அவளை தூக்கிக்கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தவன் மீண்டும் பாத்ரூம் சென்று அவள் வாந்தி எடுத்ததை கழுவி பேசனை சுத்தம் செய்துவிட்டு வந்தவன்.
அவள் கண்மூடி படுத்திருப்பதை பார்த்தான். மெல்ல நிலாவிடம் வந்து அவள் தூங்குகிறாளா என்று பார்த்தான்.
வெறுமனே கண் மூடி தான் படுத்திருந்தாள்.
“கொஞ்ச நேரம் இப்படியே இருங்க மேடம். எழுந்து எதுவும் செய்ய வேணாம். டேப்லெட் போட்டா தான் உங்களுக்கு வொமிட் ஸ்டாப் ஆகும்” என்றவன் “சாப்பிட்டதெல்லாம் வொமிட் பண்ணிட்டீங்க, வெறும் வயித்துல மாத்திரை சாப்பிடக் கூடாது. நீங்க இருங்க நான் போய் பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன்” என்று கீழே சென்றான்.
