EPISODE-30
தூக்கத்திலிருந்து கண்விழித்த இலக்கியா கண்களைத் தேய்த்துக் கொண்டே எழுந்து மெத்தையில் அமர்ந்தவள்.
சோம்பல் முறித்தவாறு கண்களைத் திறந்தவளுக்கு சட்டென அவளுக்கு நேற்று தமிழுடன் அவன் அறையில் தூங்கியது நினைவிற்கு வந்தது.
அவள் தன் கண்களைச் சுழற்றி தான் இருந்த அறையைப் பார்க்க…
தமிழ் அறையில் இல்லாமல் தான் இப்போது தன்னுடைய அறையில் இருக்கவும், யோசனையோடு இலக்கியா தன் மெத்தையில் அமர்ந்து இருக்க…
திடீரென அவள் பின்னால் இருந்து ஒரு சத்தம் கேட்டதும்.
சட்டெனத் திரும்பி தன் பின்னால் பார்க்க… கட்டிலுக்கு அருகில் இருந்த மேஜையில் ஒரு கிஃப்ட் பாக்ஸ் இருந்தது.
அந்த கிஃப்ட் பாக்ஸ்சிலிருந்துதான் சத்தம் கேட்டது.
சமணம் இட்டு கட்டிலில் அமர்ந்திருந்தவள் கிஃப்ட் பாக்ஸ்ஐப் பார்த்ததும் ஆர்வத்தில் அதை எடுக்க குழந்தை போல தவழ்ந்து சென்றவள். சத்தம் போட்டுக்கொண்டிருந்த அந்த கிஃப்ட் பாக்ஸ்ஐ எடுத்தவள் நன்றாக அமர்ந்து அந்த பாக்ஸை அவசரமாகப் பிரிக்க ஆரம்பித்தாள்.
கிஃப்ட் கவரைப் பிரித்ததும் தன் கையில் இருந்த பாக்ஸைப் பார்க்க அதில் புத்தம் புதிய ஒரு லேட்டஸ்ட் மாடல் செல்போன் இருந்தது.
தான் இங்கு வந்ததிலிருந்து தனக்கு நேற்று தனியாக போன் இருந்ததில்லை என்று வருத்தப்பட்டிருந்தாள் இலக்கியா. தன்னிடம் போன் இருந்தால் தன் அம்மாவிடம் எப்படியாவது பேசிவிடலாம் என்று பலமுறை நினைத்திருந்தாள்.
அவளே எதிர்பார்க்காததுபோல தன் கைக்கு போன் வந்திருக்க, அந்த போன் இருந்த பாக்ஸை வேகமாகத் திறந்து சத்தம் போட்டுக்கொண்டிருந்த போனை வெளியே எடுத்தாள்.
அதில் “என் வருங்கால கணவன்” என்று வந்தது.
அதில் இருந்து அந்த போனில் தமிழ் தான் தனக்கு அழைத்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டவள் வேகமாக அட்டென்ட் செய்து போனை காதில் வைக்க…
“ஹலோ, என்ன உனக்கு இந்தக் கிஃப்ட் பிடிச்சிருக்கா?” என்று கேட்டான் தமிழ்.
இலக்கியா தமிழ்ன் குரல் கேட்டதும் ஏனோ இலக்கியாவின் மனதிற்குள் குதூகலமாக இருந்தது. அவன் தான் தனக்கு இந்த போனைப் பரிசளித்திருக்கிறான் என்று தெரிந்ததும் மிகவும் சந்தோஷப்பட்டவள் லேசாக சிரித்தவாறு “ம்ம்ம்…” மட்டும் சொன்னாள்.
“இவ்வளவுதானா உன்னோட பதில்?” என்றான் தமிழ்.
“வேற என்ன சொல்லணும்?” என்றால் இலக்கியா.
“கண்டிப்பா உனக்கு இந்தக் கிஃப்ட் பிடிச்சிருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்.”
“நான் உன்னை இப்போ முழுசா நம்புறேன். நீ எப்போ வேணா யார்கிட்ட வேணாலும் உன் போன்ல இருந்து பேசிக்கலாம். எந்தப் பிரச்சினையும் எனக்கு இல்லை” என்றான் தமிழ்.
அவள் எதுவும் பேசாமல் இருக்க…
“என்ன இலக்கியா, அமைதியா இருக்க?” என்றான்.
“ம்ஹும்… ஒன்னும் இல்லை” என்று குரல் தழுதழுக்க இலக்கியா பேச…
“ஏய், ஏன் இப்போ அழற? என்ன ஆச்சு?” என்றான் தமிழ்.
“நான் இந்த போனில் இருந்து என் அம்மா கிட்ட பேசிக்கலாமா?” என்று கேட்டாள் இலக்கியா.
“நானே சொன்னேன், நீ யார் கிட்ட வேணா போன் பண்ணி பேசு. எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. என்னை மீறி உன்கிட்ட யாரும் வர முடியாது. நீயும் என்னை மீறி வெளியே போக முடியாது. அதனால நீ யார் கிட்ட பேசினாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றான் தமிழ்.
அவள் “சரி” என்று தலையாட்ட…
“போன் பண்ணினா வாயைத் திறந்து பேசணும். இப்படி வாய் திறந்து பதில் சொல்றதுக்கு பதிலா தலையாட்டிட்டு இருக்கக் கூடாது” என்றான் தமிழ்.
தான் இங்கே தலையாட்டியது போனில் அந்தப் பக்கம் இருக்கும் தமிழுக்கு எப்படி தெரிந்தது என்று யோசித்தவளுக்கு, அவன் தன்னைத்தான் எங்கிருந்தோ பார்த்தபடி பேசுகிறான் என வாசல் கதவைத் திரும்பிப் பார்க்க…
வாசல் கதவைப் பார்த்ததும் சட்டெனக் கதவிற்குப் பின்னால் மறைந்து கொண்டான் தமிழ்.
“ஏய், என்ன பண்ற?” என்று கேட்டான்.
“உங்களைத்தான் தேடினேன்” என்றால் இலக்கியா.
“நான் ஏற்கனவே சொல்லிட்டேன், நீங்க வாங்க போங்கன்னு பேசாத, உரிமையா என்கிட்ட பேசப் பழகுன்னு சொன்னேனா இல்லையா? இது என்ன ‘உங்கள தான்’, ‘எங்கள தான்’னு பேசிகிட்டு இருக்க? எனக்கு நீ இப்படி பேசுறது சுத்தமா பிடிக்கல” என்றான் தமிழ்.
“நிஜமாவே நான் உங்களை, உன்னை இப்படி பேசுவதில் உனக்கு… உனக்கு… எந்தப் பிரச்சினையும் இல்லையா?” என்று கேட்டாள் இலக்கியா.
“ம்ஹும்… இல்லவே இல்லை” என்றான் தமிழ்.
“இப்போ நீங்க எங்க இருக்கீங்க? நான் அங்க வரேன்” என்று கட்டிலில் இருந்து கீழே இலக்கியா இறங்க…
“ஏய்… ஏய்… என்ன பண்ற?” என்றான் அவசரமாக.
“உங்களை பார்க்கத்தான் நான் வெளியே வரேன்” என்றால் இலக்கியா.
“ஏய்… அதெல்லாம் எதுவும் வேணாம். நீ தான் நேத்து சொன்ன… நமக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க வேணாம்னு. அதனாலதான் நான் இந்த முடிவையே எடுத்தேன். நீ சொன்னதுபோல இனிமேல் நீயும் நானும் நமக்குக் கல்யாணம் ஆகுற வரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க வேணாம்” என்றான் தமிழ்.
அவன் சொன்னதைக் கேட்ட இலக்கியா நம்ப முடியாமல் “அது… அது… நான் சும்மா சொன்னேன். நான் சொன்னேன் என்பதற்காக நீங்கள் அப்படி இருக்கணும்னு அவசியம் இல்லை” என்றாள் இலக்கியா.
“இல்லை, நீ சொல்றதையும் நான் யோசிச்சு பார்த்தேன். எனக்கு நீ சொன்ன விஷயம் பிடிச்சு இருக்கு. நாம் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமல் இருந்தா எப்படி இருக்கும். எனக்கு உன்மேல என்ன மாதிரியான எண்ணம் தோணுதுன்னு முதல்ல நான் தெரிஞ்சுக்கணும். அதேபோல உன்னை நான் மலேசியாவில் இருந்து அழைச்சிட்டு வந்துட்டேன் என்பதற்காக நீ என்கூட வேறு வழியே இல்லாமல் தான் இருக்கியா என்று எனக்கும் தெரியணும். உனக்கு என் மேல காதல் இருக்கா? இல்லையா? நீ உண்மையாவே என்னை முழு மனசோட விரும்பிதான் கல்யாணம் பண்ணிக்கப் போறியா? இல்லையான்னு தெரிஞ்சுக்கணும்” என்றான்.
அவன் சொல்வதை எல்லாம் நம்ப முடியாமல் கேட்டுக்கொண்டிருந்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
இலக்கியாவின் அறைக்கு வெளியே மறைந்து இருந்த தமிழ் தான் பேசுவதைக் கேட்டுவிட்டு இலக்கியா அமைதியாக இருப்பதை உணர்ந்தவன்.
அவள் அறைக்கு வெளியே இருந்து உள்ளே எட்டிப் பார்க்க… இலக்கியா நின்ற இடத்தில் அப்படியே அசையாமல் நின்று இருந்தாள்.
அவளை ரசித்தவாறு நின்று இருந்தவன் “ஓய்… சிட்டு…” என்று சற்று சத்தமாக அதட்டும் தொணியில் இலக்கியாவை அழைக்க…
அவன் அழைப்பில் சுய நினைவுக்கு வந்தவள் “நீங்க என்னை சிட்டுன்னு சும்மா சும்மா கூப்பிடறது கொடைக்கானலில் நீங்க பழகின அந்த ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிற பொண்ணை லவ் பண்ணிட்டு இருக்கீங்களே… அவங்க மாதிரி நான் இருக்கேன்னு தானே என்னை இப்படி கூப்பிடறீங்க?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
அவள் அறைக்கு வெளியே நின்று அவளை முறைத்தவன் “என் சிட்டு மாதிரி நீ இல்லை. நீதான் என் சிட்டு” என்றான் தமிழ் உறுதியாக.
“அப்படியா? அப்போ கொடைக்கானளில் நீங்கள் சந்தித்த சிட்டு நான் தானா?” என்றாள் ஆர்வமாக.
“ஆமாம்” என்று தமிழ் பதில் அளித்தான்.
“நீங்க சொன்ன, உங்களுக்குச் சிட்டு நானா இருந்தா எனக்கு ஏன் எதுவுமே ஞாபகம் இல்லை?” என்றாள் இலக்கியா.
“அது… அது, நீ சின்ன பொண்ணா இருந்த வயசு எப்படி உனக்கு ஞாபகம் இருக்கும்?” என்றான் தமிழ்.
இலக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… வெளியே நின்று இருந்த தமிழ் மீண்டும் இலக்கியாவின் அறைக்குள் எட்டிப் பார்க்க…
சத்தம் இல்லாமல் இலக்கியா தன் அறை வாசல் நோக்கி தமிழுக்குத் தெரியாமல் அவனை காணச் சென்றாள்.
இலக்கியா அறைக்கு வெளியே வருவதைப் பார்த்த தமிழ் போனை காதில் வைத்தபடி, “நாம ரெண்டு பேரும் டீல் போட்டதை மறந்துட்டியா? நான் என்னோட வீட்டுக்கு கிளம்புறேன். இனிமே நீயும் நானும் இந்த மாதிரி போனில் தான் பேசிக்கணும். நேராகப் பார்த்தூக்கவோ… அல்லது பேசவோ கூடாது” என்றபடி இலக்கியாவின் கண்களில் சிக்காமல் வெளியே சென்றான்.
தமிழ் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டே வெளியே வந்த இலக்கியா, தமிழ் அவள் அறைக்கு வெளியே இல்லாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தவள், தமிழைத் தேடியப்படியே வெளியே வாசலுக்கு வர…
அவள் வெளியே வாசலுக்கு வரவும் தமிழ்ன் கார் கிளம்பவும் சரியாக இருந்தது.
அவன் கார் கிளம்புவதைப் பார்த்து வேகமாக தமிழ்ன் கார் நோக்கி இலக்கியா ஓடி வர, அதற்குள் தமிழ் காரைக் கிளப்பி அவள் கண்ணில் தன் முகம் தெரிந்து விடாத தூரத்திற்குச் சென்றான்.
“ச்சே.. தமிழைப் பார்க்க முடியவில்லையே!” என்று தன் காலைத் தரையில் உதைத்தவள், அவன் காரையே பார்த்துக்கொண்டு இருக்க…
அவர்கள் வீட்டு கேட் வரை காரை ஓட்டிச் சென்ற தமிழ் தன் கார் வேகத்தை சற்று குறைக்க…
தன்னைப் பார்க்கத்தான் தமிழ் கார் வேகத்தைக் குறைக்கிறான் என்று நினைத்த இலக்கியா அவன் காரை நோக்கிச் செல்லப் போக…
டிரைவர் சீட்டில் இருந்த தமிழ் கார் ஜன்னலைத் திறந்து தன் கையை மட்டும் வெளியே நீட்டி இலக்கியாவிற்கு “டாடா…” காட்டினான்.
மீண்டும் அவனை காண முடியாத இலக்கியா ஏமாற்றத்தோடு தமிழுக்குத் தன் கையைத் தூக்கி ஆட்டினாள்.
அவளை கார் சைடு மிரர் வழியாகப் பார்த்துக்கொண்டே சிரித்தபடி தன் காரைச் சாலையில் செலுத்தினான்.
இங்கே சோகமாக தன் அறைக்குச் சென்ற இலக்கியா காலேஜ் செல்லத் தயாராகிக் கொண்டு இருக்க…
தமிழ் இலக்கியாவின் அறைக்கு வெளியே நின்று பேசிக்கொண்டதையும், இலக்கியா அவள் அறையை விட்டு தமிழைத் தேடி வெளியே வந்ததும்,
இன்னும் ஆறு மாதத்திற்கு இலக்கியாவும, தமிழும் சந்தித்துக் கொள்வதில்லை என்று முடிவு எடுத்துக்கொண்டது வரை இவர்கள் இருவருக்கும் தெரியாமல் ரேவதியின் மகள் லலிதா அங்கிருந்த பெரிய தூணிற்குப் பின்னால் ஒளிந்து நின்று இங்கு நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டு நின்று இருந்தாள்.
இலக்கியா தன் அறைக்குச் செல்லும் வரை மறைந்திருந்தவள் தூணிற்ககுப் பின்னால் இருந்து வெளியே வந்தவள் நேராக அவள் அம்மாவிடம் சென்று நடந்த விவரங்களைக் கூறினாள்.உடனே ரேவதி, “இந்த ஆறு மாசம் நமக்கு இப்போ சாதகமா இருக்கு லலிதா. நீ எப்படியாவது ஏதாவது செஞ்சு இந்த மென மினுக்கியை இந்த வீட்டை விட்டுத் தூரத்திடு… மிச்சத்தை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
