EPISODE 110
ஆதி சங்கவிக்கும் போதிக்கும் கால் செய்து டென்மார்க்கில் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதாகவும், துர்காவிற்கு ஒரு ஆக்சிடென்ட் நடந்த விஷயத்தை இருவரிடம் தெரிவிக்க… சங்கவி அதிர்ச்சியானவள் போல நடித்து ஆதியிடம் பேசினாள். “என்ன ஆதி! இந்தத் துர்காவிற்கு இப்படி ஆயிடுச்சு. அவள் உனக்கு பண்ணிய துரோகத்திற்கு இது அவளுக்குத் தேவைதான்,” என்று சொன்னால் சங்கவி.
இப்படிச் சொன்னதும் ஆதிக்கு அவள் மேல் ஆத்திரமாக வந்தது. இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அதையெல்லாம் விடு சங்கவி. முதல்ல அவள் நல்ல குணமாயி வரட்டும். அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பார்த்துக்கலாம். சரி நான் இதைச் சொல்லத்தான் உனக்கு கால் பண்ணேன். நாங்க நாளைக்கு இந்தியா கிளம்பிடுவோம். நீயும் போதியும் சுவிட்சர்லாந்தில் இருந்து நேரா இந்தியா வந்துடுறீங்களா?” என்று கேட்டான்.
“சரி ஆதி. நானும் போதியும் இங்கிருந்து கிளம்பிடுவோம். இங்கேயும் எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு. நம்ம ஃபயர் சி எல்லாம் நம்ம நினைச்சது போலவே நம்மளோட டையப்ப வச்சுக்கிட்டு மேனுஃபாக்சரிங் மெட்டீரியல்ஸ் எல்லாமே நமக்குக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டாங்க. அதனால நமக்கு இனி எந்தப் பிரச்சினையும் இருக்காது. எல்லாப் பேப்பர்ஸ்லயும் சைன் பண்ணி அவங்க நம்மளோட இந்த ப்ராஜெக்ட்டில் இணைஞ்சுட்டாங்க,” என்றால் சங்கவி.
“ஓகே சங்கவி. போதிக்கும் சொல்லிடு. நான் போனை வைத்து விடுகிறேன்,” என்று சொல்லிவிட்டு ஆதி போனை வைத்தான்.
சங்கவியிடம் பேசிவிட்டுத் திரும்பிப் பார்க்க துர்கா அப்போதுதான் கண் விழித்து இருந்தாள். அவளைப் பார்த்ததும் நேராக துர்காவிடம் வந்த ஆதி, “துர்கா! இப்போ உனக்கு எப்படி இருக்கு? துர்கா, நல்ல தூங்கி எழுந்திருச்சியா? தலை ஏதும் வலிக்குதா?” என்று கேட்டான் ஆதி.
“ம்ம்ம்…” என்று தலையாட்டினால் துர்கா. “எதுவும் சாப்பிடறியா துர்கா? நான் உனக்கு எதுவும் வாங்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டான் ஆதி.
“ஐயோ…. என்னையே துர்கான்னு கூப்பிடுறீங்க,” என்று கேட்டால் துர்கா. “உன் பேரு அதுதானே துர்கா! அதனால்தான் நான் உன் பேரைச் சொல்லி கூப்பிட்டேன்,” என்று சொன்னான் ஆதி. “இல்லை என் பேரு அது கிடையாது,” என்றால் துர்கா.
“அப்படியா!!! அப்ப உன் பேரு என்னன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? எங்க சொல்லு பார்ப்போம்,” என்றான் ஆதி. “இருங்க நான் என் பேரு என்னன்னு யோசிச்சு சொல்றேன்,” என்று தன் கன்னத்தில் கை வைத்து மேலே பார்த்தவாறு யோசித்துக் கொண்டே குழந்தை போலப் பேசினால் துர்கா.
“சரி நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல. நீ உன் பெயரை யோசித்துக் சொல்லு பார்ப்போம்,” என்று அவள் யோசித்துத் தன் பெயரைச் சொல்ல வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தான் ஆதி. சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த துர்கா, “ஆஹ்….. ஞாபகம் வந்திருச்சு…,” என்று தன் விரலைச் சுடக்கிவிட்டு ஆதியைப் பார்த்துச் சந்தோஷமாகச் சொன்னாள் துர்கா.
“அப்படியா! உன் பேரு என்னன்னு சொல்லு பார்ப்போம்,” என்றான் ஆதி. “என் பேரு… என் பேரு… ஸாரிகா,” என்று யோசித்துக் கொண்டே சொன்னாள் துர்கா.
“ஸாரிக்காவா! இப்படி ஒரு பேர் இருக்கா..?” என்று கேட்டான் ஆதி. “ம்ம்ம்… இருக்கே! அதான் என் பேரு ஆச்சு,” என்று சொன்னால் துர்கா.
“அப்படியா துர்கா! உன் பெயர் நல்லா இருக்கு,” என்று சொன்னான் ஆதி. “பார்த்தீங்களா! நான் என் பேரு சொன்னதுக்கு அப்புறம் நீங்க இன்னமும் என்னை துர்கா என்று சொல்லியே கூப்பிடுறீங்க,” என்று சொன்னால்.
“ஸாரிக்காங்கிற பேரு நல்லாத்தான் இருக்கு. ஆனா எனக்கு உன்னை துர்கான்னு கூப்பிட்டே பழக்கம் ஆயிடுச்சு. நான் இப்ப என்ன செய்வேன்,” என்று சொன்னான் ஆதி. “அப்போ என் பேரு உங்களுக்குப் பிடிக்கலையா?” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு ஆதியைப் பார்த்தாள் துர்கா.
“நான் உன் பேரு பிடிக்கலைன்னு சொல்லவே இல்லையே… எனக்குப் புதுசா உன் பேரை கூப்பிட இன்னும் பழக்கமாகல. உன் பேரு எனக்குப் பழகுற வரைக்கும் நான் உன்னை துர்காவே கூப்பிடட்டுமா? உனக்கு ஆட்சேபணை இல்லைனா,” என்று கேட்டான் ஆதி.
அவன் சொன்னதைக் கேட்டுச் சிறிது நேரம் யோசித்தவள், “சரி. கொஞ்ச நாள் தான் டைம் கொடுப்பேன். அதுக்கப்புறம் நீங்க என்னை துர்கான்னு கூப்பிடக் கூடாது. ஸாரிகான்னு தான் கூப்பிடணும் சரியா?” என்றால் துர்கா.
“ம்ம்ம்… சரி,” என்றவன். “உனக்கு வேற எதுவும் ஞாபகம் இருக்கா… உன் அம்மா அப்பா… கூடப் பிறந்தவங்க அந்த மாதிரி எதுவும் ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான் ஆதி.
அதை எல்லாம் நினைவுபடுத்திப் பார்க்க முயன்ற துர்கா தலை வலி எடுக்க ஆரம்பிக்கத் தலையில் கைகளை வைத்துக் கொண்டு “ஆ….” என அலறினாள். தன் பெயரை நினைவுபடுத்திப் பார்க்கவே அவள் நிறைய யோசித்துவிட….. தான் இப்போது அவள் தாய் தகப்பனைப் பற்றி யோசிக்க ஆரம்பித்ததில் அவளுக்கு தலைவலி வந்துவிட…. வலி தாங்க முடியாமல் துர்கா கத்தவும் துர்காவின் பெற்றோரைப் பற்றி அறிய வேண்டும் என்று அவசரப்பட்டதற்காக வருத்தப்பட்ட ஆதி துர்காவின் அருகில் அமர்ந்து அவள் கைகளைப் பிடித்தவன், “சாரி துர்கா. அவசரப்பட்டு உன்னை யோசிக்க வச்சிட்டேன். நீ எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம். எதையும் நினைக்க வேண்டாம். பேசாமல் படுத்து ரெஸ்ட் எடு. அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்,” என்று துர்காவை நார்மலாக்க முயன்றான் ஆதி.
அதுக்கு மேலும் எதையும் யோசிக்காத துர்கா ஆதி சொன்னதைக் கேட்டுவிட்டு அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.
ஆதி கதிருக்குப் போன் செய்து அங்கு அனைவரின் மனநிலையும் எப்படி இருக்கிறது என்று கேட்டுக் தெரிந்து கொண்டவன். கதிரிடம் மட்டும் துர்காவிற்குப் பழைய ஞாபகம் எதுவுமே நினைவில் இல்லை என்பதையும்… அவளுக்கு ஆக்சிடென்ட் செய்யக் காரணமானவர்கள் யார் என்றும் சொன்னான் ஆதி.
ஆதி சொன்ன விஷயங்களை எல்லாம் கேட்ட கதிர்கு அதிர்ச்சியாக இருந்தது. “என்ன அண்ணா சொல்ற? இவ்வளவு விஷயம் துர்காவிற்கு நடந்திருக்கா…. என்னால நம்பவே முடியல. அவள் யாருக்கு என்னக் கெடுதல் செஞ்சா…. அவளால் ஒரு ஈ, எறும்புக்குக் கூடத் துரோகம் நினைக்க முடியாது. அப்படி இருக்கும் போது எப்படி துர்காவைக் கொல்றதுக்காக இவ்வளவு பெரிய சதி வேலையே செஞ்சிருக்காங்க? நீ அவங்களை இன்னுமா சும்மா விட்டு வச்சுருக்கே?” என்று கேட்டான் கதிர்.
“உன்னோடக் கோபம் எனக்குப் புரியுது கதிர். ஆனால் அதைச் செய்யறதுக்கான நேரம் இது இல்ல. எதுவா இருந்தாலும் துர்காவை இங்கிருந்து பத்திரமாக நான் இந்தியாவுக்கு அழைச்சிட்டு வந்ததுக்கு பிறகு தான் மற்ற வேலைகளை எல்லாம் பார்க்கணும்,” என்று சொன்னான் ஆதி.
“சரி அண்ணா. நீங்க எப்போ கிளம்பி வரீங்க? நான் இங்க ஏற்பாடு எதுவும் செய்யணுமா?” என்று கேட்டான் கதிர்.
“நாங்க நாளைக்கு கிளம்பிடுவோம் கதிர். நாங்க கிளம்புவதற்கு முன்னாடி என்ன வேணும்ங்கிறது உனக்கு நான் மறுபடியும் போன் பண்ணி சொல்றேன். வரவரைக்கும் நான் சொன்ன விஷயங்கள் அங்கு இருக்கிற யாருக்குமே தெரிய வேண்டாம். நான் வந்த பிறகு நேரடியா எல்லார்கிட்டயும் சொல்லி அவங்களைச் சமாளிச்சுக்கிறேன். நீ இப்போ தனியாச் சொல்லி எதுவும் செய்ய வேண்டாம்,” என்று கதிரிடம் சொன்னான் ஆதி.
“சரி அண்ணா. நீயே வந்து எல்லார்கிட்டயும் இதை பேசிக்கோ. நான் எதுவுமே இதைப் பற்றி யார்கிட்டயும் சொல்லல. சரி நான் வெச்சிடவா,” என்று சொல்லிவிட்டுப் போனை வைத்தான் கதிர்.
ஷிவுவிற்கு தான் வேலை செய்யும் ஆஃபீஸில் கடைசி நாள். நாளை ஆஃபீஸ் முடிந்ததும் ஆஃபீஸ்லயே ஒரு சின்ன சென்ட் ஆஃப் பார்ட்டி அவளது மேனேஜர் அரேஞ்ச் செய்திருந்தார். இது எல்லாம் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்காமல் இந்த பார்ட்டியை அரேஞ்ச் செய்திருந்தார். ஷிவுவிற்கும் வேறு வழியில்லாமல் இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டியது ஆகியது.
இன்று காலை ஷிவு ஆஃபீசுக்கு வந்ததிலிருந்து ரூபேஷைப் பார்க்கவே இல்லை. அவன் நண்பர்கள் சிலரிடம் கேட்டதற்கு அவன் இன்று ஆஃபீசுக்கு லீவ் என்று சொன்னார்கள். ஷிவுவிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இத்தனை நாள் அவன் என் பின்னே எவ்வளவு முறை கெஞ்சிக் கொண்டு வந்திருந்தான். அன்றெல்லாம் அவனை அலட்சியப்படுத்தியதற்கு எனக்குச் சரியான தண்டனை கிடைத்துவிட்டது. நான் துர்காவிற்கு எதிராகச் செய்த அனைத்து விஷயங்களுக்காகவும் ஆண்டவன் எனக்குத் தண்டனை கொடுத்து விட்டான்.
இன்றாவது ரூபேஷைப் பார்த்து அவனிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்று நினைத்திருந்தால் ஷிவு. ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக ரூபேஷ் இன்று ஷிவுவிற்கு ஆஃபீஸின் கடைசி நாள் என்பதால் அவனுக்கு அங்கு வரவேப் பிடிக்காமல் தான் லீவ் போட்டு இருக்கிறான் என்பதை ஷிவுவிற்குத் தெரியாது. இனிமேல் தான் ஷிவுவைப் பார்க்கவே முடியாது என்று வருத்தத்தில் இருந்தான் ரூபேஷ்.
ஆஃபீஸில் அவளுக்காக ஏற்பாடு செய்த பார்ட்டியில் கலந்து கொண்டவள் பாதியிலேயே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ரூபேஷைப் பார்க்க கிளம்பி விட்டால் ஷிவு. ரூபேஷின் நண்பனிடம் ரூபேஷின் அட்ரஸை வாங்கிக்கொண்டு அவனுக்கான சென்றால் ஷிவு.
அவன் வீட்டின் முன்பு கேபில் வந்து இறங்கிய ஷிவு இந்த அட்ரஸ் தானா என்று ஒருமுறை சரிபார்த்துக் கொண்டவள் ரூபேஷின் வீட்டு கதவைத் தட்ட…. ஒரு வயதானப் பெண்மணி வந்து கதவைத் திறந்தார். அவரைப் பார்த்ததும் ரூபேஷின் வீடு இதுதானா என்று கேட்டால் ஷிவு.
“ஆமாமா. ரூபேஷ் என் பையன் தான். நீ… நீ… அவன் கூட வேலை பார்க்கிறப் பொண்ணு ஷிவு தானே?” என்று கேட்டார் அந்தப் பெண்மணி. தன் அம்மாவுக்குத் தன்னை ஏற்கனவேத் தெரிந்திருக்கிறது என்று ஆச்சர்யப்பட்டாள் ஷிவு. “ஆமா ஆன்ட்டி. நான் தான் ரூபேஷ் கூட வேலை பார்க்கிறேன். உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்? என்னைப் பற்றி ரூபேஷ் உங்ககிட்டச் சொல்லி இருக்கானா?” என்று கேட்டால் ஆர்வமாக ஷிவு.
“ஏம்மா வெளியவே நிக்கிற? உள்ள வாமா. அவன் பக்கத்துல எனக்கு மருந்து வாங்க தான் போயிருக்கான். இப்ப வந்துருவான்,” என்று கூறிக்கொண்டு ஷிவுவின் கைப்பிடித்து அழைத்து வந்தவர் ஹாலில் இருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு. “இருமா. நான் உனக்குக் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்,” என்று சொல்லி உள்ளே செல்ல… “அதெல்லாம் எனக்கு எதுவும் வேண்டாம் ஆன்ட்டி. நீங்க வாங்க. வந்து உட்காருங்கள்,” என்று அவர் கையைப் பிடித்துத் தன் அருகில் அமர வைத்துக் கொண்டால் ஷிவு.
“நீங்க சொல்லுங்க ஆன்ட்டி. என்னைக் எப்படி உங்களுக்குத் தெரியும்? ரூபேஷ் என்னைப் பற்றி உங்ககிட்ட ஏதாவது சொல்லி இருக்கானா…” என்று மறுபடியும் கேட்டால் ஷிவு.
“என்னம்மா இப்படி கேட்டுட்ட? என் பையன் உன்னைப் பற்றி சொல்லி இருக்கானான்னு கேட்டுட்ட…. ஒரு நிமிஷம் என் கூட வா…” என்று சொல்லி ஷிவுவின் கைப்பிடித்து அழைத்து கொண்டுப் போய் ஒரு ரூமின் முன் நிறுத்தியவர். “இந்த ரூமுக்குள்ள போய்ப் பாருமா. உனக்கே புரியும்,” என்று சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவரைப் புரியாமல் பார்த்துவிட்டுத் திரும்பிய ஷிவு அந்த அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அந்த அறை முழுவதும் இருட்டாக இருக்க லைட் சுவிட்ச் எங்கே இருக்கிறது என்று தெரியாததால் தன் ஃபோனில் இருந்து டார்ச்சை ஆன் செய்து லைட் சுவிட்ச் எங்கே இருக்கிறது என்று தேடுவதற்காகப் போனை உயர்த்தி சுவிட்சைத் தேடினால்.
அந்த மொபைல் டார்ச் வெளிச்சத்தில் அவளுக்கு ஒரு போட்டோ சுவற்றில் இருப்பது தெரியவே அதை அருகில் சென்று பார்த்தவள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஆகி அப்படியே நின்று விட்டாள். அந்த லைட் வெளிச்சத்திலேயே அந்தப் போட்டோவை நன்றாக மறுபடியும் பார்க்க தன்னுடைய போட்டோவை தான் அங்கே ஒட்டி வைத்திருந்தான் ரூபேஷ்.
தன் போட்டோவைப் பார்த்தவள் வெளிச்சத்தை மறுபடியும் வேறு புறம் திருப்ப அங்கும் அவள் போட்டோ மாட்டப்பட்டு இருந்தது. அதைக் கண்ட ஷிவு வேக வேகமாக லைட் சுவிட்சைத் தேடி அதை ஆன் செய்து பார்க்க அந்த அறையைச் சுற்றி நிறைய போட்டோக்கள் வேறு வேறு விதமாகச் ஷிவுவை எடுத்து அதில் மாட்டி வைத்திருந்தான்.
அந்த அறை முழுவதும் ஷிவுவின் புகைப்படங்கள் மாட்டியிருப்பதைப் பார்த்தவளுக்குக் கண்களில் தன்னை அறியாமல் கண்ணீர் வரத் தொடங்கியது. தன்னை இவ்வளவு தூரம் நேசிக்கிறானா ரூபேஷ் என்று நினைத்துக் கொண்டே ஒவ்வொரு போட்டோவாக அருகில் சென்று பார்க்க ஒன்று அவள் முதன்முதலாக ஆஃபீஸ் வந்த அன்று எடுத்த போட்டோ. இன்னொன்று அவள் சாப்பிடுவது போல, இன்னொன்று அவள் சிரித்துக் கொண்டிருப்பது போல, இன்னொன்றில் அவள் அழுவது போல, இன்னொரு போட்டோவில் பாட்டில் மது போதையில் அவள் இருந்த போட்டோ….
வேறு வேறு விதமாக வெவ்வேறு ஆங்கில்களில் தன்னை நிறைய போட்டோக்களாக எடுத்து அதை அந்த அறையில் மாட்டி வைத்திருந்தான் ரூபேஷ். இந்த போட்டோக்கள் எல்லாம் பார்த்துவிட்டு அப்படியே சுற்றிப் பார்க்க அப்போது ஒரு மேஜையின் மேல் ஷிவுவின் போட்டோவும் அதற்கு அருகில் அவள் பயன்படுத்தியப் பொருட்களும் என நிறைய இருந்தது.
மேஜையின் அருகில் வந்த ஷிவு அங்கிருந்தப் பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்துப் பார்க்க ஒன்று அவள் பயன்படுத்திய கர்ச்சீப். இன்னொன்று அவள் ஆஃபீஸில் வேலை செய்யும் பொழுது தன் வாயில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்த பென்சில் என…. மேலும் இத்தனை நாள் ஷிவு தொலைந்து போய்விட்டது என்று நினைத்த பொருட்கள் எல்லாம் அந்த மேஜையின் மேல் இருந்தது.
தன் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறானா ரூபேஷ் என்று நினைக்கையில் அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஷிவுவிற்குள் எழுந்தது. ரூபேஷை இப்போதே பார்க்க வேண்டும் என்று நினைத்த ஷிவு… அந்தப் பொருட்களை எல்லாம் தான் எடுத்த மேஜையின் மேலே வைத்துவிட்டுத் திரும்ப…. ஷிவுவின் பின்னால் கைகட்டிக் கொண்டு நின்றிருந்தான் ரூபேஷ்.
அவனைப் பார்த்ததும் ஒரு நிமிடம் ஷிவுவின் மனம் தடுமாறியது. ஷிவு எதுவும் பேசாமல் ரூபேஷையே பார்க்க…. “நீ எதுக்கு என் வீட்டுக்கு வந்த… என் வீட்டுக்கு வந்ததும் இல்லாம என்னோட ரூமுக்கு எதுக்கு வந்த…,” கோபமாக ரூபேஷ் ஷிவுவிடம் கேட்டான். ஷிவு ரூபேஷ் கேட்டதற்கு எந்தப் பதிலும் பேசாமல் நிற்கவே….
“சொல்லு. இங்கே எதுக்கு வந்த? உனக்குத்தான் என்னைக் கண்டாலே ஆகாதே, இப்போ எதுக்கு தேவையில்லாம என் வீடு வரைக்கும் தேடி வந்திருக்க. உனக்கு என்ன வேணும்… இத்தனை நாள் என்ன ஆஃபீஸில் வைத்துக் கஷ்டப்படுத்தியது போதாதுன்னு இங்கேயும் வந்துட்டியா….” என்று கேட்டான் கோபமாக.
“உன்னை ஆஃபீஸ்ல கஷ்டப்படுத்துவது பத்தாதுன்னு சொல்லித்தான் உன் வீடு தேடி நான் வந்து இருக்கேன். உன்னை மட்டும் இல்ல உன் அம்மாவையும் சேர்த்து இனிமேல் நான் கஷ்டப்படுத்தத் தான் போறேன்,” என்று ஷிவு சொல்ல…
“என்ன இவ்வளவு நாள் நீ கஷ்டப்படுத்தினே நான் பொறுத்துக்கிட்டேன். ஆனா என் அம்மாவையும் கஷ்டப்படுத்தறேன்னு சொல்றதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு?” என்று கேட்டான் ரூபேஷ்.
ரூபேஷின் முன் மிக நெருக்கமாக அவனை உரசுவது போல வந்து நின்ற ஷிவு. தன் பாதங்களை உயர்த்தி அவன் உதட்டில் தன் இதழால் உரசியவள். “உன்னையும் என் அத்தையையும் இனிமேல் என் வாழ்நாள் முழுவதும் நான் இந்த வீட்டுக்கு மருமகளாவும் உனக்கு பொண்டாட்டியாகவும் வந்து கஷ்டப்படுத்துறதா முடிவு பண்ணிட்டேன். இங்க வரதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்குன்னு கேட்டியே… நான் சொல்வதைக் நல்லா கேட்டுக்க…. இது என் வீடு. நான் எப்ப வேணா வருவேன் போவேன்… என்னைத் தடுக்க உன்னாலையும் முடியாது. ஏன் உன் அம்மாவால கூட முடியாது,” என்று திமிராகப் பேசிவிட்டு மறுபடியும் அவன் இதழில் தன் இதழை உரசி விட்டு “வரட்டா……” என்று அவனைத் தாண்டி ஷிவு செல்லப் போக…
ஷிவு இப்போதுப் பேசியதை எல்லாம் நம்ப முடியாமல் அவளையேப் பார்த்த ரூபேஷ். வீட்டிற்கு மருமகளாக எனக்கு மனைவியாக என்று அவள் சொன்ன வார்த்தை திரும்பத் திரும்ப அவன் காதில் ஒலித்துக் கொண்டிருக்க…. இவ்வளவு நாள் அவள் மேல் கோபமாக இருந்த ரூபேஷ் அவள் சொன்ன இந்த வார்த்தையைக் கேட்டதும் அவன் உள்ளம் நிறைந்து முகத்தில் சந்தோஷம் ஒட்டிக்கொள்ள….
ரூபேஷின் வீட்டிற்க்கே வந்து திமிராகப் பேசிவிட்டு…. உன்னுடைய பெட்ரூமிலேயே வைத்து அவனுக்கு முத்தம் கொடுத்துவிட்டு அவனைத் தாண்டிச் சென்ற ஷிவுவை அவள் பின்னால் வந்து அவளை இறுக்கிக் கட்டியணைத்துக் கொண்டான். திடீரென்று தன் பின்னால் இருந்து ரூபேஷ் தன்னைக் கட்டிக் கொண்டதும், ஷிவுவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள்.
பின்னால் இருந்து அவளைக் கட்டிக்கொண்ட ரூபேஷ், “அப்போ நிஜமாவே உனக்கு என் மனைவியா வரச் சம்மதமா?” என்று கேட்டான் ரூபேஷ்.
ரூபேஷ் தன் மனைவி என்று சொன்னதும் ஷிவுவின் உடலுக்குள் ஏதோ ஒரு புதுவித உணர்வு தோன்ற… தன்னைப் பின்னால் இருந்து கட்டிக் கொண்டிருந்தவனின் கையை கையோடு சேர்த்துத் தன் கையைச் சேர்த்துக் கட்டிக் கொண்டவள். வெட்கத்தில் “ம்ம்ம்…” என்று மட்டும் தலையாட்டினாள்.
ஷிவு சொல்வதை ரூபேஷால் இன்னமும் நம்ப முடியாமல் போக…. “நிஜமாவா!!!” என்றான் மறுபடியும் அவள் “ஆமாம்” என்றுத் தன் தலையை மேலும் கீழும் தலையைக் குனிந்து கொண்டே ஆட்ட… ரூபேஷின் சந்தோசத்திற்கு அளவே இல்லை. அப்படியே ஷிவுவைக் கட்டிப் பிடித்தது போலவே அவளைத் தூக்கித் தன் காதல் கைகூடிவிட்டது என்ற சந்தோஷத்தில் தூக்கிச் சுற்றினான்.
