EPISODE 18
“ரதி! ரதி! ” என்று அவள் கன்னத்தை தட்டி எழுப்பிக்கொண்டு இருந்தான் ராக்கி .
“ராக்கி இந்த பொண்ணு யாரு உனக்கு அவங்களை தெரியுமா ” என்று CM கார்ட் ஒருவர் வந்து அவனிடம் பேசினார்.
“ஆமா எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான் . ஆமா இவ எப்படி இங்க.. ” என்றான் புரியாமல்,
“நீங்க தானே நம்ம CM ஐ யாரோ டார்கெட் பண்ணி போட்டோ எடுக்குறாங்கன்னு சொல்லி அவங்களை விசாரிக்க சொன்னிங்க.. நம்ம CM ஐ இவங்க தான் போட்டோ எடுத்துட்டு இருந்தாங்க..” என்று அவனிடம் வந்து ரதியிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி இருந்த கேமராவை ராக்கியின் முன்பு நீட்டினான்.
“CM அ இவங்களா போட்டோ எடுத்துட்டு இருந்தார்களா !” என்றான் ராக்கி
“ஆமா ராக்கி ” என்றவர்
“சரி நான் வெளியே அவங்களை விசாரிக்குறேன் . நீ இந்த பொண்ணு கூட இரு ” என்று அவர் வெளியே சென்றுவிட…
கையில் இருந்த கேமராவை இப்படியும், அப்படியும் திருப்பி பார்த்துவிட்டு ரதியை ஒரு முறை பார்த்தான் . அவள் இன்னமும் மயக்கத்தில் தான் இருந்தாள்.
அவள் அருகில் கட்டிலில் அமர்ந்தவன் கையில் இருந்த கேமெராவின் LCD டிஸ்பிலே மானிட்டரை ஆன் செய்தவன் அதில் ரதி எடுத்த போட்டோக்களை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான்.
முதலில் அங்கே அவர்கள் கூடி இருந்த இடத்தை சுற்றி போட்டோ எடுத்திருந்தாள். ராகவ்வை போலீஸ் உடையில் , அவனோடு சேர்த்து மொத்த குடும்பமும் நின்று போட்டோ எடுத்திருந்தது. ரதியையும் யாரோ அழகாக அவள் செய்யும் கோணங்கி தனத்தை போட்டோ எடுத்திருந்தனர். அதை எல்லாம் ரசித்துக்கொண்டே வந்தவன் . அதில் இடையில் ஒரு வீடியோ இருக்க.. அதை ஓட விட்டான்.
அதில் ரதி தன்னை தானே வீடியோ எடுத்தபடி ஒரு பெரிய பேனர் முன்பு நின்று “இவரை ஒரு நாள் நான் நேர்ல மீட் பண்ணி இவரோட ஆட்டோகிராப் வாங்கணும், முடிஞ்சா ஒரு செல்பி இவர்கூட எடுத்துக்கணும் ” என்று அந்த நட்சத்திரத்தின் பேனர் முன்பு வீடியோ எடுத்தவள். திரும்பி அந்த 60 அடி கட் அவுட்டை பார்த்து “நீ தான் என் ட்ரீம் பாய் ஆகாஷ் ” என்று காற்றில் அந்த பெயருக்கு முத்தத்தை பறக்க விட்டுக்கொண்டு இருந்தாள் .
அதை பார்த்த ராக்கிக்கு பொறாமையாக இருந்தது . “இவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை வேற இருக்கு.. அதுங்களுக்கு கல்யாணம் ஆக போகுது . இந்த கிழவன் இவளுக்கு ட்ரீம் பாய்யாமா … ” என்று தலையில் அடித்துக்கொண்டவன்.
“இந்த விடியோவை பார்த்தாலே எனக்கு கடுப்பாகுது ” என்று அவள் கேமராவில் இருந்த அந்த விடியோவை டெலீட் செய்யப்போக…
“ஏய்! என் கேமெராவை வெச்சிட்டு நீ என்ன பண்ணிட்டு இருக்க… ” என்று மயக்கம் தெளிந்து அவசரமாக எழுந்து அவன் கையில் இருந்த கேமராவை பிடுங்கப் போனாள் ரதி .
“ஏய் ரௌடிகுட்டி எழுந்துட்டியா… என்ன இப்படி மயக்கம் போட்டு பொசுக்குன்னு விழுந்துட்ட.. உன்னை காணாம எங்க எல்லாம் தேடி திரிஞ்சு உன்னை பார்த்த சந்தோஷத்துல ஆசையா வந்து உனக்கு முத்தம் கொடுத்தா நீ இப்படி மயக்கம் போட்டு விழுந்துட்டியே..” என்றான் அவள் கையில் கேமெராவை கொடுக்காமல் போக்குக்காட்டிக்கொண்டு .
“நான் என்ன உன் பொண்டாட்டியா.. இல்ல லவ்வரா.. நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு வந்து எனக்கு முத்தம் கொடுக்குற…” என்றாள் அவனிடம் அந்த கேமெராவை வாங்கும் நோக்கில் சண்டையிட்டுக்கொண்டே .
“ஏன் நீ மட்டும் அன்னிக்கு அந்த குல்ஃபியை சாப்டுட்டு என்னை முத்தம் குடுத்தே மூட் கிளப்புனியே அப்போ நீ எந்த உரிமையில் எனக்கு முத்தம் குடுத்த.. ” என்றான் . தன் மடியில் அமர்ந்து கேமெராவை பிடுங்கிக்கொண்டு இருந்தவளை இடையில் கை கொடுத்து இறுக்கி ஒரு கையால் அணைத்த படி.
அப்போது தான் தான் ராக்கியின் மடியில் அமர்ந்து இருபப்தை உணர்ந்தவள் அவன் மடியில் இருந்து எழுந்திருக்கப் போக…
“எங்க போற.. கொஞ்ச நேரம் இப்படியே இரு நல்லா இருக்கு ” என்று அவளை மேலும் இறுக்கி அணைத்து பிடித்துக்கொண்டவன்.
“ஆமா அந்த கிழவனை உனக்கு அவ்ளோ பிடிக்குமா .. போயும் போயும் அந்த கிழவன் உன்னோட ட்ரீம் பாய்யின்னு சொல்ற.. ” என்று கேமெராவில் இருந்த அந்த விடியோவை ஓடவிட்டு அவளை நக்கலாக பார்த்தான்.
“ஏய்! என்னோட கேமெராவில இருக்கறதை எல்லாம் நீ எதுக்கு பாக்குற.. முதல்ல அதை குடு ” என்று மீண்டும் அவன் கையில் இருந்த கேமெராவை பிடுங்க போனாள் .
“இரு இரு.. இந்த வீடியோ எனக்கு பிடிக்கல.. அதை டெலீட் பண்ணிட்டு தரேன் ” என்று அந்த விடியோவை ராக்கி டெலீட் செய்துவிட…
“டேய் ரௌடி ராஸ்கல் குடுடா என் கேமராவை . அந்த வீடியோ எனக்கு வேணும். அதை டெலீட் பண்ணாத டா… ” என்று பதறினாள் ரதி.
“பொறு பீடா.. ” என்று அந்த வீடியோ டெலீட் ஆகிவிட்டதா என்று பார்த்துவிட்டு அவளிடம் கேமராவை தூக்கி போட்டான்.
அவன் மடியில் இருந்தவள் குதித்து அந்த கேமெராவை கீழே விழாமல் பிடித்தவள் குனிந்து பார்த்தாள் .
அவளை ஒரு கையால் அணைத்து பிடித்திருந்தவன் மற்றொரு கையை பின்னால் மெத்தையில் ஊன்றிக்கொண்டு அவளை பார்த்தான்.
சரியாக அவள் குட்டி தலையணைகள் அவன் முகத்திற்கு நேராக இருந்தது.
அதை பார்த்தவள் பதறிக்கொண்டு எழ முயற்சிக்க… அவளை செல்லவிடாமல் பிடித்தவன் “அந்த கிழவனுக்கு எல்லாம் முத்தம் கொடுத்தே இல்ல… எனக்கும் முத்தம் குடு ” என்று நிமிர்ந்தான்.
அவன் நிமிர தன் மார்பு அவன் முகத்தில் உரசிவிடக்கூடாது என்று ரதி பின்னால் வளைந்தாள்.
“ஓஹோ!… என் மேல உரசிடக்கூடாதுன்னு பின்னால் வலையுற.. ம்ம்… இருக்கட்டும் ” என்று அவள் உடலை தன் பார்வையால் அளந்தவன் .
“இதெல்லாம் எனக்கு சொந்தமானது . இப்போதைக்கு உன்னை எதுவும் பண்ணாம விடறேன். ” என்றவன் ரதியின் இடையில் கை கொடுத்து அவளை தூக்கி தன் அருகில் கட்டிலில் அமர வைத்தவன்.
“இங்க பாரு இந்த மாதிரி எல்லாம் என்கிட்டே பேசுறது எல்லாம் வேணாம். நீ நினைச்சதை கொஞ்சம் கூட யோசிக்காம பேசுற.. ” என்று அவன் கை இன்னும் தன் இடையை அழுத்தி பிடித்திருக்க… கூச்சத்தில் நெளிந்து கொண்டே அவனை பார்த்தாள் .
“ஏன் பேசக்கூடாதா உன்கிட்டே தான பேசுறேன். அதென்னவோ தெரியல பீடா… உன்னை பார்த்தாலே என் மனசுல இருக்குறது எல்லாம் தானாவே வெளிய வந்துருது ” என்று அவளை தன் பக்கம் இழுத்தவன்.
ரதியின் மூக்கோடு தன் மூக்கை உரசி அவளை கண்களோடு கண்கள் பார்த்து “உன்னை காணாம நான் எவ்ளோ பதறிட்டேன் தெரியுமா… என் உசுரே என்கிட்டே இல்ல டி… ” என்றான் உண்மையாக.
அவன் குரலில் இருந்த அக்கறையை உணர்ந்தவள் அவன் நெருக்கத்தில் முகம் சிவக்க ராக்கியை பார்த்தாள். இப்படியே ரதியின் அருகில் இருந்தாள் தன் கண்ட்ரோல் இல்லாமல் போவதை உணர்ந்தவன் அவளை விட்டு தள்ளி அமர்ந்து தலையை கோதிகொண்டு
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு… எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு.. நான் அதை முடிச்சிட்டு வந்து உன்னை இங்க இருந்து கூப்டு போறேன்” என்று கட்டிலில் இருந்து எழுந்தான் .
“நீ ஒன்னும் என்னை கூப்டு போக வேணாம். எனக்கே வழி தெரியும் நானே போய்க்கிறேன்” என்றாள் .
“இப்போ மணி என்ன தெரியுமா.. நைட் 10 ஆச்சு.. இந்த நேரத்துல நீ தனியா போறதெல்லாம் வேணாம். நானே கூப்டு போறேன் ” என்றான் .
“ஏன் நான் தனியா போகமாட்டேனா “என்றாள் வீம்பாக.
“நீ தனியா தான் போவ.. ஆனா உன்னை தனியா அனுப்ப எனக்கு மனசு வரல ” என்றவன், “யார் யார் எப்படின்னு யாருக்கு தெரியும். பொண்ணுங்களுக்கு இங்க எங்க பாதுகாப்பு இருக்கு… ” என்றான்.
“உங்களை மாதிரி பொண்ணுங்ககிட்டே ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்குற ஆளுங்க எல்லாம் ஒழுங்கா இருந்தா . நாங்க பாதுகாப்பா தான் இருப்போம் ” என்றாள் ரதி.
அதை கேட்டதும் கோபம் வந்தவனாக ” என்னை அப்போ பொம்பளை பொறுக்கின்னு சொல்றியா ” என்று அவள் குரல்வளையை பிடித்தான்.
“நா… நான்.. அப்.. அப்படி சொல்லல… பொ .. பொதுவா சொன்னேன் ” என்று ராக்கியின் இந்த கோபத்தை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியபடி பேசினாள்.
அவள் முகம் வலியில் சுருங்குவதை பார்த்த ராக்கி ரதியின் கழுத்தில் இருந்து கையை எடுத்தவன். “நான் வர வரைக்கும் அமைதியா இந்த ரூம்குல்லையே இரு.. வீனா வெளியே வந்து அங்க நடக்குறதை எல்லாம் பார்த்து அப்போ மயங்கின மாதிரி மயங்கி விழுந்துராத சரியா “என்றவன் தன் மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
“என்ன யார் இந்த வேலையை பார்த்ததுன்னு எவனாவது வாயை திறந்து பேசுனாங்களா..” என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தான் ராக்கி .
“இல்ல ராக்கி யாருமே வாயை திறக்க மாட்டேங்குறாங்க.. . எப்படி கேட்டாலும் உண்மை வர மாட்டேங்குது ” என்று அங்கே இருந்த அவனுடைய ஆள் கூறினான்
“சொல்லுங்கடா யார் இந்த வேலையை பார்த்தது. எவ்ளோ தைரியம் இருந்தா அவ்ளோ பாதுகாப்பையும் மீறி எங்க அண்ணனை கொல்ல ட்ரை பண்ணிருப்பீங்க .. ” என்று ராக்கி பேசிக்கொண்டே தன் கை முஷ்டியை முறுக்கியபடி வெளியே வந்தவன் சட்டையை கழட்டிவிட்டு அங்கே கட்டி வைக்கப்பட்டு இருந்த ஒருவனை இழுத்து போட்டு அடிக்க துவங்கினான்.
“எனக்கு எதுவும் தேறியது என்னை அடிக்காதிங்க.. நான் எதுவும் பண்ணல… ” அவன் கெஞ்ச…
“நீ இப்படி எல்லாம் கேட்டா சொல்ல மாட்ட… உன்னை தலைகீழா கட்டிவெச்சு தோளை உரிச்சா உண்மை தானாவே வெளியே வரும் ” என்றவன் .
“இவனுங்க நாலு போரையும் தலைகீழா கட்டி போடுங்க.. நான் போய் அண்ணனை கூட்டிட்டு வரேன் ” என்று வெளியே விறுவிறு வென நடந்தான் .
வெளியே காரில் காத்திருந்த சிவராஜன் ராக்கி வருவதை பார்த்ததும் கார் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவர் “என்ன ராக்கி அது யாருன்னு தெரிஞ்சுதா.. அவனுங்க எதுக்காக என்னை கொல்ல பார்த்தானுங்கனு உண்மையை சொல்லிட்டானுங்களா ” என்று கோபமாக கேட்டுக்கொண்டே அவனை தாண்டி உள்ளே செல்லப்போக..
“அண்ணா ஒரு நிமிஷம் நீங்க இப்போ உள்ள போகாதீங்க.. இவனுங்க நாம தேடுற ஆளுங்க கிடையாது . இவனுங்க வாயில் இருந்து ஒரு விஷயமும் கிடைக்கல… எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க .. எனக்கு ஒருத்தன் மேல சந்தேகமா இருக்கு.. அந்த நாலு பேருல அவன் ஒருத்தனா இருக்கான். நான் குடுக்குற டிரீட்மெண்ட்ல அவனே உண்மையை உலர போறான் ” என்று சிவராஜனை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினான் ராக்கி .
“ராக்கி எனக்கு அது யாருன்னு தெரிஞ்சாகணும் எவன் பார்த்த வேலை இதுனு எனக்கு தெரியணும் ” என்றவர் உள்ளே போக மீண்டும் முயல..
“அண்ணா சொன்னா கேளுங்க.. நீங்க எதுலயும் நேரடியா இன்வால்வ் ஆக வேண்டாம் . என்கிட்டே பொறுப்பை ஒப்படைச்சி இருக்கிங்கள்ல . நான் பார்த்துகிறேன் ” என்று அவரை தடுத்து நிப்பாட்டியவன் .
“நீங்க நம்ம பாப்பாவை பார்க்க லண்டன் போறேன்னு சொன்னிங்கள்ல . என்னை கேட்டா நீங்க கொஞ்ச நாள் லண்டன்ல போய் இருந்துட்டு வாங்க நீங்க வரதுக்குள்ள அது யாரு என்னனு கண்டு புடிச்சு உங்களுக்கு தகவல் சொல்றேன் “என்றான் ராக்கி.
அவர் யோசனையாக ராக்கியை பார்க்க… “அண்ணா சொல்றதை கேளுங்க… நீங்க உடனே லண்டன் கிளம்புங்க அண்ணியையும் கூட கூப்டு போங்க… எல்லாம் சரி ஆனதும் நீங்க திரும்ப இங்க வந்துரலாம் ” என்றான்.
ராக்கி சொன்னதும் சரி தான் என்று புரிந்ததும் “சரி டா நான் கிளம்பறேன் . இங்க என்ன நடந்தாலும் நீ எனக்கு உடனே தகவல் சொல்லிடு ” என்று அங்கிருந்து கிளம்பி இருந்தான் சிவராஜன் .
அவரை ஒருவழியாக அனுப்பிவடித்துவிட்டு உள்ளே வந்த ராக்கி அங்கே அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த 4வரையும் பார்த்தவன் . “டேய் இங்க வா.. ” என்று தன் ஆளை அழைத்தவன் “அதோ அந்த கருப்பு சட்டை போட்டிருக்கானே அவனை தவிர மத்தவங்களை அனுப்பிட்டு.. அந்த கருப்பு சட்டை காரனை அந்த ரூம்ல சோறு தண்ணி இல்லாம அடைச்சு வையுங்க… நான் வந்து அவனை கவனிக்குறேன் “என்றவன் .
இவ்வளவு நேரம் இங்கு நடப்பதை எல்லாம் தலையை மட்டும் நீட்டி பார்த்துக்கொண்டு இருந்த ரதியை நோக்கி வந்தவன் “போலாமா பீடா… ” என்று தன் இருகிய முகத்தோடு அழைக்க.. ரதியும் அமைதியாக அவன் பின்னால் கிளம்பி இருந்தாள்
