Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 70

உன் ரகசிய ரசிகை நான் 70

by Layas Tamil Novel
516 views

EPISODE 70

துர்கா ஆதியின் தி ஃபேஷன் கம்பெனியின் சார்பில் நடந்த ஷோவில் ஒரே இரவில் பிரபலமாகி விட்டாள்.

காலையில் எழுந்து தன் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த ஷிவு அன்றைய சோசியல் மீடியா முழுவதும் துர்காவைப் பற்றியே நிறைய செய்திகள் வந்திருக்க அதைப் பார்த்து துர்கா இவ்வளவு பிரபலம் ஆனதைக் கண்டு ஆத்திரம் கொண்டாள் ஷிவு.

இதையெல்லாம் பார்த்து எரிச்சல் அடைந்த ஷிவு சங்கவிக்குக் கால் செய்ய… கால் செய்த இரண்டு ரிங்கில் சங்கவி போனை எடுத்து ஹலோ… என்று சொல்ல…

“ஹலோ என்ன சங்கவி அக்கா… இவ்வளவு காலையிலேயே எழுந்திருச்சிட்டிங்களா? நான் கால் பண்ண உடனே போன் எடுத்துட்டீங்க” என்று ஷிவு கேட்க, “எங்கே நான் தூங்கினால் தானே எழுந்திருக்கிறதுக்கு… சரி நீ எதுக்கு இவ்வளவு காலையில் கால் பண்ணி இருக்க… எதுவும் முக்கியமான விஷயமா” என்று கேட்டாள் சங்கவி.

“ஆமா அக்கா… நீங்க நேத்து அந்த துர்கா கலந்துகிட்ட ஷோவில நீங்களும் மாடலா போயிருந்தீங்களா?” என்று ஷிவு கேட்க.

அவள் கேட்டதும் கடுப்பான சங்கவி “ஆமா… அதுக்கு என்ன இப்போ…” என்றால் எரிச்சலாக.

“அக்கா ஏன் இப்படி கோவப்படுறீங்க…. நீங்க பேசாம அந்த துர்காவுக்குப் பதிலாகப் போய் இருக்கலாம். அவளை விட உங்களுக்கு தான் அந்த டிரஸ் நல்லா இருக்கும்.”

“ஆனா அந்த துர்கா நல்ல டிரஸ்ஸைப் போட்டுட்டு உங்களுக்கு அந்த ட்ரெஸ்ஸை கொடுத்துட்டா போலேயே” என்று சும்மா இருந்த சங்கவியை ஏற்றி விட…

“ஆமா ஷிவு… எனக்கு அவ வேணும்னே அப்படி பண்ணி இருக்கா… உடைந்த ஹீல்ஸைக் கொடுத்து அத்தனை பேர் முன்னிலையில் என்னை விழ வைத்து அவமானப்படுத்திவிட்டு அனைவர் முன்னிலையில் அவள் நல்லவளாகக் காட்டிக் கொண்டாள்” என்றால் சங்கவி.

“ஆமா அக்கா… அந்த துர்கா போட்டிருந்த டிரஸ் தான் நேத்து நடந்த ஷோவிலேயே அதிகமான விலைக்கு விற்று விட்டதாகப் போட்டிருக்காங்களே அது நிஜமா?” என்று கேட்டாள்.

சங்கவியும், “ஆமாம். என்ன தான் அது எங்கள் கம்பெனியினுடைய ப்ராஜெக்ட்டா இருந்தாலும். அவளை அணிந்த ஆடையை விற்று வந்த பணம் எனக்கு வேண்டாம் என்று எனக்கு வர வேண்டிய பங்கை நான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்” என்றால் சங்கவி.

“என்ன அக்கா பல லட்சம் பணம் உங்களுக்கு வர வேண்டிய பணத்தை வேண்டாம்னு சொல்லிட்டீங்களா!!” என்றால் ஆச்சர்யமாக.

“ஆமாம் ஷிவு” என்று சொன்னாள் சங்கவி.

சங்கவி இப்படி தனக்கு வரவேண்டிய பல லட்சம் பணத்தை வேண்டாம் என்று சொல்லியதை நினைத்து அவள் எவ்வளவு பெரிய பணக்காரியாக இருக்க வேண்டும் என்று அவளை நினைத்து பொறாமை கொண்டாள் ஷிவு…

(ஆனால் சங்கவி நேற்று நடந்த ஷோவில் அத்தனை களேபரம் செய்த பின்பும் தனக்கு வர வேண்டிய பங்கை சரியாகக் கேட்டுத் தன் அக்கவுன்ட்டில் வருமாறு வாங்கிக் கொண்டாள் என்று ஷிவுவுக்குத் தெரியாதே… ரீடர்ஸ் ஷ்… யாரும் ஷிவு கிட்ட சொல்லிராதீங்க…)

ஷிவுவும் சங்கவியும் துர்காவை வேண்டிய அளவிற்குத் திட்டிவிட்டு அதன் பிறகே இருவரும் ஓய்ந்தனர். பிறகு ஷிவுவுக்கு ஆஃபீஸிற்கு நேரம் ஆகிவிட்டதால் போனை வைப்பதாகச் சொல்ல…

சங்கவி அவளை மாலை சந்திப்பதாகக் கூறி ஒரு காஃபி ஷாப்பில் காத்திருக்குமாறு சொல்லிவிட்டுப் போனை வைத்தாள்.

நேற்று விக்கி, கதிர், துர்கா. மூன்று பேரும் சேர்த்துத் தன்னைப் பிணைக் கைதி போல எவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்து அதிகாலை வரை வைத்திருந்ததை நினைத்த சங்கவி அவர்கள் மூவரின் மீதும் அளவு கடந்த ஆத்திரத்தில் இருந்தாள்.

சங்கவியும் ஆதியின் ஆஃபீஸிற்கு கிளம்பிச் சென்றாள். காரை நிறுத்தி விட்டுச் சங்கவி கீழே இறங்க சரியாக ஆஃபீஸின் முன்பாக முன்பு டிரம்ஸ் வாசிக்க… அவர்கள் மேல் இருந்த பேனரைப் பார்த்த சங்கவி அதில் இவளுடைய கம்பெனியின் பெயரையும், ஆதியின் கம்பெனியின் பெயரையும் கொட்டை எழுத்தில் போட்டு அதன் கீழ் நேற்று நடந்த ஷோவைப் பெருமைப் படுத்தும் விதமாக எழுதி இருக்க…

தன்னுடைய கம்பெனியின் சார்பில் தன்னை வரவேற்கத் தான் இந்த ஏற்பாடு என்று நினைத்த சங்கவி சிரித்த முகமாக நடந்து வர….

திடீர் என்று அங்கு பட்டாசு வெடிக்கப்பட்டது… அதில் சற்று அதிர்ந்து அப்படியே சங்கவி நிற்க… பட்டாசுகள் வெடித்து முடிந்ததும் இந்த ஏற்பாடுகளும் தனக்குத் தான் என்று நினைத்துக் கொண்டே கடந்து சங்கவி வர…

பட்டாசு வெடித்து முடிந்ததும் அந்த இடம் முழுவதும் புகையுடன் காட்சி அளிக்க… அதில் இருந்து துர்கா மிகவும் ஸ்டைலாக வெளியே வர….

தேவ லோகத்தில் மேகங்களின் புகைகளுக்கு நடுவில் இருந்து வரும் தேவலோக ரம்பை, ஊர்வசி, மேனகையை விட… மிகவும் அழகாக நடந்து வந்தாள்.

துர்கா புகையைத் தாண்டி வரவும் அவளை வரவேற்பதற்காக நின்று இருந்த ஆஃபீஸ் ஸ்டாஃப்களும் கதிர், விக்கியும் நின்று இருக்க..

அவர்களைப் பார்த்ததும் லேசாகச் சிரித்துக்கொண்டு வந்த முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள். தங்களைப் பார்த்து மட்டும் முகத்தை உர்ரென்று வைத்திருந்த துர்காவைப் பார்த்து “ஏன் துர்கா… முகத்தை இப்படி வெச்சிருக்கே? என்ன ஆச்சு துர்கா?” என்று விக்கி கேட்க.

“காலையில் நீங்க ரெண்டு பேரும் ஆஃபீஸ் கிளம்பும்போது நானும் உங்க கூட வரேன்னு சொல்லிட்டுத் தானே நைட் தூங்க போனேன்.”

“என்னை விட்டுட்டு நீங்க மட்டும் இங்கே வந்துட்டீங்க…” என்று அவர்களிடம் கோபித்துக் கொள்ள… “உன்னை எங்க கூடவே கூட்டிட்டு வந்திருந்தா இதெல்லாம் எப்படி நாங்க ரெடி பண்ணி இருக்க முடியும் துர்கா….” என்று சொன்ன கதிர்.

துர்காவின் கையைப் பிடித்து இழுத்து அனைவருக்கும் நடுவில் நிறுத்தி வைத்தவன் தன் கைகளைத் தட்ட… துர்கா நின்று இருந்த இடத்தின் மேல் இருந்து பூக்கள் சரசரவென அவள் மீது விழுந்து அவளைப் பூக்களாலேயே வரவேற்றனர்.

ஆஃபீஸ் ஸ்டாஃப்கள் அனைவரும் துர்காவின் திறமையால் தான் நேற்று நடந்த ஷோ மிகவும் பிரபலம் ஆனது என்று அனைவரும் அவளைப் பாராட்டி பூங்கொத்து கொடுத்து துர்காவை வரவேற்றனர்.

அவளை அழைத்துக் கொண்டு அனைவரும் உள்ளே செல்ல உள்ளே நின்று இருந்த லதாவும், விவேக்கும் தனியாக நின்று பூங்கொத்து கொடுத்து அவளை வரவேற்று “வாங்க துர்கா மேடம்… இன்றிலிருந்து நீங்க ஆதி சாருடைய பியூ கிடையாது.”

“இந்த ஆஃபீஸிற்கு நீங்கள் இத்தனை நாள் பியூவா இருந்து இப்போ மாடலா ப்ரோமோஷன் வாங்கிருக்கீங்க…. வாழ்த்துக்கள்” என்று சொல்லிவிட்டு….. “மேடம் என்னை உங்க அசிஸ்டன்டா சேர்த்துக்கறீங்களா” என்று விவேக் கேட்க… அவன் கூறியதைக் கேட்டதும்.

“டேய் நான் தான் துர்காவுக்கு அசிஸ்டன்டா இருப்பேன். நீ வேண்டும் என்றால் துர்காவுடைய கால்ஷீட் எல்லாம் பார்த்துக்கிற எடுபுடியா இருந்துக்கோ…” என்றால் லதா.

“அதெல்லாம் முடியாது நான் தான் துர்காவுக்கு அசிஸ்டன்டா இருப்பேன். அப்போதான் ஏசி ரூமிலேயே எப்போதும் குழுவென்று இருக்கலாம். ஆனால் நீ சொல்ற வேலை எல்லாம் வெளியில் சென்று வெயிலில் அலைய வேண்டி இருக்கும் என்னால முடியாது” என்றான் விவேக்.

இதைக் கேட்டுச் சிரித்த துர்கா…. “நான் சொல்றேன் எனக்கு அசிஸ்டன்ட் லதா… என்னோட மேனேஜர் விவேக்…. நீங்க ரெண்டு பேரும் தேவை இல்லாம சண்டை போட்டு என் டைமை வேஸ்ட் பண்ணாதீங்க” என்று விட்டுத் தன் கையில் இருந்த ஹேண்ட்பேக்கை லதாவின் கையில் கொடுத்துவிட்டு லதாவையும் விவேக்கையும் பார்த்து “ஃபாலோ மீ…” என்று முன்னே நடக்க..

அவர்கள் இருவரும் துர்காவைப் பார்த்து வாயை பிளக்க…

அவளை முன்னாள் நின்று இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த விக்கியும், கதிரும் துர்காவை அதிசயம் போலப் பார்த்தவர்கள், “ஏய் துர்கா…. ம்ம்…. ஒரே நைட்ட்டில் மாறிட்டியே” என்று கதிர் சொல்லி கிண்டல் செய்ய…

“எப்படி நல்லா இருக்கா…” என்று துர்கா கேட்க… “சூப்பரு….” என்ற விக்கி “வாங்க மேடம்” என்று அவள் முன்பு கைகட்டி குனிந்து நின்று வரவேற்பது போல நடிக்க… துர்கா தன் கையில் இருந்த கண்ணாடியை எடுத்து ஸ்டைலாகத் தன் கண்களில் மாட்டியவள் கதிரைப் பார்த்து “ஹேய்… மேன் நீ மட்டும் என்ன சும்மா… நிக்குறே…. இந்த எனக்குக் கை ரொம்ப வலிக்குது இந்த மொபைலை. கொண்டு வா…” என்று அவனிடம் ஸ்டைலாகப் பேசுவது போலப் பாவனை செய்து தன் கையில் இருந்த போனை தூக்கிக் கதிர் புறம் வீச… அவன் சரியா தன்ன நோக்கிப் பறந்து வந்த மொபைலை கேட்ச் பிடித்தவன் துர்காவைப் பார்த்து “ஏய்… துர்கா…. இது ரொம்ப ஓவரு…” என்றான்.

“ஓவரா… இருந்தா… போய்ப் ஓரமா உக்காரு மேன் இங்க ஏன் என் வழியை மறிச்சுட்டு நிக்குறே….” என்று அவனைப் பார்த்துத் தன் கையை நகரு என்பது போல ஆட்ட…. கதிர் அவள் வழியில் இருந்து ஒதுங்கிக் கொண்டு “நீங்க போங்க மேடம்….” என்று சொல்லிப் பவியமாக நின்றான்.

துர்கா முன்னே நடக்க… லதா துர்காவின் ஹேண்ட்பேக்குடனும்… விவேக் மேனேஜர் போல ஒரு பையை அக்குளில் வைத்துக்கொண்டு… அருகில் இருந்த நோட்டையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு…. விக்கி கை கட்டிக்கொண்டு அவள் உடனே நடந்து செல்ல பின்னால் கதிர் கையில் இருந்த மொபைலை எடுத்து காதில் வைத்து… “ஹலோ… துர்கா மேடம் இப்போ ரொம்ப பிஸியா இருக்காங்க… அவங்க கிட்ட இப்போ பேச முடியாது நீங்க இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு போன் பண்ணுங்க” என்று சொல்லிக் கொண்டே அவர்களுடன் சென்றான்.

இதை அனைத்தையும் ஆஃபீஸ் வாசலில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த… சங்கவி இவ்வளவு நேரம் வயிற்றெரிச்சலுடன் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

தன்னை வரவேற்கத்தான் இத்தனை ஏற்பாடுகள் என்று நினைத்து இருந்தவள் அனைவரும் துர்காவைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதைப் பார்த்துவிட்டு…. “ஏய் துர்கா… என்னோட கம்பெனி காசில் ஷோவில் கலந்துட்டு பிரபலம் ஆகிவிட்டு…. இன்று எனக்கு முன்னாலேயே மிகவும் திமிருடன் நான் நிற்பது கூடத் தெரியாமல் இருக்க இல்ல… இதுக்கெல்லாம் ஒரு நாள் நான் உனக்கு வட்டியும் முதலுமா… சேர்த்து வைத்துக் கொடுக்கிறேன் பாரு” என்று. புலம்பியவள் கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க…. தன் காலைத் தரையில் உதைத்து விட்டு…. அலுவலகத்திற்குள் வராமல் அப்படியே திரும்பிச் சென்று விட்டாள்.

அவள் திரும்பிச் சென்றதை கதிரின் அலுவலகக் கதவை லேசாகத் திறந்து வைத்துவிட்டு கீழே படுத்துக்கொண்டு விவேக்… அவன் மேல் சாய்ந்து கொண்டு லதா… அவள் தோல் மீது கைவைத்து குனிந்து நின்ற படி துர்கா… அவள் தோளில் கைவைத்துக் கொண்டு விக்கி…. அவன் தோளை அழுத்தப் பிடித்து கால்களை உயர்த்தி கதிர் என அனைவரும் கதவின் ஓரம் நின்று சங்கவிக்குத் தெரியாமல் பார்க்க…

அவள் காரை எடுத்துச் செல்லும் வரை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் சங்கவி சென்றுவிட்டால் என்று உறுதி படுத்திக்கொண்ட பிறகு கதவைச் சாற்றி விட்டு எழுந்த அனைவரும் தங்கள். கைகளை ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றித் தட்டிக் கொண்டு “சக்ஸஸ்” என்று சொல்லிக் கூச்சல்லிட…..

“ஏய் துர்கா… சும்மா சொல்லக்கூடாது நீ அந்த சங்கவிய ரொம்ப ஓவரா…. டீஸ் பண்ணிட்டே… அவ என்ன செய்யப் போறாளோ…” என்று கதிர் சொல்ல… “நான் மட்டுமா ஓவரா… பண்ணினேன். நீங்க எல்லாரும் என் கூடச் சேர்ந்து எனக்கு கோ ஆப்பரேட் பண்ணீங்க பாருங்க…. அது தான் சான்சே இல்லை” என்று கூறிச் சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured