EPISODE 2-9
எப்படியோ சமாதானம் பண்ணி அவளை இங்கே அனுப்பி வெச்சுட்டாங்க. உள்ளே வந்ததும் என்னவெல்லாம் பேசப்போறாளோ என்ற பதற்றத்தில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான் ராகவ்.
ராக்கியின் வீட்டில் இருந்து அழைத்து வந்த பின், இன்னும் இவர்கள் இருவரும் தனியே சந்தித்துப் பேசிக்கொள்ளவில்லை. முதல் இரவுக்கு முன் இருவரும் தனியே சந்தித்துக்கொள்ளக்கூடாது என்று பெரியவர்கள் கண்டிஷனாக கூறிவிட்டனர். அவர்களுக்கு எங்கே தெரியும் திருமணத்திற்கு முன் இவர்கள் மொட்டைமாடியில் அடித்த கொட்டத்தை! தெரிந்திருந்தால் அவர்களே இவர்கள் இருவருக்கும் எப்போதோ திருமணத்தை நடத்தி வைத்திருப்பார்களே!
ராகவ் யோசனையுடன் நடந்து கொண்டிருக்க, அப்போது அவன் ரூம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ஓவியா. அவளை உள்ளே தள்ளிவிட்டு, “ஏய், என் அண்ணன் பாவம் டி. காலையிலிருந்து அவரைப் படுத்தினது போதும். இப்போவாவது கொஞ்சம் மனசு வெச்சு என் அண்ணன் மனசு கோணாம நடந்துக்கோ டி” என்று மாளவிகா சிரித்துக்கொண்டே கூறினாள்.
“நீ சும்மா இரு டி. அவளே ஃபர்ஸ்ட் நைட் நினைச்சு பதற்றமா இருக்கா. அவகிட்டப் போய் எதையாவது சொல்லிட்டு இருக்க,” என்றாள் ரதி.
“யாரு? இவளா பதற்றமா இருக்காளா?” என்ற மாளவிகா, “அக்கா, நீயே நல்லா பாரு. இங்கே பதற்றமா யார் இருக்காங்கன்னு?” என்று அறைக்குள் இருந்த ராகவ்வை எட்டிப்பார்த்து, “அங்க பாரு, ராகவ் அண்ணாதான் பயங்கர டென்ஷன்ல இருக்கார்,” என்றாள்.
ரதியும் உள்ளே ராகவ்வை பார்க்க, அவனோ சற்று பதற்றத்தில் கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தான்.
அவனைப் பார்த்து சிரித்த ரதி, “ஏய் மாளவிகா, பதற்றப்பட வேண்டிய இவளே அமைதியா இருக்கா. நீ சொன்ன மாதிரி உன் அண்ணன்தான் ரொம்ப டென்ஷன்ல இருக்கான்,” என்றவள், “நீ வா. இங்கே கொண்டு வந்து விடறது மட்டும் தான் நம்ம வேலை. மற்றதெல்லாம் அவங்க பாடு,” என்றவள், “நீ போ டி” என்று மாளவிகாவைத் தள்ளிக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.
அவர்கள் சென்றதும் கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்தவள், அவள் எதிரே நின்றிருந்த ராகவ்வைத் தாண்டிச் சென்றவள், கையில் இருந்த செம்பை மேஜையில் வைத்தவள், கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டாள்.
“என்ன இது! வந்தா செம்பை அந்த டேபிள்ல வெச்சா? என்கிட்டே ஒரு வார்த்தை கூட பேசாமப் போய் படுத்துட்டா? போச்சு. அவ்வளவுதான். இவளை நான் எங்கிருந்து சமாதானப்படுத்துவேன்?” என்று நினைத்தவன், ‘ஆண்டவா! என் பொண்டாட்டியை சமாதானம் செய்யுற தைரியத்தை எனக்கு கொடு’ என்று வேண்டிக்கொண்டு அவளிடம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சென்றான்.
ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியையே இந்த பாடு படுத்துறாளே இவ. “இன்னும் என்னென்ன நான் பார்க்கணுமே!” என்று புலம்பியபடி அவள் அருகில் போய் கட்டிலில் அமர்ந்தவன், “ஓ… ஓவி!” என்றான்.
தலைக்கு கை வைத்து படுத்து இருந்தவள், ராகவ் அவள் அருகில் வந்து அழைக்கவும் வேகமாக காதை பொத்தினாள்.
‘அடிப்பாவி! என்னைப் பேச சொல்லி மணிக்கணக்கில் கேட்டுட்டு இருப்பாள். இப்போ நான் இரண்டே வார்த்தைதான் டி பேசினேன். அதுக்கே இப்படி காதைப் பொத்துறாளே!’ என்று அதிர்ச்சியில் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவள் தோளில் மெல்ல தொட்டான்.
அவன் தொட்ட அடுத்த நிமிடம், ராகவ் கையைத் தட்டிவிட்டு வேகமாக எழுந்து அமர்ந்தவள், “இப்போ என்ன வேணும்?” என்றாள்.
“ஹே, ஓவியா! என்ன டி இப்படி பேசுற? இன்னும் என் மேல உனக்கு கோபம் போகலையா?” என்றான்.
“எப்படி போகும்? அதான் என்னை லவ் பண்ணிட்டு, என்கூடப் பிறந்தவளை கல்யாணம் பண்ணத் தயாரா இருந்தீங்களே! அப்புறம் எனக்கு கோபம் வராமல் சிரிப்பு வருமா?” என்று பொங்கி எழ ஆரம்பித்திருந்தாள்.
‘கடவுளே! இன்னும் அதை இவ விட மாட்டேங்குறாளே. ம்ஹும், எப்படியாவது இன்னைக்கு இந்த விஷயத்தை பேசித் தெளிவு படுத்திடணும். இல்லேன்னா அவ்வளவுதான்’ என்று முடிவுக்கு வந்தவன், “ஓவி, இங்கே பாரு டி! நான் ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்தேன்னு நீ தயவு செய்து பொறுமையா கேளு டி” என்றான் ராகவ் அவள் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு.
அவன் கையை உதறியவள், “நான் இங்கே வந்திருக்கவே மாட்டேன். என் அண்ணன்தான், ‘முழுசா என்ன நடந்துச்சுன்னு தெரியாம கோபப்படறதுல எந்த பிரயோஜனமும் இல்லை’ன்னு சொன்னான். அதனாலதான் நான் இங்கே கிளம்பி வந்தேன்” என்றாள்.
‘நல்ல வேலை பண்ணின மச்சான்! எங்க பழையதெல்லாம் மனசுல வெச்சு இவகிட்டே ஏதும் சொல்லி கொடுத்திருப்பியோன்னு உன்னை பத்தி தப்புக் கணக்கு போட்டுட்டேன். தேங்க்ஸ் மச்சான்’ என்று மானசீகமாக ராக்கிக்கு நன்றி சொன்னவன், ஓவியாவை பார்க்க,
“என்ன பார்க்குற? சொல்லு. இன்னைக்கு உன் நியாயம் என்னன்னு கேட்டுட்டு என் பக்கத்து நியாயத்தை நான் சொல்றேன்” என்றாள் ஓவியா.
‘என்ன இவ! காதலிக்கும் போதும், ஏன் கல்யாணத்துக்கு முந்தி நான் இவ மேல கோபமா இருந்த அப்போ கூட நல்லவிதமாதானே பேசிட்டு இருந்தா? ஆனா இப்போ என்ன ஆச்சு? இப்படி நான் தாலி கட்டினதுல இருந்து டென்ஷனாவே சுத்திட்டு இருக்கா?’ என்று ஒருவித பதட்டத்தோடு ராகவ்வைப் பார்த்தான்.
“ம்… சொல்லுங்க. உங்க நியாயத்தை,” என்று வெடுக்கென்று கழுத்தைத் திருப்பினாள் ஓவியா.
‘சரிதான். எதுவா இருந்தாலும் தயாராகிக்கோடா ராகவா’ என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டவன், “இங்கே பாரு ரோஜா! நான் ஒன்னும் திகழ்கிட்டே இருக்க பணத்துக்காகவோ, இல்ல அவளைக் கல்யாணம் செய்துகிட்டா எனக்கு எதுவும் ஆதாயம் கிடைக்கும்னு நினைச்சோ திகழினியை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கல,” என்றான்.
“அப்புறம் எதுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி மணமேடை வரை வந்தீங்க? வந்து, கொஞ்சம் கூட என்னைக் காதலிச்சிட்டு வேற ஒருத்தி கழுத்துல தாலி கட்டுறோம்னு குற்ற உணர்ச்சி இல்லாமல், உங்க பக்கத்துல உட்கார்ந்திருக்கிறது நான் தான்னு கூட கண்டு பிடிக்கத் தெரியாம திகழ்ன்னு நினைச்சு என் கழுத்துல தாலியைக் கட்டுனீங்க?” என்று அவன் முகத்திற்கு நேராக அவள் ஒற்றை விரலை நீட்டி ராகவ்வை அதட்டிக்கொண்டு இருந்தாள்.
அவள் உக்கிர முகத்தை முதல் முறை பார்த்தவனுக்கு கிலி பிடித்துக்கொண்டது. அடுத்துப் பேச வார்த்தைகள் வராமல், ஓவியாவின் இந்த புது அவதாரத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“என்னடா அப்படிப் பார்க்குற? சொல்லு! ஏன் அவள் கழுத்துல தாலி கட்டுற அளவுக்கு இறங்கி வந்த? என்ன காரணம்? என்ன காரணம் சொல்லு,” என்றாள்.
‘வாங்க, போங்க’ல இருந்து டைரக்ட்டா ‘டா’வுக்கு வந்து நிக்குறா. ‘நான் முழுசா சொல்லி முடிக்கும்போது என்னவெல்லாம் என்னை பேசப் போறாளோ’ என்று அரண்டுபோய் அமர்ந்திருந்தான் ராகவ்.
அவன் முகத்திற்கு நேராக விரலை சொடுக்கியவள், “இப்போ சொல்லப் போறீங்களா? இல்ல நான் போய் தூங்கட்டுமா?” என்றாள்.
“இல்ல இல்ல. சொல்லிடுறேன். அதுக்குப் பிறகு நீ தூங்கினாலும் சரி, இல்ல என்னை விடிய விடிய…” என்று அவளை ராகவ் பார்க்க,
அவனை முறைத்தவள், “காரணத்தை தெரிஞ்சுக்காம நான் எதுக்கும் தயாரா இல்லை” என்று நேரடியாக ஓவியா கூறிவிட,
‘அது சரி. அப்போ யோனிக்கு ஃபர்ஸ்ட் நைட் கேன்சல்’ என்று முடிவு செய்தவன் மனதை திடப்படுத்திக்கொண்டு, “இங்கே பாரு ஓவியா! உன்மேல நான் கோபத்துல இருந்தது என்னவோ உண்மைதான். ஆனா நான் அமெரிக்காவுல இருக்கும்போது நீ எனக்கு போன் பண்ணி பேசின அப்போ உன்மேல இருந்த கோபம் கொஞ்சம் குறைஞ்சிருந்துச்சு,” என்றவன், “திகழை அமெரிக்காவுல முதல் முறை பார்த்த அப்போ என்னால நம்பவே முடியல,” என்றான்.
“அதனால என்னை மாதிரியே இருக்காளேன்னு அவளைக் கல்யாணம் செய்துகிட்டியா?” என்று யோசிக்காமல் அடுத்த கேள்விக்குத் தாவி இருந்தாள் ஓவியா.
“அய்யோ! அப்படி எல்லாம் இல்லை டி ஓவி,” என்று மீண்டும் அவள் கையைப் பிடித்துக்கொள்ள,
இந்த முறை அவனிடம் இருந்து கையை உதறப்போனவள் கையை விடாமல் பிடித்துக்கொண்டவன்,
“சத்தியமா! உன்னைத் தவிர என் மனசுல வேற எவளுக்கும் இடமில்லை டி. நீ எனக்கு போன் பண்ணின அன்னிக்கு நான் ரொம்ப டென்ஷன்ல இருந்தேன். அந்த அன்னிக்கு நானும் திகழும் ஒரு பார்ட்டிக்கு போனோம். உன் மேல இருந்த கோபத்துல நான் கண்ட்ரோலே இல்லாம குடிச்சுட்டேன்,” என்று அவனைப் பார்த்தாள்.
அவன் பார்வையிலிருந்தே எதையோ உணர்ந்தவளாக, “குடி போதை அதிகம் ஆனதும், ‘நான்’னு நினைச்சு திகழ்கிட்டே தப்பா நடந்துக்கப் பாத்தியா? அதனால எதுவும் பிரச்னையா?” என்று அவன் நாடியைச் சரியாகப் பிடித்து கேள்வியைக் கேட்டாள் ஓவியா.
அவள் கேள்வியில் அதிர்ந்தவன் ஓவியாவையே பார்த்துக்கொண்டு இருந்தான் ,
