EPISODE 67
இரண்டு நாட்கள் கடந்து விட… ராதா முதன் முறை காலேஜ் செல்லவும், ஷிவு ஆஃபீஸிற்கும் கிளம்பிக்கொண்டு இருக்க…
ஷிவு வீட்டையே பரபரப்பாகப் புரட்டிப் போட்டுக்கொண்டு இருந்தாள். அதைக் காணவில்லை… இது வேண்டும் அது வேண்டும் என்று களேபரம் பண்ணிக்கொண்டு இருந்தாள்.
முதல் நாள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் இந்த இரண்டு நாட்களும் அதை வாங்க இதை வாங்க என்று வேண்டிய பொருட்களை விட தேவை இல்லாத பொருட்களை வாங்கி குவித்து இருந்தாள்.
அதற்கு முக்கிய காரணம் விசாலாட்சி தான். தம்பியின் மகளுக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொள்ளட்டும் என்று அவளிடம் ஒரு கற்றை பணத்தை கனகா… வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல ஷிவுவிற்கு கொடுத்துவிட்டார்.
திடீர் என்று இவ்வளவு பணம் கையில் இருக்க… ஷிவுவிற்குச் சொல்லவா வேண்டும்… செலவு செய்வதற்கு… வாங்கி குவித்து விட்டாள்.
ஆனால் ராதா அதற்கு நேர் எதிர்… விசாலாட்சி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தன்னிடம் இருக்கும் உடைகளே போதும் வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
ராதாவும் ஷிவுவும் கிளம்ப… அவர்களுடன் துர்காவும் ஆஃபீஸ் கிளம்புகிறேன் என்று கீழே வந்தவள் இரண்டு கைகளிலும் பைகளோடு வந்தவள் ஷிவுவிடம் சில பைகளையும், ராதாவிடம் சில பைகளையும் கொடுக்க, அதை வாங்கி ஆவலாக இருவரும் பிரித்துப் பார்க்க… அதில் இருவருக்கும் ஆடைகளும் சில அழகு சாதனப் பொருட்களும் இருந்தது. அதைப் பார்த்ததும் ஷிவு, “இதெல்லாம் என்ன எனக்கு இது எதுவுமே ஷூட் ஆகாது…” என்று வேண்டும் என்றே துர்காவை பிடிக்காதாதினால் அவள் வாங்கி வந்த பொருட்களையும் உதசீனப்படுத்திவிட்டு துர்கா வாங்கி வந்த பைகளை துர்காவிடமே கொடுத்துவிட்டு ஆஃபீஸிற்கு நேரம் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டுச் சென்றால்.
துர்கா கையில் பைகளை வைத்துக்கொண்டு ஏக்கமாகத் திரும்ப… ராதா…. துர்கா கொடுத்த பொருட்களைப் பார்த்துவிட்டு, “அக்கா… எனக்கு எதுக்கு இவ்வளவு செலவு செய்து வாங்குனீங்க…” என்று சொன்னவள் ஆனாலும் “எனக்கு எல்லாமே பிடிச்சிருக்கு” என்றவள்.
“நாளையில் இருந்து நீங்க வாங்கி கொடுத்ததை போட்டுட்டு போறேன் அக்கா…” என்று சொல்ல… ஷிவு கொடுத்த உடைகளையும் “இதையும் நீயே வெச்சுக்கோ ராதா” என்றால் துர்கா.
“அக்கா இதை எல்லாம் மாடர்ன் ட்ரெஸ்ஸா… இருக்கு… எனக்கு நீங்க வாங்கி கொடுத்ததே நிறைய இருக்கு இதை வேண்டாம்” என்று சொல்ல… “பரவாயில்லை ராதா நீ காலேஜ் போறே இல்லை… இதெல்லாம் போட்டு போட்டுட்டு போ..” என்றவள்.
விசாலாட்சியிடம் வந்து இன்று மாலை நடக்க இருக்கும் ஷோ பற்றிச் சொல்லி தானும் அதில் பங்கேற்கப் போவதாகச் சொல்லி விசாலாட்சியின் ஒப்புதலையும் பெற்ற பின்னரே ஆஃபீஸ் கிளம்பினால் துர்கா.
ஆதி தன் தந்தை சொன்னது போல கார்மெண்ட் உற்பத்தி செய்யும் இடத்திற்கு நேராகச் சென்று கொள்முதல் தொடர்பாக அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு வந்தான்.
ஆதி வெளியே வேலைகளைப் பார்க்கவும், ஆஃபீஸ் வேலைகளை வெங்கடாச்சலம் பார்க்கவும் சரியாக இருந்தது.
இரண்டு நாட்களாக இந்த வேலைகளில் பிஸியாக இருந்து விட்டான்.
வேலை… வேலை… என்று இருந்ததில் துர்காவின் டைரியை படிக்க… நேரம் கிடைக்கவில்லை.
இன்று ஆஃபீஸ் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு தன் கம்பெனி சார்பில் இந்தியாவில் நடக்க இருக்கும் ஃபேஷன் ஷோவை டென்மார்க்கில் இருந்த படியே தனது புதிய கிளையன்ட்களுடன் லைவ் ஷோவாகப் பார்க்கப் போகிறான்.
ஆதிக்கு இன்னும் துர்கா இந்த ஷோவில் மெயின் மாடல்களில் ஒருவளாக வரப் போகிறாள் என்று தெரியாது.
ஆதியின் ஆஃபீஸில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க…
இங்கே ஷோ நடக்கும் இடத்தில் மிகவும் பரபரப்பாக வேலைகள் நடந்து கொண்டு இருந்தது. மாடல்கள் அனைவரும் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறையில் ரெடியாகிக் கொண்டு இருக்க…
அங்கே துர்காவின் அறையில் அவளும் ஷோவிற்காக தயார் ஆகிக் கொண்டு இருந்தாள்.
தனது ப்ராஜெக்ட் சம்பந்தமாக நடக்க இருக்கும் ஷோ என்பதால் அங்கு சங்கவியும் வந்து இருந்தாள்.
அவளுக்கும் துர்கா மாடலாக வருவது தெரியாது. ஸ்டேஜில் விஐபிக்களுக்காகப் போடப்பட்ட முன் வரிசையில் சங்கவியும் அமர்ந்து இருந்தாள்.
அவளிடம் வந்த அவளது பர்சனல் மேனேஜர் இந்த ஷோவில் பங்கு பெறும் மாடல்களைப் பற்றிய விவரங்களும், மெயின் மாடல்களை பற்றிய விவரங்களும் கொடுக்க…
சங்கவி மற்ற மாடல்களைப் பற்றிய விவரங்களைப் பார்க்காமல். முதலில் இரண்டு மெயின் மாடல்கள் பற்றிய விவரங்களை பார்த்தவள், ஒரு மாடல் இந்த ஷோவிற்காக வெளிநாட்டில் இருந்து வரவைக்கப்பட்டவர் அவர் பெயர் சாரா… இவர் யு.எஸ்.ஏ வில் இருந்து இங்கே வந்திருக்கிறார்.
“இவரைச் சம்மதிக்க வைத்து இங்கே அழைத்து வர மிகவும் சிரமம் ஆகிவிட்டது. முதலில் வரச் சம்மதம் தெரிவிக்கவில்லை சாரா… ஆனால் துர்கா தான் அவரிடம் பேசி இந்த ப்ராஜெக்ட்டின் நோக்கத்தைப் புரிய வைத்து அவரை இந்த ஷோவிற்காகச் சம்மதிக்க வைத்து அவர் இங்கு வந்ததில் இருந்து அவர் செல்லும் வரை அவருக்கு எந்த இடைஞ்சல்களும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தங்கள் பொறுப்பு என்று பேசி வரவழைத்து விட்டாள்.”
முதலில் அந்த மாடலின் விவரங்கள் அனைத்தையும் படித்த சங்கவி.. அடுத்த மாடல் யார் என்று பார்ப்பதற்ககுப் பக்கத்தைத் திருப்ப… அதில் இருந்த துர்காவின் பெயரைப் பார்த்து அதிர்ந்து விட்டாள்.
சங்கவிக்கும் துர்கா ஏற்கனவே ஆதியின் கம்பெனி சார்பில் இரண்டு மூன்று முறை இந்த மாதிரி ஷோக்களில் பங்கேற்று நடித்திருக்கிறாள் என்பது தெரியும். அப்போதெல்லாம் துர்காவின் மேல் சங்கவிக்கு கோபம் வரும். இவளை அனைவரும் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள் என்று. ஆனால் இது ஆதியின் கம்பெனி இதில் நாம் தலையிட்டால் தன்னுடைய வேலையில் பாதிக்கும் என்று கண்டும் காணாமலும் விட்டு விடுவாள்.
ஆனால் இப்போது நடக்க இருக்கும் ஷோ சங்கவியின் கம்பெனியின் முக்கிய ப்ராஜெக்ட். இதில் துர்காவை மெயின் மாடலாகப் போட்டு… மேடையில் அவள் எதுவும் சொதப்பி விட்டால் தன்னுடைய ப்ராஜெக்ட்ற்குப் பாதிப்பு வருமே என்று யோசித்தால் சங்கவி.
உடனே எழுந்து நேராக துர்காவின் அறையைத் தேடிக்கொண்டு செல்ல… அங்கே துர்காவுடன் சாராவும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அந்த மாடலின் முன் துர்காவிடம் பேசுவது நன்றாக இருக்காது என்று நினைத்தாள் சங்கவி. துர்காவிடம் “ஒரு நிமிஷம் வெளியே வா” என்று சொல்லிவிட்டு சாராவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு வெளியே சென்றால் சங்கவி.
சாராவிடம் கூறிவிட்டு துர்கா சங்கவியைப் பார்க்க வெளியே வர அவளுக்காகக் காத்திருந்த சங்கவி துர்கா வெளியே வந்ததும் அவளை இழுத்துக்கொண்டு அந்த அறையை விட்டுச் சிறிது தள்ளிப் போய் நிற்க…
சங்கவி துர்காவின் கையைப் பிடித்து இழுத்துச் செல்வதைப் பார்த்த விக்கியும், கதிரும் அங்கே வந்தவர்கள் இவர்கள் பின்னால் ஓட….
அறையை விட்டுச் சிறிது தூரம் வந்த பின் துர்காவின் கையை விட்டவள். விக்கியும், கதிரும் அங்கே வருவதைக் கவனித்தவள் அவர்கள் இருவரையும் பார்த்து, “என்னோட ப்ராஜெக்ட்ற்கு எதற்கு இவளை மெயின் மாடலாகப் போட்டிருக்கீங்க…”
“இவளுக்கு இந்த மாடலிங்கில் என்ன தெரியும்… இவளே ஒரு வேலைக்காரி… மாச சம்பளத்துக்கு வேலைக்கு வரவ எல்லாம் மாடல் ஆக முடியுமா… என்ன….” என்று துர்காவை அவமானப்படுத்த…
கதிர் சங்கவியைப் பார்த்து… “இங்க பாரு சங்கவி தேவை இல்லாம துர்காவை பேசாதே.. அவ இதுக்கு முன்னயே வேற ப்ராஜெக்ட்டிற்கு நம்ம கம்பெனி சார்பில் மாடலாகக் கலந்துகொண்டு அதை சிறப்பாகச் செய்து கொடுத்திருக்கிறாளே…”
“நீ அவள் திறமையைப் பார். தேவை இல்லாம அவளை வாய்க்கு வந்ததெல்லாம் பேசும் வேலையை வச்சுக்காதே….” என்றான் கதிர்.
“ஆமா அப்போ அவ மாடலிங் பண்ணினா யாரு இல்லைன்னு சொன்னா… அது எல்லாம் சின்ன சின்ன ப்ராஜெக்ட்ஸ்… எப்பவுமே உங்க கம்பெனியில் ஓரிய ப்ராஜெக்ட்டுக்கு மெயின் மாடலாக சாரா போன்ற பெரிய மாடல்களைத் தானே அழைத்து வருவீர்கள்.”
“இந்த முறை அந்த மெயின் மாடல் சாராவுக்கு இணையாக இவளையும் எதற்குச் சேர்த்து வைத்து இருக்கிறீர்கள்.”
“என்னுடைய ப்ராஜெக்ட் எதுவும் இவளால் சொதப்பி விட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். இந்தப் ப்ராஜெக்ட் எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்குத் தெரியுமா தெரியாதா… ஒன்றுமே தெரியாதவளிடம் போய் இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்து இருக்கிறீர்கள்…” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி துர்காவை மிகவும் அவமானப் படுத்தினால்.
இதை எல்லாம் கேட்டு துர்கா மிகவும் சங்கடத்துடன் நின்று இருக்க…. சங்கவியின் வசவுச் சொற்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இவ்வளவு நேரம் துர்காவுக்கு இருந்த தன்னம்பிக்கை முழுவதும் சங்கவியின் வசவுச் சொற்களால் வடிந்து மிகவும் பதட்டம் கொள்ள ஆரம்பித்தாள்.
விக்கியும் கதிரும் சங்கவியைப் பேசிச் சமாதானம் செய்ய, “நீ சொல்ற மாதிரி எந்தத் தப்பும் நடக்காது.”
“துர்கா அப்படி எதுவும் நடக்க விடமாட்டாள். எங்களுக்கு அவள் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது” என்று சொல்லி சங்கவியைச் சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் சங்கவி விடாப்பிடியாக துர்கா இதில் பங்கேற்கக் கூடாது என்று சொல்லுவிட்டாள்.
எவ்வளவு சொல்லியும் சங்கவி கேட்கவே இல்லை… இவர்கள் எல்லாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்த துர்கா… பொறுமை இழந்து “போதும் நிறுத்துறீங்களா…” என்று கத்தினால்.
அவளைத் திரும்பிப் பார்த்த மூவரும் துர்காவின் கோபமான முகத்தைப் பார்க்க… அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு.
“நான் இந்த ஷோவில் கலந்து கொள்ளவில்லை” என்றால். அவள் அப்படிச் சொன்னதும் சங்கவிக்கு அப்பாடா… என்று இருந்தது.
கதிரும், விக்கியும் துர்காவிடம் வந்து, “துர்கா… இப்படி லாஸ்ட் மினிட்ல வேணாம்னு சொல்லாத… இது சரியா வராது… நீ தான் அந்த ட்ரெஸ்ஸுக்கு ஃபிட் ஆஹ் இருப்பே… நீ இப்போ வேண்டாம்னு சொல்லிட்டா…. லாஸ்ட் மினிட்ல யாரை போய்ப் நாங்க தேடுறது.”
“இது ரொம்ப ரிஸ்க் நீ யார் சொல்றதையும் கேட்காதே…. பேசாமல் இரு” என்று விக்கியும் கதிரும் மாற்றி மாற்றி அவளிடம் பேச… அவர்கள் பேசுவதைத் தடுத்தவள்.
“நீங்க ரெண்டு பேரும் என்னோட ஃபிரெண்ட்ஸ்.. நான் எப்படி இருந்தாலும் என்னை எதுக்குவீங்க… ஆனா இது ரொம்ப முக்கியமான ஷோ… இது என்னால பிரச்சனை ஆகிவிடக் கூடாது ..”
“மெயின் மாடல்களில் நான் இரண்டாவதாகத் தானே இருக்கிறேன். மெயின் மாடல் சாரா தானே… அதனால் நீங்கள் இந்த ஷோவைப் பற்றிப் பயப்பட வேண்டியது இல்லை… வேற மாடலைச் சீக்கிரம் ரெடி பண்ணுங்க. நான் போய்ப் மற்ற வேலைகளைப் பார்க்கிறேன் நமக்கு டைம் இல்லை.. மற்ற கம்பெனிகள் எல்லாம் தயாராக இருக்கிறார்கள்” என்று சொல்ல…
“துர்கா சொன்னா கேளு… இப்போ போய்ப் நீ இப்படிச் சொன்னா… நாங்க மெயின் மாடலுக்கு என்ன பண்ணுவது…. லாஸ்ட் மினிட்ல எங்கே போய்த் தேடுவது” என்று இருவரும் புலம்ப…
“நான் வேண்டும் என்றால் துர்காவுக்குப் பதிலாகப் போகிறேன்” என்றால் சங்கவி…
இவள் கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியாக அவளைப் பார்க்க…
“என்ன அப்படியாப் பாக்குறீங்க… இவ எல்லாம் மாடலிங் பண்ண தைரியமா பண்ற அப்போ… என்னோட காலேஜில் நாம் நிறைய ராம்ப் வாக் பண்ணிருக்கேன். எனக்கும் இதை எல்லாம் இவளை விட நன்றாகவே தெரியும்.”
“இவள் இந்த ஷோவைச் சொதப்புவதற்குப் பதிலாக… நானே என்னோட ப்ராஜெக்ட்டுக்கு மாடலாக இருப்பது தான் சரியாக இருக்கும்” என்றவள். துர்காவைப் பார்த்து, “ஏய் பியூ… என்னப் பாத்துட்டு நிக்கிற… சீக்கிரம் எனக்கு என்ன தேவையோ அதெல்லாம் ரெடி பண்ண வேண்டாமா… வா என் பின்னால்” என்று துர்காவை அதிகாரம் செய்துவிட்டுத் திமிராகத் திரும்பி முன்னாள் நடந்தால்.
துர்கா கதிரையும், விக்கியையும் பார்த்து… சங்கவிக்குத் தேவையான அவள் ஆடைக்குத் தகுந்த பொருட்களை வாங்கி வரச் சொல்லிவிட்டுச் சங்கவியின் பின்னே நடந்தால்.
