EPISODE 25& 26
சைட்டில் வேலை பிஸியாகிவிட.. ரத்தன் சரியாக வீட்டிற்கு வருவதில்லை. அதனால் அவன் வீட்டிற்கு வராத வேளையில் சாத்விகா அவன் சைட்டிற்கே உணவு சமைத்து எடுத்து செல்வாள்.
அப்படியே அவன் வேலை பார்க்கும்போது சிறிய சிறிய உதவிகள் செய்ய ஆரம்பித்து இருந்தாள் .
நாள் போக போக… ரத்தனுக்கு தானும் சளைத்தவள் இல்லை என்பதை தன் வேளையில் சாத்விகா நிரூபிக்க ஆரம்பித்தாள்.
வழக்கம்போல மதியம் வரை வீட்டில் இருந்தவள் மதிய உணவை சமைத்து ரத்தனக்கு எடுத்து வந்தவள் அவனுக்கு உணவு பரிமாறி விட்டு அவன் சாப்பிடும் இடைவெளியில் ரத்தன் பாதியில் விட்டு சென்ற வேலைகளை சாத்விகா பார்த்துக் கொண்டிருந்தாள்.
அழகாக ஸ்கெட்ச் செய்து அந்த பில்டிங்கில் என்னென்ன விஷியம் எங்கு வரவேண்டும் என்று பக்காவாக பிளான் செய்து கொண்டு அதை அவனிடம் விவரித்து கொண்டிருந்தாள் .
சாப்பிட்டுக்கொண்டே இரத்தனும் சாத்விகா விவரிப்பதை கேட்டுக் கொண்டிருந்தவன் . அப்போதுதான் அவள் என்ன படித்திருக்கிறாள் என்றே கேட்டான்.
“ஆமா சாத்விகா உனக்கு இந்த கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க் அப்பறோம் பில்டிங் பிளான் பண்றது . சைட் அப்ரூவல் இந்த மாதிரி விஷயம் எல்லாம் எப்படி தெரியும் . நீ இவ்ளோ ஆர்வமா அதுவும் இவ்ளோ பெர்பெக்ட்டா வேலை பாக்குறதை என்னால நம்பவே முடியல.. ” என்றான் ஆச்சர்யமாக.
“ஏன் அப்படி கேக்குறீங்க.. நான் எல்லாம் இந்த மாதிரியான வேலை எல்லாம் செய்யக்கூடாதா .. இல்ல பெண்கள் எல்லாம் இந்த மாதிரி வேலையை செய்யக்கூடாதுன்னு நினைக்கிறீர்களா” என்று ரத்தன் மீது தன் மனதில் இருந்த வெறுப்பை வார்த்தைகளால் வெளிக்காட்டினாள் .
“சாத்விகா என்ன இப்படி எல்லாம் பேசுற.. இவ்ளோ நாள் என்கூட இருந்து என்ன பத்தி இவ்ளோ தான் புரிஞ்சுக்கிட்டியா நான் அவ்வளவு கீழ்த்தரமா யோசிக்கிற ஆள் கிடையாது ஆணுக்கு பெண் சளைத்தவள் கிடையாதுன்னு நினைக்கிறவன் நான் . ஆண்கள்தான் அதிகமா கஷ்டப்படுறாங்க குடும்பத்துக்காக ஆண்கள்தான் அதிகமா உழைக்கிறாங்கன்னு யார் சொன்னாலும் அதை ஏத்துக்க கூடிய ஆள் நான் கிடையாது நாங்க வெளியே போய் எவ்வளவு கஷ்டப்பட்டு குடும்பத்துக்காக உழைக்கிறவங்க வேலை பார்க்கிறவங்க சம்பாதிக்கிறோமோ அதே போல தான் நீங்க வீட்டுக்குள்ளேயும் குடும்பத்துக்காகவும் குழந்தைகளோடு எதிர்காலத்துக்காகவும் உங்க வாழ்க்கையையே உங்க கனவையும் இலட்சியத்தையும் குடும்பத்துக்காக தியாகம் செய்றீங்க . எங்கள விட நீங்க தான் அதிகம் வேலை செய்றீங்க இதுவே வேலைக்கு போறவங்களா இருந்தா வீட்டு பொறுப்பையும் கவனித்துக்கொண்டு வீட்டில் உள்ளவர்களையும் கவனிச்சுக்கிட்டு வேலைக்கும் போய் அங்கேயும் உங்களுடைய திறமையை வெளிக்காட்டி உங்களுக்கான தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து இருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் ” என்றவன் .
சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு எழுந்து அவள் பின்னால் வந்து இடையோடு கட்டிக் கொண்டவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து . “பெண்கள் இந்த துறையில் தான் இருக்கணும்னு இதுல இருக்க கூடாதுன்னு எந்த ஒரு சட்டமும் இல்லையே. நீங்க வளரது எங்களுக்கும் பெருமை தான் உண்மையிலேயே உன்னோட இந்த ஆர்வமும் நான் உன்னோட பிளான் இது எல்லாம் பார்த்து நான் ரொம்ப பெருமைப்படுகிறேன் . என்னோட வேவ் லென்த்துக்கு தகுந்த மாதிரி இந்த பீல்டுல எனக்கு யாரும் இல்லை என்று நான் அடிக்கடி ஃபீல் பண்ணி இருக்கேன் ஆனா நீயே என் வேவ் லென்த்துக்கு செட்டாகுற மாதிரி வேலை பார்க்கிறத பார்க்கிறப்போ உண்மையாவே நான் எவ்ளோ ஹேப்பியா இருக்கேன்னு தெரியுமா ” என்று அவளை இறுக்கி அணைத்தான் .
“இவன் கிட்ட எப்படி வேணா முடிச்சு ஏமாத்தலாம் போல ஆனா இந்த பொண்டாட்டி வேஷம் மட்டும் நான் போட்டிருக்க கூடாது. ரொம்ப தப்பு பண்ணிட்டேன் . தினமும் என்ன லவ் பண்றேன், ரொமான்ஸ் பண்றேன்னு ரொம்ப டார்ச்சர் பண்றான்” என்று மனதிற்குள் நினைத்த சாத்விகா .
” பரவாயில்லையே நான் கூட இவனை என்னவோன்னு நினைச்சேன் பொண்ணுங்கள பத்தி நல்ல முறையா தான் பேசுறான் ” என்று அவள் குரங்கு மரம் ரத்தன் பக்கம் சாய .’
“ச்சே … இவன பத்தி எல்லாம் தெரிஞ்சிருந்தும் எப்படி இவன் பக்கம் என் மனசு சாய்ந்து வெட்கம் கெட்ட மனசு ” என்று தன் மனதிற்கு கடிவாளம் போட்டவள் .
” இல்லைங்க திடீர்னு நீங்க இப்படி கேட்கவும் தான் நானும் அப்படி கேட்டேன். ஏன்னா இப்போ எல்லாம் நிறைய ஆண்கள் பொண்ணுங்க முன்னேறி வர்றதை விரும்புவதில்லை . அவங்கள மூளையிலேயே முடக்க நினைக்கிறாங்க . ஆண்களுக்கு நிகரா பெண்கள் அவங்க துறையில் வளர்ந்துட்டு வருவதை நிறைய ஆண்கள் வெறுக்கிறாங்க . அதனாலயே முன்னேறி வர பொண்ணுங்கள எதாவது ஒரு காரணம் சொல்லி அல்லது ஏதாவது ஒரு விஷயத்தை செஞ்சு அவங்கள மழுங்கடிச்சுடுறாங்க “
“பொண்ணுங்கள பத்தி நல்ல அபிப்பிராயமும் அவங்க வளர்ச்சியில அக்கறை காட்டுற ஆண்கள் சில பேர் தான் . அதுவும் ஆண் துணை இல்லாமல் இந்த சொசைட்டியில பெண்கள் முன்னேறி வருவது ரொம்ப ரொம்ப கஷ்டம் அதை நானும் என் தங்கச்சியும் என் அம்மாவோட சேர்ந்து நிறைய அனுபவச்சிருக்கோம் என் அப்பா இறந்ததுக்கு பிறகு நாங்க மூணு பேரும் இந்த சமூகத்துக்கிட்ட இருந்து தப்பிச்சு இவ்வளவு தூரம் உயிர் வாழ்வது ரொம்ப பெரிய விஷயம்” என்றால் மிகவும் சீரியஸாக .
“என்ன சாத்விகா சொல்ற !.. அவ்வளவு கஷ்டப்பட்டீர்களா நீயும் உன் அம்மாவும் ” என்றான் அவள் சொல்வதை நம்ப முடியாமல்.
“ம்ம்.. ஆமாங்க நானும் என் தங்கையும் அப்பா இல்லாமல் வளர்ந்த பொண்ணுங்க நாங்க எவ்ளோ ஆண்களோட கேவலமான புத்தியில் இருந்து அவங்களோட செயல்ல இருந்து எங்களை கஷ்டப்பட்டு காப்பாத்திட்டு வந்திருக்கோம் இவ்வளவு வருஷமா” என்றாள் கண்களில் நீர் துளி வழிய .
சாத்விகாவின் குரல் பேசும் போது மாறுவதை உணர்ந்த ரத்தன் அவள் தோளைத் தொட்டு தன் பக்கம் திருப்பியவன் தன் கண்களில் வலிந்த கண்ணீரைக் கண்டதும் பதறினான் .
ரத்தன் பார்த்ததும் தன் கண்களை துடைத்துக் கொண்டவள் அவனைப் பார்த்து மென்மையாக சிரிக்க ..
” பம்பர் குட்டி அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கியா டி நீ .. நீ அழுவதை பார்க்க என்னால முடியல . சொல்லு உன்ன இவ்வளவு கஷ்டப்படுத்தியது யாரு அவன் எங்க இருக்கான் இல்ல எத்தனை பேர் இருக்காங்கன்னு சொல்லு அவங்க எல்லாரையும் வெட்டிக் கொண்டு வந்து இப்பவே உன் காலுக்கு கீழே போடுறேன், அவங்க உன்னை கஷ்டப்படுத்தியதற்கு கண்டிப்பா தண்டனை அனுபவித்து ஆகணும் ” என்று உணர்ச்சி பொங்க சாத்விகாவை இந்த நிலைக்கு ஆளாக்கி அவர்களை எண்ணி அவர்களை கொள்ளும் ஆத்திரத்தோடு அவளிடம் கேட்டான் .
“நிஜமாதான் சொல்றீங்களா கண்டிப்பா எங்கள இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் யாருன்னு கண்டுபிடிச்சு நீங்க அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பீங்களா?” என்றாள் .
“கண்டிப்பா செய்றேன் சாத்விகா நீ யாருன்னு மட்டும் சொல்லு” என்றான் .
“சொல்றேன்டா சொல்றேன் என்னையும் என் குடும்பத்தையும் இந்த நிலைக்கு ஆளாக்கினது யாருன்னு தெரிஞ்சா அப்போ நீ என்ன பண்ண போறேன்னு நான் பார்க்கிறேன் . உன் முகத்தை அப்ப நீ எங்க கொண்டு போய் வச்சுக்கவன்னு பாக்கத்தானே போறேன் ” என்று மனதிற்குள் தான் பழிவாங்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டவள் .
“அது யாருன்னு உங்களுக்கே .. ” என்று சாத்விகா பேச வரும்போது சரியாக அவளுடைய மொபைல் அடித்தது .
ஒரு நிமிஷம் இருங்க யாருன்னு பார்க்கிறேன் என்று அவனைத் தாண்டி பின்னால் டேபிளில் இருந்த தன் ஹேண்ட் பேக்கை திறந்து போனை எடுத்துப் பார்க்க அதில் வந்திருந்த நம்பரை பார்த்ததும் சட்டென திரும்பி ரத்தத்தை பார்த்தாள்.
உடனே போனை அணைத்து மீண்டும் ஹேண்ட் பேக்கில் போட்டவள் ” அம்மா தான் கால் பண்ணி இருக்காங்க ஏதாவது அவசரம்னா எனக்கு மிஸ்டு கால் விட சொன்னேன் நான் உடனே கிளம்பி வருவேன்னு சொல்லி இருந்தேன் நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா” என்று அவசர அவசரமாக அவன் சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை எல்லாம் கழுவாமலே அப்படியே எடுத்து மூடி வைத்து அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள் .
அவள் பதட்டமும் அவசரமும் ரத்தனுக்கு புதிதாக இருந்தது “ஏன் சாத்விகா இவ்வளவு பதட்டப்படுற அம்மா தானே கால் பண்ணி இருக்காங்க. ரொம்ப அர்ஜெண்டா இருந்தா திரும்பவும் கூப்பிட போறாங்க. இப்ப எதுக்கு வீட்டுக்கு போக இவ்வளவு அவசரப்படுற கொஞ்ச நேரம் இங்கேயே இரு” என்று அவள் கைப்பிடித்து தன் பக்கம் இழுக்க..
ரத்தன் கையில் இருந்து தன் கையை மெல்ல விடுவித்தவள் நம்ம ரெண்டு பேரும் ஃப்ரீயா இருக்கட்டும் இல்ல ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தாலும் அம்மா திரும்ப கால் பண்ண மாட்டாங்க . நான் இப்போ வீட்டுக்கு கிளம்புறேன் நீ சீக்கிரமா வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு வாங்க என்று அங்கிருந்து கிளம்பப் போனவளை .
கைப்பிடித்து தன் பக்கம் இழுத்து நிற்க வைத்தவன் நைட் வரைக்கும் ஞாபகமா இருக்கிற மாதிரி ஒன்னு குடுத்துட்டு போயேன் என்று அவள் கீழ் உதட்டை தன் விரல்களுக்கு இடையில் வைத்து கிள்ளியவன் அவளை ஏக்கமாக பார்த்தான்.
“கடவுளே இது வேறயா இவனை விட்டு எப்போ போகணும்னு நானே பாத்துட்டு இருக்கேன் இப்ப என்னடான்னா என்ன விடாம பள்ளி மாதிரி ஒட்டிக்கிட்டே இருக்கான்” என்று நினைத்தவள் வேண்டா வெறுப்பாக அவன் இதழில் முத்தமிட்டு விட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.
சாத்விகாவின் இந்த பதட்டம் அவனுக்கு இன்னும் மனதிற்குள் சந்தேகத்தை எழுப்பி இருந்தது . “இவ ஏன் அடிக்கடி இந்த மாதிரி நடந்துக்கிறா… முக்கியமா அவளுக்கு ஏதாவது போன் வரும்போது தான் இந்த மாதிரி அதிகமா பதட்டப்படுரா.. ஆனா அவளுக்கு போன் வரப்ப எல்லாம் ஒன்னா அவளோட அம்மாவா இருக்கும் இல்லனா அவ தங்கையா இருக்கும் . அவங்க போன் பண்ணி பேசுறப்போ சந்தோசமா பேசாம ஏன் எப்பவும் ஏதாவது ஒரு பதட்டத்தோடையே இருக்கா அவ சொல்றதுக்கும் நடந்துக்குறதுக்கும் துளியும் சம்பந்தமே இல்லையே ” என யோசித்தவன் .
“கண்டுபிடிக்கணும் சீக்கிரமே என் பம்பர குட்டியோட பதட்டத்துக்கு காரணம் என்னன்னு கண்டுபிடிக்கணும். அதேபோல என் பம்பர் குட்டிய கஷ்டப்படுத்தியது யாருன்னு கண்டுபிடிச்சு அவங்கள ஒரு வழி பண்ணனும் “என்று முஷ்டியை முருக்கிக்கொண்டே சென்று தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான் .
