Home Uncategorizedஇராக்கதனின் ரதி அவள் Part-1-1

இராக்கதனின் ரதி அவள் Part-1-1

by Layas Tamil Novel
562 views

EPISODE 1

“ஏய்! இங்க பாரு!! சொன்னா கேளு.. என்கிட்டே வராத.. ” என்று கெஞ்சிக்கொண்டே தன் துப்பட்டாவை கையில் சுற்றிக்கொண்டு அவளை நோக்கி நடந்து வந்தவனிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தாள்  ரதி.

“என்ன குட்டி.. இப்படி பின்னாடியே போய்க்கிட்டு இருந்தா நான் என்ன உன்னை தொரத்தி பிடிச்சு விளையாடவே இங்க வந்திருக்கேன் . இங்க வா டி… ” என்று எட்டி ரதியை பிடிக்க கையை நீட்டினான் .

“சொன்ன கேளு.. உன்கிட்டே கெஞ்சி கேக்குறேன் என்னை எதுவும் பண்ணிராத . நான் உன்னை பத்தி பத்திரிக்கையில் இல்லாததும் பொல்லாததுமா எழுதினேன். இல்லையே நீ செய்யுற அக்கிரமத்தை தானே என்னோட கதையில் எழுதினேன் அதுவும் நீதான்னு அதை படிக்குறவங்க யாருக்கும் தெரியாது. அப்பறோம் ஏன் இப்படி வந்து என்னை டோர்சேர் பண்ற.. ” என்ற ரதி வாயில் சுருட்டை வைத்து ஊதிக்கொண்டே அவளை விழுங்குவது போல பார்த்துக்கொண்டு இருந்தவனிடம் அந்த நிலையிலும் தன் மேல் தவறு  எதுவும் இல்லை என்று பேசிக்கொண்டு இருந்தாள் .

“அந்த கதையை படிக்குறவங்களுக்கு வேணும்னா அது நான்னு தெரிஞ்சிருக்காது . ஆனா எனக்கு தெரியுமே.. அந்த கதையில வர இரக்கதன் நான் தான்னு… ” என்றவன் கையில் இருந்த அவள் துப்பட்டாவை தூக்கி எறிந்துவிட்டு அவளை நெருங்கி இருந்தவன் .

ரதியை சுவற்றோடு தள்ளி அழுத்தி நிற்க வைத்தவன் வாயில் இருந்து சுருட்டை எடுத்துவிட்டு அவளை பார்த்தான்.

“கடவுளே! என்ன என்னை இவன் இப்படி பாக்குறான். சுருட்டை வெச்சு என் முகத்துல சூடு போட  போறானா… ” என்று நடுங்கியபடி தனக்கு மிக நெருக்கத்தில் இருந்தவனின் முகத்தை பார்த்தாள் .

ரதியின் கன்னத்தில் கைவைத்து அழுத்தி பிடித்தவன் தன் வாயில் வைத்திருந்த புகையை அவள் முகத்தில் ஊதி “சும்மா சொல்லக்கூடாது குட்டி என்னை அணுவணுவா ரசிச்சு , அனுபவிச்சு எழுதி இருக்க.. நானே படிச்சு ஆச்சர்யமாகிட்டேன்னா பாத்துக்கோயேன் .. என்னை அபப்டியே பாக்குற மாதிரி இருந்துச்சு தெரியுமா!!  ” என்றவன்.

“ஆமா அந்த கதையில எனக்கு ஜோடியா ஒரு பொண்ணு வருமே அது யாரு ?” என்று அவள் கன்னத்தில் அழுத்தம் கூட்டினான் .

“அது.. அது.. சும்மா கதைக்கு சுவாரஸ்யம் வேணும்னு… ” என்று ரதி சொல்ல…

“கரெக்ட் கதையில கூட சுவாரஸ்யமா இருக்கணும்னு ஒரு பொண்ணை எனக்கு கோர்த்து விட்டுருக்க… எனக்கும் இந்த அடிதடி , வெட்டு குத்து சண்டை செஞ்சு ரொம்ப போர் அடிக்குது. எனக்கும் ஒரு சுவாரஸ்யம் வேணாமா… ” என்று அவளை நெருங்கி தன் உடலை ரதியின் மேல் அழுத்திக்கொண்டு நின்றான்.

“எ .. என்ன பண்ண போறீங்க…  ” அன்று படபடக்கும் விழிகளில் தான் அணிந்திருந்த மூக்குக்கண்ணாடியை தாண்டி தெரிந்த அவன் இறுகிய முகத்தை பார்த்தாள் .

“எனக்கு எப்பவுமே என்ன பண்ண போறேன்னு சொல்லிட்டு செய்யுற பழக்கம் கிடையாது. நான் செஞ்சதுக்கு அப்பறோம் நீயே தெரிஞ்சுப்ப … ” என்று அவள் கன்னத்தை அழுத்த ரதியின் சிவந்த கண்கள் அவன் அழுத்தம் கூட்டியதில்  மேலும் சிவந்து வலியெடுத்தது.

“இவன்கிட்டே வசமா மாட்டிகிட்டோமே.. இவன்கிட்டே இருந்து எப்படி தப்பிக்குறது ” என்று உள்ளுக்குளேயே புலம்பிக்கொண்டு இருந்தாள் .

“என்ன… குட்டிஇ… இவன்கிட்டே இருந்து எப்படி டா தப்பிக்கலாம்னு யோசிக்குற அப்படி  தானே ” என்றான்.

அவன் சொன்னதை கேட்டு  ஆச்சர்யமாக விழி விரித்து ரதி அவனை பார்க்க… அவள் ஆச்சர்யத்தை அதிகப்படுத்தும் விதமாக அழுந்திய கன்னத்தால்  குவிந்து இருந்த அவள் மீன்குஞ்சு இதழை தன் சுருட்டு பிடித்த இதழால் முத்தமிட்டு இருந்தான்.

அதை எதிர்பார்க்காதவள் “இல்ல.. இல்ல.. வேணாம்.. வேணாம்… ” என்று வாய்  விட்டு அலற துடிக்க…

“ஐயோ ! வேணாம்.. என்னை விட்டிரு.. ” என்று தூக்கத்தில் இருந்து கண் விழித்து வியர்க்க விறுவிறுக்க படுக்கையில் இருந்து எழுந்திருந்தாள்  ரதி.

அவளை கட்டிக்கொண்டு படுத்து இருந்த அவள் தங்கை “அக்கா.. இன்னிக்கும் அந்த இராக்கதன் தான் உன் கனவுல வந்தானா… ” என்றாள்  தூக்கத்திலேயே..

“ஹா.. ஹா… ஆமா டி…” என்று மூச்சு வாங்க ப்ரியாவை திரும்பி பார்த்தாள்  ரதி.

ப்ரியா போர்வையை இழுத்துபோர்த்தியவள்  ” சரி அதான் எழுந்துட்டே இல்ல.. அபப்டியே அந்த ஹீட்டரை ஆன் பண்ணி விட்டிரு அக்கா..  எனக்கு காலேஜ்க்கு டைம்  ஆச்சு. நான் ஒரு 10 மினிட்ஸ் தூங்குறேன் ” என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்க சென்றாள் .

ரதி தன் கனவை நினைத்து பயந்துகொண்டே படுக்கையை விட்டு எழுந்தவள் படுக்கையை சரிசெய்துவிட்டு எழுந்து வந்து ஹீட்டரை போட்டுவிட்டு ரெடியாக சென்றாள் .

அவள் குளித்து உடை மாற்றிவிட்டு வெளியே வர.. அவளுக்காக மணக்க மணக்க முருங்கைக்காய் சாம்பாரும், நெய் தோசையுமாக டைனிங் டேபிளுக்கு வந்தார் சோபனா.

அவரிடம் தோசையை வாங்கி அவசர அவசரமாக பிட்டு வாயில் போட்டவள் “அம்மா ஆபீஸ்க்கு லேட்டாகிருச்சு நான் கிளம்பறேன் . அப்பாவும், ஸ்நேஹனும் வந்தா சொல்லிருங்க ” என்று தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு  அவள் வேலை பார்க்கும் தினம் கவனி பத்திரிக்கை ஆஃபீஸிற்கு கிளம்பினாள்.

அவள் வந்து வண்டியை நிறுத்தியதுமே எதிரே தென்பட்ட  அந்த பத்திரிக்கையின் மூத்த நிருபர் குணவான் ரதியை பார்த்ததும் அவளிடம் வந்தவர்  “என்ன ம்மா.. கதாசிரியரே.. உன் கதைக்கு ஹீரோ கிடைச்சிட்டுனா ?” என்று அவளிடம் நக்கலாக கேட்டார்.

“எங்க சார்.. என் கதைக்கு ஒரு ரக்கெட் ஆனா அடிதடி தெரிஞ்ச ஆள் வேணும். ஆனா நான் பாக்குற எல்லாருமே உங்களை மாதிரி சாம்பாரா இல்ல இருக்காங்க .. ஒருத்தனாச்சும் ஏதாவது தப்பு நடந்தா அதை தைரியமா இறங்கி  வந்து கேக்குறானுங்களா.. இல்லையே.. அப்படியே கேட்க வந்தாலும் அவனை போட்டு அடிச்சு தொரத்திடுறானுங்க.. ” என்று பெருமுச்சுவிட்டபடி அவரோடு சேர்ந்து ஆபீஸிற்குள்  நுழைந்தாள் ,

“அப்படியே சந்தடி சாக்குல என்னை சாம்பாருன்னு சொல்லிட்டே.. பொழைச்சு போ… ” என்றவர் அவளோடு தன் காபினுக்கு செல்ல.. அங்கே நடுநாயகமாக சுவற்றில் மாட்டி வைத்து இருந்த 50″ எல்இடி டிவியில்

“ஒரு முக்கிய செய்தி நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் முதல் அமைச்சர் சிவராஜன் ஜெயித்த தொகுதியான பெரம்பலூர் தொகுதியில்  எதிர்க்கட்சி சார்பாக   அவர்கள் கட்சியின் கடை மட்ட தொண்டனான ரவி என்பவரை முதலமைச்சர் திரு சிவராஜனை எதிர்த்து  நிற்க வைப்பதாக அந்த கட்சியின் தலைவர் சதாசிவம் அறிக்கை வெளியிட்டு உள்ளார் ” என்ற செய்தி டிவியில் வெளியானது.

“சரி தான் அடுத்த வேலை நமக்கு வந்திருச்சா.. சரி கதாசிரியரே .. நீங்க இப்போ நம்ம ஆஃபிஸில் இருந்து எந்த களையை பிடுங்க போறீங்க.. ” என்றார்.

“ம்ம்.. எகத்தாளம் தான் யா உமக்கு.. நான் வெட்டியா இருக்கேன்னு எவ்ளோ நக்கலா சொல்ரறீரு… ” என்றவள் தன் ஹாண்ட் பேக்கை கழட்டி டேபிளில் வைத்த படி அவரிடம் கேட்டாள் .

“இப்போ உங்களுக்கு நான் எந்த களையை பிடுங்கினால் என்ன வந்தது ” என்றாள்  அவரை போலவே..

“நீயே ஒத்துண்டே.. சும்மா தான் ஆபீசில் உக்காந்துண்டு நேரத்தை கடத்துறேன்னு.. அப்போ என்கூட கொஞ்சம் கிளம்பி வாயேன். என்னோட கேமரா மேன் . அவன் கொழுந்தியா சீமந்தத்துக்கு வீடியோ எடுக்க போய்ட்டான் ” என்றார்.

” இதுக்கு தான் களை  பிடுங்குவது பற்றி பேச்சு எழுந்ததோ…” என்று  டேபிளை வைத்த தன் பேக்கை  மீண்டும் எடுத்த்து தொழில் மாட்டிக்கொண்டு ELUNTHAVAL

“நீர் அதை நேரடியா கேட்க வேண்டியது தானே .. அதை விட்டுவிட்டு களை .. கபடை  என்ற பேச்சு எதற்கு ” என்றவள் “எங்கே உங்களுடைய படமி  அதை கொடுங்கள் அதில் எல்லாம் சரியாக உள்ளதா என்று நான் பார்க்க வேண்டும் ” என்று அய்யர் ஆத்து  பெண்ணில் இருந்து இப்போது சங்க காலத்து பெண்ணை போல பேசிக்கொண்டே அவரிடம் வந்தாள் .

“அம்மா! தாயே! போதும்.. இதுக்கு மேல என்னால உன்கிட்டே பேச முடியாது . கேமெராவை தானே கேக்குற.. இந்தா பிடி ” என்று தன் டிராவை  திறந்து கேமெராவை அவள் கையில் திணித்துவிட்டு முன்னே நடந்தார்.

அவரை பார்த்து சிரித்த படி கையில் இருந்த கேமராவில் எல்லாம் சரியாயக  உள்ளதா  என்று பார்த்துவிட்டு அவரோடு காரில் ஏரியாவில்.

“இப்போ எங்கே? யாரை பேட்டி எடுக்க போறோம் ” என்றாள் .

“வேற யாரு ? டிவியில் இப்போ பார்த்தோமே… பெரம்பலூர் தொகுதியில் முதமைச்சர் சிவராஜனை எதிர்த்து போட்டி இடுற ரவியை பேட்டி எடுக்க தான். அவ்ளோ பெரிய பதவியில் இருக்குறவை எதிர்த்து சாதாரண தொண்டனை தேர்தலில் முதலமைச்சரை எதிர்த்து நிற்க வெச்சிருக்கார் சதாசிவம். .அப்போ கண்டிப்பா யாராவது பிரச்சனை முலைக்கும் அதை முதல் ஆளா நாம கவர் பண்ணி நம்ம தினம் கவனி பத்திரிகையில் கோட்டை எழுத்துல பிரென்ட் பேஜ்ல  போட வேண்டாமா … ” என்று காரை நேரே ரவியின் வீட்டிற்கு செலுத்தினார் .

அவர்கள் ஆபீசில் இருந்து ரவியின் வீட்டிற்கு கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ட்ராபிக்கில் பயணம் செய்து ரவியின் வீட்டை தேடி பிடித்து கார் செல்ல முடியாத அவன் வீட்டிற்கு காரை தள்ளி பார்க் செய்துவிட்டு நடந்து வந்து இருந்தனர்.

ரவியின் வீடு மாட மாளிகையோ , கூடை கோபுரமோ கிடையாது. அடிமட்ட தொண்டனின் வீடு எப்படி இருக்குமோ அப்படி தான் இவனின் வீடும் இருந்து.

தூரத்தில் இருந்தே ரவியின் வீட்டை கேட்டு தெரிந்த்து கொண்டு குணவானும் , ரதியும் சென்றனர். அப்போது தான் ரவியின் வீட்டின் முன்பு கும்பலாக சில ஆட்கள் நிற்பதை இருவரும் கவனித்தனர்.

“என்ன சார் சீப் மினிஸ்டர் கேண்டிடேட் வீட்டு முன்னாடி இவ்ளோ கூட்டம். நமக்கு முன்னமே  யாரோ அந்த ரவியை  பேட்டி எடுக்க வந்துட்டாங்க போலவே… ” என்று கேமராவை வேகமாக வெளியே எடுத்து அங்கிருந்த படியே சூட்  செய்துகொண்டே ரவியின் வீட்டை நோக்கி நடந்தாள்  ரதி.

“எனக்கும் அதான் மா தெரியல.. அங்க தானே போறோம் வா பாத்துக்கலாம் ” என்று இருவரும் ரவியின் வீட்டை நெருங்க…

அப்போது அங்கே நின்று இருந்த ஆட்கள் திடீர் என்று தெறித்து ஓட… அவர்களை எல்லாம் பார்த்துவிட்டு ரவியின் வீடு வாயிலில் வந்து நின்று குணவான் கேமெராவை பிடித்துக்கொண்டு அவர் பின்னால்  வந்த ரதியை வேகமாக பின்னால் தள்ளிவிட்டு விலகி நின்றார்.

அவர் விலகிய மறுநொடி வீட்டிற்குள் இருந்து அம்மா!!! என்று அலறியபடி வீடு வாசலில்  வந்து விழுந்திருந்தான் சீப் மினிஸ்டர் கேண்டிடேட்டான ரவி.

அவனை அப்படி பார்த்ததும் ரதி ஓடிச்சென்று தூக்கி விட முயல… அவளை கையை பிடித்து தன் பின்னால்  இழுத்து நிற்க வைத்த குணவான்.

“பெரிய சூப்பர் ஹீரோவா நீ… பேசாம வந்த வேலையை மட்டும் பாரு. கேமெராவை சரியான ஆங்கிள்ல வெச்சு விடியோவை மட்டும் எடு ” என்று அவளை மறைத்து நிப்பாட்டி இருந்தார் குணவான்.

“என்னை விட்டிரு.. நானா இந்த எலெக்ஷன்ல நிக்குறேன்னு சொல்லல. அண்ணன்  தான் என்னை நிக்க சொன்னாரு. நீ தைரியமா நில்லுடா எதுவந்தாலும் நான் பாத்துக்கறேன்னு சொன்னாரு. எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. என்னை ஒன்னும் செஞ்சுடாத. என்னை விட்டிரு..” என்று ரவி கெஞ்சிக்கொண்டே தரையில் இருந்து எழுந்திருத்தான்.

“அதே தான் நானும் சொல்றேன். நானா எதுவும் பண்ணல.. எனக்கும் ஒன்னும் தெரியாது. எங்க அண்ணன்  தான் அவரை எதிர்த்து யார் நின்னாலும் அவங்களை  போடணும்னு சொல்லி என்னை இங்கே அனுப்பி வெச்சாரு. எனக்கும் இங்க நடக்க போறதுக்கு எந்த சம்மந்தமும் இல்லை ” என்று தன் சட்டைக்கு பின்னால்  முதுகில் சொருகி வைத்து இருந்த வீச்சருவாளை வெளியே எடுத்தான் முதலமைச்சர் சிவராஜனின்  இடது, வலது அனைத்தும் என அவருக்காக எதையும் செய்பவன் அங்கே நின்று இருந்தான்.

தன் கேமராவில் அந்த வீச்சருவாளை  கிளோஸப்பில் படம் பிடித்துக்கொண்டே இன்ச் இன்ச்சாக கேமெராவை மேலே உயர்த்தி வந்த ரதி அந்த அரிவாளை பிடித்திருந்த கையை பார்த்து “ப்பா.. என்ன கையுடா  இது.. இப்படி இறுகிப்போய்  இருக்கு… ” என்று  இன்னும் கொஞ்சம் மேலே உயர்த்தி இருந்தவள் அந்த கையை தாண்டி அணிந்திருந்த சட்டையை கிழித்துக்கொண்டு வந்துவிடும் போல திமிறிக்கொண்டு இருந்த அவன் தோள்களை பார்த்து “இது என்ன இப்படி இருக்கு  பரங்கி மலை மாதிரி ” என்று அந்த திணவெடுத்த தோள்களுக்கு சொந்தமானவனின் முகத்திற்கு கேமெராவாய் கிளோஸ் அப் கொண்டு சென்றவள் வாயில் பெரிய சுருட்டை தன் பற்களுக்கு இடையில் வைத்து கடித்து பிடித்திருந்தவனின் முகத்தை பார்த்ததும் அதிர்ந்தவள் .

கேமெராவின் வழியே கிலோசப்பில் தெரிந்தவன் முகத்தை உற்று பார்த்து உறுதி செய்தவள் கேமராவை எடுத்துவிட்டு கண்கள் தீக்கனலாய் தெறித்த படி தனக்கு எதிரே நின்று இருந்த ரவியை அவன் வீச்சரிவாள் பதம் பார்த்திருக்க.. அதில் அவன் முகத்தில் ரத்தம் தெறித்து அவனை மேலும் ஆக்ரோசமானவனாக காட்டியது ரதிக்கு.

“இவனா!! இவன் எதுக்கு இங்க வந்தான் ” என்று குணவான் சொல்ல..

“சார் இவனை உங்களுக்கு முன்னமே தெரியுமா ” என்றாள்  இன்னமும் நம்பமுடியாமல் .

“இவனை அரசியல் வட்டாரத்துல தெரியாதவங்க யாருமே இல்ல ம்மா.. அவன் தான் முதலமைச்சர் சிவராஜனோட எல்லாமுமா  இருக்குறவன் . இவன் பேரு .. ” என்று குணவான் யோசிக்க…

தன் கனவில் வந்தவன் அச்சு அசலாக இம்மி பிசகாமல் அப்படியே உரித்து வைத்து அவள் முன்பு கொலைவெறியோடு நின்று இருந்தவனை பார்த்து ரதியின் இதழ் “இராக்கதன்” என்று அவளையும் அறியாமல் உச்சரிக்க…

“ம்ம்… அபப்டியும் சொல்ல்லாம். அரக்கனுக்கு மறு பெயர். அரக்கனையும் தூக்கி சாப்பிட்டிருவான்  இவன் . இவன் பேரு ரங்கராஜன். இவனை எல்லாரும் ராக்கின்னு தான் கூப்பிடுவாங்க ” என்று அவள் கனவு நாயகனை.. சாரி சாரி .. .கனவில் வந்த நாயகன் பெருமை பற்றி ரதியிடம் கூறிக்கொண்டு இருந்தார்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured