Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 78

உன் ரகசிய ரசிகை நான் 78

by Layas Tamil Novel
387 views

EPISODE 78

சந்தோஷ் தன் இடுப்பைப் பார்த்துவிட்டான் என்று அவனிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டிற்குள் வர… “எனக்கு உரிமையானவளிடம் நான் அப்படி தான் நடந்து கொள்வேன்,” என்று சொன்னவன் ராதாவைத் தன் பக்கம் பிடித்து இழுத்து நிறுத்தியவன் அவள் தாவணிக்குள் கைவிட்டு அவள் வெற்று இடையை இருபுறமும் பிடித்தவன் அவளை அப்படியேத் தன் தலைக்கு மேலே தூக்கியவன் அவன் முகத்திற்கு நேராக அவள் வயிற்றைக் கொண்டு வந்தவன் அவள் இடையைப் பார்த்து….

“எப்படிடி… இடுப்பை இப்படிப் பளிங்கு மாதிரி வெச்சிருக்கே…” என்றவன். ராதாவை நிமிர்ந்து பார்த்து “இடுப்பழகி…” என்று அவளை அழைக்க… அவனை முறைத்தவள் அவள் பயத்தில் அவன் தோள்களில் தன் கைகளை வைத்துப் பிடித்துக்கொண்டு அவனை குனிந்து பார்த்தவள் “முதலில் என்னை இறக்கி விடுங்க…. இப்படி தான் டியூஷன் வந்தவ கிட்டே தப்பா நடந்துப்பீங்களா… என்னை இறக்கி விடுங்க… இல்லைன்னா…. நான் என் அப்பாகிட்டே சொல்லிடுவேன்,” என்று அவனை மிரட்டுவதாக நினைத்து அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருக்க…

அவள் பேசியதையெல்லாம் ரசித்தவன், “நான் இன்னும் உன்கிட்ட தப்பா நடந்துக்கவே இல்லை அதுக்குள்ள இவ்ளோ பேசுறே…. நான் தப்பு பண்ணின பிறகு உன் அப்பாகிட்ட சொல்லிக்கோ… சரியா….” என்றவன். குனிந்து அவன் கண்களுக்கு விருந்தாகிக் கொண்டு இருந்த அவள் இடுப்பைத் தன் மீசையால் வருடி விட….

அதுவரை அவனிடம் இருந்து கீழே இறங்குவதற்காகத் திமிறிக் கொண்டு இருந்த ராதா… அவள் இடையை அவன் மீசையால் வருடவும் முதலில் அதிர்ச்சியில் அவள் தட்டையான வயிறு உள்வாங்கிக்கொள்ள…. அவன் மீசையை வைத்து அவள் வயிற்றை வருடவும் கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தாள்.

அவள் நெளிவதை உணர்ந்தவன் தன் ஈர உதடுகளால் அவள் உயிர்ச் சுழியில் அழுத்த முத்தம் வைக்க…. அவன் தோளில் வைத்து இருந்த அவள் கைகள் தன்னை அறியாமல் அவன் தந்த முத்தத்தில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் தோளில் தன் கைவிரல்களை அழுத்திப் பிடிக்க…. சந்தோஷிற்கு… அவள் தன் தோளில் தந்த அழுத்தம் அவனை ஏதோ செய்ய…

அவளைப் பிடித்து இருந்த தன் பிடியைத் தன்னை அறியாமல் விட்டுவிட… அவன் மேல் இருந்த ராதா… நிலை தடுமாறி…. அப்படியே ராதா பின்னால் சாய…. இதைச் சற்றும் எதிர்பார்க்காதவன் நிலை தடுமாறிக் கீழே விழப்போனவளைத் தரையில் விழ விடாமல் அவளைத் தன் பக்கம் இழுத்து அவளோடு சேர்த்து சந்தோஷும் கீழே விழுந்தான்.

கீழே விழுந்த வேகத்தில் சந்தோஷ் நெற்றியில் அவள் நெற்றி வேகமாக மோத…. “ஷ்… ஆ….” என்று வழியில் இருவருமே… கத்தியவர்கள் பின் நிதானம் வந்தவர்களாக…. அவன் மீது இருந்து எழுந்துகொள்ள… அவன் மார்பின் மீது கை வைத்து அழுத்திவிட்டு எழுந்திருக்க…. அவள் கால்கள் அவன் வயிற்றில் வைத்து அவன் வயிற்றின் மீது ஏறி அப்படியும் இப்படியும் அசைந்து அவனிடம் இருந்து எழுந்து நிற்க…

அவள் வயிற்றில் மிதித்ததும் “அம்மா….” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறியவனைப் பார்த்து அவன் அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்து “அச்சோ வலிக்குதா….” என்று அவன் வயிற்றைத் தன் விரல்களால் ராதா… வருடிவிட…. அதுவரை எதுவும் யோசிக்காமல் இருந்தவனின் உணர்வுகள் அவள் தன் வயிற்றை மேலிருந்து கீழாக…. தடவிக் கொண்டு வரவும் அவன் எண்ணம் எங்கெங்கோ செல்ல…..

இதற்கு மேலும் அங்கு இருந்தால் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுவோம் என்று எண்ணியவன்…. தன் வயிற்றின் மீது வைத்திருந்த ராதாவின் கையைத் தட்டி விட்டவன் தரையில் இருந்து எழுந்து கதவைத் திறந்து வெளியே சென்று விட்டான்.

அவன் விட்டுச் சென்ற இடத்தில் அப்படியே நின்று இருந்த ராதா… முதலில் தன்னைச் சுற்றிப் பார்த்தவள் சந்தோஷ் வெளியே சென்றதைக் கண்டு சற்று நிம்மதி அடைந்தவள் குனிந்து அவள் இடையைப் பார்க்க… அவன் ஒதுக்கி இருந்த தாவணி அப்படியே இருக்க… அவசரமாக அதைச் சரி செய்தவள்.

உள்ளே சென்று தன் புத்தகத்தையும் போனையும் எடுத்துக் கொண்டவள் அறையை விட்டு வெளியே வர…. அப்போது வெளியே அவள் அப்பா பேசும் சத்தம் கேட்கவும் வேகமாக வெளியே வந்தவள் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் அவள் அப்பாவிடம் வந்தவள் “அப்பா போகலாம்,” என்று சொல்லிவிட்டு அவனை கடந்து செல்ல…. அவள் ஒருமுறையேனும் தன்னைப் பார்க்க மாட்டாளா என்று அவளையேப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் சந்தோஷ்.

“சரிங்க தம்பி நான் கிளம்புறேன்,” என்று சொல்லி பைக்கை ஸ்டார்ட் செய்து ராதாவை அமரச் சொல்ல… “அங்கிள் ஒரு நிமிஷம்,” என்று அவர் அருகில் வந்தவன். ராதாவிடம் வந்து “உன்னோட மொபைலைக் கொடு,” என்றான்.

அவள் புரியாமல் அவனைப் பார்க்க… “அங்கிள் என்கிட்டே ராதா நம்பர் இல்லை. முக்கியமா எதுவும் சொல்லனும்னா வேணுமில்லையா அதான் அவ போனை கேட்டேன்,” என்றான்.

“சரி தம்பி வாங்கிக்கோங்க,” என்று சொல்லிவிட்டு அவர் திரும்பிக் கொள்ள….. சந்தோஷ் ராதாவைப் பார்க்க…. அவளோ அவனைப் பார்த்து முறைத்துக்கொண்டுத் தன் மொபைலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

ராதாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவளிடம் இருந்து போனைப் பிடிங்கியவன் அவள் மொபைலில் இருந்து தன் மொபைலிற்கு கால் செய்தவன் அவள் நம்பர் வந்ததும் தன் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து அவள் நம்பரைப் பார்த்துவிட்டு கட் செய்தவன்.

அவள் கையில் போனை கொடுத்து, “இதுதான் என் நம்பர். சேவ் பண்ணிக்கோ…” என்றான். போனை அவனிடம் இருந்து பிடுங்கியவள் அவன் கண் முன்னே தன் மொபைலில் இருந்த அவன் நம்பரை பொறுக்கி என்று டைப் செய்து சேவ் செய்தவள் அவன் முகத்திற்கு நேராக மொபைலைக் காட்டி “சேவ் பண்ணிட்டேன் பார்த்துக்கோங்க,” என்று சொல்லி அவனிடம் காட்ட…

அதில் பொறுக்கி என்று பதிவு செய்யப்பட்டு இருப்பதைப் பார்த்ததும் முதலில் அதிர்ந்தாலும். பின் அவள் எவ்வளவு துணிச்சலாகத் தன்னிடமே காட்டுகிறாள் என்று நினைத்தவன். அவளிடம் குனிந்து ராதாவிற்கு மட்டும் கேட்கும்படி, “பொறுக்கி என்ன செய்வான் தெரியுமா…” என்றவன் அவளிடம் இருந்து தள்ளி நின்றவன்.

அவளைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு, “ஓகே அங்கிள்,” என்றவன். அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு அவள் அப்பாவிற்குத் தெரியாமல் அவள் இடையைத் தன் விரல்களால் வருடிவிட்டு பைக்கை விட்டுத் தள்ளி நின்று கொள்ள…

அவனை விழி விரித்து அதிர்ச்சியாகப் பார்த்தவளைக் கண்டுகொள்ளாதவன் போல… நின்றிருந்தவனைப் பார்த்து ராதா வெறி கொண்ட மட்டும் முறைக்க…. அவன் எதையும் பொருட்படுத்தாமல் நின்று அவன் அப்பாவைப் பார்த்து, “ஓகே அங்கிள் பார்த்து போயிட்டு வாங்க,” என்று சொல்லிவிட்டு அவர் வண்டியைச் செலுத்த…

அவர் பின்னால் தன்னை முறைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தவள் அவனைப் பார்த்து “பொறுக்கி,” என்று முனக….

அவள் உதட்டு அசைவைப் பார்த்து அவள் சொன்னதைப் புரிந்து கொண்டவன். “ஓஹோ….” என்று அவளையேப் பார்த்துப் பார்த்துத் தன் உதட்டைக் குவித்து காற்றில் முத்தம் வைத்தவன் தன் ஒற்றை விரலால் அவன் இதழை வருடி விட்டு அவள் இடையைப் பார்க்க…

அவன் எதற்கு அப்படிச் செய்கிறான் என்று புரிந்து கொண்டவளின் உயிர்ச் சுழியில் அவன் முத்தம் வைத்தது நினைவில் வந்து அவள் உடலில் மின்சாரம் பாய்வது போல உணர்ந்தவள் அதை அவனிடம் காட்டிகொள்ளாமல் தன் முகத்தைச் சட்டென்று திருப்பிக் கொண்டாள்.

‘இதுக்குத் தான் இவன் கிட்டே டியூஷன் வேணாம்னு சொன்னேன். இந்த அப்பா கேட்டாரா… வந்த முதல் நாளிலேயே இப்படி நடந்துகிறான். இவன் கிட்டே தினமும் நான் எப்படித் தனியா வந்து மாட்டிக்கணுமா….’ என்று யோசித்துக் கொண்டே அவள் அப்பாவுடன் சென்றாள்.


ஆதியைப் பார்த்ததும் அங்கு இருக்கப் பிடிக்காமல் ஆதி ஆபீஸ் கிளம்பிச் செல்ல…. அவனுடன் வெங்கடாச்சலமும் சென்று விட அதுவரை அமைதியாக நல்லவள் போல இருந்த சங்கவி தன் அறையை விட்டு வெளியே வந்தவள் ஹாலில் அமர்ந்து கொண்டு அங்கே வேலை பார்த்துக் கொண்டு இருந்த வேலை ஆளை அழைத்து… “ஏய் போய் எனக்கு ஆப்பிள் ஜூஸ் எடுத்துட்டு வா….” என்று மரியாதை இல்லாமல் திமிராகப் பேச….

சங்கவியை ஒரு மாதிரியாகப் பார்த்த அந்த வேலை ஆள் சமையல் அறை சென்று அவளுக்கு ஜூஸ் போட்டுக்கொண்டு வந்து கொடுக்கச் சொல்லிவிட்டு வந்து எப்போதும் போல… தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்க..

அவனை மீண்டும் அழைத்தவள் “உன்கிட்டே நான் என்ன சொன்னேன்… எனக்கு ஜூஸ் கொண்டு வரச் சொன்னேன் இல்ல…. நீ சும்மா வேலையைச் செய்யாம…. நீ பாட்டுக்கு உன்னோட வேலையைப் பாத்துட்டு இருக்கே…” என்று அவனை அதட்டினாள்.

அந்த வேலை ஆள் “என்னுடைய வேலை இது அல்ல… சமையல் அறையில் இருந்து வேலை ஆள் உங்களுக்கு ஜூஸ் கொண்டு வந்து தருவார்,” என்று சொல்ல…

“நான் உன்கிட்டே வேலை சொன்னா நீதான் செய்யணும்….” என்று சொல்லி சோபாவில் இருந்து எழுந்து அந்த வேலை ஆளிடம் சென்று அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள்.

“நீ சொல்றதை எல்லாம் கேட்க உனக்கு இங்கே சம்பளம் கொடுக்கல சரியா… ஒழுங்கா நான் சொல்ற வேலையைச் செஞ்சுட்டு இங்கே இருக்குறதா இருந்தா இரு… இல்லைன்னா இப்பவே வேலையை விட்டுட்டு நீங்க போலாம்,” என்று சங்கவி சொல்ல.

அவன், “இத்தனை வருசமா நான் இங்கே வேலை பார்க்கிறேன். என்னை இதுவரை யாரும் இங்கு எதுவும் சொன்னது இல்லை. ஆனா இன்று வந்த நீ… என்னை அடிச்சுட்டே…. உன்கிட்ட இறங்கிப் போய் வேலை பார்க்கணும்னு எனக்கு அவசியம் இல்லை,” என்று சொன்னவன் வீட்டை விட்டு வெளியே போனான்.

அவன் சென்றதும் அவனை ஏளனமாகப் பார்த்தவள் மற்ற வேலையாட்களைப் பார்த்தவள், “இங்கே இனிமேல் நான் சொல்றது தான் சட்டம். நான் சொல்ற பேச்சைக் கேட்டுக் கொண்டு பேசாமல் வேலை பார்ப்பவர்கள் மட்டும் இங்கே இருங்க. மற்றவர்கள் வெளியே போலாம்,” என்று வாசலைக் காட்ட…

அங்கு நின்று இருந்த வேலையாட்களில் சிலர் வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினர். மற்றவர்கள் அமைதியாக நிற்க…. அவர்களைப் பார்த்தவள், “குட். எல்லாரும் போய் வேலையைப் பாருங்க,” என்று சொல்லிவிட்டு ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தால்.

சங்கவி தனக்குப் பயந்து தான் இவர்கள் அமைதியாக வேலை பார்க்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்தால். ஆனால் அவர்கள் அனைவரும் ஆதிக்கும் அவன் குடும்பத்திற்கும் நீண்ட வருடங்களாக விசுவாசமாக வேலை செய்பவர்கள் என்று அவளுக்குத் தெரியாது.

அனைவரையும் ஏவிக்கொண்டு வீட்டின் எஜமானி போல வேலை வாங்கிக்கொண்டு இருந்தவளைச் சகிக்க முடியாமல் வேலையாட்கள் திணறிக் கொண்டு இருந்தனர்.

மாலை போல வெங்கடாச்சலமும் ஆதியும் வீட்டிற்கு வர… ஹாலில் வெளியே செல்வதற்காக ரெடியாகி அமர்ந்து இருந்தால் சங்கவி.

அவளைப் பார்த்ததும், “அடடே எங்கேமா… வெளியே போறியா… ரெடியாகி இருக்கே,” என்று வெங்கடாச்சலம் அவளிடம் கேட்டுக்கொண்டே வந்து சோபாவில் அமர….

“அங்கிள் நீங்க தானே ஈவினிங் ஆதி கூட ஷாப்பிங் போயிட்டு வரச் சொன்னீங்க…. அதுக்குள்ள மறந்துட்டீங்களா?” என்று சங்கவி கேட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டதும் ஆதி திரும்பி அவன் அப்பாவைப் பார்க்க… அவர் ஆதியைப் பார்த்துவிட்டுத் திரும்பி சங்கவியிடம், “நான் மறந்தே போய்ட்டேன்மா…” என்றவர்.

“கொஞ்ச நேரம் பொறு சங்கவி…. நான் இப்போ இந்தியா கிளம்பப் போறேன். நீ… எங்க கூட ஏர்போர்ட் வந்துட்டு அதன் பிறகு ஆதி கூட ஷாப்பிங் போய்ட்டு வா,” என்றார்.

ஆதி அப்பாவை, “நான் உங்களை மட்டும் தான் டிராப் பண்ண வரேன்னு சொன்னேன்,” என்று கடுமையாகச் சொல்ல… சங்கவிக்கு அவன் தன்னுடன் வர விருப்பம் இல்லை என்பதை அவன் அப்பாவிடம் மறைமுகமாகச் சொல்கிறான் என்று புரிந்தாலும் எதுவும் தெரியாதவள் போல… வெங்கடாச்சலத்திடம், “அங்கிள் நீங்களும் ஆதியும் மட்டும் போய்ட்டு வாங்க… நான் வேணும்னா டாக்ஸி பிடிச்சு போகிறேன்,” என்று சொல்ல… “அதெல்லாம் எதுவும் வேண்டாம் சங்கவி நீ எங்க கூடவே வா…” என்று சொன்னவர் ஆதியிடம், “டேய் நீ என்னைக் கொண்டு ஏர்போர்ட்டில் விட்டுவிட்டுத் திரும்ப வீட்டிற்கு வரும் வழியில் சங்கவியை அழைச்சுட்டுப் போய் அவளுக்கு டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்துட்டு வா… சங்கவி ஊரில் இருந்து எதுவுமே கொண்டு வராமல் இங்கே வந்துட்டா ஆதி. நம்மளை நம்பி வந்த பொண்ணை நாம தானே பாத்துக்கணும்,” என்று சொல்ல…

“அப்பா… அது வந்து,” என்று ஆதி அவரை மறுத்துப் பேச வர…. “நீ சங்கவியை கூட்டிட்டுப் போய்ட்டு வா… அவ்வளவுதான்,” என்று சொன்னவர் எழுந்து உள்ளே சென்று சிறிது நேரத்தில் ரெடியாகி வந்தவர் ஆதியுடன் சங்கவியையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

ஏர்போர்ட் வரும் வரை எதுவும் பேசாமல் உம்மென்று வந்த ஆதி. அவர் அப்பாவை ஏர்போர்ட்டில் டிராப் செய்து விட்டு நிற்க… அவன் தன் மீது கோபமாக இருப்பதைப் பார்த்த வெங்கடாச்சலம்.

“ஆதி…” என்று அவனை அழைத்தார். அவர் அழைத்ததும் அவரிடம் சென்ற ஆதி “சொல்லுங்க அப்பா,” என்று அவரிடம் போக… அவன் தோளில் கையைப் போட்டு… அவனுடன் நடந்துகொண்டே…. “நான் சங்கவியை இங்கே இருக்க வைத்துவிட்டேன் என்று உனக்குக் கோபமா… உன்னுடன் அவளை வெளியே அழைத்துச் செல்லச் சொன்னதனால் என் மீது கோபமாக இருக்கிறாயா…” என்று கேட்டார்.

ஆதி எதுவும் பேசாமல் இருப்பதைப் பார்த்த வெங்கடேச்சலம் மெல்லச் சிரித்தவர். அவனிடம் வேதாச்சலம் சங்கவியைப் பற்றிக் கூறியதை எல்லாம் சொன்னவர். “சங்கவியை நம்மை நம்பி அனுப்பி வைத்திருக்கிறான். அவள் இங்கு இருக்கும் வரை அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை,” என்றவர்.

அவளை ஊருக்கு அனுப்பும்வரை சங்கவியைப் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை என்றவர். சற்று நிறுத்திவிட்டுப் பின் ஆதியிடம் “அவளைப் பத்திரமாக மட்டும் தான் பார்த்துக் கொள்ளச் சொல்கிறேன். அவள் பழைய படி உன்னுடன் பேசிப் பழகுகிறாள் என்று நினைத்து அவளிடம் பழைய மாதிரி எதுவும்….” என்று அவர் சொல்ல வர…

“அப்பா… என்னைப் பற்றி என்ன நினைத்து விட்டீர்கள். நான் என்ன அவ்வளவு அறிவு இல்லாதவனா…. என் மனைவி இருக்கும்போது நான் எப்படி இன்னொரு பெண்ணை…” என்று அவன் அவரிடம் இருந்து விலகிச் செல்ல…

அவனை நினைத்து பெருமைப்பட்டவர். “எனக்கு உன்னைப் பற்றி நன்றாகத் தெரியும் ஆதி…” என்று அவர் சொல்ல…

“பின் ஏன் அப்பா இப்படிச் சொன்னீர்கள்?” என்று ஆதி கேட்டான்..

“நீ எப்படி என்று எனக்குத் தெரியும் ஆதி. ஆனால் சங்கவி அப்படி எதையும் நல்ல விதமாக எடுத்துக் கொள்பவள் அல்ல…. அவள் இங்கே வந்து உன்னுடன் இருக்க வந்திருக்கிறாள் என்றால் ஏதாவது தப்பாக இருக்கும் என்று என் மனதிற்குள் தோன்றுகிறது,” என்றார்.

அதைக் கேட்ட ஆதி தூரத்தில் நின்று இருந்த சங்கவியைத் திரும்பிப் பார்க்க…

அதுவரை அவர்கள் இருவரும் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டு இருக்கிறார்களே அப்படி என்ன பேசுகிறார்கள் என்று அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்தவள்.

அவன் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்ததும் முகத்தைச் சிரித்தவள் போல சட்டென்று மாற்றிக் கொள்ள…. அவளைப் பார்த்துவிட்டு ஆதி திரும்பிக் கொள்ள…

ஆதி மாஸ்க் அணிந்து இருந்ததால் அவன் என்ன மாதிரி மனநிலையில் இருந்தான் என்று அவன் முகத்தை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். இப்போது அவன் கண்களை மட்டும் பார்த்தவளுக்கு எதுவும் புலப்படவில்லை.

ஆதி அவன் அப்பாவிடம், “அப்பா நீங்க கவலைப் படாதீங்க…. என் வாழ்க்கையில் அவள் ஒரு முறை வந்து என்னைக் காயப்படுத்தியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. என்ன செய்தாலும் அவளால் என் நிழலைக் கூடத் தொட முடியாது. நீங்கள் கவலை இல்லாமல் போய் வாருங்கள்,” என்றான் ஆதி.

அவன் பேசியதைக் கேட்டதும் தான் வெங்கடாச்சலத்திற்கு நிம்மதியாக இருந்தது. பின் சங்கவியிடம் வந்தவர் “நான் போய்ட்டு வரேன்மா… நீ பத்திரமா இரு… உனக்கு எது வேண்டும் என்றாலும் நீ… ஆதியைக் கேள்,” என்று சொன்னவர் இருவரிடமும் சொல்லிக்கொண்டு ஏர்போர்ட்டிற்குள் செக்கின் செய்யச் சென்றுவிட்டார்.

அவர் உள்ளே செல்லும் வரை அங்கேயே நின்ற ஆதி. அவர் சென்றதும் சங்கவியிடம் திரும்பி, “போலாமா…” என்று கேட்க. தான் வந்ததில் இருந்து ஆதி சரியாக முகம் கொடுத்தேப் பேசவில்லை. ஆனால் இப்போது அவனாகவே வந்து என்னிடம் நன்றாகப் பேசுகிறான் என்றால். ஒருவேளை அந்தக் கிழம் இவ்வளவு நேரம் கூட இருந்ததினால் அப்படி இருந்தானோ…. என்று யோசித்துக் கொண்டே… அவன் பின்னால் சென்றாள்.


லதாவும், விவேக்கும் துர்காவுக்கு அசிஸ்டன்ட்களாக ஆதி நியமித்து விட… துர்காவோடு சேர்த்து மூன்று பேருடைய வேலைக்கும் ஆள் எடுக்கும் படலம் ஓடிக் கொண்டு இருந்தது.

காலையில் போதி வந்து போனதற்குப் பிறகு…. கதிரும் துர்காவும் வேலையாட்களைத் தேர்வு செய்வதில் மும்முரமாக இருந்தனர். ஒருவழியாக….

விவேக், லதா இருவரும் இருந்த இடத்திற்கு இருவரைத் தேர்ந்து எடுத்து இருந்தனர். லதாவின் இடத்திற்கு ரியா என்ற பெண்ணையும், விவேக்கின் இடத்திற்கு பவன் என்பவனையும் வேலைக்கு எடுத்து இருந்தனர்.

ரியா தன் தாய் தந்தை அண்ணனுடன் சென்னையின் மிடில் கிளாஸ்கள் இருக்கும் ஏரியாவில் தங்கி இருந்தாள். அவள் வீட்டின் கடைக்குட்டி அவள். அவள் வீட்டில் அவளை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும். தான் படித்த டிசைனிங் துறையில் சிறிது காலமாவது வேலை செய்து அதில் முன்னேற வேண்டும் என்பது அவளது கனவு. அதற்காகவே அவள் வீட்டில் உள்ளவர்களிடம் பிடிவாதம் செய்து இந்த இன்டர்வியூ வந்தாள். வந்தவளுக்கு வேலை கிடைத்துவிட மிகவும் சந்தோஷத்தில் இருந்தால் ரியா.

பவன் விவேக்கின் இடத்திற்குத் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறான். மிகவும் பொறுப்பான பையன். அப்பா இல்லை. அம்மாவும் தங்கையும் மட்டுமே அவனுக்கு. சிறு வயதிலேயே அப்பா இல்லை என்பதால் அவருடைய கடமைகள் எல்லாம் தானேப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவன் அம்மாவிற்கு எதிலுமே சிரமம் கொடுக்காமல் பள்ளிப்படிப்பை முடித்தவன் மாநிலத்திலேயே அக்கவுன்ட்ஸில் முதல் மாணவனாக வந்தான்.

இவன் மார்க்ஸைப் பார்த்துவிட்டு முன்னணி கல்லூரி ஒன்று தங்கள் காலேஜில் இவனைச் சேர்த்துக்கொண்டு அவன் படிப்பிற்கான மொத்த செலவையும் அவர்களே ஏற்றுக் கொண்டனர்.

கல்லூரிப் படிக்கும் காலங்களில் பார்ட் டைம் வேலை பார்த்து அவன் அம்மாவிற்கு உதவியாக இருந்தான். அவர் தந்தை இவர்களுக்காக விட்டுச் சென்ற சொத்துக்களில் இருந்து வருமானம் வருவதால் அவன் அம்மா வெளியில் வேலைக்கு என்று எதுவும் செல்லாமல் மாலை வேளைகளில் மட்டும் வீட்டில் டியூஷன் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

இப்போதைக்கு இவர்களைப் பற்றி விபரம் போதுமே… வரும் எபிசோட்களில் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களைப் பற்றிப் பார்க்கலாம்.

இரண்டு நபரை ஒருவழியாகத் தேர்ந்து எடுத்து விட்டனர். ஆனால் துர்கா இருந்த பதவிக்கு இன்டர்வியூ வந்தவர்களை எல்லாம் பிடிக்காமல் கதிர் யாருமையுமே தேர்வு செய்யாமல் அனுப்பி வைத்து விட்டான்.

துர்கா தேர்ந்து எடுத்த ஒன்று இரண்டு நபர்களையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

இதற்கு மேலும் தன்னால் முடியாது என்று துர்காவுக்கு இண்டர்காமில் அழைத்தவன் “லக்ஷு வீட்டுக்கு போலாமா…. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு,” என்று சொல்ல..

“டூ மினிட்ஸ் கதிர். இப்போது செலக்ட் ஆனா ரெண்டு பேருக்கும் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுத்துட்டு வந்திடுறேன். நீ காரில் வெயிட் பண்ணு,” என்று சொல்லிவிட்டுப் போனை வைத்தாள்.

ரியாவுக்கும், பவனுக்கும் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைத் தயார் செய்து அவர்களிடம் வந்து கொடுத்தவள், “நாளையிலிருந்து இருவரும் வேலைக்கு வந்து விடுங்கள்,” என்று சொல்லி ஆல் தி பெஸ்ட் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் துர்கா.

ரியா தன் வேலைக்கான ஆர்டரை வாங்கிவிட்டு அருகில் நின்று இருந்த பவனைப் பார்த்து…. “ஹாய்… நான் ரியா…” என்று தன் கையை நீட்ட…

தன் முன் கை நீட்டி நின்ற ரியாவைப் பார்க்கையில் டாம் அன்ட் ஜெரியில் வரும் துறுதுறுவென்று இருக்கும் குட்டி எலி போலத் தோன்ற…. அவளை அந்த எலி போல நினைத்தவன் சட்டென்றுச் சிரித்து விட ..

அவனை வினோதமாகப் பார்த்த ரியா… அவனிடம் நீட்டிய கையை மடக்கிக் கொண்டு அங்கிருந்து செல்லப் போனவள் முன்பு கை நீட்டி, “ஹாய் மிஸ் ரியா… ஐயம் பவன்,” என்றான்.

அவனை ஒரு முறை நிமிர்ந்துப் பார்த்தவள் இல்லை இல்லை அண்ணாந்து பார்த்தவள் ‘இவன் என்ன இப்படிப் பனை மரம் போல வளர்ந்து நிக்குறான்,’ என்று நினைத்தவள் சிரித்துக் கொண்டே “ஹாய்,” என்று அவனிடம் கை குலுக்கி விட்டு.

“ஓகே பவன் நாளை பார்க்கலாம்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

குட்டி எலி போலத் துள்ளி குதித்துச் செல்லும் அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்தவன் பின் தலையில் தானேத் தட்டிக்கொண்டு அவனும் கிளம்பிச் சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured