Home FULL NOVEL BOOK (FREE)எனை மாயம் செய்யும் ராட்சசன் part-1

எனை மாயம் செய்யும் ராட்சசன் part-1

by Layas Tamil Novel
919 views

வணக்கம் பிரெண்ட்ஸ்

ராட்சசி 

என்னோட முதல் கதை இந்த கதையில் வரும் இரண்டு பாகங்களிலும் சற்று தூக்கலாக ரொமான்ஸ் இடம்பெற்றிருக்கும். 

இந்த மாதிரி கதை பாணி பிடிக்காதவர்கள் முதல் பாகத்தை படித்துவிட்டு இரண்டாம் பாகத்தை தவிர்த்து விடவும். 

EPISODE 1

“ஏய் மீனு எழுந்துருடி மணி பாரு என்ன ஆச்சுன்னு முதல் நாள் காலேஜ் போக போற இன்னைக்காவது நேரமே எழுந்து கிளம்பி போகணும்னு கொஞ்சமாவது நினைப்பு இருக்கா உனக்கு” என்று புலம்பிக்கொண்டே சமைத்துக் கொண்டிருந்தார் மீனுவின் அம்மா ஜனனி.

“ஏன் ஜனா இப்படி காலங் காத்தால கட்டிக்கிட்டு இருக்க அவை இன்னும் இப்பதான் புதுசா காலேஜ் போறாளா என்ன… ஏற்கனவே நாலு வருஷம் படிச்சிட்டு மேற்படிப்பு  தானே படிக்க போறா… அவ எழுந்து கிளம்புவான் நீ டென்ஷன் ஆகாமல் வேலைய பாரு “என்றார் மீனுவின் அப்பா குரு.

“ஏங்க இவ எழுந்து கிளம்பினா தானே அந்த குட்டி பிசாசு கிளம்பி காலேஜ் போவா… அவளுக்கு தாங்க இன்னைக்கு முதல் நாள் காலேஜ். நேரமே எழுந்து கிளம்பினா தானே இவளும் கிளம்புவா” என்றார் ஜனனி.

“சரி சரி…நீ வேலைய பாரு புலம்பாத நான் போய் ரெண்டு பேரையும் எழுப்பி கிளம்ப சொல்றேன்” என்றவர் தன் மகள்களை எழுப்ப அவர்கள் அறைக்கு சென்றார்.

அறைக்குள் வந்தவர் தன் மகள் அவள் தங்கை பூஜாவையும் பார்த்தார்.

மீனு குப்புற படுத்து தூங்கிக்கொண்டு இருக்க… அவள் முதுகில் தன் காலை போட்டு கட்டிலில் குறுக்காக படுத்திருந்தாள் பூஜா.

தன் மகள் உறங்கிக் கொண்டிருப்பதை ரசித்தவர் ” என்னடா ரெண்டு பேரும் இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க…அங்கே உங்க அம்மா டென்ஷன் ஆகி கத்திக்கிட்டு இருக்கா… சீக்கிரம் எழுந்து ரெடி ஆகுங்க.. ” என்று அவர்கள் இருவரையும் எழுப்பினர்.

“அப்பா….இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் ரொம்ப தூக்கம் வருது…” என்றால் பூஜா நெளிந்து கொண்டே..

“என்னது இன்னும் கொஞ்ச நேரமா?.. மணி எட்டாயிடுச்சு நீங்க இப்போ எழுந்து கிளம்புனா தான் காலேஜுக்கு டைமுக்கு போக முடியும்.ஒழுங்கா ரெண்டு பேரும் எழுந்திருங்க..” என்று அவர்கள் போர்த்தி இருந்து போர்வையை எடுத்தார்.

“அப்பா…” என இருவரும் ஒரு சேர அழைத்தபடி படுக்கையில் இருந்து எழுந்தனர்.

“போங்க… போங்க…போய் சீக்கிரம் ரெடி ஆயிட்டு வாங்க..” என்று அதே அறையில் மீனுவை ரெடியாகச் சொல்லிவிட்டு பூஜாவை தங்கள் அறைக்குச் சென்று குளித்து ரெடியாகி வரச் சொன்னார்.

இருவரும் குடித்து குளித்து முடித்து ரெடியாகி வெளியே சாப்பிட வந்தனர் சுட சுட பொங்கலும் சாம்பார் வடையும் தயாராக இருந்தது.

“அம்மா இன்னைக்கு பொங்கலும் சாம்பாருமா?… வீடே கமகமக்குது “என்றபடி வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தால் பூஜா.

“ஆமாண்டி உனக்கு பிடிக்கும்னு தான் செஞ்சு வச்சு இருக்கேன் “என்றவர் தட்டில் உணவுகளை பரிமாறினார்.

“அப்போ எனக்கு எதுவும் செய்யலையா? அவளுக்கு மட்டும் தான் நான் செய்திருக்கீங்களா?” என்றபடி வந்து அமர்ந்தால் மீனு.

“அது எப்படி உனக்கு அம்மா செய்யாம விடுவேனா…” என்று சிரித்துக் கொண்டே சமையல் அறைக்குள் சென்று சுட சுட சப்பாத்தியும் குருமாவும் எடுத்து வந்து மீனுக்கு பரிமாறினார்.

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து கிளம்பி போக…

“ஏண்டி மீனு என்ன டிரஸ் இது வெறும் சட்டையும், டிராயரும் போட்டு இருக்க… அவளை பாரு  பனியனும் முக்கால் காலுக்கு ஒரு பேண்ட்டும் மாட்டி இருக்கா…. உனக்கு  கல்யாணம் பண்ணுற வயசு ஆகிருச்சு டி….நீ இன்னும் சின்ன பிள்ளை மாதிரி டிரஸ் பண்ணிட்டு வெளியே போனா உன்னை யாரடி பொண்ணு கேட்டு வருவா… அக்காவும் தங்கச்சியும் எப்ப பாரு ஆம்பள பசங்க மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு சுத்திட்டு இருந்தா பார்க்கிறவங்க எல்லாரும் என்னதான் பேசுவாங்க” என்றார் ஜனனி.

“அம்மா இன்னமும் நீ அந்த காலம் மாதிரியே பேசிக்கிட்டு இருக்காத…நாங்க ஒன்னும் நீ சொல்ற அளவுக்கு மோசமான டிரஸ் பண்ணல” என்றால் மீனு.

“அக்கா,  அம்மா சரியான பட்டிக்காடு அவங்களை நாளைக்கு பம்புக்கு கூட்டிட்டு போகணும் அங்கே வந்து பார்த்த பிறகு தான் நம்ம பண்ணியிருக்கிற டிரஸ் எவ்வளவோ பரவாயில்லைனு சொல்லுவாங்க” என்றால் பூஜா.

“அது சரி  பப்புக்கு வருவாங்க இப்படித்தான் டிரஸ் பண்ணி இருப்பாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்றால் மீனு பூஜாவை சந்தேகமாக பார்த்து.

“ஐயோ அவசரப்பட்டு வாயை வச்சுட்டு சும்மா இருக்காம உளறி கொட்டிட்டோமே…”என்று பூஜா திடுதிருவென விழித்தால்.

“சொல்லுடி ஏன் இப்படி திருத்திருனு முழிக்கிற..” என்று மீனா பூஜாவின் அருகில் வர ..

” ஐயோ…. அக்கா… நீ அங்கேயே நில்லு… நானும் என் ஃப்ரண்ட் நிவியும் ஒருநாள் எங்க பிரண்ட் பர்த்டே பார்ட்டிக்கு போயிருந்தோம். அப்போ பக்கத்துல பார்ட்டி நடந்துட்டு இருந்துச்சு சரி பப்ள பார்ட்டி எல்லாம் எப்படி இருக்குன்னு நாங்க ரெண்டு பேரும் போய் பாக்கலாம்னு சும்மா அங்க போய் பார்த்தோம்” என்றாள்.

“நெஜமாத்தான் சொல்றியா? சும்மாதான் போய் அங்கே பார்த்துட்டு வந்தீங்களா?” என்றாள் மீனு சந்தேகமாக.

“அக்கா அப்பா மேல சத்தியமா சொல்றேன் சும்மா போய் பாத்துட்டு தான் வந்தோம் என்னை நம்பு வேணும்னா நீ நிவி கிட்ட போன் போட்டு கேளு… அப்ப தெரியும்” என்றால் பூஜா.

“ஏய் நீ பபுக்கு போ… போகாம இரு… அதுக்கு எதுக்குடி என் மேல சத்தியம் பண்ற… உன் மேல சத்தியம் பண்ண வேண்டியதுதானே ” என்றார் குரு.

“எதுக்கு ரிஸ்க்…ஒரு சேப்டிக் தாம்பா உன் மேல சத்தியம் பண்ணினேன்” என்று சொல்லி சிரித்தால் பூஜா.

“நல்ல பொண்ணுமா நீ” என்றார் குரு.

” சரி வாடி காலேஜுக்கு டைம் ஆகுது கிளம்பலாம்” என்று வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிக்கொண்டு மீண்டும் பூஜாவும் கிளம்பினர்.

தான் செல்லும் காலேஜின் வழியில் தான் பூஜாவின் காலேஜும் இருந்தது.  பூஜா  ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்  காலேஜில் படிக்கிறாள். அவளை அவள் காலேஜில் ராப் செய்துவிட்டு… தன் கனவு படிப்பான் “ORNOTHOLOGY” படிப்பதற்காக செல்கிறாள்.

பறவைகள் குறித்த அதன் வாழ்வாதாரங்களை பற்றி சென்னையில் மிகவும் பிரபலமான கல்லூரிக்கு செல்கிறாள்.

தன்னுடைய டூவீலரை கொண்டு வந்து பார்க் செய்துவிட்டு பேக்கை எடுத்து மாட்டியவள் காலேஜின் சுற்றுப்புறத்தை ரசித்து வாரே சந்தோஷமாக தன் வகுப்பை தேடி சென்றாள்.

இங்கே  காலேஜ் வாசலில் தன் தோழி நிவிக்காக காத்திருந்தாள் பூஜா.

” எப்பவும் நான்தான் எங்கயாவது போகணும்னா லேட்டா வருவேன். நானே இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டேன். ஆனா இந்த  நிவிக்கு என்ன ஆச்சு ஏன் இன்னும் அவ வரல… “என்று யோசித்துக்கொண்டு இருந்தாள் பூஜா.

” டேய் மச்சான் அங்க பாரேன் ஒரு பொண்ணு காலேஜ் வாசல்ல நின்னு யாருக்கோ வெயிட் பண்ணிட்டு இருக்க மாதிரி இருக்கு ” என்றான் சீனியர் மாணவன் குமார் தன் நண்பன் சந்தோஷிடம்.

அதுவரை மற்ற மாணவிகளை சைட் அடித்துக்கொண்டு இருந்த சந்தோஷ் குமார் சொன்னதும் காலேஜ் வாசலை திரும்பி பார்க்க…

அங்கே முட்டி வரை ஜீன்ஸ் ட்ராயரும், கை இல்லாத பனியனும் அணிந்து மாடர்ன் மங்கையாக குட்டி பெண் ஒருத்தி நின்று இருந்தாள்.

அவள் முகம் அவனுக்கு தெரியவில்லை…அவள் முதுகு தான் சந்தோஷ் கண்ணில் பட்டது. தன் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டை போட்டு இருந்தாள்.

“யாரு டா அவ… நம்ம காலேஜ்க்கு தான் வந்து இருக்காளா இல்ல எதும் ஸ்கூல் போற பொண்ணு வழி மாரி இங்கே வந்துட்டாளா? ” என்றான் சந்தோஷ்.

” தெர்ல டா மச்சான்… பாக்க நீ சொன்ன மாதிரி ஸ்கூல் போற பொண்ணு மாதிரி  தான் இருக்கா.. ” என்றான் குமார்.

“வாடா மச்சான் அது யாருனு விசாரிச்சிட்டு வரலாம் ” என்று குமாரை சந்தோஷ் அழைத்தான்.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே ஒரு பெண் அவசர அவசரமாக பூஜைவிடம் வந்தால்.

” ஏய் நிவி ஏன் டி இவ்ளோ லேட்.. நான் எவ்ளோ நேரமா இங்கே வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தெரிரியுமா… போறவறவங்க எல்லாம் என்னை ஒரு மாதிரி பாத்துட்டு போனாங்க டி… ” என்று செல்லமாக தன்  தோழியிடம் கோபித்துக்கொண்டாள் பூஜா.

”  ஏய்.. பூஜ்… சாரி டி வர வழியில் பஸ் பிரேக் டவுன் ஆகிருச்சு.. அதான் லேட் ஆகிருச்சு ” என்றாள் நிவி.

” சரி வா… உள்ளே போலாம் ” என்று தன் தோழியின் கை பிடித்து காலேஜிற்குள் நுழைந்தாள் பூஜா.

EPISODE 2

பூஜாவும், நிவியும் காலேஜிற்குள் சென்று கொண்டு இருக்க… அவர்கள்  இருவரையும் சந்தோசும், குமாரும் வள்ளி மறித்தனர்.

அவர்கள் இருவரை கண்டதும் அப்படியே சட்டென்று நின்றாள் பூஜா, ஆனால் அவர்கள் வருவதை கவனிக்காமல் நிவி குமார் மீது மோதிவிட்டால்.

அதை இருவருமே சற்றும் எதிர்பார்க்க வில்லை. 

அவர்கள் இருவரையும் ப்பர்த்துவிட்டு சந்தோஷ் திரும்பி பூஜாவை பார்க்க…

அவளோ அவன்னிடம் இருந்து இரண்டடி தள்ளி நின்றாள்.

” பார்ட்டி ரொம்பபா உஷாரா தான் இருக்கும் போல… ச்சே.. ஜஸ்ட் மிஸ் ” என்று மனதிற்குள் நினைத்தவள் தன் கையை மடக்கி காற்றில் குத்தினான்.

சந்தோஷை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு திரும்பி நிவியையும், குமரேய்யும் பார்த்தால் பூஜா.

தன் மேல் மோதியவளை  கீழே விழாமல் குமார் பிடித்துக்கொண்டான். அவனையே இமைக்காமல் பார்த்துகொண்டு இருந்த நிவி அவனிடம் இருந்து பிரிந்து செல்லாமல் அப்படியே நிற்க…

அப்போது சட்டென்று நிவியின் கையை பிப்டித்து தன் அருகில் இழுத்து நிற்க வைத்த பூஜா. சந்தோஷை பார்த்து ” ஹலோ இப்படி தான் திடீர்னு வந்து மேல மோதுற மாறி நிப்பிங்களா? ” என்றாள் பூஜா.

” எங்கே மோதுறது.. நீதான் அதுக்குள்ள உஷாரா நின்னுட்டியே…” என்றான் சந்தோஷ்.

” என்ன!!… ” என்று அவனை முறைத்தப்படி அவனிடம் வந்தவள்.

” என்ன.. சொன்ன.. என்ன சொன்ன.. “” என்றாள் கோபமாக.

” உனக்கு என்ன கேட்டுச்சோ அதன் சொன்னேன்.” என்றான் சந்தோஷ்.

” டேய் யாருடா நீ… ஒரு பொண்ணுகிட்டே வந்து இப்படியா பேசுவ.. ” என்றாள் பூஜா.

அவளை ஒருமுறை கீழிருந்து மேலாக பார்த்தவன் ” நீ பொண்ணா? ” என்றான் சந்தோஷ்.

அவன் பேசியதில் ஏற்கனவே கோபமாக இஇருந்த பூஜாவிற்கு மேலும் கோபம் அதிகம் ஆனது.

” ஏய்… என்ன ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க… வழியை விடு ” என்று சந்தோஷற்கும், குமாருக்கும் இடையில் புகுந்து நிவியை இழுத்துக்கொண்டு போக…

” என்ன டா இவ.. நீ இந்த காலேஜ் ஓட டானு… உன்னை போய் மரியாதையை இல்லாம வாடா போடான்னு பேசிட்டு  போறா… நீ அவளை என்னன்னு கேட்க மாட்டியா? ” என்று குமார் சந்தோஷய் உசுப்பேற்றினான்.

” அதானே… இருடா இவளை இப்படியே விட்டா நல்லா இருக்காது. இவளை பார்த்தா இன்னிக்கு தான் புதுசா காலேஜ் ஜாயின் பண்ணி இருப்பா போல  இருக்கு.. அதன் என்னை பத்தி ஏதும் தெரியாம பேசிட்டு போய்ட்டா. வா போய் அவளை என்னனு கேட்டுட்டு வந்துடலாம் ” என்று குமரை அழைத்துக்கொண்டு ஓடியவன் பூஜா, நிவிக்கு எதிரே மூச்சு வாங்க வந்து நின்றான்.

அவனை பார்த்து எரிச்சல் ஆன பூஜா. ” டேய் உனக்கு இப்போ என்ன டா வேணும். சும்மா வந்து குறுக்க நின்னுட்டு இருக்க.. “” என்றாள் பூஜா எரிச்சலாக.

” ஏய் நான் யாரு தெரியுமா? வந்ததுல இருந்து என்னை டா போட்டு கூப்டுட்டு இருக்க… சீனியர்ன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம.. ” என்றான் சந்தோஷ்.

” சீனியர் ஆஹ் இருந்தா டா.. போடக்கூடாதா? அப்படி தான் டா.. போட்டு கூப்பிடுவேன். என்ன டா பண்ணுவ… ” என்றாள் பூஜா திமிராக.

உடனே சந்தோஷ் அருகில் நின்று இருந்த குமார் ” இங்க பாரு மா.. னே பாட்டுக்கு உன் வாய்க்கு வந்ததை பேசிட்டு இருக்க… இவன் வெறும் சீனியர் கிடையாதுமா… இந்த காலேஜ் ஓட டான் தெரியுமா? ” என்று தன் நண்பனை பற்றி பெருமையாக கூறினான் குமார்.

தக்க சமயத்தில் வந்து தன்னை உயர்த்தி பேசிய குமாரை பார்த்து சந்தோசப்பட்டான் சந்தோஷ்.

” ஓஹோ… இவன் தான் அந்த டானா? ” என்று சந்தோஷை மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாக பார்த்தாள் பூஜா.

” என்னமா நீ பேசுறதை பார்த்தா இவனை உன்னக்கு ஏற்கனவே தெறியும் போல இருக்கு… ” என்றான் குமார்.

“ஆமா சீனியர் இந்த டுபாகூர் பத்தி எல்லாமே  எனக்கு தெரியும் ” என்றாள் பூஜா.

” ஏய் யாரோ பார்த்து துபாக்கூர்னு சொல்றே.. ” என்று பூஜாவிடம் எகுறினான் சந்தோஷ்.

‘ டேய் சும்மா சவுண்ட் விடாத அடங்கு டா… நீதான் டா டப்பிக்கூரு.. உன்னை பத்தி வெளியே விசாரிச்சிட்டு தான் வந்து இருக்கேன் ” என்றாள் பூஜா.

” அப்படி என்ன மா என் பிரெண்டை பத்தி விசாரிச்சிட்டு வந்தே… வந்ததில் இருந்து அவனை இந்த கிழி கிழிக்குறியே அதுக்கு காரணம் என்னனு தெரிஞ்சுக்கலாமா? ” என்றான் குமார் ஆர்வமாக.

” ம்ம்ம்… சொல்றேன் ப்ரோ… இதோ இவன் இருக்கானே.. காலேஜ்ள ஒரு பொண்ணையும் விட மாட்டானாம். யாரை பார்த்தாலும் உடனே அவங்க கிட்டே போய் லவ் ப்ரோப்போஸ் பண்ணுவானாம். பொண்ணுங்க எல்லாம் இவனை கண்டாலே தெறிச்சு ஓடிருவாங்கலாம். ” என்றாள் பூஜா.

தன்னை பற்றி தவறாக  பேசும் பூஜாவை கண்டு கோபம் அடைந்தவன் ” ஏய்… என்னை  பத்தி என்ன நினச்சிட்டு இருக்க… என்னை பார்த்தா பொண்ணுங்க பின்னாடி அலையுறவன் மாதிரியா இருக்கு.. ” என்றான் கோபமாக.

” ஆமாம் அதனால தான் என் மேல வந்து விழுற மாதிரி வந்து நின்ன… ” என்றாள் பூஜாவும் விடாமல்.

இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்தாள் எங்கே வாய் வார்த்தை அதிகம் ஆகி சண்டை வந்துவிடுமோ.. என்று பயந்த நிவி ” ஏய் பூஜா எதுக்கு டி தேவை இல்லாம பேசி வம்பு வழக்குற… வா போலாம் கிளாஸ் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க.. ” என்றாள்.

” ஆமா.. ஆமா மா.. நீ கிளம்பு பஸ்ட் நாளே கிளாக்கு லேட்டா போனா நல்லா இருக்காது இல்ல… ” என்று குமாரும் பூஜாவை அங்கிருந்து போக சொன்னான்.

” சரி ப்ரோ..நீங்க சொல்றிங்களேன்னு நான் கிளாஸ்க்கு போறேன். எதுக்கும் நீங்க இவனை விட்டு தள்ளியே இருங்க.. அப்பறோம் உங்களையும் யாரும் தப்பா நினைக்க போறாங்க. ” என்றாள்  பூஜா.

” ஏய் ரொம்ப ஓவரா  பேசுற நீ என்னை பத்தி ஒழுங்கா இங்கே இருந்து போடு எனக்கு வர கோபத்துக்கு நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ” என்றான் சந்தோஷ் கோபமாக.

அவன் பேசுவதை சட்டையெ செய்யாமல் குமரிடம் திரும்பி ” ப்ரோ.. நான் போப்பிட்டு வரேன். நான் சொன்னது எல்லாம் ஞாபகம் வெச்சுக்கோங்க சரியா ” என்றுவிட்டு ” ஏய் நிவி வாடி போலாம் ” என்று சந்தோஷை ஒரு அற்ப பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.

நிவியும் சந்தோஷை பார்த்து கண்களாலேயே சாரி சொல்லிவிட்டு குமாரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து  பூஜாவோடு கிளம்பினால்.

பூஜா செல்வதையே கோபமாக சந்தோஷ் பார்த்துக்கொண்டு இருக்க…

“டேய் விடு  டா.. அவ  ஏதோ தெரிரியாம  பேசிட்டு போறா .. பாவம் சின்ன பொண்ணு..” என்று பூஜாவிற்கு குமார் பரிந்து பேச..

“டேய் நீ எனக்கு தான பிரெண்ட் என்னவோ அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க…. அவ என்னை பத்தி தப்பு தப்பா பேசிட்டு இருக்கா… அப்போல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ணாம அமைதியா இருந்துட்டு அவ இங்கே இருந்து  போன பிறகும் கூட னே  அவளுக்கு சப்போர்ட் பனி என்கிட்டே பேசிகிட்டு இருக்க..” என்றான் சந்தோஷ்.

” விடு டா மச்சான் சின்ன பொண்ணு. ” என்றவன்.

” ஆமா நான் உன்கூடவே தான சுத்திட்டு இருக்கேன். எனக்கு தெரியாம எப்போ இருந்து டா நீ பொண்ணுங்க பின்னாடி சுத்த ஆரம்பிச்ச…” என்றான் சந்தோஷை கிண்டல் செய்துகொண்டே..

” டேய்  அவ தான் என்னை பத்தி தெரியாம தப்பா பேசிட்டு போறான்னா.. நீயும் என்னை நம்பாம கேக்குறியா.. ” என்று ககுமாரை சந்தோஷ் அடிக்க போக..

” டேய் மச்சான் வேணாம். நான் சும்மா கிண்டலுக்கு தான் சொன்னேன் ” என்று சந்தோஷடம் இருந்து  இரண்டு அடி தள்ளி நின்று கூறினான் குமார்.

” எது.. இது கிண்டலுக்கு பேசுறதா… அவ பேசுறதை கூட நான் மன்னிச்சு விட்ருவேன். ஆனா நீ இருக்கியே கூடவே இருந்து எனக்கு சப்போர்ட் பண்ணாம வழுக்கு சப்போர்ட் பண்ணின  துரோகி.. உன்னை நான் மங்கவே மாட்டேன் டா… ” என்று சந்தோஷ் குமாரை துரதிக் கொண்டு ஓட..

சந்தோஷ் கையில் மாட்டிக்கொள்ள கூடாது என்று அங்கிருந்து வீகமா ஓடினான் குமார்.

இதை எல்லாம் தூரத்தில் மறைவாக  நின்று பார்த்துக்கொண்டு இருந்த பூஜாவும், நிவியும் அங்கிருந்து கிளம்பினர்.

“ஏண்டி அந்த சந்தோஷ்க்காக தான் நீ இந்த காலேஜ்லயே சேர்ந்த.. அவனாவே வந்து உன்கிட்டே பேச வர அப்போ நீ என்னவோ அவனை பிடிக்காத மாதிறி பேசிட்டு வந்துட்ட..” என்றாள் நிவி.

“நான் வேணும்னு தான் டி  அவன்  கிட்டே பேசினேன்.  ஸ்கூல்  படிக்குற அப்போ அவன்   பின்னாடி நான் எத்தனை தடவை போய் இருப்பேன். என்னை ஒரு வாட்டி கூட திரும்பி பார்க்காம அலைய விட்டவன் தானே இவன். இனி பாரு இவனை வெறுப்பேத்தி என் பின்னால இவனை நான் அலையவிடல.. என் பேரு பூஜா இல்லை ” என்றாள்.

” அடிப்பாவி இதுக்கு எதுக்கு டி நீ அவன லவ் பண்ணின… ” என்றாள் நிவி 

EPISODE 3

தன்னுடைய முதுகலை படிப்பிற்காக முதல் நாள் கல்லூரிக்கு வந்த மீனு தன்னுடன் ஏற்கனவே பயின்றவர்கள் யாருமே தன்னுடன் கல்லூரியில் சேரவில்லை என்ற வருத்தம் அவளுக்கு ஒரு புறம் இருந்தாலும்.

தற்போது செந்திருக்கும் கல்லூரியில் தன்னுடைய சிந்தனைக்கு ஒத்துப் போகும் விதமாக நண்பர்கள் அமைப்பார்கள் என நம்பிக்கையில் தன்னுடைய அறைக்குள்   நுழைந்தால்.

அவளைப் போலவே பறவைகள் பற்றிய ஆர்வம் நிறைந்த பலர் அவளுடைய வகுப்பறையில் இருந்தனர்.

அறைக்குள் நுழைந்த மீனுவை அந்த மாணவர்கள் பார்க்க…

அவர்களை எல்லாம் பார்த்து லேசாக புன்னகைத்த படி   உள்ளே வந்தவள் தான் எங்கே அமர்வது என்ற யோசனையில் சுற்று மற்றும் பார்த்தாள்.

கடைசியில் ஒரு பெஞ்ச் காலியாக இருக்க அவர்களை எல்லாம் கடந்து அந்த பென்சில் சென்று அமர்ந்தாள்.

  அவள் வந்த பிறகும் சில மாணவர்கள் அறைக்குள் புதிதாக வந்து கொண்டு இருந்தனர்.

ஒவ்வொருவராக மீனு ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தால். தனக்கு முன்னாள் அமர்ந்திருந்தவர்கள் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள மீனுவும் தன்னை அவர்களோடு அறிமுகப்படுத்திக் கொண்டால் அதற்குள் அவர்களுடைய ப்ரொபசர் வந்துவிடவே  பேசிக் கொண்டிருந்தவர்கள் சட்டென அவர்கள் ப்ரொபசர் உள்ளே வந்ததும் எழுந்து நின்றனர்.

கிட்டத்தட்ட அவர்களுடைய ப்ரொபஷன்கும் அவர்களுக்கும் நான்கைந்து வருடம் தான் வயது வித்தியாசம் இருக்கும். வந்து சேர்ந்திருந்த மாணவர்களை விட பார்ப்பதற்கு சற்று எளிமையாக தான் இருந்தார் அந்த ப்ரொபசர்.

அறைக்குள் வந்தவர் அனைவரையும் பார்த்து பொதுவாக ஒரு புன்னகையை எடுத்துவிட்டு ஹலோ என் பெயர் அர்ஜுன் உங்களுடைய இந்த ஆர்ணத்தாலஜி டிபார்ட்மெண்டுக்கு நான் தான் டிபார்ட்மெண்ட் செட்டா இருக்கப் போறேன் இந்த  ரெண்டு வருஷமும் நீங்க என் முகத்தைத்தான் பார்க்கப் போறீங்க என்று சொல்லி சிரித்தான் அர்ஜுன்.

அவன் அவன் பேசுவதை கேட்டு வகுப்பில் உள்ளவர்கள் சிரிக்க சரி உங்கள பத்தி ஷார்ட்டா ஒரு இன்ட்ரொடக்ஷன்  கொடுங்க பாப்போம் என்றான்.

யாரு பர்ஸ்ட் ஸ்டார்ட் பண்றீங்க என தன் உள்ளங்கைகளை பரபர என தேய்த்துக் கொண்டே அறையை சுற்றிப் பார்க்க…

மற்றவர்களைப் போலவே அவனையும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த மீனுவை போய் பார்த்தான்.

எங்கே நீங்க உங்கள பத்தி சொல்லுங்க பாக்கலாம் என்றான்.

தயங்கியபடியே எழுந்து நின்றவள் ஹலோ என் பேர் மீனு. சின்ன வயசுல இருந்தே எனக்கு பறவைகள் மீதான காதல் என்னை இந்த டிபார்ட்மெண்ட்ட தேர்ந்தெடுத்து படிக்க வச்சது.

இத்தனை வருடம் ஆகியும் அந்த ஆர்வம் இன்னமும் குறையாமல் அப்படியே இருப்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். அதே ஆர்வத்தோட இந்த இரண்டு ஆண்டையும் கடந்திடுவேன்னு நினைக்கிறேன் என்றாள்.

ஏன் உங்களுக்கு பறவைகள் மேல காதல் வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாமா? என்று கேட்டான் அர்ஜுன்.

நாங்க சின்ன வயசுல ஒரு கிராமத்துல தான் தங்கியிருந்தோம். அந்த கிராமத்தை ஒட்டி ஒரு மலையும் இருந்துச்சு…. அந்த மலையையும் எங்கு கிராமத்தையும் சுற்றி நிறைய பறவைகள் கூட்டம் நிறைய இருக்கும். பல வகையான பறவைகளை நான் அங்கே தான் பார்த்தேன். நான் மட்டும் இல்ல என்னுடைய ஊரச் சேர்ந்தவர்களை எல்லோருக்குமே அங்கே வர பறவைகள் மேல அதிகம் இருந்துச்சு அதனாலேயே எங்க ஊருக்குள்ள பட்டாசு வெடிக்கிறதோ… திருவிழா அப்ப சத்தமா பாட்டு வைக்கிறதோ… இந்த மாதிரி எதுவுமே இருக்காது. 

பறவைகள் எல்லாம் எங்கே எங்க ஊருக்கு வராமல் போயிடுமோனு யாருமே இந்த மாதிரி விஷயங்களை செய்யாம கட்டுக்கோப்பா இருந்தாங்க அப்படிப்பட்ட ஊர்ல வளர்ந்ததாலோ என்னவோ எனக்கும் பறவைகள் மேலான காதல் தானாகவே வந்துருச்சுன்னு நினைக்கிறேன் தினமும் காலையில நான்  அவங்களோட சத்தத்தோட தான் எழுந்திருப்பேன். அந்த பீலே தனி…  அடிக்கடி புதுசு புதுசா சில பறவைகள் சீசன்ல எங்க ஊர்ல வந்து இளைப்பாறும் அப்படி அந்த பறவைகளை எல்லாம் பார்க்கும்போது இது என்ன மாதிரியான பறவை அப்படின்னு தெரிஞ்சுக்க ஆர்வத்துல முதன்முதலா பறவைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக என்னுடைய தேடலை தொடங்கினேன். அது அப்படி அப்படியே வளர்ந்து இப்போ இங்கே வந்து நிற்கிறது என்றால்.

அவள் சொல்வதையே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுன்  சிரித்தபடி நைஸ் என்றவன் அடுத்தடுத்த மாணவர்களை கேட்க பேச சொன்னான்.

ஒருவராக தங்களைப் பற்றியும் தாங்கள் ஏன் இங்கே படிக்க வேண்டும் என்பதை பற்றியும் விளக்கிக் கொண்டு இருக்க அப்போது வாசலில் எக்ஸ்க்யூஸ் என இரண்டு குரல்கள் கேட்டது.

வகுப்பறைக்கு வெளியே இருந்தவர்களை பார்த்தவன் முதல் நாளே கிளாஸ்க்கு லேட்டா என்று சொல்லி சிரித்தான்.

சாரி சார் என்று தலையை சொரிந்தபடி வாசலில் இருவர் நின்றிருக்க…. சரி உங்கள பத்தி ஏன் நீங்க ஏன் இந்த டிபார்ட்மெண்ட்ட செலக்ட் பண்னீங்கங்கிறதை பத்தியும் சொல்லிட்டு ரெண்டு பேரும் உள்ளே வாங்க என்றான் அர்ஜுன்.

என் பேரு மைதிலி எல்லாரும் என்ன திலின்னு தான் கூப்பிடுவாங்க… இந்த ஒத்தையெழுத்த விட்டுட்டு கூப்பிடறதுல அவங்களுக்கு என்ன சந்தோசம்னு எனக்கு இப்போவரையும் புரியல என்று சொல்லி சிரித்தவள்.

இந்த டிபார்ட்மெண்ட்ட தேர்ந்தெடுக்க பெருசா ஒரு காரணமும் என்கிட்ட இல்ல சார் எப்படியும் டிகிரி முடித்ததும் எனக்கு எங்க வீட்ல கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க அதுக்கு ஏன் நான் மாங்கு மங்குனு  கஷ்டப்பட்டு படிச்சு ஓல்டு மெடல் வாங்கணும் அதனாலதான் இந்த ரெண்டு வருஷத்தை சும்மா வீட்ல இருந்து வீன் பண்ணனும்….அதனால தான் இந்த  ரெண்டு வருஷம் காலேஜ்ல ரிலாக்ஸ்டா இருக்கலாம்னு  இங்கே வந்து இருக்கேன் என்றாள்.

அப்போ டைம் பஸ்க்கு தான் நீ காலேஜ்ல சேர்ந்திருக்க படிக்க இல்ல… என்றான் அர்ஜுன்.

அது எப்படி சார் காலேஜ்ல சேர்ந்துட்டு பாஸ் ஆகாம போனா நல்லா இருக்காது அதுக்காகவா அது நான் கொஞ்சம் படிப்பேன் நீங்க கவலைப்படாதீங்க என்று சிரித்தால் மைதிலி.

  டிபார்ட்மெண்டுக்கு ஒருத்தர் இந்த மாதிரி வந்துடுறீங்க…  என்றவன் மைதிலி   அருகில் நின்றிருந்தவனை பார்த்து சரி நீ உன்ன பத்தி சொல்லுப்பா என்றான்.

அர்ஜுனை பார்த்து சிரித்தவன் வகுப்பு வகுப்பிற்குள் இருந்த மாணவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு ஹலோ என் பேரு விக்ரம். எனக்கு போட்டோகிராபினா ரொம்ப இஷ்டம்… நான் ஒரு வயதிலே போட்டோ கிராபற ஆகணும்கிறது என்னோட ஆசை என்றான்.

அப்புறம் ஏப்பா எந்த டிபார்ட்மெண்ட்ட செலக்ட் பண்ண என்று கேட்டான் அர்ஜுன்.

வைஃபை போட்டோகிராபினா காட்டுக்குள்ள போய் எல்லாம் மிருகத்தையும் போட்டோ எடுப்பாங்கன்னு தான் சொல்லுவாங்க ஆனா எனக்கு அப்படி எல்லாம் மிருகங்களையும் எடுக்கிறது விட பறவைகளை போட்டோ எடுக்கிறது ரொம்ப பிடிக்கும் வெறுமனே அதுங்கள படம் பிடிக்கவில்லை எனக்கு விருப்பமில்லை அதனால்தான் பறவைகளைப் பற்றி படிச்சு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் என்னோட போட்டோகிராபியை ஸ்டார்ட் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன் என்றான் விக்ரம்.

பரவால்ல இன்ட்ரஸ்டிங் தான் என சொன்ன அர்ஜுன் சரி இரண்டு பேரும் போய் உட்காருங்க நம்ம கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாம் என்றான்.

மைதிலி விக்ரமும் ஒன்றாக கிளாசிக்கல் நுழைந்தவர்கள் தங்கள் அமர இடம் பார்க்க மீனு மட்டும் தனியாக அமர்ந்திருக்க… அவர்களை பார்த்து மீனு தன் பென்சய்   காட்டி வரச் சொல்லி செய்கை செய்தாள்.

இருவரும் சிரித்தபடி அவள் அருகில் வந்தவர்கள் அவள் அருகில் அமர்ந்தனர்.

சரி எல்லாரும் பற்றியும் ஓரளவுக்கு தெரிஞ்சுக்க கிட்டன்னு நினைக்கிறேன். போக போக இன்னும் நிறைய தெரிஞ்சுக்கலாம் என்ற அர்ஜுன் நம்ம கிளாஸ்ச ஸ்டார்ட் பண்ணலாமா? என்றான்.

அனைவரும் கூட சாக ஓகே சார் என்று சொல்ல..

சீனியர் ஆனாலும் அந்த ஸ்கூல் பழக்கம் இன்னும் யாரை வெட்டும் போகல போல என்று சொல்லி சிரித்தவன்.

ஏற்கனவே நாலு வருஷமா நீங்க நிறைய பறவைகள் பற்றி படிச்சிருப்பீங்க… அதனால உங்களுக்கு தியரட்டிகளா ரொம்ப கம்மியா தான் லெசன்ஸ் வரும் அதுக்கு பதிலா நம்ம ஃபீல்டு ஒர்க்கு தான் நிறைய பண்ண போறோம் நிறைய காடு மலைகள்ன்னு இந்த ரெண்டு வருஷமும் நாம சுத்தப் போறோம.

காடு மலைகள்ல இருக்கிற பல வகையான பறவைகளை தேடி கண்டுபிடித்து அதைகளை பத்தி நம்ம தெரிஞ்சுக்க போறோம் என்றான் அர்ஜுன்.

நீங்க அதிகமா வெளியே என்னோட சுத்த வேண்டி வரலாம் அதனால எல்லாத்துக்கும் இப்பவே தயாரா இருந்துக்கோங்க சின்ன பிள்ளைங்க மாதிரி நான் வெளியே வர மாட்டேன் வீட்ல விட மாட்டாங்க எனக்கு டிராவல் பண்ண ஒத்துக்காது அப்படி இப்படின்னு காரணம் சொல்லக்கூடாது இந்த ரெண்டு வருஷமும் நான் எங்கே எல்லாம் உங்கள கூட்டிட்டு போறேன் இன்னும் அங்க நீங்க எல்லாரும் கண்டிப்பா வந்தே ஆகணும் என்றான் அர்ஜுன்.

நீங்க ரெண்டு வருஷமும் எங்கள கூட்டிட்டு போவீங்க….ஆனா எங்க வீட்ல செலவு பண்ணி நீங்க கூப்பிட எடுத்துக்கெல்லாம் அனுப்பி வைக்க ஒத்துக்க மாட்டாங்க என்றால் பின்னால் இருந்து மைதிலி.

யாருமா அது என்றவன் குரல் வந்து திசையை பார்க்க மைதிலி பேசவும் நீ தானா உன் வீட்டில் உன்னை படிக்க வைக்கிறதுக்கு இவ்வளவு செலவு பண்றப்போ இதுக்கெல்லாம் செலவு பண்ண மாட்டாங்களா என்ன ஒழுங்கா வந்து சேரு என்றான்.

பின்பு அனைவரையும் பார்த்து முதல் ஆறு மாசம் நமக்கு இந்த ஒன்றரை வருஷத்துல என்ன எல்லாம் செய்யப் போறோங்குற தியரிட்டிக்கல்  கிளாஸ் தான் இருக்கும்.  இந்த ஆறு மாசம் அத பத்தி நீங்க தரவா தெரிஞ்சுக்கோங்க அதுக்கு பிறகு தான் நம்ம பீல் ட்ரிப் போக போறோம் என்றான்.

பிறகு அவன் வகுப்பிற்கு ஆரம்பிக்க அனைவரும் மிகவும் கவனமாக தங்கள் முதல் நாள் கிளாசை அட்டென்ட் செய்தனர்.

இரண்டு மணி நேரம் தொடர்ந்து அர்ஜுன் வகுப்பெடுத்தான். அந்த இரண்டு மணி நேரமும் போர் அடிக்காமல் அவன் கிளாஸ் எடுக்க அனைவரும் ஆர்வமாக அதைக் கேட்டுக் கொண்டு இருந்தனர் இடைவெளி பெல் அடிக்கவும் அவர்களிடம் இருந்து விடைபெற்று அர்ஜுன் அங்கிருந்து சென்றான்.

அவன் சென்றதும் சக மாணவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர் பின்னால் பெஞ்சில் அமர்ந்திருந்த மீனுவும் விக்ரம் மைதிலி இடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களுடன் நட்பாகினால்.

EPISODE 4

மீனுவின் கிளாஸ் முடிந்தது விக்ரம் மைதிலி இடம் சொல்லிக்கொண்டு தன் வீட்டிற்கு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையும் பொழுதே பூஜாவும் நிவியும் சிரிக்கும் சத்தம் வாசல் வரை கேட்டது.

ரெண்டு பேரும் சேர்ந்துட்டார்களா இனி வீடு ரெண்டு படப் போகுது என அவர்களை நினைத்து  சிரித்தபடி உள்ளே வந்தால் மீனு.

தன் மகள் சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் வருவதை பார்த்த குரு மாமா மீனு வந்துட்டியா எப்படி இருந்தது உன்னோட ஃபர்ஸ்ட் டே காலேஜ் என்று கேட்டார்.

சூப்பர் பா என்னோட பழைய ஃப்ரெண்ட்ஸ் யாருமே என் கூட படிக்க வரலையேன்னு நான் ரொம்ப வருத்தத்தில் இருந்தேன் ஆனா என்னோட கிளாஸ்ல நியூவா இரண்டு பேர் எனக்கு பிரண்டா இருக்காங்க விக்ரம் மைதிலி என்று ஒரு நாள் அவங்கள ரெண்டு பேரையும் நான் இங்கே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் என்றால் மீனு.

கூட்டிட்டு வா மீனு ஒரு நாளைக்கு தடபுடல சமைச்சு போட்டு அவங்களுக்கு விருந்து வைத்துவிடலாம் என்று படி கையில் காபியுடன் வந்த ஜனனி என்னிடம் திரும்பி இன்னைக்கு உங்க ஃபர்ஸ்ட் டைல பஸ்ட் காலேஜ்ல யாரையும் புதுசா மீட் பண்ணவில்லையா? யார் கூடயும் பிரண்ட்ஷிப் வச்சுக்கலையா? என்று கேட்டார்.

ஓ…அதெல்லாம் மா இந்த காலேஜ்ல எங்களுக்கு சீனியரா ரெண்டு பேர் இருக்காங்க ஒருத்தர் சந்தோஷ் இன்னொருத்தவங்க குமார் அவங்க ரெண்டு பேரும் தான் எங்களோட பிரண்ட்ஸ் என்றால் நிவி.

நிவி சந்தோஷ் பெயரைச் சொன்னதும் உனக்கு ஏதாவது அறிவு இருக்கா அவங்க ரெண்டு பேரையும் எதுக்குடி என் வீட்ல இன்டர்வியூஸ் பண்ணி வைக்கிற என்றாள்.

எப்படியும் ஒரு நாள் சந்தோஷப்பத்தி இவங்க கிட்ட நீ சொல்லித்தான் ஆகணும் அதை ஏன் நாம் நல்லவிதமா சொல்லக்கூடாது என்றாள்.

திஸ் இஸ் டூ மச் நிவி என்றால் பூஜா.

என்னத்த டூ மச் நீ கொஞ்சம் பேசாம இரு என்றவள் திரும்பி ஜனனியிடம்  இருந்த காபியை எடுத்துக்கொள்ள.. ” ஏண்டி ஒரு பொண்ணு பிரண்டு கூடவாடி உங்களுக்கு கிடைக்கல போனதும் பசங்களத்தான் கண்டுபிடித்து வைத்திருப்பீர்களா? என்ன பொண்ணுங்களோ நீங்க ரெண்டு பேரும்” என தலையில் அடித்துக் கொண்டார்.

அம்மா நாங்க பொண்ணு பெண்ணுங்களை பிடிக்கவில்லை என்று யார் சொன்னது இன்னும் அக்கா அவங்க பிரண்ட்ஸ் கூட்டிட்டு வரும்போது நாங்களும் என்னோட பிரண்ட்ஸ கூட்டிட்டு வரோம் அப்ப தெரியும் உங்களுக்கு எங்களை பத்தி என்றாள் நிவி .

பிறகு அனைவரிடம் சொல்லிக்கொண்டே நிவி அங்கிருந்து கிளம்பினாள்.

மா நைட் டின்னருக்கு என்ன என்றால் மீனு வேற என்னடி காலைல வச்ச சப்பாத்தி குருமா இருக்கு அதை சூடு பண்ணி வச்சிருக்கேன் மாவு மட்டும் உருட்டி சப்பாத்தி போட்டா போதும் என்றார்.

பீமா நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன் என்று விட்டு மீண்டும் தன்னரைக்குச் செல்ல…

என்னங்க கொஞ்சம் மளிகை சாமான் வாங்கணும் நீங்க வெளியே போயிட்டு வரும்போது அப்படியே நான் எழுதிக் கொடுக்கிறது வாங்கிட்டு வந்துட்றீங்களா என்றார் ஜனனி.

நான் வெளியே எங்கேயும் போகலையே மா என்றார் குரு.

அப்போ கிடைக்காது போயிட்டு வந்து கொடுங்களேன் காலையில அரக்க பறக்க வேலை பார்த்துட்டு இருக்கிறப்போ அது இல்லை இது இல்லைன்னு டென்ஷன் ஆகும் என்றார். 

சரிமா நீ லிஸ்ட் எழுதி கொடு நான் போயிட்டு வரேன் என்று தன் சட்டை மாட்ட கிளம்ப அப்பா நானும் உன் கூட வரேன் ப்ளீஸ் என்றால் பூஜா.

நீ எதுக்குமா இப்போ தானே காலேஜ்ல இருந்து வந்த உனக்கு டயர்டா இருக்கும் நீ ரெஸ்ட் எடு அப்பா போய் வாங்கிட்டு வந்துட்டேன் என்றார் குரு.

ஏங்க நீங்க வேண்டான்னு சொன்னா அவ என்ன விடவா போற கூட்டிட்டு போயிட்டு வாங்க அவ அங்க வந்து ஏதாவது அவளுக்கு வேணும்கிறத வாங்கிபா அதுக்காக தான் உங்க கூட வரேன்னு அடம் பிடிக்கிறா என்று ஜனனி தன் மகளின் மனதில் இருந்ததை அப்பட்டமாக படித்துக் கூற.

அம்மா சூப்பர் மா நீ…நான் என்ன நெனச்சேனோ அத அப்படியே சொல்லிட்ட என்றவள் அப்பா சீக்கிரம் போய் சட்டையை மாட்டிட்டு வா போகலாம் என்றாள்.

குரு சிரித்துக்கொண்டே சட்டையை மாட்டிக்கொண்டு ஜனனியிடம் மளிகை லிஸ்டையும் பையையும் வாங்கிவிட்டு தன்மகள் பூஜாவை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார் .

இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் மொட்டை மாடியில் அமர்ந்து இருக்க… குருவிற்கு அவர் அண்ணனிடம் இருந்து போன் வந்தது.

அதை பார்த்தது ” இதோ என்னடா பொழுது இன்னும் போகலையே உங்க பாசமான அண்ணன் போனை காணோமேன்னு நினைச்சேன். நினைச்சு முடிக்கல கால் பண்ணிட்டாரு” என்று குருவையும் அவர் அண்ணன் பரமன் இருவருக்கும் இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை  பற்றி பேசி கிண்டல் செய்தார் ஜனனி.

என் அண்ணனையும் பத்தி பேசலைன்னா உனக்கு தூக்கமே வராது என்று குரு ஜனனியை கடிந்து விட்டு போனை அட்டென்ட் செய்தார்.

அண்ணா சொல்லுங்க எப்படி இருக்கீங்க என்றார் குரு.

நல்லா இருக்கேன் குரு நீ எப்படி இருக்க என்றார் பரமன்.

இவர்கள் இருவரும் பேச ஆரம்பித்ததும்  “ஹே மீனு உன் அப்பாப்பா உன் அப்பாவ பார்த்தியா நேத்து நைட்டு தானே ரெண்டு பேரும் பேசினாங்க.என்னமோ பேசி ரொம்ப நாள் ஆன மாதிரி இரண்டு பேரும் நலம் விசாரிச்சுக்கிறத” என்று சொல்லி ஜனனி சிரிக்க.

” மா சும்மா இருங்க எப்ப பாரு  அப்பாவை ஓட்டுறது உங்களுக்கு வேலையா போச்சு” என்று மீனும் குருவிற்கு சப்போர்ட் செய்தாள்.

“ஷ்…ரெண்டு பேரும் பேசாம இருங்க ஏதோ முக்கியமான விஷயம் பேச ஆரம்பிச்சிருக்காங்க” என்றால் பூஜா அவர்கள் இருவரையும் இடைமறித்து.

அவள் சொன்னதும் இருவரும் அமைதியாகி விட்டு குரு பேசுவதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தனர்.

” என்ன அண்ணா சொல்றீங்க திடீர்னு நம்ம ரியாவுக்கு கல்யாணம்னு சொல்றீங்க.. அவ இப்பதானே படிச்சு முடிச்சா அதுக்குள்ள கல்யாணமா? ” என்றார் குரு.

“ஆமா பா…தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையால இந்த கல்யாணத்தை பண்ண வேண்டியதா போயிடுச்சு. நீ நேர்ல கிளம்பி வா நான் உனக்கு மத்தத விவரமா சொல்றேன் என்றார் பரமன் சற்று வருத்தம் கலந்த குரலில்.

அண்ணா நான் ஏன் உங்க குரல் ரொம்ப சோகமா இருக்கு அப்போ நம்ம ரியாவோட கல்யாணத்துல உங்களுக்கு விருப்பம் இல்ல அப்படியா என்றார் குரு.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல குரு நீ காலைல நேரமே கிளம்பி வந்துடு…புதன்கிழமை கல்யாணம் ” என்றார்.

“என்ன அண்ணா சொல்றிங்க..ரியா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ” என்றார் அதிர்ச்சியாக.

குரு தன் அண்ணனுடன் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்த ஜனனியும், மற்றவர்களும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள… போன் பேசிவிட்டு வைத்த குரு தன் குடும்பத்திடம் விபரம் சொன்னார்.

“என்னங்க சொல்றிங்க நம்ம ரியாவுக்கு அதுக்குள்ள கல்யாணமா? அதுவும் இன்னும் ஒருநாள்ளயா? மாப்பிள்ளை எந்த ஊரு? என்ன பண்ணிட்டு இருக்காரு? எப்போ மாப்பிளை பாத்தாங்க நம்மகிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லல. நேத்து நைட் கூட பேசினாரு அப்போ கூட எதும் சொல்லையே ” என்று நம்ப முடியாமல் கேட்டார். 

என்னனு தெரில ஜனனி நாளைக்கு நேருல போய் தான் கேட்கணும் என்றார் குரு.

“சரிங்க அப்போ நான் போய் ரெண்டு நாளைக்கு தேவையான ட்ரெஸ்ஸ எடுத்து வைக்குறேன் என்றுவிட்டு ஏய் வாங்க ரெண்டு பேரும் நீங்களும் உங்களுக்கு வேணும்னேக்குற ட்ரெஸ்ஸய் எடுத்துவையுங்க வாங்க… என்று இருவரையும் அழைத்துசென்றார்.

மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு தன் அண்ணனின் குரலில் ஏதோவித்யாசம் இருப்பதை உணர்ந்த குரு “ஏன்? இந்த திடீர் கல்யாணம் ” என்று யோசனையில் மூழ்கினார்.

நாளைக்கு ஊருக்கு செல்லும் குருவின் குடும்பத்திற்கு காத்திருக்க போகும் அதிர்ச்சி என்ன? 

தன் அண்ணன் பரமனின் மகள் ரியா திருமணம் இவ்வளவு அவசரமாக நடக்க என்ன காரணம். 

EPISODE 5

காலேஜிற்கு சேர்ந்த மறுநாளே  மீனு,பூஜா இருவரும் லீவ் போட்டுவிட்டு அவர்கள் பெரியப்பா வீட்டிற்கு சென்றனர்.

குரு  பதட்டமாக  தன் அண்ணன் வீட்டிற்கு கிளம்பினார். சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு ரயில்  வழியாக பயணம் செய்து இரண்டே முக்கால் மணி நேரத்தில் ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினர்.

அவர்கள் ஸ்டேஷனுக்கு வரும் பொழுதே குருவின் அண்ணன் பரமன் வீட்டில் இருந்து கார் அவர்களுக்காக காத்திருந்தது.

நால்வரையும் அழைத்துக் கொண்டு பருமனின் டிரைவர் அவர்கள் வீட்டிற்கு சென்றான்.

பரமன் குரு இருவருமே சேர்ந்து முதலில் சென்னையில்தான் கட்டுமான பணிகளுக்கான பிசினஸை தொடங்கியிருந்தனர். பிறகு நாளடைவில் அது நன்கு வளர்ச்சி அடைந்திருக்க அதனுடைய கிளைகளை மற்ற ஊர்களில் திறக்க வேண்டும் என முடிவு செய்து சென்னைக்கு அருகில் இருக்கும் காஞ்சிபுரத்தில் குருவிற்காக தனியாக ஒரு கிளையை திறந்து அதை பார்த்துக் கொள்ள குருவை நியமித்திருந்தார்.

அன்றிலிருந்து இருவருமே அவரவர்களுக்கான வேலையை தனித்தனியே பார்க்க ஆரம்பித்தனர். முதலில் கிளையாக பிரிந்து இருந்த அலுவலகத்தை தன் தம்பியின் கடின உழைப்பை மனதில் கொண்டு அவருக்கு அதை முழுவதுமாக கொடுத்துவிட்டார் பரமன்.

இருவருமே தனித்தனியாக பிசினஸில் ஆரம்பித்து அவரவர் வழியில் கொடி கட்டி பறந்து கொண்டு இருக்கின்றனர்.

ஒருவருக்கு ஒருவர் வசதியில் சளைத்தவர்கள் அல்ல… குருவின் தொழில் காலப்போக்கில் பரமனை விட அதிகமாக பிரபலமடைய அதை பொறுத்துக் கொள்ள முடியாத பரமனுடைய மனைவி சாந்தா குருவின் வீட்டிற்க்கே வந்து “எங்களால்தான் இவ்வளவு வசதியான வாழ்க்கை உனக்கு அமைந்திருக்கிறது” என அவரை அவரிடம் சண்டை இட்டு அந்த தொழிலுக்கான உரிமைத்தையும் தனக்கு எழுதி வாங்கிக் கொண்டார்.

அன்றிலிருந்து குரு பரமனின் பிசினஸ் விஷயத்தில் எதிலுமே தலையிட்டுக் கொள்வதில்லை எவ்வளவோ முறை பரமன் தன்னுடைய தொழிலை பார்த்துக் கொள்ள குருவை அழைத்தாலும் தன் அண்ணி சாந்தாவின் விஷப் பேச்சுக்களை தாங்கிக் கொள்ள இனி மேலும் முடியாது என அதை மறுத்துவிட்டார்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து தனியாக மீனு கன்ஸ்ட்ரக்ஷன்ஸை தன் மனைவியின் நகைகளை எல்லாம் வைத்து தன்னுடைய கட்டுமான தொழிலை ஆரம்பித்தார். அவர் உழைப்பு வீண் போகவில்லை நாளடைவில் அவருடைய கன்ஸ்ட்ரக்சன்ஸ் பிசினஸில் மெல்ல மெல்ல வளர்ந்து உயர்ந்தது .

என்னதான் வசதி வாய்ப்புகள் என இருந்தாலும் குரு அவர் பிள்ளைகளையும் தன் மனைவியையும் சாதாரண வாழ்க்கையையே வாழ வைத்தார். குருவும் மிகவும் எளிமையாக தான் வாழ்ந்து வந்தார். தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே செய்து கொள்ளவும்  யாரையுமே எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்பதையும்  தன் குடும்பத்திற்கு கற்றுக் கொடுத்தார்.

இன்று வரை அதுபோலத்தான் இவர்கள் நால்வருமே மிகவும் எளிமையாக வாழப் பழகி இருந்தனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு தன் அண்ணனின் வீட்டிற்கு குரு அவர் குடும்பத்துடன் வர..

வாசலிலேயே நீண்ட நேரமாக தன் தம்பிக்காக காத்திருந்த பரமன் அவருடைய கார் வந்து நின்றதும் வேகமாக வந்து கார் கதவை திறந்து  வெளியே வந்த குருவை அணைத்துக் கொண்டு “குரு எப்படி டா இருக்க? நல்லா இருக்கியா? உன்ன பாத்து எவ்வளவு வருஷம் ஆச்சு” என தழுதழுக்க தன் தம்பியின் உடல் நலம் பற்றி விசாரித்தார்.

“நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றார் குரு..

“இருக்கேன் பா..” என்று சாதாரணமாக பதில் அளித்துவிட்டு அதன் பின்பு காரிலிருந்து இறங்கிய ஜனனி,மீனு, பூஜா மூவரையும் பார்த்து அவர்களின் நலம் விசாரித்தவர். மீனு பூஜாவிடம் ” என் தம்பி பொண்ணுங்க இவ்வளவு பெரிய ஆளுங்களா வளர்ந்துட்டாங்களா? ” என ஆச்சரியமாக கேட்டார்.

“ஆமா நீங்க பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியா இன்னமும் நாங்க இருப்போம் . நாங்க எவ்வளவு பெருசா வளர்ந்துடும் பாத்தீங்களா பெரியப்பா “என பூஜா சிரித்த முகமாக அவரிடம் பேச…

!இன்னமும் உனக்கு இந்த துடுக்குத்தனம் போகலையா?” என சொல்லி பூஜாவின் தோளை தட்டிக் கொடுத்தவர் “மீனுவை பார்த்து மீனு வாடா… நல்லா இருக்கியா? உன் படிப்பு எல்லாம் எப்படி போகுது” என்றார்.

” பெரியப்பா நான் நல்லா படிக்கிறேன் எனக்கு பிடித்த படிப்பு தான் எடுத்து படிச்சிட்டு இருக்கேன்” என்றாள் மீனு.

“சரி வந்தவங்கள்ல வாசலிலேயே நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன். வாங்க எல்லாரும் உள்ள போகலாம்” என்று சொல்லி” ஜனனி வாமா உள்ளே “என அவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல..

சிரித்து முகமாக அனைவரும் பேசிக்கொண்டே வீட்டிற்குள் வரவும் அங்கே பரமனின் மனைவி சாந்தா இவர்கள் அனைவரும் சந்தோஷமாக ஒரே குடும்பமாக பேசி சிரித்து வருவதை பார்த்து எரிச்சல் அடைந்தவர்,” வந்துட்டாங்க எப்படா இந்த வீட்டுக்கு வரணும்னு வாய்ப்பு கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்திருப்பாங்க போல காரணம் கிடைச்சது முதல் ஆள கிளம்பி வந்தாச்சு “என அவர்கள் முகத்தில் அடித்தார் போல பேச.

“ஏய் சாந்தா வாய மூடு தேவை இல்லாம வார்த்தையே வளர்க்காத வந்தவங்களுக்கு குடிக்க எதுவும் கொண்டு வா போ ”என அவரை பரமன் அதட்ட.

” என் வாயை மட்டும் அடக்குங்க.நான் சொல்றத என்னைக்கு தான் நீங்க கேட்டு இருக்கீங்க ” என புலம்பிக்கொண்டே அவர் கிச்சனுக்கு செல்ல.. அவரின் குணம் அதுதான் என அனைவருக்கும் தெரிந்ததால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் வந்து  அமர்ந்தனர்.

அப்போதுதான் தன் அறையில் இருந்து வந்த ரியா ஹாலில் தன் சித்தப்பா குடும்பம் அமர்ந்திருப்பதை பார்த்ததும் வேகமாக அவர்களிடம் ஓடி வந்து” சித்தப்பா எப்படி இருக்கீங்க? எப்போ வந்தீங்க? ” என்றால் ரியா. ” இப்போதாண்டா வரும் உனக்கு கல்யாணம் வச்சத இப்படித்தான் எங்களுக்கு சொல்லுவீங்களா? சித்தப்பா உன் மேல கோபமா இருக்கேன்” என்றார் குரு.

அவர் கல்யாணம் என்று சொன்னதுமே சிரித்து முகமாக இருந்த ரியாவின் முகம் கருத்து விட்டது. ரியா எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க.. அதை கவனித்து விட்டு ஜனனி ”  கல்யாணம்னு சொன்னதும் ஏன் உன் முகம் இப்படி மாறிடுச்சு” என்று கேட்டார்.

”சித்தி அது வந்து… இந்த கல்யாணத்துல… ” என ரியா ஏதோ சொல்ல வர அதற்குள் குறுக்கே புகுந்த பரமன் 

“அதுவா என் பொண்ணுக்கு திடீர்னு கல்யாணம் முடிவானதும் அவளுக்கு கொஞ்சம் பதட்டமா இருக்கு.அதனால தான் அவன் முகம் அப்படி இருக்கு” என்று சொல்லி  ரியாவை பார்த்து கண்களால் ஏதோ ஜாடை செய்ய..அதன் பிறகு ரியா எதுவும் பேசாமல் அமைதியானாள்.

” இப்படியே என் பொண்ண பேசிப்பேசி ஏதாவது சொல்லி அவ வாயை அடைச்சிடுங்க. நீங்க பண்ணுன காரியத்துக்காக என்னோட பொண்ணோட வாழ்க்கை தான் இப்போ அந்தரத்துல ஊஞ்சலாடுது” என்று கையில் காபி கப்புடன் அங்கே வந்தார் சாந்தா.

“சாந்தா உனக்கு எதுவும் தெரியாது உன் வாய மூடு வந்த வேலை என்னவோ அதை பார்த்துட்டு நீ உள்ளே போ… நடந்த அத்தனையும் உன்னால வந்ததுதான் நீ மட்டும் ஒழுங்கா நான் சொன்னபடி நடந்திருந்தா இவ்வளவு கஷ்டம் நமக்கு வந்து இருக்காது ” என்றார்.

அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த குருவிற்கு ஜனனிக்கும் எதுவுமே புரியவில்லை. குரு தன் அண்ணனிடம்” அண்ணா என்ன பேசுறீங்க எனக்கு எதுவுமே புரியல இந்த கல்யாணத்தில் எதுவும் பிரச்சினை இருக்கா? இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா? ” என்று வெளிப்படையாக கேட்டார் குரு.

“ஒன்னும் இல்ல குரு அவ ஏதோ உளறிட்டு இருக்கா.. அதை கேட்டுட்டு நீ எதுவும் யோசிக்காத” என்று அவர் ஏதோ சொல்லி சமாளிக்க கூற…

“என்ன நான் உளறிட்டு இருக்கேனா?கிட்டத்தட்ட கோடிக்கணக்கில் கடனை வாங்கி வச்சிட்டு அதை திருப்பி கட்ட முடியாம அத சரி செய்யறதுக்காக என் பொண்ணு வாழ்க்கையை நீங்க அந்த ரியல் எஸ்டேட்காரன் கிட்ட அடமானம் வச்சுட்டீங்க. இப்போ என் பொண்ணோட வாழ்க்கை தான் வீணா போயிடுச்சு உங்ககிட்ட இருந்து தொழில் கத்துட்டு போனவங்க எல்லாம் இன்னிக்கி ஆகா ஓகோன்னு கொடி கட்டி பறக்கிறாங்க… அவங்க எல்லாம் நல்லா வசதி வாய்ப்போட இருக்காங்க.  ஆனா நீங்க மட்டும் உங்க கௌரவத்தை குறைக்க கூடாதுன்னு யாருகிட்டயும் வாய் திறந்து எதையும் கேட்கிறதில்லை.அதனால் தான் இன்னைக்கு என் பொண்ணு இந்த ரியல் எஸ்டேட்காரன் பையன கல்யாணம் பண்ணிக்க போறா…” என புலம்பினார் சாந்தா .

சாந்தா சொன்னதை கேட்டு அதிர்ந்த குரு “அண்ணி என்ன சொல்றாங்க? அண்ணா நீங்க கடன் வாங்கி இருக்கீங்களா?அந்த கடனை அடைக்க தான் நம்ம ரியாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்களா? ” என்று கேட்டார்.

அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பரமன் தலை குனிந்து அமர்ந்திருக்க…

“சொல்லுங்க அண்ணா நீங்க எவ்வளவு கொடுக்க வேண்டி இருக்கு கடனுக்காக நம்ம பொண்ணோட வாழ்க்கையை இப்படி அடமானம் வைக்கலாமா? சொல்லுங்க எவ்வளவு கொடுக்கணும் அத நான் கொடுக்கிறேன்” என்றார் குரு.

“அதெல்லாம் எதுவும் வேண்டாம் என்னோட கஷ்டம் என்னோட போகட்டும். நீ வீனா இதுல தலையிட்டு பிரச்சனையில் மாட்டிக்காத. அந்த ரியல் எஸ்டேட் காரன் லேஸ்பட்டவன் கிடையாது.  அவன சமாளிக்க வேற வழியே தெரியாமத்தான் நான் என் பொண்ண அவனோட பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேனு ஒத்துக்கிட்டேன் ”என்றார்.

“ஏங்க சொல்ல வந்தது முழுசா சொல்லுங்க அந்த ரியல் எஸ்டேட்காரனோட பையனுக்கு ரெண்டு காலும் வராது அவனே வீழ்ச்சேர்ல தான் வாழ்க்கையே நடத்திட்டு இருக்கான். அப்படிப்பட்டவனுக்கு என் பொண்ணு கட்டிக்குடுக்குறீங்களே அதையும் சொல்ல வேண்டியது தானே” என்றார் சாந்தா.

அவர் சொன்னதை எல்லாம் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியாகினர்.

EPISODE 6

தான் பட்ட கடனிற்காக தன் அண்ணன் மகளை ரியல் எஸ்டேட் ஓனரின் மகனுக்கு அதுவும் ஊனமானவனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார் என்று செய்தியை கேட்ட குருவிற்கு ஜனனிக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

அதே அதிர்ச்சியோடு தன் அண்ணனிடம் “அண்ணா அவருக்கு எவ்வளவு பணம் நம்ம கொடுக்கணும்னு சொல்லுங்க.  இப்பவே நான் மொத்தமா எல்லாத்தையும் செட்டில் பண்றேன்” என்றார் குரு 

“இல்ல குரு உனக்கு எதுக்கு வீண் சிரமம் என்னோட கஷ்டம் என்னுடைய போகட்டும்” என பரமன்  தன் தம்பியின் உதவியை ஏற்க மறுக்க 

“அண்ணா இத்தனை நாளும் என்னை தம்பின்னு வாயால மட்டும்தான் கூப்பிட்டு இருக்கீங்க…உங்க மனசுல இருந்து என்ன அப்படி கூப்பிடல அப்படித்தானே” என்றான்.

“குரு ஏண்டா இப்படி பேசுற இப்படி எல்லாம் பேசி என் மனசு நோகடிக்காதே” என்றார் பரமன்.

ரியாவிற்காக பணத்தை முழுவதுமாக தான் தருவதாக கூறவும் உடனே சாந்தா குருவிடம் வந்து நல்லவர் போல பேசினார். “குரு தம்பி அவர் அப்படித்தான் பேசுவாரு.நீங்களாவது என் பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்துங்க. என் பொண்ணு இருக்குற அழகுக்கும்,அறிவுக்கும் போயும் போயும் அந்த கால் இல்லாதவன தான் கல்யாணம் பண்ணி வைக்கணுமா?” என்று. புடவை. முந்தனையில் முகத்தை மூடி அழுதார்.

“நீங்களே உங்க அண்ணன் கிட்ட பேசுங்க நானும் அவர்கிட்ட எவ்வளவோ சொன்னேன் உங்க தம்பி தான் நல்லா வசதி வாய்ப்புடன் இருக்கிறாரே…அவர் கிட்ட உதவி கேட்கலாம்னு.ஆனா உங்க அண்ணன் தான் வரட்டு கௌரவம் பார்த்துட்டு உங்ககிட்ட கேட்க மாட்டேன்னு சொல்லிட்டாரு” என்றார் சாந்தா.

”சாந்தா நீ கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்ட. ஏன் இப்படி பண்ற” என்று தன் மனைவியிடம் பரமன் கோபமாக கேட்டார்..

“நீங்க பேசாம இருங்க. நான் சொன்னதை அன்னைக்கே கேட்டிருந்தா நமக்கு இப்போ இவ்வளவு பிரச்சனையும் வந்து இருக்காது” என சாந்தா புலம்பினார்.

“எது…அவனுக்கு கிட்ட நம்ம வாங்கின பணத்தை வந்து கேட்டப்போ எனக்கு அதுக்கும் சம்பந்தமில்லைன்னு என்ன பொய் சொல்ல சொன்னியே அதையாவா? ” என்றார்.

“நான் ஒன்னும் பொய் சொல்ல சொல்லலையே.. அவங்ககிட்ட வாங்கின பணத்துக்கு மேல நம்ம வட்டி அதிகமாகவே கட்டி இருக்கோம்.அதனாலதான் எல்லா பணத்தையும் கொடுத்து முடிச்சாச்சுன்னு சொல்ல சொன்னேன். நீங்க ஏன் அதை புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க ”என்றார் சாந்தா.

இவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ள அதைக் கேட்டுக் கொண்டிருந்த ரியாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” ஐயோ!! தயவு செய்து நீங்க ரெண்டு பேரும் சும்மா இருக்கீங்களா? என்னோட வாழ்க்கையை வச்சு நீங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் விளையாடியது போதும் இனி என்ன இருக்கு இப்படி வீனா ரெண்டு பேரும் சண்டை போட்டு எதுவும் நடக்கப்போறதில்லை” என்றவள்  குருவிடம் திரும்பி “சித்தப்பா எனக்காக யாரும் எதுவும் செய்ய வேண்டாம்.என்னோட வாழ்க்கை இப்படித்தான்னு எழுதி இருந்தா. என்  விதி என்ன கூட்டிட்டு போகட்டும் நீங்க எதுவும் எனக்காக செய்ய வேண்டாம் ”என்றவள் அழுது கொண்டே உள்ளே ஓடிவிட்டாள்.

ரியா உள்ளே சென்றதை பார்த்த மீனுவும் பூஜாவும் அவள் பின்னாலேயே ஓடினர்.

“அண்ணா ஏன் நீங்க என்கிட்டே இவ்வளவு தயக்கம் காட்டுறிங்க… நான் கஷ்டத்தில் இருந்தா நீங்க பாத்துட்டு சும்மா இருப்பிங்களா? கண்டிப்பா எனக்கு உதவி செய்ய என்னோட கஷ்டத்துல இருந்து என்னை காப்பாத்த தானே நினைப்பீங்க. அதையே தானே நான் உங்களுக்கு செய்யணும்னு நினைக்கிறேன். நீங்க ஏன் என்னோட உதவிய ஏற்க மறுக்கிறீங்க” என்றார் குரு.

“இல்ல குரு ஏற்கனவே இத விட பேராசையால் தான் நீ சம்பாதிச்ச சொத்து எல்லாம் மொத்தமா அவ பேருல எழுதி வாங்கிக்கிட்டா. வாங்கியதோடு மட்டும் பத்தாதுன்னு உன்னையும் ஜனனியையும் இந்த வீட்டுக்கே இத்தனை வருஷம் வரவிடாமல் செஞ்சிட்டா இப்போ நான் உங்க ரெண்டு பேரையும் வர சொன்னது என்னோட பிடிவாதத்துனால தான் இப்போ நீ பணம் கொடுக்கிறேன்னு சொன்னதும் அவ கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இறங்கி வந்து உன்கிட்ட பேசுனத நீயே கவனிச்ச தானே…இப்படிப்பட்டவள வச்சுக்கிட்டு நான் எப்ப எந்து முகத்தோட உன்கிட்ட வந்து உதவி கேட்க முடியும் இவளால எனக்கு எங்கேயுமே மரியாதை இல்லை “என மிகவும் வருத்தப்பட்டார்.

“மாமா ஏன் நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க நம்ம அக்கா தானே அவங்க போக போக எல்லாமே புரிந்து கொள்வார்கள் பழசு பேசிக்கிட்டு இருக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை நம்ம பொண்ணோட வாழ்க்கையை நம்ம தான் சரியா அமைச்சு கொடுக்கணும்” என்றார் ஜனனி.

“நல்லா சொல்லு ஜன்னலில் இவருக்கு நான் சொல்றது எதுவுமே காதுலை ஏற மாட்டேங்குது அவன்கிட்ட வாங்கினேன் 150 கோடி பணத்துக்கு வட்டியா அதைவிட அதிகமா நாங்க கொடுத்துட்டோம் அது போதாதுன்னு உங்ககிட்ட இருந்து எழுதி வாங்குன எல்லாத்தையும் அவன் பேர்ல எழுதி வச்சுட்டோம் இப்போ இருக்கிறது இந்த வீடும் அவர் பண்ணிட்டு இருக்குற அந்த பிசினஸ் மட்டும் தான் அதுவும் உன்ன மாதிரி இல்ல” என சாந்தா உள்ளதை அப்படியே போட்டு உடைக்க.

!அண்ணி நீங்க சரியா சொல்லுங்க அவங்களுக்கு நம்ம எவ்வளவு பணம் கொடுக்கணும் என்றார் குரு .

“150 கோடி தம்பி  பணத்தை நம்ம கிட்ட இருந்து வாங்குன பணத்தையும்,நம்ம சொத்து எல்லாத்தையுமே திருப்பிக் கொடுக்கிறேன்னு சொன்னான். ஆனா நம்மளால தான் அதை கொடுக்க முடியலையே. அதுக்கு பதிலா தான் என் பொண்ணு அவன் பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி கேட்கிறான்” என்றார்.

“சரி அண்ணி நீங்க அத பத்தி கவலைப்படாதீங்க நான் பாத்துக்குறேன்” என்ற குரு” அண்ணா முதல்ல என்கூட கிளம்பி வாங்க. நாம போய் அந்த ரியல் எஸ்டேட்காரனுக்கு மொத்தம் பணத்தையும் கொடுத்துட்டு வருவோம்” என்று பருமனை அழைக்க…

அவர் தயங்கியபடி குருவை பார்த்தார் “என்ன அண்ணா இன்னும் பார்த்துட்டு இருக்கீங்க… தயவுசெய்து வாங்க நமக்கு பணம் முக்கியம் இல்ல நம்ம பிரியாவோட வாழ்க்கை தான் முக்கியம்” என்றவர். தன் மொபைலை எடுத்து  மேனேஜருக்கு அழைத்து விபரம் சொல்லி ” நான் சொல்ற இடத்துக்கு இன்னும் சிறிது நேரத்தில் பணத்தோடு கிளம்பி வாங்க ”என்று போனை வைத்தார்.

பின் தன் அண்ணனை அழைத்துக்கொண்டு  அங்கிருந்து அந்த ரியல்எஸ்டேட் சாம்ராஜ்யத்தின் தலைவனான கஜேந்திரனை பார்த்து அவன் மகன் ஜெய்க்கு தன் அண்ணன் மகளை திருமணம் செய்துகொடுக்க முடியாது என்று சொல்லிவிட கிளம்பினார் குரு.

EPISODE 7

கஜேந்திரன் வீட்டு ஹாலில் பரமனும் குருவும் காத்திருக்க நீண்ட நேரம் கழித்து கஜேந்திரன் மாடியில் இருந்து இறங்கி வந்தார்.

ஆறடி உயரம் சிவந்து தேகம், லேசாக வயதால் சுருங்கி இருந்த முகம், கட்டை மீசை அது முழுவதும் நறைத்திருக்க…   இந்த வயதில் மிகவும் கம்பீரமாக படிகளில் இறங்கி வந்த கஜேந்திரனை பார்த்து குருவிற்கு ஒரு நிமிடம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.  

ஹாலில் அமர்ந்திருந்த பரமனை பார்த்ததும் அடடே சம்மந்தி வாங்க எப்படி இருக்கீங்க என்ன நாளைக்கு காலையில கல்யாணத்தை வெச்சுகிட்டு இன்னைக்கு வந்து இருக்கீங்க. எதுவும் முக்கியமான விஷயம் பேசுமா சொல்லி இருந்தா நானே சம்மந்தி தேடி வந்திருப்பேனே என கேட்டார்.

குரு நினைத்தது போல கஜேந்திரன் பார்ப்பதற்கு ஒன்றும் முரடனாக தெரியவில்லை. அவர் தன் நம்ம அண்ணனிடம் பேசும் விதத்தை பார்த்த குரு 

“இவரைப் பார்த்தா அண்ணி சொன்ன அளவுக்கு ஒன்னும் மோசமானவரா தெரியலையே. அண்ணி ஏன் இவ்வளவு தூரம் தப்பா பேசுறாங்க” என யோசித்தபடி குரு கஜேந்திரனையே பார்த்துக் கொண்டிருக்க..

“இல்ல சம்பந்தி  வீட்ல வச்சு இந்த விஷயத்தை பேச முடியாதுன்னு தான் நான் இங்க வந்தேன்.” என்ற பரமன் இது என்னோட தம்பி குரு என தன்னருகில் அமர்ந்திருந்த குருவை கஜேந்திரனுக்கு அறிமுகப்படுத்தினார் பரமன்.

தன் அண்ணனும் கஜேந்திரனிடம் மிகவும் சாதாரணமாக பேசுவதை பார்த்த குருவிற்கு ஒன்றுமே புரியவில்லை மிகவும் குழப்பமாக இருந்தது.

இவரிடம் கடன் வாங்கி அடைக்க முடியாமல் தானே இன்று தன்னுடைய மகள் ரியாவை  வலுக்கட்டாயமாக  திருமணம் செய்து வைக்கப் போவதாக அண்ணி தன்னிடம் சொன்னாரே… ஆனால் தன் அண்ணன் இவரிடம் பேசுவதை பார்த்தாள் அப்படி ஒன்றும் தோன்றவில்லையே இங்கே என்ன நடக்கிறது” என்று புரியாமல் குழம்பிப் போனார் குரு.

குருவின் குழப்பமான முகத்தை பார்த்த பரமன் “குரு நான் உன்கிட்ட நான் ஒரு பெரிய உண்மையை மறைச்சுட்டேன் டா” என்றார்.

“அண்ணா என்ன சொல்றீங்க?” என கேட்டார் குரு.

“உன் அண்ணியும்,  என் பொண்ணு ரியாவும் சேர்ந்துட்டு உன்கிட்ட நல்லவ  மாதிரி பேசி நாடகம் ஆடுறாங்க. அவங்கள வச்சுக்கிட்டு என்னால எதுவும் சொல்ல முடியல” என்றவர்.

“சொல்லப்போனால் அவங்க ரெண்டு பேருகிட்டயுமே நான் பொய் தான் சொல்லி இருக்கேன்” என்றார் கஜேந்திரன்.

“அண்ணா என்ன சொல்றீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க எனக்கு எதுவுமே புரியல” என்று மிகவும் குழப்பமாக குரு பேச…

“குரு இவரோட பையன் ஜெய் அமெரிக்காவில ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டு இருக்காரு. ரொம்ப தங்கமான பையன் தொழில்ல நாணயம் உள்ளவரு. கஜேந்திரன் இங்கே என்ன தொழில் பண்ணிட்டு இருக்காரோ அதே அமெரிக்காவில் இவரோட பையன் பண்ணிட்டு இருக்கார்.” 

“நம்ம ரியாவும்  அமெரிக்காவில் தான் படிச்சான்னு உனக்கு நல்லாவே தெரியும். அவ படிப்பு முடிச்சுட்டு திரும்பி இந்தியாவுக்கு வந்துட்டா . இவரோட பையன் ஜெய்யும், கஜேந்திரனுக்கு கொஞ்ச நாளா உடம்பு சரியில்லைன்னு இங்கே இருக்கிற அவரோட ரியல் எஸ்டேட் பிசினஸை பார்த்து கொள்வதற்காக இந்தியா வந்து இருந்தாரு.”

“கஜேந்திரன்கிட்ட தான் நான் பிசினஸ் பண்ணிட்டு இருக்கிறதுனால  என்ன அடிக்கடி பாக்குறதுக்காக இவர் நம்ம வீட்டுக்கு வருவாரு. அவரோட தொழில இப்போ ஜெய் பாத்துக்குறதுனால கஜேந்திரனுக்கு பதிலா ஜெய் நம்ம வீட்டுக்கு வந்திருந்தப்போ ரியாவுக்கு அவர பார்த்ததும் ரொம்ப பிடிச்சு போச்சு.”

“அத உன் அண்ணிகிட்ட சொல்லி உன் அண்ணி தான் ஜெய்ய நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க கேளுங்கன்னு சொல்லி என்ன வற்புறுத்தினா நானும் உன் அண்ணியோட தொந்தரவு தாங்காம கஜேந்திரன் கிட்ட நம்ம ரியாவுக்காக ஜெய கல்யாணம் பண்ணி தர சொல்லி கேட்டேன் அவரும் முழு மனசோட இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாரு.”

” மாப்பிள்ளையும் அவர் அப்பா சொன்ன ஒரே காரணத்துக்காக எந்த மறுப்பும் சொல்லாம இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாரு ஆனா ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் தான் சொன்னாரு.ஒரு ஆறு மாசம் போன பிறகு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லி இருந்தார் மாப்பிள்ளை. அவருக்கு அமெரிக்காவுல சில முக்கியமான பிசினஸ் வேலை எல்லாம் இருக்கிறதுனால அதை முடிச்சுட்டு வந்து கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு சொல்லி இருந்தார். நாங்களும் சம்மதித்தோம்.”

“இதுக்கிடையில உன்னோட அண்ணியோட தொந்தரவு தாங்காம நம்மளோட கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸை இன்னும் பெருசு படுத்தனும் அப்போதான் இவங்களுக்கு ஈகுவலா நம்ம இருக்க முடியும்னு சொல்லி கஜேந்திரன்கிட்டயே பணம் கேட்டு வாங்கி தனியா ரியா பேருல ஒரு கன்ஸ்ட்ரக்சன் பிசினஸ் ஆரம்பிச்சாங்க.”

“பொண்ணு கொடுக்க போற இடத்துல கடன் வாங்குவது சரியில்லைன்னு நான் எவ்வளவோ முறை உன் அண்ணிகிட்டயும் ரியாகிட்டயும் எடுத்து சொல்லிட்டேன். ஆனா அவங்க ரெண்டு பேரும் நான் சொல்றத கேக்குறதா இல்ல கிட்டத்தட்ட 200 கோடி வரைக்கும் உன் பணம் வாங்கிட்டாங்க.”

“இவங்களும் நம்ம வீட்டுக்கு வரப்போற மருமகள் தானே என்று நம்பி அவங்க கேக்குறபோது எல்லாம் பணத்த குடுத்துட்டு  இருந்தாங்க.”

“கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு முன்னாடி அமெரிக்காவுக்கு போயிருந்த மாப்பிள்ளைக்கு அங்கே ஆக்சிடென்ட் ஆகி ரெண்டு காலும்  கால் ரெண்டும் செயலிழந்திருச்சுன்னு சொன்னாங்க.”

“அதைக் கேள்விப்பட்டு நாங்க எல்லாருமே இடிஞ்சு போயிட்டோம். என்னடா மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு சோதனை வரணுமா?அப்படிங்கிற நிலைமைக்கு நாங்க ஆளாகிட்டோம். எப்பவுமே மாப்பிள கம்பீரமா எல்லா வேலையும் அவ்வளவு ஆர்வமா செய்றவர். இந்த சம்பவத்துக்கு பிறகு  அமெரிக்காவிலிருந்து அவர் இங்கே வந்ததிலிருந்து அதோ அங்க இருக்க அந்த ரூமுக்குள்ள தான் இருக்காரு. அவரோட ரூம் விட்டு வெளியேவே வரதில்ல… யார் வந்தாலும் பார்க்க மாட்டார்.  யார்கிட்டயும் பேசமாட்டார். அவருக்கு தனக்கு இப்படி ஒரு நிலைமை ஆயிடுச்சுன்னு நெனச்சு ரொம்ப டிப்ரஷன்ல இருக்காரு. நாங்களும் அதுக்கப்புறம் அவர  தொந்தரவு பண்ணல”

“நான் ரியாவுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆன விஷயத்தை உன்கிட்ட சொல்லாம இருந்ததும் ஒரு வகையில நல்லதா தான் இருந்தது. ஏன்னா மாப்பிள்ளையோட கால் ரெண்டும் உடைஞ்சிருச்சுன்னு தெரிஞ்சதும் ரியா மாப்பிள்ளை கிட்ட பேசுறதையே சுத்தமா நிறுத்திட்டா. கால் உடைஞ்ச வர என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு அவ பிடிவாதமா இருந்துட்டா.”

“அதேபோல உன் அண்ணி இவங்க கிட்ட இருந்து வாங்கின 200 கோடி ரூபாய் பணத்தையும் திருப்பி தர முடியாதுன்னு பிடிவாதமா நின்னா. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல நானும் உன் அண்ணிகிட்டேயும் ரியா கிட்டயும் எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லி இந்த கல்யாணத்தை நடத்துறதுக்கும் பணத்தை திருப்பி கொடுக்கிறதுக்கும் முயற்சி செஞ்சேன் ஆனா ரெண்டு பேருமே கொஞ்சம் கூட நான் சொல்றத காது கொடுத்து கேட்கவே இல்லை கடைசியா நானே ஒரு முடிவு எடுத்துட்டேன். என்னோட பிசினஸ்ல இருந்து வந்த பணம் பிராப்பர்ட்டி எல்லாத்தையும் வித்து அதுல வந்த பணத்தை முதலில் சம்பந்திக்கு வட்டியும் முதலும் கொடுத்து செட்டில் பண்ணினேன்.” என்றவர் அடுத்து பேசப்போக…

“அட இருங்க சம்பந்தி வந்ததிலிருந்து நீங்களே மூச்சுவிடாமல் பேசிட்டு இருக்கீங்க நம்ம சின்ன சம்மந்தி கிட்ட நானே மிச்சத்தை சொல்றேன் நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க என்று சொல்லிவிட்டு கஜேந்திரன் குருவை பார்த்து சம்பந்தி இவங்க கொடுத்த பணத்தை வேண்டாம்னு தான் சொன்னேன். ஆனா பரமன் தான் வலுக்கட்டாயமா இந்த பணத்தை வைத்துக்கொள்ள சொல்லி எனக்கு கொடுத்துட்டான் நானும் வேற வழியில்லாமல் தான் வாங்கிட்டேன். அதுவும் எப்படி வாங்கலைன்னு நினைக்கிறீங்க பரம்பன் என்கிட்ட வந்து இந்த மாதிரி என் வீட்டுக்கு நீங்க வரணும் வந்து என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டி என்கிட்ட இருக்கிற சொத்துக்களை எல்லாம் வாங்குற மாதிரியும் அப்படியே மிரட்டி உங்க பையனையும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி என் பொன்னையும் மிரட்ட சொல்லி கேட்டாரு.

முதல்ல நான் இதுக்கு ஒத்துக்கவே இல்ல ஏன்னா ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு இஷ்டம் இல்ல ஆனா சம்மந்தி தான் பிடிவாதமா அவரோட முடிவுல நின்னுட்டாரு.

நானும் வேற வழியில்லாமல் சம்மந்தி சொன்ன மாதிரியே அவரோட வீட்டுக்கு போயி நீங்க கொடுத்த பணம் பத்தாது வட்டியும் முதலும் சேர்த்து எல்லாமே செட்டில் பண்ணுங்கன்னு அவங்கள மிரட்டுனேன் உடனே சம்பந்தி அம்மா பணத்தை கொடுக்க முடியாது நீ பண்றது பண்ணுன்னு எங்கள மிரட்டுனாங்க.

அப்புறம் அதையே சாக்கா வச்சு  பணத்தை திருப்பி கொடுக்க முடியாதுன்னு சொன்னவங்ககிட்டே அதுக்கு பதிலா நின்னு போன இந்த கல்யாணத்தை திருப்பி நடத்துங்க உங்க பொண்ண என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு மிரட்டினேன் . 

ஆனா அதுக்கும் சம்பந்தி அம்மாவும்   ஒத்துக்கவே இல்ல அப்புறம் பரமன் தான் ஏதேதோ பேசி அவங்க ரெண்டு பேரையும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்க என்றார்.

முதல்ல எனக்கு இவங்கள வற்புறுத்தி என் பையனுக்கு ரியாவை கல்யாணம் பண்ணி கொடுக்க விருப்பம் உள்ளதா ஆனால் என் பையன் அவனுக்கு நடந்த இந்த ஆக்சிடென்ட்க்கு பிறகு யாருகிட்டயும் பேசுறது இல்ல யாரையும் அவன் கூட பேச முயற்சி இருந்தானா பின்னாடி அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லாமல் போயிடும்னு எனக்கு பயமாயிடுச்சு அதுக்காகவே என் பையனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனாலும் என்னோட உடம்ப காரணமாக காட்டி இந்த கல்யாணத்துக்கு அவனையும் வற்புறுத்தி தான் நான் சம்மதிக்க வச்சிருக்கேன் என்றவர் நம் கல்யாணத்துக்கு பிறகு ரியாவுக்கு என் மகனோட குணமெல்லாம் உன் முழுசா தெரிஞ்சு அவன் கூட சந்தோஷமா நம்பிக்கையில தான் இந்த கல்யாணம் ஏற்பாட்டை எல்லாம் செஞ்சிருக்கேன் என்றார் கஜேந்திரன்.

உன் அண்ணி முன்னாடி இத்தனை விஷயத்தையும் சொல்ல முடியல இந்த விஷயம் எனக்கும் சம்மந்திக்கு மட்டும்தான் தெரியும் அதனால தான் காரில் கூட உன்கிட்ட இந்த விஷயத்தை பத்தி நான் சொல்லல என்றார் பரமன்.

சரி அம்மா எனக்கு நீங்க ரெண்டு பேரும் சொன்னது எல்லாமே நல்லா தெரிஞ்சது நான் வேற அண்ணிகிட்ட இப்போ இந்த கல்யாணத்தை நிறுத்துறேன் பணத்தை மொத்தமும் கொடுக்கிறேன் என்று சொல்லித்தானே உங்களை இங்கே கூட்டிட்டு வந்தேன் இப்போ என்ன சொல்லி அண்ணியை கேட்ட சமாளிக்கிறது நாளைக்கு எப்படி இந்த கல்யாணத்தை நடக்கிறது என்று கேட்டார் குரு .

அதை நான் பார்த்துக்கிறேன் நான் சொன்னதுக்கு மட்டும் சரி சரி நீ அங்க வந்து தலையாட்டினா போதும் என்றவர் கஜேந்திரனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப போன பரமன் கஜேந்திரனை பார்த்து நான் ஒருமுறை மாப்பிள்ளை போய் பார்க்கட்டுமா என கேட்டார்.

என்ன சம்பந்தி வேண்டாம் அவன நான் பார்த்து ரெண்டு மூணு நாளுக்கு மேல ஆச்சு இப்போ நீங்க போய் அவன் எதுவும் கோவத்துல உங்க கிட்ட பேசிட்டாங்க அது நல்லா இருக்காது எனக்கு பொறுக்கிட்டு பொறுத்துக்கோங்க நாளைக்கு காலைல என் மகன் உங்க பொண்ணு பக்கத்துல தாலி கட்டுற வரைக்கும் பொறுமையா இருங்க மத்தத அப்புறம் பாத்துக்கலாம் என்றார்.

உடனே குரு கஜேந்திரனை பார்த்து உங்களையே உங்க மகன் இன்னும் பார்க்க ஒத்துக்கொள்ளலைன்னு சொல்றீங்க அப்புறம் எப்படி நாளைக்கு கல்யாணம் என எதுவும் கேட்க.

என் மகன் நான் சொன்னா மறுக்காம எதையும் செய்யறவன் அதனால நாளைக்கு கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும் நீங்க  கவலைப் படாதீங்க என்றார் கஜேந்திரன்.

வரம் அவரிடம் விடை பெற்று விட்டு பரமனும் குருவும் வீட்டில் இருக்கும் சாந்தாபையும் ரியாவையும் எப்படி சமாளிப்பது என யோசித்தபடி கிளம்பினர்.

EPISODE 8

மண்டபத்தில் ஆட்கள் எல்லாம் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டு இருக்க.. திருமணத்தை நிறுத்துவதாக கூறி சென்ற இருவரும். கஜேந்திரனின் மிரட்டலுக்கு பயந்து திரும்பி வந்ததை நினைத்து சாந்தாவும் ரியாவும் ஆத்திரப்பட்டனர். இவ்வளவு கோழையாக இருக்கிறார்களே என எண்ணி அவர்களை துச்சம் என பார்த்தனர்.

ஆம் பரம்பனும் குருவும் தங்கள் வீட்டில் வந்து கஜேந்திரனுக்கு பயந்து போய் திரும்பி வந்ததாக பொய் தான் கூறியிருந்தனர்.

அதை நம்புவதை தவிர சாந்தாவிற்கு வேறு வழியே இல்லை ஜனனியும், குருவிடம் “கஜேந்திரன் அவ்வளவு பயங்கரமானவரா? அவரைப் பார்த்து நீங்களே பயந்து வரும் அளவிற்கு நடந்து கொண்டாரா?” என கேட்க…

தன் மனைவியிடம் இப்போதைக்கு உண்மையை சொல்ல வேண்டாம் என நினைத்த குரு சாந்தாவிடம் சொன்னது போலவே தன் மனைவியிடமும் சொல்லி அவரையும் தன் மகள்கள் இருவரையும் நம்ப வைத்தார்.

இங்கே ரியா  வெறுப்பாக தன் அறையில் அமர்ந்திருந்தாள் ” ச்சே.. அந்த ஜெய்ய லவ் பண்ணா அவனோட கோடிக்கணக்கான சொத்துக்கள் எல்லாம் எனக்கு வரும். நான் காலத்துக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சு தானே அவனை லவ் பண்ணேன். பாக்குறதுக்கும் கொஞ்சம் நல்லாத் தான் இருந்தான். ஆனால் இப்படி காலை உடச்சிட்டு வந்து நிப்பான்னு எனக்கு என்ன தெரியும்.  இந்த காலில்லாதவன கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கை பூரா நான் அவனுக்கு சேவகம் பண்ணிக்கிட்டு இருக்கணுமா?” என நொந்து கொண்டவள். இந்தக் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என தெரியாமல் கையை பிசைந்து  கொண்டு அமர்ந்திருந்தாள்.

அப்போது அவளை பார்ப்பதற்காக உள்ளே வந்த சாந்தா ரியா இன்னும் சேலை கூட மாற்றிக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருப்பதை பார்த்தவர் ” என்னடி ரியா இப்படியே உக்காந்துட்டு இருக்க இன்னும் டிரஸ் மாத்தல முகூர்த்தத்துக்கு நேரமாயிடுச்சு” என்றார்.

“மம்மி மத்தவங்க தான் என் நிலைமை புரியாம வந்து என்கிட்ட பேசுறாங்கன்னா நீங்களுமா? எனக்கு இந்த கல்யாணத்துல துளியும் இஷ்டம் இல்ல. அந்த கால் இல்லாதவன கட்டிக்க எனக்கு விருப்பமே இல்ல.. தயவுசெய்து இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துங்க மம்மி” என்றாள் ரியா.

“நானும் ஏதேதோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன் ரியா இதைத் தவிர நமக்கு வேற வழியே இல்ல எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல உன் அப்பாவை பார்த்தே இல்ல.. என்னால அவரை சமாளிக்கவே முடியல  அந்த கால் இல்லாதவனோட அப்பா பயங்கரமான ஆளா இருப்பான் போல இருக்கு, உன் சித்தப்பா அவ்வளவு பணத்தை கொண்டு போய் நீட்டியும் அவன் அதுக்கு ஒத்துக்காம இந்த கல்யாணத்தை கண்டிப்பா நடத்தியே ஆகணும்னு திமிரா பேசி அவங்க ரெண்டு பேரையும் மிரட்டி அனுப்பிட்டான் அந்த பெரிய மனுஷன் . அங்க போன நம்ம வீட்டு ஆம்பளைங்களுக்கே இந்த கதின்னா… எனக்கு நீ அங்க போய் வாழ்க்கைப்பட்டு எப்படி அவங்களை எல்லாம் சமாளிச்சு இருக்க போறேன்னு தான் பயமா இருக்குடி” என்றார்.

“மம்மி நானே ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன் நீங்க வேற இப்படி எல்லாம் பேசி என்ன பயமுறுத்தாதீங்க” என்றாள் ரியா.

“நான் உன்னை பயமுருத்தலடி உள்ளதை சொன்னேன். எனக்கு உன்ன அந்த கந்து வட்டிக்காரன் வீட்டுக்கு அனுப்ப ரொம்ப பயமா இருக்கு” என்றார் சாந்தா.

“மம்மி ப்ளீஸ் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.. எனக்கு எதுவுமே விருப்பமே இல்லை” என்று ரியா சாந்தாவின் கையை பிடித்துக் கொண்டு கெஞ்ச…

சிறிது நேரம் யோசித்த சாந்தா “நீ இங்கே இருந்தா தானடி இந்த கல்யாணம் நடக்கும். நீயே இங்க இல்லன்னா எப்படி நடக்கும்” என்றார்.

“மம்மி என்ன சொல்றீங்க நான் எங்க போறது” என ரியா கேட்க… 

“இப்போ பேசிட்டு இருக்க நேரம் இல்ல… முதல்ல உனக்கு வேணுங்குற ட்ரெஸ் எல்லாம் சீக்கிரமா எடுத்து பேக் பண்ணு” என்று விட்டு மணமகள் அறையை உள் பக்கமாக தாலிட்டு வந்த சாந்தா ரியா இன்னமும் அப்படியே அமர்ந்து இருப்பதை பார்த்தவர்.

“ஏய் ரியா கிளம்பு டி..” என்றுவிட்டு ரியாவின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த நகைகளை எல்லாம் எடுத்து ஒரு பையில் போட்டு தன் மகளின் சில உடைகளையும் எடுத்து பேக் செய்து அவள் முன்பு வந்து நிற்க… 

“அம்மா என்ன பண்றீங்க?” என ரீயா புரியாமல் கேட்க 

“இன்னுமாடி உனக்கு புரியல.. நீ இங்க இருந்து யார் கண்ணுலயும் படாம கிளம்பி போயிடு… உன்னோட கல்யாணம் தானா நின்னுடும்” என்றார் சாந்தா.

“மம்மி என்ன சொல்றீங்க கொஞ்ச நேரத்துல கல்யாணத்துக்கு வச்சுக்கிட்டு என்னை மண்டபத்தை விட்டு ஓடிப் போக சொல்றீங்களே.. எல்லாரும் என்ன பத்தி என்ன நினைப்பாங்க அப்பா விஷயம் கேள்விப்பட்டால் அவர் என்னை கொன்னே போட்டுடுவாரு. நான் எங்கேயும் போகல நானே எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்துகிறேன்” என ரியா பிடிவாதம் செய்ய..

“விஷயம் புரியாமல் பேசாதடி உன் அப்பா நீ என்ன பண்ணினாலும் இந்த கல்யாணத்தை நடத்திட்டு தான் மரு வேலை பார்ப்பாரு. உன்னோட விருப்பம் எல்லாம் அவருக்கு இப்ப பெருசில்ல அவர் கொடுத்த வாக்கு தான் அவருக்கு பெருசு உன் அப்பாவ பத்தி நல்லா தெரிஞ்சுமா நீ இன்னும் நம்பிக்கையோட கல்யாணத்தை நிறுத்திடலாம்னு சொல்ற அது நடக்கவே நடக்காது நான் சொன்ன மாதிரி செய் ஒழுங்கா இங்க இருந்து கிளம்பி போ நீ கொஞ்ச நாளைக்கு நம்ம ஊர் பக்கமே வந்துடாதே இந்த பணம் நகையெல்லாம் வச்சு ஏதாவது படிக்கணும்னா படி இல்ல வேற எதுவும் செய்யணும்னா செய்” என்று விட்டு அவள் போனை எடுத்து ரியாவின் கையில் கொடுத்த சாந்தா கிளம்பு என தன் மகளை மணமகள் அறையில் இருந்து அவசர அவசரமாக பின்பக்கமாக அனுப்பி வைக்க.. 

ரியாவிற்கும் இதை விட்டால் தன் திருமணத்தை நிறுத்த வேறு வழியே இல்லை என்று புரிந்து போக… “சரி மம்மி நான் என்னோட பிரண்டு உஷா  டெல்லியில் இருக்கா அவள பார்க்க போறேன். நான் அங்க போயிட்டு அடுத்து என்ன பண்றதுன்னு முடிவு பண்ணிட்டு உனக்கு கால் பண்றேன் மம்மி” என்று விட்டு அவள் அம்மாவை கட்டி அணைத்து “ரொம்ப தேங்க்ஸ் மம்மி” என தன் அம்மாவின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு ரியா அங்கிருந்து திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டாள்.

தன் மகளின் திருமணத்தை நிறுத்திய நிம்மதி ஒரு பக்கம் இருக்க இப்படி தன்னந்தனியாக செல்லும் தன்மகளை பரிவாக பார்த்தபடி பின்பக்க கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தவர். கண்ணாடியின் முன்வந்து நின்று தன் முகத்தை ஒரு முறை பார்த்து “இப்படி இருந்தா நல்லா இருக்காது இப்படியே வெளியே போனா எல்லாரும் கண்டுபிடித்து விடுவார்கள்” என்று நினைத்தவர் அழுவது போல தன்   முகத்தை வைத்துக்கொண்டு மணமகள்  அறைக்கதவை திறந்து வெளியே வந்தவர் “என்னங்க..” என அழுதபடி பரமனை நோக்கி ஓடி வந்தார்.

தன்னுடைய சொந்தங்களிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்த பரமன் சாந்தாவின் அழுகுரல் கேட்டு பதறிப் போய் அவரை திரும்பிப் பார்க்க  அழுதபடி அவரை நெருங்கி வந்த சாந்தா   “ஏங்க நம்ம பொண்ணு நம்மல ஏமாத்திட்டா. அவ இந்த கல்யாணம் பிடிக்கலையினு சொல்லாம கொள்ளாம எங்கேயோ ஓடிப் போயிட்டாங்க. அவளோட ரூம்ல ரியா இல்ல” என பதட்டமாக நடிப்பது போல சாந்தா பேச…

“என்ன சாந்தா சொல்ற ரியா அவ ரூம்ல இல்லையா? நல்லா பார்த்தியா? அவ பாத்ரூம் எதுவும் போய் இருக்க போறா.. நீ சும்மா வந்து இப்படி எல்லாரும் முன்னாடியும் நம்ம பொண்ண பத்தி உளறிட்டு இருக்காத” என பரமன் அவரை கடிந்து கொள்ள…

“ஏங்க இந்த விஷயத்துல யாராவது பொய் சொல்லுவாங்களா? உண்மையாவே ரியா அவ ரூம்ல இல்லைங்க… நான் நல்லா தேடி பாத்துட்டு தான் உங்ககிட்ட சொல்றேன்” என சாந்தா சொல்ல..

பரமன் அதிர்ந்து போனார் அதைக் கேட்டு அங்கே வந்து குரு “இப்போ தான அண்ணி நான் ரியாவை   பார்த்துட்டு வந்தேன். அதுக்குள்ள அவ எப்படி அங்கே இருந்து போயிருக்க முடியும்” என்ற குரு சட்டென துரிதமாக வேலை பார்த்து மண்டபத்தில் இருக்கும் தனது உறவினர்களிடமும், தன் மேனேஜர் மற்றும் பியே மாணிக்கத்திடமும் ரியா நீண்ட தூரம் செல்வதற்கு வாய்ப்பு இருக்காது. அவள் பக்கத்தில் தான் எங்காவது சென்றிருக்க வேண்டும் சீக்கிரமாக அவளை எங்கேயாவது தேடி கண்டுபிடித்து அழைத்து வரச் சொல்லி அனுப்பி வைக்க…

“இவன் ஒருத்தன் இந்த விஷயத்தை அப்படியே விடம… அவளை தேடி ஆளுங்களை வேற அனுப்புறான். ஐயோ!! கடவுளே இப்ப நான் என்ன பண்ணுவேன். என் பொண்ணு இவங்க யாரு கண்ணிலும் படாம நீ தான் அவளை காப்பாத்தணும்” என கடவுளிடம் வேண்டியவர் அழுது வடிந்த முகத்தோடு அங்கே நின்று இருக்க ஜனனி வந்து சாந்தாவிற்கு ஆறுதல் கூறினார். 

“கவலைப்படாதீங்க அண்ணி இவங்க எப்படியாவது ரியாவை இங்கே கூட்டிட்டு வந்துடுவாங்க” என்றார்.

“இல்ல ஜனனி உனக்கு அவளை பத்தி தெரியாது. அவ ஒரு விஷயம் முடிவெடுத்தது தான் இந்த நேரம் அவ எங்க இருக்கான்னு யாருக்கு தெரியும் நம்ம தேடுறது வேஸ்ட்” என்றார்.

“அண்ணி நம்ம சொந்தங்கள் எல்லாம் ரியாவ தேடத்தான் போயிருக்காங்க. அவங்க கையில அவ மாட்டலைனாலும் என்னோட வீட்டுக்காரருடைய பிஏ மாணிக்கம் கண்டிப்பா ரியா எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துடுவாரு” என்று தீர்க்கமாக கூற…

அந்த பிஏ மாணிக்கத்தை பற்றி சாந்தாவும் கேள்விப்பட்டிருக்கிறார் ஒரு வேலையை கொடுத்தா அதை சரியாக முடிக்கும் வரை ஓய மாட்டார் என கேள்விப்பட்டிருக்கிறாள். B “அவன் வேற என் பொண்ண தேடி போயிருக்கானே… ஆண்டவா தயவுசெய்து இவன் கண்ணுல மட்டும் என் பொண்ணு மாட்டிடவே கூடாது” என  கடவுளிடம் கெஞ்சிக் கொண்டு நின்றிருக்க…

இங்கே மணமகள் அறையில் வேண்டா வெறுப்பாக தயாராகி வீல்சேரில் அமர்ந்திருந்த ஜெய்யிடம் அவனது நண்பர்கள் எவ்வளவோ சந்தோசமாக கேலி கிண்டல் செய்து பேசினாலும் அவனின் மனநிலை எப்போதும் போல இறுக்கமாகவே யாரிடமும் பேசாமல் இருக்க “என்னடா இவன் புது மாப்பிள்ளையா சந்தோசமா சிரிச்சிட்டு இருக்காம இப்படி உர்ருனு இருக்கான்” என ஒருவன் கேட்க…

“டேய் உனக்கு நம்ம ஜெய்ய பத்தி நல்லா தெரியும் தானே… அவன மாதிரி நம்ம கேங்க்ல ஜாலியான ஆள் யாருமே இல்ல எப்போ அவனுக்கு கால் உடைஞ்சுச்சோ அப்பவே அவன் மொத்தமாக மாறிவிட்டான் அவனை ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க… பாவம்” என பேசியபடி அங்கே வந்தான் ஜெய்யின் தோழன் சூர்யா.

“வாடா சூர்யா …நீயாவது இவன் கிட்ட பேசி கொஞ்சம் சிரிச்சிட்டு இருக்க சொல்லுடா கல்யாணம் ஆக போற நேரத்துல  இப்படி  இருந்தா நல்லாவா இருக்கும்” என ஒருவன் சொல்லிக் கொண்டு இருக்க “சரிடா பாத்துக்கலாம் விடுங்க..”என்றபடி ஜெய்யிடம் வந்த சூர்யா .

“டேய் ஜெய் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க ட்ரை பண்ணுடா..  இப்படி எப்ப பாரு முகத்தை உருன்னு வச்சுட்டு இருந்தா அப்புறம்  ரியாவுக்கு உன்னை பார்த்தா மூடே வராது” என்று சொல்லி சூர்யா சிரிக்க..

அதைக் கேட்ட ஜெய்  நிமிர்ந்து சூர்யாவை முறைக்க… “என்ன டா முறைக்கிற கொஞ்சம் சிரி” என்று அவன் தோளில்  தட்டினான்.

தன் நண்பன் வந்ததும் ஜெய்யிற்க்கு ஏனோ மனம் லேசானது அவனைப் பார்த்து இருக்கம் தளர்ந்து லேசாக சிரிக்க.. ” அப்பாடா ஒரு வழியா சிரிச்சிட்டாண்டா” என மற்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜெய்யின் அறைக்கு வந்த அவனுடைய உறவினர் ஒருவர் “என்னப்பா ஜெய் கல்யாண பொண்ணு மண்டபத்தை விட்டு ஓடிப் போயிடுச்சாம்மா” என கூற… அதைக் கேட்டு அதிர்ந்து போனான் ஜெய். 

EPISODE 9

மாணிக்கம் மண்டபத்தின் வாசலில் பிரியாவை அழைத்துக் கொண்டு உள்ளே வர அவளை பார்த்ததும் வேகமாக பரமன் ரியாவின் அருகில் வந்து அவளை அத்தனை பேரும் முன்னிலையில் பளார் என ஓங்கி அறைந்தார்.

என்ன ஒரு காரியம் செஞ்சுட்டு இருக்கியா உன்ன நம்பி நான் வாக்கு கொடுத்து இருக்கேன் இப்படித்தான் என்ன அவமானப்படுத்திட்டு சொல்லாம கொள்ளாம மண்டபத்தை விட்டு அதுவும் தாலி கட்டற நேரத்துல ஓடி போவியா என அவளை கடிந்தார்.

உன்னை எல்லாம் என் பொண்ணுனு சொல்லவே நான் நான் வெட்கப்படுகிறேன் உன்னால எனக்குத்தான் அவமானம் என்றார் பரமன்.

பிரியாவை பரமன் அடித்ததுமே அவரிடம் ஓடிவந்த சாந்தா எங்க இப்ப எதுக்கு என் பொண்ண அடிக்கிறீங்க அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லித்தானே இங்கே இருந்து போனா அவளை ஏன் வற்புறுத்துறீங்க பிடிக்காத ஒரு விஷயத்தை செய்யச் சொல்லி அவளை ஏன் டார்ச்சர் பண்றீங்க என்றார்.

வாய மூடு சாந்தா இது எல்லாத்துக்கும் காரணம் நீயா தான் இருக்கும் ரியாவா கண்டிப்பா இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க மாட்டார். அவ இவ்வளவு தைரியமா மண்டலத்தை விட்டு கிளம்பி போயிருக்கானோ அதுக்கு நீ தான் காரணமா இருப்ப என்று சொல்ல சாந்தா அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியானார்.

பருமனிடம் வந்த குரு அண்ணா சரி நடந்தது நடந்து போச்சு நம்ம ரியாவை ரெடி பண்ணி அடுத்த வேலையை பார்ப்போம் என்றார்.

பரமனும் குரு சொன்னதற்கு சரி என்று தலையாட்ட ஜனனி வா வந்து நம்ம ரியவா அழைச்சிட்டு போய் சீக்கிரம் ரெடி பண்ணி கூட்டிட்டு வா முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம் என்றார்.

ஜனனி வந்து ரியாவின் கையைப்பிடித்து வாம்மா உள்ள போகலாம் என ரியாவை அழைக்க அவரோடு மீனுவும் பூஜாவும் அவள் அருகில் வந்து ஏய் ரியா  என்னடி இப்படி பண்ணிட்ட என அவரிடம் பேசிக் கொண்டே ரியாவை உள்ளே அழைத்தனர்.

தன்னைப் பிடித்திருந்த ஜனனியின் கையை உதறிவிட்ட ரியா நான் எங்கேயும் வரல யாரையும் கல்யாணம் பண்ணிக்கல என்றால் சத்தமாக.

அவள் அப்படிப் பேசவும் அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து போயினர். ரியா என கோபமாக அவளை அடிப்பதற்காக கையை ஓங்கிக்கொண்டு பரமன் அவள் அருகில் வர அதற்குள் குறுக்கே புகுந்த குரு அண்ணா என்ன காரியம் பண்றீங்க வயசுக்கு வந்த பொண்ணு இப்படித்தான் எல்லாரும் முன்னாடியும் அடிப்பீங்களா என்று அவரை தடுத்த குரு பிரியாவை பார்த்து ரியா உனக்கே இங்கே இருக்கிற சூழ்நிலை நல்லா தெரியும் நான் சொல்லித்தான் எதையும் நீ புரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல இந்த நேரத்துல நீ இப்படி செய்தால் உன் அப்பா என்ன பண்ணுவாரு என்றார்.

சித்தப்பா இதுல நீங்க தலையிடாதீங்க இது எங்களோட குடும்ப விஷயம் உங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கல்யாணத்துக்கு வந்ததுடன் நிப்பாட்டிக்கோங்க தேவையில்லாம பேசாதீங்க என்ற அல்ரியா முகத்தில் அடித்த மாதிரி.

அவள் இப்படி பேசவும் கோபம் வந்த பரமன் ரியா வார்த்தையை அளந்து பேசு என்று அவளை அடக்க முயற்சிக்க அப்பா நீங்க முதல்ல பேசாம இருங்க எல்லாம் உங்களால வந்தது நீங்க இவங்க கிட்ட கடன் வாங்கிட்டீங்கறதுக்காக உங்க கடனை கழிக்க என்ன அந்த கால் இல்லாதவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முடிவு செஞ்சுட்டீங்க என்ன பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு நானும் ஒரு பொண்ணு தானே எனக்கும் ஆசைகள் நிறைய இருக்கு இப்படி கால் இல்லாதவன கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் பூரா என்ன கஷ்டப்பட சொல்றீங்களா இதுக்கு நான் ஒரு காலமும் சம்மதிக்க மாட்டேன் என்றால் தைரியமாக அவரைப் பார்த்து.

அவள் பேசுவதை கேட்டதும் கூட்டத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டது கஜேந்திரன் தனக்குத் தரவேண்டிய பணத்திற்கு பதிலாக தன்னுடைய ஊனமான மகளுக்கு பேரம் பேசி திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறாரா என காட்டுத்தியாக மண்டபத்தில் இருந்த அனைவருக்கும் தகவல் பரவி விட அதை கவனித்த கஜேந்திரன் அதை ஒன்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவர் நேராக அய்யாவிடம் வந்து அம்மா அறியா நீயே மனசாட்சியை தொட்டு சொல்லு நீதானே என் பையனை துரத்தி துரத்தி காதலிச்ச அதனால தானே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நாங்க சம்மதிச்சோம் இப்படி திடீர்னு என் பையனுக்கு இடையில் ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு அதனால நீ அவனை வேண்டாம் என்று சொல்றதில்ல என்னமோ நியாயம் இருக்கு இதுவே உனக்கு அந்த மாதிரி ஏதாவது இருந்தா நாங்க எங்களுக்கு இந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லி இருப்போமா என அவர் கேட்க.

ஆமா நான் தான் உங்க மகனே துரத்தி துரத்தி காதலிச்சு யார் இல்லைன்னு சொன்னது அப்போ அவன் நல்லா இருந்தான். அதேதான் இப்பவும் நான் சொல்றேன் எனக்கு அவ்வளவு புடிக்கல கால் இல்லாதவன்தான் கல்யாணம் பண்ணிக்க எனக்கு துணியும் இஷ்டம் இல்ல நீங்க என்ன வற்புறுத்தி உங்க மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சீங்கன்னா நான் இத்தனை பேர் முன்னாடி இங்கேயே ஏதாவது செஞ்சுட்டு செத்துப் போயிடுவேன் என்று அவள் சொல்ல அதற்கு மேல் கஜேந்திரன் அவளிடம் எதுவும் பேசவில்லை.

ஹரியாவிற்கு ஆதரவாக சாந்தா நிற்க பரமன் ரியாவிடம் எவ்வளவோ எடுத்துப் பேசியது அவள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை மீண்டும் பூஜாவும் அதையெல்லாம் பார்த்துக்கொண்டு செய்வதறியாறு நின்று இருக்க குரு மீண்டும் ரியாவிடம் வந்து அம்மா ரியா கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு அந்த தம்பி பாவம் இப்படி மணமேடை வரைக்கும் வந்துட்டு இந்த கல்யாணம் நின்னு போயிடுச்சுன்னா அந்த தம்பியோட வாழ்க்கையை கொஞ்சம் யோசிச்சு பாருமா என பொறுமையாக ரியாவிடம் எடுத்துச் சொல்ல..

என் குருவிடம் வந்த சாந்தா.. இங்க பாருங்க தம்பி இதோட உங்க பேச்சை நிப்பாட்டிக்கோங்க என் பொண்ணுக்கு எது நல்லது கெட்டதுன்னு எனக்கு தெரியும் நான் அதை பார்த்துக்கிறேன் இனிய என் பொண்ண இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லி வற்புறுத்தாதீங்க என வெடுக்கென குருவின் முகத்திற்கு நேராக சாந்தா சொல்ல 

கால் இல்லை என்கிற ஒரே காரணத்துக்காக உன் பொண்ணு கஜேந்திரன் மகன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றது எந்த விதத்தில்  நியாயம் என்றார்.

உடனே சாந்தா நீங்க வாய மூடுங்க இப்படி பேசிப்பேசியா தான் என்னையும் என் பொண்ணையும் இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கீங்க அதான் உங்க தம்பி நீங்க வாங்கின கடனுக்கு பணத்தை கொடுத்து அடைக்கலாம்னு சொன்னாரு அப்புறம் ஏன் இந்த பெரிய மனுஷன் பணத்த வாங்காம அவர் பையனுக்கு நம்ம பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறதுலே குறியா இருக்காரு அப்போ இது எல்லாம் பிளான் பண்ணி நடக்கிறது தானே அர்த்தம் என அவர் கஜேந்திரனின் மீது பழியை போட…

அங்கு இருப்பவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் அப்படியே நிற்க… சாந்தா இன்னொரு வார்த்தை நீ சம்பந்தப்பட்ட தப்பா பேசினேன் உன் பல்லை உடைத்து விடுவேன் என்று கோபமாக பேசிய பரம்பன் அவர் கிட்ட நான் ஒரு பைசாவும் வாங்கல நீ வாங்கின பணத்தை நான் எப்பவோ திருப்பி கொடுத்துட்டேன் என்றார் பரமன்.

அவர் சொன்னதைக் கேட்டு சாந்தாவும் ரியாவும் அதிர்ச்சியானார்கள் சாந்தா பர்மனிடம் வந்து அப்போ எதுக்கு இவர்கிட்ட கடன் வாங்கினதா சொல்லி என் பொண்ண ஒரு பையன் தலையில் கட்டி வைக்க பாக்குறீங்க என்றார்.

உன் பொண்ணு நெனச்சா ஒருத்தர கல்யாணம் பண்ணிக்குவேன் நேரம் நாள் குறிக்க சொல்லுவா அவளே திடீர்னு வேண்டாம்னு சொன்னா உடனே நம்ம அந்த கல்யாணத்தை நிறுத்திடனுமா இது எந்த விதத்தில நியாயம் அதனாலதான் எப்படியாவது அந்த தம்பிக்கு நம்ம ரியாவ கல்யாணம் பண்ணிக்கணும்னு அவரு நம்ம கொடுக்க வேண்டிய பணத்துக்காக நம்ம பொண்ண கல்யாணம் பண்ணி தரச் சொல்லி கேட்டார் என்று பொய் சொன்னேன் என்று கஜேந்திரன் மீது இதில் எந்த தப்பும் இல்லை நடந்த அனைத்திற்கும் தான் காரணம் என தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறினார் பரமன்.

ஏற்கனவே திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த சாந்தாவும் ரீதியாகவும் இந்த விஷயம் தெரிந்ததும் முற்றிலுமாக தங்கள் முடிவில் உறுதியாக நின்றனர் எவ்வளவோ அனைவரும் சொல்லிப் பார்த்து ப்ரியா கேட்பதாக இல்லை சாந்தாவும் சம்மதிக்கவில்லை.

இதையெல்லாம் பார்த்த கஜேந்திரனுக்கு மிகவும் வருத்தமானது தன் மகனுக்காக பரமன் இவ்வளவு தூரம் தன் குடும்பத்தையே எதிர்த்து பேசுவதை பார்த்த கஜேந்திரன் அவரிடம் வந்து தொழில் கைவைத்து சம்பந்தி வேண்டாம் இதோட நிறுத்திக்கலாம் என் பையனுக்கு என்ன விதி எழுதி இருக்கோ அதுவே நடக்கட்டும் வீனா என் பயனுக்காகவும் எனக்காகவும் உங்க குடும்பத்தை நீங்க பகச்சிக்க வேண்டாம் என்றார் சோர்வாக.

இல்ல சம்பந்தி எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் என் பொண்ண பேசி சம்மதிக்க வச்சிடறேன் என்று பரமன் சொல்ல இல்ல சம்மந்தி இது வேண்டாம் பிடிக்காத ஒரு பொண்ண என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு ஏற்கனவே கஷ்டத்துல இருக்கிறவங்க நான் மறுபடியும் கஷ்டப்படுத்த விரும்பல என அவர் அங்கிருந்து செல்ல…

உங்க மகனை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று கஜேந்திரனை நோக்கி சத்தமான ஒரு பெண்ணின் குரல் வர..

எத்தனை நேரம் மண்டபத்திற்கு வெளியே நடந்ததை எல்லாம் மணமகன் அறைக்குள் இருந்தவாறு ஜெய் கேட்டுக்கொண்டு இருந்தான். அவன் ரியா பேசியதையும் அவன் அம்மா பேசியதையும் கேட்டு மிகவும் மனம் நொந்து போய் சோர்வாக இருக்க…

இப்போது மண்டத்தில் இருக்கும் யாரோ ஒரு பெண் தானாகவே முன்வந்து தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லவும் அதை அறைக்குள் இருந்து கேட்டவனுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

EPISODE 10

மணமேடையில் மணப்பெண் கோலத்தில் மீனு அமர்ந்து இருக்க… மணமகன் அறையில் இருந்த ஜெய்யை கடினப்பட்டு சம்மதிக்க வைத்து மணமேடைக்கு தன் மகனின் வீல் சேரை தானே மிகவும் சந்தோசமாக தள்ளிக்கொண்டு  வந்தார் கஜேந்திரன்.

தங்கள் மகளின் விருப்பத்திற்கு தடையாக இருக்க விரும்பாத குருவும், ஜனணியும் சந்தோசமாக அவள் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்க,. தன் அக்காவை திருமணம் செய்துகொள்ள போகும் மாப்பிள்ளையை பார்க்க மிகவும் ஆர்வமாக ஜெய்யின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த பூஜா கஜேந்திரன் வருவதை பார்த்தவள் வீல் சேரில் அமர்ந்து இருந்த  ஜெய்யை பார்த்து சந்தோசமானவள்.

” அக்கா… மாமா செம்ம ஹண்ட்ஸம்மா இருக்காரு… அங்க பாரு ” என்று மீனுவிடம் குனிந்து பூஜா சிரித்தபடியே  கூற…

அவள் சொல்வதை கேட்டு ஜெய் வந்து கொண்டு இருந்த திசையை நோக்கி ஆர்வமாக அதே சமயம் வெட்கத்துடன் குனிந்திருந்த தலையை லேசாக  உயர்த்தி தன் கருவிழிகளை உயர்த்தி ஜெய்யை ஓரக் கண்ணால் பார்த்தாள்.

அவளை போலவே தன் நிலை அறிந்து தன்னை பற்றி எந்த விபரமும் தெரியாத, தன் முகத்தை கூட பார்க்காமலேயே தன்னை திருமணம் செய்துகொள்ள போகும் அந்த பெண் யார்? என்று ஆர்வமாக ஜெய் மணமேடையில் திருமண கோலத்தில் மிகவும் எளிமையாக தன் அம்மாவின் நகைகளை போட்டு அழகான நாணத்துடன் தன்னை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டு இருந்த மீனுவை பார்த்தான் .

ஜெய் தன்னை பார்ப்பதை உணர்ந்ததும் சட்டென தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள் மீனு.

அவள் வெட்கப்படுவது ஜெய்க்கு சிரிப்பை வரவழைக்க… அதை  காட்டிக்கொள்ளாமல் இருக்கிய முகத்தோடு அமர்ந்து இருந்தான் ஜெய்.

வீல் சேரை தள்ளிக் கொண்டு மண மேடைக்கு வந்த கஜேந்திரன் “அம்மாடி மருமகளே… ” என்று மீனுவையும், அவள் அருகில் இந்த திருமணத்திற்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவித்து சந்தோசமாக நின்று இருந்த குரு, ஜனனி அவர்களையும்  பூஜாவையும் பார்த்து சந்தோசமானவர். “சம்மந்தி இவன் தான் என்னோட மகன் ஜெய் ” என்று தன் மகனை அறிமுகம் செய்து வைத்தார்.

அவர்கள் மூவரும் ஜெய்யை பார்த்து சந்தோசமாக சிரித்து அவனை வரவேற்க… ” ஹலோ மாம்ஸ்.. நான் பூஜா உங்க ஆளோட  தங்கச்சி.. ” என்று ஜெய்யிடம் சகஜமாக பேச…

அதை கேட்டுவிட்டு தன் அருகில் நின்று இருந்த பூஜாவின் காலில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள் மீனு.

“ஷ்… அக்கா.. இப்போ எதுக்கு என் காலை கில்லுற.., நான் உண்மையை தானே சொன்னேன்.” என்று தன் காலை தேய்த்து விட்டுக்கொண்டே எழுந்து ஜெய்யிடம் தன் கையை நீட்டி ” 𝗪𝗘𝗟𝗖𝗢𝗠𝗘 𝗧𝗢 𝗠𝗬 𝗙𝗔𝗠𝗜𝗟𝗬 𝗠𝗔𝗠𝗦.. ” என்றாள் பூஜா புன்னகை முகமாக.

தன்னை இதுவரை பார்த்தவர்கள் எல்லாம் தன் ஊனத்தை பார்த்து பாவப்பட்டவன் என்பது போல பேசி இருக்க… ஆனால் இன்று இப்படி இருக்கும் தனக்கு தங்கள் மகளை சந்தோசமாக திருமணம் செய்துவைக்க காத்திருக்கும் மீனுவின் பெற்றோரையும், தன்னை பார்த்த மாத்திரத்திலேயே மாம்ஸ் என்று  உரிமையாக கூப்பிடும் மச்சினியையும் பார்த்து ஜெய்க்கு வார்த்தைகளே வரவில்லை.

தன் முன்னே கை நீட்டி நின்று இருக்கும் பூஜாவை பார்த்துக்கொண்டு இருந்தான் ஜெய்.

” அட.. கையை குடுங்க மாம்ஸ்.. என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க..” என்று அவன் கையை பிடித்து குலுக்கினாள் பூஜா.

அவளையும், மீனுவின் பெற்றோரையும் பார்த்து லேசாக சிரித்தான் ஜெய்.

அப்போது ” பெரியப்பா… அண்ணனை மட்டும் தான் இன்ட்ரோ கொடுப்பீங்களா?  அப்போ நான்.. நான் உங்க மகன் இல்லையா? ” என்று வந்து நின்றான் சந்தோஷ்.

அவனை அங்கு சிறிதும்  எதிர்பார்த்திராத பூஜா அதிர்ச்சியாக அவனை பார்த்துக்கொண்டு இருக்க… சந்தோஷ் அவள் அதிர்ச்சியை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன் எதுவும்  தெரியாதவன் போல நின்று இருந்தான்.

கஜேந்திரன் சந்தோஷ் தோளில் கை போட்டு… ” சம்மந்தி இது என் தம்பி மகன் சந்தோஷ். சின்ன வயசுல இருந்து எங்க வீட்ல தான் இருக்கான். சொல்ல போனா இவனை எல்லாரும் என்னோட ரெண்டாவது பிள்ளையா தான் நினைச்சிட்டு இருக்காங்க. எனக்கு ஒரு தம்பி இருந்தது, அவனுக்கு ஒரு மகன் இருக்கான்னு எல்லாரும் மறந்துட்டாங்க.. அந்த அளவுக்கு இவன் எங்க குடும்பத்தோட ஒன்றிட்டான். ” என்றார் கஜேந்திரன்.

“குருவும், ஜனனியும் சந்தோஷை பார்த்து வணக்கம் தெரிவிக்க… அட என்ன அங்கிள் நான் என்ன என் பெரியப்பா மாதிரி வயசனாவனா? வணக்கம் வெக்குறீங்க ரெண்டு பேரும் ” என்றவன் வணக்கம் வைத்த இருவரின் கையை  பிடித்து குலுக்கியவன்  அடுத்து பூஜைவின் கையை குலுக்க அவள் கையை பிடிக்க போக… சட்டென அவனுக்கு பூஜா வணக்கம் வைத்தாள்.

“ஏய் சில்லு வண்டு இரு டி உனக்கு இருக்கு ”  பூஜாவை பார்த்து கண்களாலேயே  மிரட்ட…

அவன் பார்வையை அலட்சியம் செய்த பூஜா வேறுப்புறம் தன் பார்வையை திருப்பிகொண்டாள்.

“சரி, சரி உங்க அறிமுகம் எல்லாம் பிறகு வெச்சுக்கோங்கோ.. நல்ல நேரம் முடிய இன்னும் 10 நிமிஷம் தான் இருக்கு சீக்கிரம் மாப்பிள்ளையை வந்து பொண்ணு கழுத்துல தாலியை கட்ட  சொல்லுங்கோ…”என்று ஐயர் அவசரப்படுத்த..

சந்தோஷ் வீல் சேரை தள்ளிக்கொண்டு வந்து மீனு அமர்ந்து இருந்த மணமேடையில் போடப்பட்டு இருந்த சோபாவிற்கு அருகில் ஜெய்யை நிறுத்தியவன் ஜெய்யின் கையை பிடித்து அவனை  கைத்தாங்களாக எழுந்திருக்க உதவியவன் தன் தோளில் ஜெய்யின் கையை போட்டு மெதுவாக சோபாவில்  அமர வைக்க போக… அந்த நேரம் பார்த்து இதுவரை இங்கு நடப்பதை எல்லாம் வயிற்றிரிச்சளோடு சோபாவிற்கு அருகில் நின்று பார்த்துக்கொண்டு இருந்த சாந்தா நின்று இருக்க… அவர் அருகில் நின்று  ஜெய்யை பார்த்து எரிச்சளில் நின்று இருந்த ரியா.. சந்தோஷ் ஜெய்யை வீல் சேரில் இருந்து தூக்க…சட்டென்று  அவன் இடுப்பில் இருந்த வேஷ்டியை அவிழ்ந்து விட்டாள் ஜெய் கட்டி இருந்த வேஷ்டி இடுப்பைவிட்டு கீழே நழுவப் பார்க்க…

இதை சற்றும் எதிர்பார்காத ஜெய் செய்வதியது தன் வேஷ்டியை பிடிப்பதற்காக சந்தோஷ் தோளில் இருந்த தன் கையை வேகமாக வெளியே எடுக்க.. அப்போது துணை இல்லாமல் தனியே நிற்க முடியாத  ஜெய் கீழே விழப்போனான்.

ஜெய் இடுப்பில் இருந்த வேஷ்டி ஒருபக்கம் நழுவவும், மறுபக்கம் அவன் பிடிமானம் இல்லாமல் விழப் போவதையும் மேடையிலிருந்த அனைவரும் பார்த்துவிட்டு பதற… மேடைக்கு கீழ் நின்று இருந்தவர்களும் அடுத்து என்ன? நடக்குமோ என்று பதறியபடி ஜெய்யை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அத்தனை பேர் முன்னிலையிலும் ஜெய் அவமானப்பட போகிறான் என்று ரியா ஆர்வமாக  பார்த்துக்கொண்டு நின்று இருக்க…

ஆனால் அங்கு நடத்ததே வேறு… ஜெய் தவறி விழுவதை பார்த்து பதறிய படி அவன் அப்பா, சந்தோஷ் ஜெய்யை பிடிக்க முற்பட… மேடைக்கு கீழே தன் நண்பனின் திருமணத்தை பார்க்க நின்று இருந்த சூர்யா மேடையை கீழே இருந்தே ஏறிக் குதித்து ஜெய்யை நோக்கி ஓடி வர… மீனுவின் பெற்றோரும் மாப்பிள்ளை… என பதறிக்கொண்டு அவனை நோக்கி வேகமாக வர… பூஜாவும் “மாம்ஸ் பார்த்து..” என்று அவனிடம் வர…

இப்படி ஜெய்யிர்க்காக அவன் சொந்தங்கள் எல்லாம் ஓடி வர… அதற்குள்  ஒரு கரம் சட்டென அவிழ இருந்த அவன் வேஷ்டியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையால் அவன் இடுப்பை வளைத்து பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்துகொண்டே பதட்டமாக அவனை நிமிர்ந்து பார்த்து “ஒன்னும் இல்லை பதராதீங்க … நான் பிடிச்சுகிட்டேன்” என்று மீனு அவன் முகத்தை பார்த்து சொன்னாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெய் தன்னில் பாதியாகப் போகும் மீனுவை அதிசயம் போல பார்த்தபடி அவள் மேல் தன் முழு எடையையும் போட்டு தடுமாறிக்கொண்டு இருந்தான் அவள் பார்வையாள் .

அதற்குள் சந்தோசுடன் சேர்ந்து  சூர்யாவும் வந்து ஜெய்யை விழாமல் தாங்கி பிடித்துக்கொள்ள… மீனு சட்டென்று அவன் இடுப்பில் இருந்த வேஷ்டியை அவனுக்கு கட்டிவிட்டாள்.

அவள் கை தன் இடுப்பில் உரசவும் கூச்சத்தில் ஜெய் நெளிய.. “டேய் அசையாம நில்லு டா சிஸ்டர்க்கு வேஷ்டி கட்ட கஷ்டமா இருக்கும்ல…” என்றான் சூர்யா.

“வாவ் அண்ணி, நல்ல நேரத்துல என் அண்ணனையும் கீழ விழாம பிடிச்சுகிட்டீங்க… அப்படியே அவர் வேஷ்டியையும்” என்று சொல்லி சிரித்தான் சந்தோஷ்.

அவனை பார்த்து சிரித்துக்கொண்டே ஜெய் இடுப்பில் வேஷ்டியை தனக்கு தெரிந்த மாதிரி அவிழ்ந்து விழாத அளவுக்கு இருக்கமாக கட்டிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்து ” ஓகேவா..?” என்றாள்.

அவனும் ” ஆமாம்” என்பது போல பதிலுக்கு தலையை ஆட்டினான்.

அதன் பின் சந்தோஷை பார்த்து அவரை இப்படி உக்கார வைங்க என்று சோபாவை காட்டி ஜெய்யை அதில் அமர வைக்க உதவியவள். அவர்கள் அருகில் நின்று இருந்த சூர்யாவை பார்த்து “ஒரு நிமிஷம் இப்படி வாங்க..” என்று அவனை  தன் பக்கம் அழைத்தாள்.

சூர்யா ஒன்றும் புரியாமல் அவள் அருகில் வர.. சூர்யா இந்த பக்கம் வந்ததும் அவனை தாண்டி நின்று இருந்த ரியாவிடம் வந்தாள். அங்கிருப்பவர்கள் இந்த திருமணத்தை வேண்டாம்  என்று நிறுத்தியவளிடம் எதற்காக இப்போது மீனு செல்கிறாள் என்று  அனைவரும் அவளையே பார்க்க…

அப்போது யாரும் எதிர்பார்த்திராத ஒரு செயலை மீனு செய்தாள். அவள் செய்வதை பார்த்து அனைவரும் ஸ்தம்பித்து போய்யினர்.

EPISODE 11

ஜெய்யை மணமேடையில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு சூர்யாவை தான் இருந்த இடத்திற்கு நகரச் சொல்ல அவன் பின்னால் நின்று இருந்த ரியாவிடம் மீனு சென்றாள்.

ரியா தனக்கு எதிரே வந்து நிற்கும் மீனுவை பார்த்து “இவ எதுக்கு இங்க வந்து நிற்கிறா ஏற்கனவே  இவ அந்த ஜெய்யை கல்யாணம் பண்ணிக்கிறாளேன்னு பயங்கர கடுப்புல இருக்கேன். இந்த நேரத்துல இவ முகத்தை பார்த்தா இன்னும் ஆத்திரமா தான் வருது” என யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் முன்னாள் வந்து நின்ற மீனு பளார்!! என ரியாவின் கன்னத்தில் ஓங்கி அடித்தாள்.

இதை மேடையில் இருந்தவர்களும் மற்றவர்களும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை ரியாவின் அருகில் நின்றிருந்த சாந்தா தன் மகள் அடி வாங்கியதும் அதிர்ச்சியானவர் ரியாவின் முன்னே கோபமாக நின்றிருந்த மீனுவை பார்த்து “ஏய் மீனு உனக்கு என்ன அறிவு எதுவும் கெட்டுப் போயிடுச்சா இப்போ எதுக்கு தேவையே இல்லாம என் பொண்ணு வந்து அடிக்கிற அவ அப்படி என்ன பண்ணிட்டா? “ என்றார் கோபமாக.

“அவ என்ன பண்ணினான்னு நான் சொல்றத விட உங்க பொண்ணையே சொல்லச் சொல்லி கேளுங்க” என்றாள் மீனு.

சாந்தாவிற்கு ஒன்றும் புரியாமல் தன் மகளை திருப்பி பார்த்தவர் “ரியா என்னடி ஆச்சு அவ எதுக்கு உன்ன அடிக்கிறா? அப்படி என்ன நீ பண்ணுன?”  என்றார்.

தன் கன்னத்தை தேய்த்து விட்டுக் கொண்டே கண்களில் வலிந்த கண்ணீரோடு சாந்தாவை பார்த்து “அம்மா நான் எதுவுமே பண்ணல இவ தான் தேவையே இல்லாம என்ன வந்து அடிச்சிட்டா” என்று மீனுவை பார்த்து ரியா முறைத்தாள்..

ரியாவின் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்த மீனு “உண்மைய சொல்லு நீ எதுவுமே பண்ணலையா?” என்றவள்  சோபாவில் அமர்ந்து  மீனுவையே அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்த  ஜெய்யை காட்டி “இவரை சந்தோஷ் சேர்ல இருந்து தூக்கி சோபாவில் உட்கார வைக்கும் போது நீதானே அவர் வேஷ்டியை கழட்டி விட பாத்த… இது யாருக்கும் தெரியாதுனு நினைச்சிட்டியா? நீ அவர் வேஷ்டியை கழட்டி  விட்டத நான் ரெண்டு கண்ணாலையும் பார்த்தேன்” என்றால் மீனு.

அதைக் கேட்டதும் ஜெய் அதிர்ச்சியாக நிமிர்ந்து ரியாவை பார்க்க.. மற்றவர்களும் அதே அதிர்ச்சியோடு தான் ரியாவை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

யாருக்கும் தெரியாமல் தான் செய்த செயல் இப்படி அனைவரும் முன்னிலையிலும் அம்பலமாகி விட்டதே என அவமானத்தில் தலை குனிந்த படி அனைவரையும் பார்த்த ரியா எதுவும் பேசாமல் சட்டென்று தனக்கு எதிரே நின்றிருந்த மீனுவை தள்ளிவிட்டு மணமேடையை விட்டு இறங்கி வெளியே ஓடினாள். அவள் பின்னாலேயே சாந்தாவும் தன் மகளை சமாதானம் செய்ய ஓடினார்.

அதை பார்த்துக்கொண்டு மீனு அருகில் வந்த பரமன் மீனுவையும் ஜெய்யையும் பார்த்து  கையெடுத்து அவர்கள் இருவரையும் பார்த்து கும்பிட்டு “என் பொண்ணு பண்ணின காரியத்துக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.  மணமேடை வர வந்து இந்த கல்யாணத்தை நிப்பாட்டினதுக்கும் இப்போ உங்களை இத்தனை பேர் முன்னிலையில் அசிங்கப்படுத்த நினைச்சதுக்கும் அவளுக்கு பதிலா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்”  என்று குரல் தழுத்தழுக்க அவர் பேசவும் சட்டென ஜெய் பரமன் கையைப் பிடித்துக் கொண்டு “ஐயோ மாமா என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க விடுங்க அவ அப்படித்தான் தெரிஞ்சுடுச்சு அவளுக்காக வருத்தப்பட்டு நாம என்ன பண்ண முடியும்” என்றான்.

“தம்பி இத்தனை நடந்ததுக்கு பிறகும் நீங்க என்ன மாமான்னு உரிமையா கூப்பிடுறீங்களே ” என்றார் பரமன் குரல் தழுதழுக்க.

” நான் உங்கள ரியாவோட அப்பாவா நெனச்சு  மாமான்னு கூப்பிடல, உங்க தம்பி பொண்ண தானே நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அப்போ அந்த உரிமையிலும் நான் உங்களை மாமானு கூப்பிடலாம் தானே” என்றான் ஜெய்.

ஒரு பக்கம் தன் மகள் செய்த காரியத்தை நினைத்து வருத்தப்பட்டாலும் மற்றொரு பக்கம் நின்ற கல்யாணம் அதே முகூர்த்தத்தில் அதே மேடையில் நடப்பதை நினைத்து சந்தோஷப்பட்ட பரமன் ஜெய் சொன்னது கேட்டு சிரித்துவிட்டு மீனுவை அவரே கைபிடித்து அழைத்து வந்து மணமேடையில் இருந்த சோபாவில் ஜெய்க்கு அருகில் அமர வைத்தவர் “ஐயரே தாலிய எடுத்து கொடுங்க முகூர்த்தம் முடியப் போகுது” என்றார்.

ஐயரும் தாலியை எடுத்து அனைவரிடமும் ஒரு முறை காட்டிவிட்டு ஜெய் கையில் கொடுத்து “இந்தாங்க தம்பி பொண்ணு கழுத்துல கட்டுங்கோ” என்றார் குதூங்காலமாக.

ஜெய்யும் ஐயர் கொடுத்த தாலியை வாங்கி மீனுவின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சுட்டு தன் வாழ்க்கை துணைவியாக ஏற்றுக் கொண்டான்.

மேளதாளம் முழங்க மங்கள ஒலியுடன் அனைவரின் மனம் நிறைந்த ஆசீர்வாதத்தோடு மீனு, ஜெய் திருமணம் இனிதே நடந்தேறியது.

ஜெய் மீனுவின் கழுத்தில் தாலி கட்டுவதை பார்த்து சந்தோஷம் அடைந்த சந்தோஷ் தன் அண்ணனுக்கு நல்ல புத்திசாலியான பெண் தான் மனைவியாக அமைந்திருக்கிறாள் என்று மீனுவை நினைத்து சந்தோஷமாக இருந்தது. அதே மனநிலையில் தான் கஜேந்திரனும் இருந்தார்.

பின்பு சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் முடித்துவிட்டு ஜெயையும் மீனுவையும் முதலில் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து பாலும் பழமும் கொடுத்து வீட்டில் குத்து விளக்கு ஏற்றி  பூஜை செய்தனர்.

பின்பு பெண் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதாள் காஞ்சிபுரத்திலிருந்து  ஜெய்யுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டாள் மீனு அவர்களுடனே கஜேந்திரன் சந்தோஷ் சூர்யா ஒரு காரிலும் குரு தன் குடும்பத்தோடு மற்றொரு காரிலும் அவர்களோடு சென்னை நோக்கி பயணம் ஆகினர்.

பரமனோ தன் வீட்டில் அடுத்து நடக்க போகும் பூகம்பத்தை எதிர்கொள்வதற்காக இவர்களையெல்லாம் சந்தோசமாக வழி அனுப்பி வைத்துவிட்டு கனத்த இதயத்தோடு தன் குடும்பத்தை எதிர்கொள்வதற்காக தன்னுடைய வீட்டிற்கு வந்தார்.

அவர் வாசலில் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது அங்கிருந்த பொருட்கள் எல்லாம் உடையும் சத்தம் கேட்டது அதை கேட்டதுமே தன்மகள் ரியா பிரச்சனை செய்ய ஆரம்பித்து விட்டாள் என்பதை புரிந்து கொண்டார்.

எதையும் கண்டுகொள்ளாமல் வீட்டிற்குள் வந்தவர் தன்னரை நோக்கி செல்ல போகாலில் இருந்த பொருட்களை எல்லாம் கோபமாக அறிய தூக்கி வீசி உடைத்துக் கொண்டிருக்க அவளை தடுக்க சாந்தா படாத பாடு பட்டு கொண்டு இருந்தார். இதையெல்லாம் பார்த்துவிட்டு தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல பரமன் உள்ளே செல்ல அவரைப் பார்த்து ரியா தன் கையில் இருந்த கண்ணாடி பூஜாடியை தூக்கி அவர் செல்லும் வழியில் போட்டு உடைத்தாள்.

தன் காலிற்கு கீழே கண்ணாடி சில்லுகள் உடைந்து சிதறி கிடக்க அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் பரமன் அப்படியே நிற்க அவர் முன்பு வேகமாக வந்து நின்ற ரியா “இப்போ உங்களுக்கு சந்தோசமா? அத்தனை பேரும் முன்னாடி அந்த மீனு என்ன அவன் அடிச்சு அவமானப்படுத்தினாலே இப்போ உங்களுக்கு திருப்தியா? என் வாழ்க்கையை கெடுக்குறதுக்குனே வந்திருக்கீங்களா நீங்க” என மீனு மேல் இருந்து ஆத்திரத்தில் பரமனிடம் பேச…

“மீனு உன்னை அறைஞ்சதோட விட்டாலேன்னு சந்தோஷப்படு நானா இருந்தா உன்ன அந்த இடத்துல என்ன பண்ணி இருப்பேன்னு எனக்கே தெரியாது உன்னை நம்பி வாக்கு கொடுத்ததுக்கு அத்தனை பேர் முன்னாடி நான் அவமானப்பட்டு தலை குனிஞ்சு நின்னது தான் மிச்சம். ஏன்டா உன்ன பெத்தேன்னு இப்பதான் நான் வருத்தப்படுறேன்” என்று ரியாவின் மேல்  பரமன் கோபப்பட…

“ஏன் சொல்ல மாட்டீங்க. என் பொண்ணு தான் ஆரம்பத்தில் இருந்து இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டு இருந்தாலே அதையெல்லாம் மீறி அவ விருப்பத்துக்கு மாற அவளுக்கு பிடிக்காத ஒன்றை கல்யாணம் பண்ணி வச்சா அப்புறம் என்ன பண்ணுவா.. அவ அதனாலதான் சொல்லாம கொள்ளாம மண்டபத்தை விட்டு ஓடிப்போன அதையும் விடாம அந்த மாணிக்கம் இவள பிடிச்சு கூட்டிட்டு வந்து மண்டபத்துல நிப்பாட்டி வச்சுட்டான்” என்றார் சாந்தா கோவமாக.

“நான் உன் மகளை வற்புறுத்துனது உண்மைதான். ஆனால் அதுக்கு எல்லாம் முன்னாடி ரியா தானே அந்த தம்பியை கல்யாணம் பண்ணி ஆகணும் ஒத்த கால்ல நின்னு பிடிவாதம் பண்ணினா இவ விருப்பப்படி தானே இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினேன். அப்புறம் ஏன் அந்த பையன இவன் வேண்டாம்னு சொன்னா? அந்த பையனுக்கு ஆக்சிடென்ட்ல கால் உடைஞ்சது ஒரு காரணமா காட்டி தானே வேணாம்னு சொன்னா…கொஞ்ச நாள் ட்ரீட்மென்ட் எடுத்தா சீக்கிரம் சரியாயிட போயிடு போகுது. அதுவரை இவளால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி அந்த தம்பி கூட இருக்க முடியாதா?” என்றார்.

” இப்பவும் என் மேல தான தப்பு சொல்றீங்க கால் உடைந்தவனை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும். என் வாழ்க்கை என்ன ஆகுதுன்னு கொஞ்சமாவது நீங்க யோசிச்சு பாத்தீங்களா? அவனுக்கு குணமாகும்னு எந்த தைரியத்துல நீங்க சொல்றீங்க.. டாக்டர் தான் சொன்னாரு அவனோட ரெண்டு முட்டியும் பயங்கரமா பிராக்சர் ஆயிடுச்சுன்னு..அத குணப்படுத்தவே முடியாதுன்னு அப்படி இருக்கிறப்போ நீங்க எப்படி அவனுக்கு குணமாகும் என்று சொல்றீங்க. உங்க பேச்சை நம்பி அவனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுக்க கால் இல்லாதவனுக்கு சேவை செஞ்சுக்கிட்டு இருக்கணுமா? ” என்றால் எரிச்சலாக.

தன்மகள் பேசுவதையெல்லாம் கேட்டு வெறுத்துப் போன பரமன் “இப்போ என்ன.. நீ நினைச்ச மாதிரியே இந்த கல்யாணம் நின்னுடுச்சு தானே அப்புறம் எதுக்கு இப்படி கோபமா எல்லா பொருளையும் போட்டு உடைச்சிட்டு இருக்க” என்றார் பரமன்.

“நான் வேண்டாம்னு சொன்னவன அந்த மீனும் எப்படி கல்யாணம் பண்ணிக்கலாம். நான் வேண்டாம்னு சொன்னவன் எப்படி இன்னொருத்தியை என் கண்ணு முன்னாடியே சந்தோசமா கல்யாணம் பண்ணிக்க முடியும். எனக்கு அது பிடிக்கல அந்த மீனு ஜெய்ய கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது. அவ நான் வேண்டான்னு தூக்கி போட்ட பொருளை எடுத்து வச்சுக்கிட்டு என்ன கோபப்படுத்திட்டா இனி அதுக்கான விளைவுகளை அவ சந்திச்சு தான் ஆகணும்” என்றால் ரியா மிகவும் ஆக்ரோஷமாக.

தன் மகள் பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பரமன் “உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருச்சு நீ வேண்டான்னு சொல்லிட்டா அவனுக்கு கல்யாணமே ஆகக்கூடாதா?” என்றவர் தன் மகளையும் மனைவியையும் பார்க்கப் பிடிக்காமல் அந்த இடத்தை விட்டு சென்றார்.

கோபமாக இருந்த தன் மகள் ரியாவை சாந்தா சமாதானப்படுத்த முயல “மம்மி எனக்கு அந்த ஜெய்ய மீனு கல்யாணம் பண்ணிக்கிட்டது பிடிக்கல எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் பிரிக்கணும்” என ரியாக் கூற..

“அவ்வளவு தானே கண்ணா கொஞ்சம் பொறு நேரம் காலம் வரும்போது எல்லாம் நல்லபடியா நடத்திடலாம்” என்று தன் மகளை சமாதானம் செய்து அவள் அறைக்கு அழைத்துச் சென்றார் சாந்தா.

EPISODE 12

 முதலிரவிற்காக மீனுவின் அறை மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்க  ஜெய்யை வீல்சேரில் தள்ளி  கொண்டு வந்த சந்தோஷ்.”அண்ணா..ம்ம்… ம்ம்…” என்று அந்த அறையை தன் கண்களால் ஜாடை காட்டினான்.

சூர்யாவோ  அந்த அறை அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்த்து “டேய் மச்சான்  என்னடா ஏற்படலாம் ரொம்ப பலமா இருக்கு…” என்று கூறி சூர்யா ஜெய்யை பார்த்து கண்ணடிக்க.. “டேய் உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட டீசன்சி கிடையாதா? இப்படித்தான் பேசுவீங்களா?” என்று ஜெய் முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு.

“டேய் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இன்னைக்கு உனக்கு சிஸ்டருக்கும் முதலிரவு. நீ என்னடா இன்னுமும் முகத்தை இப்படி கடுகடுனு வெச்சிட்டு இருக்க. அந்த பொண்ணு உன் முகத்தை பார்த்தா பயந்துட போகுது” என்றான் சூர்யா.

“சூர்யா நல்லா சொல்லு இவருகிட்டே… எப்ப பாரு முகத்தை இப்படி உம்முன்னு வச்சுட்டு இருந்தா யாருதான் இவர்கிட்ட வந்து பேசுவாங்க. இவர் இப்படி இருக்குறத பாத்தாலே பயந்து ஓடிட மாட்டாங்களா?” என்றான் சந்தோஷ்.

“விடுடா நம்மகிட்ட தான் இப்படி இருக்கான். ஒருவேளை அவன் பொண்டாட்டிகிட்ட நல்லா சிரிச்சு பேசுவானா இருக்கும்.  பார்ப்போம் அதையும் எங்க போயிடப் போறான்” என்று சொல்லிவிட்டு… “சரி வா நேரம் ஆயிடுச்சு இங்கே நின்னு பேசிகிட்டு இருந்தா அப்புறம் இவனோட வைஃப் வந்து நம்ம ரெண்டு பேரு  பிரண்ட்ஷிப்பையும் முதல்ல கட் பண்ண சொல்லிட போறாங்க வா போகலாம்” என சந்தோஷை இழுத்துக் கொண்டு சூர்யா அங்கிருந்து சென்றான்.

அவர்கள் இருவரும் சென்றதை பார்த்தவன் ” இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை..” என்று 

தன் வீல் சேரை திருப்ப… மீனுவின் அறையை அப்போதுதான் பார்த்தான் ஜெய் . அவள் அறை முழுவதும் பறவைகளின் போட்டோக்கள் விதவிதமாக படம் பிடிக்கப்பட்டு அவை கயிற்றில் கட்டி  தோரணங்களாக தொங்கவிடப்பட்டிருந்தது.  அந்த அறையில் பாதி, பறவைகளின் போட்டோ நிறைந்திருக்க பெட்டிற்கு நேராக உள்ள சுவற்றில் மீனு அழகாக சிரித்தபடி சிவப்பு நிற புடவை அணிந்து தலையை பின்னி மல்லிகை பூ சரம் வைத்து அதில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

ஆள் உயரத்திற்கு அந்த போட்டோ பிரேம் செய்யப்பட்டு அவள் அறையில் மாட்டப்பட்டு இருந்தது. தன் எலக்ட்ரிக் வீல் சேர் பட்டனை அழுத்தி அந்த போட்டோ இருந்த திசையை நோக்கி சென்றான் ஜெய்.

மீனுவின் போட்டோவை மிக அருகில் வந்து பார்த்த ஜெய் அவள் முகத்தை அப்போதுதான் நன்றாக கவனித்தான். மணமேடையில் இருவரும் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை.

அழகான உருண்டையாக சிறிய குழந்தை முகம்  ,கூரிய மூக்கு,வரைந்து வைத்தது போல உதடுகள் அதில் அவள் சிரித்திருந்ததில் கன்னங்களில் குழி விழ… அது அவளுக்கு மேலும் அழகூட்டியது. கிட்டத்தட்ட ரியாவை ஒத்து இருந்தது மீனுவின் முகம்.  ஆனால் ரியாவின் முகம் எப்போதுமே சிடுசிடுத்தபடி இருக்கும். மீனுவின் முகத்தில் ஒரு சாந்தமும் அமைதியும் இருந்தது.

அவள் போட்டோவை பார்த்தபடியே குழப்பத்தில் இருந்தான் ஜெய். தன்னை ஆறு மாதமாக துரத்தி துரத்தி காதலித்த ரியா தனக்கு கால் உடைந்த ஒரே காரணத்திற்காக திருமணத்தையே நிறுத்திவிட்டு மண்டபத்தை விட்டு ஓடி இருக்க தன்னை ஒருமுறை கூட பார்த்திடாமல் தன்னை பற்றியோ தன் குடும்பத்தை பற்றியோ எந்த விபரமும்   தெரியாமல் எப்படி தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால் என புரியாமல் குழம்பினான் ஜெய்.

“என்ன பத்தி  எதுவுமே தெரியாது. எனக்கு கால் இல்லைங்கிற விவரம் மட்டும் தானே அவளுக்கு தெரியும். என்ன முன்ன பின்ன பார்த்தது கூட இல்ல அப்படி இருக்கும்போது எந்த ஒரு விபரமும் தெரியாம  என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எப்படி இவளாவே முன்வந்து சொன்னா. ஒருவேளை என்ன என்னோட நிலைமையை பார்த்து பாவப்பட்டு போனால் போகுதுன்னு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாளா? அப்படி எந்த பொண்ணாவது செய்வாளா?” என தனக்குள்ளே கேள்விகள் எழுந்து கொண்டே இருக்க அதை மீனு வந்தால் அவளிடமே கேட்டு விட வேண்டும் என முடிவு செய்தான் ஜெய்.

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மீனு அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் சட்டென தன் வீல் சேரை இயக்கி அவள் போட்டோவில் முன் நின்றிருந்தவன் அங்கிருந்து தள்ளி வந்து பறவைகளை போட்டோ எடுத்து மாட்டி இருந்த இடத்திற்கு வந்து அதை பார்ப்பது போல பாவனை செய்தான்.

மீனு கதவை சாற்றி விட்டு உள்ளே வந்தவள் படுக்கையில் ஜெய் இருப்பான் என்று பார்க்க அவன் அங்கு இல்லாமல் போக… அறைக்குள் திரும்ப… தான் எடுத்த போட்டோ  முன்பு நின்று அவன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு மெதுவாக அவன் இருக்கும் திசையை நோக்கி நடந்து சென்றாள்.

மீனு தன் பின்னால் நடந்து வருவது அவள் கொலுசின் சத்தம் வைத்து கணித்துக்கொண்ட ஜெய் அவள் வரும் திசையை நோக்கி தன் சேரை திருப்ப..

ஜெய்யை நோக்கி மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த மீனு ஜெய்யின் பக்கம் திரும்பியதும் அப்படியே வந்த இடத்தில் நின்று விட்டாள்.

ஜெய்யை அப்போதுதான் மீனு முதன் முதலாக நேருக்கு நேராக சந்திக்கிறாள். மணமேடையில் அவன் வேஷ்டி அவிழ்ந்து நழுவிய போது கூட அவன் முகத்தை சரியாக மீனும் பார்க்கவில்லை இப்போது அவனை நேருக்கு நேராக பார்த்தவள் ஜெய்யும் தன்னை பார்க்கிறான் என்று அவனை பார்க்க முடியாமல் சட்டென்று தன் தலையை குனிந்து கொண்டாள்.

மெல்ல தன் சேர் இயக்கிய படி அவள் முன்பு வந்து ஜெய் நிற்க தலை கவிழ்ந்து இருந்த மீனு அவன் பாதங்கள் இரண்டையும் பார்த்தாள். 

அவன் பாதத்தில் மேல் புறம்  இரு கால்களிலும் தழும்புகள் இருக்க அதை பார்த்தவளுக்கு ஜெய்யை நினைத்து பாவமாக போய்விட்டது.

அவன் பாதங்களை பார்த்தபடி மீனு நின்று இருக்க… அவளுக்கு முன்னால் வீழ்ச்சாரில் அமர்ந்திருந்த ஜெய் அவள் பார்வை பதிந்திருந்த திசையை குனிந்து பார்த்தான். தன் பாதங்கள் இரண்டிலும் இருந்த தழும்பை தான் அவள் பார்க்கிறாள் என்றதும் சட்டென தன் பாதங்கள் இரண்டையும் உள்ளே இழுத்துக் கொண்டான்.

அவன் அப்படிச் செய்ததும் மீனு சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்க்க… அவன் மீனுவை பார்க்கும் பார்வையே அவளுக்கு ஊசி போல் இதயம் வரை துலைத்தது.

அவன் பார்வையில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நேருக்கு நேராக மீனுவின் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் பார்வையை தவிர்க்க முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டு  கையில் பால் சொம்புடன் நின்றிருந்தாள் மீனு.

“என் காலில இருக்க தழும்பையே இப்படி  பாத்துட்டு இருக்காளே ஆக்சிடென்ட் நடந்த பிறகு என்னோட ரெண்டு கால்களிலும் உடைந்து அதுல ஏற்பட்ட காயங்களையும், என் உடம்புல இருக்க தழும்பயும்  பார்த்தா இவ என்ன பத்தி என்ன நினைப்பா என்ன பத்தின அபிப்பிராயம் அவளுக்கு எப்படி இருக்கும்” என யோசித்தவாரே  “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் கராரான குரலில்.

“ம்ம்ம்… சொல்லுங்க” என்றாள் மீனு.

“நீ என் மேல இரக்கப்பட்டு தான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” என்றான் 

அவன் அப்படி கேட்டதும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள் “இல்லை சத்தியமா நான் உங்களை இறக்கப்பட்டு எல்லாம்  கல்யாணம் செய்துக்கல ” என்றாள்.

“அப்புறம் எப்படி  முன்ன பின்ன ஒரு முறை கூட பார்க்காம என்னை பத்தி எந்த விபரமும் தெரியாம நீ என்ன கல்யாணம் செய்துக்க சம்மதித்த… அதுவும் உன் அக்காவுக்கு பிக்ஸ் பண்ணி  என்னோட ஊனத்தை காரணம் காட்டி என் கல்யாணத்தை நிறுத்தின பிறகும்  என்ன எப்படி கல்யாணம் செய்துக்கணும்னு உனக்கு தோணுச்சு ” என்றான். 

“அது.. அது வந்து…” என மீனு ஏதோ கூறத் தயங்க..

“இங்க பாரு நீயும் நானும் ஒருத்தர ஒருத்தர் முழுசா தெரிஞ்சுகிட்டா தான் நம்ம பத்தி நம்ம வாழ்க்கையை பத்தி அடுத்தது என்ன செய்யலாம்னு யோசிக்க முடியும். இப்படி நீ  மனசுல எதையோ வச்சுக்கிட்டு என்கிட்ட எதையும் சொல்லாம மறைக்கணும்னு நினைக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. நீ சொல்லாட்டியும் சீக்கிரமாவே அதுக்கான காரணத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியும்” என்றான் ஜெய்.

அதுவரை அமைதியாக இருந்த மீனு அவன் இப்படிச் சொன்னதும் தன் கையில் இருந்த பால் சொம்பை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு தன் சேலை தலைப்பை எடுத்து இடுப்பில் சொருகியவாறு அவன் முன்பு வந்து நின்றவள்.

” தெரிஞ்சுக்கலாமே… அதுக்கான முழு உரிமையும் உங்களுக்கு இருக்கு”  என்று தன் கழுத்தில் ஜெய் கட்டிய தாலியை தூக்கி அவன் முன்பு காட்டி கூறினாள் மீனு.

“அப்போ என்னன்னு சொல்லு என்ன கல்யாணம் செய்துக்க என்ன காரணம் சொல்லு அது எனக்கு தெரிஞ்சு ஆகணும்” என்றான் ஜெய்.

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீங்க என்ன சொன்னீங்க நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதற்கான காரணத்தை சொல்லாம போனாலும். அதை எப்படி தெரிஞ்சுக்கணும்னு உங்களுக்கு தெரியும்னு தானே சொன்னீங்க.. அப்போ நான் உங்களை எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேங்குற காரணத்தை நீங்களே கண்டுபிடிங்க பார்க்கலாம்” என்றாள் மீனு சிரித்த முகமாக.

அவள் தன்னிடம் நேருக்கு நேராக சவால் விடும்படி பேசுவதை பார்த்த ஜெய் அவளை நீ பார்த்து “என்ன என்னிடம் சவால் விடுறயா? நீ என்ன காரணத்துக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எனக்கு தெரியாம போயிடும்னு நினைச்சியா?” என்றான்.

“இல்ல இல்ல அப்படி நான் நினைக்கவே இல்ல… சொல்ல போனா நானே உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டதற்கான காரணத்தை சொல்லலாம்னு தான் உள்ளே வந்தேன்.அதுக்குள்ள நீங்களே கேட்டுட்டீங்க.. நான் எதுக்காக உங்களை கல்யாணம் செய்திருக்க  காரணத்த நீங்களே கண்டுபிடிங்க அதுவரை என் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வராது”  என்றாள் குறும்பாக சிரித்தபடி.

அவள் சிரித்த முகத்தை பார்த்த ஜெய்யிக்கு “இவ என்கிட்டே சொல்லமாட்டேன்னு வீம்பு பிடிச்சிருந்தா கூட இவளை மிரட்டி உருட்டி எதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாங்கிற காரணத்தை நான் எப்படியாவது தெரிந்திருப்பேன். ஆனா இவ இப்படி சிரிச்சு முகமா என்ன பார்த்து பேசுறப்போ என்னால இவகிட்ட வேற எதையுமே அழுத்தி கேட்க முடியலையே “என யோசித்தவாறு மீனுவை பார்த்தான்.

“என்ன பாக்கறீங்க உங்களால கண்டுபிடிக்க முடியாதா?” என்றாள் கேலியாக .

அவளை முறைத்தவன் “நாளைக்கு காலையில  நீ எதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நான் உன்கிட்டே சொல்லுவேன்” என்றான் தீர்க்கமாக.

“ஓ அவ்வளவு நம்பிக்கையா?” என்றாள் மீனு.

மீனு பேசுவதை கண்டுகொள்ளாமல்  தன் கையில் இருந்த மொபைலை எடுத்துக்கொண்டு அவள் அறையில் இருந்த பால்கனியை நோக்கி வீல் சேரை இயக்கிக் கொண்டு ஜெய் செல்ல…

அவனைப் பார்த்து ” பார்க்கிறேன் நீங்க எப்படி கண்டுபிடிக்குறீங்கன்னு” என்று சொன்னவள் தூக்கம் வரவே சென்று கட்டிலில் ஓரமாக படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

இங்கே பால்கனிக்கு வந்த ஜெய் தன்னுடைய பிஏ மகேஷிற்கு கால் செய்து மீனுவை பற்றிய விபரங்களை எல்லாம் எதுவும் மிஸ் ஆகிவிடாமல் தனக்கு  வேண்டும் என சொல்லிவிட்டு போனை வைத்தான். 

EPISODE 13

மீனு மெத்தையில் படுத்ததும் சீக்கிரமே உறங்கிவிட.. ஆனால் அவள் கொளுத்திவிட்டுச் சென்ற விஷயம் ஜெய்யை தூங்க விடாமல் செய்தது.

தன் மீது இரக்கம் கொண்டு  திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் எந்த காரணத்துக்காக மீனு தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள் என யோசித்து அவன் மூளை குழம்பி விடும் போல இருந்தது.

படுத்து உறங்கிக் கொண்டிருந்த மீனுவை பார்த்தான். ஏனோ அவள் முகத்தை பார்க்க வேண்டும் போல அவனுக்கு தோன்ற தன் வீல் சேரை இயக்கி கட்டிலை  சுற்றி வந்து அவளுக்கு முன்பு நின்றான்.

கண்கள் மூடி ஆழ்ந்த உறக்கத்தில்  இருந்தாலும் லேசான சிரிப்போடு அவள் முகம் இருந்தது.

அந்த முகமே அவள் சந்தோசமாக இருப்பதை காட்ட… “தூங்கும்போது கூட இப்படி சிரிச்சுக்கிட்டே தூங்குவாங்களா? அப்படி என்ன இவ சந்தோசமா இருக்கிறா தூக்கத்தில் கூட சிரிக்கிற அளவுக்கு” என யோசித்தபடி அவள் முகத்தையே பார்த்திருக்க அவள் சிரித்ததில் கன்னக்குழி லேசாக தெரிய அதை பார்த்ததும் ஜெய்க்கு அதை தொட வேண்டும் போல தோன்றியது.

மெல்ல குனிந்து தன் கையை அவள் முகத்தை நோக்கி நீட்டினான்.  அவள் கண்ணத்திற்கு அருகில் வரை தன் கையை கொண்டு சென்றவன், “இது சரியில்ல ஜெய் நீ தப்பு பண்ற” என அவன் உள்ளம் அவனுக்கு எச்சரிக்கை செய்தது. சட்டென்று தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டவன் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.

ஏற்கனவே நள்ளிரவில் கடந்து கொண்டு இருக்க அழைச்சலில் இருந்த ஜெயிக்கும் தூக்கம் வரவே தான் எங்கே படுப்பது என சுற்றிலும் பார்த்தான் அங்கே மீனுவின் அறையில் சோபா ஒன்று போடப்பட்டு இருந்தது. அது சாய்ந்து அமரும் சோபா போல அல்லாமல் சற்று வித்தியாசமாக சதுர வடிவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது. பார்ப்பதற்கு அது மினி பெட் போல இருக்க தான் அங்கேயே சென்று படித்துக் கொள்ளலாம் என தீர்மானித்தவன் அந்த சோபாவிற்கு அருகில் வந்தான்.

அந்த சோபாவிற்கு மிக அருகில் கொண்டு வந்து வீல் சேறை நிறுத்திவிட்டு முதலில் கீழே குனிந்து தன் கால்கள் இரண்டையும்   தூக்கி வீல்சேரில் இருந்து தரையில் வைத்தான். பிறகு வீழ்ச்சாரை பிடித்துக் கொண்டு மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக முன்னாள் நகர்ந்து வந்தவன் சோபாவில் ஒரு கையும் வீல் சாரில் ஒரு கையும் என ஊன்றி தன் உடலை மேலே தூக்க அப்போது சரியாக வீல் சேர் அவன் ஊன்றியதில் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தது. அவனால் அதை பேலன்ஸ் செய்ய முடியாமல் ஒரு கை வீழ்ச்சாரோடு அவன் உடலையும் சேர்த்து இழுத்துச் செல்ல போக.. 

தான் கீழே விழப் போகிறோம் என யோசித்தபடி என்ன செய்வது என்று தெரியாமல் ஜெய் தடுமாறினான்.

அதற்குள் அவன் கீழே விழாமல் வேகமாக வந்து அந்த சேரை நகர விடாமல் பிடித்துக் கொண்டாள் மீனு.

மீனு சேரை நகர்விடாமல் பிடித்துக் கொள்ளவும் ஜெய்  சோபாவில் இருந்து தன் கையை வீழ்ச்சாரில் வைத்து தன்னை முழுவதுமாக வீழ்ச்சாரில் பொருத்திக் கொண்டான்.

அவனுக்கு அப்போது தான் சற்று நிம்மதியாக இருந்தது. எங்கே கீழே விழுந்து மீனுவின் முன்பு அசிங்கமாகி விடுமோ என ஒரு பக்கம் தோன்றினாலும் அவளாகவே வந்து தன்னை கீழே விழாமல் பிடித்துக் கொண்டதே நினைத்தும் சற்று ஆறுதலாக இருந்தது.

“நீங்க தூங்கணும்னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானே நீங்க பெட்ல படுக்க ஹெல்ப் பண்ணியிருப்பேனே… அதை விட்டுட்டு இங்கே வந்து அந்த சோபாவுல படுக்க போய் இந்த நேரத்துக்கு கீழே விழுந்து இருக்க மாட்டீங்களா? ” என்றாள் மீனு. 

நீ வந்து ஹெல்ப் பண்ணி தான் நான் படுக்கணுமா என்றான் ஜெய்.

இந்த ரூம்ல உங்களுக்கு ஹெல்ப் பண்ண என்ன தவிர வேற யாருமே இல்லையே என்றால் மீனு.

அவளை முறைத்தபடி ஜெய் பார்த்துக் கொண்டு இருக்க.,. “என்ன முறைச்சது போதும் முதல்ல நல்லா உக்காருங்க நான் உங்களை பெட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என்றாள் .

“அதெல்லாம் எதுவும் வேண்டாம் நான் பாத்துக்குறேன் நீ போய் தூங்கு.. தேவையில்லாம உன்னோட தூக்கத்தையும் நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன் நினைக்கிறேன்” என்றான் ஜெய்.

“அதான் டிஸ்டர்ப் பண்ணிட்டீங்களே அப்புறம் என்ன?” என்றவள் அவன் வீழ்ச்சாரை தள்ளிக் கொண்டு போய் பெட்டின் அருகில் நிறுத்தினாள்.

“இங்கேயா!! வேண்டாம் நீ இங்கேயே படுத்துக்கோ நான் போய் அந்த சோபாவுல படுத்துகிறேன் என்று ஜெய் தன் வீல் சேரை திருப்பி போக..

“அட இது என்ன  வம்பா இருக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?  நான் யாரோ மாதிரி என்னை இங்க தூங்க சொல்லிட்டு..நீங்க அங்க போய் சோபாவுல படுத்தா நல்லா இருக்குமா? அதுவும் கல்யாணம் ஆன முதல் நாளே இப்படி நீங்க பண்ணினா எனக்கு அது கஷ்டமா இருக்குமா? இருக்காதா?.. அப்போ உங்களுக்கு என்ன பிடிக்கலையா? நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டது உங்களுக்கு விருப்பம் இல்லையா?”  என்றாள் மீனு சற்று வருத்தமான குரலில்.

அவள் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் ஜெய் அமைதியாக மீனுவின் முகத்தை பார்க்க… ஜெய் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்ததும் தன்னுடைய கேள்விக்கு அவனுடைய மௌனம் தான் சரியான பதில் என நினைத்துக் கொண்ட மீனு “அப்போ இவருக்கு உண்மையிலேயே நான் இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டது பிடிக்கல போல.. ஒருவேளை என் அக்காவை காதலிச்சிட்டு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு வருத்தத்தில் இருப்பாரோ இவர் மனசுல இன்னுமும் என் அக்கா தான் இருக்காளோ? ” என யோசனையில் மீனு ஜெய்யை பார்த்தாள்.

பிறகு அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நீங்க என் வீட்ல இருக்கீங்க உங்கள நான் நல்லபடியா கவனிச்சுக்கலைன்னா அது சரியா இருக்காது பேசாம வந்து பெட்டில் படுங்க என்றவள் அவன் சேரை அருகில் கொண்டு வந்து வைத்து நகராமல் இருக்க அதை லாக் செய்தவள் தன் கையை ஜெய் முன்பு நீட்ட… “என்ன இவ இப்படி இருக்கா நான் இவ கிட்ட முகம் கொடுத்து சரியா பேசலனாலும் விடாம என்னை பார்த்துக்குறதுலயே குறியா இருக்காளே” என  அவளை அதிசயம் போல பார்த்தவாறு தன் கையை தானாக அவள் முன்பு நீட்டினான்.

“ம்ம்ம்… குட் ” என்றவள் ஜெய் கையைப் பிடித்து தன் கழுத்தை சுற்றி தோளில் போட்டுக் கொண்டவள் அவன் இடையில் தன் ஒரு கையை கொடுத்து வீல்ச் சேரிலிருந்து எழுந்து கொள்ள… தன் முழு பலத்தையும் கொடுத்து மீனு  உதவி செய்ய.. அவளை சிரமப்படுத்தி விடக் கூடாது என்று அவசரமாக கட்டிலை பிடித்துக் கொண்டு எழுந்தவன் மீனுவின் உதவியோடு மெத்தையில் அமர்ந்தான்.

ஜெய் நன்றாக அமர்ந்து விட்டானா என்பதை உறுதி செய்தவள் வீல்சாரை மெத்தையிலிருந்து சிறிது தள்ளி வைத்துவிட்டு அவன் படுத்துக்கொள்ள உதவி செய்ய கீழே குனிந்து ஜெய்யின் காலைப் பிடிக்கப் போனாள் மீனு. 

“ஏய் என்ன பண்ற?” என ஜெய் பதட்டமாக கீழே குனிந்தவளின் கையை பிடிக்க..

அவளோ அவனை பார்த்தவள் மெல்ல சிரிக்க… அவள் புன்னகையை பார்த்தவன் அதன் பிறகும் எதுவும் பேசாமல். அமைதியானான்.

மீனு அவன் பாதங்கள் இரண்டையும் மென்மையாக பிடித்து கட்டிலில் தூக்கி வைத்தவள் அவனை பார்த்து கண்களாலேயே படுக்க சொல்லி சைகை செய்ய.. அவனும் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பை போல.. தலையணையில் தலை சாய்த்தான்.

அவனுக்கு மார்பு வரை போர்த்திவிட்டு “நல்லா. தூங்குங்க..” என்று அவன் காதோரம் சொன்னவள் பின் கட்டிலை சுற்றி வந்து அவன் அருகில் சற்றுத் தள்ளி படுத்துக்கொண்டாள்.

அவளையே கண்கொட்டாமல் தனக்கு முதுகு காட்டி படுத்து இருந்தவளை பார்த்தான். சிறிது நேரம் அவள் முதுகையே வெறித்துக்கொண்டு இருந்தவன் அவனையும் அறியாமல் உறங்கிப்போனான்.

இன்று தங்களுக்கு முதல் இரவு இருவரும் ஏதாவது மனம் விட்டு பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளலாம் என்ற எண்ணம் இருவரின் மனதிலும் துளியும் இல்லை போலும் இருவரும் நன்கு உறங்கி இருந்தனர்.

{“மம்ம்ஹும்… என்ன செய்ய.. இவங்க டிசைன் அப்படி போல…இல்லையா FRIENDS”}

காலையில் தன் அறையில் இருந்து எழுந்து வந்த பூஜா ” அம்மா காபி ” என்றபடியே ஹாலில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்து டிவியை போட்டவள் சோபாவில் அமர்ந்திருந்த தன் அப்பாவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு.. ” என்ன அப்பா இன்னைக்கு எங்கயும் போகலையா? காலையிலே ரிலாக்ஸ் ஆஹ் உக்காந்து டிவி பாத்துட்டு இருக்க… இந்த நேரம் உன் பொண்டாட்டி அதை வாங்கிட்டுவாங்க.. இதை வாங்கிட்டு வாங்கன்னு உன்னை கடைக்கு அனுப்பி இருப்பாளே… நானும்  எவ்ளோ தரம் சொல்லி இருக்கேன் நமக்கு என்ன காசுக்கு பஞ்சமா இதுக்கு எல்லாம் ஒரு நல்லா ஆளா பார்த்து வேளைக்கு வெச்சுக்கலாம்னு.. ஆனா நீதான் இதெல்லாம் நம்மளே செஞ்சு பழகணும்னு பழைய பஞ்சாங்கத்தை பிடிச்சிட்டு நிக்குற… ” என்றாள்.

“சரியா சொன்ன பூஜா நானும் உன் அப்பாகிட்டே எவ்ளோ முறை சொல்லி பார்த்துட்டேன். ஆனா அவர் கேக்குறதா இல்லையே… என்னவோ அவரே எல்லா வேலையும் செய்றவர் மாதிரி  பேசிட்டு இருப்பாரு … ஒரு நாள் கிட்சன்ல வந்து நின்னு நான் செய்ற வேலையில பாதி அவரை செய்து பார்க்க சொல்லணும். அப்போ தெரிரியும் நம்ம கஷ்டம் இவருக்கு ” என்று கிட்சனில் இருந்தவாரே பதில் சொன்னார் ஜனனி.

” பாத்தியா பா நான் கொஞ்சம் தான் ஸ்டார்ட் பண்ணினேன் ஆனா அம்மா மனசுல எவ்ளோ இருக்கு  பாரு.. அவங்க சொல்ற மாதிரி உன்னை ஒரு நாள் அடுப்படியில விட்டு வேலை வாங்கணும் அப்போதான் உனக்கு அம்மாவோட கஷ்டம் புரியும் ” என்றவள்.

” என்ன நானும் அம்மாவும் பேசிட்டு இருக்கோம் நீ எதுவும் பேசாம அமைதியா இருக்க.. ஏதாவது சொன்னா தானே நல்லா இருக்கும் ” என்று பூஜா எழுந்து தன் அப்பாவை பார்க்க… அதிர்ந்து போனவள் “அம்மா.. ” என்று அலறினாள். 

அவரும்  பூஜா அலறியதில் கிட்சனில் இருந்து வேகமாக எழுந்து வெளியே வந்தவர் ” என்ன டி… என்ன ஆச்சு ” என்றவாரே ஹாளுக்கு வந்தார்.

EPISODE 14

தன் அப்பாவின் மடியில் படுத்துக்கொண்டு தன் அம்மா சமையல் அறையில் தனி ஆளாக கஷ்டப்படுவதை எடுத்து சொல்லி குருவிடம் வேளைக்கு ஆள் சேர்க்க பூஜா சொல்லிக்கொண்டு இருக்க..

அவள் அம்மாவும் தன் நிலையை மகள் எடுத்து சொல்வதை கேட்டுவிட்டு தன் எண்ணங்களையும் அங்கே சொல்ல..

” என்ன ப்பா… நான் பேசிட்டே இருக்கேன் நீ அமைதியா எதுவும் பேசாம இருக்க… ” என்றவாரே அவர் மடியில் இருந்து எழுந்தவள் நிமிர்ந்து குருவை ….   பார்த்தவள் ” அம்மா!!” என்று கத்தினாள்.

“இப்போ எதுக்கு டி கத்துற…” என்றவாறே சமையல் கட்டில் இருந்து  குரல் கொடுத்தபடி  ஜனனி வெளியே வந்தவர்.

ஹாலில் சோபாவில் அவளுக்கு அருகில் மற்றொரு புரத்தில்  கையில் போனுடன் சந்தோஷ் சிரித்த முகமாக அமர்ந்து இருந்தான். அவனை பார்த்தவர் ” அடடே தம்பி எழுந்துட்டீங்களா? இருங்க காபி போட்டு எடுத்துட்டு வரேன் ” என்று சமயற்கட்டிற்குள் செல்ல திரும்பியவர் பூஜாவை பார்த்து ” ஏன் டி பூஜா இங்கே சந்தோஷ் மட்டும் தான் இருக்காரு. உன் அப்பா எங்கே?  நான் பேச ஆரம்பிச்சதும் தப்பிச்சா போதும்னு எழுந்து போய்ட்டாரா?’ என்றார்.

” நான் எதுக்கு உன்கிட்டே இருந்து தப்பிச்சு போகணும். அப்படி போறதா இருந்திருந்தா கல்யாணம் ஆன மறுநாளே  நான் ஓடி இருக்கனும் ” என்றவாரே கஜேந்திரனுடன் உள்ளே நுழைதார் குரு.

” ஏங்க நீங்க ரெண்டு பேரும் எப்போ எழுந்து வெளியே போனீங்க.. நான் உங்க ரெண்டு பேரையும் பாக்களையே… ” என்றார் ஜனனி ஒன்றும் புரியாமல்.

” இல்லை சம்மந்தி அம்மா எனக்கு புது இடங்குறதுனால சரியா தூக்கம் வரலை. சம்மந்தியும் நான் காலையில நேரமே முழிச்சிட்டு இருக்கறதை பார்த்துட்டு வாங்க அப்படியே காலாற போய்ட்டு வரலாம்னு கூப்பிட்டாரு. அதான் காலையில் நேரமே ரெண்டு பேரும் எழுந்து வெளியே கிளம்பிட்டோம். இப்போதான் நாங்க வரோம் ” என்றார்.

” அப்படியா அண்ணா… அப்போ பூஜா இவ்ளோ  நேரம் அவங்க அப்பா கூட பேசிட்டு இருந்தாலே?'”  என்று திரும்பி பூஜாவை பார்க்க…

அவளோ இன்னமும் தான் சந்தோஷ் மடியில் இவ்வளவு நேரம் படுத்து இருந்ததை நம்ப முடியாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருக்க… ” ஏய் பூஜா.. உன்னை தான் டி கூப்பிடுறேன் காது கேக்கலையா? இவ்வளவு நேரம் நீ உன் அப்பாகிட்டே தான பேசிட்டு இருந்த… ஆனா உன் அப்பா காலையில நேரமே வெளியே போய்ட்டதா அண்ணா சொல்லறாரு ” என்றார் ஜனனி.

தன்னை அதிர்ச்சி நிறைந்த பார்வை பார்த்துக்கொண்டு பூஜா இருக்க… ” என்ன பூஜா அதான் அம்மா கேக்குறாங்கல்ல.. இப்படி பெரியவங்க பேசுற அப்போ பதில் சொல்லாம அமைதியா இருக்குறது நல்லவா இருக்கு. முதல்ல பெரியவங்களுக்கு மரியாதையை கொடுக்க பழகிக்கோ.. ” என்று அவளை வெறுப்பெற்ற..

” நல்லா சொல்லுங்க தம்பி இவ எப்பவுமே இப்படித்தான் என்னை குழப்பிவிடுறதையே வேலையா வெச்சிருப்பா.. ” என்றவர். ” நான் கேக்குற கேள்விக்கு இவ பதில் சொல்ற மாதிரி தெரியலை. இருங்க உங்க எல்லாருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வரேன் ” என்றவர் கிட்சனிற்குள் சென்றுவிட்டார்.

கஜேந்திரன், குரு இருவரும் அவர் அவர் அறைக்கு சென்று குளிடித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு  சென்றுவிட..

அவர்கள் சென்றதும் சோபாவின் மறுமுனையில் இருந்து சர்… என்று பூஜாவின் அருகில் சறுகிக் கொண்டு வந்த சந்தோஷ் ” என்ன பூஜா எதுவும் பேசாம என்னையே அப்படியே வெச்ச கண்ணு வாங்காம  பாத்துட்டு இருக்க..நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் ” என்றான் சந்தோஷ்.

அவன் தனக்கு மிக அருகில் இருப்பதை பார்த்தவள் சோபாவில் இருந்து வேகமாக எழுந்தவள் ” நான் தான் என் அப்பான்னு நினைச்சு உன் மடியில வந்து படுத்தேனே.. நீ  சொல்லி இருருக்க வேண்டாமா என்கிட்டே நீ என் அப்பா இல்லைன்னு ” என்றான் பூஜா கோவமாக.

” இப்படி ஒரு சூப்பர் சான்ஸ் என்னை தேடி தானா என் மடியில் வந்து விழற அப்போ நான் எப்படி அதை கெடுப்பேன். அதான் கொஞ்ச நேரம் ஜாலியா இந்த மொமெண்டை என்ஜாய் பண்ணலாம்னு அமைதியா இருந்துட்டேன் ” என்று அவள் படுத்து இருந்த தன் தொடையை தடவிக் காட்டி ” ச்சே.. கொடுத்து வெச்சது ” என்றான் அவளை ஓரக் கண்ணால் பார்த்து.

” யூ… யூ… இடியட் நீ வேணும்னே என்கிட்டே சொல்லாம நான் உன் மடியில் படுத்ததை  என்ஜோய் பண்ணிட்டு இருந்து இருக்க.. ” என்று ஆத்திரதோடு அவன் கழுத்திற்கு அருகில்  தன் கைகள் இரண்டையும் கொண்டு வந்தாள்.

” ஆண்ட்டி எனக்கு காபி வேண்டாம் ‘ என்று சந்தோஷ் திடீர் என்று கத்தவும். எங்கே அவன் சத்தம் கேட்டு தன் அம்மா கிட்சனில் இருந்து வந்து விடுவாரோ என்று பூஜா பின்னால் நகர்ந்து கொள்ள…சரியாக காபி கப்களுடன் ஜனனி வெளியே வந்தவர் ” ஏன் சந்தோஷ் காபி வேணாம்னு சொல்றிங்க? காலையில காபி கொஞ்சமா குடிச்சா புத்துணர்ச்சியா இருக்கும்ல… ” என்றார்.

” இல்லை ஆன்டி ஆல்ரெடி நான் ரொம்ப புத்துணர்வா இருக்க மாறி பீல் பண்றேன். இப்போ காபி குடிச்ச அந்த பீல் போய்டும். அதனால எனக்கு காபி வேண்டாம் ஆன்டி ” என்று பூஜாவை ஓரக் கண்ணால் பார்த்து கூறினான்.

“ராஸ்கல் நான் அவன் மடியில படுத்து இருந்தது அவனுக்கு புத்துணர்வா இருந்துதுன்னு எப்படி சொல்றான் பாரு ” என்று நினைத்தவாரு பூஜா அவனை தன் மனதிற்குள் திட்டிக்கொண்டு இருக்க.. ” சரி தம்பி அப்போ குளிச்சிட்டு பிரெஷ் ஆகிட்டு வாங்க நான் உங்களுக்கு டிபன் எடுத்து வெக்குறேன் ” என்றவரர் பூஜைவிடம் திரும்பி ” பூஜா இந்த உன் அப்பாவுக்கும், 

சமந்திக்கும் காபியை கொடுத்துட்டு வா.. ” என்று காபி ட்ரேவை அவள் கையில் திணிக்க… அவளை பார்த்து ”  எப்படி ” என்பது போல தன் புருவத்தை உயர்த்தி கட்டிய சந்தோஷ் குளிக்க சென்றுவிட…

காபி ட்ரேயை எடுத்துக்கொண்டு தன் அம்மாவை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றவள் சுற்றிலும் யாரேனும் இருக்கிறார்களா? என்று பார்த்துவிட்டு ” ஏய் பூஜா நீ சரியான ஆளுதான் டி.. சோபாவுல உன் பக்கத்துல சந்தோஷ் உக்காந்து இருக்கான்னு தெரிஞ்சு வேணும்னே உன் அப்பா தான் அங்கே இருக்கா மாறி பேசிட்டு சீன் போட்டு அவன் மடியில் படுத்துட்டு, கடைசில அவனையே தப்பு பண்ணினவன் மாதிரி அவன்கிட்டயே சண்டைக்கு போற டி… பலே ஆள் தான் நீ ” என்று தன்னை தானே மனதிற்குள் மெச்சிக்கொண்டாள்.

பின் காபியை எடுத்துக்கொண்டு அங்கிருத்து சென்றாள்.

இங்கே இரவு லேட்டாக தூங்கியதில் மீனு சற்று லேட் ஆக கண் விழிக்க அவள் எதிரே குளித்து முடித்து வேறு உடை மாற்றிக்கொண்டு ஜெய் தன் வீல் சேரில் அமர்ந்து இருந்தான்.

சோகமான முகமும், முகம் முழுவதும் தாடியுடன் சற்று பருத்து இருந்த தேகத்தோடு  அமர்ந்து இருந்தவன் இத்தனைக்கும் பிறகும் அவன் பார்வை மட்டும் கம்பீரமாக கூர்மையாக அவளையே பார்த்துக்கொண்டு இருந்த ஜெய்யை பார்த்த மீனு “எழுந்துட்டீங்களா? என்னையும் எழுப்பி விட்டு இருக்கலாமே..” என்றவாறு  தன் கலைந்த கூந்தளை சரி செய்தவாறே எழுந்து  மெத்தையில் அமர்ந்தாள்.

ஆனால் அவனோ எதுவும் பேசாமல் மீனுவையே பார்த்து முறைத்துக்கொண்டு அமர்ந்து இருக்க.. ” என்ன நான் பேசுறேன் இவன் பத்தில் சொல்லாம என்னை இப்படி முறைச்சிட்டு இருக்கான் ” என்று நினைத்தபடி அவன் எதுவும் பேவானா? என்று ஜெய்யையே பார்த்தாள் மீனு.

” நீ யாரு? என்னை ஏன் நீயா முன் வந்து கல்யாணம் செய்துகிட்டே.. உன்னை பத்தி எனக்கு தெரிஞ்ச வகையில் எல்லாம் விசாரிச்சு பார்த்துட்டேன் என்னால உன்னை பத்தி தகவலை மட்டும் தேடி தெரிஞ்சுக்க முடிஞ்சுதே தவிர,, நீ எதுக்காக என்னை கல்யாணம் செய்துக்கிட்டேன்னு கண்டு பிடிக்க முடியலை ” என்றான் சற்று கோபமாக..

” ஓஹோ… இதுக்கு தான் இப்படி முகத்தை உருன்னு வெச்சிட்டு இருக்கானா? ” என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவள்.

” நைட் என்னவோ  நான் சொல்லலையின்னாலும் உங்களால் கண்டுபிடிக்க முடியும்னு வீம்பா சொன்னிங்க… எங்கே உங்க வீம்பு இப்போ நான் சொன்ன விஷயத்தை கண்டு பிடிக்க முடியலையின்னு கோபமா மாறிடுச்சா? ” என்றாள் சிரித்துக்கொண்டே.

தன்னை இப்படி காலை வாரும் மீனுவின் மீது ஜெய்க்கு கோபம் வரவில்லை இப்பொது. அதற்கு மாறாக அவள் சிரிக்கையில் அவள் கன்னத்தில் விழும் குழியை தன்னையும் மரந்து ரசித்துக்கொண்டு இருந்தான்.

ஜெய் எதுவும் பதில் கூறாமல் அமைதியாக அவளையே பார்த்துக்கொண்டு இருக்க… “என்ன இவனை கிண்டல் பண்ணி பேசினா எதுவும் சொல்லுவான்னு  பார்த்தா அமைதியா என்னையே பார்த்துட்டு இருக்கான். ஒரு வேலை என்னை எப்படி திட்டுறதுன்னு யோசிச்சிட்டு இருப்பானோ?” என்று யோசித்தவள் ஜெய் முகத்திற்கு முன்பு கையை ஆட்டினால்.

அதில் சுயம் பெற்றவன் வேண்டும்  என்றே கோபத்தை வரவழைத்துக்கொண்டு நான் கேட்டதுக்கு  பதில் சொல்ல போறியா? இல்லையா? ‘ என்றான்.

“ம்ம்ம்…”என்று தன் கன்னத்தில் கைவைத்து ஏதோ யோசித்தவலாக “நான் ஏன் உங்களை கல்யாணம் செய்துக்கிட்டேன்னு சொல்றேன். ஆனா நான் சொல்றதை நீங்க செய்யணும். அதாவது நான் என்ன எல்லாம் சொல்றேனோ அதை எல்லாம் மறுக்காம நீங்க செய்தா நான் உங்களை கல்யாணம் செய்துங்கிட்டதுகான காரணத்தை சொல்றேன் ” என்றாள்.

‘ என்ன நீ சொல்றதெல்லாம் நான் செய்யணுமா? ” என்று சொல்லி நக்கலாக சிரித்தவன்”இப்போ சொல்ல போறியா? இல்லையா?” என்றான் கடுப்பாக.

” கேட்க போறிங்களா? இல்லையா? அப்போ தான் நான் சொல்லுவேன் ” என்றாள்.

ஜெய் எதுவும் பேசாமல் அமைதியாக அவளையே பார்த்துக்கொண்டு இருக்க…”நீங்க என்ன செய்யணும்னு நான் சொல்லிடறேன். அது எப்போ நடக்குதோ அப்போ நானாகவே வந்து உங்களை திருமணம் செய்துக்கிட்டதுக்கான காரணத்தை சொல்றேன் ” என்றவள்.

அடுத்து அவன் எதும் கேட்பானா என்று ஆவலாக அவனையே பார்க்க… அவனோ அமைதியாக அந்த வீல் சேரை திருப்பிக்கொண்டு வாசல் கதவு நோக்கி சென்றான்.

‘ நீங்க ன்னா சொல்றதை கேட்காம போனாலும் நான் சொல்றதை செய்தா தான் நீங்க கேட்டதுக்கு 

 பதில் சொல்லுவேன். ” என்றவள் ” நீங்க இப்படி சோகமா முகத்தை வெச்சுட்டு தாடி விட்டுட்டு இருக்கறதை மாத்திக்கணும். உங்களை இப்படி பார்க்க நல்லாவே இல்லை. அப்பறோம் அந்த குடியூண்டு  தொப்பை இருக்கே அதை கொஞ்சம் குறைச்சுக்கணும் நீங்க ஹேண்ட்ஸமா  இருப்பிங்கனு தெரிரியும் ” என்றவள் அவன் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று ஆர்வமாக அவன் முன்பு வந்து வழி மறித்துக்கொண்டு நிற்க…

“நீ சொன்னதுக்கங்க நான் என்னை மதிக்கிட்டு உன் முன்னாடி வந்து நிக்கணுமா? அது கனவுலயும் நடக்காது? என்றவன்.”வழியை விடு எனக்கு எந்த காரணமும் தெரிஞ்சுக்க  வேண்டிய அவசியம் இல்லை என்றான்,

” சரி தெரிஞ்சுக்க வேண்டாம்னா விடுங்க…” என்றவள் “வேணும்னா நீங்க அந்த தாடியை எடுத்தாளாவது நான் நீங்க கேட்ட கேள்விக்கு க்ளூ தருவேன் ” என்று தன்னை தாண்டி சென்றவனை பார்க்க… அவள் அப்படி சொன்னதும் ஆர்வத்தில் வீல் சேர் இயக்குவதை நிறுத்திவிட்டு ” என்ன க்ளூ? ” என்றான்.

“ஐ… இப்படி கேட்டா உடனே சொல்லிருவேனா? நீங்க ஷேவ் பண்ணிட்டு வாங்க சொல்றேன் ” என்றாள்.

அதன் பின் அவன் அங்கிருந்து சென்றுவிட.. ” பார்ட்டியை சொன்ன பேச்சு கேக்க வெக்குறது கஷ்டம் போலையே… ம்ஹும்… என்று பெருமூச்சு விட்டவள் குளிக்க சென்றாள்.

இங்கே அறையை விட்டு வெளியே வந்த ஜெய் தன் தாடியை தடவியபடியே ஏதோ யோசனையில் மூழ்கினான்.

EPISODE 15

அனைவரும் காலை உணவை முடித்துக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்து இருந்தனர்.

மீனு கிட்சனில் இருந்து பால்கோவா செய்து சுட சுட பாதம், பிஸ்தா எல்லாம் போட்டு எடுத்து வந்து ஜெய் முன்பு நீட்டினாள் . 

அவன் அருகில் அமர்ந்து  இருந்த சூர்யா, சந்தோஷ் இருவரும் சுடச் சுட பால்கோவாவை பார்த்துவிட்டு ” என்ன அண்ணி பால்கோவாவை சுட சுட கொண்டு வந்து கொடுக்கிறீங்க. அதுவும் அண்ணாவுக்கு மட்டும் கொடுக்கிறீங்க. எங்களுக்கு இல்லையா? ” என்றான் சந்தோஷ்.

“உங்களுக்கெல்லாம் இல்லாமையா இவருக்கு பால்கோவா சுட சுட சாப்பிட பிடிக்குமே அதான் செய்து முடிச்சதும் முதல்ல அவருக்கு கொண்டு வந்தேன். நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ஆறினதும் உங்களுக்கு  எடுத்துட்டு வந்து தரேன் ” என்றாள்.

” வேணாம் வேணாம் எங்களுக்கும்  சூடாவே கொண்டு வந்து கொடுங்க நாங்களும் சாப்பிட்டு பாக்குறோம் சூடா பால்கோவா எப்படி இருக்கும்னு ” என்றான் சூர்யா.

” அம்மா மீனு என் மகனுக்கு சூடா பால்கோவா பிடிக்கும்னு  உனக்கு எப்படி தெரியும்” என்றார் கஜேந்திரன்.

மீனு அவரை பார்த்து சிரித்துவிட்டு ” மாமா இவருக்கு பால்கோவா சூடா சாப்பிட பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் ” என்றாள்.

“அப்படியா? உனக்கு எப்படி மா தெரியும்? உன்கிட்டே ஜெய்  அவனுக்கு பிடிச்சதை பத்தி  யாராவது சொன்னாங்களா? சந்தோஷ் எதுவும் சொன்னானா?” என்றார் கஜேந்திரன்.

” எனக்கு சந்தோசோ வேற யாருமே எதுவும் சொல்லல மாமா  ” என்றவள்  ஜெய்யை சிரித்தபடி பார்த்துவிட்டு திரும்பி கஜேந்திரனிடம் ” இவர் தான் இவருக்கு என்கிட்டே  சொன்னாரு ” என்றாள்  வெட்கப்பட்டுக்கொண்டே.

மீனு சொன்னதை கேட்டதும் ஜெய் அதிர்ச்சியாக அவளை திரும்பி பார்க்க… அவளோ ஜெய்யை பார்த்தும் பார்க்காதவள் போல திரும்பிக் கொண்டாள்.

மீனு சொன்னதை கேட்டு ஆச்சர்யமான கஜேந்திரன் ” நிஜமா தான் சொல்றியா? என் மகனே உன்கிட்டே இதை எல்லாம் சொன்னானா? ” என்றார் நம்பமுடியாமல்.

“ம்ம்.. ஆமா மாமா ” என்றாள் மீனு சிரித்த முகமாக. 

” நான் எப்போ, இவ கிட்டே சொன்னேன்.” என்று குழப்பமாக ஜெய் அவளையே பார்த்துக்கொண்டு இருக்க.,. “என்ன மா சொல்றே!! என்னால நம்பவே முடியலையே அவன் மனசுக்குள்ள என்ன இருக்கு, இல்லைன்னு அவ்ளோ சீக்கிரத்துல வாயை திறந்து யாருகிட்டயும் சொல்ல மாட்டானே? ஆனா எப்படி உன் கிட்டே ” என்று  புரியாமல் அவர் கேட்டார்.

” சத்தியமா அவரே என்கிட்டே சொன்னாரு மாமா, வேணும்னா நீங்களே அவர் கிட்டே கேட்டு பாருங்க ” என்று சொல்லி ஜெய்யை  பார்த்து புருவம் உயர்த்தி எப்படி? என்பதுபோல பார்த்தாள் .

” இவ என்ன இவ்ளோ கான்பிடென்டா எனக்கு தெரிரியும்னு சொல்றா ” என குழப்பமான மனநிலையுடன் மீனுவை பார்த்தான்.

“அப்பா நீங்க இருங்க நான் கேக்குறேன் ” என்று சந்தோஷ் குறுக்கே புகுந்து ” அண்ணா உனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு இத்தனை வருசமா உங்க கூட இருக்க எங்க யாருக்குமே தெரியாது. ஆனா உங்களுக்கும் அண்ணிக்கும் நேத்து தான் கல்யாணம் ஆச்சு அதுக்குள்ள எல்லாத்தையும் அதுவும்  ஒரே ராத்திரிரியில்  எல்லாமே  சொல்லிட்டீங்க.. என்னால இதை ஒத்துக்கவே முடியாது ” என்றான் சந்தோஷ்.

” ஏன் முடியாது, இல்லை ஏன் முடியாதுனு கேக்குறேன். நீங்க யாரும் இதுவரை என் மாமாவுக்கு பிடிச்சது என்னனு ஒரு வார்த்தை கூட கேட்டு இருக்கமாடீங்களா இருக்கும். என் அக்கா தான் எல்லாமே கேட்டு தெரிஞ்சிருக்கா. அது உங்களுக்கு பொறுக்கலையா? ” என்று பூஜா சந்தோசிடம் போறிந்து தள்ளினாள்.

அவள் எகிறிக்கொண்டு சந்தோசிடம் சண்டைக்கு செல்ல அதை பார்த்துதும் சூர்யா “டேய் ஜெய் என்ன டா கல்யாணம் ஆனதும் தான் ஆச்சு உனக்கு உன் பொண்டாட்டியோட சிஸ்டர் வரைக்கும் உனக்கு வக்காலத்து வாங்கிட்டு நிக்குறா ” என்றான் பூஜாவை  பார்த்து.

” ஐயோ எல்லாரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா.. நானே ஏற்கனவே குழம்பி போயிருக்கேன். நான் எனக்கு எது பிடிக்கும், பிடிக்காதுன்னு இவ.. என்றவன் பின் இவங்க கிட்டே சொல்லவே இல்லை. ” எனக்கு பால்கோவா சூடா சாப்பிட பிடிக்கும்னு என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும்  தவிர யாருக்கும் தெரிரியாது”என்றவன் மீனுவை பார்த்து சற்று கோபமாக ” நான் எப்போ இதெல்லாம் உன்கிட்டே சொன்னேன். ” என்றான்.

” உங்களுக்கு விளையாட நேரம் இல்லையா எப்போ சொன்னிங்கன்னு இப்படியா எல்லார் முன்னாடியும் கேட்பிங்க.. எனக்கு வெட்கமா இருக்கு.” என்று வெட்ப்பட்டுக் கொண்டே மீனு கிட்சனுக்குள்ளே ஓடிவிட..

அதை பார்த்த அனைவரும் நமட்டு சிரிப்பை உதிரித்துவிட்டு எதுவும் தெரியாதவர்கள் போல தங்கள் பார்வையை வேறுப்புறம் திருப்பிக்கொள்ள… கிட்சனில் இருந்து மீனு “ஏய் பூஜா இங்கே வா.. இந்த பால்கோவாவை எல்லாருக்கும் கொண்டு போய் கொடு.. அவரை முதல்ல நான் செய்துகொடுத்த பால்கோவாவை சாப்பிட சொல்லு சாப்பிட்டுட்டு எப்படி இருக்குனு சொல்ல  சொல்லு ” என்றாள்.

” டேய் ஜெய் உன் பொண்டாட்டி சொல்றது கேட்குதுள்ள முதல்ல சூடு  ஆறுறதுக்குள்ள பால்கோவாவை சாப்பிட்டு எப்படி இருக்குன்னு உன்போண்டாட்டிகிட்டே சொல்லு ” என்று சூர்யா சொல்ல.. ” ஆமா தம்பி என் பொண்ணு முதன் முதலா ஆசையா உங்களுக்காக சமைச்சிருக்கா நீங்க சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க அவ சந்தோசப்படுவா ” என்று குருவும் கூற.

 அப்பட்டமாக பொய் பேசிவிட்டு சென்ற மீனுவின் மேல் கோபமாக வந்தது ஜெயியிற்கு ஆனால் அனைவர் முன்பும் அதை காட்டி எல்லோரையும் சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவன் பேசாமல் தன் கையில் இருந்த சூடாக இருந்த பால்கோவாவை பார்த்தான்.

பார்ப்பதற்கே சாப்பிட தூண்டும் அளவு அதன் நறுமணம் அவன் நாசியை துளைக்க .. ஸ்பூனில் எடுத்து பால்கோவாவை ஒரு வாய் சாப்பிட்டான். பால்கோவா சூடாக வாய்க்குள் வைத்ததும் பாகாக கரைந்து அவன் மூளை, மனம் என அவனுக்குள் தூங்கி இருந்த சுவை அரும்புகளை தூண்டி விட்டு இருக்க… கண்கள் மூடி அதன்

ருசியை அனுபவித்தவன் அடுத்தடுத்து ஸ்பூனினல் எடுத்து சாப்பிட ஆரம்பித்து இருந்தான்.

அதற்குள் பூஜா அனைவர்க்கும் பாகோவாவை கொண்டு வந்து  கொடுத்திருக்க… ஜெய் சாப்பிடுவதை பார்த்துவிட்டு அனைவர்க்கும் மீனு செய்த பால்கோவாவை சுவைத்து பார்க்க ஆர்வத்தை தூண்ட.. வேகமாக தங்கள் பால்கோவாவை எடுத்து சாப்பிடவர்கள் அனைவரும்” ஆஹா,.. ஓஹோ.. ” என மீனுவை புகழ்ந்து தள்ள..

இங்கே இவ்வளவு நேரம் கண்களை மூடி பால்கோவாவை ரசித்து ருசித்து முழுவதுமாக காலி செய்த ஜெய் கண்களை  திறந்ததும் அவன் கண்கள் இரண்டும் கோபத்தில் கோவை பழம் போல சிவந்து இருக்க.. அதை  பார்த்த சூர்யா தன் அருகில் பூஜாவை சைட் அடித்துக்கொண்டே பால்கோவாவை சாப்பிட்டுக்கொண்டு இருந்த சந்தோஷை சுரண்டினான் சூர்யா.

“ம்ப்ச்  என்ன சூர்யா னா…” என்றான் சற்று எரிச்சலாக.

” ஏண்டா இப்போ எதுக்கு இப்படி எரிஞ்சு விழுற என் மேல… என்றவன் ” அங்கே பாரு உங்க அண்ணா ஒரு கிண்ணம் நிறைய இருந்த பால்கோவாவை முழுசும் சாப்பிட்டு முடிச்சிட்டு இப்போ கோபத்தோட இருக்கறதை ” என்றான் சூர்யா. 

ஜெய்யை பார்த்த சந்தோஷ் ” ஆமா ன்னா.. என்ன ஆச்சு இவருக்கு பால்கோவா நல்லதானே இருந்துச்சு அப்பறோம் ஏன் முகத்தை இவ்ளோ கோவமா வெச்சிருக்காரு ” என்றான் சந்தோஷ்.

” ஒருவேளை பால்கோவா ரொம்ப சூடா இருந்து அவன் வாயை சுட்டு இருக்குமோ? ‘  என்றான் சூர்யா.

அவர்கள் இருவரையும் தன் பார்வையை சூழல விட்டு முறைத்த ஜெய் கிட்சன் இருந்த  திசையை பார்க்க… மீனு உள்ளே இருந்தாப்டியே அவன் சாப்பிப்பிடும் அழகை இவ்வளவு நேரம் ரசித்துக்கொண்டு நின்று இருந்தவள் ஜெய்யை பார்க்க..” ரூமுக்கு வா உன்கிட்டே எனக்கு கொஞ்சம் பேச வேண்டி இருக்கும் ” என்றுவிட்டு வீல் சேரை இயக்கோடி தன் அறை நோக்கி சென்றான்.

அங்கிருந்த அனைவருக்கும் ஜெய் ஏன்  இப்படி கோபமாக இருக்கிறான் என்று யாருக்குமே புரியவில்லை. இந்த நிலைமையில் மீனு உள்ளே சென்றாள் அவன் மீனுவின் மனது புண்படும்படி எதுவும்  பேசிவிடுவான் என நினைத்த கஜேந்திரன் மீனுவை போகவேண்டாம் என்று தடுக்க… ” ஒன்னும் பிரச்சனை இல்லை மாமா இப்போ போகலையின்னா எப்படிடியும் அவரை நான் பார்த்து தானே ஆகணும் அப்போ என்ன செய்றது. இருங்க நான் போய் அவர் என்ன சொல்றருன்னு கேட்டுட்டு வரேன் ” என்றுவிட்டு தன் அறைக்கு  சென்றாள்.

” என்னடா உன் அண்ணன் இப்படி இருக்கான் பாவோம் மீனு அவன்கிட்டே மாட்டிக்கிட்டு  என்ன பாடு படப்போராளோ தெரியலேயே ” என்று சூர்யா மீனுவுக்காக வருத்தப்பட.. ” நீங்க அதை  பத்தி எல்லாம் கவலை படாதீங்க.. என் பொண்ணு எப்படி பட்டவங்களையும் அவளோட கள்ளம் இல்லாத சிரிப்பாலையே தன்னோட வழிக்கு கொண்டு வந்திருவா. மாப்பிள்ளையையும் அதே போல அவ சமாளிச்சு அவரை சமாதானம் செய்துடுவா பாருங்க ” என்று தன் மகள் பற்றி பெருமையாக ஜனனி கூற.. பூஜாவும், குருவும் அதற்கு ஆமா என்பது போல தலையாட்டிக்கொண்டு மீனு என்ன செய்யபோகிறாள் என்று பதை பதைப்போடு அவர்கள் அறையையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

EPISODE 16

சுடச்சுட ஜெய்க்கு பால்கோவா பிடிக்கும் என்று அவன் தான் தன்னிடம் சொன்னதாக மீனு கூற, ஆனால் ஜெய்யோ அவளிடம் தன்னைப் பற்றிய எந்த விபரங்களும் கூறாமல்  இவள் எப்படி இப்படி அப்பட்டமாக அனைவரிடமும் பொய் சொல்கிறாள் என அவள் மீது ஜெய்க்கு கோபமாக வந்தது.

அனைவரின் வற்புறுத்தலினால் வேண்டா வெறுப்பாக மீனு செய்து கொடுத்த பால்கோவாவை சாப்பிட ஆரம்பித்தவன் அதன் ருசிக்கு மயங்கி கண்கள் மூடி அவள் கொடுத்த பால்கோவா முழுவதுமாக சாப்பிட்டு முடித்தான்.

பால்கோவா சாப்பிட்ட பின்பும் கோபம் தனியாத ஜெய் கிச்சனிலிருந்து மீனுவை பார்த்து ” ரூமுக்கு வா உன்னிடம் பேச வேண்டி இருக்கு” என்று சொல்லிவிட்டு தன்வீல் சேரை இயக்கிய படி கீழே இருந்த மீனுவின் ரூமிற்கு சென்றான்.

மீனுவுக்கோ “பால்கோவா நல்லா தானே இருந்துச்சு.  கண்ணை மூடி ரசித்து ருசிச்சு சாப்பிட்ட அப்புறமும் ஏன் இன்னும் கோபம் குறையல இவர புரிஞ்சுக்கவே முடியலையே” என யோசித்தபடி கிச்சனிலிருந்து தன் ரூமிற்கு செல்ல ஹாலில் இருந்த அனைவரும் ஜெய்யின் கோபத்தை நினைத்து பயந்து போயினர். 

ஆனால் குருவோ தன் மகள் எப்பேர்பட்ட கோபக்காரனையும் சமாளித்து விடுவாள் என மீனுவிற்கு சப்போர்ட் செய்து பேசிக்கொண்டு இருந்தார்.

இங்கே ரூமுக்கு வந்த மீனு ஜெய்யை பார்க்க அவளுக்கு முதுகு காட்டியபடி தன் வீல்சேரில் ஜன்னல் வழியே வெளியே வெரித்தபடி அமர்ந்திருந்தான்.

“இப்படி சும்மா சும்மா கோபப்பட்டா இவன் கூட எப்படி நான் சந்தோஷமா வாழறது. சரியான சிடு மூஞ்சியா இருப்பான் போலவே” என நினைத்துக் கொண்டே அவன் பின்னால் வந்து நின்ற மீனு “ம்க்கும்..” என தன் குரலை கனைத்து அவனுக்கு தான் வந்திருந்ததை சொன்னாள்.

ஜெய் எதுவும் பேசாமல் அப்படியே இருக்க.. “ஏதோ பேசணும்னு வர சொல்லிட்டு இப்படி முதுக காமிச்சு உட்கார்ந்துட்டு இருந்தா என்ன அர்த்தம். என் மேல கோபமா இருந்தா திரும்பி ரெண்டு வார்த்தை திட்டிடுங்க இப்படி எதுவும் பேசாம அமைதியா இருந்தா நான் என்னன்னு நினைக்கிறது” என்றாள் மீனு.

அவள் பேசி முடிக்கவும் ஜெய் தன் வீல் சேரை திருப்பவும் சரியாக இருந்தது. அவனை பார்த்தவள் ” ம்ம்.. சொல்லுங்க.. ஏன் என்னை தனியா பார்க்கணும்ன்னு சொன்னிங்க.. ” என்று தன் சேலை தலைப்பை  கையில்  வைத்து திருகிக்கொண்டே வெட்கத்துடன் கேட்டாள்.

அதை பார்த்த ஜெய் தன் சேரை அவள் அருகில் கொண்டு வந்தவன் சட்டென்று  அவள் கையை பிடித்துக்கொண்டு ” இந்த பால்கோவாவை நீ எப்படி இவ்ளோ ருசியா செஞ்ச,  அதே போல என் அம்மா எப்படி எனக்கு செஞ்சு கொடுப்பாங்களோ அப்படியே நீ செய்த பால்கோவா இருந்துச்சு. அதை சாப்பிட சாப்பிட எனக்கு என்னோட அம்மாவே செஞ்சு கொடுத்த மாதிரி அவங்க கையாள சாப்பிட்ட உணர்வு வந்துச்சு ” என்று குரல் தலு தலுக்க ஜெய் மீனுவின் கையை பிடித்துக்கொண்டு கேட்டான்.

அவள் பார்த்த இந்த இரண்டு நாட்களில் ஜெய் யாரிடமும் தானாக பொய் பேசியது இல்லை. அவன் எப்போதும் கோபமாக, கம்பீரமாக யாரிடமும் நெருங்கி பழகத்தாவனாக அவள் பார்த்த வரை இருந்தான். ஆனால் இன்று இந்த பால்கோவாவிற்காக தன்னிடம் இறங்கி வந்து பேசுபவனை பார்த்து மீனுவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனை அப்படியே மீனு பார்த்துக்கொண்டு நின்று இருக்க… மேலும் அவள் அருகில் நெருங்கி வந்த ஜெய் ” மீனு ப்ளீஸ் உனக்கு யார் இந்த ரெசிபி செய்ய சொல்லி கொடுத்தாங்க. எனக்கு இந்த ஸ்வீட் பிடிக்கும் அதுவும் சூடா சாப்பிட பிடிக்கும்னு  உனக்கு  எப்படி தெரிரியும். நான் எவ்வளவோ யோசிச்சு பார்த்துட்டேன். நானா உன்கிட்டே இந்த ஸ்வீட் பிடிக்கும்னு சொல்லவே இல்லை. நான் தான் சொன்னேன்னு நீ ஏன்? எல்லார்கிட்டயும் பொய் சொன்ன ” என்றான்.

” இல்லையே நான் பொய் எதுவும் சொல்லலையே.. உண்மையைதான் சொன்னேன் ” என்றால் மீனு.

அவளை குழப்பமாக பார்த்த ஜெய் ” ஐயோ மீனு இப்படி எல்லார்கிட்டயும் விளையாடின மாதிரி என்கிட்டயும் விளையாடாத. தயவு செய்து உண்மையை சொல்லு மீனு ” என்று அவள்  கையை இருக்கமாக பிடித்துக்கொண்டு கேட்டான்.

” நீங்க எவ்ளோ கெஞ்சி கேட்டாலும் நான் சொன்னதையே தான் சொல்ல போறேன். சத்தியமா சொல்றேன் நீங்களே தான் இந்த ஸ்வீட்டை எப்படி செய்யணும்னு என்கிட்டே சொன்னிங்க. நான் பொய் சொல்லவே இல்லை. ” என்று தன் தலையில் அடித்து சத்தியம் செய்தால் மீனு.

” சரி நான் தான் உன்கிட்டே சொன்னேனே வெச்சுக்க.. எப்போ?எங்கே? சொன்னேன் ” என்றான் ஆர்வமாக அவள் முகத்தை பார்த்து.

” இப்போ என்ன உங்களுக்கு நீங்க இந்த ஸ்வீட் செய்ய எப்போ என்கிட்டே சொன்னிங்கன்னு தெரிஞ்சுக்கணும் அவ்ளோ   தானே ” என்றாள் மீனு.

ஆமாம் என்று ஜெய் ஆர்வமாக மீனு சொல்லப்போவதை கேட்க அவளையே பார்த்தான்.

 தன் கையை பிடித்துக்கொண்டு         இருந்த ஜெய் முன்பு மண்டி இட்டு அமர்ந்தவள் அவன் தாடியை தன் ஒற்றை விரலால் வருடிக் காட்டி “நான் சொன்னதை செஞ்சுட்டு வாங்க எப்போ? எங்கே? எனக்கு ஸ்வீட் செய்ய சொல்லிக் கொடுத்தீங்கன்னு நான் உங்க கிட்டே சொல்றேன் ” என்றாள்.

அவளை வியாப்பாக பார்த்த ஜெய் “என்னை கல்யாணம் செய்துகிட்ட காரணத்தை கேட்டதுக்கு இந்த தாடியை ஷேவ் செய்ய சொன்னே, இப்போ ஸ்வீட் செஞ்ச காரணத்தை கேட்டதுக்கும் தாடியை எடுக்க சொல்றே.. எனக்கு ஒன்னுமே புரியலை. என் தாடிமேல உனக்கு ஏன் இவ்ளோ கடுப்பு அது என் முகத்துல தானே இருக்கு உனக்கு என்ன பாரமாவா இருக்கு” என்றான்.

” அது உங்க முகத்துல இருந்தாலும் பாக்குறது என்னவோ நான் தானே நீங்களே யோசிச்சுப்பாருங்க யாராவது தன் சொந்த கல்யாணத்து அப்போ  தாடியோட.. தலை முடி கூட சரியா வெட்டாம சொகமா முகத்தை வெச்சிட்டு கல்யாணம் செய்துக்குவாங்களா? ” என்றாள்.

“நீ என்னை பார்க்காம தான் கல்யாணம் செய்துக்க ஓகே சொன்னேன்.. அப்போ நான் எப்படி இருந்தாலும்  பரவாயில்லைனு தானே நீ இருக்கனும். இப்போ மட்டும் என்ன?” என்றான்.

“கல் ஆனாலும் கணவன் புள் ஆனாலும் புருஷன்னு சொல்ற மாதிரி என் புருஷன் எப்படியிருந்தாலும் பரவாயில்லைன்னு போற ரகம் கிடையாது நான். என்னோட புருஷனை எனக்கு பிடிச்ச மாதிரி நான் மாத்திக்குவேன். மாறலையின்னா மாறன் வைப்பேன் ”  என்றாள் சற்று கர்வமாக.

மீனுவின் பேச்சிலேயே அவள் வழக்கமான பெண் இல்லை என்று அவனுக்கு புரிந்தது. அதற்காக இப்படியா?  தனக்கு ஒருவிஷயம் தெரிய வேண்டும் என்று அவளிடம் கேட்டாள். அவள் சொல்வதை செய்துவந்தால் தான் கேட்டது கிடைக்கும் என்று சொல்கிறாளே என்று அவளையே பார்த்தபடி தனக்கு கீழே மண்டி இட்டு அவன் முகத்தை கன்னக்குழி தெரிய சிரித்த முகமாக பார்த்துக்கொண்டு இருந்த மீனுவை பார்த்தான்.

” என்ன அப்படி பாக்குறீங்க.. உங்க கேள்விக்கு எல்லாம் பதில் தெரியனுமா? நான் சொன்னதை எப்போ செய்ரிங்களோ அப்போ தான் சொல்வேன். அதுவரை என்கிட்டே இருந்து  ஒரு சின்ன க்ளு கூட கிடையாது. ”  என்றவள் அங்கிருந்து எழுந்து செல்ல போக..

“இப்படியே நான் கேட்கும் கேள்விக்கு  எதையாவது சொல்லி  சமாளிக்குறாலே இவ வழிக்கு நாம போகக் கூடாது. நம்ம  வழிக்கு இவளை கொண்டு வரணும்” என்று அவனுக்குள் இத்தனை நாள் தூங்கிகொண்டு இருந்த ஆளுமை சிறிதாக  வெளியில் எட்டி பார்த்தது.

உடனே எழுந்து செல்ல போன மீனுவின் கையை சட்டென எட்டிப்பிடித்தவன் தன் பக்கம் அவளை இழுக்க போக… ஜெய் கைபிடித்து இழுத்தத்தை மீனு சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவன்  தொடுகை  அவளை அப்படியே   உறைய செய்ய.. அவள் அப்படியே நிற்க முயற்சிக்க ஆனால் ஜெய்யோ அவளை தன் புறம் இழுக்க நிற்க முடியாமல் தடுமாறி ஜெய்யின்  மடியில் போய் பொத்தென விழுந்தாள். இல்லை இல்லை அவன் மடியில் வாகாக அமர்ந்தாள்  என்று தான் சொல்ல வேண்டும்.

இதை இருவருமே எதிர்பார்க்கவே இல்லை. ஜெய்யின் கை அவள்   இடுப்பை சுற்றி வளைத்து பிடித்து இருக்க மீனுவோ  செய்வதரியாது ஜெய்யை திரும்பி அவன் கண்களை பார்க்க… இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதி இருவருக்குலும் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்திக்கொண்டு இருந்தது.

மீனு சுதாரித்துக்கொண்டு அவன் மடியில் இருந்து எழுந்திருக்க போக.. அவளை நகரவிடமால் பிடித்துக்கொண்டவன்.” இப்போ நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் நீ பதில் சொல்ல போறியா? இல்லையா? ” என்றான் அவள் இடையில் அழுத்தம் கூட்டிக்கொண்டே.

இதை சற்றும் எதிர்பாராதவள்  விக்தத்துப் போய் ஜெய்யை பார்க்க.. அவனோ எதுவுமே செய்யாதவன் போல அவளை பார்த்தான்.

“என்ன இது விடுங்க என்ன… நான் போகணும் ” என்று எழுந்திருக்க மீனு முயற்சிக்க.. எங்கே அவளால் போக முடிந்தால் தானே ஜெய் தான் இருக்கமாக பிடித்துக்கொண்டு இருக்கிறானே..

‘ நான் கேட்டதுக்கு பதில் அப்பறோம் உன்னை விடுறேன் ” என்று ஜெய்யும் அவள் இடையை விடாமல் பிடித்துக்கொள்ள..மீனுவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இருவரும் எதுவும் பேசாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது வெளியே ஹாலில் இருந்து “அக்கா… அக்கா… இங்கே வந்து பாரு ” என்று குரல் கொடுத்தபடி அவர்கள் அறையை நோக்கி பூஜா வர.. அவள் குரலை கேட்டதும் ஜெய்யின் கையை வேகமாக தன் இடையில் இருந்து விளக்கிவிட்டு அவன் மடியில் இருந்து எழுந்தவள் அவனை விட்டு  இரண்டு அடி தள்ளி நின்று தன் நாக்கை  வெளியே நீட்டி பலிப்பு காட்டியவள் “முடிஞ்சா வந்து பிடிங்க பார்க்கலாம்” என்று தன் அறையில் இருந்து சிரித்தமுகமாக வெளியே ஓட.. ஜெய்யும் சிரித்தபடியே “நான் வீல் சேரில் இருந்தா உன்னை துரத்திப் பிடிக்க முடியாதுன்னு நினைச்சுட்டியா? இப்போ பாரு ” என்றுவன் தன் வீல் சேரை வேகமாக மீனுவை துரத்துவதற்க்காக இயக்கினான்.

தன்னை துரத்தி வந்த ஜெய்யை திரும்பி பார்த்த படி ஹாளுக்கு ஓடி  வந்த மீனு தனக்கு  எதிரே வந்தவரை கவனிக்காமல் அவர் மீது மோதி விட்டான்.

மீனு தலையில் லேசாக அடித்துவிட “ஷ்..” என்று வலியில் தன் தலையை தேய்த்துவிட்டுக்கொண்டே தனக்கு எதிரே இருப்பவரை  பார்க்க அவள் எதிரே இருந்த நபரை பார்த்த  மீனு ஆச்சர்யமாக…

மீனுவின் அறையில் இருந்து வெளியே வந்த ஜெய் கீழே வர முடியாமல் படிகளின் விழும்பில் நின்று கீழே எட்டி பார்த்தவனுக்கு அங்கு நிற்பது யார் என்று தெரியவில்லை. 

EPISODE 17

பூஜா ஹாலில் இருந்து மீனுவை அழைக்க ஜெய் பார்த்து சிரித்தபடி ஹாளிற்கு வந்த பூஜா தெரியாமல் தனக்கு எதிரே இருந்த நபர் மீது மோதி விட “ஷ்…” தலையை தேய்த்துக் கொண்டே தனக்கு எதிரே இருந்தவளை பார்க்க மீனுவின் பின்னால் சிரித்து முகமாக வந்த ஜெய் படியின் விழும்பில் நின்று சற்று குனிந்து மீனுவுக்கு எதிரே நின்றவளை பார்த்து யார்? இந்த பெண் என்று யோசனையாக பார்த்தான்.

“ஹேய் என்ன டி மீன்ஸ்!! ஏன் என்ன பார்த்து இப்படி ஷாக் ஆகுற.,.”  என்று மீனு முன்பு சிரித்தபடி நின்று இருந்தாள் மிருதுளா.

மிருதுளாவை பார்த்த மீனு இன்னமும் பேய் அறைந்தவள் போல நிற்க… ஷிபான் சேலை கட்டிக்கொண்டு கழுத்தில் புது தாலி தலையில் மல்லிகைப்பூ என அல்ட்ரா மாடர்னாக வலம் வந்த மீனுவா இது என்று வாயை பிளந்துகொண்டு பார்த்துக்கொண்டு இருந்தாள் மிருதுளா.

“மிருதளா அக்கா என்ன என் அக்காவை அப்படி பாக்குறீங்க?  அவள நீங்க இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையா?  என்ன?  நீங்களும் அக்காவும் ஒண்ணா அமெரிக்காவுல ஒரு வருஷம் தங்கியிருந்தீங்களே ” என்று கேட்டபடி மிருதுளாவின் அருகில் வந்த பூஜா அவள் தோளைத் தொட்டு உழுக்க..

“அப்படி இல்ல பூஜா உன் அக்கா இப்படி டிரஸ் பண்ணி நான் பார்த்ததே இல்லயா… அதுவும் இல்லாம அவ கழுத்துல இந்த தாலி..” என மீனு கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த  திருமாங்கல்யத்தை தன் ஆள்காட்டி விரலால் தொட்டுக்காட்டி பூஜாவை கேட்க.

“உங்களுக்கு விஷயமே தெரியாதா? என் அக்காவுக்கு நேற்று காலைல தான் கல்யாணம் ஆச்சு” என்றாள் பூஜா.

“அப்படியா!! ஏண்டி என்கிட்ட உனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லவே இல்ல.  சொல்லியிருந்தா முன்னாடியே நான் பிளான் பண்ணி இந்தியா வந்திருப்பேனே.. ஆமா நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட மாப்பிள்ளை யாரு?  எப்படி இருப்பாரு ஆளு பாக்க ஹான்ஸம்மா இருப்பாரா?” என மிருதுளா  மீனுவை பார்த்து கண்ணடித்து கேட்க.

மீனு இன்னமும் எதுவும் பேசாமல் மிருதுளாவை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“அக்கா ஏன் எதுவுமே பேச மாட்டேங்குற மிருதுளா அக்கா உன்கிட்ட தானே பேசிகிட்டு இருக்காங்க.  நீ என்னவோ பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி அப்படியே அசையாம இருக்க என்ன ஆச்சு” என்று பூஜா மீனுவின் கையை பிடித்துக்கொண்டு கேட்டாள்.

இதுவரை சிலையாக நின்றிருந்த மீனு மிருதுளாவை பார்த்தவள் திரும்பி தன் பின்னால் வீல்ச்சாரில் சூர்யாவின் உதவியோடு வந்த ஜெய் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ஜெய்யை பார்த்தாள்.

மீனு ஜெய்யை திரும்பி பார்க்கவும் அவளைத் தாண்டி மீனுவின் பின்னால் வீல் சேரில் அமர்ந்திருந்த ஜெய்யை பார்த்த மிருதுளா ஆச்சரியமானவள் மீனுவை கையைப் பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பியவள் “ஹேய் மீன்ஸ் கடைசில நீ இவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டியா? என்னால நம்பவே முடியலடி!!” என ஆச்சரியமாக மிருதுளா பேச.

அவள் சொல்லி முடித்த அடுத்த நொடி மீனு மிருதுளாவின் வாயை பொத்தியவள் பல்லை கடித்துக்கொண்டே…”கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு சும்மா இரு. எதுவும் உளறி கொட்டி என்ன மாட்டி விட்டுவிடாதடி” என மிருதுளாவிற்கு கேட்கும்படி சொன்னவள்.

அவள் வாயில் இருந்து கையை எடுத்த மீனு ” மிரு…. நீ எப்படி ஊர்ல இருந்து வந்த என்கிட்ட சொல்லி இருந்தா நானே உன்னை பிக்கப் பண்ண ஏர்போர்ட் வந்து இருப்பேனே” என்றாள் சகஜமாக.

“ஆமாமா சொல்லி இருந்தா மட்டும் வந்து இருப்ப”  என்ற மிருதுளாவின் பார்வை முழுவதும் ஜெய் மீதுதான் இருந்தது.

ஜெய்க்கோ மீனுவுடைய ஃப்ரெண்ட் உள்ளே வந்து தன்னை பார்த்ததும் சொன்னதுதான்  திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருந்தது. “கடைசியில நீ இவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டியா? ஏன் இப்படி ஒரு கேள்வியை மீனுகிட்ட கேட்கணும்” என யோசித்துக் கொண்டிருந்த ஜெய் மிருதுளாவிடம் பேச போக… அதை கவனித்து விட்ட மீனு மிருதுளாவிடம் ஜெய் பேசி விடக்கூடாது என மிருதுளாவின் கையைப் பிடித்தவள் “ஏண்டி இங்கயே நின்னுட்டு இருக்க. வா நம்ம மேல போய் பேசலாம்” என மிருதுளாவின் கையை பிடித்து வேகமாக தன்னோடு இழுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்.

மீனு அவசர அவசரமாக மிருதுளாவை இழுத்துச் செல்வதை பார்த்த ஜெய்க்கு அவளை தடுக்க முடியவில்லை.  “ச்சே..அவ பிரண்டுகிட்ட  பேசுறதுக்குள்ள இழுத்துட்டு மேல ஓடிட்டாளே” என நினைத்தவன் மாடி ஏறி செல்லும் மீனுவை வீல் சேரை திருப்பிய படி பார்க்க.. 

ஜெய்யை பார்த்தபடியே தன் தோழி மிருதுளாவை இழுத்துக் கொண்டு மாடிக்கு ஓடிய மீனு ஜெய் அவளை பார்த்ததும் அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்து கண்ணடித்துவிட்டு ஓடிவிட்டாள்.

மீனு இப்படி செய்வாள் என்று ஜெய் எதிர்பார்க்கவே இல்லை. அவள் தன்னிடம் இருந்து ஏதோ மறைக்கிறாள் என்பது மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது. மிருதுளா மீனுவிடும்  சொன்ன விஷயத்தையும்,  தன்னிடம் மீனு மறைத்த விஷயத்தையும் முடிச்சு போட்டு பார்த்த ஜெய்க்கு ஒரு விஷயம் விளங்கியது போல தோன்ற அவன் முகம் பிரகாசமாக ஆனது.

அப்படி என்றால் மீனுவிற்கு தன்னை ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும் என அவன் புரிந்து கொண்டான்.

ஆனால் மீனு தன்னை எங்கே எப்போது சந்தித்தாள் என்று அவனுக்கு தெரியாதே அது மீனுவே சொன்னால் தானே தெரியும்.

இப்படி யோசனையோடு மாடிப்படி பார்த்தபடி ஜெய் அமர்ந்திருக்க அவன் அருகில் வந்த கஜேந்திரன். ஜெய் நானும் சந்தோஷும் நம்ம கன்ஸ்ட்ரக்சன் சைட் வரைக்கும் போயிட்டு அப்படியே நம்ம ஆபீசுக்கும் போயிட்டு வரோம் 

நான் சென்னைக்கு எப்போதாவது தானே வரேன். வந்தது வந்தாச்சு அந்த வேலையையும் முடிச்சிட்டு போகலாம்னு இருக்கேன் என்றார்.

சரிப்பா போயிட்டு வாங்க என்ற ஜெய் கஜேந்திரனை வழி அனுப்பி வைக்க அவருடன் சந்தோஷம் அவர்கள் ஆபீஸிற்கு சென்றான்.

குரு ஜெய் இடம் வந்து “மாப்பிள உங்களுக்கு எதுவும் வேணும்னா சொல்லுங்க. நான் ஜனனியையோ, பூஜாவையோ விட்டு எடுத்துட்டு வர சொல்றேன். மீனு அவ பிரெண்ட் கூட பேச போயிட்டா இப்போதைக்கு வரமாட்டா.  வேணும்னா நீங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்குறீங்களா நான் வேணா உங்களுக்கு ரூமுக்கு போக ஹெல்ப் பண்ணட்டுமா?  என்று குரு கேட்க..

“இல்ல மாமா பரவாயில்ல அவ பொறுமையா பேசிட்டு வரட்டும். நீங்க எதுவும் வேலை இருந்தா பாருங்க எனக்கு வெளியே கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு . நானும் சூர்யாவும் வெளியே போயிட்டு வந்துடறோம்” என்றான்.

“சரிங்க  மாப்ள அப்போ மதியம் லஞ்சுக்கு வந்துடுங்க.  ரொம்ப நேரம் வெளியே இருக்க வேண்டாம். புதுசா கல்யாணம் ஆனவங்க வெளியே ரொம்ப நேரம் இருக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனாலதான்…” என்று குரு தயக்கமாக ஜெய் இடம் கூற.

அவர் தயங்குவதை கவனித்தவன் மாமா நீங்க மீனு கிட்ட எவ்வளவு உரிமையா பேசி பழகுறீங்களோ அதே உரிமையுடன் என்கிட்டயும் பேசலாம், கேட்கலாம், பழகலாம்.  இப்படி தயங்கி தயங்கித் தான் என்கிட்ட பேசணும்னு எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கு என்ன திட்ற உரிமை கூட இருக்கு” என்று லேசாக  புன்னகைத்தபடி ஜெய் கூற.

ஜெய் மீனு கழுத்தில் தாலி கட்டியதிலிருந்து இப்போதுதான் குருவிடம் வாய்விட்டு பேசுகிறான் அதுவும் அவன் நல்ல விதமாக பேசுவதை பார்த்து குருவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.

ஜெய் சொன்னதை கேட்டு சந்தோஷமடைந்த குரு “சரிங்க மாப்பிள்ளை” என்றவர் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கார் சாவியை எடுத்தும் கொடுத்து “மாப்பிள்ளை நீங்க வந்த காரை அப்பா தான் வெளியே எடுத்து போயிட்டாரே. நீங்க வெளிய போக கார் வேண்டாமா? இது என்னோட கார் தான் நீங்களும் சூர்யாவும் வேணா இந்த கார்ல வெளியே போயிட்டு வந்துடுறீங்களா?” எனக் கேட்டார்.

அவ்வளவு நேரம் அந்த இடத்தில் தான் இருக்கிறோமா இல்லையா என்பது போல இருந்து சூர்யா சட்டென குருவிடம் அந்த கார் சாவியை வாங்கியவன் சரிங்க அங்கிள் நான்  ஜெயை கூட்டிட்டு வெளியே போயிட்டு வந்துடறேன் என்று விட்டு ஜெய்யின் வீல் சேரை தள்ளிக்கொண்டு வெளியே கிளம்பினான்.

இங்கே மிருதளாவை மாடிக்கு இழுத்து வந்த மீனு “ஏய் உனக்கு கொஞ்சமாவது அறிவுன்னு ஏதாவது இருக்கா? இல்லையா? இப்படித்தான் எல்லார் முன்னாடியும் வந்து நான் ஜெய்யை கல்யாணம் பண்ணிக்கிட்டது பத்தி சொல்லி காட்டுவியா?” என்றாள் சற்று கோபமாக கேட்டாள்.

“ஹேய் மீன்ஸ் மிஸ்டர் ஜெய் தான் உன்னோட ஹஸ்பண்ட்ன்னு தெரிஞ்சதும் நீ இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு தேடிக்கிட்டு இருந்தியே.  அதனால அவரை கண்டுபிடிச்சு அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நினைச்சு தான் நான் அப்படி கேட்டேன். ஏன்? அப்படி நான் கேட்டதுல என்ன தப்பு?”  என்றாள் மிருதுளா.

“ம்ம்ம்… நீ மட்டும் இப்போ பேசின விஷயத்தை கீழே சொல்லி இருந்த அப்புறம் அவ்வளவு தான். எல்லாரும் என்ன பாக்குற பார்வையும் கேட்கிற கேள்விக்கும் நான் என்ன சொல்லி சமாளிக்கிறது. ஏற்கனவே ஒருத்தர் என்ன கேள்வியா கேட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்காரு. இதுல மத்தவங்களும் சேரணுமா?” என்றாள் மீனு.

” ஏன் மீன்ஸ் அப்போ நீ இவரை தேடி கண்டு பிடிச்சி உண்மையை சொல்லி கல்யாணம் செய்துக்கலையா? அப்போ உங்க ரெண்டு பேரோட கல்யாணம் எப்படி நடந்துச்சு.உன் ஹஸ்பன்ட்டை நீ எப்படி கண்டுபிடிச்சே” என்று அடுகாட்டுக்காக மிருதுளா ஆர்வத்தில் சற்று சத்தமாக கேள்வி கேட்க.

” ஹே மிரு மெதுவா பேசுடி. நீ பேறது கீழே வரைக்கும் கேட்கும் போல இருக்கு.  நீ பேசுறது மட்டும் அவர் கேட்டா அப்புறம் அவ்வளவுதான். ஏற்கனவே என்ன பார்க்காமலே எப்படி நீ என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்னு கேட்டுட்டு இருக்காரு . இதுல நீ சொன்னது வேற கேட்டுட்டா அவ்வளவுதான் அவர் கிட்டே நான் வசமா மாட்டிக்குவேன்.” என்றாள்.

“ஏன் டி இப்போ அவருக்கு நீ தேடின விஷயம் தெரிஞ்சா என்ன தப்பு. எப்படியும் அவருக்கு நீ அவரை காதலிச்ச விஷயமும், அப்பறோம் நீ அவர்கூட ஒன்னா…” என்று மிருதுளா பேச வர.. அதற்க்குள் மீனு பாய்ந்து வந்து மிருதுளாவின் வாயை பொத்தியவள்.

 ” ஏய் நீ கொஞ்சம் பேசாம இரு டி. நீயே எல்லாத்தையும் ஒளறி கொட்டி என்னை அவர் கிட்டே மட்டும் இல்லை என் வீட்டில இருக்கவங்ககிட்டயும் வசமா மாட்டி விட்டிருவ போல இருக்கே.. ” என்றவள்.

சோபாவில் போட்டிருந்த மிருதுளாவின் ஹாண்ட்பேக்கை எடுத்து அவள் கையில் திணித்த மீனு ” நீ முதல்ல இங்கே இருந்து கிளம்பு. நீ இங்கே இருக்க ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு தான் ஆபத்து.” என்று மிருதுளாவை அவள் வீட்டிற்கு கிளம்ப சொல்லி வற்புறுத்திக்கொண்டே கீழே அழைத்து சென்றாள்.

EPISODE 18

மிருதுளாவை தன் வீட்டில் இருந்து கிளம்பச் சொல்லி மீனு மாடியில் இருந்து அவளை கீழே அழைத்து வர… ” ஹேய் மீன்ஸ் இப்ப எதுக்குடி என்னை துரத்துறதுலயே குறியா இருக்க. நான் என் வீட்டுக்கு போவேன்னு நீ நெனச்சிட்டு இருக்கியா?”  என கேட்டபடி படி இறங்கினாள் மிருதுளா.

“ஏன் போக மாட்ட… இல்ல ஏன் போக மாட்டேன்னு கேட்கிறேன்.  ஊர்ல இருந்து   உன் அம்மா அப்பாவ கூட பாக்காம நேரா என் வீட்டுக்கு வந்திருக்க. நீ வருவேன்னு அவங்க உன்னை எதிர்பார்த்துட்டு இருப்பாங்க இல்ல. முதல்ல நீ உன் வீட்டுக்கு கிளம்பு, நம்ம இன்னொரு நாள் சாவகாசமா பேசிக்கலாம்” என்று அவள் கை பிடித்து ஹாளுக்கு இழுத்து வந்தாள் மீனு.

ஹாலில் இருந்த ஜனனி “ஏய் மீனு இப்போ எதுக்கு மிருதுளாவை இவ்வளவு அவசரமா கீழ கூட்டிட்டு வர..” என்றார்.

“அம்மா இவ ஏர்போர்ட்ல இருந்து நேரா என்ன பாக்க இங்க வந்துட்டா. அங்கிள், ஆன்ட்டி  இவளை காணாம தேட மாட்டாங்களா? அதான் முதல்ல இவளை அவ வீட்டுக்கு கிளம்பச் சொன்னேன்” என்ற மீனு மிருதுளாவின் சூட்கேஸை எடுத்துக்கொண்டு வந்து அவள் கையில் கொடுத்து “இந்தா பப்பி நீ முதல்ல கிளம்பு” என்றாள்.

தன் கையில் கொண்டு வந்து சூட்கேசை திணித்த மீனுவை பார்த்த மிருதுளாவின் முகம் சுருங்கியது. அவள் சோகமாக மீனுவை பார்க்க… “இப்படி எல்லாம் முகத்தை வச்சிட்டு நின்னுட்டு இருந்தா நான் உன்ன இங்க இருக்க சொல்லுவேன்னு நினைச்சுட்டியா?  அதான் இல்ல முதல்ல கிளம்பு. நீ இருந்தா அவ்வளவுதான்” என்று மீனு மீண்டும் அவளை துரத்த முற்பட… 

இப்போது மிருதுளாவின் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.  தன் தோழியை காண ஆசை ஆசையாக ஏர்போர்ட்டில் இருந்து நேராக அவள் வீட்டிற்கு வந்திருக்க. ஆனால் அவளோ தன்னை விரட்டியடிக்காத குறையாக இங்கிருந்து கிளம்பச்  சொல்லுவதை பார்த்த மிருதுளாவின் மனம் உண்மையாகவே வருத்தப்பட்டது.

 “ ஏய் மீனு உனக்கு  அறிவு இருக்கா? இல்லையா? அவ  ஆசையா நம்ம பார்க்க நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா வந்தவளை ஒரு வாய் சாப்பிட கூட விடாம கிளம்பு கிளம்புனு அவளை துரத்திக்கிட்டே இருக்க. என்னடி பிரிண்ட் நீ?” என்று   ஜனனி மிருதுளாவிடம் வந்து “பப்பி அவ சொல்றது எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத. அவளுக்கு மர கலண்டுருச்சுன்னு நினைக்கிறேன்” என்றவர் “நீ வா உன் அம்மா நேத்து சாயங்காலமே எனக்கு போன் பண்ணிட்டாங்க. அவங்க வரவரைக்கும் நீ எங்கேயும் போக வேண்டாம் வந்து என் ரூம்ல தங்கிக்கோ இல்லன்னா பூஜா ரூம்ல கூட நீ இருந்துக்கோ₹ என்றார்.

ஜனனி பேசுவதை கவனித்த மீனு “என்னம்மா சொல்றீங்க ஆன்ட்டி உனக்கு போன் பண்ணாங்களா? எங்க போய் இருக்காங்க அவங்க இவள ஏன் நம்ம வீட்ல இருக்க சொல்லி இருக்காங்க” என்றாள் மீனு.

“அதுவா மிருதுளா திடீர்னு கிளம்பி இந்தியாவுக்கு வரேன்னு அவங்க அம்மா அப்பாவுக்கு போன் பண்ணி இருக்கா. ஆனா அவங்க பத்து நாள் ட்ரிப் ஏற்கனவே பிளான் பண்ணி இருக்கிறதுனால அதுக்கு ஏற்கனவே கிளம்பிட்டாங்க. மிருதுளாவ  அவங்க வரவரைக்கும் நம்ம வீட்டில் தங்க வைக்க சொல்லி என்கிட்ட போன் பண்ணி கேட்டாங்க நானும் சரின்னு சொல்லிட்டேன் அதனாலதான் பப்பி ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க வந்துட்டா நான் ஏற்கனவே  நம்ம வீட்டுக்கு வரச் சொல்லி அவளுக்கு போன் பண்ணி சொல்லி இருந்தேன்” என்றார் ஜனனி.

இதைக் கேட்டதும் மீனுவிற்கு தர்ம சங்கடமாக போய்விட்டது. தன் வீட்டில் தங்க வந்த தன் தோழியை இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக விரட்டி அடித்ததை நினைத்து தன்னையே நொந்து கொண்டாள்.

 மிருதுளா மீனுவின் மீது கோபமாக இருந்தவள் “ஆன்ட்டி எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல நான் என் அம்மா அப்பா வர வரைக்கும் என் வீட்டிலேயே போய் தங்கிக்கிறேன் பக்கத்து வீட்ல தான் கீ கொடுத்துட்டு போயிருக்காங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நான் இங்க யாருக்கும் தொந்தரவா இருக்க விரும்பல” என மீனுவை பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து செல்ல போக…

“ஏய் பப்பி அவ தான் சொல்றான்னு நீ என்ன இப்படி பேசிக்கிட்டு இருக்க அவ கிடைக்கிற நீ வா இது என்ன அவ வீடா அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நாளைக்கே அவ புருஷன் வீட்டுக்கு போயிடப் போறா. நீ  இங்கே எப்ப வேணா நம்ம வீட்டுக்கு வந்து இரு உன்னை யார் என்ன சொல்ல போறாங்க. அப்படி யாரோ சொன்னாங்கனா அவங்கள தான் முதலில் இந்த வீட்டை விட்டு துரத்தி விடுவேன்” என்று ஜனனி மீனுவை முறைத்துவிட்டு கையில் இருந்த சூட்கேஸை பிடுங்கி பூஜாவிடம் கொடுத்துட்டு போ என்று சொன்னார்.

“பப்பி அக்கா நீங்க வாங்க என் அக்கா பேசுறதெல்லாம் காதுலியே வாங்கிக்காதீங்க.  அவ ஒரு லூசு” என்று மீனுவை பார்த்து பலிப்புக் காட்டிய பூஜா.

 மிருதளாவின் கையைப் பிடித்து அவள் அறைக்கு இழுத்து செல்லப் போக… அவளுக்கு குறுக்கே வந்த மீனு “பப்பி சாரி டி எனக்கு உண்மையாவே நீ இங்க தங்க வந்திருக்கிற விஷயம் தெரியாது சாரி டி”  என்று மீண்டும் அவளிடம் மன்னிப்பு கேட்க. 

“எதுக்கு மேடம் நீங்க என்கிட்ட சாரி கேக்குறீங்க இது உங்க வீடு நீங்க இருக்க சொன்னா இருக்கேன் போக சொன்னா போறேன். நான் தான் என் பிரண்டு இங்கே ஒருத்தி இருக்கான்னு நினைப்புல வந்துட்டேன். ஆனா அவளுக்கு நான் இங்க இருக்கிறதே பிடிக்கல போல.  ஒரு 10 டேஸ் பொறுத்துக்கோங்க என் அம்மா அப்பா வந்ததும் நான் போயிடுறேன். உங்கள நான் அதுவரைக்கும்  டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்றாள் மிருதுளா .

“ஏ பப்பி என்னடி இப்படி எல்லாம் பேசுற. நீயும் நானும் அப்படியா பழகினோம். நான் உன்னை அப்படி எல்லாம் நினைக்கவே இல்ல நான் ஏதோ ஒரு அவசரத்துல உன்ன வீட்டுக்கு கிளம்ப  சொல்லிட்டேன். என்ன மன்னிச்சிடுடி ப்ளீஸ்” என்று அவள் கையைப்பிடித்து மீண்டும் சிறுபிள்ளை போல கெஞ்ச…

அவளிடம் மிருதுளா வெடுக்குனு முகத்தை திருப்பிக்கொண்டு  ” பூஜா வா நம்ம ரூமுக்கு போகலாம். நான் இங்கே இருந்தா அப்பறோம் உங்க அக்கா என்னை எதும் சொல்லிருவா ” என அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

” ஹே பப்பி, ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாத நான் ஏன் உன்னை கிளம்ப சொன்னேன்னு உனக்கே தெரியும்.  காரணம் தெரிஞ்சும் நீ என் மேல கோவிச்சுக்கிற பாத்தியா ப்ளீஸ் பப்பி… ” என கெஞ்சி கொண்டே மீனு மிருதுளாவின் பின்பு சென்றாள்.

ஜனனி மீனு  கெஞ்சி கொண்டே செல்வதை பார்த்து “உனக்கு நல்லா வேணும்டி… வீட்டுக்கு வந்த புள்ளைய கிளம்பச் சொல்லி விரட்டி விட்ட இல்ல” என்றவர் “பப்பி கொஞ்ச நேரத்துக்கு இவள இப்படியே அலைய விடு அப்பத்தான் அவளுக்கு புத்தி வரும்” என்று விட்டு கிச்சனுக்குள் சென்று விட்டார்.

“ம்மா… நீ கொஞ்ச நேரம் பேசாம இருக்க மாட்டியா ஏற்கனவே அவ என் மேல கோவமா இருக்கா நீ வேற அவளுக்கு எடுத்துக் கொடுக்கிறியா?” என்றவரே  மிருதுளாவின் பின்னால் சென்றாள்.

….

இங்கே சூர்யாவுடன் வீட்டிலிருந்து  கிளம்பிய ஜெய்  யோசனையில் அமர்ந்திருந்தான். நீண்ட நேரம் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலேயே சூர்யா காரை ஓட்டிக்கொண்டு இருக்க….” டேய் ஜெய் நாம இப்போ எங்க போறோம். நாம ரெண்டு பேரும் எங்க போரோன்னு நீயும் சொல்லல, நானும் எதுவும் கேட்டுக்கல. நாம இப்ப  எங்க போயிட்டு இருக்கோம்னு எனக்கு தெரியலையே” என்று கூற.

ஆனால் ஜெய்யிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே அவனை திரும்பிப் பார்த்தான். ஜெய் ஏதோ யோசனையில் அமர்ந்து இருக்க… அதை பார்த்த சூர்யா காரை ஓரமாக நிறுத்திவிட்டு ” டேய் உன்னத்  தான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். நீ என்ன சீரியஸா எதையோ யோசிச்சிட்டு இருக்க” என்று ஜெய் தோளில் கையை வைத்து அவனை அழைத்தான்.

EPISODE 19

மீனுவின் வீட்டிலிருந்து எங்கே கிளம்புகிறோம் என்று தெரியாமல் சூர்யா ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த ஜெய்யிடம் “ நாம இப்போ எங்க போறோம்” என்றான் 

“ஏண்டா சூர்யா மீனு கூட ஃப்ரெண்ட் ஒரு பொண்ணு வந்தாலே அவ பேரு கூட” என ஜெய் யோசிக்க..

“அந்தப் பொண்ணு பேரு தானே அவ பேரு மிருதுளா ரொம்ப அழகா இருக்குல்ல” என்றவன்.

“அவ பேர் அழகா இருக்க மாதிரியே அந்த பெண்ணும் ரொம்ப அழகா இருக்கா” என்று சூர்யா வேகமாக கூறினான்.

சூர்யா பேசியதை கேட்டு திரும்பி அவனை முறைத்த ஜெய் “பேர் மட்டும் தான் என்னன்னு கேட்டேன். அவ அழகா இருக்காளா? இல்லையாங்கிறதெல்லாம் எனக்கு தேவையில்லை” என்றான் இறுக்கமாக.

“அது உனக்கு வேணா தேவையில்லாமல் இருக்கலாம். ஆனா எனக்கு ரொம்ப முக்கியமான விஷயம் இல்லையா, நான் எவ்வளவு நாளா அழகான ஒரு பொண்ணு கிடைச்சா லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன்.  இத்தனை நாள் எனக்கு ஒரு பொண்ணு கூட செட் ஆகல ஆனா இன்னைக்கு பாத்தியா உன்னோட ஒய்ஃப்க்கு பிரண்டாவே எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு வந்துட்டா” என்று சூர்யா சொல்ல.

“ஓஹோ! அந்த பொண்ணு என்ன அவ்வளவு அழகாக இருக்கா?” என்றான் ஜெய்.

“இல்லையா பின்ன நீ அந்த பொண்ணு கவனிச்சியா? இல்லையா?” சூர்யா.

“ம்ம்… ம்ம்ம்…பார்த்தேன். என் மீனுவிட அந்த பொண்ணு ஒன்னும் நீ சொல்ற அளவுக்கு எல்லாம்  ரொம்ப அழகெல்லாம் கிடையாது” என்றான்.

“டேய் ஜெய் இப்போ நீ என்ன சொன்ன?”என ஆச்சரியமாக சூர்யா அவனை பார்க்க. 

” சரி அதை விடு முதல்ல எனக்கு ஒரு டவுட். அது நீ கிளியர் பண்ணு” என்று ஜெய் சூர்யாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மலுப்பினான்.

“என்ன டவுட் சொல்லு” என்றான் சூர்யா.

மீனுவோட பிரண்டு மீனுகிட்ட “கடைசியில நீ இவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டியா? அப்படின்னு ஒரு வார்த்தை சொன்னாலே நீ அதை கவனிச்சியா?” என்றான் ஜெய்..

” அப்படியா? அந்த பொண்ணு அப்படியே சொல்லுச்சு? ” என சூர்யா கேட்க.

“அப்போ நீ அந்த பொண்ணு பேசுனத கொஞ்சம் கூட காதுல வாங்காம அவளை சைட் அடிச்சிட்டு இருந்திருக்க அப்படித்தானே?” என்றான் ஜெய்.

“அப்படி இல்லடா முதல் முறையா எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு அழகா பார்த்ததும் சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. நீ வந்து வெளியே போலாம்னு கூப்பிட்ட அப்பதான் எனக்கு  எதோ வேற உலகத்துக்குள்ள இருந்து இங்கே வந்த மாதிரி இருந்துச்சு” என்றான்.

“இவன் கிட்ட போய் டவுட் கேட்டேன் பாரு” என்பது போல ஜெய் அவனைப் பார்க்க.

” சரி சரி விடு, நீ என்னவோ சொன்னியே. என்ன அது? “என்றான்.

“ஒன்னும் இல்ல நீ முதல்ல காரை ஸ்டார்ட் பண்ணு ” என்று கோபமாக கூறினான் ஜெய்.

“இப்ப எதுக்குடா தேவையில்லாம என் மேல கோவமா இருக்க நீங்க பேசுனத நான் கவனிக்கலன்னு  தானே சொன்னேன்.சரி இப்போ நாம எங்க போறோம் நீ எதுவும் சொல்லலையே?” என்றான்.

“நான் சென்னையில இருக்கப்போ வழக்கமா ஹேர் கட் பண்ண எங்க போவேனோ அங்க போ” என்றான் ஜெய்.

ஜெய் சொன்னதே கேட்டு ஆச்சரியமாக பார்த்தவன். “என்னடா சொல்ற!! ஹேர் கட் பண்ண போறியா? உண்மையாவா? என்ன திடீர்னு நான், அப்பா,சந்தோஷ் எல்லாம் எத்தனை முறை உன் கிட்ட ஹேர் கட் பண்ண சொன்னோம். ஏன் உன் கல்யாணத்துக்கு முந்தின நாள் கூட மணமேடைல இப்படியே தாடியும் முடியுபா போய் நிக்காதடா நல்லா இருக்காதுன்னு எவ்வளவோ சொன்னாரு அப்பா. அப்போ எல்லாம் ஹேர் கட் பண்ணாம இப்ப என்ன திடீர்னு “என கேட்டான் சூர்யா.  

“அப்போ தோணல இப்போ எனக்கு ஹேர் கட் பண்ணனும்னு தோணுச்சு. இப்ப நீ கிளம்ப போறியா? இல்ல நான் எதுவும் கேப் புக் பண்ணி அதுல போகட்டுமா? ” என்று கோபமாக கேட்க.

“ம்ம்க்கும்… ஆனா.. ஊனா இந்த கோபம் மட்டும் உனக்கு எங்க இருந்துதான் வருதுன்னு தெரியல. இந்த கோபம் நல்லதுக்கு இல்ல ஜெய். உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு ஞாபகம் வச்சுக்கோ நீ இப்படி கோபப்படுவதை பார்த்தால் அந்த பொண்ணு பயந்திறப்  போகுது” என்ற சூர்யா ஜெய் வழக்கமாக செல்லும் சலூனிற்கு காரை கிளப்பினான்.

மிருதுளா மீனுவிடம் கேட்ட கேள்வியையே ஜெய்  மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்க்க “கடைசியில் இவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டியா? அப்படின்னா என்ன அர்த்தம். அப்போ என்ன ஏற்கனவே இவங்க ரெண்டு பேருக்கும் தெரியுமா? எனக்கு எதுவுமே புரியலையே ” என்று குழப்பமாக இருந்தது ஜெய்க்கு.  

சேவ் செய்து வந்து விட்டால் தான் கேட்கும் கேள்விகளுக்கு மேலும் பதில் சொல்வதாக கூற முதலில் அதை செய்துவிட்டு போய் அவளிடம் தன்னைத் திருமணம் செய்து கொண்டதற்கான காரணத்தை கேட்க வேண்டும் என நினைத்தபடி சூர்யாவுடன் சென்றான்.

மீனுவின் கல்லூரியில் அவள் படிக்கும் டிபார்ட்மெண்டில் கிளாஸ் முடிந்து பிரேக் டைம் வந்தது. அதுவரை அமைதியாக இவ்வளவு நேரம் இருந்தவள் .  விக்ரமிடம் ” டேய் விக், மீனு காலேஜ் வந்து கிட்ட தட்ட 3 நாளைக்கு மேல ஆச்சுள்ள…? “என்றாள் மைதிலி.

“ஆமா திலி, நானும் நினைச்சேன் என்னை ஆச்சு அவளுக்கு ஏன் காலேஜ் வரலன்னு தெரிலையே?” என்றான்.

” காலேஜ் பஸ்ட் டே அன்னிக்கு அவளை பார்த்தது. ஆனா என்னவோ அவகூட ரொம்ப வருஷம் ATTATCH ஆன மாதிரி ஒரு பீலிங் என்னனு தெரியல ” என்றான்.

“உனக்கு அப்டி தோணுச்சா எனக்கும் தாண்டா… விக். மீனுவை பார்த்ததில் இருந்து அவ கூட ரொம்ப CLOSE ஆனா மாதிரி தோணிச்சு. அவளை பார்க்காத இந்த 3 நாள் ஏதோ ரொம்ப நாள் ஆன மாதிரி பீல் ஆகுது ” என்றால் மைதிலி சோகமாக.

“பேசாம அவளுக்கு போன் பண்ணி கேட்டுரலாமா? ஏன் காலேஜ் வரலன்னு ” என்றான் விக்ரம்.

“ம்க்கும்.. அதுக்கு அவ போன் NUMBER இருந்தா தானே… FIRST டே எப்படி NUMBER கேக்குறதுனு நான் விட்டுட்டேன். உன்கிட்டே இருக்கா மீனு NUMBER ” என்றாள் ஆர்வமாக.

” நீயே அவகிட்டே NUMBER கேட்க யோசிக்கும்போது நான் எப்படி டி வந்த முதல்  நாளே மீனு நம்பரை கேக்குறது. உனக்கு எதும் அறிவு இருக்கா? என்ன?” என்றான்.

” சரி.. சரி பேசாம ஆபீஸ் ரூம்ல மீனுவோட வீட்டு அட்ரஸ் கேட்டுட்டு அவளை நேராவே போய் பார்த்துட்டு வந்துரலாமா? ” என்றாள் மைதிலி.

” ஆபீஸ் ரூம்ல போய் நீ மீனு அட்ரஸ் கேட்டா உடனே உனக்கு ஏன்? எதுக்குன்னு கேட்காம கொடுத்திருவாங்க பாரு ” என்றான் விக்ரம்.

” அதை பத்தி எல்லாம் நீ ஏன் கவலை படுற… நான் மீனு அட்ரசை வாங்கிட்டு வரேன். நீ என்கூட மீனுவீட்டுக்கு வரியா? இல்லையா? அதை மட்டும் சொல்லு போதும் ” என்றாள்.

” ஓகே போலாம் ” என்றவன்.

”  மீனு வீட்டுக்கு போய்ட்டு உங்க வீட்டுக்கு போக லேட் ஆகுமே நீ உங்க வீட்ல இன்போர்ம் பண்ணிரு ” என்றான் விக்ரம் அவள் எல்லாம் அக்கறையாக.

” ம்ம்.. ம்ம்… நான் சொல்லிக்குறேன். நீயும் உன் வீட்ல சொல்லிட்டு வந்திரு. என்னை கூட லேட்டா போனா எங்க வீட்டுல எதுவும் கேட்க மாட்டாங்க. ஆனா உன் வீட்டுல தான் நீ என்னவோ இன்னிக்கு   சமைஞ்ச பொண்ணு மாதிரி காலேஜ் டைம் முடிச்ச அடுத்த செகண்ட் உன் அம்மா உனக்கு போன் பண்ண ஆம்பிச்சிருவாங்க ” என்று சொல்லி சிரித்தாள்.

அவளை முறைத்தவன் ” என் அம்மாவுக்கு என் மேல அவ்ளோ பாசம் அதான் அடிக்கடி போன் பண்ணி கேக்குறாங்க ” என்றான்.

” ம்ம்ஹும்  ஒரு நாளைக்கு நான் வீட்டுக்கு வரேன் உன் மேல அவ்ளோ பாசம் வெச்சிருக்க  உன் அம்மாவை நான் பார்க்கணும் ” என்றாள் மைதிலி.

“இன்னிக்கே நாள் நல்லா தான் இருக்கு  நீ என்கூட வரேன்னு மட்டும் சொல்லு போதும். நான் உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என்றான் ஒருவித எதிர்பார்போடு.

” என்ன? நாள் நல்லா இருக்கா? எதுக்கு ? ” என்றாள் புரியாமல்.

” அது.. அது… இல்லை மீனுவிட்டுக்கு போறோமே அப்டியே  என்  வீட்டுக்கும் போகலாம்னு சொன்னேன். நேரமே போய்ட்டு வரலாம்னு சொன்னேன். நான் எங்கே நாள் நல்லா இருக்குனு சொன்னேன். உனக்கு காதுல தப்பா விந்திருக்கும் ” என்றவன். ” அப்பாடா… நல்ல வேலை எதுவும் சொல்லி அவ கிட்டே மாட்டி இருப்பேன் இன்னேரம் ‘ என்று நினைத்துக் கொண்டவன் அங்கிருந்து எழுந்து வெளியே செல்ல…

அவனை  புரியாமல் பார்த்தவள் ” எனக்கு நாள் நல்லா இருக்குன்னு தானே கேட்டுச்சு. இவன் என்ன வேற என்னவோ சொல்லிட்டு போறான். இவன் பேசுறது மட்டும் எனக்கு எப்படி தப்பு தப்பா காதுல விழும் . அதுவும் அடிக்கடி ” என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.

EPISODE 20

காலையிலிருந்து  மிருதுளாவிடம் பேசி அவளை ஒரு வழியாக மீனு சமாதானம் செய்திருந்தாள்.

பூஜா மீனுக்கு திருமணமான விஷயத்தை நிவியிடம் சொல்லிவிட்டு வருவதாக அவர் வீட்டுக்கு சென்று விட மிருதுளா மீனு இருவரும் பூஜாவின் ரூமில் இருந்தனர்..

வெளியில் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வந்த மிருதுளா பூஜாவின் அறைக் கதவை சாற்றி விட்டு மீனுவிடம் வந்தவள்.

“இப்போ சொல்லு நீ எப்படி  உன்னோட பீம் பாய தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணின… நான் உன் கூட அவர பார்த்ததும் ரொம்ப ஷாக் ஆயிட்டேன். ஆமா அவரோட காலுக்கு என்ன ஆச்சு? ஏன் அவர்  வீல் சேரில் இருக்காரு” என கேட்டாள்.

“அவருக்கு அமெரிக்காவுல இருக்கிறப்போ ஏதோ ஒரு ஆக்சிடென்ட்ல கால் உடைஞ்சு போயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். ஆனா சரியா தெரியாது அதனால தான் அவர் வீல் சேர்ல இருக்காரு” என்றாள் மீனு.

“சரி டி சொல்லு.. உனக்கும் அவருக்கும் எப்படி கல்யாணம் ஆச்சு அதை முதல்ல சொல்லு எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு. என்னால நம்பவே முடியல அமெரிக்காவில் பார்த்து சந்தித்த ஒருத்தர எப்படி தேடிப்பிடித்து இந்தியாவில் கல்யாணம் பண்ணின. இது ஏதோ படத்துல வர்ற கதை மாதிரி இல்ல இருக்கு” என்று சொல்லி சிரித்தாள்.

“உனக்கே தெரியும் நான் அவரை எவ்வளவு நாளா தேடிட்டு இருக்கேன். கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு நான் அவரை தேடுறது கைவிட்டு. என்னோட பெரியப்பா பொண்ணு ரியா இருக்காளே அவள உனக்கு தெரியும் தானே அவகூட அமெரிக்காவில் தான் காலேஜ்ல படிச்சிட்டு இருந்தா.   நான் அங்கே வந்து கூட ரியாவ யதெச்சையா அவளை மீட் பண்ணப்போ உனக்கு நான் அவளை இன்ட்ரொடியூஸ் பண்ணி வச்சேன் ஞாபகம் இருக்கா?” என்றால் மீனு. 

சிறிது நேரம் யோசித்த மிருதுளா “ஓ அவளா!! என்னவோ அமெரிக்காவிலயே அவ தான் பணக்காரி மாதிரி ஓவரா சீன் போட்டு இருந்தாளே . அவளை எப்படி நான் மறப்பேன்.”என்றாள்.

அவளே தான் அவளுக்கும் ஜெய்யிக்கும் தான் கல்யாணம் முதல்ல பிக்ஸ் ஆகி இருந்தது.அவ கல்யாணம் மண்டபத்துல வச்சு  இவரோட ஊனத்த காரணமாக சொல்லி கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு மண்டபத்தை விட்டு ஓடி போயிட்டா. அப்போ மண்டபத்துல ஒரே பரபரப்பா இருந்தது. ” என்றாள்

” என்ன மீன்ஸ் சொல்ற நீ தேடிட்டு இருந்தவரை ரியா கல்யாணம் பண்ணிக்க இருந்தாளா? என்னால இதை நம்பவே முடியலையே” என்றாள் மிருதுளா.

“ஆமாம் பப்பி, ஆக்சுவலா இவதான் ஜெய்யை கல்யாணம் பண்ணிக்க வற்புறுத்தி ஆறு மாசத்துக்கு முன்னாடி அவங்க ரெண்டு பேருக்கும் என்கேஜ்மென்ட் எல்லாம் முடிஞ்சு மேரேஜ்க்கு டேட்டும் பிக்ஸ் பண்ணி இருக்காங்க.  இதுக்கு இடையில   ஆக்சிடென்ட் நடந்து இவரோட கால் ரெண்டும் பிராக்சர் ஆயிடுச்சு. அதனால தான் அவ இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொன்னா” என்றாள்.

“அப்புறம் என்னடி ஆச்சு நீ எப்படி அவர கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்றாள் மிருதுளா 

” சொல்றேன் கேளு .என் அப்பாவோட ஆளுங்க மண்டபத்துக்கு விட்டு ஓடிப்போன ரியாவ கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துட்டாங்க. ஆனா வந்தவ இவரை கல்யாணமே செய்துக்க மாட்டேன்னு பிடிவாதமா நின்னா.  இவ்வளவு நடந்த பிறகும் இவளை கல்யாணம் பண்ணிக்க போறவர் ஏன் அவரோட ரூமை விட்டு வெளியே வரவே மாட்டேங்கிறாருன்னு அவர் என்ன பண்றாருன்னு பார்க்கலாம்னு நான் எதார்த்தமா  மாப்பிள்ளை ரூம போய் எட்டிப் பார்த்தேன் ” என்றாள்.

“ம் அப்பறோம் ” என்று கதை கேட்பவள் போல மீனுவை பார்த்து திரும்பி அமர்ந்து கொண்ட விதத்துல “சொல்லுடி என்ன ஆச்சு?”” என்றாள்.

“அங்க போய் பார்த்து அப்போ தான் வீல் சேரில் வெளியே நடக்கிறது எல்லாம் கேட்டுட்டு தலைய தொங்கு போட்டு சோகமா உட்கார்ந்து இருந்தாரு ஜெய் . முதல்ல அவரோட முகம் எனக்கு சரியாவே தெரியல வெளியே நடக்கிறது எல்லாம் பார்த்துட்டு அவரோட ஃப்ரெண்ட் சூர்யாவும் தம்பி சந்தோஷம் அவரை சமாதானம் படுத்த ஏதேதோ சொல்லிட்டு இருந்தாங்க.”

“ஒரு கட்டத்துக்கு மேல அவரால பொறுமையா அங்கே இருக்க முடியல வெளியில ரியா வேற ரொம்ப அதிகமா பேசிட்டு இருந்தா. அவ பேசறது பத்தாதுன்னு அவ அம்மாவும் சேர்ந்து மண்டபத்திலேயே வச்சு அவரோட ஊனத்தை சொல்லி நிறைய பேசினாங்க. இவரு சந்தோஷ்கிட்ட இதுக்கு மேலயும் நான் ரியாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னை மாதிரி ஒரு முட்டாள் இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க    அதனால நானே போய் எனக்கு ரியாவுக்கும் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லப்போறேன்னு வீல்ச்சார தள்ளிகிட்டு ரூம் விட்டு வெளியே வந்தார்.”

“அப்போ தான் அவரோட முகத்தை நான் சரியாவே பார்த்தேன். முதல்ல அவர பார்த்ததும் பெரிய ஷாக் எனக்கு.   கிட்டத்தட்ட ஒரு வருஷமா தேடிட்டு இருந்தவரு இன்னிக்கி என் அக்காவை கல்யாணம் பண்ணிக்க இருந்ததை நினைச்சப்போ எனக்கு இதயமே வெடிச்சிடும் போல ஆயிடுச்சு. நல்ல வேலை இவரை வேண்டாம்னு ரியா சொன்னது ஒருவகையில் எனக்கு சாதகமா போயிடுச்சு.  இவர் ரூம விட்டு வெளியே வரதுக்கு முன்னாடி வேகமா நான் அவங்க எல்லாரும் முன்னாடியும் போயி எனக்கு இவரை கல்யாணம் பண்ணிக்க சம்பந்தம்னு சொல்லிட்டேன்.” என்றாள்.

“என்னடி சொன்ன அத்தனை பேரும் முன்னாடியும் நீயாவே போய் இவர கல்யாணம் பண்ணிக்க சம்மதித்துவிட்டாயா? எப்படி திடீர்னு உனக்கு அது தோணுச்சு என்றால் மிருதுளா.

“நான் எதுக்காக அவரை தேடிக்கிட்டு இருந்தேன்னு உனக்கு நல்லா தெரியும். அப்படி இருக்கிறப்போ அவரை நான் ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததும் முதல்ல சந்தோஷப்பட்டேன். ஆனால் அவர் கால் உடைந்து வீல்ச்சார்ல சோகமா உக்காந்துட்டு இருக்கிறத என்னால பார்க்கவே முடியலடி. . இப்படி கால் உடைந்து போன ஒரே காரணத்துக்காக முடங்கி போயி உட்காந்துட்டார்னு நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்படி இருக்கிறவரை மேலும் கஷ்டப்படுற மாதிரி இந்த ரியா வேற மண்டபம் வரைக்கும் அவரை கூட்டிட்டு வந்துட்டு கல்யாணத்த வேண்டாம் என்று சொல்லிட்டா இவரை அப்படியே விட எனக்கு மனசு வரல அதனாலதான் ஆனது ஆச்சுன்னு தைரியத்தை வர படிச்சிட்டு என் அப்பா கிட்ட வந்து அவரை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன் முதல்ல அப்பா தயங்கினாலும் பிறகு நான் அந்த முடிவில் உறுதியா இருந்ததுனால அவரையே எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதித்து விட்டார்” என்று சொன்னால் மீனு.

“ஏய் மீனு நீ பளே ஆளு தாண்டி.. எப்படியோ நெனச்ச மாதிரியே அவரை கல்யாணம் பண்ணிக்கிட்ட. அந்த வகையில் எனக்கும் சந்தோஷம் தான். என்னடா உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சுன்னு நீ என்ன செய்யப் போறேன்னு உன்ன பத்தி நான் கவலைப்படாத நாளே இல்லடி.. ஆனா உன்னோட ஹஸ்பண்ட் தான் ஜெயின்னு தெரிஞ்ச பிறகு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி மிருதுளா  மீனுவை கட்டிக் கொண்டால்.

மீனுவும் தன் தோழியை கட்டிக்கொண்டு அவள் முதுகில் தட்டிக் கொடுத்தவள்” நீ கவலைப்படாதடி அப்படியே இன்னைக்கு நான் அவரை பார்க்காமல் இருந்திருந்தால் நானும் என்னைக்காவது ஒரு நாள் அவரை கண்டிப்பா மீட் பண்ணி அவரையே நிச்சயம் கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன்” என்றாள் மீனு

” எனக்கு ஒரு டவுட்” என்றாள் மிருதுளா.

” என்னடி? ” என மீனு கேட்க.

” ஒரு வேளை ரியாவே உன் ஹஸ்பண்டை கல்யாணம் பண்ண சம்மதிச்சு இருந்தா. நீ மணமேடையில அவங்க ரெண்டு பேரையும் பார்த்து இருந்தா என்ன டி பண்ணி இருப்ப” என்றாள் மிருதுளா.

“சிம்பிள்  ஏதாவது பொய் சொல்லி ஜெய் மேல பழியை போட்டு அவரையே என்ன கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி நான் நாடகம் ஆடியாவது அவரை கல்யாணம் பண்ணி இருப்பேனே ஒழிய கண்டிப்பா ரியா கழுத்துல தாலி கட்ட விட  மாட்டேன்” என்றாள்  மீனு.

மீனு சொன்னதைக் கேட்டு சிரித்த மிருதுளா  “நீ செய்கிற ஆள் தாண்டி” என்று சொல்லி மீனுவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளினாள்.

“சரி சரி நம்ம பேசினது நமக்குள்ளேயே இருக்கட்டும் நீ பாட்டுக்கு வெளியே வந்து என் அம்மா அப்பா கிட்ட பேசும் போது எதையாவது உளறி வச்சு என்ன மாட்டி விட்டுடாத டி ” என்றால் மீனு எச்சரிக்கையாக.

“என்ன மீன்ஸ் என்ன பார்த்து இப்படி கேட்டுட்ட நீ அமெரிக்காவில் உன் ஹஸ்பண்டை மீட் பண்ண விஷயத்தையும் அங்கே உனக்கும் அவருக்கும் நடந்த விஷயத்தையும் இதுவரைக்கும் நான் யார்கிட்டயாவது மூச்சு விட்டிருப்பேனா? அதே மாதிரி இதையும் ரகசியமா வச்சிக்கிறேன். நான் யார்கிட்டயும் எதையும் உளர மாட்டேன் போதுமா,” என்றால் மிருதுளா.

“நீ தாண்டி ஏன் பெஸ்ட்டெஸ்ட் பிரண்டு” என்று அவளை கட்டிக்கொண்டாள் மீனு.

“ஆமா இந்த பெஸ்ட் பிரண்டு தான் காலையில வந்ததும் என்னை வீட்டை விட்டு போ போனு துரத்துனியாக்கும்” என்று செல்லமாக கோபித்துக் கொண்டால் மிருதுளா.

“ஏய் சாரி டி நான் தான்  ஏன் இப்படி பண்ணினேன் உன்கிட்ட காரணத்த சொல்லி மன்னிப்பு கேட்டுட்டேனே. மறுபடியும் நீ அதையே என்கிட்ட சொல்லி காட்ற பாத்தியா?” என மீனு செல்லமாகச் சினுங்க.

“சரி ஓகே ஓகே நான் இனிமேல் அத பத்தி பேச மாட்டேன். ஓகே வா “என்றவள் 

“ஏய் மீனு ரொம்ப பசிக்குது டி ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வாயேன்” என்று தன் வயிற்றை தடவி காட்டினால் மிருதுளா.

” அச்சோ வந்ததிலிருந்து என் பப்பிக்கு நான் எதுவுமே கொடுக்கலையா. சரிவா நம்ம ரெண்டு பேரும் போய் சாப்பிடலாம்” என இருவரும் அங்கிருந்து கிளம்ப போக.

அதுவரை பூஜாவின் அறைக்கு வெளியே வீல்சேரில் அமர்ந்திருந்த ஜெய்யும், அவனை தள்ளிக் கொண்டு வந்த சூர்யாவும் அவர்கள் இருவரும் வெளியே வருகிறார்கள் என்று தெரியவும் சூர்யா அவசர அவசரமாக ஜெய்யின் வீழ்ச்சாரை தள்ளிக்கொண்டு அவர்கள் பார்ப்பதற்கு முன்பாக ஹாலிற்கு போய்விட…

மீனுவும், மிருதலாவும் பேசிச் சிரித்தபடி பூஜாவின் அறையில் இருந்து ஹாலிற்கு  வந்தவர்கள்.  அங்கே இருந்த சூர்யா, ஜெய் இருவரையும் பார்த்துவிட்டு ஷாக் ஆகிவிட்டனர்.

அவர்களை பார்த்த இருவரும் திரும்பி தங்கள் முகத்தை பார்த்துக்கொண்டு பிறகு எதுவும் காட்டிக் கொள்ளாதவர்கள் போல ஜெய்யிடம் வந்த மீனு ” நீங்க எப்போ வந்தீங்க எனக்கு நீங்க வந்ததே தெரியலையே” என்றாள்.

மீனு கேட்ட கேள்விக்கு சூர்யா மிருதுளாவை பார்த்து” நாங்க ரெண்டு பேரும் “என பதில் கூற வர…

அவன் கையைப் பிடித்து அமர்த்திய ஜெய் மீனுவை பார்த்து ‘நாங்க இப்போதுதான் வந்தோம்” என்றான்.

அப்போதுதான் மீனு ஜெய்யை நன்றாக கவனித்தாள் அவன் தலைமுடி எல்லாம் அழகாக முன்பு போல வெட்டப்பட்டு கிளீன் ஷேவ் செய்து பார்ப்பதற்கே மிகவும் ஸ்மார்ட் ஆக அவள் முன்பு அமர்ந்திருந்தான்.

அவனை அப்படி பார்த்ததும் மீனுவிற்குள் ஏதேதோ செய்தது படபடவென விழிகள் அடித்துக்கொள்ள அவன் முகத்தையே விழி விலகாமல் மீனு பார்த்துக்கொண்டு இருக்க..

அதை கவனித்த மிருதுளா “ஓஹோ… உன் ஆளு நீ சொன்னது போல கிளீன் ஷேவ் பண்ணிட்டு வந்துட்டாரு… அப்போ இன்னிக்கு நைட்ட்டு….” என்று மிருதுளா மீனுவை ஓட்ட…

அவள் பேசியதற்கு மீனு எந்த பதிலும் பேசாமல் இருக்க… அப்போதுதான் மீனுவை சரியாக கவனித்தாள் மிருதுளா.

அவர்கள் இருவரும் பிரீஸ் மோடில் இருக்க… இனி இங்கே இருந்தாள் சரியாக இருக்காது என எண்ணியவள் நாசுக்காக அவர்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டு அங்கிருந்து செல்ல போனால்.

ஆனால் சூர்யா மட்டும் அங்கேயே நின்று இருவரையும் “இவங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்பது போல நின்று இருக்க.

வேகமாக அவனிடம் வந்தவள் ‘சார் கொஞ்சமாவது டீசன்ட்டா இருக்க பழகுங்க. புதுசா கல்யாணம் ஆனவங்க ரெண்டு பேரும் இப்படி நின்னுட்டு இருக்குறது பார்த்துட்டு இன்னும் அங்கே நிக்கிறீங்க முதல்ல வாங்க.. ” என அவனை கைப்பிடித்து அங்கிருந்து இழுத்துச் சென்றாள் மிருதுளா.

சூர்யாவும் மிருதுளாவே வந்து தன்னிடம் பேசி தன்னை கைப்பிடித்து அழைத்துச் செல்லவும் அவனுக்கு காற்றில் மிதப்பது போல இருக்க…அவள் பின்னாலேயே சூர்யாவும் சென்றான்.

EPISODE 21

மீனு,ஜெய் இருவரும் விழி இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு இருக்க..அதை கவனித்த மிருதுளா சூர்யாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் தன் கை பிடித்து இழுத்து செல்வதை தடுக்காமல் அவள் பின்னால் சென்றான் சூர்யா . 

அவனை ஹாலில் இருந்து தள்ளி வந்து நிறுத்திய மிருதுளா ” என்ன சார் கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாத ஆளா இருக்கீங்களே . உங்க பிரெண்ட்டும், என் பிரெண்ட்டும் அவங்களையே மறந்து பாத்துட்டு இருக்காங்க . அவங்களை தனியா விடாம இப்படி இடைஞ்சலா நின்னுட்டு இருக்கீங்க..” என்றாள் .

” நானும் மறந்து போய் உங்களை தான் பார்த்த்துட்டு இருந்தேன் ” என்றான் சூர்யா .

அவன் சொன்னதை கேட்டதும் ” என்ன !!” என்று அவனை புரியாமல் மிருதுளா பார்க்க

” அது..அது… வந்துங்க நானும் அவங்க என்ன பேசப்போறாங்கன்னு பாக்க என்னையே மறந்து நின்னுட்டு இருந்தேன்னு சொல்ல வந்தேன் ” என்று கூறி சமாளித்தான்.

” ஓஹோ ..” என்று அவனை சந்தேகமாக பார்த்தவள் திரும்பி தன் அறைக்குச் செல்ல போக ..

“ஏங்க.. எங்க போறீங்க..” என்றான் அவளை அங்கிருந்து செல்ல விடாமல் .

” ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுக்க போறேன் ,ஏன்?” என்றாள்.

” யார் ரூமுக்கு ? ” என்றான் சூர்யா .

” என்னோட ரூமுக்கு ” என்று அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள்.

 சூர்யா மிருதுளாவைக் கண்டு வழிந்து கொண்டு இருப்பதை பார்த்தவளுக்கு “சரியான ஜொள்ளு பார்ட்டியா இருப்பான் போல..” என அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் சென்ற திசையையே ஏக்கமாக பார்த்துக்கொண்டு நின்று இருந்த சூர்யா  ” ஆமாங்க உங்களை பார்க்குற அப்போ எல்லாம் நான் இப்படி ஆகிடறேன் ” என்று தன் வாயை துடைத்தான் .

பின் திரும்பி ஹாலில் ஜெய் , மீனு என்ன செய்கிறார்கள் என்று பார்க்க அவர்கள் இருவரும் அங்கு இல்லை. ” அதுக்குள்ள எங்க போனாங்க ரெண்டு பெரும் ” என்று நினைத்தவன் .

” ம்ஹும் அவனுக்கு கல்யாணம் ஆகிருச்சு அவன் பொண்டாட்டியோட சந்தோசமா என்ஜாய் பண்ணட்டும் . எனக்கு எப்போ இப்படி எல்லாம் நடக்குறது ” என்று மிருதுளா சென்ற திசையை பார்த்தவன் அவனுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த ரூமிற்கு சென்றுவிட்டான்.

மீனு ஜெய்யை தன் அறைக்கு கூடி வந்தவள் ” உங்களுக்கு…  அழகா இருக்கு.. ” என்றாள் வெடக்கபட்டுக் கொண்டே.

“என்ன அழகா இருக்கு ?” என்றான் மீனு எதை பற்றி சொன்னாள் என்று தெரிந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் ஜெய் வேண்டும் என்றே கேட்டான்.

தன் வலது கை ஆள் காட்டி விரலை அவன் முகத்திற்கு நேராக நீட்டி ” இது..” என்று சொன்னாள் .

மீண்டும் அவளிடம் ” எது ?” என்றான்.

” உங்க…உங்க முகம் ” என்றாள் .

” ஏன் முகத்தை பார்த்து தானே என்னை கல்யாணமாக் செய்துகிட்டே ..அப்போ அழகா இல்லாததா இப்போ அழகா இருக்க போகுது ” என்றான் .

” இல்ல…அப்போ..அப்போ..முகம் முழுக்க தாடி இருந்துச்சு . அதை எடுத்த பிறகு நீங்க இன்னும் அழகா இருக்கீங்கன்னு சொன்னேன் ” என்றாள் அவனை பார்க்காமலேயே .

” ஓஹோ அப்போ எனக்கு தாடி இருந்தது நல்லா இல்ல அப்படி தானே . அதை எடுக்க தான் வேணும்னே . என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட காரணத்தை கேட்டா.. தாடியை எடுத்தா தான் சொல்லுவேன்னு சொல்லி என்னை அலைய விட்டே  அப்போ நான் முன்ன இருந்தது உனக்கு பிடிக்கலை அப்படி தானே ?” என்றான் .

ஜெய் அப்படி சொன்னதும் அவனை அவசரமாக தடுத்தவள் ” என்ன இப்படி சொல்லிட்டீங்க உங்கள பிடிச்சு போய் தான் நான் கல்யாணம் பண்ணினேன். நீங்க சொல்ற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை” என்றாள் மீனு. 

“அப்படியா!! என்னை எப்படி உனக்கு பிடிக்கும்?” என்றான் ஜெய்.

“நான் தான் உங்களை ஏற்கனவே பார்த்திருக்கே….” என்று சொல்லிவிட்டு அவசரப்பட்டு உளறி விட்டோமோ என தன் நாக்கை கடித்த படி ஜெய்யைப் பார்க்க அவன் அவளையே  குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல் மீனு விழித்துக் கொண்டு நின்றிருக்க .

” ஆமா என்னை நீ எங்க பார்த்த என்னை உனக்கு எப்படி தெரியும்” என்றான் ஜெய்.

ஐயையோ மீண்டும் அவசரப்பட்டு இவன்கிட்ட உளறி கொட்டிட்டோமே…  இப்போ இவரை எங்க பார்த்தேன்னு கேக்குறாரு. நான் என்ன சொல்லி சமாளிப்பேன் என்று உள்ளுக்குள் புலம்பியவள்.

” அது…  அது வந்து நான் உங்கள கல்யாணம் மண்டபத்துல தான் முதல்ல பார்த்தேன்.  என் அக்கா உங்கள வேண்டான்னு சொன்னப்போ. மத்தவங்க எல்லாம் உங்கள பத்தி ரொம்ப நல்ல விதமா சொன்னாங்க. அவங்க சொன்னதை எல்லாம் கேட்டதும் எனக்கு ரொம்ப ஆர்வம் ஆயிடுச்சு உங்கள பாக்கணும்னு. அப்படியே நான் நீங்க இருக்கிற ரூம் பக்கம் வந்து எட்டிப் பார்த்தேன்.  அப்பதான் நான் உங்களை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன்” என்று கூறி சமாளித்தால்.

“அப்போ நீ என்ன ஃபர்ஸ்ட் டைம் கல்யாண மண்டபத்தில் வைத்து தான் பார்த்தேன். அதுக்கு முன்னாடி என்ன பாக்கவே இல்ல அப்படித்தானே?”  என்றான் ஜெய்.

“ஆமாம்” என்று மீனும் வேகமாக தலையை ஆட்ட.

“இல்லையே நீ உன் பிரண்டு கூட ரூம்குள்ள பேசிட்டு இருந்தத நான் கேட்டேனே ” என்றான் ஜெய்.

“ஐயோ நானும் பப்பியும் பேசினத இவர் கேட்டுட்டாரு போல இருக்கே இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது” என்று புரியாமல் மீனு ஜெய்யை பார்க்க..

“என்ன முழிக்கிற நீ உன் பிரண்டுகிட்ட என்ன தேடுறதை கைவிட்டு ஒரு வருஷம் ஆச்சுன்னு சொன்ன. அப்படின்னா ஒரு வருஷத்துக்கு முன்னாடியே உனக்கு என்னை தெரியும் அப்படித்தானே” என்றான் ஜெய். 

“போச்சு… போச்சு.. நானே பார்த்து பக்குவமா இவர்கிட்ட சொல்லலாம்னு நினைச்சா. இவரு நாங்க பேசுனது எல்லாம் கேட்டுட்டாரு போல இருக்கே” என நினைத்தவள் ஜெய் கேட்ட கேள்விக்கு ஆமாம் என்று மெதுவாக தலையை ஆட்டினாள்.

“அப்போ சொல்லு நீ என்ன எங்க எப்போ பார்த்த என்னை நீ தேடிட்டு இருந்த” என கேட்டான் ஜெய்.

அது அது வந்து என மீனு ஜெய்யை தன் முதல் முதலில் எங்கே பார்த்தோம் என்று கூற வர..

அவள் தன்னை பற்றி கூறும் விபரங்களை கேட்க ஆவலாக ஜெய், மீனுவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் உங்களை ஃபர்ஸ்ட் மீட் பண்ணது…” என மீனு ஜெய்யை சந்தித்த அந்த முதல் தருணத்தை  சொல்ல வரும்போது.

அப்போது அவள் அறைக்கு முன்பாக வந்த ஜனனி வெளியே நின்றவாறு மீனு… மீனு.. என அழைத்தார்.

ஜனனியின் குரல் கேட்டதும் மீனு ஜெய் பார்த்து  “ஒரு நிமிஷம் வந்துடுறேன்” என்று தன்னை விட்டால் போதும் என வெளியே ஓடிவிட்டாள்.

“என்ன பத்தி சொல்லும்போது  தான் அத்தை வரணுமா  இவ இதையே சாக்கா வச்சுட்டு என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிட்டாலே. இனி இவளை எப்படி மடக்கி பிடிச்சு கேட்கிறது” என யோசித்துவாரு அமர்ந்திருந்தான் ஜெய்.

இங்கே தன்னறைக்கு வெளியே வந்த மீனு ஜனனிடம் என்னமா எதுக்கு கூப்பிட்டீங்க என்றாள்.

“உன்ன பாக்க உன் காலேஜ்ல இருந்து ரெண்டு பேரு வந்து இருக்காங்க டி அவங்க ரெண்டு பேரும் ஹால்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அதான் உன்ன கூப்பிட வந்தேன்” என்றார் ஜனனி.

“காலேஜ்ல இருந்து என்னை பாக்கவா? யார் வந்திருக்காங்க? “ என்ற யோசனையோடு மீனு ஹாலிற்கு வர அங்கே ஹாலில் விக்ரமும் மைதிலியும் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்ததும் சந்தோஷமாக அவர்களை நோக்கி ஓடி வந்தாள் மீனு.

மீனுவின் பின்னால் வந்த ஜெய் ஹாலிற்க்கு வர… மீனுவை பார்த்ததும் சோபாவில் அமர்ந்து இருந்த மைதிலியும், விக்ரமும் எழுந்து நிற்க…

அப்போது அவள் பின்னால் வீல் சேரை இயக்கியப்படி வந்த ஜெய்யை பார்த்ததும் விக்ரம் “சார்… நீங்களா? நீங்க எங்க இங்கே?” என்று கேட்டப்படி ஜெய்யை நோக்கி சென்றான் விக்ரம்.

விக்ரம் ஜெய்யை பார்த்தது பேசியதும் அவனுக்கு ஜெய்யை எப்படி தெரியும் என ஆச்சர்யமானால் மீனு 

EPISODE 22

ஹாலில் இருந்த இருவரையும் பார்த்து சந்தோசமாக “ஏய் உங்க ரெண்டு பேருக்கும் எப்படி என் வீட்டு அட்ரஸ் தெரிஞ்சுது” என ஆச்சரியமாக அவர்களிடம் கேட்ட படி மீனு அவர்களை நோக்கி சென்றாள்ன்

“இவங்க பெரிய எலிசபெத் மகாராணி. இவங்க வீட்டு அட்ரஸ் எங்களால் தேடி கண்டுபிடிக்க முடியாது பாரு” என கிண்டல் செய்த மைதிலி.

“காலேஜ் பர்ஸ்ட் டே வந்ததோடு சரி அதுக்கப்புறம் ஆளையே காணோமே?  எங்ககிட்ட சொல்லாம கொள்ளாம யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டியோனு ஒரு டவுட்டு வந்திருச்சு. அதனாலதான் நானும் இவளும் உன்னை பார்க்கலாம்னு ஆபீஸ்ல பியூனுக்கு லஞ்சம் கொடுத்து உன்னோட அட்ரஸ் வாங்கிட்டு இங்க வந்தோம்” என்றாள் மைதிலி .

அவர்கள். இருவரும் பேசிக்கொண்டு இருக்க விக்ரம் அமைதியாக இருப்பதை கவனித்த மீனு “ஏன் டா விக்ரம் வந்ததிலிருந்து அவளே பேசிட்டு இருக்கா. நீயேன் ஒண்ணுமே பேச மாட்டேங்குற” என மீனு விக்ரமிடம் கேட்டாள்.

அவள் பேசுவதையே விக்ரம் கவனிக்காதவன் போல நின்று இருந்தவன் திடீர் என்று ” ஹலோ எப்படி இருக்கீங்க…நீங்க எங்க இங்க நான் உங்களை இங்கே எதிர்பார்க்கவே இல்லையே”  என கேட்டுக்கொண்டே  மீனுவை நோக்கி விக்ரம் வந்தான்.

 “என்ன இவன் இன்னைக்கு புதுசா பேசுறானே? மரியாதையை எல்லாம் கொடுக்கிறான். ஒன்னும் புரியலையே” என்பது போல மீனு அவனிடம் பதில் பேச வர..

ஆனால் விக்ரமோ மீனுவிடம் பேசாமல் அவளைத் தாண்டி அவள் பின்னால் வந்து கொண்டிருந்த ஜெய்யை நோக்கி சென்றான் .

ஜெய்யை பார்த்ததும்  அவனை தெரிந்தவன் போல விக்ரம் பேசுவதைக் கண்ட மீனு புருவம் சுருங்க..  பார்த்தாள்.

“இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி அறிமுகம் ஆகி இருக்கும். இவனுக்கு ஜெய்யை முன்னயே தெரியுமா?”என அவர்களையே பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்..

விக்ரமை முதலில் யோசனையாக பார்த்த ஜெய் பிறகு அவனை அடையாளம் கண்டு கொண்டவனாக “ஹே விக்ரம் நீ எங்கடா எங்க” என்று கேட்டான் .

தன் பின்னால் நின்றிருந்த மீனுவை  பார்த்தவன் “மீனு நான் இவங்க எல்லாம் ஒரே கிளாஸ் தான். ஃபர்ஸ்ட் டே கிளாஸுக்கு வந்ததோடு சரி மீனுவை ஆளையே காணோம்னு அவளை பார்க்கறதுக்காக நாங்க வந்தோம்.  நீங்க  எப்படி சார் இங்கே? மீனு உங்களுக்கு சொந்தமா? ” என கேட்டான் விக்ரம் .

“ஆமா அவ எனக்கு சொந்தமானவள் தான். எனக்கு மட்டுமே முழுசா சொந்தமாக போறவ தான்” என்று அவன் மனதில் எழுந்த பதிலை கேட்டு அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

அதே ஆச்சரியத்தோடு மீனுவை பார்க்க அவன் பார்வையை சந்திக்க கூச்சப்பட்டுக் கொண்டு  தலை தாழ்த்திக் கொண்டாள் மீனு .

அதை கவனித்த மைதிலி “ஏய் என்ன டி அவரை பார்த்து நீ இப்படி வெட்கப்படுற.. என்ன விஷயம்?” என்றாள்.

” ஏய் சும்மா இரு டி.. ” என்று மைதிலியை அதட்டிய மீனு ஜெய்யை பார்த்தாள் .

“என்ன சார் நான் கேட்டுட்டே இருக்கேன் அங்க என்ன பாக்கறீங்க?” என்ற திரும்பி விக்ரம்  பார்க்க மீனு அவனையே பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் .

“அவங்க என்னோட மிஸ்ஸஸ்” என்றான் .

“என்ன!!! சார் புரியல நீங்க என்ன சொல்ல வரீங்க” என விக்ரம் புரியாமல் மீனுவையும் அவள் அருகில் நின்றிருந்த மைதிலையும் பார்க்க..

 மைதிலியும் எனக்கும் புரியல என்று தோளை  குளிக்கினாள் .

“ரெண்டு நாள் முன்ன தான் எனக்கும் உங்க பிரெண்ட் மீனுவுக்கும்  கல்யாணம் நடந்தது” என்றான் ஜெய்.

அவன் சொல்வதை நம்ப முடியாமல் “வாட்!!!” என அதிர்ச்சியாக விக்ரமும் மைதிலி ஒரு சேர சொன்னவர்கள் திரும்பி மீனுவையும் ஜெய்யையும் மாறி மாறி பார்க்க…

ஆனால் மீனுவோ ஜெய் தன்னை அவனுடைய மிஸ்ஸஸ் என்று அறிமுகம் செய்திருந்தது பிடித்திருக்க அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அவன் பார்வையை கண்டு .

மைதிலி மீனுவிடம் “ஏய் நான் சொன்ன மாதிரியே என்கிட்ட சொல்லாம கொள்ளாம நீ கல்யாணம் பண்ணிக்கிட்டியா? சரியான ஆளுதான் டி நீ…என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா சாட்சி கையெழுத்து போட நான் ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்திருப்பேனே” என்றால் மைதிலி சிரித்தவாறு .

“ரெஜிஸ்டர் ஆபீஸ் எதுக்கு டி..” என்றாள் மீனு புரியாமல்.

“ஆமா  நீயும் அவரும் திடீர்னு கல்யாணம் பண்ணி இருக்கீங்களா அது கண்டிப்பா லவ் மேரேஜா தானே இருக்கும். அப்போ நீயும் அவரும் வீட்டில் சொல்லாம கொள்ளாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணி இருப்பீங்க. அதனால தான் நான் அப்படி சொன்னேன்” என்றாள் மைதிலி .

“இது ஆக்சுவலா லவ் மேரேஜ் தாண்டி.  நான் தான் அவரை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா அவர் இல்லையே” என நினைத்தவள் ஜெய்யை பார்த்தாள்.

அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக தன் பார்வையை பிரித்தவள் “நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல எங்களோடது லவ் மேரேஜ் கிடையாது திடீர் கல்யாணம்” என்றால் மீனு .

“என்னடி சொல்ற திடீர் கல்யாணமா!!” என மைதிலி ஆச்சர்யமானாள்.

விக்ரமும் திரும்பி ஜெய்யிடம் “சார் என்ன சொல்றீங்க? நெஜமாவே நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா? அது என்ன திடீர் கல்யாணம் எனக்கு எதுவுமே புரியலையே” என்றான் விக்ரம் .

” ஆமா எனக்கும் இப்போ வரை என்னை எதுக்காக மீனு கல்யாணம் செய்துட்டான்னு புரியாம இருக்கு. உனக்கு எப்படி புரியும் ” என்று நினைத்துக் கொண்டான் ஜெய்.

” இவன் ஒருத்தன் ஏற்கனவே அவர் நீ எப்படி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச என்னை எங்க பார்த்தன்னு  கேள்வியா கேட்டு இருக்காரு . இவன் வேற அவர்கிட்ட போய் கேள்வி கேட்டுட்டு இருக்கான்னு” என நினைத்தவள்.

வேகமாக விக்ரம் அருகில் வந்து ஜெய்யிடம் “நாங்க கொஞ்ச நேரம் வெளியே போய் பேசிட்டு வரோம்” என்றவள்.

விக்ரம் இடம்  ” அதெல்லாம் விளக்கமா நான் உன்கிட்ட சொல்றேன்.  நீ அவர்கிட்ட எதுவும் கேட்காத வா” எனச் சொல்லி அவனை கைப்பிடித்து அங்கிருந்து இழுத்துச் சென்றவள். மைதிலியையும் விக்ரமையும் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டை  வெளியே கார்டனுக்கு அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றாள் .

“என் முன்னால் விஷயத்தை சொல்லாம இவங்க ரெண்டு பேரையும் தனியா கூட்டிட்டு போய் பேசுற அளவிற்கு அப்படி என்ன நடந்திருக்கும். அவளுக்கு எப்படி என்னை முன்னமே தெரிஞ்சிருக்கும்.  இதற்கு முன்ன மீனுவை   பார்த்தது போல ஞாபகம் இல்லையே” என யோசனையில் யோசனையில் அவர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தவன்.

மீனு விக்ரமின் கையை பிடித்து அழைத்துச் சென்றதை பார்த்ததும் அவனுக்கு ஏனோ உள்ளுக்குள் எரிமலை வெடிப்பது போல இருந்தது . விக்ரமும் அவளும் நண்பர்கள் என தெரிந்தும் கூட… விக்ரம் கையை மீனு பிடித்தது ஏனோ ஜெய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை .சற்று கோபமாகவே இருந்தவன் “என் முன்னாடி எதுவும் பேசினா ஆகாதமா தனியே கூட்டிட்டு போய் தான் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசணுமா?” என்று நினைத்தவன்.

“என் முன்னாடியே இன்னொருத்தன் கைய பிடிச்சு கூட்டிட்டு போறா இவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்.வரட்டும் அவளுக்கு இன்னிக்கு இருக்கு” என உள்ளுக்குள்ளேயே புலம்பியவன் அதே கோபத்தோடு தன் அறைக்க சென்றான்.

இங்கே மீனுவோ அடுத்து ஜெய் அவளை என்ன செய்யப் போகிறான் என தெரியாமல் அவர்கள் இருவரையும் கார்டனுக்கு அழைத்து வந்தவள். ” உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சமாவது அறிவு இருக்கா? அவரே ஏற்கனவே நான் அவரை எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு குழப்பத்தில் இருக்காரு. இதுல நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி கேள்வி கேட்டா அவர் முன்னாடி நான் எப்படி பதில் சொல்வேன்” என மைதிலியை பார்த்துச் சொன்னவள்.

விக்ரமிடமும் “ஆமா உனக்கு அவரை எப்படி தெரியும்? நீயும் அவரும் ரொம்ப பழக்கப்பட்டவங்க மாதிரி பேசிக்கிறீங்க” என கேட்டாள் .

“அதையெல்லாம் நான் அப்புறம் சொல்றேன்.  முதல்ல அவரும் நீயும் எப்படி கல்யாணம் பண்ணீங்க? சாரை உனக்கு எப்படி தெரியும்” என கேட்டான் விக்ரம் .

“ஆக்சுவலா என்னோட அக்காவோட கல்யாணத்துக்கு தான் நான் சென்னை போயிருந்தேன். இவரு என் அக்காவுக்காக பிக்ஸ் பண்ணி இருந்த மாப்பிள்ளை தான்” என ஆரம்பித்து  இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது வரை அனைத்தையும் சொன்னாள்.

ஆனால் அவளுக்கு ஏற்கனவே ஜெய்யைத் தெரியும் என்றும் அவர்கள் இருவரும் ஏற்கனவே சந்தித்திருப்பதையும் இவர்கள் இருவரிடமும் சொல்லவில்லை.

ஏனென்றால் விக்ரம் ஜெய்யுடன் பேசுவதை பார்த்த அவர்கள் இருவருக்கும்  இடையில் நல்ல பழக்கம் இருப்பதை உணர்ந்தவள் தனக்கு முன்பாகவே விக்ரம் எதுவும் ஜெய்யிடம் உளறி விடுவானோ என யோசித்து தான் அவள் எதுவும் சொல்லவில்லை .

மீனு சொன்ன அனைத்தையும் நம்ப முடியாமல் கேட்ட மைதிலி “எப்படி டி நாவல்ல, டிராமாவில் எல்லாம் பார்ப்போமே அதே மாதிரி உன்னோட கல்யாணம் நடந்திருக்கு. என்ன உன்னோட கதை கொஞ்சம் வித்தியாசமா இருக்கு” என்று சொன்ன மைதிலி.

“எனிவே கங்கிராட்ஸ் டி.. நான் உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என சொல்லி மைதிலி மீனுவை கட்டிக் கொண்டாள் .

விக்ரமும் அவன் பங்கிற்கு மீனுவின் கையைப் பிடித்து குலுக்கியவன் “யூ ஆர் ரியலி லக்கி பர்ஷன்.ஏன்னு தெரியுமா? என்றான் விக்ரம் .

அவனைப் பார்த்து “ஏன்?”என்றாள் மீனு.

“ஏன்னா ஜெய் சார் இருக்காரே அவர் such a very good person அவரை மாதிரி ஒரு அருமையான ஆளை உன்னால தேடிப்பிடித்தாலும் கண்டுபிடிக்க முடியாது” என்ற விக்ரம் ஜெய்யை புகழ .

“இந்த அருமையான ஆளத் தான் நான் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா தேடிட்டு இருந்தேன்” என  நினைத்தவள் அதை காட்டிக் கொள்ளாமல் “அப்படியா!!” என்பது போல அவனைப் பார்த்தாள் .

பிறகு மூவரும் சிறிது நேரம் கார்டனில் பேசி இருந்துவிட்டு அவர்கள் இருவரையும் வீட்டிற்குள் அழைத்து வந்தாள் மீனு.

 ஜனனியும் இரவு உணவை சமைத்து முடிக்கவும் இவர்கள் வரவும் சரியாக இருந்தது .

மைதிலியும் விக்ரமும் ஜனனிடம் சொல்லிக் கொண்டு “ஆண்ட்டி நாங்க கிளம்பறோம். ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு வீட்ல தேடுவாங்க” என்றான் விக்ரம் .

“ஆமா ஆண்டி இவன் சாயங்காலம் ஆறு மணிக்குள்ள வீட்டுக்குள்ள போகலைன்னா அவங்க வீட்ல இருந்து அவனுக்கு மணிக்கொரு தடவ கால் வந்துட்டே இருக்கும். ஏன்னா சின்ன பிள்ள பாருங்க எங்கேயாவது தொலைஞ்சு போய்விடுவான் இல்லன்னா யாராவது இவனை தூக்கிட்டு போயிடுவாங்கன்னு அவங்க வீட்ல ரொம்ப பயப்படுறாங்க” என்று சொல்லி மைதிலி விக்ரமை கிண்டல் செய்ய .

“என்னப்பா அதுக்குள்ள போறேன்னு சொல்றீங்க.  நீங்க வரதுக்குள்ள உங்களுக்கு சாப்பாடு நான் ரெடி பண்ணி வச்சுட்டேன். மீனுவோட பிரெண்ட்ஸ் நீங்க  முதல் முறையா வீட்டுக்கு வந்து இருக்கீங்க. இப்படி சாப்பிடாம போனா அம்மா கோவிச்சுக்குவேன்” என ஜனனி கோவமாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் பார்க்க.

“உடனே மைதிலி ஆண்ட்டி எனக்கு ரொம்ப பசிக்குது” என தன் வயிற்றை தடவிக் காட்டி “எனக்கு முதல்ல சாப்பாடு போடுங்க. அவன் சாப்பிட்டா என்ன சாப்பிடாட்டி என்ன. நான் சாப்பிடுற வரைக்கும் அவன் எப்படியும் வெயிட் பண்ணித்தான் ஆகணும்.  என்ன கொண்டு போய் எங்க வீட்ல விட்டுட்டு தான் அவன் வீட்டுக்கு போகணும் அதனால நீங்க எனக்கு பஸ்ட் சாப்பாடு எடுத்து வைங்க” என்ரவள் ” மீனு வா டி நம்ம சாப்பிடலாம்” என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்.

ஜனனி  மீனுவிடம் “மாப்பிள்ளையை அப்படியே சாப்பிட கூட்டிட்டு வா மீனு. நான் இவங்களுக்கு சாப்பாடு பரிமாறுகிறேன்” என்று சொல்லி மைதிலியிடம் “வாம்மா நம்ம போகலாம்” என அவளை அழைத்துக்கொண்டு டைனிங் டேபிள் இருக்கு சென்றார்.

அவர்கள் பின்னாள் விக்ரம் மைதிலியை முறைத்துக் கொண்டே “சோறுன்னு  சொல்லிட்டா போதும் இவளுக்கு   எதையும் யோசிக்கிறது இல்லை” என நினைத்துக் கொண்டவன்.

“எவ்ளோ. பேசுறா இவ… அம்மாடி அம்மா முடியலை இவளை எப்படி நான் சமாளிக்க. போரேன்னு தெரியலையே….இவ்ளோ பேசுற வாயை ஒரு நாள் பிடிச்சு அடக்கி வெக்கணும் ” என்று நினைத்தவன் தன் மனதில் எழுந்த எண்ணங்களை நினைத்து உடலில் ஏதோ செய்ய… தன் தலையை வேகமாக குலுக்கியவன் அவளுடன் சாப்பிட டைனிங் டேபிளுக்கு சென்றான் .

அதற்குள் வெளியே சென்றிருந்தவர்கள் வந்துவிட அவர்களையும் சாப்பிட வர சொல்லி ஜனனி உணவு பரிமாற செல்ல அவர் மட்டும் தனியாக உணவு பரிமாறுவதை பார்த்துவிட்டு மைதிலி “ஆன்ட்டி நீங்க மட்டும் தனியா ஏன் கஷ்டப்படுறீங்க இருங்க நானும் வரேன்” என்று சொல்லி மைதிலி அனைவருக்கும் உணவு பரிமாற ஆரம்பித்தாள்.

பூஜாவிடம் மிருதுளாவை அழைத்து வரச் சொல்லிவிட்டு அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருக்க .

இங்கே ஜெய்யை சாப்பிட அழைப்பதற்காக தன் ரூமிற்கு வந்தவள் கதவை திறந்து கொண்டு உள்ளே வர ரூம் முழுவதும் இருட்டாக இருந்தது.

“ஏன் இவரு லைட் கூட போடாம உள்ள இருக்காரு. இருட்டுல என்ன பண்ணிட்டு இருக்காரு?” என யோசனையோடு வந்தவள். சுவிட்சை ஆன் செய்யப் போக… அதற்குள் அவள் கையைப் பிடித்து ஜெய் மீனுவை  தன் பக்கம் இழுத்தான்.

EPISODE 23

ஜெய்யை சாப்பிட அழைத்து வரச் சொல்லி ஜனனி மீனுவை அவள் அறைக்கு அனுப்பி வைத்தார்.

ஜெய்யை அழைக்க வந்தவள் கதவை திறந்து கொண்டு உள்ளே வர அவள் அறை முழுவதும் இருட்டாக இருந்தது.” இவ்வளவு நேரம் ஆச்சு லைட் கூட போடாம இருட்டுல உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்காரு” என முனுமுனுத்தவள் 

திரும்பிச் சுவிட்ச்  பக்கம் நகர்ந்து லைட்டை ஆன் செய்யப் போக அப்போது அவள் கையைப் பிடித்துஜெய் தன் பக்கம் இழுத்தான் .

அவன் இழுத்த வேகத்தில் மீனு வீழ்ச்சாரில்  அமர்ந்திருந்தவனின் மடியில் போய் பொத்தென்று விழுந்தவள் , விழுந்த வேகத்தில் தடுமாறி அவன் மடியில் இருந்து கீழே விழப்போக சட்டென அவள் இடையில் கை கொடுத்து அவளை தன் மடி மீது தூக்கி நன்றாக அமர வைத்த ஜெய் .

அந்த இருட்டில் ஜன்னல் வழியே வந்த நிலவொளியின் வெளிச்சத்தில் மீனுவின் பதட்டமான முகத்தை பார்த்தவன். “ஹேய் மீனு பதட்டப்படாத நான் தான்” என ஜெய் கூறவும் அவன் குரல் கேட்டு தான் மீனு சற்று நிம்மதி அடைந்தாள் .

“என்னங்க இப்படி திடீர்னு என் கையை பிடிச்சு  இழுத்துட்டீங்க.  நான் யாரோ என்னவொன்ன்னு பயந்துட்டேன் தெரியுமா!” என்றவள் அவன் மடியில் இருந்து எழுந்திருக்க போக .

அவளை எழுந்திருக்க விடாமல் இடையை இருக்க பிடித்து அமர வைத்தவன் . “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே விக்ரம் கையை பிடித்து கூட்டிட்டு போவ” என்றான் .

சற்று முன்பு தான் பதட்டப்படவும்  தன்னிடம் மென்மையாக பேசியவன் அடுத்த நொடியே இப்படி குரலை இறுக்கமாக வைத்துக் கொண்டு பேசுபவனை மீனு பார்த்தவள்.

ஜெய் இப்படி கேட்டதும் மீனுவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது . தன்னை சந்தேகப்படுகிறானோ எனக் கூட அவளுக்கு தோன்றியது.

“இல்லங்க நான் ஏதோ அவங்க கிட்ட பேசுற அவசரத்துல கைபிடித்து கூட்டிட்டு போனேன். நான் எதுவும் தப்பா எதுவும் செய்யல” என்றாள் மீனு .

“நீ எதுவும் தப்பு செய்ய மாட்ட அவனும் அப்படிப்பட்ட ஆள் இல்லைனு எனக்கு நல்லா தெரியும்.  ஆனா என்னோட பொண்டாட்டி நீ இன்னொருத்தன் கையை அதுவும் என் முன்னாடி பிடித்து கூட்டிட்டு போறத பாத்துட்டு என்னால எப்படி சும்மா இருக்க முடியும்” என்றான்  ஜெய் .


அவன் அப்படி சொன்னதும்  தன்னைத் தவிர வேறு ஒரு ஆணின் கைப்பிடித்து விட்டாளே என அவனுடைய பொசசிவ்னஸ் தலை தூக்க அதை ரசித்த மீனு வேண்டுமென்றே “இப்போ இதுல என்ன தப்பு என்னோட பிரண்டு தானே விக்ரம் அவனை கை பிடிச்சு கூட்டிட்டு போகக் கூடாதா? என்ன ?” என்றாள்  வேண்டுமென்றே.

அவள் அப்படி சொன்னதும் கோபம் வந்துவிட்டது ஜெய்யிக்கு ஏற்கனவே அவள் விக்ரம் கையை பிடித்ததில் கடுப்பில் இருந்தவன். இப்படி இவள் பேசியதும் மேலும் கடுப்பாக சட்டென அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் நெருக்கமாக திருப்பியவன்

“நீ எனக்கு மட்டும் தான் சொந்தமானவ அதை ஞாபகம் வச்சுக்கோ . நீ என்ன விரும்பி கல்யாணம் பண்ணிருக்கேன்னு சொன்னது உண்மைதானே . அப்போ என்ன தவிர வேற யார்கிட்டயும் நீ க்ளோசா பேசி பழக கூடாது. அது எனக்கு பிடிக்கல” என்றான் .

“என்னங்க பேசுறீங்க நீங்களும் அவனும் ஒண்ணா.. அவன் என்னோட பிரண்டு நீங்க என்னோட…” என ஜெய்யை பற்றி சொல்ல வந்தவள் அப்படியே பேசாமல் அமைதியாக..

“ம்ம்ம்…சொல்லு நான் யாரு உனக்கு. ஏன் பேச மாட்டேங்கற வாய் திறந்து சொல்லு” என்று அவள் ஆர்வமாக அவள் முகத்தை பார்த்தான் ஜெய் .

“அதான் நீங்க என்ன தொட்டு என் கழுத்துல தாலி கட்டி இருக்கீங்களே… அப்போ நீங்க யாருன்னு உங்களுக்கு தெரியாதா? இதை நான் வேற என் வாயால சொல்லனுமா?” என்றாள்  மீனு வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற .

“ஓஹோ அத மேடம் உங்க வாயால சொல்ல மாட்டீங்களா? நாங்களா புரிஞ்சிக்கணுமா?” என்றான் ஜெய் .


“ஆமா சொல்ல மாட்டேன்” என்று தோளை குலுக்கியவள் அவன் மடியில் இருந்து எழுந்திருக்க போக..


மீண்டும் அவள் இடையில் கை கொடுத்து அழுத்தி தன் மீது அமர வைத்தவன் . அவள் முகத்தை பிடித்து இழுத்து அவள் இதழில் அழுத்த முத்தம் வைத்து அவள் இதழை விடுவித்தவன் “இப்போ சொல்லு நான் யாரு உனக்கு” என்றான் .

மீனு அவன் முத்தம் வைத்ததில் அதிர்ந்து போனவள். அவனை விழி விரிய பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் இடையில் தன் கையை மேலும் அழுத்தியவன் “ம்ம்ம்… சொல்லு… நான் யாரு உனக்கு” என்றான் சற்று அதிகாரமாக .

மீனு ஜெயை பார்த்ததிலிருந்து.. அவனுடன் இருந்த இந்த மூன்று நாட்களுமே அவனின் மென்மையை மட்டுமே பார்த்திருக்க. இப்போது அவன் சற்று தடாலடியாக அதிகாரமாக கேட்கவும் அவளுக்கு ஏதோ போல இருந்தது .

முதலில் அவளுக்கு அது  சற்று சங்கடத்தை கொடுத்தது .  ஆனால் அவன் அவளுடைய கணவன் என நிலைப்படுத்திக் கொள்ள அவள் வாயாலேயே சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் இப்படி அதிகாரமாக பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டவள்.  வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றும் விதமாக “இப்படி நீங்க முத்தம் கொடுத்து என்கிட்ட அதிகாரம் பண்ணி கேட்டா நான் சொல்லிடுவேன்னு நினைக்கிறீர்களா? சொல்ல மாட்டேன்” என்றாள்  வீம்பாக .

அவள் பேசி முடித்த மறுகணமே மீண்டும் அவள்  இதழை சிறை  செய்து இருந்த ஜெய் அவளை விடுவித்து “இப்ப சொல்லு நான் யார் உனக்கு” என்றான் .

“இப்படி எல்லாம் நீங்க என்ன மிரட்டி அதிகாரம் பண்ணி கேட்டா நான் சொல்ல மாட்டேன். முதல்ல என்ன விடுங்க” என்று சொல்லி அவன் மடியில் இருந்து அவசரமாக எழுந்து அவனை விட்டு சில அடி தள்ளி நின்றவள் சென்று லைட்டை ஆன் செய்தாள் .

அவள் அவனிடம் சண்டை இடுவது போல பேசி இருந்தாலும் விளக்கின் வெளிச்சத்தில் அவள் முகம் சிவந்திருப்பதை கண்ட ஜெய்யிக்கு  ஒரு வித பரவச உணர்வு தோன்றியது .

அதை ரசித்தவாரே தன் சேரை அவளை நோக்கி இயக்கியவன் “சொல்லு நான் யாரு உனக்கு” என்றான்.


“ம்ஹும்…சொல்ல மாட்டேன்” என்று தலையை இடவலமாக ஆட்டியவள். திரும்பி அந்த அறையை விட்டு வெளியே செல்ல போக … வேகமாக தன் வீழ்ச்சாரை அதற்குள் இயக்கி அவள் அருகில் வந்தவன் அவள் சேலை தலைப்பை பிடித்து இழுத்தான்.  அவன் எழுத்த வேகத்தில் அவன் அருகில் மோதி மீனு நிற்க… சரியாக அவள் மென்மைகள் அவன் முகத்தில் மோதி விட்டது .

அவள் சேலையை தாண்டி அவன் முகத்தில் மோதிய  அவள்  மென்மையை முதன் முறையாக உணர்ந்த ஜெய்யின் முகம் சூடேறி சிவந்து விட அவளை பார்த்தான் .

“ம்ச் … என்ன இது முதல்ல என்  சேலையை விடுங்க” என அவன் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்தவாறு அவன் கையில் இருந்த தன் சேலையை பிரிக்க போக .. அதை இறுக்கமாக பிடித்துக் கொண்ட ஜெய் “நான் உனக்கு யாருன்னு சொல்லாம உன்னை இங்கிருந்து போக விடமாட்டேன்” என்றான் .

“ம்ச் … அதை நான் சொன்னால் தான் நீங்க என்ன விடுவீங்களா?” என்றாள் .

அவன் பார்வை அவள் மென்மையில் பதிந்திருக்க அதை கவனிக்காதவள் தன் சேலையை பிரிப்பதில் மும்பரமாக இருக்க

“ம்ம்..நீ சொன்னா தான் விடுவேன்” என்றான் மென்மையாக .

அவன் குரலில் முன்பு இருந்த அதிகாரம் இப்போது இல்லாதது கண்டு அவன் முகத்தை பார்க்க அப்போதுதான் அவன் பார்வையில் பதிந்திருந்த இடத்தை கவனித்தாள் .  சட்டென அவன் கையில் இருந்து சேலையை வேகமாக இழுத்தவள் அவனை விட்டு தள்ளி நின்றவள்  வெட்கப்பட்டுக் கொண்டே “போடா பீம் பாய்” என்று அவன் கையில் சிக்காமல் அங்கிருந்து ஓடிவிட்டாள் .

“பீம் பாய்” என புருவம் சுருக்கி அவள் சொன்னதை திரும்ப சொன்னவன் . அப்போது தான் அவள் தன்னை அப்படித்தான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிய மெல்ல சிரித்தவன் சற்று முன்பு அவள் மென்மைகளை ஸ்பரிசித்தது நினைவில் வர அந்த உணர்வுகளுக்காக அவன் மனம் ஏனோ அவனையும் அறியாமல் எங்கு துவங்கியது

அவர்கள் அறையை விட்டு வெளியே சென்ற மீனு மீண்டும் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள் அவன் அருகில் வேகமாக வந்து கன்னம் கிள்ளி  “டேய் பீம் பாய் சீக்கிரம் வாடா .. அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க” என்று விட்டு வேகமாக திரும்ப ஓடிவிட்டாள்.

மீனு பீம் பாய் என்று சொன்னது அவன் மனதிற்குள் ஏதோ உணர்வைத் தர இப்போது உரிமையாக வாடா என அழைத்துச் செல்பவளின் பின்னால் தன்னை அறியாமல் சென்றான் ஜெய் .

அவன் வருவதற்குள்ளாக மீனு டைனிங் டேபிளுக்கு வந்து விட்டாள் .

அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களை எல்லாம் பார்த்து லேசாக புன்னகைத்த ஜெய் மீனுவின் சிவந்த முகத்தை ஓரக்கண்ணால் ரசித்தவரே அவள் அருகில் தன் வீல்சேரை கொண்டு வந்து நிறுத்தினான்.

“மீனு என்னம்மா அப்படியே உட்கார்ந்து இருக்க மாப்பிள்ளைக்கு சாப்பாடு எடுத்து வை” என்றார் ஜனனி மற்றவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டே.

“சரிமா” என்று தலையாட்டிய மீனு அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி டைனிங் டேபிள் இருந்த உணவுகளை எட்டி எடுத்து ஒவ்வொன்றாக அவன் தட்டில் வைத்தாள் . அவள் தட்டில் வைத்த உணவுகளை கவனிக்காமல் அவள் சாரிலிருந்து ஒவ்வொரு முறையும் எழுந்து இரு கைகளையும் நீட்டி உணவை பரிமாறிக் கொண்டு இருக்க அவள் கையை நீட்டும் போது சேலை விலகி அவளுடைய மென்மையும் வெற்று இடையும் அவன் கண்களுக்கு தெரிய அதை ஓரக்கண்ணால் ரசித்து வாரே அமர்ந்திருந்தான் ஜெய் .

அவனுக்கு  பரிமாறி விட்டு தன் தட்டிலும் பேருக்கு கொஞ்சம் உணவை வைத்தவள் அவன் அருகாமையில் தன் உடல் தகிப்பதை மறைக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டே மெல்ல உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் . அறைக்குள்ளே ஜெய் அவளுக்கு முத்தம் கொடுத்ததும். தன் இடையை அவன் விரல்களால் அழுத்தியதும் என ஒவ்வொன்றும் நினைவிற்கு வந்து அவள் உடல் மேலும் தவிக்க முகம் சிவந்து கொண்டே இருந்தது அவளுக்கு

அப்போது மைதிலியும் விக்ரமும் மீனு எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிடுவதை பார்க்க அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். பின்பு மைதிலி மீனுவிடம் “மீனு காலேஜுக்கு வருவியா? மாட்டியா?” என்றாள் .

அவள் கேள்வியில் அப்போதுதான் தான் சாப்பிடும் இது இடத்தில் எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவள் தன்னையே மனதிற்குள் கடிந்து கொண்டவள் “மைதிலியை  பார்த்து இல்லடி நான் இனிமேல் காலேஜுக்கு வரதா இல்லை” என்றாள்  .


மீனு இப்படி சொன்னதும் உடனே பூஜா “அக்கா என்ன சொல்ற உன்னோட ட்ரீம் அக்கா அது. நீ இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த காலேஜ்ல சீட் கிடைக்கிறதுக்காக அலைஞ்ச…  இப்படி சர்வ சாதாரணமாக காலேஜுக்கு போகலைன்னு சொல்ற.. ஏன் போக மாட்டேன்னு  சொல்ற” என கேட்டாள் பூஜா .

மைதிலிக்கும் விக்ரமுக்கும் மற்றவர்களுக்கும் அதே சந்தேகம் தான் .

மீனு யாரிடமும் எந்த பதிலும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டு சாப்பிட்ட படியே “இல்ல நான் போகல” என்றாள்  .


ஏன்  அவளிடம் அளித்து கேட்க யாருக்கும் மனம் வரவில்லை அவள் தயங்கியபடியே தலை குனிந்து பேசுவதை பார்த்துவிட்டு யாரும் அதன் பிறகு மீனுவிடம் யாரும் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை .

வேகமாக சாப்பிட்டு முடித்த மீனு மைதிலி விக்ரம் இருவரையும் பார்த்து “நம்ம டைம் இருந்தா இடையில் சந்திக்கலாம் சாரி” என்று விட்டு எழுந்து வேகமாக அவள் அறைக்கு சென்று விட்டாள்.

இவளுக்கு என்ன ஆனது என யோசித்த மைதிலி விக்ரம் இருவரும் சாப்பிட்டுவிட்டு அவள் வீட்டில் இருந்தவர்களிடம் விடைபெற்று வெளியே செல்ல அவர்கள் பின்னால் தன் வீல்சேரை இயக்கிக் கொண்டு சென்ற ஜெய் “விக்ரம் ஒரு நிமிஷம்” என்று விக்ரமை அழைத்தான் .

“சொல்லுங்க சார்” என்று விக்ரம் ஜெய் அருகில் வர அவனோடு சேர்ந்து மைதிலி வந்தாள் .

“மீனு நாளைல இருந்து காலேஜுக்கு வருவா அதுக்கு நான் பொறுப்பு நீங்க அவ வரலையேன்னு மனசு போட்டு குழப்பிக்க வேண்டாம். அவ ஏன் காலேஜுக்கு வரலைன்னு சொல்றாங்க காரணம் எனக்கு தெரியும் நான் அவகிட்ட பேசிட்டு நாளைக்கு காலையில நானே அவளை காலேஜ்ல டிராப் பண்றேன்” என்றான் ஜெய் .

அதைக்கேட்ட பூஜா அவள் அங்கு சென்றவள் நேராக ஜெய்யிடம் வந்து “மாம்ஸ் நெஜமாவே அக்காவ நீங்க காலேஜ் போக சம்மதிக்க வச்சிடுவீங்களா? ஏன்னா அவ ஒரு முடிவை எடுத்துட்டா அவ்வளவு சீக்கிரம் மாத்திக்க மாட்டா,  அதனால தான் கேட்கிறேன்” என்றாள்  பூஜா.

ஜெய் சிரித்துக்கொண்டே “நாளைக்கு உன் அக்கா கண்டிப்பா காலேஜ் போவா அதற்கு நான் பொறுப்பு” என்றவன் “விக்ரம் நீ இங்க ரெண்டு பேரும் பத்திரமா போய்டுவீங்களா? இல்ல என்னோட டிரைவர் கொண்டு வந்து உங்க ரெண்டு பேரையும் ட்ராப் பண்ண சொல்லட்டுமா ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு” என்றான். ஜெய் .

“இல்ல சார் நாங்க ரெண்டு பேரும் கார்ல தான் வந்தோம் வீட்டுக்கு வெளியே தான் நிக்குது நான் மைதிலி அவ வீட்ல டிரா பண்ணிட்டு என் வீட்டுக்கு கிளம்பிடுவேன் நீங்க நாளைக்கு மறக்காம மீனு வைகாலேஜுக்கு அனுப்பி வைத்து விடுங்கள் அவளை எப்படியாவது சம்மதிக்க வச்சிடுங்க”சரிப்பா என்றான் விக்ரம் .

“கண்டிப்பா” என்று சொல்லி அவர்கள் இருவரையும் வழி அனுப்பி வைத்தவன் யோசனையோடு தன்னரைக்கு சென்றான்

EPISODE 24

மைதிலி விக்ரமிடம் மீனு நாளையிலிருந்து காலேஜிற்கு வருவாள் என்று உறுதி அளித்துவிட்டு யோசனையாக வந்தான் ஜெய்.

அவன் அரை கதவை திறந்து கொண்டு வீல்சேரை இயக்கிய படி உள்ளே நுழைய அங்கே மீனு என் ஜன்னல் வழியாக வெளியே வானத்தில் தெரிந்த நிலவை வெறித்தபடி நின்று இருந்தால்.

அவளிடம் சென்று தன் வீல்சேரை நிறுத்தியவன் மீனுவின் அருகில் நின்று அவனும் ஜன்னல் விழி வழியே வானத்தில் தெரிந்த நிலவை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

மீனவும் ஜெய் இடம் எதுவும் பேசவில்லை ஜெய்யும் அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

பின்பு மீனுவே பேச்சை ஆரம்பித்தால் ரொம்ப நேரம் ஆயிடுச்சு தூங்கலையா என்றாள்.

அதேதான் நானும் கேட்கிறேன் நீயே தூங்காம அந்த நிலாவையே பார்த்துட்டு இருக்க என்றான்.

நீனும் அவன் கேட்டதற்கு பதில் பேசாமல் மீண்டும் ஜன்னல் வழியே தன் பார்வையை செலுத்தி அமைதியாக நின்று இருக்க மீண்டும் அங்கு அமைதி நிலவியது.

இப்போது ஜெய் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த மௌனத்தை கலைத்தான் கைகட்டி ஜன்னலில் சாய்ந்தபடி வெளியே வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்த மீனுவின் கையை உன்னை பிடித்து இழுத்தவன் அவளை தன் பக்கம் திருப்பினான்.

அவன் இவ்வளவு உரிமையாக கையைப் பிடித்து இழுக்கவும் மீனுவிற்கு ஆச்சரியமானது அவனை திரும்பி வியப்பாக பார்க்க.

நீ ஏன் உன் பிரண்ட்ஸ் கிட்ட காலேஜுக்கு இனிமேல் போக மாட்டேன்னு ஏன் சொன்ன… அவங்களும், பூஜாவும் சொல்றது எல்லாம் வெச்சு பாக்குறப்போ நீ விரும்பி தான் அந்த காலேஜ்ல ஜாயின் பண்ணி இருக்க அதுவும் நீ எடுத்திருக்கிற டிபார்ட்மெண்ட் உனக்கு ரொம்ப பிடிச்சது எனக்கு புரியுது அப்புறம் ஏன் நீ காலேஜுக்கு வரலைன்னு சொன்ன போய் படிக்க வேண்டியது தானே என்றான் ஜெய்.

இல்ல நான் போகல எனக்கு இப்போ படிக்கணும்னு தோணல என்றால் மீனு அவன் முகத்தை பார்க்காமல்.

பொய் சொல்ற உனக்கு உள்ளுக்குள்ள படிக்க முடியலையேன்னு ரொம்ப ஆதங்கம் இருக்கு உன்னை யாரும் இங்கே காலேஜுக்கு போக வேண்டாம் என்று தடுக்கலையே ஏன் நீ காலேஜுக்கு போக மாட்டேங்குற ஒரு வேலை என்ன கல்யாணம் பண்ணினதுனால அதான் நீ காலேஜ் வரமாட்டேன்னு சொல்றியா அப்படி மட்டும் நீ நினைச்சிருந்தா அது எனக்கு தான் கஷ்டமா இருக்கும் எப்பவுமே யாருடைய கனவுலயும் குறுக்கே நிற்க விரும்பாதவன் நான் அப்படி இருக்கும்போது என் மனைவி நீ உனக்கு பிடிச்சதை செய்ய நான் தடையாய் இருப்பேன் என்று மட்டும் நீ நினைச்சிடாத உனக்கு என்ன விருப்பமோ அதை செய் என்றான்.

அவன் எனது விருப்பங்களுக்கு முட்டுக்கட்டையாக ஒருபோதும் இருக்க மாட்டான் என மீண்டும் விற்கு நன்றாகவே புரிந்தது ஆனாலும் அவள் இல்லை நான் காலேஜ் போகல நான் போகலைன்னு சொன்னா விடுங்களேன் ஏன் மறுபடியும் என்ன போக சொல்லி வற்புறுத்துறீங்க என்று சற்று கோபமாக சொன்னவள் வேகமாக போய் மெத்தையில் படுத்து போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டால்.

அவளின் நடவடிக்கை ஜெய்க்கு ஒன்றுமே புரியவில்லை இவை ஏன் இப்போ காலேஜ் போக மாட்டேனு சொல்ற ஒரு வேலை அங்கு எதுவும் பிரச்சினை இருக்குமோ யாரும் எது கிட்ட எதுவும் வம்பு பண்ணிட்டாங்களோ என யோசித்தவன் வீல்சேரை நகர்த்தி வந்து கட்டிலில் ஓரமாக படுத்திருந்தவளின் காலுக்கு அருகில் தன் ரீசாரே கொண்டு வந்து நிப்பாட்டியவன்.

மீனுவை பார்க்க அவள் ஜெய் கட்டிலுக்கு அருகில் இருப்பது தெரிந்தும் அவனிடம் என்ன என்று கேட்காமல் அவனிடம் முதுகு காட்டி படுத்திருந்தாள் மீனு.

மெல்ல தன் கையை மெட்டுக்கு அருகே கொண்டு சென்றவன் அவள் பாதத்தை லேசாக பிடித்து விட அவன் செய்கையில் பதறிய மீனு அவசரமாக எழுந்தவள் என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க எதுக்கு என் காலை பிடித்து இருக்கீங்க விடுங்க என சொல்லி அவன் கையை வேகமாக தட்டிவிட்டால் மீனு.

ஏன் நான் என் பொண்டாட்டி கால பிடிச்சு விட கூடாதா என்றவன் மீண்டும் அவள் காலை தொடப் போக…

ஐயோ ஏன் இப்படி பண்றீங்க நீங்க இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட இப்படி எல்லாம்  நடந்துக்கலாமா நீங்க போய் என் கால தொடலாமா என வேகமாக மெத்தையிலிருந்து இருந்து எழுந்து கொண்டாள்.

அவளைப் பார்த்து சிரித்தவாறு ஏன் நான் உன்கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்க கூடாதா நான் உன் கால தொடக்கூடாதா என கேட்டபடி அவள் அருகில் வந்தவன் அவள் கை பிடித்து வெடுக்கென எடுக்க அவன் எழுத்து வேகத்தில் ஜெய்யின் மடிமேல் கிடந்தாள் மீனு.

விழுந்து வேகத்தில் எழுந்திருக்கப் போனவளே நகர்விடாமல் எடையை வளைத்து பிடித்தவன் அவள் முகத்தை தன்னை பார்க்குமாறு திருப்பி சொல்லு நீ ஏன் காலேஜ் போக மாட்டேன்னு சொல்ற ஏன் நான் கேட்ட சரியா பதில் சொல்லாமல் என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசாம கோபமா வந்து படுத்துக்கிட்டேன். ஏன் உன் காலேஜில் எதுவும் பிரச்சனையா யாரும் எதுவும் உன்னிடம் தப்பா நடந்துக்கிட்டாங்களா சொல்லு எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் நான் இருக்கேன் நீ தைரியமா இரு. நான் நாளைக்கு உன்னோட உன் காலேஜுக்கு வரேன் யாரு உன் மனசு நோகும்படி நடந்துக்கிட்டாங்கன்னு சொல்லு அவங்கள நான் ஒரு கை பார்த்தேன்  என்றான் ஜெய் சற்று கோபமாக.

மீனு அவன் பேசுவது எல்லாம் கேட்டு அய்யய்யோ அப்படி எல்லாம் எதுவும் செஞ்சுறாதீங்க என் காலேஜ்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல சொல்லப்போனால் நான் ஒரே ஒரு நாள் தான் காலேஜ் போனேன் அதுக்கப்புறம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு எனக்கு விக்ரம் மைதிலி தவிர அவ்வளவா யாரையுமே அங்கு தெரியாது என்றால்.

ஏன் நீ காலேஜ் போக மாட்டேன் என்று இவ்வளவு பிடிவாதமா இருக்க உனக்கு  என்ன தான் பிரச்சனை என்றான் ஜெய்.

மீனு அமைதியாக தலையை குனிந்த படி அவன் மடியில் அமர்ந்திருக்க அவள் முகத்தில் கைவைத்து நிமிர்த்தியவன் தன்னை பார்க்குமாறு செய்தவன் சொல்லு நீ இப்படி காலேஜ் போக மாட்டேன்னு சொல்றது எனக்கு தான் கில்டியா பீல் ஆகுது என்னால தான் நீ காலேஜ் போக மாட்டியோ மாட்டேன்னு சொல்றியோன்னு என் மனசுக்குள்ள தோனி கிட்டே இருக்கு தயவு செய்து ஏன் போக மாட்டேன்னு சொல்ற அதுக்கான காரணம் என்னன்னு என்கிட்ட சொல்லு என்றான் ஜெய்.

அவன் மடியில் அமர்ந்து இருந்த மீனு அவனை சட்டென கட்டிக்கொண்டு எனக்கு உங்களை விட்டு எங்கேயும் போக பிடிக்கல… எனக்கு உங்க கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்கு உங்கள மறுபடியும் நான் மிஸ் பண்ண விரும்பல உங்களை விட்டு பிரிந்து என்னால கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது என்றால் மீனு கண்களில் கண்ணீர் ஓடு.

ஜெய்க்கு மீனுவின் இந்த வார்த்தைகள் அவன் இதயத்தின் அடிவாரம் ஆழம் வரை சென்று நங்கூரம் போட்டது போல இருந்தது.

தன்னைப் பார்த்து இரண்டு மூன்று நாட்கள் தான் ஆகியிருக்கும் அப்படி இருக்கும் போது எப்படி மீனுவால் தன் மேல் எவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருக்க முடியும் தன்னை பிரிந்து ஒரு நொடி கூட இருக்க முடியாது என்று சொல்லி வருத்தப்படுபவர்களை என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்த ஜெய் மெல்ல அவளை தன்னிடம் இருந்து பிரித்து.

ஏன் இன்னும் அப்படி சொல்ற என்னால் எங்கேயும் போகப் போறது இல்லையே உன் கூட தானே இருக்கப் போறேன் அப்புறம் என்ன நீ காலேஜ் போயிட்டு வர வேண்டியதுதானே. நீதான் தினமும் காலேஜ் போயிட்டு வர போறியே அப்புறம் என்ன காலையில போயிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்துட போற சாயங்காலம் நீ வீட்டுக்கு வந்தா என் கூடவே தானே இருக்க போற என்றான்.

அதை கேட்டதும் அப்போ நம்ம ஊருக்கு போகப்போவதில்லையா இங்க  சென்னையிலேயே தான் இருக்க போறோமா என்றாள்.

ஆமா ஏன் என்றான் ஜெய் புரியாமல்.

இல்ல நான் நினைச்சேன் நம்ம எப்படியும் இன்னும் ரெண்டு மூணு நாலு இல்ல காஞ்சிபுரம் போயிடுவோம்னு என்னால தினமும் அங்கிருந்து காசு காலேஜுக்கு ட்ராவல் பண்ணி வர முடியாதுன்னு நீங்க என்ன ஹாஸ்டல்ல தங்க வச்சிடுவீங்களோனு பயந்தேன் என்றால்.

உன் காலேஜ் எங்க இருக்கும்போது உன்னை தினமும் காலையிலேயே சாயங்காலமும் அலைய விடுறதுக்கு நான் என்ன பைத்தியமா உன் காலேஜ் எங்க இருக்கோ அதுக்கு பக்கத்திலேயே நம்ம வீடு பாத்துக்கலாம் உன்னோட காலேஜ் முடியற வரைக்கும் நம்ம அங்கேயே இருக்கலாம் தவிர எனக்கும் ஆபீஸ் மெயின் ப்ரான்ச் சென்னையில தான் இருக்கு கொஞ்ச நாள் நான் சென்னையிலயும் கொஞ்ச நாள் என்றான் ஜெய்.

அவன் அப்படிச் சொன்னதும் அப்போ நான் காலேஜ் போகட்டுமா அதுவும் இங்கே இருந்து போகலாம் அப்படித்தானே என்ன ஹாஸ்டல்ல எல்லாம் கொண்டு போய் சேர்த்து விட மாட்டீங்களே என்றால் சிறு பிள்ளை போல அவனைப் பார்த்து.

நீ ஹாஸ்டல்ல உன்ன சேர்த்து விட்டுடுவேனு தான் காலேஜ் போக மாட்டேன்னு சொன்னியா என்றான் ஜெய்.

ஆமாம் என்பது போல மீனு தலையாட்ட…

அவள் இத்தனை நேரம் காலேஜ் போக மாட்டேன் என்று சொல்லி சோகமாக இருந்ததற்கான காரணம் இதுதானா இவ்வளவு சிறிய காரணத்திற்காகத்தான் இப்படி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இவ்வளவு நேரம் இருந்தால் என நினைத்ததும் ஜெயிக்கு மேலும் சிரிப்பு அதிகமாக வாய்விட்டு சத்தமாக அந்த சிரித்தான்.

மடியில் அமர்ந்திருந்தவள் அந்த நிலவொளியில் வெளிச்சத்தில் ஜெய்யின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள்.

சத்தமாக சிரித்துக்கொண்டே மீனு வை பார்க்க அவன் தன்னை பார்த்ததும் சட்டென தன் பார்வையை மாற்றிக்கொண்டு வேகமாக அவன் மடியில் இருந்து எழுந்தவள் அப்போ நான் நாளையிலிருந்து காலேஜ் போரில் என்றால் சந்தோஷமாக.

தன் மடியில் இருந்து மீனும் எழுந்ததும் அவள் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் தன் மடியில் அவளை அமர வைத்துக் கொண்டவன். இவ்வளவு நேரம் என்ன ஒரு நொடி கூட  விட்டு பிரிந்து இருக்க முடியாதுன்னு சொன்னதெல்லாம் பொய்யா இந்த சின்ன விஷயத்துக்காக தான் காலேஜ் போக மாட்டேன்னு நீ முகத்தை தூக்கி வச்சிட்டு இருந்திருக்க.. அப்போ என் மேல உண்மையாவே உனக்கு பிரியம் இல்லை அப்படித்தானே என்றான் ஏமாற்றமாக அவள் முகத்தைப் பார்த்து.

அவன் சொன்னதைக் கேட்டு வேகமாக தன் தலையை அசைத்து அவன் சொல்வதற்கு மறுப்பு தெரிவித்த மீனு “ம்ஹும்… அப்படி இல்ல நான் காலேஜ் போறேன்னு சொல்லிட்டா  இங்க என்ன செல்லத்தங்கி படிக்க சொல்லிடுவீங்க அப்படி இல்லன்னா என் அம்மா வீட்ல இருந்து படிக்க சொல்லிடுவீங்க. நான் இங்கேயும் நீங்க ஊர்ல உங்க வீட்டிலயும் இருப்பீங்கன்னு நினைச்சுட்டேன் நம்ம அடிக்கடி பார்க்க முடியாது பேச முடியாது அப்படின்னு நினைச்சு தான் ஏற்கனவே உங்கள தேடி என் வாழ நான் ஒரு வருஷ முழுக்க வேஸ்ட் பண்ணிட்டேன் இனிமேலும் உங்களை பிரிந்து என்னால இருக்க முடியாது அதனாலதான் நான் காலேஜ் போக மாட்டேன் என்று சொன்னேன்” என்று உண்மையான காரணத்தை அவனிடம் கூறினால்  மீனு.

அப்படி வா வழிக்கு நீயே இப்போ உன் வாயாலயே சொல்லிட்டியே என்ன ஒரு வருஷமா தேடினேன்னு சொல்லு என்ன உனக்கு எப்படி தெரியும் என்னை நீ எங்கே முதன் முதலா பார்த்த என்ன எதுக்காக நீ இந்த ஒரு வருஷமும் தேடிக்கிட்டு இருந்த சொல்லு என்றான் அவள் இடையே இறுக்கமாக கட்டிக்கொண்டு.

அதில் நெளிந்த மீனு அவன் மடியில் இருந்து எழுந்திருக்க போக …

எங்கிட்ட இருந்து தப்பிச்சு போக பார்க்கிற என்ன விட்டு ஒரு நொடி கூட இருக்க முடியாதுன்னு சொல்ற ஆனா என் பக்கத்துலயும் வர மாட்டேங்குற இப்படி இருந்தா நான் என்ன செய்வது இப்படி எல்லாம் என்னோட கேள்விக்கு பதில் சொல்லாம உன்ன நா இன்னிக்கு இங்கிருந்து போக விடப்போவதில்லை நீ எதுக்காக என்ன தேடுனேன்னு முழுசா சொல்லாம நான் உன்னை இன்னிக்கு விட்றதா இல்ல என்று அவள் இடையில் மேலும் இருக்கும் கூட்டினான்.

இன்று ஜெய்யிடம் தான் வசமாக மாட்டிக் கொண்டோம். அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் ஜெய் தன்னை விடப்போவதில்லை என புரிந்து கொண்ட மீனு அவனை முதன் முதலில் எங்கே பார்த்தோம் என சொல்ல துவங்கினாள்.

இருவரும் ஒரு மாலை வேளையில் போதை மயக்கத்தில் ஒருவரை ஒருவர் பிறந்த மேனியாக தழுவிக்கொண்டு படுத்திருந்த தருணம் அவளுக்கு நினைவில் வந்தது.

தொடரும்….

எனை மாயம் செய்யும் ராட்சசன் பார்ட் -2 ரொமான்ஸ் நிறைந்த பாகம் காதல் ரசம் சற்று தூக்கலாக இருக்கும். அது போன்ற கதை பிடிக்காதவர்கள் வயதுக்கு வராதவர்கள் படிக்க வேண்டாம் 

லயா 

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured