Home Uncategorizedஅஸ்க்..லஸ்கா..காதல்..25

அஸ்க்..லஸ்கா..காதல்..25

by Layas Tamil Novel
273 views

EPISODE-25

தமிழ் தான் விரும்பிய பெண்ணை கடைசியாக கொடைக்கானலில் தான் சந்தித்ததாகவும், அவளை சந்தித்து கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு மேலாகி விட்டதாகவும் சொன்னான். கொடைக்கானலில் அவன் எந்த இடத்தில் அந்த பெண்ணை சந்தித்தான், அவன் இருந்த இடம் என்ன என்று அனைத்து விபரங்களையும் கேட்டு தெரிந்து கொண்ட இலக்கியாவுக்கு சற்று ஆச்சரியமாகத் தான் இருந்தது.

ஏனென்றால் அவள் ஆறு வயதாக இருக்கும் பொழுது கொடைக்கானலில் தான் இருந்தாள். அதுவும் தமிழ் சொன்ன அதே குமரன் டீ எஸ்டேட்டில் தான் அவள் தன் பெற்றோருடன் வசித்து வந்தாள். இது எல்லாம் இலக்கியாவுக்கு அவ்வளவாக நினைவு இல்லை என்றாலும், இலக்கியாவின் அம்மா கோமதி சொல்லி அனைத்து விபரங்களையும் கேட்டு தெரிந்து இருந்தாள் இலக்கியா. அவள் அம்மா அந்த டீ எஸ்டேட்டில் தாங்கள் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அங்கிருந்த சிலரால் தன் குடும்பத்தோடு விரட்டியடிக்கப்பட்டதாகவும், அதன் பிறகுதான் தன் தம்பியை காண்பதற்காக இருக்கும் பணத்தை எல்லாம் செலவு செய்து மலேசியா வந்ததாகவும் கோமதி இலக்கியாவிடம் சொல்லி இலக்கியா கேட்டிருக்கிறாள்.

ஒருவேளை தமிழ் தன்னைப் போல வேறு யாரையும் அங்கு சொல்லி இருக்கலாம், தான் தன்னிடம் சொன்ன தகவல்களை எல்லாம் தன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்து தவறாக எண்ணி விட்டோமோ என்ற யோசனையில் இலக்கியா இருக்க, “என்ன பாக்குற சிட்டு? நான் சொல்றதெல்லாம் நம்ப முடியலையா?” என்று கேட்டான் தமிழ்.

இலக்கியா “ஆமாம்” என்றும் “இல்லை” என்றும் தலையை நாலா புறமும் ஆட்ட… அரை தூக்கத்தில் அவளைப் பார்த்து சிரித்த தமிழ், கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தவன், கால்மிடித்து அமர்ந்திருந்தவளின் கால்களை பிடித்து இழுக்க… அவள் பயந்து போய் தமிழைப் பார்த்தாள். “சும்மா சும்மா என்ன பார்த்து இப்படி பயந்து வந்த மாதிரி ரியாக்ஷன் கொடுக்காத சிட்டு. எனக்கு நீ என்னை பார்த்து பயப்படுறது சுத்தமா பிடிக்கல,” என்றான்.

“நீங்கள் இப்படி திடீர்னு எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் செய்தால் நான் என்ன செய்வேன்னு பயப்படத் தானே வரும் எனக்கு?” என்றாள் இலக்கியா. “நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். அப்படி எதுவும் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக உன்னிடம் சொல்லிவிட்டு தான் செய்வேன். அதற்காக உன்னிடம் அனுமதி வாங்குவேன் என்று மட்டும் நினைக்காதே, நீ என்ன எனக்கானவள்,” என்ற தமிழ். அவள் கால்களை இழுத்து அவள் மடியில் தன் தலையை வைத்து படுத்துக்கொண்டான்.

தன்னுடைய படுத்தவனை பார்த்து, “ஆமா அப்படியே எல்லாமே என்கிட்ட அனுமதி வாங்கி தான் செய்யற மாதிரி ரொம்ப ஓவரா பேசுறான்,” என்று நினைத்தவள், தன் மடியில் தலை வைத்து படுத்திருக்கும் தமிழைப் பார்த்தாள். “இங்கதான் இவ்வளவு இடம் இருக்கே…. நீங்க என் மடியிலேயே தான் வந்து படுக்கணுமா?” என்று கேட்டாள் இலக்கியா. “எவ்வளவு இடம் இருந்தாலும் என்னவோ எனக்கு இப்போ உன் மடியில் படுக்கணும்னு தான் தோணுது,” என்றான். “சரிங்க,” என்று இலக்கியா தலையாட்ட… “எனக்குப் பிடிக்கவே இல்லை,” என்றான் தமிழ்.

அவள் “என்ன?” என்று புரியாமல் தமிழைப் பார்க்க.. “நீ என்ன பேர் சொல்லியே கூப்பிடலாம். நீ வா போ என்று கூப்பிடலாம். அதை விட்டுட்டு என்ன வாங்க போங்கன்னு கூப்பிடுற?” என்று கேட்டான் தமிழ். “நீங்க என்ன விட வயசுல மூத்தவங்க. உங்கள மரியாதையா தான கூப்பிடணும். இப்படி நீ வா போன்னு மரியாதை இல்லாம பெயர் சொல்லி கூப்பிட எல்லாம் எனக்கு எங்கம்மா சொல்லிக் கொடுக்கல,” என்றாள். அவள் தன்னைவிட வயதில் மூத்தவன் என்று சொன்னதும் தமிழுக்கு சுர் என கோபம் தலைக்கு ஏறியது.

“அப்படின்னு உனக்கும் எனக்கும் வயசு அவ்வளவு வித்தியாசமா? வெறும் 10 வயது தானே நான் உன்னை விட மூத்தவன். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. என்னை நீ வாடா போடான்னு கூப்பிட்டாலும் நான் எதுவும் சொல்ல மாட்டேன்,” என்றான் தமிழ். “பத்து வயது தானா… பத்து.. வயது…” என்று அழுத்திக் கூறினாள் இலக்கியா. மீண்டும் அவள் வயதை பற்றி பேசியதும் தமிழ் “இப்போ நீ இந்த வயசை பத்தி பேசுறது விட போறியா? இல்லையா?” என்றான். அவள் அதற்கு மேல் எதுவும் பேசி அவனிடம் வம்பில் மாட்டிக் கொள்ள விரும்பாமல் அமைதியாகிவிட.


அவள் மடியில் படுத்துக்கொண்டே “எனக்கு இன்னிக்கு என்னவோ என்னோட சிட்டோட ஞாபகம் ரொம்ப அதிகமா இருக்கு. அதுவும் உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு என்னோட சிட்டு நினைப்பு வரத தடுக்கவே முடிய மாட்டேங்குது,” என்றான். “என்ன பாக்கும்போது அவங்க ஞாபகம் உங்களுக்கு ஏன் வருது?” என்று கேட்டாள் இலக்கியா. “இப்பதானே சொன்னேன் நீங்க வாங்க போங்கன்னு பேசாதேன்னு…” என்று அவளை முறைக்க.. “அன்பா சொல்லி இவனுக்கு பழக்கமே இல்ல போல, மிரட்டி பேசிய காரியம் சாதிக்கிறான்,” என்று நினைத்துக் கொண்டே “சரி சொல்லு… என்ன பார்த்தா உனக்கு ஏன் அவங்க ஞாபகம் வருது?” என்று கேட்டாள்.

அவள் கேட்டதும் தலையை நிமிர்த்தி இலக்கியாவின் முகத்தை பார்த்த தமிழ் தன் கைகளை உயர்த்தி அவள் இடது புற புருவத்தின் மேல் மச்சம் இருப்பதை காட்டி…. “இதோ இந்த மச்சம்…. இந்த மச்சம் தான் இந்த மச்சத்தை பார்க்கும்போது எல்லாம் எனக்கு என்னோட சிட்டு ஞாபகம் வருது,” என்றான். அவன் தொட்டுக்காட்டிய தன் மச்சத்தை நீவி கொண்ட இலக்கியா “இந்த ஒரு மச்சத்தை பார்த்துதான் அவங்க மாதிரியே நான் இருக்கேன்னு நீ நினைக்கிறியா? ஒருவேளை எனக்கும் அவங்கள மாதிரியே மச்சம் இருந்தா, ஒருவேளை நான் வேற அவங்க வேறயா இருந்தா நீ என்ன செய்வ?” என்று கேட்டாள்.

அவள் சொல்வதை யோசித்த தமிழ் “நீ ஆமா நீ சொல்றதும் சரிதான்,” என்றவன் உடனே அவள் மடியில் இருந்து எழுந்து அவள் அணிந்திருந்த பாவாடையை லேசாக மேலே தூக்கப் போக…. அவசரமாக அவன் கையைப் பிடித்து அவன் செயலை தடுத்த இலக்கியா அவனை முறைத்தவள் “என்ன பண்ற தமிழ்…?” என்று சற்று கோபமாக அவனிடம் பெயர் கேட்க.. “என்னோட சிட்டுவுக்கு சரியா இடுப்புக்கு கீழ… வலது தொடைக்கு மேல ஒரு பெரிய தழும்பு இருக்கு… அந்த தழும்புக்கு காரணமே நான் தான்,” என்ற தமிழ். “அந்த தழும்பு மட்டும் உனக்கு இருந்துச்சுன்னா நீ தான் என்னோட சிட்டுன்னு நான் உறுதியாக சொல்வேன்,” என்று தமிழ் மீண்டும் அவள் ஆடையில் கை வைக்க…


தமிழ் சொன்னது போலவே தன் உடம்பில் தழும்பு இருப்பதை உணர்ந்த அடுத்த நொடி தமிழைப் பார்த்தவள் அப்படியே உறைந்து போய் அமர்ந்து இருக்க… அவள் அருகில் வந்திருந்தவன் அவளுக்கு தான் செய்த செயல் அதிர்ச்சியாக இருந்திருக்கும். தனக்குத்தான் அறிவில்லை அடிக்கடி இப்படி அவளிடம் மிகவும் அதிகமாக உரிமை எடுத்துக் கொள்கிறேன் என்று யோசித்தவன் எதுவும் பேசாமல் மீண்டும் அவள் மடியில் படுத்துக் கொள்ள..

அதுவரை தமிழைப் பற்றிய எந்த ஒரு உணர்வும் இல்லாமல் இருந்த இலக்கியாவுக்கு அவன் சொன்ன விபரங்களை எல்லாம் கேட்டதும் நம்ப முடியாமல் அப்படியே அமர்ந்திருக்க, அவன் மடியில் படுத்திருந்த தமிழம் போதை மருந்தின் தாக்கத்தினாலும் கொடுத்த மருந்தின் விளைவினாலும் கண் மூடி நன்றாக உறங்க ஆரம்பித்தான். ஆனால் தமிழ் சொன்னதே கேட்ட பிறகு இங்கு இலக்கியாவுக்குத் தான் உறக்கம் முற்றிலுமாக போய்விட்டது.

“உண்மையாகவே என் தமிழ் சொன்ன அடையாளம் தனக்கு சரியாக ஒத்துப் போய் இருக்க, அப்போ தமிழ் தேடிக் கொண்டிருந்த பெண் நான் தானா? இவனுக்கு எப்படி என்னை தெரியும்… இவன் எப்படி என்னை சந்தித்து இருப்பான்? தமிழுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு எதுவுமே நினைவில் இல்லையே?” என்று தனக்குத்தானே கேள்விகள் கேட்டு விடை தெரியாமல் குழம்பிப் போனவள் அவளையும் அறியாமல் அமர்ந்த நிலையிலேயே படுத்து உறங்கி விட்டாள்.

கடல் அலைகள் கரையை முத்தமிட்டு செல்ல தன் ஒளிக் கற்றைகளை பரப்பிக் கொண்டு சூரியன் உதயம் ஆகியது. ஆசிரமத்தில் இலக்கியாவின் நினைவுகளோடு இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் அதிகாலையில் தூங்கி இருந்த கோமதியை அவள் அறைக்கதவை தட்டி எழுப்பி விட்டாள் யாழினி. அவள் வந்து எழுப்பும் பொழுது மணி எட்டை கடந்து இருந்தது. எழுந்து வந்து கதவை திறந்த கோமதி எதிரில் சிரித்த முகமாக நின்றிருந்த யாழினியைப் பார்த்து, “மன்னிச்சிடுமா, நைட்டு தூங்க ரொம்ப நேரம் ஆயிடுச்சு, அதுதான் ரொம்ப லேட்டா எழுந்துட்டேன். உள்ளே வா மா,” என்று கதவை முழுவதுமாக திறக்க…

யாழினின் பின்னால் ஒருவர் நின்றிருந்தார். அவரைப் பார்த்ததுமே கோமதிக்கு புரிந்து விட்டது நேற்று யாழினி அவள் தந்தையை பற்றி சொல்லியிருந்தால். “அவராகத்தான் இருக்க வேண்டும்,” என்று “நீங்க யாழினின் அப்பாவா?” என்று கேட்க அவர் சிரித்தபடி தலையாட்டி “அதுக்குள்ள என் பொண்ணு என்ன பத்தி உங்ககிட்ட சொல்லிட்டாளா? இப்படி உள்ளே வாருங்கள்,” என்றார். கோமதியும் சிரித்தபடி “ஆமாம்” என்று தலையாட்டியவர். இதுவரையும் தன்னரைக்குள் அழைக்க இருவரும் வந்து அமர்ந்தார்கள்.

வெற்றிவேல் கோமதிவிடம் “உங்க பொண்ண தேடி தான் நீங்க இங்கே வந்திருக்கிறதாகவும், அவங்க இருக்கிற இடத்தை பத்தி சொன்னது யாழினி என்கிட்ட சொன்னா. நம்ம நெனச்ச உடனே அவங்கள போய் பார்க்க முடியாது. அவங்க ரொம்ப பெரிய குடும்பம். இந்த நாட்டிலேயே ரொம்ப வசதி படைச்சவங்களும் கூட. நினைச்ச உடனே யார் அலையும் அங்கே உள்ளே போக முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. இங்கே நம்ம ஆசிரமத்திற்கு உதவி செய்ய பெரிய பெரிய குடும்பத்திலிருந்து நிறைய பேர் வருவாங்க. அவங்க யார்கிட்டயாவது உங்க விஷயத்தை பத்தி சொல்லி உதவி கேட்டு பார்க்கிறேன். ஆனா அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும். இன்னும் ஒரு ரெண்டு மாசத்துல ஆசிரமத்துடைய நூற்றாண்டு விழா வரப்போகுது. இந்த விழாவிற்கு நான் இந்த ஆசிரமத்தில் எவ்வளவு தூரம் வளர்வதற்கு உதவி செஞ்ச எல்லாரையும் கூப்பிடலாம்னு இருக்கேன். அதுல உங்க பொண்ணு இப்போ இருக்கிறதா சொன்னிங்களே அவங்களும் எங்களுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காங்க. நான் அவங்களையும் தான் இந்த விழாவிற்கு அழைக்க போறேன். ஒருவேளை அவங்க வரும்போது உங்க பொண்ணு இங்க வரலாம் இல்லையா? அதனால நீங்க அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்க முடியுமா? இல்ல சீக்கிரமா கண்டுபிடிக்கணும்னா எனக்கு தெரிஞ்சவங்க மூலமா நான் முயற்சி செய்து பார்க்கிறேன்,” என்று கேட்டார் வெற்றிவேல்.

“எனக்கும் என் பொண்ண சீக்கிரமா பாக்கணும்னு தான் ஆசையா இருக்கு. ஆனா என்ன செய்ய? நீங்களும் இவ்ளோ விஷயத்தை சொல்றப்போ உங்கள அவசரப்படுத்த நான் விரும்பல. முடிந்த அளவுக்கு முயற்சி பண்ணுங்க. அப்படி இல்லன்னா இவ்வளவு நாள் பொறுத்திருந்தேன், இன்னும் ஒரு ரெண்டு மாசம் என் பொண்ணுக்காக பொறுத்துகிறேன்,” என்றார் கோமதி.

“சரி,” என்று சொன்ன வெற்றிவேல், “உங்களுக்கு இங்கே தங்களுக்கு சௌகரியமாக தானே இருக்கு. அப்படி எதுவும் உதவி தேவைன்னா தயங்காம நீங்க யாழினி கிட்ட கேளுங்க. அவ நீங்க கேக்குற எல்லா உதவியையும் செய்து கொடுத்துவிடுவார்,” என்றவர் யாழினியைப் பார்த்து “நீ பேசிட்டு வாமா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் போயிட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு அவர் இருவரிடமும் விடை பெற்று அங்கிருந்து சென்றார்.

அவர் சென்றதும் யாழினி கோமதி இடம் அமர்ந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு “நீங்க கவலைப்படாதீங்கம்மா, உங்க பொண்ணு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நம்ம கண்டுபிடிச்சிடலாம்,” என்று அவருக்கு நம்பிக்கை அளித்தால். அவள் தந்த நம்பிக்கையோடு யாழினியின் கையைப் பிடித்துக் கொண்ட கோமதி “நான் உன்கிட்ட ஒன்னு கேட்டா நீ பதில் சொல்லுவியா?” என்று கேட்டார். “என்னம்மா இப்படி கேக்குறீங்க? உங்க பொண்ணு மாதிரி என்ன நெனச்சிட்டு உரிமையோடு கேளுங்க. நான் நீங்க என்ன கேட்டாலும் சொல்றேன்,” என்றாள். “உனக்கு அம்மா இல்லையா?” என்று கேட்டார்.


அப்படி கேட்டதும் யாழினின் முகம் சற்று வாடியது. பின்பு கோமதியைப் பார்த்து “ஆமாம் அம்மா… நான் சின்ன வயசா இருக்கும்போது என் அம்மா இறந்துட்டாங்க… என் அப்பா தான் என்ன அம்மாவுக்கு அம்மாவா இருந்து வளர்த்துட்டு வர்றாரு,” என்றாள். அவள் தலையை அன்பாக வருடி கொடுத்த கோமதி “என்னவோ தெரியல யாழினி, எனக்கு உன்னை பார்த்ததிலிருந்து என்னோட பொண்ணு இலக்கியா கூட பேசி பழகுற மாதிரியே இருக்கு. உன்ன பத்தி தெரிஞ்சுக்கலாமா, அதனால தான் இப்படி கேட்டுட்டேன். மற்றபடி உன்னை கஷ்டப்படுத்தணும்னு இப்படி கேட்கலமா? நீ என்ன பத்தி தப்பா எடுத்துக்காத, என்ன மன்னிச்சிடு,” என்று கோமதி வருத்தத்துடன் யாழினியைப் பார்க்க… “ஐயோ அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் எதுவும் நினைக்கல,” என்றாள்.

“சரிமா,” என்றவர், “நேத்து என் பொண்ணு இருக்கிற இடத்தோட அட்ரஸ் உன்கிட்ட காட்டி தெரியுமான்னு கேட்டதும் உன் முகம் ஏன் ஒரு மாதிரியா ஆச்சு? நான் என்னன்னு காரணம் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டார். அவர் கேட்டதும் யாழினி அவரை வலி நிறைந்த கண்களோடு பார்க்க.. “இல்லம்மா, உன்ன கஷ்டபடுத்தனும்னு நான் இப்படி கேட்கல. என் பொண்ணு அங்கு தான் இருக்கா. உன் முகம் வேற சரியில்லையா? ஒரு வேலை அங்கு இருக்கிறவங்களும் ரொம்ப மோசமானவங்களா இருப்பாங்களோ? என் பொண்ணு அவங்க கிட்ட மாட்டிகிட்டு எதுவும் கஷ்டப்படுவாள் என்று எனக்கு பயமா இருக்கு. அதனால தான் கேட்டேன்,” என்றார் கோமதி.

“எனக்கு உங்களோட பதட்டம் புரியுதுமா, நான் தப்பா எதுவும் நினைக்கல,” என்று சொன்னவள், “அந்த வீட்டில் இருக்கவங்க எல்லாரும் நீங்க நினைக்கிற மாதிரி யாரும் ரொம்ப மோசமானவங்க கிடையாது. எல்லாருமே ரொம்ப நல்லவங்க தான். ஆனா ரெண்டு பேரை தவிற… மத்தவங்க எல்லாருமே எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ரொம்ப நல்லவங்க தான்,” என்றாள் யாழினி. கோமதி அவள் பேசுவதை கேட்டு அவளை பார்த்துக் கொண்டிருக்க.. “வீட்டோட எஜமானி அம்மாவும் அவங்க மகனும் தான் நான் சொன்னவங்க. அவங்க வீட்டு மகனாலத்தான் நான் என் வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமாகவும் இருந்தேன். இப்போ அவனால தான் என் வாழ்க்கையே நான் வெறுத்தும் இருக்கேன்,” என்றவள், “நீங்க உங்க பொண்ணு இந்த இருக்கிற அட்ரஸ் சொல்லி காட்டுனதும் எனக்கு அவன் ஞாபகம் வந்திருச்சு, அதனாலதான் என் முகம் மாறிடுச்சுமா, வேற எதுவும் இல்லை,” என்று சொன்னவள், “சரிம்மா நான் அப்புறம் வருகிறேன்,” என்று சொல்லி அங்கிருந்து எழுந்து கனத்த இதயத்தோடு சென்றால் யாழினி.

யாழினியை இப்படி கேள்வி கேட்டு சங்கடப்படுத்தி விட்டோமே என்று கோமதிக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. இனிமேல் யாழினி சொல்லாமல் அவளைப் பற்றிய எந்த விஷயத்தையும் கேட்டு யாழினியை கஷ்டப்படுத்தக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டார் கோமதி. யாழினி சொன்ன அந்த இரு மோசமான நபர்களிடமும் தன் மகள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று கடவுளிடம் மனதார வேண்டிக் கொண்டார் கோமதி.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured