Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 144

உன் ரகசிய ரசிகை நான் 144

by Layas Tamil Novel
234 views

EPISODE 144

இரவு மருந்தின் வீரியத்தில் தன் அருகில் இருந்த பவனுடன் ஒன்றாக இரவை ஒரே படுக்கையில் கழித்திருந்த மது, காலையில் தூக்கம் கலைந்து கண் விழித்தவள், படுக்கையை விட்டு எழுந்து செல்லலாம் என்று எழப் போக, அவளால் முடியவில்லை. தன் மேல் ஏதோ ஒன்று கணமாக இருப்பது போலத் தோன்ற… தான் போர்த்தி இருந்த போர்வையை விளக்கிய மது, தன் இடையைக் கட்டிக் கொண்டு படுத்திருந்த பவனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.

அதுவும் இருவரும் உடலில் ஆடைகள் இல்லாமல் இருப்பதைப் பார்த்ததும் மேலும் அதிர்ச்சி ஆகிவிட்டாள்.

தன் மேலிருந்து பவனை நகர்த்த முயற்சிக்க… அவளால் பவனைத் துளியும் அசைக்க முடியவில்லை. தன் முழு பலத்தையும் ஒன்று திரட்டி, தன் மேல் படுத்திருந்தவனைப் பிடித்துத் தள்ள, அவர் மேலிருந்து உயர்ந்து எழுந்து விழுந்த பவன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான்.

தூக்கத்திலிருந்து கண் விழித்த பவன் நிமிர்ந்து பார்க்க… தன்னருகில் உடலில் போர்வையைச் சுற்றிக் கொண்டு மது அமர்ந்து இருந்தால்.

மதுவைத் தன் அருகில் அப்படிப் பார்த்ததும் இரவில் நடந்ததெல்லாம் அவனுக்கு நினைவு வர… அடித்துப் பிடித்து மெத்தையில் இருந்து எழுந்து அமர்ந்தவன் மதுவைப் பார்க்க… மது பவனின் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்தவாறு அமர்ந்திருந்தால்.

பவன் தயங்கிக் கொண்டே மதுவை அழைக்க, அவள் நிமிர்ந்து பார்க்காமல் அப்படியே அமர்ந்திருக்கவும் அவனுக்கு ஏதோ போல இருந்தது.

மீண்டும் மெதுவாக “மது” என்று அழைக்க…. அவள் தலையே நிமிர்ந்து பவனைப் பார்க்காமல் “ம்ம்ம்…” என்று மட்டும் பதில் அளித்தால்.

“ஏன் மது, என் முகத்தைப் பார்க்க மாட்டேங்குற? என் முகத்தைப் பார்க்க உனக்குப் பிடிக்கலையா?” என்று கேட்டான் பவன்.

மது தலையை இடவலமாக ஆட்டி ‘இல்லை’ என்று சொல்லவும்.

“அப்போ என்ன? உனக்குப் பிடிக்கலையா? அதனாலதான் தலையை இல்லை என்று ஆட்டுகிறாயா?” என்றான் பவன்.

பவன் அப்படிச் சொன்னதும் அவசரமாகத் தலையை நிமிர்த்திய மது, பவன் முகத்தைப் பார்த்தவள் மீண்டும் தன் தலையைக் குனிந்து கொண்டு, “எனக்கு உங்க முகத்தைப் பார்க்கச் சங்கடமா இருக்கு. நேத்து நைட்டு நான் என்ன காரியம் பண்ணி வச்சிருக்கேன்னு எனக்கே தெரியல. எந்த முகத்தை வச்சுட்டு நான் உங்களைப் பார்ப்பேன்?” என்று தயக்கத்துடனே பேசினாள் மது.

“இதுக்கு முழு காரணமும் நீ மட்டும் இல்ல மது. நானும் தான். அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று சொன்னான் பவன்.

அவன் தன்னிடம் மன்னிப்புக் கேட்கவும், அதற்கு முழு காரணமும் தான் என்னும்போது, பவன் ஏன் தன்னிடம் மன்னிப்புக் கேட்கிறான் என்று பதறிய மது வேகமாக அவன் வாயில் கை வைத்து மூடியவள், “அப்படிச் சொல்லாதீங்க பவன். இதுக்கு முழுக்க முழுக்க காரணம் நான் தான். நான் மட்டும் நேற்று அமைதியாப் படுத்துத் தூங்கியிருந்தால், இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல கொண்டு வந்து உங்களை விட்டு இருக்க மாட்டேன். அதனால முழுத் தப்பும் என்னோடது தான்” என்றால் மது.

தன் வாயில் இருந்த அவள் கையை எடுத்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு, மதுவைப் பார்த்து, “அப்படி இல்ல மது. நீங்க மருந்தோட வீரியத்துல இருக்கீங்கன்னு உங்களுக்கே நீங்க என்ன பண்றீங்கன்னு சரியாப் புரியாது. அப்போ உங்களப் பத்திரமா பாத்துக்க வேண்டியது நானே. அதை மீறலாமா? அது முழுக்க முழுக்க என்னோட தப்பு தான்” என்றான் பவன்.

மது எதுவும் பேசாமல் அமைதியாகிவிட…. அவள் தலையைக் குனிந்துகொண்டு கண்களில் நீர்வழிய அமர்ந்து இருக்க…. அவள் கைகளைப் பிடித்து இருந்தவனது கைகளில் கண்ணீர்த் துளி விழவும் பதறிய பவன். அவள் கையை எடுத்துத் தன் மார்பின் மீது வைத்தவன், அவள் முகத்தை நிமிர்த்தி மதுவின் கண்களைப் பார்த்து, “உங்களை நான் காலத்துக்கும் கைவிடமாட்டேன். என்னை நம்புங்க. இது ஏதோ தெரியாம நமக்குள்ள நடந்துடுச்சு. அதுக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏத்துக்கிறேன். நம்ம இங்கே இருந்து ஊருக்குப் போனதும், முதலில் என் அம்மாகிட்டயும், தங்கச்சி கிட்டயும் உண்மையையெல்லாம் சொல்லி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று சொன்னான் பவன்.

“அதேபோல நீங்களும் விக்கி சார்கிட்டயும், உங்க தங்கை மது கிட்டேயும் இங்கே நடந்ததை எடுத்துச் சொல்லி, அவங்ககிட்டேயும் நம்ம திருமணத்திற்குச் சம்மதம் வாங்கணும்” என்றான் பவன்.

அவன் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்து பவனைப் பார்த்த மது, அவன் கைகளில் இருந்து தன் கையை நாசுக்காக விடுவித்துக் கொண்டவள், “எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லை. இந்த விஷயத்தை இதோட மறந்துடுங்க” என்று சொல்லிவிட்டு, படுக்கையில் இருந்து எழுந்தவள் நேராக பாத்ரூமிற்குச் சென்று விட, பவனுக்கு மது சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.

பாத்ரூம் சென்று கதவை தாழிட்டவளை, மெத்தையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பவன், என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் குளித்துவிட்டு வந்த மது, பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு வெளியே பார்க்க… பவன் இன்னமும் மெத்தையில் அதே நிலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தவள். “நீங்க உங்க ரூமுக்கு போறீங்களா பவன்? நான் டிரஸ் சேஞ்ச் பண்ணனும்” என்று சொல்லித் தயக்கத்தோடு பாத்ரூமிற்குள் நின்று கேட்க…

பவன் எதுவும் பேசாமல் ஜடம் போல மெத்தையில் இருந்து இறங்கித் தன் அறைக்குச் செல்ல, அவன் வெளியே சென்றதும் பாத்ரூமில் இருந்து வந்தவள் வேகமாக கதவைத் தாழிட்டு உடை மாற்றியவள், வெளியே வந்து பவனுக்கும் அவளுக்கும் காலை உணவைத் தயார் செய்தால்.

பவனும் தன் அறையில் இருந்து ஆபீஸ்க்குச் செல்வதற்கு ரெடியாகி வெளியே வர… டைனிங் டேபிளில் செய்த உணவுகள் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த மது, “பவன் வந்துட்டீங்களா? வாங்க சாப்பிடலாம். உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று எப்போதும் போல எதுவும் நடக்காதவள் போலப் பவனிடம் மது பேச…. அவளைக் குழப்பமாகப் பார்த்த பவன், “இல்ல எனக்கு வேண்டாம். எனக்குப் பசிக்கல” என்று சொல்ல….

“என்ன பவன் இப்படிச் சொல்றீங்க? காலையில சாப்பிடாம வேலைக்குப் போனா உடம்பு என்ன ஆகிறது? எப்பவுமே காலை உணவு மிஸ் பண்ணக் கூடாது. வாங்க” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் டைனிங் டேபிள் அமர வைத்தவள், தட்டில் அவனுக்கு உணவுகளைப் பரிமாறி, “உங்களுக்காக நான் பார்த்துப் பார்த்துச் செஞ்சுருக்கேன். இப்படி சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டுப் போனா நான் என்ன அர்த்தம்?” என்று சொல்லி அவனைச் சாப்பிடச் சொல்ல…

தனக்கு எப்போதும் போல உணவு பரிமாறும் மதுவே பார்த்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக அவள் முகத்தையே பார்க்க….

“என்ன பவன் அப்படிப் பார்க்கிறீங்க? சாப்பிடுங்க” என்று சொல்லி அவன் அருகில் இருந்த சேரில் அமர்ந்து தன் தட்டில் உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மதுவைப் புரியாமல் பார்த்தான் பவன்.

அவனைச் சாப்பிடச் சொல்லிவிட்டு, மதுவும் சாப்பிட ஆரம்பித்தாள். அவனுக்கு மதுவைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவள் என்ன மனநிலையில் இப்போது இருக்கிறாள் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. பேருக்கு அவள் வைத்த உணவைச் சிறிது சாப்பிட்டுவிட்டு ‘போதும்’ என்று கையைக் கழுவிட்டு எழுந்தவன் ஆபீஸ்க்குச் செல்லத் தயாராக….

மது “பவன், ரெண்டு நிமிஷம் நான் ரெடியாகி வந்து விடுகிறேன். ஆபீஸ் ஒண்ணா போகலாம்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று உடை மாற்றி விட்டு வந்து பவனுடன் எப்போதும் போல ஆபீசுக்குக் கிளம்பினாள்.

செல்லும் வழியில்லாம் பவன் குழப்பமாகவே இருக்க… ஆனால் மதுவோ நேற்று இரவு நடந்ததை எல்லாம் எதுவுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனுடன் மிகவும் சகஜமாக எப்போதும் போல பேச ஆரம்பித்தாள்.


இங்கு ஆதி ஷிவுவுடன் ஆபீசுக்கு வந்தவன். காரில் இருந்து இறங்கியவன் அவளை அழைத்துக்கொண்டு ஆபீஸ் ரூமுக்குள் செல்ல, வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி ஆதி வருவதைப் பார்த்தவன், அவனுக்கு எழுந்து நின்று வணக்கம் வைத்தார். அவரைப் பார்த்துப் பதில் வணக்கம் வைத்துவிட்டு உள்ளே சென்ற ஆதி, லிஃப்டில் ஷிவுவுடன் ஏறியவன், 16வது மாடியில் இருக்கும் தனது ஆபீஸிற்கு லிஃப்ட் இயக்கினான்.

ஷிவு எதுவும் பேசாமல் அமைதியாகவே ஆதியுடன் சென்றாள்.

அவர்களது தளம் வந்ததும் லிஃப்டில் இருந்து வெளியே வந்த ஆதி ஷிவுவைத் திரும்பிப் பார்க்க… அவள் தயக்கத்துடன் ஆதியைப் பார்த்த பார்வையில் தயங்கிக் கொண்டே லிஃப்டிலிருந்து வெளியே வந்து ஆதிக்குப் பின் தொடர்ந்து அவன் கேபினுக்குள் சென்றாள்.

உள்ளே வந்ததும் அவளைத் தன் அறையில் இருந்த சோபாவில் அமரச் சொல்லிவிட்டு, ரியாவுக்கு இன்டர் காமில் அழைத்தவன், ரியாவை அழைக்கச் சற்று நேரத்தில் உள்ளே வந்த ரியாவிடம் ஷிவுவைக் காட்டி, அவரது வேலையைச் சொல்லி, தனது மற்றொரு கிளையான ஐ.டி. நிறுவனத்தில் ஷிவுவுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை ரெடி செய்யச் சொன்னான்.

ரியாவும் சென்று ஆதி சொன்னது போல ஷிவுவுக்கு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் ரெடி செய்து வந்தவள், ஆதியிடம் நீட்ட…. அதை வாங்கிக் விட்டு ரியாவை அனுப்பியவன், எழுந்து வந்து ஷிவு அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தவன்.

ஷிவுவிடம் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை நீட்டி, “என்னோட ஐ.டி. கம்பெனியப் பாத்துக்குற முழுப் பொறுப்பையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். அந்தக் கம்பெனியை நல்லபடியா உயர்த்திக் கொண்டு வர வேண்டியது உன்னுடைய முழுப் பொறுப்பு. அதுக்காக நீ எந்த மாதிரி முயற்சிகள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு நான் உனக்குத் துணையாக இருப்பேன்” என்று ஆதி சொல்ல….

அவனை அதிர்ச்சியாகப் பார்த்த ஷிவு, அவன் கையில் இருந்த அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை வாங்கிப் பிரித்துப் பார்த்தவள், அதில் ஷிவுவை தன்னுடைய ஐ.டி. நிறுவனத்திற்கு அடுத்த நிலையில் இருக்கும் சி.இ.ஓ.விற்கு அடுத்த நிலையில் இருக்கும் போஸ்டிங்கில் அவளை அப்பாயிண்ட் செய்திருந்தான்.

“மாமா, இது ரொம்பப் பெரிய பொறுப்பு. நீங்க இதை யாராவது முன் அனுபவம் இருக்கிறவங்க கிட்ட கொடுக்கலாம். அவங்க நீங்க சொன்னது போல நல்லபடியா முன்னேற்றிக் கொண்டு வருவாங்க. நான் இந்தத் துறைக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து, ஆறு மாதங்கள் தான் ஆகி இருக்கு மாமா” என்றால் ஷிவு.

“எனக்கு இதெல்லாம் தெரியாமல் தான் நான் உன்னை இந்த போஸ்டிங்கில் அமர வைத்திருக்கிறேன் என்று நினைத்தாயா?” என்றான் ஆதி.

“மாமா, அது வந்து எனக்கு இந்த போஸ்டிங்… நான் இதுக்கு தகுதியானவளா?” என்று ஷிவு தயக்கத்துடனே ஆதியிடம் கேட்க…

“உன்னை நம்பி ஒரு பொறுப்பைக் கொடுத்தா, அதைத் தைரியமா முழு மனசோட ஏத்துக்கிட்டு அந்த வேலையை நல்லபடியா செய்யப் பார்க்கணும். அதை விட்டுட்டு உன்னால முடியுமா? முடியாதா? என்று நீ பட்டிமன்றம் நடத்திட்டு இருந்தா இது வேலைக்கு ஆகாது. சரி பரவாயில்லை. நீ முன்னாடி கம்பெனில எந்த போஸ்டிங்கில் வேலை பார்த்துட்டு இருந்தியோ, அதே வேலையை உனக்குக் கொடுக்கிறேன்” என்று அவள் கையில் இருந்த அப்பாயின்மென்ட் ஆர்டரைத் தன்னிடம் கொடுக்கச் சொல்லி ஆதி கையை நீட்ட…

அவனிடம் அந்தப் பேப்பரைக் கொடுக்க மறுத்த ஷிவு, “இல்ல மாமா. நீங்க எனக்குக் கொடுத்த போஸ்டிங்கை நான் நல்லபடியா செய்து உங்ககிட்ட என்னோட திறமையை நிரூபிப்பேன்” என்ற ஷிவு சற்று நிமிர்ந்து அமர்ந்து எப்போதும் போலப் பழைய ஷிவுவாக ஸ்போர்ட்டிவாக ஆதியிடம் பேச…

“இந்தத் தைரியமான திமிர் பிடித்த ஷிவு தான் எனக்கு வேணும். யாரோ ஒருத்தர் உன் வாழ்க்கையில் வந்து உன்னை ஏமாத்திட்டா, அதுக்காக உன் வாழ்க்கை அப்படியே முடிஞ்சு போயிடும்னு நீ சோர்ந்து போய் உட்கார்ந்துடக் கூடாது. இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கிறது. தைரியமாக, தன்னம்பிக்கையாக இந்த வேலையை எடுத்துச் செய். மற்றதெல்லாம் தானாகவே உன் கைக்கு வந்து சேரும். அதை உன் கைக்கு வந்து சேர்க்க வேண்டியது இந்த ஆதியின் பொறுப்பு” என்றான்.

“அந்த ரூபேஷ் உனக்குக் கீழ தான் பார்க்கப் போறான். அவனை நீ எப்படி ஹேண்டில் பண்ணனும்னு பார்த்துக்க. உன்னோட பர்சனல் விஷயத்தை ஆபீஸ்க்குள்ள கொண்டு வராதே. அதேபோல, இதுவரை ரூபேஷ் பார்த்த ஷிவு வேறையா இருக்கலாம். இனிமேல் பார்க்கப் போற ஷிவு, நாங்கள் பார்த்த தைரியமான, எதையும் சவாலாக எடுத்துக் கொள்ளும் ஷிவுவாகத்தான் அந்த ரூபேஷிற்குத் தெரிய வேண்டும்” என்றான் ஆதி.

“அந்த ரூபேஷ் உன்னை ஏமாற்றி விட்டால், உன் வாழ்க்கை அத்தோடு முடிந்து போகும் என்று நினைக்காதே… உன் வயிற்றில் இருக்கும் குழந்தை உன்னை நம்பி மட்டும்தான் இருக்கிறது. நீ நம்பிய ஒருவர் உன்னை ஏமாற்றலாம். ஆனால் உன்னை நம்பி இந்த உலகத்திற்கு வரப் போகும் அந்தச் சிசுவை நீ ஒருபோதும் ஏமாற்றி விடக்கூடாது. உன் குழந்தை பிறக்கும் பொழுது அதனுடைய தந்தை உன் கூடவும், உன் குழந்தை கூடவும் இருப்பான். அதற்கு நான் பொறுப்பு” என்றான் ஆதி.

தன் இருக்கையில் இருந்து எழுந்த ஷிவு, ஆதியிடம் நெஞ்சை நிமிர்த்தித் தைரியமாக நின்றவள், “என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்து இருக்கீங்க மாமா. நிச்சயமா இதை நான் நல்லபடியா செய்வேன். வேற எந்த ஒரு விஷயமும் என்னோட அடுத்த இலக்கை நோக்கிச் செல்வதை நான் அனுமதி தர மாட்டேன். என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி மாமா. அந்த நம்பிக்கையை நான் வீண் போக விட மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, ஷிவு அங்கிருந்து தன் புதிய வேளையில் ஜாயின் செய்யக் கிளம்பினாள்.

____________________

ஆதியின் ஆபீஸில் இருந்து தைரியமாக வந்தவள் லிஃப்டில் ஏறிச் செல்லப் போக… அப்போது அங்கே வந்த ஸ்ரீ, “மேடம் ஒன் மினிட்” என்று சொல்லி அவளுடன் சேர்ந்து கொண்டான்.

“சார் உங்களை, உங்களோட தளத்திற்கு என்னை அழைத்துச் சென்று அங்கு இருப்பவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கச் சொன்னார்” என்று சொல்லி ஸ்ரீ அவளுடன் வர, “சரி வா” என்று தலையாட்டி ஸ்ரீயுடன் அவ்வளவு தளத்திற்குச் சென்றாள் ஷிவு.

ஆதியின் ஆபீசுக்குக் கீழே உள்ள 15-வது மாடியில் தான் ஆதியின் ஐ.டி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அது மிகப்பெரிய கட்டிடம் என்பதால், ஆதியின் அனைத்து நிறுவனங்களும் அவனுக்குக் கீழ் தான் இங்கே வேலை செய்து கொண்டிருக்கிறது.

அவள் தளம் வந்ததும் லிஃப்டிலிருந்து வெளியே வந்த ஷிவு, ஸ்ரீ வழிநடத்தி உள்ளே அழைத்துச் சென்றவன், அவளுடைய தளத்தில் இருப்பவர்களை ஐந்து நிமிடத்தில் மீட்டிங் ஹாலுக்கு வருமாறு கூறிவிட்டு, ஷிவுவை அவள் கேபினுக்கு அழைத்துச் சென்றவன், அவள் சேரைக் காட்டி, “மேடம் இதுதான் உங்களுடைய ரூம்” என்று சொன்னவன், இன்டர் காமில் அழைத்து ஒருவரை உள்ளே வரச் சொல்ல…

ஷிவுவுக்கு பி.ஏ.வாக அப்பாயிண்ட் செய்திருந்த ஒரு பெண் உள்ளே வர… அவளைப் பார்க்கத் துரு துருவென இருக்கும் அவளைப் பார்த்ததுமே ஷிவுவுக்குப் பிடித்துப் போய்விட்டது. நல்ல சிரித்த முகமாக உள்ளே வந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அவளுடைய வைப்ரேஷன் ஷிவுவையும் தொற்றிக் கொண்டது. அவளைக் காட்டி ஸ்ரீ ஷிவுவிடம், “மேடம் இவங்கதான் உங்களுக்காக அப்பாயின்ட் பண்ணி இருக்க புது பி.ஏ.. இவங்க பேரு நர்மதா” என்று ஷிவுவுக்கு நர்மதாவை அறிமுகம் செய்து வைத்தான்.

ஷிவுவின் அருகில் வந்து தன் கையை நீட்டி, “கிளாட் டு மீட் யு மேம்” என்றவள், “ஐயாம் நர்மதா” என்று சிரித்த முகமாகத் தன் கை நீட்டி நிற்கும் நர்மதாவைப் பார்த்த ஷிவு சிரித்துக்கொண்டே தன் கையை நீட்டி அவள் கையைப் பிடித்துக் குலுக்கி, “நைஸ் டு மீட்டிங் மிஸ் நர்மதா” என்று சொன்னாள் ஷிவு.

பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு, “மீட்டிங் அரைக்க அனைவரும் கூடிவிட்டார்கள்” என்று ஸ்ரீ ஷிவுவிடம் சொல்ல….

“சரி போகலாம்” என்று ஷிவு முன்னே நடக்க… ஷிவுவின் வலது புறம் நர்மதாவும், இடது புறம் ஸ்ரீயும் வர, மிடுக்காக, கம்பீர நடையோடு மீட்டிங் ஹாலிற்குச் சென்றாள் ஷிவு.

மீட்டிங் ஹாலுக்குள் ரூபேஷும் இருந்தான். அவன் தன்னுடைய சக ஊழியருடன் பேசிக் கொண்டிருக்க…

அப்போது அவர்கள் மீட்டிங் ஹால் கதவைத் திறந்து கொண்டு முதலில் உள்ளே வந்த நர்மதாவும் ஸ்ரீயும் மீட்டிங் ஹாலில் அமர்ந்திருப்பவர்களைப் பார்க்க, நர்மதா, “இவங்க நம்முடைய புது ஜெனரல் மேனேஜர்” என்று சொல்லி மீட்டிங் வாசலைக் காட்ட….

அப்போது கதவைத் திறந்து கொண்டு மிகவும் ஸ்டைலாக ஷிவு உள்ளே வந்தால். சிரித்த முகமாகத் திரும்பித் தங்களுக்கு வரப் போகும் ஜி.எம்.ஐ ஊழியர்கள் அனைவரும் வரவேற்க வாசலைப் பார்க்க….

தனக்கு மேலதிகாரியாக வரப்போகும் நபரை ரூபேஷ் சிரித்த முகமாக வரவேற்கத் தயாராக… ஆனால் அங்கே வந்த ஷிவுவைப் பார்க்கவும் அவன் முகம் அப்படியே சுருங்கி விட்டது.

உள்ளே வந்து ஷிவு தான் அமரும் இடத்திற்கு வந்தவள், மரியாதை நிமித்தமாக அனைவரும் பார்த்துத் தலையில் சேர்த்துவள், அனைவரையும் அமரச் சொல்லிவிட்டுத் தானும் அமர்ந்தாள்.

மீட்டிங் ஹாலில் இருந்த ஒவ்வொருவரும் ஷிவுவுக்கு வாழ்த்துச் சொல்ல…. அதையெல்லாம் பொறுமையாக ஷிவு கேட்டுக் கொண்டிருக்க…

இப்போது ரூபேஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நேரம் வர… தன் சேரில் இருந்து ஷிவுவைப் பார்த்து தயக்கத்தோடு எழுந்து நின்றவன். தன்னை ஷிவுவுக்கு அறிமுகம் செய்து கொள்ள… ஷிவு மற்றவர்களிடம் எப்படி நடந்து கொண்டாலோ, அதேபோலத்தான் ரூபேஷிடமும் நடந்து கொண்டாள்.

அவனைப் பார்த்ததும் ஷிவு எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவளின் இந்த முகம் ரூபேஷிற்குப் புதிதாக இருந்தது.

தன்னை அறிமுகம் செய்துவிட்டு குழப்பமாகத் தன் இருக்கையில் அமர்ந்த ரூபேஷ் ஷிவுவையே பார்த்துக் கொண்டிருக்க…. ஆனால் இப்போது வரை இருக்கும் இடத்திற்குத் தன் பார்வையைத் திருப்பவே இல்லை.

அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திய பிறகு ஷிவு தன் இருக்கையில் இருந்து எழுந்தவள், “உங்கள் எல்லாம் மீட் பண்ணதுல எனக்கு ரொம்பச் சந்தோஷம். நீங்க எல்லோரும் நான் எதிர்பார்க்கும் அளவுக்கு என்னோட வேலையில ஒத்துழைப்பீங்கன்னு நம்புறேன்” என்றவள், விடை பெற்று அங்கிருந்து சென்றாள்.

மீட்டிங் ஹாலை விட்டு மிடுக்காக வெளியே வந்த ஷிவு தன் கேபினுக்குச் செல்ல…. அவள் பின்னே நர்மதாவும் ஸ்ரீயும் சென்றனர்.

தன் கேபினுக்கு வந்து ஷிவு அவள் இருக்கையில் அமர…. ஸ்ரீ ஷிவுவிடமும் நர்மதாவிடமும் சொல்லிக் கொண்டு தன்னுடைய தளத்திற்குச் சென்றான்.

ஸ்ரீ சென்றதும் ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டு ரிலாக்ஸ் ஆன ஷிவு நர்மதாவிடம் திரும்பி, “நர்மதா, எனக்கு ஒரு டம்ளர் சில்லுனு தண்ணி வேணும்” என்று சொல்ல…

“இதோ மேடம்” என்று சொல்லிவிட்டு வேகமாக அவள் கேபினை விட்டுச் சென்றவள், சென்ற வேகத்திலேயே கையில் ஒரு டம்ளர் தண்ணீருடன் வந்து ஷிவுவின் முன் நீட்டினாள்.

“தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு அந்தத் தண்ணீரை வாங்கி மடமடமடவெனக் குடித்தவள், டம்ளரை டேபிளில் வைத்துவிட்டு நர்மதாவிடம் சில ஃபைல்ஸ்களை எடுத்து வரச் சொல்லி அனுப்பிவிட்டு, சற்று நேரம் தன் இருக்கையில் ரிலாக்ஸாக அமர்ந்தவள் பின் தன் வேலையைத் தொடர ஆரம்பித்தாள்.

❤️

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured