Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 71

உன் ரகசிய ரசிகை நான் 71

by Layas Tamil Novel
356 views

EPISODE 71

துர்கா ஆதியின் ‘தி பேஷன் கம்பெனி’ சார்பில் நடந்த ஷோவில் ஒரே இரவில் துர்கா பிரபலமாகிவிட்டாள்.

காலையில் எழுந்த ஷிவு தன் ஃபோனை நோண்டிக்கொண்டிருந்தபோது, அன்றைய சமூக ஊடகங்கள் முழுவதும் துர்காவைப் பற்றியே நிறைய செய்திகள் நிறைந்திருந்தன. அதைப் பார்த்த ஷிவு, துர்கா இவ்வளவு பிரபலம் ஆனதைக் கண்டு ஆத்திரம் கொண்டாள்.

இதையெல்லாம் பார்த்து எரிச்சல் அடைந்த ஷிவு, சங்கவிக்குக் கால் செய்ய, இரண்டு ரிங்கில் சங்கவி போனை எடுத்து “ஹலோ…” என்றாள்.

“ஹலோ என்ன சங்கவி அக்கா? இவ்வளவு காலையிலேயே எழுந்திருச்சிட்டீங்களா? நான் கால் பண்ண உடனே போன் எடுத்துட்டீங்க,” என்று ஷிவு கேட்க, “எங்கே நான் தூங்கினால்தானே எழுந்திருப்பதற்கு? சரி, நீ எதுக்கு இவ்வளவு காலையில் கால் பண்ணியிருக்க? எதுவும் முக்கியமான விஷயமா?” என்று கேட்டாள் சங்கவி.

“ஆமா அக்கா. நீங்க நேத்து அந்த துர்கா கலந்துகிட்ட ஷோவில் நீங்களும் மாடலா போயிருந்தீங்களா?” என்று ஷிவு கேட்க,

அவள் கேட்டதும் கடுப்பான சங்கவி, “ஆமா… அதுக்கு என்ன இப்போ?” என்றால் எரிச்சலாக.

“அக்கா, ஏன் இப்படி கோபப்படுறீங்க? நீங்க பேசாம அந்த துர்காவுக்குப் பதிலாப் போயிருக்கலாம். அவளைவிட உங்களுக்குத்தான் அந்த டிரஸ் நல்லா இருக்கும். ஆனா, அந்த துர்கா நல்ல டிரஸ்ஸைப் போட்டுட்டு, உங்களுக்கு அந்த டிரஸ்ஸைக் கொடுத்துட்டா போலயே,” என்று சும்மா இருந்த சங்கவியைத் தூண்டிவிட்டாள் ஷிவு.

“ஆமா ஷிவு… எனக்கு அவ வேணும்னே அப்படி பண்ணியிருக்கா. உடைந்த ஹீல்ஸைக் கொடுத்து அத்தனை பேர் முன்னிலையில் என்னை விழவைத்து அவமானப்படுத்திவிட்டு, அனைவர் முன்னிலையில் அவள் நல்லவளாகக் காட்டிக்கொண்டாள்,” என்றால் சங்கவி.

“ஆமா அக்கா… அந்த துர்கா போட்டிருந்த டிரஸ்ஸ்தான் நேத்து நடந்த ஷோவிலேயே அதிகமான விலைக்கு விற்றுவிட்டதாகப் போட்டிருக்காங்களே, அது நிஜமா?” என்று கேட்டாள்.

சங்கவியும், “ஆமாம். என்னதான் அது எங்கள் கம்பெனியினுடைய ப்ராஜெக்ட் ஆக இருந்தாலும், அவ அணிந்த ஆடையை விற்று வந்த பணம் எனக்கு வேண்டாம் என்று எனக்கு வர வேண்டிய பங்கை நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்,” என்றால் சங்கவி.

“என்ன அக்கா! பல லட்சம் பணம் உங்களுக்கு வர வேண்டிய பணத்தை வேண்டாம்னு சொல்லிட்டீங்களா?” என்றால் ஆச்சரியமாக.

“ஆமாம் ஷிவு,” என்று சொன்னாள் சங்கவி.

சங்கவி இப்படி தனக்கு வரவேண்டிய பல லட்சம் பணத்தை வேண்டாம் என்று சொல்லியதை நினைத்து, அவள் எவ்வளவு பெரிய பணக்காரியாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அவள் மீது பொறாமை கொண்டாள் ஷிவு.

ஆனால், சங்கவி நேற்று நடந்த ஷோவில் அத்தனை களேபரம் செய்த பின்பும் தனக்கு வர வேண்டிய பங்கைச் சரியாகக் கேட்டுத் தன் அக்கவுன்டில் வருமாறு வாங்கிக்கொண்டாள் என்று ஷிவுவிற்குத் தெரியாதே!

ரீடர்ஸ்! ஷூ… யாரும் ஷிவு கிட்ட சொல்லிராதீங்க!

ஷிவுவும் சங்கவியும் துர்காவைத் திட்டிவிட்டு, அதன் பிறகே இருவரும் ஓய்ந்தனர். பிறகு, ஷிவுவிற்கு ஆஃபீஸுக்கு நேரம் ஆகிவிட்டதால் போனை வைப்பதாகச் சொல்ல,

சங்கவி அவளை மாலையில் சந்திப்பதாகக் கூறி ஒரு காபி ஷாப்பில் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

❤️

நேற்று விக்கி, கதிர், துர்கா மூன்று பேரும் சேர்ந்து தன்னைப் பணயக்கைதிபோல எவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்து அதிகாலைவரை வைத்திருந்ததை நினைத்த சங்கவி, அவர்கள் மூவர் மீதும் அளவு கடந்த ஆத்திரத்தில் இருந்தாள்.

சங்கவியும் ஆதியின் ஆஃபீஸுக்குக் கிளம்பிச் சென்றாள். காரை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிய சங்கவி, ஆபீஸின் முன்பாக டிரம்ஸ் வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததையும், அவர்கள் மேல் இருந்த பேனரையும் பார்த்தாள். அதில் இவளுடைய கம்பெனியின் பெயரையும், ஆதியின் கம்பெனியின் பெயரையும் பெரிய எழுத்தில் போட்டு, அதன் கீழ் நேற்று நடந்த ஷோவைப் பெருமைப்படுத்தும்விதமாக எழுதி இருந்தது.

தன் கம்பெனியின் சார்பில் தன்னை வரவேற்கத்தான் இந்த ஏற்பாடு என்று நினைத்த சங்கவி, சிரித்த முகமாக நடந்து வர…

திடீரென்று அங்கு பட்டாசு வெடிக்கப்பட்டது. அதில் சற்று அதிர்ந்து அப்படியே சங்கவி நிற்க, பட்டாசுகள் வெடித்து முடிந்ததும் இந்த ஏற்பாடுகளும் தனக்குத்தான் என்று நினைத்துக்கொண்டே சங்கவி கடந்து வர…

பட்டாசு வெடித்து முடிந்ததும் அந்த இடம் முழுவதும் புகையுடன் காட்சியளிக்க, அதில் இருந்து துர்கா மிகவும் ஸ்டைலாக வெளியே வந்தாள்.

தேவலோகத்தில் மேகங்களின் புகைகளுக்கு நடுவில் இருந்து வரும் தேவலோக ரம்பை, ஊர்வசி, மேனகையைவிட, மிகவும் அழகாக நடந்து வந்தாள்.

துர்கா புகையைத் தாண்டி வரவும், அவளை வரவேற்பதற்காக நின்றிருந்த ஆபீஸ் ஸ்டாஃப்களும், கதிர், விக்கியும் நின்று இருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் லேசாகச் சிரித்துக்கொண்டு வந்த முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள். தங்களைப் பார்த்து மட்டும் முகத்தை உர்ரென்று வைத்திருந்த துர்காவைப் பார்த்து, “ஏய் துர்கா… முகத்தை இப்படி வெச்சிருக்கே? என்ன ஆச்சு துர்கா?” என்று விக்கி கேட்க,

“காலையில் நீங்க ரெண்டு பேரும் ஆபீஸ் கிளம்பும்போது நானும் உங்ககூட வரேன்னு சொல்லிட்டுத்தானே நைட் தூங்கப் போனேன். என்னை விட்டுட்டு நீங்க மட்டும் இங்கே வந்துட்டீங்க…” என்று அவர்களிடம் கோபித்துக்கொள்ள, “துர்கா உன்னை எங்ககூடவே கூட்டிட்டு வந்திருந்தால் இதெல்லாம் எப்படி நாங்க ரெடி பண்ணியிருக்க முடியும்?” என்று சொன்ன கதிர்,

துர்காவின் கையைப் பிடித்து இழுத்து அனைவருக்கும் நடுவில் நிறுத்தி வைத்தவன் தன் கைகளைத் தட்ட, துர்கா நின்றிருந்த இடத்தின் மேலிருந்து பூக்கள் சரசரவென அவள் மீது விழுந்து அவளைப் பூக்களாலேயே வரவேற்றனர்.

ஆபீஸ் ஸ்டாஃப்கள் அனைவரும் துர்காவின் திறமையால்தான் நேற்று நடந்த ஷோ மிகவும் பிரபலமானது என்று அனைவரும் அவளைப் பாராட்டிப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அவளை அழைத்துக்கொண்டு அனைவரும் உள்ளே செல்ல, உள்ளே நின்றிருந்த லதாவும், விவேக்கும் தனியாக நின்று பூங்கொத்து கொடுத்து அவளை வரவேற்று, “வாங்க துர்கா மேடம்… இன்றிலிருந்து நீங்க ஆதி சாருடைய பி.ஏ. கிடையாது. இந்த ஆஃபீஸுக்கு நீங்கள் இத்தனை நாள் பி.ஏ.வாக இருந்து இப்போ மாடலாகப் ப்ரமோஷன் வாங்கியிருக்கீங்க… வாழ்த்துக்கள்,” என்று சொல்லிவிட்டு, “மேடம், என்னை உங்க அசிஸ்டன்டா சேர்த்துக்கிறீங்களா?” என்று விவேக் கேட்க, அவன் கூறியதைக் கேட்டதும்,

“டேய்! நான் தான் துர்காவுக்கு அசிஸ்டன்டா இருப்பேன். நீ வேண்டும் என்றால் துர்காவுடைய கால்ஷீட் எல்லாம் பார்த்துக் கொள்கிற எடுபிடியாக இருந்துக்கோ,” என்றால் லதா.

“அதெல்லாம் முடியாது. நான் தான் துர்காவுக்கு அசிஸ்டன்டா இருப்பேன். அப்போதான் ஏசி ரூமிலேயே எப்போதும் குழுவென்று இருக்கலாம். ஆனால், நீ சொல்ற வேலை எல்லாம் வெளியில் சென்று வெயிலில் அலைய வேண்டி இருக்கும், என்னால முடியாது,” என்றான் விவேக்.

இதைக் கேட்டுச் சிரித்த துர்கா, “நான் சொல்றேன். எனக்கு அசிஸ்டன்ட் லதா… என்னோட மேனேஜர் விவேக்… நீங்க ரெண்டு பேரும் தேவையில்லாம சண்டை போட்டு என் டைமை வேஸ்ட் பண்ணாதீங்க,” என்றுவிட்டு, தன் கையில் இருந்த ஹேண்ட்பேக்கை லதாவின் கையில் கொடுத்துவிட்டு, லதாவையும் விவேக்கையும் பார்த்து “ஃபாலோ மீ…” என்று முன்னே நடக்க,

அவர்கள் இருவரும் துர்காவைப் பார்த்து வாயைப் பிளந்தனர்.

அவளை முன்னாள் நின்று இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விக்கியும், கதிரும் துர்காவை அதிசயம் போலப் பார்த்தவர்கள், “ஏய் துர்கா… ம்ம்… ஒரே நைட்டில் மாறிட்டியே,” என்று கதிர் சொல்லி கிண்டல் செய்ய,

“எப்படி? நல்லா இருக்கா?” என்று துர்கா கேட்க, “சூப்பரு…” என்ற விக்கி, “வாங்க மேடம்,” என்று அவள் முன்பு கைகட்டி குனிந்து நின்று வரவேற்பதுபோல நடிக்க, துர்கா தன் கையில் இருந்த கண்ணாடியை எடுத்து ஸ்டைலாகத் தன் கண்களில் மாட்டிக்கொண்டவள், கதிரைப் பார்த்து “ஹேய் மேன், நீ மட்டும் என்ன சும்மா நிக்கிறே? எனக்குக் கை ரொம்ப வலிக்குது, இந்த மொபைலைக் கொண்டு வா,” என்று அவனிடம் ஸ்டைலாகப் பேசுவதுபோல பாவனை செய்து தன் கையில் இருந்த ஃபோனை தூக்கிக் கதிர் பக்கம் வீச, அவன் சரியாகத் தன்னை நோக்கிப் பறந்து வந்த மொபைலைக் கேட்ச் பிடித்தவன், துர்காவைப் பார்த்து “ஏய் துர்கா, இது ரொம்ப ஓவரு,” என்றான்.

“ஓவரா? இருந்தால் போய் ஓரமா உக்காரு மேன், இங்கே ஏன் என் வழியை மறிச்சுட்டு நிக்கிறே?” என்று அவனைப் பார்த்துத் தன் கையால் நகரு என்பதுபோல ஆட்ட, கதிர் அவள் வழியில் இருந்து ஒதுங்கிக்கொண்டு “நீங்க போங்க மேடம்…” என்று சொல்லி பணிவாக நின்றான்.

துர்கா முன்னே நடக்க, லதா துர்காவின் ஹேண்ட்பேக்குடனும், விவேக் மேனேஜர்போல ஒரு பையை அக்குளில் வைத்துக்கொண்டு அருகில் இருந்த நோட்டையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு, விக்கி கைகட்டிக்கொண்டு அவள் உடனே நடந்து செல்ல, பின்னால் கதிர் கையில் இருந்த மொபைலை எடுத்து காதில் வைத்து, “ஹலோ… துர்கா மேடம் இப்போ ரொம்ப பிஸியா இருக்காங்க. அவங்ககிட்ட இப்போ பேச முடியாது. நீங்க இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு போன் பண்ணுங்க,” என்று சொல்லிக்கொண்டே அவர்களுடன் சென்றான்.

இதை அனைத்தையும் ஆபீஸ் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த சங்கவி, இவ்வளவு நேரம் வயிற்றெரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னை வரவேற்கத்தான் இத்தனை ஏற்பாடுகள் என்று நினைத்திருந்தவள், அனைவரும் துர்காவைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதைப் பார்த்துவிட்டு, “ஏய் துர்கா… என்னோட கம்பெனி காசில் ஷோவில் கலந்துகிட்டு பிரபலமாகிவிட்டு, இன்று எனக்கு முன்னாலேயே மிகவும் திமிருடன் நான் நிற்பது கூடத் தெரியாமல் இருக்கிறாயா? இதுக்கெல்லாம் ஒரு நாள் நான் உனக்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து வைத்துக் கொடுக்கிறேன் பார்,” என்று புலம்பியவள், கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, தன் காலைத் தரையில் உதைத்துவிட்டு, அலுவலகத்திற்குள் வராமல் அப்படியே திரும்பிச் சென்றுவிட்டாள்.

அவள் திரும்பிச் சென்றதை, கதிரின் அலுவலகக் கதவை லேசாகத் திறந்து வைத்துவிட்டு, கீழே படுத்துக்கொண்டு விவேக், அவன் மேல் சாய்ந்துகொண்டு லதா, அவள் தோள் மீது கைவைத்து குனிந்து நின்றபடி துர்கா, அவள் தோளில் கைவைத்துக்கொண்டு விக்கி, அவன் தோளை அழுத்திப் பிடித்து கால்களை உயர்த்தி கதிர் என அனைவரும் கதவின் ஓரம் நின்று சங்கவிக்குத் தெரியாமல் பார்க்க,

அவள் காரை எடுத்துச் செல்லும்வரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், சங்கவி சென்றுவிட்டாள் என்று உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு கதவைச் சாற்றிவிட்டு எழுந்த அனைவரும் தங்கள் கைகளை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றித் தட்டிக்கொண்டு “சக்ஸஸ்!” என்று சொல்லிக் கூச்சலிட்டனர்.

“ஏய் துர்கா… சும்மா சொல்லக் கூடாது, நீ அந்த சங்கவியை ரொம்ப ஓவராக டீஸ் பண்ணிட்டே. அவள் என்ன செய்யப் போகிறாளோ,” என்று கதிர் சொல்ல, “நான் மட்டுமா ஓவராகப் பண்ணினேன்? நீங்க எல்லாரும் என்கூடச் சேர்ந்து எனக்குக் கோ-ஆப்பரேட் பண்ணினீங்க பாருங்க… அதுதான் சான்ஸே இல்லை,” என்று கூறி, சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured