Home UncategorizedMR.LOVER 7

MR.LOVER 7

by Layas Tamil Novel
141 views

தன்னை வெளியில் போகச் சொன்னவளைப் பார்த்து கோபம் அதிகமாக, மூச்சு எடுத்தவன் அவள் முகத்தைப் பிடித்து, “நான் இங்கே இருந்து போகலைன்னா என்ன செய்வே?” என்றான்.

அவள் எங்கே சொன்னதுபோல இங்கேயே இருந்துவிடுவானோ என்று பயந்தவள், “நீங்க… நீங்க இப்போ போகலைன்னா நான் என் அம்மாவைக் கூப்பிடுவேன்” என்றாள் பயந்துகொண்டே.

“நீ ஏன் கூப்பிடுற? இரு, நானே என் பிரியா அத்தையை கூப்பிடுறேன்” என்று சொன்னவன், நக்ஷத்ராவின் வாசல் கதவைத் திறந்து கொண்டு “அத்தை…” என்று சத்தமாக அழைத்தபடி வெளியில் செல்லப் போனவனின் கையைப் பிடித்து உள்ளே இழுத்துத் தன் அறைக் கதவைச் சாற்றியவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான் சூர்யா.

அவள் கதவைச் சாற்றிவிட்டுத் திரும்ப, சூர்யா வேண்டுமென்றே வெளியில் செல்லப் போவது போலப் பாவனை செய்தான்.

“ஐயோ, இவனோட இம்சை தாங்க முடியலையே” என்று சலித்துக்கொண்டு கதவுக்கு அருகில் செல்லப் போனவனை வலுக்கட்டாயமாக இழுத்து அவனைப் பால்கனி கதவு வழியாக வெளியே தள்ளிக்கொண்டு சென்றாள்.

அவன் இருக்கும் திடகாத்திரமான உடலுக்கு அவளால் எப்படி இந்த மலையை நகர்த்திக்கொண்டு சென்றிருக்க முடியும்? அவன்தான், ‘போனால் போகட்டும்’ என்று அவளுக்குச் சற்று இசைந்துபோனான்.

பால்கனிக்குத் தள்ளி கதவை மூடப் போனவளின் கையைப் பிடித்தவன், மற்றொரு கையால் அவள் சாத்த இருந்த கதவைப் பிடித்துக்கொண்டு அவளைப் பார்க்க…

நக்ஷத்ரா கெஞ்சும் பார்வையுடன் “ப்ளீஸ், தயவுசெய்து இங்கே இருந்து போங்க. யாராவது வந்துடப் போறாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

அதை கேட்டதும் நக்ஷத்ராவின் இதயமே நின்றுவிடும் போலாகிவிட்டது. அதிர்ச்சியில் கதவைப் பார்த்துக் கொண்டு நக்ஷத்ரா நிற்க… “அதி…” என்று பிரியாவின் குரல் கேட்டது.

“ஐயோ!!! அம்மா வந்துட்டாங்க…” என்று பயந்துபோய் சூர்யாவைப் பார்க்க… அவள் பயந்து நடுங்குவதை ரசித்தவன், உடனே தன் முகத்தை மாற்றிக்கொண்டு,

“அட, நான் ஒரு தடவைதான் கூப்பிட்டேன். அதுக்குள்ள அத்தைக்குக் கேட்டிருச்சா? தள்ளு, நான் போய் கதவைத் திறக்கிறேன்” என்று அவளைத் தாண்டி சூர்யா செல்லப் போக…

அவன் மார்பில் கைவைத்துத் தள்ளி வெளியே நிற்க வைத்தவள், “ப்ளீஸ், தயவுசெய்து போங்க… அம்மா உங்களையும் என்னையும் சேர்த்து வைத்துப் பார்த்தா அவ்வளவுதான்” என்று அவனிடம் கெஞ்சினாள்.

“சரி, உன்னைப் பார்த்தாலும் பாவமாத்தான் இருக்கு. ஆனாலும் என்னை ‘கெட்டவன்னு’ சொல்லிட்டல்ல? அப்போ அதுக்கு ஏதாவது நான் செய்துட்டு போகணுமே” என்று நினைத்தவன், “அப்போ நான் இங்கே இருந்து போகணும்னா ஒரு கண்டிஷன்” என்றான் சூர்யா.

அவளுக்கு இருந்த அவசரத்தில், அவன் இங்கிருந்து வெளியே போனால் சரி என்று நினைத்தவள், “என்னன்னு சொல்லுங்க, சீக்கிரம்” என்று கதவைப் பார்க்க… பிரியா விடாமலே கதவைத் தட்டிக்கொண்டிருந்தாள்.

“எனக்கு எப்போ எல்லாம் தோணுதோ, அப்போ எல்லாம் நான் உனக்குக் கால் பண்ணுவேன். நீ எங்கே இருந்தாலும் நான் சொல்ற இடத்துக்கு என்னை பார்க்க வரணும், சரியா?” என்றான் சூர்யா.

அவன் சொன்னதும் ‘என்ன’, ‘எது’ என்று யோசிக்காமல், “சரி” என்று தலையை ஆட்டினாள் நக்ஷத்ரா.

‘பச்சைக் கிளி இப்போ வலையில் மாட்டிக்கிச்சு…’ என்று நினைத்தவன்,

“சரி, நான் அப்போ கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டுத் திரும்பியவன் அப்படியே நிற்க…

‘இவன் என்ன ஒரு வேலையும் முழுசா செய்ய மாட்டானா? கிளம்பறேன்னு சொன்ன உடனே கிளம்பாம இன்னும் இங்கே நின்னு என் உயிரை வாங்கிட்டு இருக்கானே’ என்று நினைத்துக்கொண்டே ‘இப்போ என்ன?’ என்பதுபோலப் பாவமாக அவனைப் பார்க்க…

அவள் புறம் சட்டென்று திரும்பிய சூர்யா அவள் கையைப் பிடித்துத் தன் அருகில் இழுத்தவன், நக்ஷத்ராவின் இதழில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்துவிட்டு, அங்கிருந்து கீழே குதித்து, காம்பௌண்ட் சுவர் ஏறி எப்படி வந்தானோ அதே வழியில் சென்றான்.

அவன் முத்தம் கொடுத்ததில் அதிர்ச்சியான நக்ஷத்ரா கண்களில் கண்ணீரோடு “கடவுளே, என்னை ஏன் இவன்கிட்டே மாட்டி விடுற? என்னை இவன்கிட்ட இருந்து எப்படியாவது காப்பாத்து” என்று நினைத்தவள், அவன் சென்றுவிட்டான் என்று உறுதிப்படுத்திக்கொண்டு கண்களைத் துடைத்தவள், வேகமாக வந்து தன் அறைக் கதவைத் திறக்க…

பிரியா, நக்ஷத்ராவின் அறைக் கதவைத் தட்டிப் பார்த்துவிட்டு, ‘நக்ஷத்ரா நன்றாகத் தூங்கிவிட்டாள் போல’ என்று செல்லப் போக… நக்ஷத்ரா சரியாகக் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது.

நக்ஷத்ரா கதவைத் திறந்ததும், பிரியா அவள் முகத்தைப் பார்க்க, ஏதோ சரி இல்லை என்று தோன்றியது. “நக்ஷத்ரா, என்னை கூப்பிட்டியா? நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னே?” என்று கேட்டாள் பிரியா.

“இல்லையேம்மா… நான் நீ கதவு தட்டும் சத்தம் கேட்டுதான் கண் முழிச்சேன். நான் கூப்பிடலையே” என்றவள், “ஒருவேளை அண்ணாங்க யாரும் உன்னைக் கூப்பிட்டு இருப்பாங்களோ என்னவோ?” என்றாள் நக்ஷத்ரா.

“இல்லையே, நான் அவங்க ரூமைத் தாண்டிதான் வந்தேன். ரெண்டு பேரும் தூங்குறாங்க போல இருக்கு” என்றாள் பிரியா.

“சரிம்மா, ஏதாவது என்கிட்டே சொல்லணுமா? எனக்குத் தூக்கம் வருது” என்று நக்ஷத்ரா தூக்கம் வருவது போலப் பாவனை செய்ய…

“சரி சரி, ஒண்ணும் இல்லை. நீ என்னைக் கூப்பிட்டதுபோல இருந்துச்சு. அதான் நான் உன் ரூமுக்கு வந்தேன். நீ போய் தூங்கு” என்றவள், நக்ஷத்ரா முகத்தையேப் பார்த்தவள் அங்கிருந்து தன் அறைக்குச் சென்றாள்.

பிரியாவை அனுப்பி வைத்துவிட்டு, நக்ஷத்ரா கதவைச் சாற்றிவிட்டு வந்து மெத்தையில் பொத்தென்று விழுந்தவள், சற்று முன்பு சூர்யா அவளிடம் நடந்துகொண்டது நினைவுக்கு வர…

யாரைத் தன் வாழ்நாளில் திரும்பப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தாளோ, அவனே வம்படியாகத் தன்னை வந்து தொந்தரவு செய்வதை நினைத்து நொந்துபோனவள், அடுத்த முறை அவனைப் பார்க்கையில் தன்னைச் சந்திப்பதை இதோடு நிறுத்திக்கொள்ளச் சொல்ல வேண்டும் என்று நினைத்தபடியே வேறு சில யோசனைகளுடன் தூங்கிப் போனாள்.

நக்ஷத்ராவைப் பார்த்துவிட்டு யோசனையோடு வந்து கட்டிலில் அமர்ந்த பிரியாவைப் பார்த்து குரு அவள் தோளில் கைவைத்துத் திருப்ப…

பிரியாவின் கண்கள் கலங்கி இருந்தது. அதைப் பார்த்த குரு, “ஏய் பிரியா, என்ன ஆச்சு? ஏன் உன் கண்ணு கலங்கி இருக்கு?” என்று பதறினான்.

இத்தனை வருடங்கள் ஆகியும் தான் சிறிது சுணங்கினாலும் பதறும் தன் கணவனைப் போலவே தன் மகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டுமே என்று மனதில் நினைத்தவள்,

“ஏங்க, நம்ம நக்ஷத்ரா ரெண்டு மூணு நாளாகவே சரி இல்லைங்க. எதையோ என் கிட்ட இருந்தே மறைக்கிறா. என்னன்னுதான் எனக்குப் புரியலை” என்றாள் பிரியா கலக்கமாக.

“ஏன் பிரியா, என்ன ஆச்சு அவளுக்கு? எதுவும் உடம்பு சரி இல்லையா? இரு நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்” என்று சொல்லி குரு செல்லப் போக…

அவன் கையைப் பிடித்து நிறுத்திய பிரியா, “ஏங்க, அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அவ நல்லாதான் இருக்கா” என்றாள் பிரியா.

“ஏன்டி… இப்போதான் அவ சரி இல்லையான்னு சொன்ன. அதுக்குள்ள நல்லா இருக்கான்னு சொல்ற” என்றான் குரு புரியாமல்.

“அது ஒண்ணும் இல்லைங்க, நக்ஷத்ராவுக்குக் கல்யாண வயசு வந்திருச்சு. அவ என்ன செய்றா, எது செய்றான்னு நமக்கு முழுசா தெரியறதில்லைங்க. எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க முடியுமா?” என்றவள்,

“குரு, நான் ஒரு விஷயம் உன்கிட்டே சொல்லணும். நீ கோபப்படாம நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையாக் கேக்குறியா?” என்றாள் பிரியா.

“என்னடி, ரூமுக்குள்ள வந்ததுல இருந்து பீடிகை எல்லாம் பலமா இருக்கு?” என்றான் குரு.

“நம்ம நங்கை அக்கா இருக்காங்கல்ல?” என்றாள் பிரியா.

“அம்மா ஊர்ல உன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருக்கவங்கதானே? நாம் உனக்குக் கல்யாணம் ஆன புதுசுல ஊருக்குப் போனப்போ அவங்ககூட நம்ம எல்லாரையும் கவனிச்சுக்கிட்டாங்களே, அவங்கதானே?” என்றான் குரு.

“ஆமாங்க, அவங்களேதான்” என்றாள் பிரியா.

“சரி, இப்போ அவங்களுக்கு என்ன?” என்றான் குரு.

“இல்லைங்க… போன வாரம் கூட நங்கை அக்கா எனக்கு ஃபோன் பண்ணி இருந்தாங்க” என்றாள்.

“சரி, அதுக்கு என்ன இப்போ? எதுவும் சொன்னாங்களா அவங்க?” என்றான் குரு புரியாமல்.

“இல்ல குரு…” என்று சொல்லி அவன் சட்டை பட்டனைப் பிடித்துத் தன் விரலால் விளையாடிக்கொண்டே, “அது வந்து குரு, நங்கை அக்காவோட பையன் முகில் இருக்கான் இல்ல?” என்றாள்.

“அம்மா, அவனுக்கு என்ன இப்போ? அவன் நல்லாப் படிச்சு யூ.எஸ்.ல செட்டில் ஆகிட்டான். அவனுக்கு என்ன இப்போ?” என்றான் குரு.

தன் விரலைப் பட்டனில் இருந்து அப்படியே மேலே உயர்த்தி அவன் மார்பில் இருந்த முடியில் தன் விரலைப் படரவிட்டவள், “அது ஒண்ணும் இல்லை குரு… நங்கை அக்காவுடைய பையன் முகிலுக்கு நம்ம பொண்ணு நக்ஷத்ராவை கல்யாணம் பண்ணித் தரச் சொல்லி கேக்குறாங்க. நான் உன்கிட்டே கேட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன். பேசாம நம்ம பொண்ணை முகிலுக்கே கல்யாணம் பண்ணி வெச்சுட்டா என்ன?” என்று கேட்டாள் பிரியா.

அவன் மார்பில் கோலம் வரைவதை நிறுத்தாமல் பிரியா குருவைப் பார்க்க… “என்கிட்டே இப்படி வந்து கேட்டே எல்லா காரியத்தையும் நீ சாதிச்சிடுற. நான் ‘வேண்டாம்’னு சொன்னா மட்டும் நீ விடவா போறே? உன் இஷ்டம்தான் என் இஷ்டமும்” என்ற குரு, “எதுக்கும் நக்ஷத்ராகிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்கோ” என்றான்.

“சரிங்க, அப்போ காலையில் எழுந்ததும் முதல் வேலையா நம்ம பசங்களைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லி, எல்லாரும் என்ன நினைக்கிறாங்கன்னு கேட்டுடறேன்” என்றாள் பிரியா.

“சரி, உன் இஷ்டம்தான்” என்றான் குரு.

“சரிங்க” என்று சொல்லி அவன் கன்னத்தில் சந்தோஷத்தில் பிரியா முத்தமிட்டுவிட்டுப் படுக்கப் போக…

“ஏய்… எங்கேடி… தூங்கப் போறே? சும்மா இருந்தவனை என்னை நோண்டிவிட்டுட்டு இப்போ எதுவும் தெரியாதவ போல போய் தூங்கலாம்னு பாக்கிறியா?” என்றவன், பிரியாவை இழுத்துத் தன் மேல் போட்டுக் கொண்டான்.

“அச்சோ… குரு, என்ன இது? பசங்க எல்லாம் இவ்வளவு பெருசான பிறகு இதெல்லாம் நமக்கு முக்கியமா?” என்றாள் வெட்கப்பட்டுக்கொண்டே.

“பசங்க பெருசானா என்ன? இல்ல நமக்குப் பேரன் பேத்தி பிறந்தா என்ன பிரியா? உனக்கும் எனக்கும் காதல் இருக்கிற வரைக்கும், நீயும் நானும் நல்ல ஆரோக்கியத்தோட இருக்கிற வரைக்கும், நமக்கு எப்போ தோணுதோ அப்போ சந்தோஷமா இருக்கறதுல எந்தத் தப்பும் இல்லைடி என் பட்டுக்குட்டி” என்று அவள் மூக்கைக் கிள்ளியவன், ஒரு நொடியும் தாமதிக்காது படுக்கை விளக்கின் சுவிட்சை அணைத்துவிட்டு அவளை மெத்தையில் தள்ளி அவள் மேல் படர்ந்தான்.

காலை எழுந்து, வினு படுக்கை காஃபி குடித்துவிட்டு, தனது ஜிம்மில் உடற்பயிற்சி முடித்துவிட்டுப் புத்துணர்ச்சி அடைந்து, தன்னுடைய ஸ்டுடியோவுக்குச் செல்லக் கீழே வர…

உணவு மேஜையில் அமர்ந்து மீனு, செல்வி, ஷிரா மூவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க…

“ஹாய் பியூட்டீஸ்…” என்று அழைத்தவன், அவர்களுடன் வந்து அமர்ந்து ஒரு தட்டை எடுத்து வைத்தவன், “இன்னிக்கு என்ன ஸ்பெஷல் மாம்?” என்றான்.

“உனக்குப் பிடிச்ச ஐட்டம்தான் வினு. பழைய சாப்பாடு, மோர் மிளகாய் அண்ட் அவிச்ச மீன் செய்து வெச்சிருக்கேன்” என்றாள் மீனு.

“ஓ வாவ் மாம்… சூப்பர். ஒரு வாரம் ஆகிடுச்சு இதை எல்லாம் நான் சாப்பிட்டு” என்றான் வினு.

“ஒரு வாரம்தானே வினு சாப்பிடலை? அப்படியென்ன பிடிச்ச இந்த காம்பினேஷனை நாங்க சொல்லும்போது எல்லாம் சாப்பிடாம, மாடலிங் வந்த பிறகு இதை நிறைய எடுத்துக்கிற உன் ஃபுட் ஸ்டைலே கொஞ்சம் கொஞ்சமா மாறிடுச்சு” என்றாள் மீனு.

“அதுக்கு எல்லாம் ஒரு காரணம் இருக்கு மாம். சீக்கிரம் கொடுங்க, எனக்கு செம பசியா இருக்கு” என்றான் வினு.

மீனு அவன் சாப்பிடும் உணவுகளை அவனுக்குப் பரிமாற…

“ஏண்டா வினு, உன்னை மாடலா இருக்கவங்க எல்லாம் நல்லா பீட்ஸா, பர்கர், இதுன்னு நிறைய சாப்பிடுவாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா நீ என்னடா இது காட்டுவாசிகள் கிடைச்சதை சாப்பிடுற மாதிரி காலையில பழைய சாப்பாடு, மதிய சாப்பாடு, அப்புறம் ஏழு மணிக்கு மேல எதுவும் சாப்பிடுறதில்லை” என்றார் செல்வி.

“பாட்டி, நீ சொல்ற ஃபுட் எல்லாம் ஜங்க் ஐட்டம்ஸ். அது எல்லாம் சாப்பிட்டா இப்போ வேணா நல்லா இருக்க மாதிரி தோணலாம். ஆனால் அது எல்லாம் நான் உங்களை மாதிரி வயசான பிறகு என்னோட லைஃபே மாத்திரும். எனக்கும் டயாபடீஸ், அது இதுன்னு வந்து என் உடம்பையும் கெடுத்துடும். ஆனா நான் சாப்பிடுற இந்த மாதிரி ஆரோக்கியமான சாப்பாடு எல்லாம் தான் என்னை உங்களை மாதிரி ஆன பிறகும் இளமையா வெச்சுக்க உதவும் பாட்டி” என்றவன் சாப்பிட ஆரம்பித்தான்.

“நீ சொல்றதும் சரிதான் வினு. அதனாலதான் நாங்களும் இப்போ எல்லாம் நீ சாப்பிடுற மாதிரி சத்துள்ள உணவையே சாப்பிடுறோம். முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனால் இப்போ பழகிருச்சு. உடம்புக்கு எந்தத் தொந்தரவும் இப்போ அதிகமா வராது இல்ல?” என்றாள் ஷிரா.

அனைவரும் பேசிச் சாப்பிட்டுக்கொண்டிருக்க…

வாசலில் இருந்தே “மீனு… மீனு…” என்று குரல் கேட்க…

சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் வாசலைத் திரும்பிப் பார்த்து, அது வாமினியின் குரல்தான் என்று புரிந்துகொண்டு, “வந்துட்டடா உன்னோட செல்ல அத்தை” என்று மீனு எழுந்து வாசலுக்குச் செல்ல… ஆவலுடன் செல்வியும், ஷிராவும் சென்றனர்.

அவசரமாகச் சாப்பிட்டு முடித்த வினு, வாமினியைக் காண வேகமாக எழுந்து ஹாலுக்கு வந்தவன், அங்கே வாமினியுடன் அவள் மகள் ஜியா அமர்ந்து இருப்பதைப் பார்த்ததும், சிரித்த முகமாக வந்தவனின் முகம் ஜியாவைப் பார்த்ததும் அப்படியே மாறி, முகம் இறுகி விட்டது.

தன் நடையின் வேகத்தை அப்படியே குறைத்துக்கொண்டவன், ஜியாவைத் திரும்பியும் பார்க்காமல் நேராக வாமினியிடம் வந்தவன், “என்ன டார்லிங், இப்போதான் வீட்டுக்கு வர கண்ணு தெரிஞ்சுதா?” என்றான்.

“என்னடா வினு பண்றது? இவளுக்கு இந்த வருஷம் தான் பைனல் இயர். அதனால ஜியா கூடவே இருக்க வேண்டியதா போயிடுச்சு” என்று தன் அருகில் அமர்ந்து இருந்த ஜியாவைப் பார்த்துச் சொன்னாள் வாமினி.

ஜியாவைப் பற்றிப் பேசியதும், அதற்கு மேல் வினு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அவன் தன் பெயரைச் சொன்னதும் அமைதியானதைப் பார்த்ததும், ‘இங்கே வருகிறேன்’ என்று வாமினி சொன்னதும், படிப்பதை எல்லாம் விட்டுவிட்டு இங்கே வந்தது தவறோ’ என்று கூட அவளுக்குத் தோன்றியது.

வாமினி அவள் பாட்டுக்கு பேச ஆரம்பித்தாள். “நான் அப்போவே சொன்னேன் மீனு, இவ கிட்ட இந்த டாக்டர் படிப்பு நமக்கு வேணாம். ரொம்ப ரிஸ்க் எடுத்துப் படிக்கணும். நீ வேற எதுவும் எடுத்துப் படின்னு நான் சொல்றதை இவளும் இவ அப்பாவும் என்னைக்குக் கேட்டு இருக்காங்க? இவளைவிட ரெண்டு வயசு சின்னவ நம்ம யாரா, அவளே படிப்பை முடிச்சிட்டு வந்துட்டா. இவ இன்னும் காலேஜ் போயிட்டு இருக்கா.

இவ என்னைக்குப் படிப்பை முடிக்கிறது? இவளுக்கு எப்போ கல்யாணம் செய்றதுன்னு நான் காத்துட்டு இருக்கேன். ஆனா இவ என்னடான்னா எனக்குக் கல்யாணமே வேணாம்னு பிடிவாதமா இருக்கா.

ஏன் கல்யாணம் வேணாம்னு காரணம் கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறா” என்று புலம்ப…

மீனு, வாமினியின் கையைப் பிடித்துக்கொண்டு, “ஏய் வாமினி, நீ ஏன் இப்படி எல்லாம் பேசுறது? நீயே உன் வயசுல ரெண்டு டிகிரி பண்ணினே, உனக்கு மறந்து போயிடுச்சா என்ன? ஜியாவுக்கு என்ன பண்ண பிடிக்குதோ, அதை செய்யட்டும். நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தாத. அவளாவே சரி ஆகி வரட்டும்” என்றாள் மீனு.

ஜியாவைப் பற்றியே அனைவரும் பேசிக்கொண்டிருக்க… வினுவுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை.

அந்த இடத்தைவிட்டு வேகமாக எழுந்தவன், “மாம், நான் கிளம்புறேன். எனக்கு ஒரு ஷூட் இருக்கு” என்றவன், வாமினியிடம் திரும்பி, “டார்லிங், பை… டைம் ஆச்சு” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

தன்னை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டானா என்று அவன் பார்வைக்காக ஏங்கித் தவித்தபடி வினுவையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஜியா.

தன் ஃபோனை எடுத்து காதில் வைத்து யாருடனோ பாவனை செய்வது போலப் பேசியவன், “உள்ளே டவர் இல்லை. வெளியே சென்று பேசிவிட்டு வருவதாக” கூறி வேகமாக வெளியே வந்தாள் ஜியா.

வெளியே வந்த வினு தன் காரில் ஏறப் போக… அவனிடம் வேகமாக ஓடிவந்தவள், “ஒரு நிமிஷம் உங்ககிட்டே பேசணும்” என்றாள்.

அவளைப் பார்க்காமலேயே, “எனக்கு உன்கிட்டே பேச எதுவும் இல்லை” என்றான் வினு.

“நான் தான் உங்ககிட்டே பேசணும்னு சொன்னேன் வினு” என்றாள்.

“என் பெயரைச் சொல்லக்கூட உனக்கு அருகதை இல்லை. நீ எந்த முகத்தை வைத்துக்கொண்டு என்னிடம் பேச வந்தாய்? நீ எனக்குச் செய்தது எல்லாம் போதாதா? என்கிட்ட எதுக்கு தேவை இல்லாம வழிஞ்சு வந்து பேசுற?… முடிந்தது முடிந்தது தான். அதைத் திரும்ப ஒட்ட வைக்க நினைக்காதே” என்று வார்த்தைகளால் அவளைக் காயம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் வினு.

தன்னிடம் காதலை வினு சொன்னபோதே அதை ஏற்றுக்கொள்லாமல் விட்டது எவ்வளவு தவறாகப் போய்விட்டது என்று இப்போது ஜியா மிகவும் வருந்தினாள்.

“வினு சார்” சென்ற திசையிலேயே பார்த்துக் கொண்டு சிலை போல நின்று இருந்தவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அப்போது அவள் தோளில் ஒரு கை அழுத்தம் கொடுக்க… தன் கண்ணீரை அவசரமாகத் துடைத்துக்கொண்டு ஜியா திரும்பிப் பார்க்க, அங்கே யாரா நின்று இருந்தாள்.

அவளுக்கு வினுவுக்கும், ஜியாவிற்கும் இடையில் நடந்த விஷயங்கள் எல்லாம் தெரியும்.

யாராவைப் பார்த்ததும் ஜியா அழுகையோடு அவளை அணைத்துக்கொண்டு கண்ணீர் வடிக்க…

அவள் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்து ஜியாவுக்கு ஆறுதல் சொன்னவள், அவளைத் தன்னிடமிருந்து பிரித்து, கண்ணீரைத் துடைத்துவிட்ட யாரா, “கொஞ்ச நாள் பொறுமையா இரு. அவனுக்கு உன்னோட மனசு புரியும்” என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

பெரியவர்கள் எல்லாம் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க… யாராவும், ஜியாவும் தங்கள் அறைக்குச் சென்றார்கள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured