Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 112

உன் ரகசிய ரசிகை நான் 112

by Layas Tamil Novel
217 views

EPISODE 112

ஆதியுடன் உள்ளே சென்ற அனைவரும் துர்காவைச் சுற்றி நின்று கொண்டு அவளிடம் எல்லோரும் பேச… அவர்களை எல்லாம் பார்த்துப் பயந்து கொண்ட துர்கா ஆதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “இவங்க எல்லாம் யாரு ஆதி? எனக்கு இவங்க என்னைக் கேட்குறாங்கனே தெரியலை,” என்று ஆதியிடம் கேட்டாள்.

துர்கா தங்களைப் பார்த்து யார் என்று கேட்டதும் அனைவரும் அதிர்ந்து போய் எல்லோரும் ஆதியைப் பார்த்தனர்.

ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க… அந்த அறையில் இருந்த விசாலாட்சியும் துர்காவிடம் வந்து, “**துர்கா! எங்களை யாருன்னு உனக்குத் தெரியலையே… நான் உன் அம்மா வடிவு,” என்று வடிவு பதட்டத்துடன் துர்காவிடம் கேட்க….

“எனக்கு நீங்க யாருன்னே தெரியாது… நீங்க என் அம்மா கிடையாது,” என்றால் துர்கா வடிவைக் கண்டு பயந்து கொண்டே. துர்கா சொன்னதைக் கேட்டு அதிர்ந்த வடிவுக்கு இதயம் வெடித்துச் சிதறி விடும் போல இருந்தது…

“துர்கா! நான் தான் உன் அம்மா வடிவு… இதோ இவ தான் உன் தங்கச்சி கீர்த்திகா,” என்று கீர்த்திகாவின் கையைப் பிடித்து இழுத்துத் துர்காவின் முன் நிறுத்தித் துர்காவின் முகத்தைப் பார்க்க…

துர்கா கீர்த்திகாவின் முகத்தையே பார்க்க… “அக்கா… என்னைக் ஞாபகம் இருக்கா… நான் தான் உன் கீர்த்தி,” என்று அழுதாள் கீர்த்திகா. கீர்த்திகா அழுவதைப் பார்க்கையில் அங்கிருந்த அனைவருக்கும் பாவமாக இருந்தது. ஏன் என்றால் கீர்த்திகாவும் துர்காவும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு பாசம் வைத்து இருக்கிறார்கள் என்று அனைவருக்குமே தெரியும். அப்படி இருந்தவர்கள் இன்று இப்படி யாரென்று தெரியாமல் துர்கா கீர்த்திகாவைப் பார்க்கையில் அனைவர்க்கும் வருத்தமாகத் தான் இருந்தது.

இதை எல்லாம் பார்த்த வெங்கடாச்சலம் ஆதியைப் பார்த்து, “ஆதி! இங்கே என்ன நடக்கிறது… துர்கா ஏன் இப்படிப் பேசுறா? அவளுக்கு எங்க யாரையுமே தெரியுற மாதிரி இல்லையே… எங்களை எல்லாம் யாரோ மாதிரி இல்லப் பாக்குறா.. அவள் அம்மா தங்கையை கூடத் துர்காவிற்கு அடையாளம் தெரிய மாட்டேங்குது. என்ன ஆதி நடக்குது இங்கே,” என்று கேட்டார் வெங்கடாச்சலம்.

“அப்பா.. நான் சொல்வதைக் கேட்டா எல்லாருக்கும் கஷ்டமா தான் இருக்கும். ஆனா நான் சொல்வதைக் கேட்டு நீங்க யாரும் அதிர்ச்சி ஆகாதீங்க,” என்று ஆதி கூறினான்….

ஆதி பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த துர்காவின் அப்பா முருகன் ஆதியின் அருகில் வந்து, “மாப்பிள்ளை! என்ன ஆச்சு மாப்பிள்ளை என் பொண்ணுக்கு? அவ ஏன் இப்படி நடந்துக்குறா? துர்கா பேசுறதை எல்லாம் கேட்க எனக்குப் பயமா இருக்கு மாப்பிள்ளை,” என்று ஆதியின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதார் முருகன்.

“மாமா! நான் சொல்றதை எல்லாரும் கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க…,” என்று ஆதி சொல்ல… ஆதி என்ன சொல்லப் போகிறான் என்று அந்த அறையில் இருந்த வெங்கடாச்சலம், வடிவு, முருகன், கீர்த்தி, கதிர், விக்கி, ராதா என எல்லோரும் ஆதியையே பார்க்க…

“டென்மார்க்கில் துர்காவிற்கு நடந்த விபத்தில் அவளோடத் தலையில் அடி பட்டு அவளுக்கு எல்லா விஷயமும் மறந்து போயிருச்சு.. அவளுக்கு ஆறு வயசுக்கு முன்ன நடந்தது மட்டும் தான் ஞாபகம் இருக்கு… அதன் பிறகு நடந்த எல்லாமே மறந்துபோயிருச்சு,” என்று ஆதி சொன்னான்.

ஆதி சொன்னதைக் கேட்ட அனைவரும் அப்படி அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர். மற்ற அனைவரையும் விட வடிவும் முருகனும் தான் துர்காவிற்கு ஆறு வயதுக்கு முன் நடந்தது மட்டும் தான் ஞாபகம் இருக்கு என்பதை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியில் வடிவும் முருகனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள.. ஆதி அவர்கள் இருவரின் முகத்தில் தெரிந்த கலவரத்தை உணரத்தான் செய்தேன்.

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்கள் இருவரையும் பார்த்து, “அத்தை மாமா.. நீங்க எதை நினைச்சும் கவலை படாதீங்க.. துர்காவிற்கு முறையா ட்ரீட்மென்ட் கொடுத்து அவளை நல்ல படியா கவனிச்சுக்கிட்டாலே அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழசு எல்லாம் ஞாபகம் வரும்னு டாக்டர் சொல்லியிருக்காரு… அவளுக்கு நாளையிலிருந்து டாக்டர்ஸ் ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிருவாங்க. நீங்க பயப்படாதீங்க….,” என்று அவர்கள் இருவருக்கும் ஆறுதல் சொன்னான் ஆதி.

அவர்கள் பேசியதை எல்லாம் கேட்ட கீர்த்தி.. துர்காவின் அருகில் வந்து, “அக்கா! என்னை உனக்கு ஞாபகமே இல்லையா…. நான் தான் உன் தங்கச்சி கீர்த்து அக்கா … நல்லா யோசிச்சுப் பாரு அக்கா,” என்று துர்காவின் கையைப் பிடித்து கீர்த்து அழுதாள். அவள் அழுவதைப் பார்த்துக் கதிருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவளைச் சமாதானம் செய்ய முடியாமல் கதிர் கீர்த்துவை நினைத்து வேதனை பட்டான்.

துர்கா கீர்த்து பேசியதைக் கேட்டு, “எனக்குத் தங்கச்சி எல்லாம் கிடையாது… என் அம்மா வயித்துக்குள்ள குட்டிப் பாப்பா இருக்குன்னு என் அப்பா என்கிட்டே சொல்லி இருக்காரு. நீ இல்லை அது.. நீ எவ்வளவு பெரியப் பொண்ணா இருக்கே.. நீ என் தங்கச்சி இல்லை,” என்றால் துர்கா.

அவள் சொல்வதைக் கேட்டதும் ஆதி வேகமாக துர்காவின் அருகில் வந்தவன், “உன்னோடப் பேரு மட்டும் தான உனக்கு ஞாபகம் இருக்குன்னு சொன்ன…. ஆனா இப்போ உன் அம்மா அப்பா பத்திப் பேசுற … உன் அம்மா வயித்துல குட்டிப் பாப்பா இருக்குன்னு சொல்றே… உனக்கு உன் அப்பா அம்மா யாருன்னு தெரியுமா? அவங்க பேர் என்னன்னு தெரியுமா?” என்று கேட்டான்.

ஆதி பேசியதைக் கேட்டுக் கொண்டு இருந்த வெங்கடாச்சலம் ஆதியைப் பார்த்து, “ஆதி! துர்கா அவ பேரு என்னன்னு சொன்னா,” என்று அவர் ஆர்வமாக் கேட்டார். துர்காவின் அருகில் இருந்த ஆதி அவன் அப்பாவைப் பார்த்து, “அவ பேரு… ஸாரிகா என்று சொன்னா அப்பா. அவளை துர்கான்னு நான் கூப்பிட்டா என்னைப் பார்த்து ‘என் பேரு துர்கா இல்லை ஸாரிகா..’ என்று சொன்னாள்,” என்றான். பின் துர்காவைப் பார்த்து, “துர்கா! உன் பேரு என்ன,” என்று கேட்டான் ஆதி. துர்கா கட்டிலில் படுத்தவாறே… ஆதியின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “என் பேரு.. என் பேரு… ஸாரிகா,” என்று சிறு பிள்ளை போலப் பேசினாள்.

துர்கா தன் பெயரை ஸாரிகா என்று சொன்னதும் வெங்கடாச்சலமும் விசாலாட்சியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாகப் பார்க்க… அவர்கள் இருவரும் அதிர்ச்சியாவதைப் பார்த்த ஆதி அவன் அப்பாவிடம் வந்து, “அப்பா! நீங்க ஏன் அந்தப் பேரை கேட்டதும் அதிர்ச்சியாகுறீங்க… அம்மாவும் அதே போல தான் இருக்காங்க.. உங்களுக்கு எதுவும் அந்தப் பேரை பற்றித் தெரியுமா,” என்று கேட்டான் ஆதி.

அவர்கள் இருவரும் ஆதியையே பார்க்க… “சொல்லுங்க அப்பா! எதுவா இருந்தாலும் மறைக்காம என்கிட்டே சொல்லுங்க… அப்போ தான் நாம துர்காவைச் சீக்கிரமா குணப்படுத்த முடியும்,” என்றான். அவர்கள் இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நிற்க… “மாப்பிள்ளை! நான் சொல்றேன் என் பொண்ணைப் பற்றி எல்லா விஷயத்தையும்,” என்று வடிவு தானாக முன் வந்து ஆதியிடம் பேச…

அப்போது சந்தோஷிற்குப் பத்திரிக்கை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்த துரை துர்கா வந்து விட்டதைக் கேள்விப்பட்டு அவளைப் பார்க்க மேலே செல்லப் போக… சரியாகக் கோவிலில் இருந்த வந்த செண்பகமும் கனகாவும் வீட்டிற்குள் வந்தவர்கள் துரையைப் பார்த்துவிட்டு அவர்களும் அவரோடு சேர்த்து துர்காவைக் காண அவள் அறைக்குச் செல்ல… உள்ளே வடிவு பேசிக்கொண்டு இருக்கையில் துர்காவின் அரை வாசலில் வந்துச் செண்பகமும் நிற்க… அவர்கள் பின்னே … துரையும் வந்தார்.

வடிவு அவர்களைப் பார்த்துவிட்டு, “நீங்களும் வாங்க. நான் சொல்ல வர விஷயத்தை எல்லாரும் என்னன்னு பொறுமையாக் கேளுங்க. நான் சொன்னதைக் கேட்ட பிறகு நீங்க என்ன சொல்றீங்களோ நான் அதற்குக் கட்டுப்பாடு படுகிறேன்,” என்று வடிவு அழுது கொண்டே சொன்னார்…. வடிவு பேசியதைப் புரியாமல் பார்த்த மூவரும் அப்படியே நிற்க…

வடிவு வாசலை பார்த்து யாருடனோ பேசுவதைப் பார்த்த துர்கா வடிவைத் தாண்டி யார் நிற்கிறார்கள் என்று பார்க்க… அங்கே வாசலில் நின்று இருந்தவர்களைப் பார்த்த துர்காவின் முகம் பிரகாசம் ஆனது… அவள் வாசலைப் பார்த்து, “அம்மா….,” என்று சத்தமாக அழைக்க… அவள் யாரை அம்மா என்று அழைக்கிறாள் என்று துர்கா அழைத்தத் திசையில் அனைவரும் திரும்பி வாசலைப் பார்த்தவர்கள் துர்காவைப் பார்த்து, “யாரை அம்மான்னு கூப்பிடுற…,” என்று கேட்க… அங்கே செண்பகம் நின்று இருந்தார்.


போதியும் சங்கவியும் ஸ்விட்சர்லாந்தில் இருந்து இந்தியா வந்தவர்கள் ஏர்போர்ட்டிலேயே சொல்லிக்கொண்டு இருவரும் தத்தமது வீட்டிற்குச் சென்றனர். போதி ஏர்போர்ட்டில் இருந்து நேராக அவன் ஆஃபீஸிற்கு வந்தவன் முதல் வேலையாக அவன் பிஏ மித்ரனை அழைத்தான்.

போதியின் பிஏ மித்ரன் கதவைத் தட்டிக் கொண்டு போதியின் அறைக்குள் வந்தவன், “குட் நூன் சார்,” என்றான். “உங்கப் பிரயாணம் எல்லாம் நல்ல படியா இருந்ததா சார்? நீங்க போன பிசினஸ் ட்ரிப் எல்லாம் நல்ல படியா நடந்து முடிந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள் சார்,” என்றான் மித்ரன்.

“தேங்க்ஸ் மித்ரன் … எல்லாம் ரொம்ப நல்லபடியா முடிஞ்சிருச்சு,” நேற்று போதி பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரமாக மித்ரனைப் பார்த்துப் பேசினான். போதி பேசும் முறையே சரி இல்லையே, எதுவோ டென்ஷனில் இருக்கிறான் போல என்று நினைத்துக் கொண்ட மித்ரன்.

‘டேய் மித்து ஜாக்கிரதை… ஜாக்கிரதை…. போதி ஏதோ கோபத்தில் இருக்கான் போல.. நீ கொஞ்சம் அவன் கிட்டே எது பேசினாலும் பார்த்துப் பேசு… எதுவும் லூசு மாறி அவன் கிட்டே பேசி ஊரில் இருந்து வந்ததும் வராததுமா வாங்கிக்கட்டிக்காதே,’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன். போதியிடம் வந்து அவன் முன் தன் ஐ-பேடை காட்டி, “சார்! இது நம்ம பிபி நிறுவனத்தின் அடுத்த ப்ராஜெக்ட் உடைய டீடெயில்ஸ். நீங்க ஒரு முறை பார்த்து ஓகே பண்ணிட்டீங்கன்னா நான் மிஸ் துர்கா கிட்டே இதை எக்ஸ்பிளைன் பண்ணி அவங்க டேட்ஸ் வாங்கிருவேன் சார்,” என்றான்.

இதுவரை போதி மித்ரனை முறைத்துக் கொண்டு இருந்தவன் இப்போது அவன் மிஸ் துர்கா என்று சொன்னதும் அவனை கொள்ள வேண்டும் என்று எழுந்த எண்ணத்தைக் கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவன். தன் முன்னாள் இருந்த ஐ-பேடை எடுத்துப் பார்த்தவன் மித்ரனுடம், “மித்ரா! நீ துர்காவைப் பற்றி எல்லா டீடெயில்ஸ்க்கும் எனக்கு கலெக்ட் பண்ணி கொடுத்தியே அது எல்லாமே சரியான தகவலா,” என்று கேட்டான்.

“ஆமா சார். நான் எனக்கு நம்பகமான ஒரு டிடெக்ட்டிவை வெச்சு தான் மிஸ் துர்காவைப் பற்றி விசாரிச்சு உங்ககிட்டே எல்லா டீடெயில்ஸ்க்கும் கொடுத்தேன்,” என்றான் மித்ரன்.

‘தவளை தன் வாயாலயே கெடும்’ என்பது போல… ஏற்கனவே துர்காவின் விஷயத்தைப் போதியின் முன் பேசி அவனை கோபப்படுத்தி விட்டான். இப்போ மீண்டும் தனக்குத் தெரியாமலேயே குழி பரிதி அதற்குள் விழப் போகிறான்.

“அப்படியே மித்ரா…. ஒரு நிமிஷம் இங்கே வா…,” என்று மித்ரனைத் தன் அருகில் அழைக்க… எப்போதும் போதி மித்ரனைத் தனிமையில் இருக்கும் போது மித்ரா என்று தான் அழைப்பான். போதியின் அருகில் நின்று இருந்த மித்ரன் போதியின் அருகில் வந்து குனிந்து, “சொல்லுங்க சார்,” என்று… ஆடு தன் தலையைத் தானே கொடுத்து மாட்டிக் கொண்டது போல… தானாகவே போதியிடம் சென்று மாட்டிக்கொண்டோம் என்று தெரியாமலேயே அவன் முன் குனிந்து நிற்க…

தனக்கு வாகாய் வந்து நின்ற மித்ரனைப் பார்த்ததும் இவ்வளவு நாள் அடக்கி வைத்து இருந்த கோபம் மொத்தத்தையும் அவன் மேல் காட்டினான் போதி. தனக்கு முன் குனிந்து நின்ற மித்ரனை இழுத்துத் தன் மடி மீது போட்டுக் கொண்ட போதி அவன் முதுகில் தன் முழங்கையை வைத்து அடி வெளுத்து விட்டான். மித்ரன் “ஐயோ.. அம்மா…,” என்று அலற… இன்னமும் ஆத்திரம் தீராமல் போதி மித்ரனை ஒரு வழி பண்ணி விட்டான்.

“ஐயோ… போதி வலிக்குதுடா…. என்னை விடு,” என்று கஷ்டப்பட்டுப் போதியிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று அவன் மடியில் இருந்து எழுந்து செல்லப் போக… மறுபடியும் அவனை இழுத்துத் தன் மடியில் போட்டுக் கொண்டு ஆத்திரம் தீர அடித்த பிறகு தான் மித்ரனை விட்டான்.

தன் முதுகில் விழுந்த அடியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எழுந்து நின்ற மித்ரன் “ஐயோ.. அம்மா…,” என்று வலியால் அலறிக் கொண்டே தன் முதுகைத் தேய்த்துக் கூட விட முடியாமல் வலியால் துடித்தான். வலியினுடனேயே, “டேய் போதி…. இதனால தான் டா உன் கிட்டே என்னை தவிர வேலைக்கு யாருமே வர்றது இல்லை. மாட்டை போட்டு அடிக்குற மாதிரி இல்ல அடிக்குற நீ… இப்போ எதுக்குடா என்னை அடிச்சே…,” என்றான் மித்ரன்.

“அதனால தான் டா என் நண்பனா இருந்த உன்னை என் பிஏவா என் கூடவே வெச்சிருக்கேன். உன்னால ஒரு வேலையைக் கூட உருப்படியாச் செய்ய முடியாதாடா அறிவு கெட்டவன்…,” என்று மறுபடியும் எட்டி மித்ரனைப் பிடிக்கப் போக… முன்பு போலவே தானாகப் போய்த் மாட்டிக்கொள்ள அவன் என்ன லூசா… போதியின் கை தன் அருகில் வருகிறது என்று தெரிந்ததுமே அவனை விட்டு இரண்டு அடி தள்ளி நின்றவன். “எதுவா இருந்தாலும் என்னைத் தொடாமல் பேசு. மேல கையை வெச்சே நான் வேலையை விட்டு நிஜமாவே போய்டுவேன்,” என்று போதியை மிரட்டினான்.

“நீ எங்கே போனாலும் நான் உன்னைத் தேடி வந்து அடிச்சு இழுத்துட்டு வந்துருவேன் டா இங்கே,” என்றான் போதி. “நீ செஞ்சாலும் செய்வ … சரி சொல்லு இப்போ எதுக்கு இந்தத் தாய் இல்லா பிள்ளையை இந்த அடி அடிச்சே,” என்று சென்டிமெண்டாக மித்ரன் பேச… அவன் அப்படிச் சொன்னதும் போதிக்கு மித்ரன் மேல் இருந்த கோபம் வடிந்து விட ..

“சாரி ட டா. கோபத்தில் அடிச்சுட்டேன்,” என்று தன் சீட்டில் இருந்து எழுந்து வந்த போதி மித்ரனின் அருகில் செல்ல… போதி தன் அருகில் வந்ததும் போதி தன்னை அடிக்கத்தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்ட மித்ரன் அவனை விட்டுத் தள்ளி ஓட… மித்ரனை எட்டிப் பிடித்து அவன் கழுத்தில் தன் கையைப் போட்டுப் பிடித்தவன், “ஒன்னும் பண்ண மாட்டேன். பேசாமல் நில்லு டா …,” என்றவன் அவனை விட்டுவிட்டுச் சென்று சோபாவில் அமர்ந்தவன் மித்ரனையும் தன் அருகில் இழுத்து அமர வைக்க…

“சார்! உங்கப் பக்கத்துல நான் உக்கார்ந்தா நல்லா இருக்காது,” என்று சொல்லிப் போதியின் அருகில் இருந்து எழுந்து நிற்க… “இங்கே நீயும் நானும் மட்டும் தானே இருக்கோம். பேசாமல் வந்து இப்போ இங்கே உக்கார போறியா இல்லை …,” என்று தன கை முஷ்டியை முறுக்கிக் காட்ட…

“என்ன விஷயம் சொல்லுடா …,” என்று தன் ஆருயிர் தோழன் போதியின் அருகில் அமர்ந்து அவன் தோளில் கை போட்டு கொண்டு கேட்டான் மித்ரன். போதி அவன் செயலில் சிரித்துவிட…. “சரி துர்காவைப் பற்றி உனக்கு இன்பார்ம் பண்ணின அந்த டிடெக்ட்டிவ் யாரு,**” என்று கேட்டான் போதி.

‘இவன் என்ன அங்கேயே வந்து நிக்குறான்,’ என்று நினைத்த மித்ரன், “இப்போ ஏன்ட அதை கேக்குற,” என்றான். “நீ முதல்ல நான் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லு. அப்பறம் நான் சொல்றேன்,” என்றான் போதி. “அது.. அது வந்து நான் சொல்வதைக் கேட்டு நீ என்னைத் திட்டக்கூடாது. அடிக்கக் கூடாது. அப்போதான் சொல்வேன் ஓகேவா,” என்று கேட்டான் மித்ரன். “அதான் வந்த உடனே உன்னைச் செமத்தியா கவனிச்சேன் இல்ல. எதுவும் செய்ய மாட்டேன் சொல்லு,” என்றான் போதி.

“நான் டிடெக்ட்டிவை வெச்சு எல்லாம் அந்த துர்காவைப் பற்றி தெரிஞ்சுக்கலை போதி … துர்கா வேலை பார்க்குற ஆஃபீஸில் என்னோட பிரெண்ட் இருக்கான். அவன் கிட்டே தான் துர்காவைப் பற்றி கேட்டேன். எதுக்கு வீணா டிடெக்ட்டிவ் கிட்டே எல்லாம் இந்தச் சின்ன விஷயத்துக்குப் போய் ஆயிரம் ஆயிரமாக அழணும்னு தான் நான் என் ஃபிரெண்ட் கிட்டேயே கேட்டேன்,” என்றான் மித்ரன்.

மித்ரன் சொன்னதைக் கேட்டு வெறிகொண்டவன் மட்டும் அவனை முறைத்த போதி… “அப்படி யாருடா உன்னோட ஃபிரெண்ட் ஆதி ஆஃபீஸில் வேலை பார்க்குறது. அவன் உன்கிட்டே துர்காவைப் பற்றி சொன்ன தகவல் எல்லாம் பொய்,” என்றான் போதி.

போதி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி ஆனா மித்ரன், “என்னடா சொல்றே… அவன் ஆதி ஆஃபீஸ்ல வேலை எல்லாம் பார்க்கவில்லை போதி … அவன் நான் காலேஜ் படிச்சப்ப எனக்கு ஜூனியர் ஆஹ் இருந்தவன் … ரொம்ப நல்ல பையன் எனக்குக் கூட அவனை நல்லா தெரியும்,” என்றான் மித்ரன்.

“அது யாருடா மித்ரா! எனக்குத் தெரியாம உன்னோட ஜூனியர் ஃபிரெண்ட்,” என்று கேட்டான் போதி. “அவன் வேற யாரும் இல்லைடா … ஆதியோட தம்பி கதிர் தான் அந்த நியூஸைச் சொன்னது,” என்று சொன்னான் மித்ரன்.

மித்ரன் சொன்னதைக் கேட்டதும் போதிக்கு ஆச்சர்யமாகப் போய்விட்டது. “என்ன மித்ரா… சொல்றே.. கதிர் தான் உன்னோட ஜூனியர் ஆஹ்.. இதை ஏன் நீ முன்னமே என்கிட்டே சொல்லல,” என்றான் போதி. “உன்கிட்டே சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லை போதி… சொல்லணும்னு தோணல அவ்வளவு தான்,” என்ற மித்ரன்.

“டேய் மித்ரா… நல்லா தெரியுமா? கதிர் தான் உனக்கு இந்த நியூஸ் சொன்னானா … துர்காவிற்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு அவன் தான் சொன்னானா,” என்று கேட்டான் போதி. “ஆமாடா அவன் தான் என்கிட்டே சொன்னான். அவன்கிட்டே நான் போன் பண்ணி துர்காவை நம்ம கம்பெனி ஆட்ல நடிக்க வெக்கணும்ன்னு சொல்லி அவங்க டீடெயில்ஸ் எல்லாம் எனக்கு வேணும்னு அவன் கிட்டேச் சொல்லித் தான் கேட்டேன்,” என்றான் மித்ரன்.

“அப்பறம் ஏன்டா அன்னிக்கு அவங்க ஆஃபீஸ் போன போது நீ கதிரைத் தெரியாதவன் போல நடந்துக்கிட்டேய்.. அவனும் உன்னைக் கண்டுக்காமல் இருந்தது போல தானே இருந்தது,” என்று கேட்டான் போதி. “அதுவா.. நான் தான் நம்ம அவங்க கம்பெனிக்கு வரும்போது ஏற்கனவே அவன்கிட்டே நம்ம ஆட் பற்றி ஏற்கனவே பேசின விஷயத்தை தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேணாம்னு சொன்னேன். உனக்கு நான் சொன்ன விசயம் தெரிஞ்சா நீ என்னைக் சும்மா விட்டுடுவியா? அதான் அவன்கிட்டே அப்படி நடந்துக்கச் சொன்னேன். அதுவும் இல்லாமல் அவன் என்னோட ஜூனியர். நான் உன்கிட்டே பிஏவா இருக்கேன். அங்கே போய் அந்தக் கம்பெனியுடைய முதலாளியை எனக்குத் தெரிஞ்சுக்கிட்ட மாதிரி காட்டினா நல்ல இருக்காது இல்ல… அதான்டா நானும் அவனும் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கிட்ட மாதிரி காட்டிக்கல,” என்றான் மித்ரன்.

“நல்லா நடந்துக்கிட்டேய் போ…,” என்று போதி சளித்துக் கொண்டான். “ஏன்டா என்ன ஆச்சு,” என்று கேட்டான் மித்ரன். “அவன் துர்காவிற்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னது பொய் டா மித்ரா…,” என்றான் போதி. “என்னடா சொல்றே!!!” என்று அதிர்ச்சியாகக் கேட்டான் மித்ரன்.

“ஆமாடா! துர்காவிற்கு கல்யாணம் ஆகிருச்சு.. அவள் புருஷன் வேற யாரும் இல்லை. உன்னோட ஜூனியர் இருக்கானே கதிர் அவனோட அண்ணன் ஆதி தான் அவ புருஷன்,” என்றான் போதி.

போதி சொன்னதைக் கேட்டுக் கடுமையான அதிர்ச்சி ஆன மித்ரன், “என்னடா சொல்றே… அப்போ அந்த துர்கா ஆதியோட பொண்டாட்டியா….,” என்று வாயைப் பிளந்தான் மித்ரன். “அந்த கதிர் என்கிட்டே பொய் சொல்லி இருக்கான் டா… அவனை நான் சும்மா விட மாட்டேன் . அவன் சொன்ன ஒரு பொய்யால் நான் உன்கிட்டே எவ்ளோ அடி வாங்கிட்டேன். அவனை இப்போ என்ன செய்றேன் பாரு,” என்று சொன்னவன் தன் மொபைலை எடுத்துக் கதிருக்குக் கால் செய்யப் போக…

அவனிடம் இருந்து போனைப் பிடுங்கிய போதி, “டேய் மித்ரா… இப்போ எதுக்கு கதிருக்கு நீ கால் பண்றே? அதெல்லாம் எதுவும் வேண்டாம்,” என்றவன் காலை செய்தவன். “நான் சொல்ற வரைக்கும் இந்த விஷயம் உனக்குத் தெரிஞ்ச மாதிரி யாருகிட்டயும் காட்டிக்காதே …,” என்றான் போதி.

“ஏன்டா… இப்படிச் சொல்றே,” என்று கேட்டான் மித்ரன். “எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு மித்ரா….. அதை எல்லாம் முடிச்சுட்டு நான் உன் கிட்டே சொல்றேன். அதுவரை உனக்கு இந்த விஷயம் தெரியாத மாதிரியே இருந்துக்கோ… நான் சொல்ற வரை வெளியே மூச்சு விட்ட….,” என்று மித்ரனிடன் போதி வர… “அதுக்கு பிறகு என் மூச்சு நின்னுப் போயிரும் அதானே..,” என்றான் மித்ரன்.

“ம்ம்… புரிஞ்சுதா சரி,” என்று அவன் தோலைத் தட்டிக் கொடுத்து, “நான் சொன்னதை ஞாபகம் வெச்சுக்கோ… துர்காவிற்கு கல்யாணம் ஆகிருச்சுங்குற விஷயம் உனக்கும் எனக்கும் இப்போ வரை தெரியாது சரியா,” என்றான் போதி. “ஆமா தெரியாத மாதிரியே இருந்துகிறேன்,” என்ற மித்ரன் பின், “ஆமா நீ ஏன் அந்த துர்காவிற்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு தெரிஞ்ச பிறகு இவ்வளவு கோவப்ட்ர,” என்று போதியைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே கேட்டான் மித்ரன்.

“அதை ஏன்டா கேட்குறே… நீ அந்த துர்காவிற்கு கல்யாணம் ஆகலையின்னு விசாரிச்சு சொன்னதும்… நான் எப்படியாவது அந்தத் துர்கா கிட்டே பேசி என் மனசில் நான் அவளைப் பற்றி நினைச்சதை எல்லாம் சொல்லி என் காதலை அவளுக்குப் புரிய வெச்சு… அவளை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன் மித்ரா…… அவளை எனக்கு ரொம்பப் பிடிச்சு இருந்தது,” என்றான் போதி தன் நண்பனிடம்.

போதியின் முகம் சோகமாக மாறுவதை உணர்ந்த மித்ரன், “சரி விடுடா…. அந்தப் பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சுன்னு நமக்கு எப்படி தெரியும்? விடு இந்தப் பொண்ணு இல்லைன்னா வேற பொண்ணைப் பார்த்துக்கலாம்,” என்றான் மித்ரன்.

அவன் அப்படிச் சொன்னதும் டென்ஷன் ஆன போதி… “மித்ரா….,” என்று அந்த அறையே அதிரும் படி கத்தியவன். “எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும். நீ எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம்,” என்று கோபமாக மித்ரனிடம் கத்திவிட்டு அவன் அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.

‘இப்போ நான் என்ன சொல்லிட்டேன் இவன்கிட்டே … ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணு உனக்கு வேணாம். வேற பொண்ணைப் பார்த்துக்கலாம்னு சொன்னதுக்கு இப்படி அடிவயித்துல இருந்து கத்திட்டு போறான்,’ என்று புலம்பிக் கொண்டே தன் கேபினுக்குச் சென்றான் மித்ரன்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured