Home Uncategorizedஅஸ்க்.. லஸ்கா.. காதல் 36

அஸ்க்.. லஸ்கா.. காதல் 36

by Layas Tamil Novel
217 views

EPISODE 36

தீபாவை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு வந்த தமிழ், “டார்லிங், எனக்கு ரொம்பப் பசிக்குது… சாப்பிட எதுவும் செய்து எடுத்துட்டு வரச் சொல்லு” என்று அவளை அணைத்துக் கொண்டு அவளிடம் கொஞ்சுவது போல நடித்தபடி கேட்டான்.

“ஏன் டார்லிங், வேலைக்காரியை செய்து கொடுக்க சொல்ற… நான் எதுக்கு இருக்கேன் டார்லிங்? உனக்கு என்ன வேணும்னு சொல்லு, நானே என் கையால் செய்து கொடுக்கிறேன்” என்றாள் தீபா.

தமிழ் எதிர்பார்த்ததும் அதேதான் என்பதால், “எனக்கு என் வீட்டில் இருக்கவே பிடிக்கலை பேபி… நான் ரெண்டு நாள் உன்கூடத்தான் டைம் ஸ்பெண்ட் பண்ண போறேன்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு சந்தோஷமான தீபா, “டார்லிங், நிஜமாகவே சொல்றேன்… நீ என்கூட இங்கே இருந்து எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா?

லாஸ்ட் டைம் வந்து இருந்த அப்போ கூட நீ என்கூட ஒண்ணா இருக்கும்போது என்னை பாதியிலேயே விட்டுட்டு போயிட்டே… நீ இல்லாம எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா டார்லிங்…

என்னோட ஃபீலிங்ஸ்ஸை என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை.. அந்த நைட் முழுக்க நீ என் பக்கத்தில் இல்லாமல் நான் எப்படித் தவிச்சுப் போயிருந்தேன் தெரியுமா?” என்றாள் தீபா.

தமிழ்வும் அன்று நடந்ததை நினைத்தவன், “பாவம், என்னை நம்பி எனக்காக இருந்தவளை ஏங்க வைத்துவிட்டு நான் பாட்டிற்கு அன்று சென்றுவிட்டேன்.

அன்று நான் சாப்பிட்ட உணவை இவளும் தானே சாப்பிட்டாள்? அதுவும் என்னை விட அதிகமாக.. நானே என்னை கடுப்பாக்கிக் கொள்ள அவ்வளவு சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். இவள் பாவம் என்ன செய்திருப்பாளோ?” என்று தீபாவின் மீது பரிதாபம் கொண்டான்.

ஆனால் அன்று இரவு முழுவதும் தீபா நிர்மல்லுடன் கூத்தடித்துக் கொண்டு இருந்தது அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

இந்த விஷயம் தமிழுக்குத் தெரிய வரும்போது அவன் நிலை என்ன ஆகுமோ, அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

தமிழ் அவள் பேசியதைக் கேட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்த தீபாவுக்கு, “ஏன் இவன் இப்படி அமைதியாக இருக்கிறான்?” என்று யோசித்தவள்.

தமிழின் தோளை தொட்டு அவனை அழைத்தவள், “டார்லிங், ஏன் ஏதோ யோசனையிலேயே இருக்க… நானும் உன்னை அந்த இலக்கியாவோடு பார்த்ததிலிருந்து உன் முகமே சரி இல்லையே” என்றாள் தீபா.

அவள் இலக்கியா என்று சொன்னதும் தமிழ் திரும்பி தீபாவைப் பார்த்து, “நான் உன்னை அந்த பார்ட்டிக்கு இன்வைட் பண்ணவே இல்லையே, நீ எப்படி வந்தே தீபா?” என்றான் தமிழ்.

அவன் திடீரென்று இப்படி கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவள், பின் தமிழிடம்.

“டார்லிங், உண்மையைச் சொல்லணும்னா எனக்கு அங்கே இன்னிக்கு உன்னோட பார்ட்டி நடக்குதுன்னு தெரியாது.

என்னோட ஃபிரெண்ட்ஸும் நானும் வெளியே ஷாப்பிங் போய்ட்டு அந்த வழியாகத்தான் போனோம்.

அங்கே உன்னோட நேம் போட்டு ரொம்ப கிராண்ட்டாக ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்துச்சு.

அதை பார்த்ததும் என்னோட டார்லிங்கைப் பார்த்து ரெண்டு மூணு நாள் ஆச்சே.. அப்படியே உன்னைப் பார்க்கலாம்னு சொட்டு என்னோட ஃபிரெண்ட்ஸை அனுப்பிட்டு நான் மட்டும் உன்னைப் பார்க்கப் பின் வழியா வந்தேன்” என்றாள்.

“ஓ… அப்படியா?” என்றவன். “ஆமா, நீ எப்படி இலக்கியா கூட பேசினே.. உனக்கு எப்படி அவளைத் தெரியும்?” என்று சரியாகக் கிடுக்கை பிடி போட்டான் தமிழ்.

“அது.. அது… வந்து தமிழ்…” என்று தீபா தடுமாற… அவளைக் கோவமாகப் பார்த்த தமிழ், “இப்போ நீ என்னை வேவு பார்க்கிறாயா?” என்றவன் கோபமாக அங்கிருந்து எழுந்து செல்லப் போக..

“டார்லிங்.. ஏன்னா இது? ஏன் இவ்வளவு கோவப்படுற… ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளு” என்று அவனைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டு தீபா கூற…

தமிழ் கோபம் குறையாமல் அப்படியே நிற்க.. அவனைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டு இருந்தவள் தமிழின் முன்னால் வந்து அவனைப் பார்க்க..

தமிழின் கோபம் கலந்த முகமும், சிவந்த விழிகளும் அவளை அச்சுறுத்தியது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “டார்லிங், நான் உன்னைப் பார்க்கப் பின் வாசல் வழியாத்தான் பார்ட்டி நடந்த இடத்துக்கு வந்தேன்.

அங்கே வந்து பார்ட்டிக்குள்ளே உன்னை நான் தேடிட்டு வந்தேன். அப்போதான் நீ அந்தப் பொண்ணை எல்லார் கிட்டேயும் நீ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லிட்டு இருந்ததை நான் கேட்டேன்.

உன் பக்கத்துல நின்னுட்டு இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தேன், அவங்க என்னை விட ரொம்ப அழகா இருந்தாங்க.

இவ்வளவு நாளும் நான் தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அந்தப் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னதைக் கேட்டதும் எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு.

அங்கே இருக்கப் பிடிக்காம தான் நான் வெளியே வந்து அந்தக் கார்டன்ல இருந்த பெஞ்சில் உக்கார்ந்து இருந்தேன்.

ஆனா அந்தப் பொண்ணு கொஞ்ச நேரத்துல என் பக்கத்துல வந்து உக்கார்ந்தாள்.

நான் என் பக்கத்துல வந்து உக்கார்ந்த அந்தப் பொண்ணைப் பார்த்துச் சிநேகமா ஒரு சிரிப்பு தான் சிரிச்சேன்.

உடனே அந்தப் பொண்ணு, ‘ஏய்.. யார் நீ… இங்கே உக்கார்ந்து இருக்க… இங்கே எல்லாம் எவ்வளவு பெரிய வி.ஐ.பி.க்கள் மட்டும் தான் உக்காரனும்.

உன்னைப் பார்த்தா அந்த மாதிரி தெரியலை முதல்ல இங்கே இருந்து போ…’ன்னு சொல்லி என்னை கண்டபடி திட்டினாள்.

நானும் முதல்ல அந்தப் பொண்ணு இலக்கியா சொன்னது சரிதான் எனக்கும் தமிழுக்கும் ஏணி வெச்சா கூட எட்டாது. நான் அங்கே இருக்க வேண்டாம்னு நான் அங்கே இருந்து கிளம்பப் போன அப்போதான் நீ அங்கே வந்தே தமிழ்.

உன்னைப் பார்த்ததும் எனக்கு எங்கே இருந்து ஒரு தைரியம் வந்ததுன்னு தெரியலை. ஆனா உன்னைப் பார்த்ததும் அந்த இலக்கியா முன்னாடி உன்னை விட்டுக் கொடுக்கக் கூடாதுனு மட்டும் எனக்குத் தோணுச்சு.

அதான் அந்தப் பொண்ணு என்னை பேசினதும், அவ கிட்டே, ‘என் தமிழ் என்னை பார்த்தா அவன் பக்கத்துல எப்பேர்ப்பட்ட இலக்கியாவும் அவன் முன்னாள் இருந்தாலும். அவன் என்கூட தான் வருவான்’னு சொன்னே.

நான் சொன்ன மாதிரியேதான் நீயும் நடந்துகிட்டே… நாம ரெண்டு பேரும் ஒன்னா வந்ததைப் பார்த்துட்டு அவ கோபப்பட்டாள். ஆனா நீதான் என்னை பார்த்ததும் அந்தப் பொண்ணைக் கவனிக்காம வந்துட்டே தமிழ்.

அந்தப் பொண்ணு உன்னைப் பத்தி என்ன நினைச்சிருக்கும்னு இப்போ நினைச்சாலும் எனக்குக் கவலையா இருக்கு.

நான் அங்கே வந்து இருக்கவே கூடாது.. நான் அங்கே வந்ததுனால தான் அந்தப் பொண்ணு அப்படி கோபமா என்கிட்டே நடந்துகிச்சு.

என்னால நீ கல்யாணம் பண்ணிக்கப் போற அந்தப் பொண்ணு எதுவும் உன்னை வேண்டாம்னு இந்தக் கல்யாணத்தை நிறுத்திவிடப் போகிறாள்? நான் வேண்டுமானால் அந்தப் பொண்ணு கிட்டே போய் சாரி கேட்கட்டுமா?” என்று தமிழிடம் மிகவும் நல்லவள் போல நடித்தாள்.

தீபா சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தமிழ், “இலக்கியாவா அப்படி எல்லாம் தீபாவிடம் நடந்து கொண்டாள்?

அவளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே” என்று யோசனையுடன் நின்றிருந்தவன்.

தீபா சொன்னதைக் கேட்டு, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் தீபா.. அதை நான் பார்த்துக்கிறேன்.

அவள் இனிமேல் உன்னைப் பார்த்தால் அந்த மாதிரி நடந்துக்காம இருக்கச் சொல்லி நான் அவகிட்ட சொல்றேன்.

இனிமேல் எனக்குத் தெரியாம நான் இருக்கிற பக்கம் நீ வராத, அப்புறம் உனக்குத் தான் ரொம்பப் பிரச்சினையாகும், புரிஞ்சுக்கோ” என்று அதே சமயம் அவளை எச்சரிக்கவும் மறக்கவில்லை தமிழ்.

உள்ளுக்குள் அவனைத் திட்டிய தீபா, “சரி தமிழ், நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் போய் உனக்குச் சாப்பிட எதுவும் செய்து எடுத்துட்டு வரேன்” என்று சொன்னவள்.

“நீ சொன்னது நிஜம் தானே? இன்னும் ரெண்டு நாள் என் கூட தானே இருக்கப் போற?” என்றாள் தீபா மிகவும் ஆசையாக.

அவள் இவ்வளவு நேரம் இலக்கியாவைப் பற்றிப் பேசியதும், தான் மிகவும் கஷ்டப்பட்டதாக தமிழிடம் சொன்னதை எல்லாம் கேட்ட தமிழுக்கு தீபாவின் மேல் இரக்கம் வர, “நிஜமா நான் இங்கே இரண்டு நாள் இருக்கத்தான் போறேன்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்ட தீபா மிகவும் சந்தோஷமாக துள்ளிக்குதித்தவள், தமிழின் இதழில் முத்தம் வைத்துவிட்டு கீழே ஓடினாள்.

தீபா செல்லும்வரை அமைதியாக இருந்த தமிழ் உடனே தன் மொபைலை எடுத்து தீபாவின் வீட்டில் வேலை செய்யும் தலைமை சமையல்காரப் பெண்ணிடம் போன் செய்து.

தீபா சமைக்கும் பொழுது அவள் என்னென்ன செய்கிறாள், சமைக்கும் பொழுது என்ன பொருட்களை உபயோகித்து சமைக்கிறாள் என்று ஒன்று விடாமல் அவளுக்குத் தெரியாமல் வீடியோவாக எடுக்கச் சொல்லி அவனுக்கு அனுப்பச் சொல்லி இருந்தான்.

அந்தப் பெண் தீபா அவ மேலிருந்து சமையலறைக்குள் வருவதற்குள் அவளுடைய ஃபோனில் வீடியோவை ஆன் செய்து, தீபாவுக்குத் தெரியாமல் சமையலறையில் ஒரு ஓரமாக அவளைப் படம் எடுக்கும்படி வைத்துவிட்டு வந்து தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்க…

அப்போது சரியாக தீபா சமையல் கட்டுக்குள் வந்தவள், “ஏய் என்னங்கடி எல்லாரும் பண்ணிட்டு இருக்கீங்க? வேலை செய்யாம அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்களா?” என்று வந்ததும் தன் அதிகாரத்தை அவர்களிடம் காட்ட ஆரம்பித்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, நாங்க சமையல் செய்யறதைத்தான் எடுத்து வெச்சிட்டு இருந்தோம். ஐயா வேற வந்திருக்காரு. உங்க கிட்ட கேட்டு எதுவும் சமைக்கணுமானு கேட்கத்தான் உங்களைப் பார்க்க வரலாமா என்று பேசிக்கொண்டு இருந்தோம்” என்றால் அந்தப் பெண்.

“நான் சொல்லாமல் என்னோட ரூம் பக்கம் இங்கே இருக்கிற யாருமே வரக்கூடாது, சரியா.

நான் வந்து சொல்ற வரைக்கும் நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க போதும்” என்றவள்.

தமிழுக்குப் பிடித்த உணவுகளின் பெயராகச் சொல்லி, “இதையெல்லாம் சீக்கிரமா செய்து கொடுங்க” என்றவள் அங்கிருந்த சமையல் மேடையின் மீது ஏறி அமர்ந்து, அருகில் இருந்த கேரட்டை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே அவர்களிடம் வேலையை ஏவ ஆரம்பித்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured