EPISODE 16
மதியம் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தங்கள் வேலைகளை பார்க்கச் சென்றுவிட, வேலைகளும் நிறைய இருக்கவே, அவரவர் வேலையில் மூழ்கிப் போயினர்.
மாலை ஒரு நாலு மணியைப்போல ஆதியின் ஆபீசுக்கு வந்த சங்கவி, உள்ளே வந்ததும் அங்கே துர்கா இங்கேயும் அங்கேயும் நடந்து கொண்டு ஆபீஸ் வேலையில் மும்முரமாக இருக்க, அவளை மறுபடியும் சில நாட்கள் கழித்து நேரில் பார்த்ததும் சங்கவிக்கு ஆத்திரமாக வந்தது.
நேராக துர்காவிடம் வந்தவள் “ஏய்…. எனக்கு சூடா ஒரு காபி போட்டு எடுத்துட்டு என்னோட கேபினுக்கு வா…” என்று கூறிவிட்டு விடுக்கென தன் கழுத்தைத் திருப்பிக்கொண்டு அவள் கேபினுக்குச் சென்றாள்.
அவள் அப்படி துர்காவிடம் பேசிவிட்டு சென்றதைப் பார்த்த துர்காவின் தோழி லதா, துர்காவிடம் “இவள் திமிரைப் பார்த்தியா? எவ்வளவு திமிரு இருந்தா உன்னை ஆதி சாரை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தெரிஞ்சும் ஆபீஸ் பாய் வேலை வாங்குறா பாரு இவளை. என்ன செய்றது?” என்று புலம்பியவள், “நீ காபி கொண்டு போக வேண்டாம் துர்கா, நான் எடுத்துட்டு போறேன்” என்று லதா சொல்ல, “இல்ல வேணாம் டி… நானே எடுத்துட்டு போறேன். இல்லைனா அவ அதுக்கும் ஏதாவது சண்டை போடுவா” என்று கூறி நகரப் போக.
அப்போது ஆதி தன் இண்டெர்வியூ காம்-இல் அவளுக்கு அழைத்திருந்தான். போனை அட்டென்ட் செய்ய, சில டீடெயில்களை கேட்டுவிட்டு அதற்கு உண்டான ஃபைல்களை எடுத்துக்கொண்டு அவளை உள்ளே வரச் சொல்லி போனை வைத்து விட்டான்.
துர்கா போன் பேசுவதை அவள் அருகில் நின்றுகொண்டிருந்த அவள் தோழி லதா, “நீ முதல்ல சார் கேட்ட டீடைல் எடுத்துக்கொண்டு போய் கொடு. நான் போய் அவளுக்கு காபி கொண்டு போய் கொடுத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு லதா துர்காவை அனுப்பிவிட்டு சங்கவிக்கு காபி போட்டு எடுத்துக்கொண்டு சங்கவியின் கேபினுக்கு சென்றவள் கதவைத் தட்ட, சங்கவி அவளை உள்ளே வரச்சொன்னாள்.
காபி கொண்டு வந்திருப்பது துர்கா தான் என்று நினைத்து, அவளை திமிருடன் நிமிர்ந்து பார்த்த சங்கவிக்கு அங்கேயே துர்காவுக்குப் பதில் லதா நின்று இருப்பதைப் பார்த்ததும் ஆத்திரம் வந்தது.
“ஏய் நீ எதுக்கு இப்போ இந்தக் காபி எடுத்துட்டு வந்த? நான் அவளை தானே காபி எடுத்துட்டு வரச் சொன்னேன்?” கோபமாகக் கேட்க, லதா அவரிடம் பயந்து நடுங்குவதுபோல நடித்துக்கொண்டு “மேடம், அவளை ஆதி சார் அவரோட கேபினுக்கு வர சொல்லிட்டாரு. அதனாலதான் அவளுக்குப் பதில் நான் உங்களுக்கு காபி கொண்டு வந்தேன்” என்று கூற.
“அவனுக்கு முன்னால் நான் தானே இவளை காபி கொண்டு வரச் சொன்னேன்? நான் சொன்னது கேட்காமல் அவன் கூப்பிட்டதும் அவன் பின்னாடியே ஓடிவிட்டாளா?” என்று கூறிக்கொண்டே அவள் கையில் இருந்த காபியை வாங்கி அந்தக் காபி கப்பை காபியோடு தரையில் தூக்கி எறிய, அந்தக் கப் சுக்கு நூறாக உடைந்து விட்டது.
பின் லதாவைப் பார்த்து “போ, போய் துர்காவை காபி போட்டு எடுத்துட்டு வரச் சொல்லு” என்று கூறிவிட்டு தன் சேரில் சாய்ந்து அமர்ந்தவள், லதா அங்கேயே நின்று இருக்க, அவளைப் பார்த்து “நீ இன்னும் போகாம இங்கே என்னடி பண்ணிட்டு இருக்க? முதல்ல என் கண்ணு முன்னாடி நிக்காத. வெளியே போ” என்று அவளை திட்டி வெளியே அனுப்பினாள் சங்கவி.
“ஓகே மேடம்” என்று கூறிக்கொண்டு அவள் அறை கதவைத் திறந்து வெளியே வந்தவள், “ஷ்…. அப்ப்பா….. நல்லவேளை இவளை ஆதி சார் கல்யாணம் பண்ணல. இவளை மட்டும் கல்யாணம் பண்ணி இருந்தா, இவள் இந்த ஆபீசுக்கு மகாராணியாய் எங்களை எல்லாம் கொடுமைப்படுத்தி இருப்பா” என்று நினைத்தவள் துர்காவின் கேபினுக்குச் செல்ல, அப்போது துர்கா வந்துவிட்டாள்.
கோபமான முகத்துடன் வந்த லதாவை பார்த்த துர்கா “ஏய்…. லதா என்னடி ஆச்சு? ஏன் உன் முகம் இவ்வளவு கோபமா இருக்கு? அவ எதுவும் சொன்னாளா உன்கிட்ட?” என்று துர்கா கேட்க.
“ஆமாண்டி, அவ சரியான திமிரு புடிச்ச ராக்கிடி…. காபியை நீ கொண்டு வந்து கொடுத்தா தான் குடிப்பாளாம். நான் கொடுத்த குடிக்க மாட்டாளா? கொண்டு போன காபியை வாங்கி கீழே போட்டு உடைச்சுட்டா… இவ்வளவு எல்லாம் யாராலையும் திருத்திட முடியாது, சரியா? அவள் ஒரு ராட்சசி” என்று திட்டினாள்.
“சரி, நீ போடி. நானே போய் அவளுக்கு காபி கொண்டு போய் கொடுத்துட்டு வரேன்” என்று கூறி லதாவை அனுப்பிவிட்டு, துர்கா சென்று காபியைப் போட்டுக்கொண்டு நேராக அறையின் கதவைத் தட்டிக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே செல்ல, துர்கா கையில் காபி கப்புடன் உள்ளே வருவதைப் பார்த்த சங்கவி துர்காவைப் பார்த்ததும் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு துர்காவைப் பார்த்து “ஏண்டி, உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நான் உன்கிட்ட காபி போட்டு எடுத்துட்டு வரச் சொன்னா, அந்த லதா கிட்ட கொடுத்து காபியை கொண்டு வர சொல்லி இருப்ப?”
“அப்போ இந்த ஆபீஸ்ல நீ ஒரு ஸ்டார். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் நான் சொன்ன வேலையை அவாய்ட் பண்ற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா?” என்று கூறி அவள் சேரில் இருந்து எழுந்து வந்து துர்காவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள் சங்கவி.
சங்கவி துர்காவை அறைந்தது வெளியில் நின்றிருந்த லதா, விவேக், கதிர், விக்கி என நால்வரும் பார்க்க, கதிர் கோபமாக சங்கவியின் அறைக்குச் செல்லப் போக, அவன் கையைப் பிடித்து இழுத்த விக்கி “வேண்டாம்” என்று அவனுக்கு கண்ணை காட்டிவிட்டு அவனைத் தன் அருகில் இழுத்து நிறுத்தினான்.
லதாவுக்கு கோபம் வந்து அவளும் செல்லப் போக, அவள் கையைப் பிடித்த விவேக் இழுத்து நிறுத்தியவன் “கொஞ்ச நேரம் பேசாமல் இரு” என்றான். “என் கையைவிட்டு போவதற்கு எவ்வளவு தைரியம் இருந்தா நம்ம துர்காவை அறைந்திருப்பா? எனக்கு வேலையே போனாலும் பரவாயில்லை, நான் இவளை சும்மா விடமாட்டேன்” என்று லதா திமிரிக்கொண்டு அவன் கையில் இருந்து தன்னை பிரிக்கப் போக, “ஏய், கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா டி? நான் சொல்றதை கேளு. அங்கே பாரு ஒரு நிமிஷம்” என்று விவேக் அவள் தலையைப் பிடித்துத் திருப்பி ஆதியின் அறையைக் காட்ட, ஆதி கோபமாக தன்னாலே கதவைத் திறந்து கொண்டு வேகமாக சங்கவியின் அறையின் நோக்கிச் செல்வதைப் பார்த்த லதா அமைதியாய் அப்படியே நின்றாள்.
தன் அறையில் இருந்து சங்கவி துர்காவை தன் அறைக்கு வரச் சொல்லியதை கேட்டுவிட்டு தான் ஆதி துர்காவிடம் வேண்டுமென்றே வேறு டீடெயில்கள் பற்றி கேட்டு அவளை தன் அறைக்கு வரவழைத்தான்.
ஆனால் சங்கவி மறுபடியும் துர்காவையே காபி கொண்டு வரச் சொல்ல, “சரி, என்னதான் நடக்கிறது” என்று பொறுமையாக பார்க்கலாம் என்று நினைத்த ஆதி, அவன் அறையில் இருந்து சங்கவியின் அறையில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க.
ஆனால் அவன் எதிர்பாராத விதமாக சங்கவி எழுந்து வந்து துர்காவின் கன்னத்தில் அறைந்ததைப் பார்த்ததும் மிகவும் கோபம் கொண்டு எழுந்து அவள் அறை நோக்கிச் சென்றான்.
சங்கவியின் அறையை வேகமாகத் திறந்து கொண்டு உள்ளே வந்த ஆதி, நேராக சங்கவியின் அருகில் சென்று “சங்கவி, இது ஆபீஸ். இங்கே என்ன நடக்குது? இப்போ எதுக்கு நீ துர்காவை அடிச்ச?” என்று கேட்க.
துர்காவுக்காக வக்காலத்து வாங்கிக்கொண்டு ஆதி தன் அறைக்கே வந்துவிட்டான் என்பதை நம்ப முடியாத சங்கவி அவனை வெறித்துப் பார்க்க.
“சங்கவி….!” என்று கத்திய ஆதி “நான் உன்ன தான் கேட்டுட்டு இருக்கேன். இப்போ எதுக்கு நீ துர்காவை அறைஞ்ச?” என்று அவன் கேட்க, “அது… அது வந்து ஆதி…” என்று பதில் கூற முடியாமல் சங்கவி விழித்துக் கொண்டு நின்றவள், பின் ‘இவனுக்கு எதற்கு நாம் பயப்பட வேண்டும்’ என்று நினைத்துவிட்டு, ஆதியை நேராகப் பார்த்து “நான் அவளை காபி கொண்டு வரச் சொன்னேன். ஆனா அவ கொண்டு வராம லதா கிட்ட கொடுத்து அனுப்பினா. அதனால்தான் எனக்கு கோபம் வந்து அவ்வளவுதான் அடிச்சேன்” என்று சங்கவி திமிராக ஆதியைப் பார்த்துக் கூற.
“காபி கொண்டு போறதுக்குத்தான் ஆபீஸ் பாய் இருக்கிறப்போ, நீ எதுக்கு துர்காவை கொண்டு வரச் சொல்லி சொன்ன? துர்கா ஒன்றும் உன் வீட்டு வேலைக்காரி இல்ல. நீ கூப்பிட்டதும் நீ கேட்டதெல்லாம் செஞ்சு தர்றதுக்கு. உன்னை உன் ப்ராஜெக்ட் முடியிற வரைக்கும் தான் இந்த ஆபீசுக்குள்ள வரதுக்கு நான் அனுமதிச்சிருக்கேன். உன் ப்ராஜெக்ட் முடிந்தால் போறதும் தெரியவே கூடாது. மறுபடியும் இதே மாதிரி ஏதாவது பிரச்சனை பண்ணிட்டு இருந்தா, அப்புறம் நடக்கிறதே வேற” என்று அவன் சங்கவியை எச்சரிக்க.
“என்ன ஆதி, அவளும் இந்த ஆபீஸ்ல வேலைதானே செய்யற? ஏன் அவ எனக்கு காபி கொண்டு வந்தா இப்ப என்ன பிரச்சனை?” என்று கேட்டுவிட்டு அவனைப் பார்க்க, அவளை திரும்பி முறைத்த ஆதி, “அவ இந்த ஆபீசுக்கு வேலைக்குத்தான் வந்திருக்கா, நான் இல்லைன்னு சொல்லல. ஆனா அதையும் தாண்டி அவ என்னோட மனைவி. என்னோட மனைவியை நீ ஒரு ஆபீஸ் பாயை விட கேவலமா ட்ரீட் பண்றது எனக்கு பிடிக்கல” என்று அவன் கூற.
‘நேற்று நான் பேசிய பேச்சு இவன் இந்த துர்காவே வேண்டாம், பெண்களே வேண்டாம் என்று பார்த்தேன். என்றான். இவன் இன்னிக்கு என்னடான்னா இவன் இவளைப் பார்த்து என் மனைவின்னு சொல்றான். இது சரி இல்ல சங்கவி, இவன் அந்த கேடுகெட்ட துர்கா பின்னாடி போயிட்டான்னா, அதுக்கப்புறம் உன் வேலையில் எதுவுமே நடக்காது’ என்று நினைத்த சங்கவி.
“என்ன ஆதி, உன் பணத்துக்காக உன்னை கல்யாணம் பண்ண அவளைப் பார்த்து உன்னோட பொண்டாட்டின்னு சொல்ற? பணத்துக்காக மட்டும்தான் அவ உன்ன கல்யாணம் பண்ணிருக்கா. இல்லையென்றால் இந்த மாதிரி உடலில் நோய் இருக்கிறவனை, இப்படி ஒரு முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறவன, இந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிக்கவா? உன்னை எல்லாரும் சொன்னாங்க அப்படிங்கறதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டா. அதுக்கு ஒரே காரணம் உன்கிட்ட இருக்கிற உன்னோட காசுதான். உன் முகத்தை நீ போய் ஒரு முறையாவது கண்ணாடியில் நல்லா பார்த்து இருக்கியா? உடம்பு முழுக்க கொப்புளமாக, முகம் முழுக்க காயத்தோடையும் இருக்கிற ஒருத்தனை எந்தப் பொண்ணும் மனசார விரும்பி கல்யாணம் பண்ணிக்கவா? பணத்துக்காகத்தான் கல்யாணம் பண்ணி இருக்கா. அப்படி இருக்க நீ அவளுக்கு எதுக்கு இப்படி சப்போர்ட் பண்ற?” என்று கேட்டாள் சங்கவி.
சங்கவி தன் முகத்தைப் பற்றியும் தன்னழகைப் பற்றியும் தன் உடலில் இருக்கும் நோயைப் பற்றியும் கூறி அவனை மட்டம் தட்டி பேசியதைக் கேட்ட ஆதிக்கு சங்கவியிடம் திருப்பி என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறி நிற்க.
சங்கவி அப்படி ஆதியை மட்டம் தட்டிப் பேச, அவள் கன்னத்தில் திடீர் என்று ‘பளார்’ என்று அறை விழ, தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு தன்னை அறைந்தவர் யார் என்று திரும்பிப் பார்த்த சங்கவிக்கு அவள் எதிரே கோபமே உருவாய் பத்திரகாளி போல் நின்றிருந்த துர்காவைப் பார்த்ததும் சங்கவிக்கே பயம் தொற்றிக் கொண்டது.
துர்கா கோபத்தோடு சங்கவியைப் பார்த்து “ஏய், உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் ஆதியைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லுவ? என் ஆதியைப் பத்தி உனக்கு என்னடி தெரியும்? முகத்தோட அழகும் உடம்பில் இருக்கிற நோயும் ஒருத்தரை தப்பா காட்டிட முடியாது. அவங்க மனசு சுத்தமாவும் அடுத்தவங்களுக்கு கெடுதல் பண்ணாம நல்ல விதமாக இருந்தாலும் போதும். என் ஆதியை பற்றி பேசற யோக்கியதை உனக்கு இருக்கா முதல்ல? இனிமேல் என் ஆதியைப் பத்தி, அவனோட நோயைப் பத்தி ஏதாவது நீ சொன்ன, உன் வாயை கிழிச்சிடுவேன், புரிஞ்சுதா?” என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.
சங்கவி துர்காவை அவமானப்படுத்தி அடித்தபோது கூட துர்காவுக்கு கோபம் வரவில்லை. ஆனால் அவள் ஆதியைப் பற்றித் தப்பாக பேசியதும் எங்கிருந்துதான் அவளுக்கு கோபம் அப்படி வந்தது தெரியவில்லை. அவள் கோபத்தை இன்று தான் ஆதி முதன்முதலாகப் பார்க்கிறான்.
சங்கவி அறையை விட்டு கோபமாக வெளியே செல்லும் துர்காவை ஆச்சர்யம்போல பார்த்த ஆதி, ‘இவளை எந்த காரணம் கொண்டும் விடவே கூடாது’ என்று தீர்மானித்துக் கொண்டான்.
பின் சங்கவியைப் பார்த்து முறைத்தவன் “நான் சொன்னதெல்லாம் ஞாபகத்துல வச்சுக்க. வந்தமா வேலையைப் பார்த்தமா போனமான்னு இருக்கணும்” என்று அவனும் பதிலுக்கு எச்சரித்துவிட்டு சங்கவியின் கேபினை விட்டு வெளியே சென்றான்.
தன் கேபினுக்கு வந்து அமர்ந்தவன், துர்கா பேசியதெல்லாம் நினைத்துப் பார்க்க, அவள் வார்த்தைக்கு வார்த்தை ‘என் ஆதி’, ‘என் ஆதி’ என்று சொன்னாளே. நிஜமாவே அவ அவனை லவ் பண்றாளா? இதை எப்படி நான் கன்ஃபார்ம் பண்றது என்று யோசித்துக் கொண்டு வெளியே பார்க்க, அங்கே துர்கா அவள் கேபினில் கோபமாக அமர்ந்து கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, புஸ்… புஸ்ஸென மூச்சுவிட்டுக்கொண்டு கோபத்தோடு அமர்ந்திருந்தாள்.
அவள் முகம் எல்லாம் கோபத்தில் சிவந்து இருக்க, அதைவிட அவள் மூக்கின் நுனி கோபத்தில் சிவந்திருக்க, அதைப் பார்த்த ஆதிக்கு அவள் மூக்கைப் பிடித்து கிள்ள வேண்டும் போல இருக்க, லேப்டாப் திரையில் தெரிந்த அவள் முகத்தை முதன் முறையாகத் தொட்டுப்பார்க்க ஆவல் கொண்டு அந்தத் திரையில் தெரியும் அவள் முகத்தை தன் விரல் கொண்டு வருடினான்.
அவள் அருகில் லதாவும் விவேக்கும் அவளை சமாதானம் செய்து கொண்டிருக்க. கதிர் விக்கியிடம் “பாத்தியாடா, துர்காவுக்கு ஆதியை சங்கவி ஏதும் சொல்லிருப்பா போல. அதைக் கேட்டதும் கோபம் வந்து ‘பளார்’னு ஒரு அறை விட்டா பாத்தியா?”
“இனி இந்த ஆபீசுக்கு சங்கவி வேலை பார்க்க வராளோ இல்லையோ, தினம் ஒருத்தரிடம் அறை வாங்க கண்டிப்பா வருவா” என்று கூறி சிரித்து “சரி, வா நம்ம ஆதி கிட்ட போய் அவன் என்ன யோசிக்கிறான்னு பார்க்கலாம்” என்று கதிரை அழைத்துக்கொண்டு விக்கி ஆதியின் கேபினுக்குச் செல்லப் போக, “நீ முன்னாடி போ…. நான் துர்காவைப் பார்த்துட்டு வரேன்” என்று கூறி விக்கியை ஆதியின் கேபினுக்கு அனுப்பிவிட்டு, கதிர் துர்கா கேபினுக்கு சென்றான்.
விக்கி தன்னறை நோக்கி வருவதைப் பார்த்த ஆதி வேகமாக தன் லேப்டாப்பை மூட, அதை கவனித்துவிட்டான் விக்கி.
உள்ளே வந்த விக்கி “என்னடா ஆச்சு? அங்கே ஏதோ பிரச்சனையா? துர்கா அந்த அடங்கா பிடாரி சங்கவியை அறைஞ்சுட்டா போல” என்று ஒன்றும் தெரியாதவன் போல விக்கி ஆதியிடம் கேட்க.
“ம்ம்ம்… ஆமா” என்று மட்டும் தலையை ஆட்டிய ஆதியின் பார்வை முழுவதும் வெளியே துர்கா இருந்த கேபினிலேயே பதிந்திருந்தது.
அப்போது ஆதியின் கேபின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த கதிர், “டேய் விக்கி, உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம துர்கா எதுக்கு அந்த பிடாரியை அறைஞ்சான்னு உனக்கு தெரியுமா?” என்று கதிர் கேட்க.
விக்கி “எதுக்குடா அவ அந்த பிடாரியை அறைஞ்சா?” என்று கேட்க, “அவ நம்ம ஆதியைப் பார்த்து அவனோட நோயைப் பற்றியும் அவன் முகத்தைப் பற்றியும் ஏதோ ஒன்று மட்டம் தட்டி பேசி இருக்கா. அதைக் கேட்டு தான் துர்காவுக்கு கோவம் வந்து அந்த சங்கவியை அறைஞ்சு இருக்கா” என்று கூற.
“அப்படியாடா? பார்த்தியா? நம்ம துர்காவுக்கு நம்ம ஆதி மேல எவ்ளோ தெரியும்னு. அவன் முதலில் ஆதியை யாராவது ஏதாவது சொன்னால், அவனை யார்கிட்டயும் விட்டுக் கொடுக்க மாட்டா. அவனுக்காக அவளை வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்குப் போவா.”
“அப்படி இருக்கும்போது, இன்னைக்கு ஆதி அவளோடு புருஷன். அவ புருஷனைப் பற்றி அவ முன்னாடி யாராவது தப்பா பேசினா சும்மா இருப்பாளா? அதனால தான் கோவம் வந்து அந்த சங்கவியை கண்ணம் பழுக்குற அளவுக்கு நல்லா அறிஞ்சிட்டா. நம்ம இங்கிருந்து பார்த்தாலும் அந்த சங்கவியோட கண்ணம் பன்னு மாதிரி வீங்கி இருக்கிறது நல்லா தெரியுதுடா” என்று கூறி சிரித்தான் விக்கி.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட ஆதிக்கு, துர்கா தன் மேல் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறாள் என்பதை நினைக்கும் போது அவனுக்குத் தானாக துர்காவின் மேல் காதல் ஏற்பட ஆரம்பித்தது. ஆனால் அவனுக்குத் தான் அது தெரியவில்லை. அவளை ரசனையோடு அவன் பார்த்துக் கொண்டிருக்க, கதிர் விக்கியின் தோளை எடுத்து ஆதியை கண்டாடை காட்டி அவனைப் பார் என்று கூற, விக்கி “நானும் வந்ததிலிருந்து பாத்துட்டே தான்டா இருக்கேன். அவன் நம்மள பார்க்கவே மாட்டேங்குற. வெளிய நம்ம துர்காவை தான் பார்த்துட்டு இருக்கான்.”
“நம்ம ஆதி சாருக்கு இப்பதான் துர்காவைப் பத்தி கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்குதுன்னு நினைக்கிறேன். இதை இப்படியே கண்டினியூ ஆகி அவனுக்கு துர்காவைப் பற்றி எல்லாமே தெரியனும்டா” என்று கூறிக்கொண்டவன், “சரி வா, நம்ம இங்கே இருக்கிறது பிரயோஜனம் இல்ல. நம்ம ரெண்டு பேரும் வெளியே போகலாம். அவன் இங்கிருந்து அவன் பொண்டாட்டி சைட் அடிச்சிட்டு இருக்கட்டும்” என்று கூறியவர்கள் இருவரும் வெளியே செல்ல.
அவர்கள் இருவரும் இதுவரை அவனுக்கு என்னென்ன செய்து பேசியதும் வெளியில் சென்றதும் கூட தெரியாமல், உள்ளே இருந்து கொண்டு துர்காவை ரசித்துக்கொண்டிருந்தான் ஆதி.
