இலக்கியாவை ஏலத்தில் எடுத்ததற்குப் பிறகு அவளுடைய தாய்மாமனுக்குச் சேர வேண்டிய பங்கை கொடுத்து, ஏலத்தில் எடுப்பவர்கள் அவரை அங்கிருந்து கிளம்பச் சொல்ல.. அவளின் தாய்மாமன் ராமலிங்கம் ஒரு முறை இலகியாவை சந்தித்து பேசிவிட்டுச் செல்வதாகக் கூறவும்.
“உனக்கு ஐந்து நிமிடம் தான் நேரம் கொடுத்திருக்கிறது. அந்தப் பெண்ணை ஏலம் வாங்கியவர் இன்னும் சற்று நேரத்தில் அவளை தன்னோடு அழைத்துச் சென்று விடுவார். சீக்கிரம் சென்று பேசிவிட்டு வா” என்று சொல்லி ராமலிங்கத்தை உள்ளே அனுப்பி வைத்தனர்.
வெறும் உள்ளாடையோடு இருந்தவள் தன்னை மறைத்திருந்த சால்வையோடு தான் இருந்த இடத்தில் அப்படியே அதிர்ந்து போய் அமர்ந்திருக்க… உங்களிடம் வந்த ராமலிங்கம் கைநிறைய பணத்தோடும் முகம் நிறைய சிரிப்போடும் அவள் அருகில் வந்தவர், “நான்தான் சொன்னேனே, உன்னை ஏலத்துல கண்டிப்பா ஒரு நல்ல விலைக்கு எடுத்துக்குவாங்கன்னு. பாரு, உன்னை ஏலத்துல கொடுத்ததுக்காக எவ்வளவு பணம் எனக்கு வந்திருக்கு! கிட்டத்தட்ட உன்னை ஏலத்துல எடுத்ததோட பாதி பணம் எனக்கு கொடுத்திருக்காங்க” என்றான்.
தன்னை பாதுகாக்க வேண்டிய தாய் மாமனே தன்னை இன்னொருவனுக்குக் காசுக்காக விற்றுவிட்டதை எண்ணி வருந்திய இலக்கியா, தன் தாய் மாமனைப் பார்த்து விரக்தியாகப் புன்னகை சிந்தியவள். “நீ சொன்ன மாதிரியே நான் நடந்து விட்டேனா இல்லையா?”என்று கேட்டாள்.
“அதுல என்ன சந்தேகம்? அதனால தானே நான் இவ்வளவு பணம் உன்னால கையில சேர்த்து வச்சிருக்கேன்” என்றார்.
“இனியாவது என்னோட அம்மாவை கொடுமைப்படுத்தாம, அவரைய கொஞ்சம் நல்லா பார்த்துக்க முயற்சி செய். என்னை விலைக்கு வாங்கினவர் என் அம்மாவை பார்த்துக்க எனக்கு அனுமதி கொடுப்பாரா என்னன்னு தெரியல. அதுவரைக்கும் நீ என் அம்மாவை பத்திரமா பாத்துக்க. நான் அவர் கால் விழுந்தாவது என் அம்மாவை எப்படியாவது என் கூட அழைச்சிட்டு வர அனுமதி கேட்கிறேன். அதுவரைக்கும் என் அம்மாவை நீ பார்த்துகொள்ள முடியுமா?” என்று தன் தாய் மாமனிடம் கேட்டால் இலக்கியா.
“அத பத்தி எல்லாம் நீ கவலைப்படாத. உன் அம்மாவ நான் ராணி மாதிரி பார்த்துக்கிறேன். அதுதான் என்கிட்ட இத்தனை பணம் இருக்குதே” என்றவர். என்னவோ திடீரென ராமலிங்கம் யோசித்தவர், “உனக்கு நான் ஒரு மாசம் டைம் கொடுக்கிறேன். நீ அதுக்குள்ள வந்து உன் அம்மாவ உன்னோட அழைச்சிட்டு போய்க்க. அப்படி இல்லன்னா அவளைப் பார்க்க வேண்டிய செலவு என் தலையிலே வந்து விழும். உன் அம்மாவுக்கு வைத்தியம் பார்த்தே என் கையில் இருக்கிற காசு மொத்தமும் கரைஞ்சு போயிடும்” என்று கொஞ்சம் கூட மனதில் ஈரம் இல்லாமல், அவள் மீது இரக்கம் இல்லாமல், தன் கூட பிறந்தவள் என்று கூட பார்க்காமல், அவரை தனக்கு பாரமாக நினைத்து ராமலிங்கம் இலகியாவிடம் அழைத்துச் செல்லச் சொல்ல…
“தயவுசெய்து கொஞ்சம் பொறுத்துக்க. என்னை ஏலம் எடுத்தவர் எப்படிப்பட்டவர் அப்படின்னு எனக்கு எதுவும் தெரியாது. உங்ககிட்ட எப்படியாவது பேசி கெஞ்சி என் அம்மாவை என்கூடயே அழைச்சிட்டு வந்திடறேன். அதுவரைக்கும் என் அம்மாவை எதுவும் பண்ணிடாத” என்று இலகியா ராமலிங்கத்திடம் கெஞ்சினாள்.
“சரி சரி பார்க்கலாம் பார்க்கலாம், எனக்கு நிறைய வேலை இருக்கு நான் கிளம்புறேன்” என்று அவளைத் திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டால் ராமலிங்கம்.
தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தினாலும் தன்னுடன் ஒருவர் இருக்கிறார் என்ற தைரியத்தில் இவ்வளவு நேரம் இருந்த இலகியா, இப்போது ராமலிங்கமும் அங்கிருந்து சென்றுவிட… அங்கே இவள் மட்டும் தனித்து விடப்பட்டது போல வெறுமையாக உணர்ந்தாள். இனி தன் வாழ்க்கை எதை நோக்கிச் செல்லப் போகிறது? தான் கண்ட கனவுகள் எல்லாம் தூள் தூளாகப் போய்விட்டது. தான் நன்றாக படித்து நல்ல வேலையில் சேர்ந்து, அதில் வரும் பணத்தைக் கொண்டு தன் அம்மாவை தன்னுடனே வைத்து காப்பாற்ற வேண்டும், தன்னுடைய லட்சியங்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று இத்தனை கஷ்டத்திலும் கனவு கண்டு கொண்டிருந்த இலகியாவின் மொத்த கனவையும் ஒரே நாளில் அவளின் தாய்மாமன் சுக்குநூறாக உடைத்து அவளை அனாதையாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
இனி தன் வாழ்க்கை தன் கையில் இல்லை. தன்னை விலைக்கு வாங்கியவன் தன்னை பொம்மை போல ஆட்டுவிக்கப் போகிறான். அவன் ஆட சொன்னால் ஆடவும், பாடச் சொன்னால் பாடவும், அவன் சொல்வதை எல்லாம் செய்யவும் தான் என்னை இத்தனை விலை கொடுத்து வாங்கியிருக்கிறான். இனி என் வாழ்நாள் முழுவதும், இல்லை அவன் என்னை இச்சீ போ என்று வெறுத்து ஒதுக்கும் வரை, அவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவனின் கைப்பாவையாக நான் இருக்க வேண்டியதுதான்.
தன்னுடைய வாழ்க்கை இப்படித்தான் முடிய வேண்டுமா? எப்படி எல்லாம் தன் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று கனவு கண்டிருந்த தன் அத்தனை மனக்கோட்டையும் இப்படி ஒரே நாளில் அழகிய புரட்டிப் போட்டு, பாதாளத்திற்குள் தள்ளி விட்டார்களே! கேவலம், இந்த காசுக்காகத் தான் இத்தனை போராட்டமா? இத்தனை மன வேதனையா? இத்தனை வலிகளா? இந்த அற்ப காசுக்காக தன் தாய்மாமன் தன்னையே வேறொருவனிடம் விட்டுவிட்டு, தன்னைப் பற்றி சிந்தித்துக் கூட கவலை இல்லாமல் சென்று விட்டானே என்று.
இனி தன் வாழ்க்கையின் நிலை என்ன? தன்னுடைய நிலை என்ன என்று புரியாமல் இலக்கியா அப்படியே அமர்ந்திருந்தால். தன்னை இவ்வளவு பணம் கொடுத்து யார் ஏலத்தில் எடுத்திருப்பார்கள்? எதற்காக இத்தனை தொகை தனக்காகக் கொடுத்திருக்க வேண்டும்? என்னுடைய வயதிற்காகவா? நான் இளமையாக இருக்கிறேன் என்பதற்காகவா? கொஞ்சம் அழகாகப் பிறந்தது என்னுடைய தவறா? நான் என்ன செய்தேன்? எதற்காக இப்படி என்னை இந்த வாழ்க்கை கஷ்டப்படுத்துகிறது என்று தன்னையே நொந்து கொண்டால் இலகியா.
இங்கே இலக்கியாவை ஏலத்தில் எடுத்துவிட்ட தமிழ் மிகவும் சாதாரணமாக 10 கோடி ரூபாய்க்கு ஒரே செக்காக கையெழுத்திட்டு, அதை வினித்திடம் கொடுத்து ஏலத்தில் கட்டி வரச் சொன்னான். வினித் எதுவும் பேசாமல் தமிழ் கொடுத்த செக்கை வாங்கிக் கொண்டு போய் ஏலம் நடத்துபவரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.
காரில் வினித்திற்காக தமிழ் காத்திருக்க… செக்கை கொடுத்துவிட்டு வந்த வினித் டிரைவரை போகச் சொல்லிவிட்டு தானே காரை ஓட்டிக் கொண்டு சென்றான். தமிழ் எதுவும் பேசாமல் கண்கள் மூடி சாய்ந்தபடி காரில் அமர்ந்திருக்க, அவனை டேஷ் போர்ட்டில் இருந்த கண்ணாடி வழியாக அடிக்கடி பார்த்தவாறு வினித் காரை ஓட்டிக்கொண்டு இருந்தான்.
ஏலத்தில் இலக்கியாவை எடுத்துவிட்டு தமிழ் மிகவும் சாதாரணமாக இருக்க… ஆனால் அவனை இங்கே ஏலத்திற்கு வம்படியாக வரவழைத்த வினித்திற்கு தான் பிபி ஏறிக்கொண்டிருந்தது. வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்காக வம்படியாக தமிழை இங்கே வரவழைத்தது தான், தான் செய்த மிகப்பெரிய தவறு.
தான் நினைத்தது போல அவன் சும்மா வெறுமனே வேடிக்கை பார்த்துவிட்டுச் செல்வான் என்று வினித் நினைத்திருக்க, ஆனால் பார்க்க வந்த தமிழ் இதுவரை யாரும் கொடுத்திடாத ஒரு தொகையை கொடுத்து, ஏலத்தில் அந்தப் பெண்ணை எடுத்ததை பார்த்த வினித்திற்கு இன்னும் அதிர்ச்சியும் ஆச்சரியமாகவும் இருந்தது.
தமிழ் ஏதாவது சொல்வான் என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வினித், அவன் எதுவும் பேசாமல் அமைதியாக காரில் சாய்ந்து படுத்து இருக்க. காரை வேகமாக ஓட்டிக்கொண்டு இருந்த வினித் பொறுமை இழந்தவனாக காரை சாலையின் ஓரமாக வேகமாகத் திருப்பி, சடன் பிரேக் போட்டு நிறுத்த… அவன் இவ்வளவு வேகமாக ஓட்டி வந்து காரை திடீரென நிறுத்தியும் கூட தமிழ் இன்னும் அதே நிலையில் சாய்ந்து படுத்து இருக்க…
காரை நிறுத்திவிட்டு பின்னால் திரும்பி தமிழை பார்த்த வினித், அவன் அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்து மீண்டும் எரிச்சல் உற்றபடி என்ன கேட்பது என்று தெரியாமல் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான்.
சற்று நேர அமைதிக்குப் பிறகு, “இப்ப எதுக்குடா காரை நிப்பாட்டின? என்ன கேக்குறதுக்காக காரை நிப்பாட்டினியோ, அதை கேளு. இப்படி அமைதியாக எதுக்கு இருக்க?” என்று கண்கள் திறக்காமல் தமிழ் கேட்டான்.
“நான் என்ன கேக்குறதுக்காக காரை நிப்பாட்டினேன்னு உனக்கு நல்லா தெரியும். நான் கேட்ட பிறகு தான் நீ பதில் சொல்லுவியா?” என்ற வினித். “நானே கேட்கிறேன், உன்னை சும்மா வேடிக்கை பார்க்க தானே அந்த ஏலம் நடத்துற இடத்துக்கு வரச்சொன்னேன். நீ எதுக்கு அந்தப் பொண்ணை ஏலத்தில் எடுத்த?”என்று கேட்டான்.
“ஏன், நான் ஏலத்துல எடுக்க கூடாதா? அங்கு வந்திருந்த எல்லாருமே ஏலம் எடுக்க தானே வந்திருந்தாங்க? இதில் என்ன இருக்கு?” என்று மிகவும் சாதாரணமாகக் கேட்டான் தமிழ்.
“அவங்க எல்லாம் ஏலம் எடுப்பதற்காக வந்தவங்க. ஆனா நீ ஏலம் எடுக்க வரல, சும்மா வேடிக்கை பார்க்க தான் வந்த. அதுவும் விருப்பம் இல்லாம நான் உன்னை கட்டாயப்படுத்தி அழைச்சிட்டு போனதுனால தான் நீ அந்த இடத்திற்கு வந்த. வந்தவன் வந்தோமா, சும்மா வேடிக்கை பார்த்தோமான்னு இல்லாம உனக்கு எதுக்கு இந்த வேலை? அந்தப் பெண்ணை இத்தனை விலை கொடுத்து வாங்கணுமா? இப்போ வீட்ல எப்படி அந்தப் பெண்ணைப் பத்தி சொல்லப் போற? இல்ல, நீ இந்த ஏலத்துல கலந்துக்கிட்டதைப் பத்தி எப்படி சொல்லப் போற?” என்று கேட்டான் வினித்.
“நான் ஏலத்துல எடுத்த பொருளைப் பற்றி எதுக்கு என் வீட்ல இருக்கிறவங்க கிட்ட சொல்லணும்? என்னோட காசுல எனக்குப் பிடிச்சதை நான் வாங்கி இருக்கேன். இதை எதுக்கு நான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்கணும்?” என்று கேட்டால் தமிழ்.
அவன் சொன்ன பதிலைக் கேட்டு டென்ஷனான வினித். “நீ வாங்கினது ஒரு பொருளா இருந்தா, நீ சொன்ன மாதிரி அதை எல்லார்கிட்டயும் சொல்லணும், காட்டணும்ங்கற அவசியம் கிடையாது. ஆனால் நீ ஏலத்துல எடுத்திருக்கிறது ஒரு பொண்ணு… உயிரோடு இருக்கிற ஒரு பொண்ணு… அதுவாது உனக்குப் புரியுதா? இல்லையா? அந்தப் பெண்ணை உன் கூட எப்படி அழைச்சிட்டு போவ? என்ன காரணம் சொல்லி உன் கூட வச்சுக்குவ?” என்று தமிழை கேட்டான் வினித்.
“இப்ப எதுக்கு நீ தேவையில்லாம இதையெல்லாம் கேட்டுட்டு இருக்க?”என்று தமிழ் கண்கள் திறந்து வினித்தை பார்க்க…
“நீ ஏன் உன் வீட்ல சொல்றது சொல்லாதது இதெல்லாம் எனக்குத் தேவையில்லாத விஷயம்தான். ஆனால் எனக்கு ஒன்னே ஒன்னு மட்டும் புரியல. அதுக்கு மட்டும் நீ பதில் சொல்லு” என்று கேட்டான்.
எதுவும் பேசாமல் தமிழ் அமைதியாக வினித்தை பார்க்க… “என்னன்னு ஒரு வார்த்தை வாயைத் திறந்து கேட்க மாட்டான். அப்படியே கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்கான்” என்று மனதில் தமிழை திட்டிய வினித்.
“நான் என்ன காரணத்துக்காக அந்தப் பெண்ணை நீ ஏலத்துல எடுத்த? உண்மையாகவே அவளைப் பிடிச்சு போய் எடுத்தியா?” என்று கேட்டான் வினித்.
“நான் இந்த ஏலத்துக்கு வரும்போது இந்தப் பெண் தான் குறுக்கே வந்து என் கார் மேல விழுந்தா… உனக்கு இடுப்புல லேசா காயம் ஆயிடுச்சின்னு நினைக்கிறேன். அதுக்காக சன்மானமா நான் டிரைவர் கிட்ட பணம் கொடுத்து அவகிட்ட கொடுக்கச் சொன்னா… பணம் கொடுக்கச் சொன்ன என்னையே கேவலமா திட்டி அந்தப் பணத்தைத் தூக்கி டிரைவர் முகத்துல விட்டு எறிஞ்சிட்டுப் போயிட்டா… அது எனக்குப் பிடிக்கல. நான் கொடுத்த பணத்தை வேண்டாம் என்று தூக்கி எறிஞ்சிட்டு போனவளை எனக்குப் பிடிக்கல… நான் கொடுத்த பணத்தை அலட்சியமா, ‘வேண்டாம்மா’ன்னு தூக்கி எறிஞ்சிட்டு போனா இல்லையா…. இப்போ அதைவிட பல மடங்கு பணம் கொடுத்து அவளையே நான் விலைக்கு வாங்கி இருக்கேன். இனி என்னை எப்படி அவளால் உதாசீனப்படுத்த முடியும்? நான் சொல்வதை எல்லாம் அவள் செய்துதானே ஆக வேண்டும்?” என்றான் இருக்கிய குரலில் தமிழ்.
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான வினித், “டேய், என்னடா சொல்ற? நீ சொல்றது கொஞ்சமாவது லாஜிக்கா இருக்கான்னு யோசிச்சுப் பாத்தியா? நீ கொடுத்த பணத்தை வேண்டாம் என்று சொன்னதுக்காகவா அந்தப் பெண்ணை விலை கொடுத்து வாங்கின? அந்தப் பெண்ணைப் பார்த்தால் பாவமா இருக்குடா. ஏற்கனவே அவ ரொம்ப நொந்து போனவள் மாதிரி தான் இருக்கா. அவ முகத்தைப் பார்த்தா அப்படித்தான் எனக்குத் தெரியுது.. இப்படி ஒரு சின்ன விஷயத்துக்காக அந்தப் பெண்ணைப் பழி வாங்கவா இவ்வளவு தொகை கொடுத்து அந்தப் பெண்ணை விலைக்கு வாங்கின?” என்று கேட்டான் வினித்.
வினித் சொன்னதை எதையும் தமிழ் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
“சரி, வந்து காரை எடு. எனக்கு இங்க வந்த வேலை முடிஞ்சிடுச்சு. நான் உடனே இந்தியா கிளம்பனும்” என்றான் தமிழ்.
“என்னது, இப்பவே இந்தியா போறியா? அப்போ அந்தப் பெண்ணு?”என்று கேட்டான் வினித்.
“அவளை எக்கனாமிக் கிளாஸ்ல டிக்கெட் புக் பண்ணி இந்தியா அனுப்பிவிடு. என்னோட கார்ட்ஸ் அவளைக் கூட்டிட்டு வந்துருவாங்க. நான் சொல்லும் வரை என்னைப் பத்தி அந்தப் பெண்ணு கிட்ட எந்தத் தகவலும் யாரும் எதுவும் சொல்லக்கூடாது. அவளை ஏலத்தில் எடுத்தது யாருன்னு இப்போ வரைக்கும் அவளுக்குத் தெரியாது தானே?”என்று கேட்டான் தமிழ்.
வினித் இல்லை என்று தலையை இடவலமாக ஆட்ட…
“குட். அவளை நான் பாக்குற வரைக்கும் என்னைப் பத்தி அவளுக்கு ஒரு சின்ன விஷயம் கூட தெரியக் கூடாது. புரிஞ்சுதா?” என்றான் தமிழ் அழுத்தமாக.
வினித் வேறு வழியில்லாமல் சரி என்று தலையாட்டியவன், “சரி அப்போ நீ காரை எடுத்துட்டு ரூமுக்கு போய் ரெடியாக கிளம்பு. நான் ஃபார்மாலிட்டிஸ் முடிச்சிட்டு அந்தப் பெண்ணை நேரா ஏர்போர்ட்டுக்கு அழைச்சிட்டு வரேன்” என்ற வினித் காரில் இருந்து இறங்கி வேறு கேப் புக் செய்ய, தமிழ் வேறு எதுவும் பேசாமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
