Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 15

உன் ரகசிய ரசிகை நான் 15

by Layas Tamil Novel
782 views

EPISODE 15

காலை எழுந்தவுடன் முதலில் துர்காவும் பேச வேண்டும் என்று நினைத்தவன் அரைபோதையில் வந்து படுத்த ஆதி உறங்கி விட்டான்.

காலையில் கண்விழித்த ஆதி எழுந்ததும் இரவு அவன் யோசித்தது நினைவில் வர, இன்று எப்படியாவது துர்காவிடம் இதைப் பற்றி பேசிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அழுகையில் துர்கா கையில் காபியுடன் சிரித்த முகத்தோடு அவனிடம் வந்தாள்.

தான் இரவு போதையில் இவர்கள் வீட்டிற்கு வந்தது ஆதிக்கு நினைவில் வர, அவள் முகத்தை பார்க்க தயங்கியவன் கட்டிலில் அமர்ந்திருக்க, அவன் அருகில் வந்த துர்கா அவனிடம் காபியை கொடுத்துவிட்டு “தல ரொம்ப வலிக்கும்னு நினைக்கிறேன், இந்தக் காபியைக் குடி” என்றவள் திரும்பி நடந்து செல்ல, தன்னிடம் ஏன் என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் சிரித்த முகத்தோடு தனக்கு காபி கொடுத்துச் சென்ற துர்கா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ஆதி, அவளிடம் பேச மறந்து அப்படியே அமர்ந்து இருந்தான்.

காபி குடித்துவிட்டுச் சென்று ரிப்ரஸ் ஆகி வந்த ஆதி, அவர்கள் அறையை விட்டு வெளியே வரவும், கதவைத் திறந்து கொண்டு துர்கா உள்ளே வரவும் சரியாக இருக்க, இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டனர்.

மோதிய வேகத்தில் துர்கா நிலை தடுமாறி விழப்போக, அவளை இடுப்போடு சேர்த்து இழுத்துப் பிடித்து தன்னிடம் நெருக்கி நிறுத்தி வைத்தான் ஆதி.

மிக அருகில் துர்காவை பார்க்கையில், அவளின் வாசம் அவன் நாசியில் ஏற, உள்ளுக்குள் ஏதோ செய்தது ஆதிக்கு. கண்ணிமைக்காமல் துர்காவின் முகத்தையே பார்த்தவன், துர்காவின் கண்கள் பட படவென பட்டாம்பூச்சி போல் துடிப்பதைப் பார்க்க, ஏனோ அந்தக் கண்ணுக்குள் காலம் பூராவும் சிக்குண்டு இருக்க வேண்டும் என்பது போல ஆதி மனதில் தோன்றியது.

கண்களில் இருந்து அப்படியே பார்வை கீழே இறங்கியவன், அவள் உதட்டை பார்க்கவும், அன்று அவன் வீட்டில் பெட்ரூமில் துர்கா உதட்டில் எதேச்சையாக முத்தம் வைத்தது நினைவில் வர, அந்த இதழைப் பற்றி சுவைக்க வேண்டும் என்று ஆதிக்கு தோன்ற, அந்த நினைவைக் கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவன், தன் கையில் இருந்து அவளை விலக்கி நிற்க வைத்தவன், தள்ளி நின்று “என்ன” என்பது போல அவளைப் பார்த்தான்.

“சாப்பிட அம்மா கூட்டிட்டு வரச் சொன்னாங்க, அதனாலதான் வந்தேன் ஆதி. சாரி, அவசரத்துல நீ வெளிய வர்றதப் பார்க்காம உன் மேல மோதிட்டேன்” என்று அவள் பாவமாக கூற, “சரி பரவாயில்லை துர்கா” என்று கூறியவன் சிறிது தயங்கியவன் பின் “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் துர்கா” என்றான்.

அவன் அவளிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்த துர்கா “என்ன ஆதி, சொல்லு” என்றாள். அவளை நேருக்கு நேராக மறுபடியும் பார்க்க, அவளின் பார்வையை தவிர்க்க முடியாமல் அப்படியே நின்றவன், தான் சொல்ல வந்ததை மறந்து அவளை பார்த்துக் கொண்டிருக்க, துர்கா அவன் தன்னை பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக நிற்பதைப் பார்த்தவள், அவளாகவே யோசித்து “ஆதி…” என்று அழைத்தாள்.

அவள் அழைப்பில் நினைவு வர, அவளைப் பார்த்தவன் ஏதோ கூற வர, “ஆதி, நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு தெரியும் ஆதி. நானே சொல்லட்டுமா நீ என்ன நினைக்கிறாய்?” என்று துர்கா கேட்க.

‘நான் மனதில் நினைத்தது இவளுக்கு எப்படி தெரியும்? ஒருவேளை நான் நினைத்ததைதான் இவளும் நினைத்துக் கொண்டிருக்கிறாளா? இவளுக்கும் என்னோடு இருக்க விருப்பம் இல்லையா? என்னைப் போலவே பிரிந்து செல்ல நினைக்கிறார்களா?’ இப்படி ஒரு எண்ணம் என்னைப் போலவே அவளுக்கும் மனதில் இருந்தால் இந்த வேலை சுலபமாக முடிந்துவிடும் என்று உள்ளுக்குள் கணக்குப் போட்டவன், “சொல்லு துர்கா” என்றான் ஆதி.

“அது வந்து, அத்தையும் மாமாவும் உன்கிட்ட பத்து நாள் கழிச்சுதான் ஆபீஸ் போகணும்னு சொல்லி இருந்தாங்களே. உன்னால தினமும் ஆபீஸ் விஷயமும் ஆபீஸ் வேலையும் பார்க்காம இருக்க முடியாதுன்னு எனக்கு நல்லா தெரியும் ஆதி. என்னைக் கல்யாணம் பண்ணிட்ட அப்படிங்கறதுக்காக நீ என் கூட இங்க இருக்கணும்னு அவசியம் இல்ல. இந்தப் பத்து நாள் ஒண்ணும் அவ்வளவு பெரிய மாற்றத்தை நம்மளுக்கு கொண்டுவரப் போறது இல்ல. நீ ஆபீஸ் கிளம்பறதா இருந்தா கிளம்பு ஆதி. நானும் உன் கூட ஆபீசுக்கு வரட்டுமா? நானும் வீட்ல சும்மாதான் இருக்கப் போறேன்” என்று தயங்கிக்கொண்டே அவள் வார்த்தைகளை நிறுத்தி நிறுத்தி மெதுவாக ஆதியிடம் கேட்க.

ஆதி நினைத்தது போல துர்கா கூறாமல் ஆபீஸ் வேலை பற்றி கூறவும், ஆதிக்கு இதுவும் அவன் நினைத்ததில் ஒன்றுதான் என்று நினைத்தவன் “ம்ம்ம்… சரி துர்கா. நானும் உன்கிட்ட இதைத்தான் சொல்லணும்னு நினைச்சேன். அப்போ நீயும் என் கூட ஆபீசுக்கு வரியா?” என்று கேட்டவன், அவள் வருவாள் என்று தெரிந்தும் அவள் பதிலுக்காக காத்திருக்க, “5 மினிட்ஸ் ஆதி, நான் ரெடி ஆகி வந்துடறேன்” என்று அவனை கீழே அனுப்பி விட்டு வேகமாகச் சென்று ஆபீசுக்கு செல்லும் உடையை அணிந்து கொண்டு நேராக கீழே வந்தாள்.

அதுவரை ஆதியிடம் பேசிக் கொண்டிருந்த துர்கா, அப்பா துர்கா அப்படி இருந்தும் இறங்கி வர, அவளுடைய சத்தம் கேட்டு திரும்பியவர் அவளைப் பார்த்து “என்னம்மா, ஆபீஸ் போற மாதிரி கிளம்பி இருக்கே?” என்று கேட்டார்.

அவர் அப்படி கேட்டதும் துர்காவுக்கு என்ன கூறுவது என்று புரியாமல் நிற்க, சட்டென்று ஆதி “அது ஒண்ணுமில்ல மாமா, இன்னைக்கு ஆபீஸ்ல ஒரு இம்பார்ட்டண்ட் மீட்டிங் இருக்கு. அந்த டீடெயில் எல்லாம் துர்காவுக்கு மட்டும் தான் தெரியும். அதனாலதான் நான் ஆபீஸ் போறப்ப அவளையும் என்கூட வர சொல்லி இருந்தேன். நாங்க ரெண்டு பேரும் ஆபீஸ் கிளம்பி போகணும்னுதான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்” என்றான்.

“என்ன மாப்பிள்ளை, நேத்துதான் வந்தீங்க. அதுக்குள்ள ஆபீஸ் போகாட்டி என்ன? இன்னும் ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு அப்புறம் போலாமே” என்றார் துர்காவின் அப்பா.

“அப்பா, இது ரொம்ப நாள் முன்னாடி ஃபிக்ஸ் பண்ண மீட்டிங் பா. இதை தள்ளி போடுறது கொஞ்சம் சிரமம். அதனாலதான் நாங்க இந்த மீட்டிங்க கண்டிப்பா போய் அட்டென்ட் பண்ணனும்னுதான் நாங்க ரெண்டு பேருமே புறப்படறோம். இல்லைன்னா விக்கி, கதிர் யாரோ ஒருத்தரை இந்த மீட்டிங் அட்டென்ட் பண்ண சொல்லி இருப்போம். இதை கண்டிப்பா இவர்தான் அட்டென்ட் பண்ணி ஆகணும்” என்றவள் “நாங்க சீக்கிரம் வந்துடுவோம் பா” என்றால் துர்கா.

“சரிங்க மாப்பிள்ளை, சாப்பிட்டுட்டு ரெண்டு பேரும் கிளம்புங்க. போயிட்டு நேரத்தோடு வீட்டுக்கு வந்துருங்க. என்ன புதுப் பொண்ணு கட்டிட்டு துர்கா ரொம்ப நேரம் வெளியே இருக்கக் கூடாது” என்று கூறியவர், தன் மனைவி அழைத்து காத்திருக்கும் துர்காவுக்கும் காலை உணவு எடுத்து வைக்கச் சொன்னார்.

இருவரும் சாப்பிட்டுவிட்டு துர்காவின் அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டு ஆபீசுக்கு கிளம்பினர். கிளம்பிய இருவரும் ஆபீஸ் செல்லும் வரை ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.

ஆபீஸ் வந்ததும் ஆதி இறங்கி உள்ளே சென்று விட, அவனுக்கு முன்னால் இறங்கிய துர்கா அவன் செல்வதையே பார்த்தவள், “சரி அவன் அப்படித்தான்” என்று நினைத்துக் கொண்டு ஆபீசுக்குச் சென்று தன் கேபினுக்குச் சென்று தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

இவர்கள் இருவரும் வந்ததை பார்த்த விக்கியும் கதிரும் மற்றும் அவர்கள் ஆபீஸ் ஸ்டாப்பும் “கல்யாணமாகி ரெண்டு நாட்கள்தான் ஆகிறது. இவர்கள் இருவருக்கும் அதற்குள்ளாகவே ஆபீஸ் வேலை பார்க்க வந்துவிட்டனர். வந்தவன் தான் வந்தார்கள். அவளை தன் மனைவி என்று ஆபீஸ்ல இருப்பவர்களுக்கு இன்றோடுஸ் செய்யவும் இல்லை. அவரவர் சென்று அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்” என்று இவர்கள் இருவரைப் பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

விக்கி கதிரிடம் “நேத்துதானே அம்மா இவன்கிட்ட அத்தனை சொன்னாங்க? அதே மாதிரி இன்னைக்கு ஆபீஸ் வந்திருக்காங்க. என்னதான்டா பண்றது இவனை? எல்லாம் இந்த சங்கவியால் தான் இது எல்லாம் நடந்திருக்கு. அவ மட்டும் நேத்து ஆபீஸ்ல ரகளை பண்ணாம இருந்திருந்தால் ஆதி அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு பத்து நாள் நிம்மதியாக துர்காவுடன் தற்பொழுதுப் பொழுதைக் கழித்துக் கொண்டு இருப்பான்” என்றான் கதிர்.

“வாடா இவனைப் போய் என்னன்னு கேட்டுட்டு வருவோம். மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கான்? அந்தப் பொண்ணைக் கல்யாணம் ஆன ரெண்டு நாளில் ஆபீஸ் கூட்டிட்டு வந்து வேலை வாங்கணுமா? அவ எவ்வளவு வருஷம் தான் இவன்கிட்ட வேலைக்கு இன்னும் இருப்பா? பொண்டாட்டி ஆயிட்டாலே. இனிமேல் வேலைக்கு வர வேண்டாம், வீட்ல நிம்மதியா இருன்னு ஒரு வார்த்தை சொல்லி அவளை சப்போர்ட் பண்ணி வீட்டில் இருக்க சொல்றானா பார்” என்று கதிரை இழுத்துக் கொண்டு விக்கி ஆதியின் கேபினுக்கு சென்றான்.

கதிரும் விக்கியும் உள்ளே சென்றுவிட, அதுவரை துர்காவை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய ஆபீஸ் தோழிகள் வேகமாக அவள் அருகில் வந்து “என்னடி புதுப் பொண்ணு, கல்யாணமே ரெண்டு நாள் கூட ஆகல. அதுக்குள்ள புருஷனை விட்டுட்டு இருக்க முடியுமா? அவர் கூட சேர்ந்து நீ ஆபீசுக்கு வந்துட்டியா?” என்று அவளைச் சீண்ட.

துர்கா சிரித்துக்கொண்டே “லதா என்னன்னு தெரியாம என்னை ஓட்டாதடி. உன்னை அப்புறம் நான் என்ன செய்றேன்னு பாரு” என்று கிண்டல் செய்த துர்கா, “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லடி. அவர் ஆபீசுக்கு வந்தாரு. நானும் வீட்ல சும்மாதானே இருக்கேன். நானும் அவர் கூட ஆபீசுக்கு வரேன்னு சொல்லி கிளம்பி வந்துட்டேன்” என்றால் துர்கா.

“எல்லாம் ஒண்ணுதான். வேலையில்லைன்னு வீட்டில் சும்மா இருக்கியா? அவரு இருந்தா தானே உனக்கு வேலையே இருக்கும்” என்று இரண்டு அர்த்தத்தில் லதா கூற, அவர் கூறியது கேட்டு புரிந்து கொண்ட துர்காவின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட, அதைப் பார்த்து லதா “என்னடி கண்ணமெல்லாம் சிவந்து போச்சு? சார் உள்ள ரெண்டு நாளா தூங்க விடலையோ? கண்ணெல்லாம் சிவந்து இருக்கு” என்று அவளை சீண்ட, “ஏய் சும்மா இருடி. போய் ஒழுங்கா வேலையைப் பார்க்கப் போறீங்களா இல்ல, போய் நான் சார்கிட்ட சொல்லிக் கொடுக்கவா?” என்று வேண்டுமென்றே தன் தோழியை மிரட்ட.

“ஐயோ வேண்டாம்ப்பா, ஏற்கனவே அவரு நீ அவருக்கு பர்சனல் அசிஸ்டென்டா இருக்கும்போது நீ எதை சொன்னாலும் அப்படியே நம்பிடுவாரு. இப்ப நீ வேற அவர் பொண்டாட்டியா ஆயிட்ட. அப்புறம் உன்னை நாங்க எல்லாம் கிண்டல் பண்ணனும்னு அவருக்கு தெரிந்தது என்றால் எங்களையெல்லாம் ஆபீஸ்ல இருந்து வேலையை விட்டு தூக்கிட போறாங்கடா சாமி. நான் போய் என் வேலையை பார்க்கிறேன், நீ உன் வேலையை கண்டினியூ பண்ணு” என்ற லதா அவள் டேபிளுக்கு சென்று விட்டாள்.

இதையெல்லாம் தன் கேபினில் இருந்த கேமரா வழியாக அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை ஆடியோ மூலம் கேட்டுக் கொண்டிருந்த ஆதி, துர்காவின் முகம் பார்க்க, அவள் முகம் சிவந்து அவ்வளவு அழகாக இருந்தது. லதா பேசிவிட்டு போனதும் அவள் சொன்னதெல்லாம் கேட்ட துர்காவின் முகம் மேலும் சிவக்க, சிரித்துக்கொண்டே தன் தலையில் தட்டிக் கொண்டவள் தன் வேலையை பார்க்க ஆரம்பிக்க, அதை எல்லாம் தன் கேபினிலிருந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆதி அவனை அறியாமல் துர்காவை ரசித்துக் கொண்டிருந்தான் ஆதி.

அப்போது அரைக்கதவை திறந்து கொண்டு வந்த விக்கியும், கதிரும் வர, தன் லேப்டாப்பை வேகமாக மூடியவன், அவர்களை திரும்பி என்ன என்பது போல பார்க்க, ‘இவன் எதுக்கு இவ்ளோ அவசரமாக லேப்டாப்பை மூடுகிறான்? நாங்க வருவதைப் பார்த்து’ என்று யோசித்த விக்கி “கண்டுபிடிப்போம்” என்றவன் கதிரை பார்த்து “பேசு” என்று சைகை செய்ய.

“அண்ணா… எதுக்கு இன்னைக்கே நீங்க ஆபீஸ் வந்தீங்க? அம்மா அப்பா உங்களை பத்து நாளைக்கு ஆபீஸ் வர வேண்டாம் என்று சொன்னாங்க. நீங்க வந்ததும் இல்லாம, துர்காவையும் சேர்த்து கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்று கேட்க.

“நான் எவ்வளவு நாள் தான்டா வீட்டிலேயே இருப்பது? எனக்கு தெரியும் எப்போ வரணும், வேண்டாம் என்று எனக்கு தெரியும்” என்றான் கோபத்தோடு. ‘இதுக்கு மேல இவன்கிட்ட பேசினா அவ்ளோதான்’ என்று தன் வாயை மூடிக்கொள்ள.

விக்கி ஆதியின் அருகே வந்தவன் “டேய் மச்சான், அந்த சங்கவியோட ப்ராஜெக்ட் விஷயமா ஒரு டீடெயில் கேக்கணும் உன்கிட்ட” என்று கூற, “என்ன?” என்று ஆதி கேட்க “உன்கிட்டதானே அவளோட ப்ராஜெக்ட் சம்பந்தமான டீடெயில்ஸ் இருக்கு?” என்று கூறிக்கொண்டு ஆதியிடம் அது சம்பந்தமான ஃபைலை கேட்க, “அதை நான் நேற்றே சங்கவியிடம் கொடுத்துவிட்டேன்” என்றான் ஆதி.

“என்னடா சொல்ற?” என்று அதிர்ச்சியில் விக்கி கேட்க, நேற்று ஆபீஸில் நடந்த சம்பவம் பற்றி கூறியவன் “எப்படியும் அவளுக்கு அவள் ப்ராஜெக்ட் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்துதான் ஆக வேண்டும். அதனால் நான் அவளிடம் கொடுத்துவிட்டேன்” என்றான்.

இவர்கள் மோரும் ஆதியின் கேபின்கூட பேசிக் கொண்டிருக்க, திடீரென்று வெளியில் இருந்து சத்தம் வர, “என்ன?” என்று மூவரும் திரும்பி ஆதியின் கேபினில் கண்ணாடி வழியாக வெளியே பார்க்க, துர்காவுடன் அவர்கள் ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்த விவேக் என்பவன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்க, அவர்கள் சிரித்துப் பேசும் சத்தம் ஆதியின் கேபின் உள்ளே வரை வந்தது.

துர்கா விவேக்குடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த விக்கியும் கதிரும் எழுந்து வெளியே வர, அதை உள்ளிருந்து பார்த்த ஆதிக்கு ஏனோ அவர்கள் மீது கோபம் வந்தது.

விவேக் துர்காவிடம் சிரித்துப் பேசும் சாக்கில் அவள் தோள்களில் அடித்துப் பேசவும், அவள் கையைப் பிடித்து பேசவும் என்று அவள் அருகில் நின்று பேசிக் கொண்டிருக்க, ஆதியால் அதை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க முடியவில்லை.

இதற்கு முன்னும் அவர்கள் இருவரும் அப்படித்தான் பேசிக் கொண்டே இருந்தார்கள். ஏனென்றால் விவேக்கும் துர்காவும் சிறுவயது தொட்டு பழகி வரும் நண்பர்கள். விவேக் எதார்த்தமாக துர்காவிடம் பேசிக் கொண்டுதான் இருந்தான். ஆனால் வெளியில் இருந்து பார்த்த ஆதிக்கு தான் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. இதற்கு முன்னால் துர்கா தன்னுடைய தோழி என்றாலும், அப்போதே அவனுக்கு இவன் இவளுடன் இவ்வளவு நெருக்கமாக பேசுவது பிடிக்காது. இப்போது அவன் மனைவி வேறு ஆகிவிட்டாள். இப்போது சும்மா இருக்க முடியுமா பார்த்துவிட்டு.

தன் கேபினில் இருந்து அழைப்பு மணியை அடிக்கவும், அவனுடன் பேசிக்கொண்டிருந்த துர்கா சட்டென்று பேசுவதை நிறுத்தியவள், விவேக்கிடம் “டேய் விவேக், அவர் நம்ம பேசுவதை பார்த்துவிட்டார் என்று நினைக்கிறேன். கூப்பிட்டு காயப் போறாரு. சரி நான் உள்ள போறேன். நீ போய் உன் கிட்ட உள்ள வேலையைப் பாரு. நம்ம அப்புறம் லஞ்சில் பேசலாம்” என்று சொல்லிவிட்டு வேகமாக ஆதியின் அருகில் சென்றாள்.

துர்கா உள்ளே வந்து நின்று “சார், கூப்டீங்களா?” என்று கையில் ஒரு நோட்டும் பேனாவுடனும் நிற்க, “ஆமா” என்று கடுப்பாக கூறிய ஆதி, “இன்னைக்கு என்னென்ன ஷெட்யூல்கள் இருக்கு? மீட்டிங் பத்தி எனக்கு டீடெயில்ஸ் வேணும்” என்று அவன் கூற.

“ஓகே சார், ஒரு ஃபைவ் மினிட்ஸ். நான் எல்லா டீடெயிலும் எடுத்துட்டு வரேன்” என்று சென்றவள், ஐந்து நிமிடங்களில் அவன் கேட்டிருந்த அனைத்து டீடெயில்களையும் எடுத்து வந்து அவனிடம் அன்றைய செட்யூல்கள் ஒவ்வொன்றாக விளக்கிக் கூற, அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் கூறும் எதையுமே ஆதியின் காதில் விழவே இல்லை. என்னதான் தன் முகத்தை முகமூடி போட்டு மறைத்திருந்தாலும், அவன் கண்கள் அவள் முகத்தையும் உதட்டையும் பார்த்துக் கொண்டிருந்தது.

அவள் உதட்டை பார்க்கும் போதெல்லாம், அன்று அவளுக்கு தன் உதட்டில் அவள் உதட்டை ஒற்றி எடுத்தது ஞாபகம் வர, மறுபடியும் அந்த வாய்ப்பு கிடைக்காதா என்பது போல அவனுக்கு தோன்ற, தனக்குள்ளேயே “டேய் நேத்து நைட்டு தானடா அவ கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கணும்னு நினைச்சு அவகிட்ட பேசணும்னு சொல்லிட்டு இருந்தே? இப்ப என்னடான்னா அவ லிப்ஸ பார்த்த உடனே முத்தம் கொடுக்கணும்னு யோசிக்கிற? இல்ல உனக்கே நல்லா இருக்கா?” என்று அவனை அவனே கேள்வி கேட்டுக் கொண்டான்.

அது ஏனோ ஆதிக்கு புரியவில்லை. அவளுக்கு யாராவது நெருக்கி பேசி பழகினால் அவனுக்கு ஏனோ பிடிக்காமல் போக, அவனை அவனே திட்டி சமன்படுத்திக் கொண்டவன், துர்காவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் விளக்கம் முடித்ததும் அமைதியாக அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“சார்” என்று துர்கா அழைக்க, அவள் அழைப்பில் சுயம் வந்தவன், அவளைப் பார்த்து “என்ன?” என்பது போல பார்க்க, “நான் போலாமா?” என்று கேட்க, “அப்படி அவசரமா வெளிய போய் என்ன மேடம் பண்ண போறீங்க? அந்த விவேக் கூட விட்ட கதையை திரும்ப பேசப் போறீங்களா?” என்று கேட்டான்.

அவன் அப்படி கேட்டதும் துர்காவுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருக்க, “சரி நீ போலாம்” என்று கூறி அவளை அனுப்பி வைத்தவன், அவள் சென்று தன் கேபினில் சோகமாக அமர்வதைப் பார்த்தான்.

ஆதிக்கு வேறு ஒரு போன் வர, போன் பேசிக்கொண்டு துர்காவை பார்த்தவாறு தனது ஆபீஸ் வேலைகளில் போக ஆரம்பித்தான். மதியம் சாப்பிடும் நேரம் வரவும், விக்கியும் கதிரும் வந்து ஆதியிடம் “டேய், சாப்பிட போலாமா?” என்று கேட்க, மணியை பார்த்ததும் “சரி போலாம். ஒரு ஃபைவ் மினிட்ஸ்” என்று கூற, விக்கி அங்கேயே நின்று கொண்டிருக்க, “என்ன?” என்று தலைநிமிர்த்தி ஆதி கேட்க, தயங்கியவாறு விக்கி “துர்காவையும் நம்ம கூட கூட்டிட்டு போலாமா?” என்று கேட்டான்.

“அவள் எதுக்கு நம்ம கூட சாப்பிட வரணும்? இத்தனை நாள் வரைக்கும் அவ நம்ம சாப்பிடும்போது நம்ம கூட தான் வந்து சாப்பிட்டாளா? ஆபீஸ் பொறுத்தவரைக்கும் அவ எப்பவும் போல என்னோட பர்சனல் அசிஸ்டென்ட் தான். வீட்டையும் ஆபீஸையும் ஒன்றாக கொண்டு வராது” என்று கோபமாக பேசினான் ஆதி.

“இதற்கு மேல் இவன்கிட்ட பேசி ஒண்ணும் பண்ண முடியாது. வாடா கதிர் நம்ம ரெண்டு பேரும் முன்னாடி போலாம். அவன் வரட்டும்” என்று கூறிவிட்டு அவர்கள் சாப்பிடும் கேபினுக்கு இருவரும் சென்று விட்டனர்.

பார்த்துக் கொண்டிருந்த ஃபைல்களை மூடிவிட்டு சாப்பிட எழலாம் என்று நினைத்தவன், துர்கா என்ன செய்கிறாள் என்று அவள் கேபின் பக்கம் பார்க்க, அப்போதுதான் அங்கே வந்து விவேக்கும் லதாவும் துர்காவிடம் “நீ சாப்பிட எங்க கூட வரப் போறியா? இல்ல உன் புதுப் புருஷன் கூட போகப் போறியா?” என்று லதா அவளை கிண்டல் செய்து கொண்டு கேட்க, முதலில் துர்காவுக்கு என்ன கூறுவது என்று புரியாமல் துர்கா நிற்க.

“மேடம் எல்லாம் பெரிய ஆள் ஆயிட்டாங்க. பெரிய இடத்துல கல்யாணம் பண்ணிட்டாங்க. இனி நம்ம கூட எல்லாம் அவங்க வந்து சாப்பிடுவாங்களா? லதா, நீயே தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க. வா நம்ம ரெண்டு பேரும் போய் சாப்பிடுவோம்” என்று விவேக் துர்காவை கிண்டல் செய்ய, “டேய், நீ சும்மா இருக்க மாட்டியா?” என்று அவன் தோளில் தட்டியவள், “நான் உங்க கூட வரேன். வாங்க நம்ம மூணு பேரும் எப்பவும் போல கேன்டீன்ல போய் சாப்பிடலாம்” என்று துர்கா தன் ஃபைல்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் வெளியில் பேசிக் கொண்டிருப்பதை ஆதி கேமரா மூலம் கேட்டுக் கொண்டிருந்தவன், அவள் விவேக்குடன் கேன்டீனுக்கு சாப்பிட செல்கிறேன் என்று அவனிடம் சொன்னதும், ஆதிக்கு ஏனோ துர்கா விவேக்குடன் சென்று சாப்பிடுவது பிடிக்கவில்லை.

துர்காவின் கேபினுக்கு போன் செய்தவன், “ஹலோ துர்கா, உள்ள வா” என்று கூற, “வரேன் சார்” என்று கூறி போனை வைத்தவள், “சரி நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போங்க. நான் அவரை கூப்பிடறாரு, என்னன்னு பேசிட்டு கேன்டீனுக்கு வந்துடுறேன்” என்று துர்கா கூற, “சரி சரி, லஞ்ச் டைம்ல ரொமான்ஸ்” கூறிக்கொண்டு துர்கா அடிக்கும் முன் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அவள் அரை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து “சார், சொல்லுங்க” என்று கேட்க, “சரி, வா நம்ம ரெண்டு பேரும் சாப்பிட போலாம்” என்று அவன் கூற, அவன் கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சியாய் துர்கா நின்றவள் “சார்…” என்று இழுக்க.

“என்ன மேடம், சாப்பிட தானே கூப்பிட்டேன்? எதுக்கு அதுக்காக இப்படி அதிர்ச்சி ஆறிங்க?” என்று அவன் கேட்க, “இல்ல சார், நான் ஃப்ரெண்ட்ஸோட கேன்டீன்ல லதா, விவேக்…” என்று வார்த்தைகளை நிறுத்தி நிறுத்தி பேசினாள்.

தன் சேரிலிருந்து எழுந்த ஆதி வேக நடை போட்டு அவள் அருகில் வந்து நின்றவன், “ஏன், உங்க ஃபிரெண்ட்ஸ் கூடத்தான் போய் சாப்பிடுவீங்களா? என்கூட எல்லாம் நீங்க சாப்பிட மாட்டியா?” என்று நெருக்கமாக வந்து நின்று கேட்டான்.

அவன் அவ்வளவு நெருக்கமாக துர்காவிடம் வந்து நிற்கும், துர்காவின் இதயத்துடிப்பு எகிறியது. அவளால் மூச்சு சரியாக விட முடியவில்லை. படபடக்கும் விழிகளோடு ஆதியை பார்க்க, அவன் “என்ன?” என்பது போல தன் இரு கண்கள் மட்டும் தெரிய காட்டி அவளை பார்வைகளையே அவளிடம் கேட்க, அவள் அவன் பார்வையை பார்த்ததும் மயங்கி “வருகிறேன்” என்று அவளை அறியாமலேயே தலையை ஆட்டினாள்.

“குட். சரி, வா போகலாம்” என்று அவன் இரண்டு அடி நடந்து செல்ல, அவள் நகராமல் அங்கேயே நின்றிருந்தாள். “என்ன மேடம், இப்போ என் கூட சாப்பிட வரீங்களா இல்லையா?” என்று அவன் அதட்ட, “வரேன் சார்” என்று பதட்டமாக அவன் பின்னால் ஓடினால் துர்கா.

சாப்பிடும் அறை கதவை திறந்து கொண்டு ஆதி வர, அவன் பின்னாலயே துர்கா கொண்டு வருவதை பார்த்து விக்கி கதிரிடம் “சொன்னேன் நானு. எப்படி வேலை செய்கிறது பார்த்தாயா? என்னோட ஐடியா உங்க அண்ணன் தானா அவன் பொண்டாட்டியை சாப்பிட கூட்டிட்டு வரான் பாத்தியா?” என்று விக்கி கூற, “நீ சொல்றது சரிதான் விக்கி. நீ சொன்னதும் இப்படி எப்படி உனக்கு இப்படி ஐடியா தோணுச்சு?” என்று கேட்க, “இருடா, இருடா. உங்க அண்ணன் வேற நம்ம பேசுறது காதுல கேட்டா, நம்ம ரெண்டு பேரையும் கொன்னே போடுவான்” என்றவன் கதிருக்கு மட்டும் கேட்கும் விதமாக “டேய், எப்பவுமே அவன் பொண்டாட்டி கிட்ட அவன் பேசுறானோ இல்லையோ, அடுத்தவன் பேசினா எந்த ஆம்பளைக்கும் பிடிக்காது. அப்படித்தான் நான் விவேக் கிட்ட சொல்லி வேணும்னு துர்காவை சாப்பிட கூப்பிட சொன்னேன். அவன் பேசுறது உங்க அண்ணா கேபின்ல இருந்து பார்ப்பான்னு எனக்கு தெரியும். ஏன்னா, அவன் நான் இந்தக் காலைல வந்ததுல இருந்து நோட் பண்ணிட்டுதான் இருந்தேன். வேலையை தான் செய்கிறானே ஒழிய, அவன் பார்வை முழுக்க துர்கா மேலேயேதான் இன்னைக்கு இருந்துச்சு. அதனாலதான் அவன் பொஸசிவ்னஸ் கொஞ்சம் தூண்டிவிட்டேன். உடனே துர்காவை சாப்பிட நம்ம கூட கூட்டிட்டு வந்துட்டான் பாத்தியா?” என்றவன் அவர்கள் அருகில் “வாடா ஆதி. என்ன துர்கா, உன்னையும் கூட கூட்டிட்டு வந்துட்டானா? ஏன்டா ஆதி, துர்காவை சாப்பிட கூப்பிட்டதற்கு?” என்று அவன் அவனைப் பார்த்து பேச வர, தன் பார்வையாலேயே விக்கியை முறைத்து அவனை அடக்கியவன், “துர்கா உட்காரு” என்று கூற, அவள் தயங்கிக் கொண்டு கதிரின் அருகில் இருந்த சேரில் போய் உட்கார்ந்தாள்.

தன் அருகில் வந்து அமர்ந்த துர்காவை பார்த்து கதிர் “வா துர்கா வந்து உட்காரு” என்று தன் அருகில் இருக்கும் சேரை அவளிடம் எடுத்துப் போட, கதிரைப் பார்த்து ஆதி முறைப்பதை கவனித்த கதிர், அந்தச் சேரை அப்படியே தள்ளிக் கொண்டு போய் ஆதியின் அருகில் போட்டான்.

ஆதியின் பார்வையையே தாங்க முடியாமல் கதிர் சேரை ஆதியிடம் போட்டுவிட்டு, “துர்கா நீ இங்க உட்கார்ந்து சாப்பிடு” என்று கூறினான். ஆதி மனதிற்குள், ‘அந்த பயம் இருக்கட்டும். நான் எவ்வளவு என் தம்பியாக இருந்தாலும் யாருக்கும் இனி விட்டுத் தரப் போவதில்லை. இவள் என்னவள். இவளை என் கண் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ளப் போகிறேன்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், அருகில் இருக்கும் துர்காவை ஓரக்கண்ணால் பார்த்தவாறு, ‘உன்னை யாருக்கும் நான் இனிமேல் விட்டுத் தரப் போவதில்லை’ என்று அவள் அருகில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

ஆதியின் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டிருந்த விக்கி மனதிற்குள் ‘எப்படியாவது ஆதிக்கு எப்படியாவது துர்காவை பிடித்து விட வேண்டும். அதற்காக என்ன வேலை வேண்டுமானாலும் செய்ய நான் தயாராகத்தான் இருக்கிறேன். ஆதி, கூடிய சீக்கிரம் துர்கா பின்னால் உன்னை சுத்த வைக்கலைன்னா நான் உன் ஃப்ரெண்டு இல்லடா’ என்று மனதிற்குள் சபதம் கொண்டவன், அவனும் கதிரும் பேசிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured