வெறியனின் வேட்கையில் வெண்பனி
PROMO
மழை பெய்து ஓய்ந்து இருந்த நேரம் அந்த சிவப்பு விளக்கு பகுதியில் ஒரு மஹிந்திரா ஸ்கொர்பியோ சைரன் ஒலியுடன் அந்த சகதியை கிழித்துக்கொண்டு வந்து நின்றது.
“ஐயையோ! இவனா! ரெய்டுக்கு வந்திருக்கான்.. போச்சு போச்சு.. ” என்று வாசலில் நின்று இருந்த வேவு பார்க்கும் ஒருவன் உள்ளே ஓடிச்செல்ல..
காரைவிட்டு கம்பீரமாக இறங்கினான் ஐராவதம் பெயருக்கு ஏற்ப மதம் கொண்ட யானை தான், பேச்சிலும், செயலிலும் யாருக்கும் அடங்காதவன்.
6 அடி ஆண்மகன் கட்டுடல் தேகம் எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பான். அவன் உடல் மீது அந்த அளவுக்கு பற்று அவனுக்கு.
அப்போ ரொம்ப ஒழுக்கமானவன்னு மட்டும் அவனை நினைச்சிறாதீங்க.. இருக்குற எல்லா கேட்ட பழக்கமும் அவனுக்கு இருக்கு.. ஒன்னை தவிர..
பொண்ணுங்க.. பொண்ணுங்க விசயத்துல மட்டும் சார் சொக்கத்தங்கம்.
“டேய் சிவா! என்ன டா இந்த ஏரியாவே ரொம்ப அமைதியா இருக்கே இன்னிக்கு.. நான் ரெய்டு வரத நம்ம டெபார்ட்மெண்ட்ல இருந்து எவனாவது போட்டு கொடுத்துட்டானா? என்ன?” என்று தன் தொப்பியை மாறிக்கொண்டே காரை விட்டு இறங்கியவன் வாயில் இருந்த சிகெரெட்டை புகைத்துக்கொண்டே அந்த பங்காளவிற்குள் நுழைந்தான் ஐராவதன்
அவன் டிரைவர் சிவாவோ அவசரமாக இறங்கியவன் ஐராவதனின் பின்னால் ஓட்டமும் நடையுமாக வேகமாக சென்றான்.
அந்த பிரோஸ்டிடியுசன் ஏரியாவுக்குள் இருந்த ஒரு பெரிய பங்காளவிற்குள் நுழைந்தவன் அவனை நோக்கி வேகமாக ஓடி வந்த பெண்ணை பார்த்து “என்ன மாலா! எப்படி இருக்க?” என்றவாறு அந்த இடத்தை சுற்றிலும் நோட்டமிட்டான்.
“சார்! வாங்க .. எங்க இடத்துக்கு நீங்க வரதே ரெய்டுக்கு மட்டும் தானா.. உங்களுக்கு இந்த குட்டிங்க எதுவும் தேவை பட்டா சொல்லுங்க… நானே உங்க இடத்துக்கு கூட்டிட்டு வரேன். நீங்க எதுக்கு கஷ்டப்பட்டு இவ்ளோ தூரம் வரணும்” என்று அவன் முன் கூழை கும்பிடு போட்டபடி நின்று இருந்தாள் அந்த பெண் .
“மத்தவனுங்க மாதிரி என்னையும் நினைச்சுகிட்டயா நீ.. ” என்றவன் விறுவிறுவென உள்ளே நுழைந்து அங்கிருந்த ஒவ்வொரு அறையையும் காலால் எட்டி உதைத்து உள்ளே யாரையோ தேடிய படியே சென்றான்.
அவன் கதவை திறக்கவும் அந்த அறைகளுக்குள் இருந்தவர்கள் அவசரமாக தங்கள் உடலை மறைக்கப் பார்க்க… அவர்களைக் கண்டுகொள்ளாதவன் அடுத்தடுத்த அறைகளைத் திறந்து தேடினான்.
“சார் என்ன தேடுறீங்கோ.. சொன்னா நானும் உங்க கூட சேர்ந்து தேடுவனே..” என்றாள் மாலா.
அவளை திரும்பி பார்த்து “அப்டியா! நீயே தேடி குடுத்திருவியா?” என்றான் நக்கலாக,
அவளும் ஆமாம் இல்லை என்பது போல பயந்து கொண்டே அவனைப் பார்க்க…
வாயில் இருந்த சுருட்டை புகைத்து ஊதியவன் “எங்க நீ பதுக்கி வெச்சிருக்க பொண்ணுங்களை எல்லாம் நீயே வெளிய கூட்டிட்டு வந்திரு பாக்கலாம்” என்றான்.
அந்த பெண் அதிர்ந்து அவனைப் பார்க்க..
“என்ன டி பாக்குற.. போ.. போய் கூட்டிட்டு வா.. ” என்று கஜித்தான்.
அதில் மேலும் அதிர்ந்த மாலா “சார்.. அது … வந்து . நீங்க சொல்ற மாதிரி யாருமே இங்க இல்ல ” என்று அவள் தயங்க..
“அப்போ யாரையும் நீ இங்க ஒளிச்சு வெக்கல அப்படித்தானே… ” என்றான்,
“அ..ஆமாங்கய்யா.. ” என்றாள் நடுங்கிக்கொண்டே..
“என்ன நோமாங்க நொய்யா…” என்றவன் அவளை நெருங்க..
எச்சில் விழுங்கிக்கொண்டே அவனை பார்த்த மாலா பின்வாங்க..
அவளை நெருங்கியவன் “நீயா கூப்டு வந்தா பொழச்ச.. இல்ல.. நானா கண்டு புடிச்சேன்னு வை.. ” என்று வார்த்தைகளில் அழுத்தம் கூடியவன் அவளை விட்டு பின்னே சென்று நிமிர்ந்து அந்த இடத்தை சுற்றி ஒரு முறை அண்ணாந்து பார்த்துவிட்டு.. “இந்த மொத்த இடமும் இருக்குற இடமே தெரியாம போயிரும்” என்று
சுற்றிலும் பார்த்தான்.
அப்போது மாலாவின் அருகில் வந்த அந்த உளவாளி “யக்கோவ் அவனை பத்தி தான் தெரியுமே உனக்கு. பேசாம அந்த புள்ளையை அவன்கூட அனுப்பிரு. இல்ல நீ செலவு செஞ்சு ஆசையா உருவாக்குன இந்த இடம் கூட உனக்கு மிஞ்சாது” என்றான்.
“டேய் என்ன டா சொல்ற! அந்த குட்டி பலே ஐட்டம் டா.. அவளுக்கு நான் நீன்னு போட்டி போட்டுட்டு காசை கொட்டி கொடுக்றேன்னு நிக்குறானுங்க.. அவளைப் போய் இவங்கையிலே குடுக்க சொல்ற.. ” என்றாள்.
“இங்க பாரு அவள மாதிரி நான் உனக்கு ஆயிரம் குட்டிகளை கொண்டாந்து இறக்குறேன். இப்போ மட்டும் நீ அவளை அந்த ஆள் கூட அனுப்பல.. அப்பறோம் அவன் ஆடுற வெறியாட்டத்துக்கு யாராலயும் அவன தடுக்க முடியாது. அவனும் சொல்றதை செய்யுறவன் உனக்கு இந்த இடம் வேணுமா? இல்ல அந்த குட்டி வேணுமா? நீயே முடிவு பண்ணிக்க..”என்றான்.
“டேய் குமாரு… ” என்று அவள் இயலாமல் பார்க்க..
“அனுப்ச்சு உடுக்கா.. பாத்துக்கலாம்” என்றான் அவனும்.
தன் புடவையை சரி செய்துகொண்டே ஐராவதனிடம் வந்தவள் “ச.. சார்” என்றாள்
“என்ன மாலா முடிவு பண்ணிட்டியா?” என்றான் வெடுக்கென அவள் புறம் திரும்பி.
அதில் பின்வாங்கியவள் “ச.. சார் நிரைய குட்டிங்க எல்லாம் கிடையாது. ஒண்ணே ஒண்ணு தான் ” என்று தன் சுண்டுவிரலை உயர்த்திக் காட்டினாள் .
“என்ன உச்சா வருதா இந்த விரலக் காட்டுற.. ” என்றான் நக்கலாக
“இ ..இல்ல சார் ” என்றவள் “சுண்டுவிரலை மடக்கி ஆள்க்காட்டி விரலை உயர்த்தி “ஒரு குட்டி தான் இருக்கு ” என்றாள்.
“சூப்பர்.. அவ்ளோ தான்.. வரச்சொல்லு.. வரச்சொல்லு வரச்சொல்லு… ” என்று அங்கிருந்த மேஜையில் எகிறிக்குதித்து உட்கார்ந்தான்.
அவனை அரண்டுபோய் பார்த்த மாலா “டேய் கொமாரு போடா … ” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவனை முறைக்க..
அவன் ஓடிச்சென்று உள்ளிருந்து ஒரு பெண்ணை இழுத்து வந்தான்.
“அய்யா நான் சொன்ன பொண்ணு இவ தான் ” என்றாள் மாலா.
அப்படியே திரும்பிப் பார்த்தான் ஐரா அவள் கை கட்டப்பட்டு இருந்தது , வாயும் துணியால் கட்டி இருக்க.. சோர்ந்த முகத்தோடு கண்களில் கண்ணீரோடு அங்கு வந்தாள். வெறும் ஜாக்கெட்டும், முட்டி வரை ஒரு மெல்லிய பாவாடையும் அணிந்து இருக்க.. அது அவள் வழவழ கால்களை வெளிச்சம் போட்டு காட்டியது. உள்ளே அணிந்திருந்த உள்ளாடையையும் தான் சேர்த்து காட்டியது. தன் உடலை மறைக்க அவளோ பெறுபாடு பட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது. அதை பார்த்துவிட்டு புருவம் சுருகியவன் திரும்பி மாலாவை முறைக்க…
“சார்ர்…” என்று அவள் அழுதே விட்டாள்.
“அந்த பொண்ணு மேல கையை வெச்சியா?” என்று மேஜையில் இருந்து குதித்து மாலாவை நெருங்கினான்.
“ந.. நா ஏதும் பண்ணல சார் , வந்து ரெண்டு நாள் ஆச்சு சாப்பிடவே மாட்டேங்குறா… அதான் ரெண்டு வெச்சேன் “என்று அவள் அபப்டியே தரையில் உட்கார..
“உன்ன… ” என்று ஓங்கிய காலை அப்படியே அந்தரத்தில் நிறுத்தியவன் மாலா பயந்து தலையை குனிந்துகொள்ள..
“ச்சே.. என்ன மாதிரி ஆளுங்களோ “என்று திரும்பியவன் தன் சட்டையை வேகமாக கழட்டி வந்து அவள் இடையோடு சேர்த்து கட்டிவிட்டவன் “இதை எல்லாம் யாரு உங்கொப்பனா வந்து அவுத்து விடுவான், அவுர்ரா நாயே.. “என்று கர்ஜிக்க..
குமாரோ அவசரமாக அந்த பெண்ணின் வாயில் இருந்த கட்டை கழட்டிவிட்டு , கைக்கட்டையும் அவிழ்த்து விட்டான்.
அடுத்த நொடி அந்த பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஐராவதன் வெளியேறி இருக்க.. அவனுக்கு முன்னாள் ஓடிச்சென்று ஜீப்பை ஸ்டார்ட் செய்திருந்தான் சிவா.
அவளை அழைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு காப்பற்றி சென்றுவிட்டான் ஐராவதன், அந்த இடத்தை விட்டுமல்ல , அவள் வாழக்கை முழுதும் இனி அவன் தான் அவளைக் காப்பாற்றப்போகிறான் என்று அவனுக்கே அப்போது தெரியாது.
வருவான் அடாவடி ஐராவதன்
நியூ ஸ்டோரி எப்படி இருக்குன்னு மறக்காம கமெண்ட் பண்ணிருங்க, வாரம் மூணு நாள் வருவான் இந்த வெறியன்
