Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 89

உன் ரகசிய ரசிகை நான் 89

by Layas Tamil Novel
328 views

EPISODE 89

காரில் ஏறி கோபத்தோடு ஜன்னலை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்க….

அவள் தன் மீது கோபமாக இருக்கிறாள் என்று தெரிந்தும் அவளைச் சமாதானம் செய்யாமல் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே காரைச் செலுத்தியவன்.

அவள் வீட்டிற்குச் செல்லும் வழியாகச் செல்லாமல் வேறுப்புறம்ச் செல்ல…. தன் வீட்டிற்குச் செல்லும் வழி இது இல்லையே என்று ஆதியைப் பார்த்து “டேய்… என் வீட்டுக்குப் போற வழியில் போகாமல் இந்தப் பக்கம் ஏன்டாப் போறே…” என்று கோபமாகப் பேச..

அவன் எதுவும் பேசாமல் அமைதியாகக் கார் ஓட்ட… கீர்த்திகாவிற்கு மேலும் கோபம் தலைக்கு ஏற அவனை முறைத்தவள் அமைதியாக இருந்துவிட்டாள்.

யாரும் இல்லாத இடத்திற்கு வந்ததும் காரை நிறுத்திய ஆதி சீட் பெல்ட்டைப் பார்த்தான். அவள் கார் நின்றதும் அவனைத் திரும்பிப் பார்க்க….

அவள் சரியாக அவனைப் பார்க்கத் திரும்பும் போது அவள் கழுத்தில் கை கொடுத்துத் தன் அருகில் அவளை இழுத்து அவள் இதழைச் சிறை செய்தான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத கீர்த்திகா…. அவன் முத்தம் தந்ததும் அதிர்ந்தவள் தன் கண்களை அதிர்ச்சியில் அகல விரித்தவள் பின் அவன் மீதுக் கோபம் கொண்டவள் அவனைத் தன்னிடம் இருந்துத் தன்னைப் பிரிக்கப் போராட… எங்கே அவன் விட்டால் தானே…

அவன் தோள்களில் அடித்து அடித்து அவள் கைகள் வலித்ததுத் தான் மிச்சம். அவனை அடித்துக் கைகள் ஓய்ந்ததுத் தான் மிச்சம்.

கைகள் சோர்ந்துவிட அவன் தோலிலேயேத் தன் கைகளை மாலையாகப் போட்டுக்கொண்டு அவன் முத்தத்தில் கரைந்து போனாள்.

இவ்வளவு நேரம் அடித்து ஓய்ந்துவிட்டு அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் முத்தத்தில் கரைந்து கொண்டு இருப்பவளை நினைத்து ‘இவ்வளவு தானா உன் கோபம்?’ என்று நினைத்தவன் தன் சீட்டைப் பின்னால் சாய்த்தப் படி அவள் சீட்டில் இருந்து அவளைத் தூக்கித் தன் மீதுப் போட்டுக் கொண்டவன் முத்தத்தைத் தொடர…

அவன் மீதுத் தன் உடல் முழுதும் படர்ந்து இருப்பது கூடத் தெரியாமல் கண்கள் மூடி அவன் முத்தத்தில் கரைந்து போனாள்.

இருவருக்கும் மூச்சுக்காற்று தேவைப்படவே அவளிடம் இருந்துத் தன் முகத்தை லேசாகப் பிரித்து அவள் தலையை நிமிர்த்த… தூக்கத்தில் உண்ணும் குழந்தையிடம் உணவைக் காட்டி பின் அதன் ருசியை அறிய வைத்து உசுப்பேற்றுவது போல அவன் முத்தத்தை நிறுத்தவும் கீர்த்திகா தானாகவேத் தன் உதட்டை அவனிடம் கொண்டுச் சென்று அவன் முத்தத்திற்கு ஏங்கினாள்.

அவள் செயலைக் கண்டுச் சிரித்தவன் மெல்லச் சிறிது அவள் இதழைத் தன் இதழால் ஒற்றி எடுத்தவன் “போதும் டி… மூச்ச்சு விட முடியாமல் அப்ரோம் மயங்கி விழப் போறே,” என்று அவள் இடையைக் கட்டிக்கொண்டு ஆதி கூற.

அப்போது தான் அவன் முத்தம் கொடுத்ததை நிறுத்தி விட்டான் என்றுப் புரிந்தவள் கண்கள் விழித்து அவனைப் பார்க்க… அவள் இடுப்பில் இருந்து கையை எடுத்துத் தன் தலைக்கு முட்டுக் கொடுத்தவன் “என்ன இன்னும் வேண்டுமா?” என்று அவள் முகத்தைப் பார்த்துக் கேட்க.

அவன் செயலில் வெட்கம் வந்தாலும் சிரமப்பட்டு அதை மறைத்துக் கொண்டவள் அவன் மடியிலேயே அமர்ந்து கொண்டு அவனிடம் கோபமாக இருப்பது போல முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவள் கோபம் இன்னும் தீரவில்லையே என்று வருத்தப்பட்ட ஆதி. “ஏய் கீர்த்தி…. என்னைப் பாரு…” என்றான்.

அவள் எதுவும் பேசாமல் அப்படியே இருக்க…

“ஓய்… கண்ணுக்குட்டி…” என்று அவள் முகத்தைத் தன்னைப் பார்க்குமாறுத் திருப்ப…. அவள் கண்களில் கண்ணீரோடு அவனைப் பார்த்தாள்.

அவள் கண்ணீரைப் பார்த்ததும் உள்ளம் பதறியவன். “ஏய் கண்ணுக்குட்டி என்ன டி ஆச்சு இப்படித் திடீர்னு அழற… என்ன ஆச்சு…” என்றான் பதட்டமாக.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாகத் தலை குனிந்து இருக்கத் தன் கைகளுக்குள் அவள் முகத்தை ஏந்தியவன் தன் முகத்தைப் பார்த்தவாறு அவளை நிமிர்த்தி “என்ன கண்ணுக்குட்டி இப்படி நம்ம ஜாலியா இருக்க நேரத்துல அழுதுட்டு இருந்தால் நல்லாவா இருக்கு?” என்றவன் அவள் கண்ணீரைத் துடைத்து விட.

“நீப் பேருக்குத் தான் என்னை லவ் பண்றே… என்னைக் கண்டாலே உனக்குப் பிடிக்க மாட்டேங்குது. எப்போப் பாரு எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப் படுத்துறதையே வேலையா வெச்சிருக்க நீ… உனக்கு என் மேலப் பாசமே இல்லை,” என்று அவன் மீது அடுக்கடுக்காகக் குற்றம் சுமத்தினாள்.

“நான் உனக்கு வேண்டாம். உனக்கு ஏற்ற ஜோடி நான் இல்லை என்றால் இப்போதேச் சொல்லிடு….. வீணாக உன்னையே நினைச்சுட்டு நான் என் மனசில் ஆசையை வளர்த்துட்டு நான் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது,” என்றாள்.

“ஏய்… கீர்த்தி இப்போ என்ன ஆச்சுன்னு நீ இந்த மாதிரி எல்லாம் பேசுற… நாம எப்பவும் அடுத்தவங்க முன்னாடி நம்மைப் பிடிக்காததுப் போலத் தானேக் காட்டிக்கிறோம். இத்தனை நாள் இல்லாமல். இன்று மட்டும் என்ன உனக்குத் தேவையே இல்லாமல் இவ்வளவு கோபம் வருகிறது,” என்றான் ஆதி.

“நீத் தான் என்னை ராதாகிட்டே அவ்வளவு கிண்டல் சொல்லிப் பேசுறியே… என்ன என்னவெல்லாம் நீ அவகிட்டேச் சொல்லி கிண்டல் பண்ணிச் சிரிச்சே… அவளும் உன்கிட்டே மாமா மாமான்னு…. வந்து கொஞ்சிக் குலாவுறா…” என்றாள் கீர்த்திப் பொறாமைப் பொங்க.

இப்போதுத் தான் ஆதிக்குப் புரிந்தது தன்னுடன் ராதாச் சகஜமாகப் பழகுவது கூடக் கீர்த்திவாள் தங்கிக் கொள்ள முடியவில்லை என்று.

அவளிடம் மேலும் கிண்டல் பேசி அவளை நோகடிக்க விரும்பாமல். “ஏய் லூசு ராதா எனக்குத் தங்கை மாதிரி. நான் சின்ன வயசில் இருந்து அவளோடு அப்படித்தான் பழகிட்டு இருக்கே. அவளும் என்னைத் தான் என்னை மாமான்னு கூப்பிட்டாலும் அவளும் என்னை அவள் அண்ணன் போலத் தான் நினைத்துக் கொண்டு இருக்கிறாள்,” என்று கீர்த்திகாவிற்கு விளங்க வைத்தான்.

ஆதி சொன்ன விளக்கத்தைக் கேட்டுத் தான் கீர்த்திச் சற்றுச் சமாதானம் ஆனாள். “அப்போ நிஜமா ராதாவும் நீயும் அண்ணன் தங்கை போலத் தானேப் பழகுறீங்க? வேற எதுவும் இல்லையே?” என்றாள்.

“ஏய் லூசு… உன்னைக் காதலிச்சுட்டு உன்கூட இவ்வளவு நெருக்கமா இருந்துட்டு அவ கூட எப்படி டி… நான் அப்படி ஒரு நினைப்பில் பழக முடியும்? அறிவுன்னு ஏதாவது உன் மூலையில் இருக்கா இல்லையா…” என்று அவளைத் திட்ட….

இப்போதுத் தான் அழுவதை நிறுத்திவிட்டுச் சற்றுச் சமாதானம் ஆகி இருந்தக் கீர்த்திகா ஆதி அவளைத் திட்டவும் மறுபடியும் ஓவென அழ ஆரம்பித்தாள்.

அவள் மறுபடியும் அழுவதைப் பார்த்த ஆதி “ஏய் கீர்த்தி….. நான் என்ன சொல்லிட்டேன் இப்போ நீ அழற…. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல… நீப் புரிஞ்சுக்காமல் பேசினேன்னு சொல்லித்தான் நான் உன்னைத் திட்டினேன். ப்ளீஸ் டி….. தங்கம் ப்ளீஸ்…. அழாதே,” என்று அவள் கண்களைத் துடைத்து விட்டு அவளிடம் கெஞ்ச.

“அப்போ இனி என்னைத் திட்ட மாட்டேன்னு சொல்லு,” என்றாள் குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு கீர்த்திகா.

“திட்ட மாட்டேன் டா கண்ணுக்குட்டி,” என்று அவள் கண்களில் முத்தம் வைத்தான். “அப்போ இங்கே…” என்று அவள் இரு கன்னத்தையும் காட்டக் சிரித்துக் கொண்டே அவள் கன்னங்களில் முத்தம் வைத்தான்.

“இங்கே…” என்று நெற்றியைக் காட்டச் சிரித்துக்கொண்டே அவள் முகத்தைப் பிடித்து அவள் முகம் முழுதும் முத்தம் வைக்க… கூச்சத்தில் நெளிந்தவள் அவனைத் தள்ளி விட…

“ஏய் நான் சும்மாத் தானே இருந்தேன். இப்படி என்னை உசுப்பேற்றி விட்டு வேண்டாம் என்றுத் தள்ளி விட்டால் என்ன டி நியாயம் இது…..” என்றவன் அவள் முகத்தை கெட்டியாகப் பிடித்து அவள் இதழில் முத்தமிடத் தொடங்கினான்.

கீர்த்தியும் மறுப்புத் தெரிவிக்காமல் அவனிடம் தன் இதழைக் கொடுத்துவிட்டு அவனை கட்டிக்கொண்டு அவன் முத்தத்தில் மெய் மறந்துப் போனாள்.

ஆதி பேசிவிட்டுச் சென்றதில் இருந்துத் தன் அறையை விட்டு வெளியேவே வராமல் கட்டிலில் படுத்து இருந்தவள்.

அவனைப் பற்றிய நினைவுகளோடுப் படுக்கையில் உலன்று கொண்டு இருந்தாள். தன்னிடம் உரிமை எடுத்துக் கொண்டு பேசியவனை நினைக்க… நினைக்க… உள்ளுக்குள் ஒருப் பரவசம் அவளையும் அறியாமல் பரவுவதை உணர்ந்தாள்.

இத்தனை வருடம் இவள் ஒருவள் மட்டுமே ஆதியின் மீதுக் காதல் கொண்டுத் தன் கற்பனையிலேயே ஆதியுடன் வாழ்ந்து வந்தவளுக்கு…. இன்று அவன் தன் மீதுக் கொண்டக் காதலை வெளியில் சொல்லாவிட்டாலும் தன் மீது அவன் காட்டும் அக்கறையும் பாசமுமே அவளுக்கு உணர்த்தியது அவன் மனதிற்குள் இப்போதைக்குத் தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்று.

இதை நினைத்தவுடன் ஏனோத் துர்காவிற்குச் சங்கவியின் நினைவு அவள் மனதில் ஓடியது. ‘தனக்குத் தெரியாமல் இவள் எப்போது டென்மார்க் வந்தால்? இவளை எப்படி ஆதி ஸ்விட்சர்லாந்து வரைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்?’

‘ப்ளைட்டிற்கு நேரமானது என்றுச் சொல்லி அவ்வளவு உரிமையாக அவனைத் தன்னோடு எப்படி அழைத்துச் சென்றாள்?**’

‘ஆதியும் அவள் சொல்லவும் எதுவும் பேசாமல் என்னிடம் சொல்லிவிட்டு உடனேக் கிளம்பி விட்டான். அப்படி என்ன அவள் சொன்னதைக் கேட்கும் அளவுக்கு ஆதி இடம் இந்தத் திடீர் மாற்றம் வந்திருக்கிறது? சங்கவியைக் கண்டாலே ஆதிக்குப் பிடிக்காது அப்படி இருக்க எப்படி இருவரும் எதுவுமே நடக்காதவர்கள் போலப் பேசிக் கொள்கிறார்கள்?’ என்றுத் தன் தலையைப் போட்டுப் பிய்த்துக்கொண்டவள் அதையும் இதையும் யோசித்துக் கொண்டே அப்படியே உறங்கிப் போனாள்.

நள்ளிரவைத் தாண்டித் தூங்கிக்கொண்டு இருக்க…. அவள் போன் மணி அடித்தது. அரைத் தூக்கத்தில் கட்டிலில் படுத்தவாறேக் கண்கள் மூடித் தன் கைகளை கட்டிலில் படர விட்டுப் போனைத் தேட…. அவள் கையில் சரியாகச் சிக்கவும் அதை யார் என்று கூடப் பார்க்காமல் அட்டென்ட் செய்தவள்.

“ஹலோ,” என்று அழுது அழுது ஓய்ந்தக் கலைப்பில் பேச…. அவள் குரலிலேயே இருந்தக் கலைப்பை உணர்ந்து… “என்ன துர்கா… டயர்டா இருக்கியா?” என்றான் ஆதி.

அவன் குரல் கேட்டதும் அடித்துப் பிடித்து எழுந்து கட்டிலில் அமர்ந்தவள். போனைக் காதில் வைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் அமர்ந்து இருக்க…

“துர்கா…. துர்கா…. லைன்ல இருக்கியா?” என்றான் ஆதி.

“ம்ம்ம்….” என்றாள்.

“இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நீ இப்படிப் பேசாமலேயே இருப்பாய்…. உனக்கு என்னைப் பிடிக்கும் என்று எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது. இதற்குப் பிறகும் நீ என்னுடன் முகம் கொடுத்துப் பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்?” என்றான் ஆதி.

“இ… இல்லை ஆதி…. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை…. நீ… நீ… ஸ்விட்சர்லாந்துப் போயாச்சா?” என்றாள்.

“ம்ம்ம்… நான் மாலையே வந்துட்டேன் துர்கா. வந்ததும் இங்கே ஒரு மீட்டிங் இருந்தது. அதை முடித்துக்கொண்டுச் சற்று முன் தான் ரூமிற்கு வந்தேன்,” என்றான் ஆதி.

“ம்ம்ம்… சரி ஆதி,” என்றவள் மீண்டும் அமைதியாகி விட்டாள்.

“என்ன துர்கா இவ்வளவு தானா? என்கிட்டப் பேச வேற ஒன்றும் இல்லையா உனக்கு….” என்றான் ஆதி.

“அது… அது… ஆதி சங்கவி உன்கூடத் தான் இருக்காளா…” என்று மனதில் இருந்ததைக் கேட்டே விட்டாள் துர்கா.

துர்கா சங்கவியைப் பற்றிக் கேட்டதும் தான் தாமதம் ஆதிப் பலமாகச் சிரிக்க ஆரம்பித்தான்.

அவன் திடீர் என்றுச் சத்தமாகச் சிரிக்கவும் “ஆதி…. ஆதி… என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்டாள் துர்கா.

“அது எப்படி எல்லாப் பொண்ணுங்களும் ஒரே மாதிரி இருக்கீங்க…” என்றான்.

“எப்படி…” என்றாள் துர்கா சற்று இயல்பாக அவனிடம்.

“எப்படி என்றுத் தெரியவில்லையா உனக்கு?” என்றான்.

“ம்ம்ஹும்… தெரியலை ஆதி,” என்றாள்.

“அது… கட்டினப் புருஷன் நம்மைத் தவிர வேற எந்தப் பொண்ணையும் பார்க்கக் கூடாது…. பேசக்கூடாது… எங்கேயும் போகக் கூடாது…. அப்படித் தெரியாதனமாக அவங்க கூடப் பேசவோ, பார்க்கவோ செஞ்சாலே… புருஷனை ஒரு வழிப் பண்ணிருவாங்க.”

“நான் வேற என் கூடவே சங்கவியை அதுவும் வேற ஊருக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். அப்போ உனக்கு அங்க இருந்துட்டு நினைப்பு முழுசும் என்கிட்டேயேத் தான் இருக்கும். நம்மப் புருஷன் இந்நேரம் என்ன செஞ்சுட்டு இருப்பான். அவன் கூட வேற இந்தச் சங்கவி இருக்காளே… அவங்க எதுவும் பேசிக்குவாங்களோ…. அப்படி இப்படின்னு உனக்குத் தோணுமே,” என்றான் ஆதி..

இரவுத் தூங்குவதற்கு முன் தான் சங்கவியைப் பற்றி நினைத்ததை எல்லாம் ஆதி அப்படியே வேறு விதமான கேட்டதைப் பார்த்த துர்கா அப்படியே வாயடைத்துப் போய் விட்டாள்.

பேசிக்கொண்டே எதுவும் பேசாமல் இருந்த துர்கா பின் “ஆதி எப்படி நீ…. சரியாச் சொல்ற?” என்று கேட்டாள் துர்கா.

இப்போதும் சத்தமாகச் சிரித்த ஆதி, “நீயும் நானும் நம் அறையில் இருக்கும் போதுச் சங்கவி என்னிடம் வந்து பேசி விட்டுச் செல்ல….”

“நீ அவளையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தது எனக்குத் தெரியாது என்று நினைத்தாயா?” என்றான் ஆதி.

துர்கா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க … “என்ன துர்கா எதுவுமே பேசாமல் அமைதியா இருக்க? இவனுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கிறாயா… உன் கண்ணில் இருந்த ஏக்கம் எனக்குப் புரிஞ்சுது துர்கா.”

“ஏற்கனவே நான் இந்தியாவில் இருந்து உன்னை விட்டு வந்தேன்னு என்கிட்டே நீ சண்டை போட்டே…. நீ டென்மார்க் வந்ததும் அறை நாள் கூட உன்கிட்ட இல்லாமல் உடனேக் கிளம்பி இங்க வந்துட்டேன். அதுவும் சங்கவி கூட… அப்போ உன் மனசுல என்ன எல்லாம் ஓடி இருக்கும்.”

“நீ எவ்வளவுத் தவிச்சுப் போய்ப் இருப்பேன்னு என்னால் உணர முடியும் துர்கா…”

“நீக் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ…. நான் சீக்கிரமா இங்க இருக்க வேலை எல்லாம் முடிச்சுட்ட்டு வந்திடுறேன் துர்கா…. அதுக்கு அப்பறோம் நீயே என்னை உன்னை விட்டுப் போகச் சொன்னாலும் போக மாட்டேன்….” என்றவன் சற்று நிறுத்தி.

“என்னை போகச் சொல்ல மாட்டியே துர்கா….” என்று ஆதி கேட்டுவிட்டு அவள் என்னச் சொல்லப் போகிறாள் என்று எதிர்பார்ப்புடன் இருக்க.

சற்று நேர அமைதிக்குப் பின் “என்னுடைய நீண்ட நாள் கனவு, கற்பனை, என் உலகம் என்று உன்னை மட்டுமே நினைத்து உனக்கேத் தெரியாமல் உன்னைக் கொள்ளை கொள்ளையாக் காதலித்தேன் ஆதி.”

“இப்போ நீயே என்னை இப்படி கேட்டப் பிறகு உன்னை அவ்வளவுச் சீக்கிரத்தில் நான் விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா ஆதி?” என்றாள்.

அவள் வாயாலேயேத் தன்னிடம் முதன் முறையாகக் கொள்ளை கொள்ளையாக் காதலித்தேன் என்று சொன்னதைக் கேட்டதும் ஆதியால் அங்கு இருக்கவே முடியவில்லை.

இப்பொழுதே அவளைப் பார்க்க வேண்டும். அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்த வேண்டும் என்று ஆவல் கொண்டான்.

தான் முதன் முதலாக ஆதியைக் காதலித்தேன் என்றுச் சொன்னதும் ஆதி எதுவும் பேசுவான் என்று நினைத்து ஆவலாகப் போனைக் காதில் வைத்து இருக்க… ஆனால் மறுமுனையில் அமைதியாக இருக்கவே…. துர்கா யோசனையுடன் “ஆ… ஆதி…” என்று அழைத்தாள்.

அவள் அழைத்ததும் தான் நினைவு வந்தவனாக “துர்கா… துர்கா…. ரொம்ப நேரம் ஆகிடுச்சு தூங்கலாமா? எனக்கு ரொம்ப டயர்ட்டா இருக்கு,” என்றவன்.

அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் “**ஓகே துர்கா… நான் போனை வைக்குறேன் குட் நைட்,” என்று சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.

அவன் இப்படி எதுவும் பேசாமல் போனை வைத்ததும் துர்காவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ‘ஆதி இப்போதை என்ன நினைப்பான்?’ என்று யோசனையில். திரும்பவும் படுக்கையில் படுத்தவள் எப்போதுத் தூங்கினாள் என்றுத் தெரியாமலேயேத் தூங்கிப் போனாள்.

வெங்கடாச்சலம் ஊரில் இருந்து வந்ததில் இருந்து ஆதிக்குப் துணையாக அவனுடன் அவ்வப்போது ஆஃபீஸிற்குச் சென்று வந்து கொண்டு இருந்தார்.

ஆதி அவரை இங்கும் அங்கும் அலைய வேண்டாம் வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுக்கச் சொல்லி வற்புறுத்தவே மகனின் அன்பு கட்டளையால் ஆஃபீஸிற்கு வராமல் வீட்டிலேயே இருந்தார்.

மாலை நேரம் வழக்கம்போல ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தவர் கிச்சனில் விசாலாட்சி, செண்பகம், கனகா மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டேச் சமையல் வேலைகளைச் செய்து கொண்டிருக்க.

அப்போது ஆஃபீஸ் செல்வதற்காகக் கிளம்பி கீழே வந்த ஷிவு ஹாலில் வெங்கடாசலம் தனியாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு நேராக அவர் அருகில் வந்து அமர்ந்தாள்.

“அடடே வாம்மா ஷிவு!! எங்க ஆஃபீஸ் கிளம்பியாச்சா நீ?” என்று கேட்டார் வெங்கடாசலம்.

“ஆமா மாமா இன்னைக்கு என் ஆஃபீஸ்ல என்கூட வேலை பாக்குறவருக்குப் பிறந்தநாள்….. நான் அவர் பிறந்தநாள் பார்ட்டிக்காகத் தான் கிளம்பி வந்தேன். இன்னைக்கு அவரோட ட்ரீட் தான். நான் இப்பக் கிளம்பினால் நைட் வருவதற்கு லேட் ஆகும் மாமா,” என்றுச் சொன்னாள் ஷிவு.

“ஏம்மா நம்மளுக்கு எவ்வளவு கம்பெனி இருக்கு….. நீ அங்க எல்லாம் வேலை பார்க்காமல் ஏதோ ஒருத் தெரியாதவங்க கம்பெனியில் போய்ப் வேலைப் பார்க்கிறாயே….. இது நல்லாவா இருக்கு.”

“உன்னோட மாமாக் கம்பெனி இருக்க அப்போ நீ பேசாமல் நம்ம கம்பெனியில் ஒன்னுல உனக்குப் பிடிச்ச வேலையைப் பார்க்கலாமே,” என்றவர்.

“இப்போப் போய்ட்டு இருக்க கம்பெனிக்கு போக வேண்டாம். அங்க வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா நம்ம கிட்ட இருக்குற ஒரு கம்பெனியில் நீ வேலைக்குச் ஜாயின் பண்ணிடு…” என்றுச் சொன்னார் வெங்கடாசலம்.

அவர் சொன்னதும் ஷிவுவிற்கும் இப்போதுச் சென்று கொண்டிருக்கும் கம்பெனியின் மீது அவ்வளவாக நாட்டமில்லை. அவள் ஃப்ரீயாக வேலைப் பார்க்க வேண்டும் என்றால் இப்போது வெங்கடாசலம் சொன்னதுப் போல இவர் கம்பெனியில் வேலைப் பார்த்தால் தான் நினைத்த நேரம் வெளியில் போகவும் வரவும் முடியும் என்று நினைத்தவள்..

“சரி மாமா இந்த ஒரு மாசம் நான் இந்த கம்பெனியில் வேலைக்குப் போயிட்டு அடுத்த மாசத்துல இருந்து நீங்க சொன்னது போல நம்ம கம்பெனியில் ஜாயின் பண்ணிக்கிறேன். நீங்க ஆதி மாமாகிட்டச் சொல்லுங்க,” என்றுச் சொன்னாள் ஷிவு.

அவள் அப்படிச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது உள்ளே வந்த ஆதி “என்ன சொல்லணும் என்கிட்டே…” என்று கேட்டுக்கொண்டே வந்தான்.

வெங்கடாச்சலம் ஷிவுவைத் நம் கம்பெனியிலேயே வேலைப் பார்க்கச் சொன்னதை ஆதியிடம் சொன்னார்.

அவர் சொன்னதும் “அப்பா நீங்க இதை முன்னமே சொல்லி இருக்கலாமே…. நான் இப்போதான் நம்ம கம்பெனியில் மூணு பேரை வேலைக்கு இன்டெர்வியூப் பண்ணினேன் அப்பா…”

“நம்ம துர்கா இப்போ மாடல் ஆகிட்டது நாள அவளோட இடத்துக்கும் அப்புறம் துர்காவிற்கு அசிஸ்டன்ட்ஸா நம்ம ஆஃபீஸில் வேலைப் பார்த்த லதா, விவேக் அவங்க ரெண்டுப் பேருக்கும் பதிலாப் புதுசா ரெண்டு ஆட்களைச் சேர்த்தாச்சுப்பா….. அவங்க இப்போ நம்ம ஆஃபீஸ்க்கு வேலைக்கு வந்துட்டு இருக்காங்க,” என்றான் ஆதி.

“அதனால் என்ன மாப்பிள்ளை அவங்க மூணு பேருல யாரையாவது ஒருத்தரை வேலையில் இருந்துத் தூக்கிட்டு என் பொண்ணைச் சேர்த்துக்கோங்க,” என்றார் துரை.

“அப்படி நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் செஞ்சுட்டு இருக்க முடியாது மாமா. அதற்கெல்லாம் நிறையப் ப்ரோசிஜர் இருக்கு,” என்றான் ஆதி.

ஆதி சொன்னதைக் கேட்டுக் கடுப்பான துரை “என் பொண்ணை உங்களுக்கு மூத்தப் பிள்ளைக்குக் கட்டிக்கொடுத்து இந்த வீட்டுல ராணியாட்டம் வாழ வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா நீங்கத் தான் அதுல மண்ணை அள்ளிப்போட்டு யாரோச் சம்பந்தமே இல்லாத ஒருத்தியை இந்த வீட்டுக்கு எஜமாணி ஆகிட்டீங்க.”

“அட பரவாயில்லை இப்போ நீங்கச் சொன்ன மாதிரி யாரோக் கம்பெனிக்குக் போய்ப் பாதுகாப்பு இல்லாமல் வேலைப் பார்க்குறதுக்கு. மாமாச் சொன்னது போல நம்ம கம்பெனியிலேயே வேலைப் பாக்கட்டுமேணுச் சொன்னாச் சின்ன மாப்பிள்ளை என்ன இவ்வளவு காராராப் பேசுறாரு,” என்றார் துரை.

துரைப் பேசுவதைக் கேட்டு விட்டுச் சமையல் அறையில் இருந்து வந்தப் பெண்கள் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருக்க… செண்பகம் ஆதியிடம் “தம்பி அண்ணாச் சொன்னது போல நம்ம ஷிவுவை உங்க கம்பெனியிலேயே வேலைக்குச் சேர்த்துக்கோங்க ஏன் வெளிய போய்ப் வேலைப் பார்க்கணும்?” என்று அவரும் வேண்டுகோளாகச் சொல்ல…

அனைவரும் ஒரு சேர ஆதியிடம் ஷிவுவிற்கு ஆதரவாகப் பேச…. “சரி சரி… எப்படியோ ஷிவு ஒன் மந்த் கழிச்சுத் தானே ஜாயின் பண்றேன்னுச் சொன்னா… நான் அதுக்குள்ள அண்ணா கிட்டக் கேட்டுட்டு ஷிவுவிற்கு ஒரு நல்ல போஸ்டிங் ரெடி பண்ணிடறேன் ஓகேவா?” என்றான் ஆதி.

எல்லோரும் சந்தோசமாகத் தலையை ஆட்ட…. அனைவரிடமும் சொல்லிக்கொண்டுத் தன் ஃபிரெண்ட் பர்த்டே பார்ட்டிக்குக் கிளம்பினாள் ஷிவு… அங்கேத் தானக்காகக் காத்திருக்கும் விபரீதம் அறியாமல்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured