கீர்த்திகா சொல்வதை கேட்ட துர்கா போ…. நீ பொய் சொல்ற. நீ என் தங்கச்சி கிடையாது… நீ சொன்ன துர்கா திரும்பி கனகாவை பார்த்து…
“அம்மா நீ இங்க வாம்மா….. இங்க வந்து இவகிட்ட சொல்லு இவ என் தங்கச்சி இல்லன்னு. உன் வயித்துல இருக்குற குட்டி பாப்பா தான் என் தங்கச்சின்னு இவ கிட்ட சொல்லுமா” என்று அழுதாள் துர்கா.
துர்கா பேசியதை எல்லாம் கேட்ட… கனகாவிற்கு சிந்தனைகள் எங்கெங்கோ செல்ல…. அவள் தன்னை அம்மா என்று அழைத்ததும் கனகாவின் கால்கள் சட்டென்று ஓடி வந்து துர்காவை கட்டிக் கொண்டு, “அம்மாடீ சாரிகா…. உனக்கு இந்த அம்மாவை தேடி வர இவ்வளவு நாள் ஆகிருச்சா….” என்று சொல்லி அழுதார்.
கனகா துர்காவை கட்டிக் கொண்டு அழுவதை பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யமாக இருக்க…
அவர் அருகில் வந்த ஆதி “அத்தை நான் சொன்னேன் இல்ல… உங்க காணாம போன பொண்ணு ஸாரிகா துர்காதான்னு இப்போ சரியா நான் சொன்னது?” என்று கேட்டான் ஆதி.
“என்ன ஆதி சொல்றே… நீ பேசுவதை வைத்து பார்க்கும்போது உனக்கு ஏற்கனவே கனகாவுடைய முதல் பெண் காணாமல் போனது உனக்கு தெரியுமா?” என்றார் விசாலாட்சி.
“ம்ம்.. தெரியும் அம்மா.. நம் டென்மார்க் சென்று இருந்த அன்று அத்தை எனக்கு நைட் கால் பண்ணி இருந்தாங்க” என்றவன் அன்று நடந்ததை சொன்னான்.
ஆதி டென்மார்க் சென்ற அன்று ராதாவை காலேஜில் சேர்த்து விட்டு வந்த துர்கா வரும்பொழுததே மிகவும் டயர்டாக இருந்தாள்.
துர்கா டயர்டாக இருப்பதை பார்த்த விசாலாக்ஷி, “ஏன் துர்கா இப்படி இருக்க? உடம்பு எதுவும் சரி இல்லையா?” என்று கேட்டார்.
“ஆமா அத்தை காலையில கார்டன்ல தண்ணீரில் நனைஞ்சுட்டேன் அதோடவே ரொம்ப நேரம் இருந்துட்டேன் போல…. காலையிலேயே ஒரு மாதிரி டயர்டா தான் இருந்துச்சு. ஆதி கிளம்பும்போது எதுவும் காட்டிக்க வேண்டாம்னு நானும் அமைதியா இருந்துட்டேன். எல்லாரும் பேசிகிட்டு இருந்ததில் அதுக்கப்புறம் அதை நான் மறந்தே போயிட்டேன். இப்போ வேற வெளிய எல்லாம் போயிட்டு வந்ததுக்கு எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு” என்று சொன்னாள் துர்கா.
“என்னம்மா நீ இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்க… உடம்பு சரியில்லை என்று நீ முதலில் சொல்லியிருந்தால் ராதாவை இன்னொரு நாள் கூட காலேஜ் அழைச்சிட்டு போயிருக்கலாமே…. இப்போ அதோடவே வெளியே போய் வந்துட்டே. உனக்கு இப்போ எதுவும் வந்துடுச்சுன்னா எனக்கு தானே கஷ்டமா இருக்கும்” என்று சொல்லி கனகா துர்காவிடம் சங்கடப்பட்டார்.
“அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லை. இங்க இருக்கிற காலேஜுக்கு போயிட்டு வரதுக்கு எனக்கு என்ன டயர்ட்? காலையில தண்ணீரில் நனைந்துவிட்டேன் இல்லையா….அதனால அப்படி இருக்கும் போல” என்று சொன்ன துர்கா.
தன் மனதிற்குள் பாத்ரூமிற்குள் நீண்ட நேரம் ஷவரில் தண்ணீரில் நனைந்ததனால் தான் தனக்கு உடம்பு முடியாமல் போயிருக்கும் என்று நினைத்தவள் இதை இவர்களிடம் சொன்னால் திட்டுவார்கள் என்று அதை சொல்லாமல் மறைத்து விட்டாள்.
“சரிமா நீ ரூமுக்கு போ. நான் உனக்கு சாப்பிட எதுவும் எடுத்துட்டு, மருந்து எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி கனகா துர்காவை ரூமுக்கு அனுப்பி வைத்தார்.
ரூமிற்கு வந்த துர்கா குளித்து விட்டு டவலை கட்டிக் கொண்டு வெளியே வர, அப்போது சரியாக கனகாவும் துர்காவின் அறைக் கதவை தட்டினார்.
கனகா தான் வந்து இருப்பார் என்று தெரிந்த துர்கா சென்று கதவை திறக்க… துர்காவை பார்த்தவர், “ஏன் துர்கா உனக்கே உடம்பு முடியலை இல்லே? இப்போ போய் நீ எதுக்கு குளிச்சிருக்கே… அதுவும் தலைக்கு வேற குளிச்சு இருக்கே… வா வந்து உக்காரு உனக்கு நான் தலை துவட்டி விடுறேன்” என்றார்.
“இல்ல மா… நானே துவட்டிக்குறேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்” என்றாள் துர்கா.
“இதில் எனக்கு என்ன சிரமம் இருக்கு மா… வா… வந்து உக்காரு” என்று சொல்லி ட்ரெஸ்ஸிங் ரூமில் துர்காவை அமர வைத்து அவள் கூந்தலில் இருந்த ஈரத்தை ஹேர் டிரையர் போட்டு காய வைத்தார்.
துர்காவுடன் பேசிக்கொண்டே அவளுக்கு தலை காய வைக்க உதவியவர், அப்போது தான் துர்காவை கண்ணாடி வழியாக பார்த்தார்.
அவள் மார்பு லேசாக வெளியே தெரியும் படி துண்டு கட்டி இருக்க… அவள் மார்புக்கு நடுவில் அழகாக ஒரு மச்சம் தெரியவும் அதை பார்த்தது துர்காவிடம் அவள் மச்சத்தை சுட்டிக் காட்டி, “துர்கா நான் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத மா…” என்றவர் அவள் மார்பை சுட்டிக்காட்டி “இது… இது..மச்சம் தானே?” என்றார் அவளிடம்.
“ஆமாம் அம்மா” என்று சொன்ன துர்கா தன் மார்பை மறைத்துக் கொள்ள.. “என் கிட்டே என்ன வெட்கம் துர்கா? நான் என்ன உன் புருஷனா.. வெட்கப்பட?” என்று துர்காவை கிண்டல் செய்ய..
“ஐயோ…அம்மா போங்க” என்று சொல்லி தன் முகத்தை மூடிக்கொண்டாள் துர்கா.
“நீ ரொம்ப வெட்கப்படுற.. நான் கிளம்புறேன். நீ மறக்காம சாப்டுட்டு டேப்லெட் போட்டுக்க…சரியா?” என்றவர் யோசனையுடன் துர்காவின் அறையை விட்டு வெளியே சென்றார்.
கனகா சென்றதும் துர்கா தன் மச்சத்தை பார்த்து வெட்கப்பட்டவள். “இந்த கனகா அம்மாவுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை” என்று சிரித்துக் கொண்டவள் பின் உடை மாற்ற சென்றாள்.
துர்காவின் அறையை விட்டு வெளியே வந்த கனகா நேராக தன் அறைக்கு வந்தவர். அங்கே துரை இருக்கிறாரா என்று பார்த்து விட்டு அவர் இல்லை என்று உறுதி செய்த பிறகு கதவை சாற்றி விட்டு ஆதிக்கு கால் செய்தார்.
ஆதி அப்போது தான் தன் அறைக்கு வந்து இருக்க கனகா கால் செய்ததும் “என்ன அத்தை எனக்கு கால் பண்ணி இருக்கிறாங்க?” என்று யோசித்தவாறே தன் மாஸ்க்கை கழட்டிவிட்டு போனை அட்டென்ட் செய்த ஆதி.
“அதை சொல்லுங்க என்ன அதிசயம் உங்களுக்கு போன் எல்லாம் பண்ண தெரியுமா என்ன..” என்றான் கிண்டலாக.
அவன் பேசியதை கேட்டு சிரித்த கனகா… “என் மருமகன் கூட பேச எதுவும் இருந்தா தானே அத்தை கூப்பிட முடியும். சும்மா மருமகனை கூப்பிட்டு தொல்லை பண்ண முடியுமா?” என்றார் கனகா.
“என் அத்தை என்கிட்டே எப்போ வேனாலும் கால் பண்ணி பேசலாம்” என்ற ஆதி. “சொல்லு அத்தை ஏதோ சொல்ல… இல்லையின்னா கேட்கத் தானே நீ எனக்கு கால் பண்ணி இருப்பே… என்னன்னு சொல்லு அத்தை” என்றான் ஆதி.
“ஆமா ஆதி” என்றவர் “நம்ம துர்கா இருக்காளே…” என்றார்.
அவர் துர்கா பற்றி பேசியதும் “என்ன அத்தை சொல்லுங்க… துர்காவுக்கு என்ன?” என்று பதறினான் ஆதி.
அவன் பதட்டமாக பேசியதை அவன் குரலில் இருந்தே கவனித்த கனகா, “பதறாத ஆதி. நான் ஒரு முக்கியமான விஷயம் கேட்க தான் உனக்கு கால் பண்ணினேன்” என்றார்.
“சொல்லு அத்தை. துர்காவைப் பற்றி என்ன விஷயம்?” என்றான் ஆதி.
“துர்காவுடைய மார்பில் மச்சம் இருக்கறதை நீ பாத்திருக்கியா ஆதி?” என்றார் கனகா.
“அத்தை என்ன இப்படி எல்லாம் கேக்குறே? எனக்கு வெட்கமா இருக்கு” என்றான் ஆதி.
“அட மருமகனே நான் கேட்டதுக்கு முதல்ல பதில்சொல்லு” என்றார் சீரியஸ் ஆக.
ஆதி கனகா சொன்னதை கேட்டு துர்காவைப் பற்றி யோசிக்க… திருமணம் ஆன புதிதில் துர்கா ஒரு முறை பாத்ரூமில் இருந்து குளித்து விட்டு வெறும் டவலை மட்டும் கட்டிக் கொண்டு வந்த துர்கா ஏதோ எடுக்க கீழே குனிய அந்த நேரம் பார்த்து ஆதி அரைக்க கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும், பதட்டத்தில் துர்கா கட்டி இருந்த டவலை தவற விட, அது அவள் உடலில் இருந்து நழுவி கீழே விழுந்து விட…
அப்போது அவள் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் அவளைப் பார்த்தது நினைவிற்கு வந்தது ஆதிக்கு. அப்போது துர்காவின் மார்பிற்கு இடையில் ஒரு மச்சம் பார்த்தது ஆதிக்கு நினைவுக்கு வர…
“அத்தை ஆமா நீங்க சொன்னது போல அவளுக்கு மச்சம் இருக்கு” என்று வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னான் ஆதி.
“மருமகனே …ரொம்ப வெட்கப்பட்டதே. நீ வெட்கப்படுறது எனக்கு இங்க வரைக்கும் தெரியுது” என்றார் கனகா.
“போங்க அத்தை. நீங்க தானே கேட்டீங்க.. இப்போ என்னையே நீங்க கிண்டல் பண்றிங்க பாத்திங்களா” என்று அவரிடம் ஆதி பொய் கோபம் காட்ட..
“சரி சரி மருமகனே.. உனக்கு என்னோட முதல் மகள் சாரிக்காவை ஞாபகம் இருக்கா?” என்றார் கனகா.
“அவளை எப்படி அத்தை நான் மறப்பேன்? அவளும் நானும் சின்ன வயசுல எவ்வளவு விளையாடி இருப்போம். நானும் அவளும் சேர்ந்து எவ்வளவு சேட்டை செய்து துரை மாமா கிட்டே அடி வாங்கி இருப்போம்” என்றவன் ஆனா அவ காணாமல் போன பிறகு “அவளை போல ஒரு நல்ல ஃபிரென்ட் எனக்கு கிடைக்கவே இல்லை” என்றவனது நினைவு ஏனோ துர்காவின் நினைவு இப்போது வந்தது.
சாரிக்காவிற்கு பிறகு தான் நெருங்கிப் பழகிய பெண் துர்கா மட்டும் தான் என்று நினைத்தான் ஆதி.
“ஆமா ஆதி. சாரிகா கிடைச்சுட்டா ஆதி” என்றார் சந்தோசமாக.
“என்ன அத்தை சொல்றிங்க? சாரிகா கிடைச்சுட்டாளா? அவ இப்போ எங்கே இருக்கா? என்ன பண்ணிட்டு இருக்கா? நீங்க அவளை எப்படி கண்டு பிடிச்சீங்க?” என்றான் ஆதி.
“சாரிகா நம்ம வீட்ல தான் இருக்கா ஆதி” என்றார் கனகா.
“அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கிங்களா?” என்றான் ஆர்வமாக.
“நான் சாரிக்காவைத் தேடி போகலை. அவ இவ்வளவு நாளா நம்ம கூட நம்ம வீட்டில் தான் இருந்திருக்கா ஆதி. நமக்கு தான் அவளை அடையாளம் தெரியலை.. அது போலவே அவளுக்கும் நம்மை அடையாளம் தெரியலை” என்றார் கனகா.
“என்ன அத்தை சொல்றீங்க? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு அத்தை” என்றான் ஆதி.
“இருப்பா நான் விவரமா சொல்றேன்” என்று சொன்னவர். துர்காவை ரூமில் பார்த்ததும் அவள் மார்புக்கு நடுவில் ஒரு மச்சம் இருப்பதையும் வைத்து தான் துர்கா தான் சாரிக்காவாக இருக்க முடியும் என்று சொன்னார் கனகா.
அவர் சொல்வதை கேட்ட ஆதி அதிர்ச்சியானவன் “என்ன அத்தை உளறே.. அப்போ துர்கா தான் சாரிக்காவா?” என்று கேட்டான் ஆதி.
“ஆமா ஆதி. நம்ம துர்கா தான் சாரிகான்னு நான் நினைக்கிறேன் ஆதி. அதனால தான் நான் உனக்கு போன் பண்ணினேன். நீதான் ஆதி, துர்கா தான் சாரிகான்னு கண்டு பிடிச்சு சொல்லணும்” என்றார் கனகா.
அவர் சொல்வதை எல்லாம் கேட்ட ஆதி தன் அத்தை பொண்ணையே தான் திருமணம் செய்து கொண்டு இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டான்.
கனகாவிடம் “அத்தை நான் துர்காவை பற்றிய விபரங்களை எல்லாம் ஏற்கனவே சேகரிச்சு வெச்சிருக்கேன்” என்றவன் “அத்தை நான் சொல்ற வரைக்கும் நீங்க துர்கா தான் சாரிகா என்று யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லி போனை வைத்தவன்.
தான் துர்காவைப் பற்றி விசாரிக்க சொல்லி இருந்த டிடெக்ட்டிவ்விடம் போன் செய்து துர்காவைப் பற்றிய விபரங்கள் மொத்தத்தையும் அவனுக்கு அனுப்பச்சொல்லி இருந்தான்.
அதன் பிறகு கதிரிடம் சொல்லி துர்கா பயன்படுத்திய பொருட்கள், அவளுடைய தலை முடி எல்லாம் சேகரித்து அனுப்ப சொன்னான்.
அதே போல கனகாவிடம் சொல்லி அவருடைய தலை முடியையும் கதிரிடம் கொடுத்து அனுப்ப சொல்லி இருந்தான்.
கதிர் எதற்கு என்று கேட்டும் ஆதி எதுவும் அவனிடம் சொல்ல வில்லை.
கதிர் அனுப்பிய துர்காவின் தலை முடியையும் (அதே போல கனகாவின் தலை முடியையும்) டி.என்.ஏ டெஸ்டிற்கு அனுப்பிவைத்தான் ஆதி.
அதே நேரம் டிடெக்ட்டிவ் ஆதிக்கு கால் செய்து துர்காவைப் பற்றிய தகவல்களை எல்லாம் அனுப்பி விட்டதாக கூற… துர்காவின் டி.என்.ஏ ரிப்போர்ட் வந்து விட அதில் கனகாவின் டி.என்.ஏ வுடன் துர்காவின் டி.என்.ஏ 99.99 சதவீதம் ஒத்துப் போனது. அதை பார்த்ததும் ஆதியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
டிடெக்ட்டிவ் அனுப்பிய துர்காவைப் பற்றிய விபரங்களையும் பார்த்தவர் துர்காவைப் பற்றி ஆறு வயதுக்கு பிறகான விபரங்கள் மட்டுமே இருந்தது. அதற்கு முன் எந்த விபரங்களும் அதில் இல்லாமல் போகவே, துர்காவைப் பற்றிய விபரங்களை எல்லாம் பார்க்கும்போது துர்காவைப் பற்றி முழு விபரமும் யாருக்கும் தெரியவில்லை என்று புரிந்து கொண்டவன்.
கனகாவிற்கு ஆதி போன் செய்து அவரிடம் “அத்தை நாம நினைத்தது போல துர்காதான் சாரிகா” என்றான் ஆதி. அவன் சொல்வதை கேட்ட கனகாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
“ஆதி நான் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறேன் என்று உனக்கு தெரியுமா? நான் இப்போவே இந்த சந்தோசமான விஷயத்தை வீட்டில் உள்ளவங்க எல்லார் கிட்டயும் சொல்றேன். எல்லோரும் என்னை மாதிரியே ரொம்ப சந்தோசப்படுவாங்க” என்றார் கனகா.
“அத்தை நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. நீங்க அவசர பட்டு துர்கா தான் உங்க காணாமல் போன பொண்ணுன்னு எல்லார் கிட்டயும் சொன்ன எல்லாரும் சந்தோச படலாம். ஆனா… நம்ம துர்காவை இவ்வளவு நாட்களாக பத்திரமா காப்பாற்றி அவளை இவ்வளவு தூரம் வளர்த்து ஆளாக்கிய வடிவு அத்தையை பற்றி யோசித்து பார்த்திங்களா?” என்றான் ஆதி.
அவன் சொல்வதை கேட்டு அமைதியா இருந்தார் கனகா.
“வடிவு அத்தை, முருகன் மாமா, கீர்த்தி எல்லோரையும் நினைச்சுப்பாருங்க. அவங்க எல்லோருக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவாங்க? அதை கொஞ்சம் யோசிச்சு பாருங்க அத்தை” என்றான் ஆதி.
“ஆதி நீ சொல்றது வாஸ்தவம் தான் ஆனா… என் பொண்ணு …” என்று கனகா சொல்ல..
“அத்தை எனக்கு உங்க ஆர்வம் புரியுது. இத்தனை வருஷம் காணாமல் போன உங்க பொண்ணு இப்போ உங்க கண்ணு முன்னாடியே இருந்தும் அவளை உங்க பொண்ணுன்னு சொல்லி உங்களால் உரிமை கொண்டாட முடியலைன்னு தானே வருத்தப் படுறிங்க… உங்க குரலில் இருந்த ஏக்கம் எனக்கு நல்லாவே புரியுது அத்தை. பொறுத்தது பொறுத்தீங்க இன்னும் கொஞ்ச நாள். நான் சொல்ற வரை இந்த விஷயம் எல்லாம் எதுவும் வெளியே சொல்லாம கொஞ்சம் பொறுமையா இருங்க அத்தை” என்றான் ஆதி.
அவன் சொன்னதை கேட்ட கனகா, ஆதி சொன்னது தான் சரி என்று புரிந்து கொண்ட கனகா “சரி ஆதி. நீ சொல்றதும் சரிதான். நான் கொஞ்ச நாள் நீ சொன்னது போல நான் கொஞ்ச நாளா அமைதியா இருக்கேன். நீயா சொல்ற வரை துர்கா தான் என்னோட காணாமல் போன பொண்ணுன்னு யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்” என்றார்.
“சரிங்க அத்தை” என்று அவருக்கு மேலும் ஆதரவாக சில வார்த்தைகள் பேசிவிட்டு போனை வைத்தான்.
ஆதி சொன்னதை எல்லாம் இதுவரை கேட்டுக் கொண்டு இருந்த அனைவரும் உண்மையாய் துர்கா காணாமல் போன கனகாவின் பெண் தான் என்று தெரிந்து அனைவரும் சந்தோசப்பட்டனர்.
அனைவரும் துர்காவைச் சுற்றி நின்று கொண்டு சந்தோசத்தில் அவளைக் கொண்டாடினர்.
ஆனால் இதை எல்லாம் பார்த்து துர்காவை இவ்வளவு நாள் தூக்கி வளர்த்த வடிவும், முருகனும் இந்த வீட்டில் இப்போது தங்களை அந்நியர்களாக உணர்ந்தனர்.
ஆனால் வடிவையும் முருகனையும் விட இப்போது மிகவும் கவலையாக இருந்தது கீர்த்திகா தான்.
தான் காதலித்த கதிரை ராதாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அவளது பெற்றோர் தன்னிடமிருந்து கதிரை பிரித்தது போதாது என்று, இப்போது தன்னை இத்தனை நாள் தாய்க்கு நிகராக வளர்த்த தன் அக்கா துர்காவையும் இப்போது அவர்களது தொலைந்து போன பெண் தன் அக்கா துர்கா தான் என்று சொல்லி அவளையும் தன்னிடமிருந்து பிரித்து விட்டார்கள் என்று நினைத்து மிகவும் வேதனைப் பட்டவள் மற்றவர்களுக்கு தெரியாமல் தன் பெற்றோரை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
