Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 161

உன் ரகசிய ரசிகை நான் 161

by Layas Tamil Novel
146 views

EPISODE 161

கூட்டத்திற்கு (Meeting) வந்திருந்தவர்களை எல்லாம் ஆதி சமாளித்து அனுப்பி வைத்துவிட்டுச் சங்கவியைப் பார்க்க… அவளோ, தான் போட்ட திட்டமெல்லாம் முறியடித்துவிட்டுத் திமிராக நின்று இருக்கும் ஆதியைப் பார்த்த சங்கவிக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது.

ஆதி, சங்கவி தாங்கள் இத்தனை நாள் இரவு பகல் பாராமல் வேலை செய்த தங்கள் உழைப்பைத் தங்களுக்குத் தெரியாமல் சங்கவி ‘மவுண்ட் டிசைன் ஸ்டுடியோவிற்கு’ விற்றுவிட்டதைக் கேட்ட கதிருக்கும், விக்கிக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

விக்கி நேராகத் தன் இருக்கையிலிருந்து எழுந்து சங்கவியிடம் வந்து, “உனக்கெல்லாம் எவ்வளவு பட்டாலும் புத்தி வராதா? எப்படி இப்படி அடுத்தவங்க உழைப்பை இவ்வளவு சாதாரணமா உன்னால திருட முடியுது?” என்றான் விக்கி.

“இத்தனை நாளா அம்மா அப்பா இல்லாமல் இவனுங்க கூட ஒண்டி வாழ்ந்த நீ! என் அம்மாவை என்கிட்டே இருந்து பறிச்சிட்டுப் போன நீயெல்லாம் என்கிட்டப் பேசக் கூடத் தகுதி இல்லாதவன்!” என்று விக்கியை எடுத்தெறிந்து பேசினாள் சங்கவி.

அவள் இப்படிப் பேசியதும் விக்கிக்கு வருத்தமாகிப் போனது. “கூடப் பிறந்த அண்ணன் என்ற பாசம் துளியும் உன் மனசுல இல்லையா?” என்றான் விக்கி.

விக்கி பேசியதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்த சங்கவி, “நீ என் கூடப் பிறந்த அண்ணனா?” என்று சொல்லி மீண்டும் சிரித்தாள்.

இதற்கு மேலும் இவளிடம் பேசினால் தனக்கு மரியாதை இருக்காது என்பதை உணர்ந்த விக்கி, சங்கவியைப் பகைமையுடன் (வெறுக்கும்) பார்த்தவன், பிறகு கூட்ட அறையிலிருந்து வெளியேறிவிட… கதிறும் சங்கவியை முறைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

அவர்கள் இருவரும் சென்றதும் ஆதி சங்கவியைப் பார்த்து, “நான் நினைச்சா, என்னோட நிறுவனத்தின் (Company) திட்டத்தை (Project) நீ திருடி, வேலையாட்களுக்குக் கொடுத்ததுக்காக உன்னைச் சிறையில் (Jail) பிடிச்சுப் போட முடியும்,” என்றான் ஆதி.

“என்னை பிடிச்சுப் போலீசில் ஒப்படைக்காமல் ஏன் ஆதி பேசாம இருக்க?” என்றாள் சங்கவி.

அவளை முறைத்துவிட்டு, “உனக்கு இன்னொரு வாய்ப்பு தரேன். நீ திருந்தி, சிவகாமி அத்தையையும், விக்கி, நிலானியையும் வீட்டுக்கு அழைச்சு அவங்க கூட ஒரே குடும்பமா வாழப் பாரு,” என்றார் ஆதி.

ஆதி சொன்னதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்த சங்கவி… “அது இந்த ஜென்மத்துல நடக்காது. நான் சொத்தைக் கேட்டு, அந்த விக்கியை அங்கேயே தலை முழுகிட்டு, என் அம்மா வீட்டுக்கு வந்தால் வேணாம், நான் அவங்களை உள்ளே விடலாமா வேண்டாமா என்று நான் முடிவு செய்கிறேன்,” என்றால்.

அவளை ஒரு புழுவைப்போல் பார்த்துவிட்டு, கூட்ட அறையிலிருந்து சென்றான் ஆதி.

செல்லும் ஆதியைத் திமிராகப் பார்த்த சங்கவி, திரும்பி அந்த அறைக்குள் இருந்த ரியாவையும், ஸ்ரீயையும் பார்த்தவள், எழுந்து ரியாவிடம் வந்து, “எப்படிடீ? கோப்பை உன்னோட பூட்டுப் பெட்டியில் (Locker) இருக்கப்போ, அதோட மொத்தத் தேடலையும் நான் எடுத்தேன்னு பாக்குறியா?” என்றால் சங்கவி.

ரியா எதுவும் பேசாமல், தன்னால் தான் தன்னுடைய முதலாளிக்கு இந்த ஆர்டர் கிடைக்காமல் போய்விட்டது என்று ஏற்கனவே வருத்தத்தில் இருந்தாள். இப்போது சங்கவி வேறு வந்து ரியாவைப் சீண்டிப் பார்க்க… ரியா சங்கவியைப் பார்த்துக் முறைத்துக் கொண்டு நிற்க…

அவள் அருகில் நின்று இருந்த ஸ்ரீ, “என்ன ஆச்சு சங்கவி உனக்கு? ஏன் நீ இப்படி எல்லாம் நடந்துக்குறே? உன்கிட்டயும் மாமாகிட்டயும் இல்லாத பணமா? நீ இப்படி இருக்குறது சரி இல்லை சங்கவி. உன்னை நீ திருத்திக்கிற வழியைப் பாரு,” என்றான் ஸ்ரீ.

“நீயெல்லாம் எனக்கு அறிவுரை (Advise) சொல்ற அளவுக்கு வந்துட்டே ம்ம்…” என்றவள். ரியாவைப் பார்த்து, “உன் இடத்துல இருந்த அந்த துர்காவை (லக்ஷு)யே நான் இப்போ எந்த நிலைமையில் வெச்சிருக்கேன்னு உனக்குத் தெரியும்டீ தானே?” என்றவள். “கோப்பை பூட்டுப் பெட்டியில் வெச்சுப் பத்திரமா பூட்டுனியே… அந்தச் சாவியையும் அதே போலப் பத்திரப்படுத்தணும்னு தெரியலையே முட்டாள் ரியா,” என்றால் நக்கலாக.

“நான் என்னோட இழுப்பறையில் (Drawer) தான் வைத்திருந்தேன்,” என்று ரியா சங்கவியை இயலாமையுடன் பார்த்துக் கூற…

அவள் இயலாமையைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்த சங்கவி, “அந்தச் சுண்டெலி இழுப்பறையைத் (சுண்டைக்காய் ட்ரையர்) திறப்பது என்ன அவ்வளவு கஷ்டமா?” என்றவள். சடாரென ரியாவின் சட்டையைப் பிடித்துத் தன் முகத்திற்கு அருகில் இழுத்த சங்கவி, ரியாவின் கண்களைப் பார்த்து, “நீ இன்னும் வளரணும் பாப்பா,” என்றால் திமிராக.

அவள் அப்படித் திடீர் என்று ரியாவின் சட்டையைப் பிடித்து இழுத்ததும் கோபம் அடைந்த ஸ்ரீ, “சங்கவி என்ன பண்ற? முதல்ல ரியா மேல இருந்து கையை எடு,” என்று கோபமாக ரியாவின் சட்டையைப் பிடித்திருந்த சங்கவியின் கையைப் பிடித்துக் கொண்டு சொல்ல…

ரியாவைப் பிடித்திருந்த தன் கையின் மேல் இருந்த ஸ்ரீயின் கையைப் பார்த்து முறைத்துவிட்டு அவனைப் பார்க்க… அவள் பார்த்த பார்வையிலேயே, தானாகத் தன் கையை சங்கவியின் கையில் இருந்து எடுத்த ஸ்ரீ… “சங்கவி ப்ளீஸ் கையை எடு,” என்றான்.

அவனைப் புரியாமல் பார்த்த சங்கவி, “இவளைத் திட்டினா உனக்கு ஏன்டா ஸ்ரீ கோவம் வருது?” என்று கேட்டாள். ஸ்ரீ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… “ஓஹோ… அப்போ நீ… இவளை,” என்று சொல்லி ரியாவைப் பார்த்த சங்கவி, “என்ன, நீயும் அவளும் காதல் பண்றிங்களா?” என்று கேட்டாள்.

சங்கவி அப்படிச் சொன்னதும் ரியா அதிர்ச்சியாக நிமிர்ந்து ஸ்ரீயைப் பார்க்க… அவள் ஸ்ரீயைப் பார்த்த விதத்தை வைத்தே புரிந்துகொண்ட சங்கவி, “அப்போ ஒருதலைக் காதலா (One-sided Love)?” என்றால் ஸ்ரீயிடம்.

“நீ முதல்ல ரியா மேல இருந்து கையை எடு சங்கவி. தேவையில்லாததை எல்லாம் பேசாதே,” என்று ஸ்ரீ சற்று காட்டமாகப் பேச…

“ஓகே.. ஓகே… அமைதி (Cool) டா ஸ்ரீ,” என்றவள், ரியாவின் சட்டையை விட்டு விட்டு, அவள் சுருங்கிய சட்டையை நீவிக்கொண்டே, ரியாவின் காதின் அருகில் வந்த சங்கவி, “என் மாமா பையன் தான் ஸ்ரீ. ரொம்ப நல்ல பையன். நீ பேசாம அவனையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோயேன். ரெண்டு பேருடைய ஜோடிப் பொருத்தம் சூப்பரா… இருக்கு,” என்றால்.

சங்கவியை ‘இவள் என்ன பைத்தியமா?’ என்பது போலப் பார்த்த ரியா, “வழியை விடுங்க,” என்றவள், ஸ்ரீயைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள். ஸ்ரீயைப் பார்த்து, “தேர்வு (Selection) நல்லா தான் இருக்கு,” என்றவள் அந்த அறையை விட்டுச் சென்றுவிட்டாள்.

‘ச்சே… இவளால் என் காதலை இப்படி ரியாவுக்குத் தெரிய வைக்க வேண்டியதாப் போய்டுச்சே… ஏற்கனவே ரியா என்னைக் கண்டாலே ஓடிறா… இடத்துல இவை வேற இப்போ என்னோட காதலுக்குச் சூனியம் வெச்சிட்டுப் போய்ட்டாளே…. இனி எப்படி நான் ரியாவை என் வழிக்குக் கொண்டு வர்றது?’ என்று யோசித்தவாறு சென்றான் ஸ்ரீ.


மாலை ஷிவுவை அழைத்துக்கொண்டு போக ஆதி மருத்துவமனைக்கு வந்தவன், நேராக ஷிவுவைப் பார்க்காமல் ரூபேஷின் அம்மாவைப் பார்க்க அவர் அறைக்குச் சென்றான். அவர்கள் இருந்த அறைக்கு முன் நின்றவன், சிறிது தயங்கியவன், பிறகு உள்ளே செல்லலாம் என்று கதவைத் தட்ட…

கதவு தானாகத் திறந்து கொண்டது. ஆதி யோசனையோடு அறைக்கதவைத் திறக்க… அங்கே அவன் கண்ட காட்சி ஆதியை ஒரு நிமிடம் உறைய வைத்துவிட்டது. உடல்நிலை சரியில்லாத ரூபேஷின் அம்மா படுக்கையில் அமர்ந்து கொண்டு, ஒரு கையில் கத்தியை வைத்துத் தன் மணிக்கட்டை அறுத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டு இருந்தார்.

ஒரு நிமிடம் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ஆதி, வேகமாக அவர் அருகில் வந்து, அவர் கையில் இருந்த கத்தியைப் பிடுங்கித் தூர வீசியவன், “என்ன காரியம் அம்மா செய்யப் பாக்குறீங்க? இந்த நேரம் நான் மட்டும் வரலையின்னா என்ன ஆகி இருக்கும்?” என்றார் ஆதி.

“என்னை ஏன் தம்பி காப்பாத்துனீங்க? அப்படியே விட்டு இருக்கலாமே. நான் யாருக்காக இந்த உலகத்துல இவ்வளவு நாள் இருந்தேனோ, அவன் இன்னிக்கு என்ன காரியம் செய்துட்டு வந்திருக்கான்னு தெரியுமா?” என்று சொல்லி, தன் கைகளைக் கொண்டு முகத்தை மூடி அழுதார்.

அவர் அழுவதைப் பார்த்த ஆதிக்கு ஏதோ போல இருந்தது. “அம்மா தயவுசெய்து அழாதீங்க,” என்றான் ஆதி.

“நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. பார்ப்பதற்குக் மிகவும் நல்ல குணம் உடையவராக இருக்கீங்க.. உங்களைப் போல நல்ல குணம் உடையவனா தான் நான் என் மகனை வளர்த்தேன். ஆனா, எனக்கு இந்த பாழாய்ப் போன நோய் வந்ததில் இருந்து என் மகனின் குணமே மாறி விட்டது,” என்று அழுதவர். “இனி யாருக்காகத் தம்பி நான் உயிர் வாழனும்? எனக்கு இருந்த பிடிப்பே என் மகன் தான். அனால் அவன் இப்படிப் பணம் பணம் என்று பணத்திற்குப் பின்னால் ஓடி ஒரு பெண்ணுடைய வாழ்க்கையை கேள்விக் குறி ஆக்கி இருக்கிறான்,” என்று இழுத்தார் ரூபேஷின் அம்மா.

“நீங்க இப்படி ஒரு தவறான முடிவு எடுத்துட்டா, உங்க மகனை நம்பித் தன் வாழ்க்கையை அவன் கிட்டேயே ஒப்படைச்சு, அவனால் கர்ப்பம் ஆனா அந்தப் பெண்ணோட வாழ்க்கை என்ன ஆகும்? அவளுக்காகத் துணையா இருந்து கேள்வி கேட்க வேண்டிய நீங்களே இந்த உலகத்தை விட்டுப் போய்ட்டா, அந்தப் பொண்ணையும் அவள் வயிற்றில் வளருற குழந்தையும் என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தீங்களா அம்மா நீங்க?” என்றான் ஆதி.

இவ்வளவு நேரம் ஆதியைப் பற்றி எதுவும் கேட்காமல், தன் மனக்குமுறல்களைச் சொல்லிக் கொண்டிருந்த ரூபேஷின் அம்மா, ஆதி ரூபேஷினால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிப் பேசியதும் தான், ஆதி யார்? அவனுக்கு எப்படி இந்த விஷயம் எல்லாம் தெரியும்? என்று தோன்றியது.

ஆதியைக் குழப்பத்துடனேயே பார்த்த ரூபேஷின் அம்மா, “தம்பி… நீங்க…” என்று தயங்கியவாறே கேட்க…

“நான் உங்க மகன் காதலிச்சு ஏமாற்றுய ஷிவுவுடைய மாமா ஆதி,” என்றான்.

ஆதி தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் பதறிய ரூபேஷின் அம்மா, “தம்பி என் பிள்ளை ரொம்ப நல்லவன். அவனை எதுவும் செய்துடாதிங்க. அவன் செய்த தப்பிற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்,” என்றார் ரூபேஷின் அம்மா.

“அவன் செய்த தப்பிற்கு நீங்க ஏன் மன்னிப்புக் கேட்கணும்?” என்றான் ஆதி.

ரூபேஷ்ன் அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… அவரிடம் வந்த ஆதி, “பயப்படாதீங்க அம்மா. நான் உங்க மகனை எதுவும் செய்ய மாட்டேன். அவனை எதுவும் செய்தால் பாதிக்கப் போறது நீங்க மட்டும் இல்லை. ஷிவுவும் அவள் வயிற்றில் வளரும் உங்கள் வாரிசும் தான்,” என்றான் ஆதி.

ஆதியைப் நன்றி உணர்வோடு பார்த்த ரூபேஷின் அம்மா. “தம்பி என் பையன் ஷிவுவை….” என்று தயங்க…

“நான் நீங்களும் உங்க பையனும் காலையில் பேசியதை எல்லாம் கேட்டுட்டுத் தான் இருந்தேன். உங்க மகனுக்குப் பணக்காரப் பொண்ணு தான் வேணும்னு உங்க கிட்டப் பிடிவாதமா சொல்லிட்டு இருந்ததை நானும் கேட்டேன்,” என்றான்.

அவர் எதுவும் பேசாமல் இருக்க… “ஷிவுவைக் கல்யாணம் பண்ணிக்க ரூபேஷ் எவ்வளவு பணம் கேட்டாலும் நாங்க தரத் தயாரா இருக்கோம்,” என்றான் ஆதி.

“தம்பி….” என்று ரூபேஷின் அம்மா மிகவும் சங்கடத்துடன் ஆதியை அழைக்க….

“எனக்குப் புரியுது மா… உங்க மகன் ஷிவுவையே கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்க மாட்டேன்னு தானே சொல்ல வரீங்க?” என்றான் ஆதி.

“ஆமாம்,” என்று ரூபேஷின் அம்மா தலையை ஆட்டினார்.

“அதை பற்றி நீங்க கவலைப் படாதீங்க அம்மா. அதை எல்லாம் நான் பார்த்துக்குறேன்,” என்றான் ஆதி. பின் எதையோ யோசித்தவனாக, “உங்க மகனுக்கும் ஷிவுவுக்கும் திருமணம் செய்து வைக்க நான் ஒரு நிபந்தனை (Condition) சொல்றேன். அதுக்கு நீங்க சம்மதித்தால் மட்டுமே இந்தத் திருமணத்தை நடத்த நான் சம்மதம் சொல்வேன்,” என்றான் ஆதி.

ஆதியைப் ‘என்ன?’ என்பது போல ரூபேஷின் அம்மா பார்க்க… ரூபேஷ் ஷிவுவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்க வேண்டிய நிபந்தனை பற்றிச் சொன்ன ஆதி. ரூபேஷின் அம்மாவிடம், “இந்தத் திருமணம் முடியும் வரை நான் சொன்ன நிபந்தனை பற்றி ரூபேஷிற்குத் தெரியவே கூடாது,” என்றான் ஆதி.

“சரி தம்பி. என் பையனை மட்டும் ஷிவுவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்க வைத்தால் போதும். உங்க நிபந்தனைக்கு நான் முழு மனதா சம்மதிக்கிறேன்,” என்றார்.

“சரி,” என்று தலையை ஆடிய ஆதி, அவரிடம் விடைபெற்றுவிட்டு, ஷிவுவை மருத்துவமனையில் இருந்து விடுவிப்புச் செய்து அழைத்துச் சென்றான்.


மாதவியின் கல்லூரியில் கல்லூரிக்கு இடையேயான போட்டி (Inter College Competition) தொடங்கியது. சங்கவியிடம் கெஞ்சிக் கூத்தாடி, ‘இனிமேல் கல்லூரி விட்டதும் வீட்டிற்கு வந்துவிடுவேன்’ என்று சொன்ன பின் தான், இந்தப் போட்டியில் பங்கு கொள்ளச் சங்கவி மாதவியை அனுப்பி வைத்தாள்.

நிகழ்ச்சி காலை பத்து மணியில் இருந்தே ஆரம்பித்தது. பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு இருந்தனர். இந்தப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக (Chief Guest) ஆதி தலைமை தாங்க இருப்பதால், துர்காவை (லட்சுமி/லக்ஷு) வெளியே அழைத்துச் சென்றால் அவளுக்கும் மாறுதலாக இருக்கும் என்று கருதி, அவளையும் தன்னோடு இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தான் ஆதி.

துர்காவுடன் வந்து காரில் இறங்கிய ஆதியை வரவேற்க வந்த போதி, துர்காவைப் பார்த்ததும் ஒரு கணம் அப்படியே நின்றவன். பின் சுதாரித்துக் கொண்டு இருவரையும் அழைத்த போதி, துர்காவைப் பார்த்து, “துர்கா எப்படி இருக்கே? உனக்கு உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறதா?” என்று போதி கேட்டான்.

அவனை ‘யாரோ’ போலப் பார்த்த துர்கா, ஆதியிடம், “யார் இவர்?” என்று கேட்டாள்.

அவள் கேள்வியிலேயே அவளுக்கு இன்னும் பழைய நினைவுகள் எதுவும் வரவில்லை என்று போதிக்குப் புரிந்தது. ஆதி துர்காவிடம், “இவர் போதி. உன்னுடைய நண்பர்,” என்றான் ஆதி.

“அப்படியா!!!” என்று ஆச்சரியமாக ஆதியிடம் கேட்ட துர்கா, போதியைப் பார்த்து, “நான் நல்லா இருக்கேன்,” என்றவள், “நீங்களும் நானும் நண்பர்களா…” என்றாள்.

போதி சிரித்துக் கொண்டே, அவள் சிறு பெண் போலப் பேசுவதை ரசித்தவன், சிரித்துக் கொண்டே, “ஆமாம்,” என்றவன். பிறகு இருவரையும் அழைத்துக்கொண்டு போய்ப் மேடையில் அமர வைத்தான். ஆதி துர்காவின் சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு மேடை வரை வந்தவன். அதன் பிறகு துர்காவை சக்கர நாற்காலியில் இருந்து தூக்கிக் கொண்டு மேடை ஏறியவன், தன் அருகில் இருந்த நாற்காலியில் துர்காவை அமர வைத்துவிட்டு, அவனும் அமர்ந்து கொண்டான்.

போட்டிகள் ஏற்கனவே நடை பெற்றுக் கொண்டு இருக்க… அதையெல்லாம் கவனித்தவாறே மேடையில் இருந்த படி துர்காவிடம் ஆதி ஒவ்வொரு நிகழ்ச்சியைப் பற்றியும் சொல்லிக் கொண்டு இருந்தான். மேடையில் அவர்களுடன் அமர்ந்து இருந்த போதி, ஆதி துர்காவை எவ்வளவு அக்கறையாகப் பார்த்துக் கொள்கிறான் என்று அவர்கள் இருவரையும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்தான்.

அப்போது “எங்கிருந்தாலும் வாழ்க…” என்று போதியின் அருகில் வந்து, அவன் அருகில் அமர்ந்து இருந்த மித்ரன் பாட… அவனைத் திரும்பி முறைத்த போதி, “பேசாம உட்காருறியா? இல்லை உன் வாயை இங்கேயே கிழிக்கட்டுமா?” என்று பற்களை நறநறத்துக் கொண்டே போதி மித்ரனை எச்சரிக்கை செய்ய…

“எனக்கு எதற்கு வம்பு? நாம வந்த வேலையே பார்ப்போம்,” என்று மித்ரன் திரும்பிக் கொள்ள…

‘என்ன வேலைன்னு பாக்குறீங்களா? அவன் இங்கே கல்லூரிக்கு வந்திருக்கும் பெண்களை எல்லாம் கண்ணடிக்கத் (Side அடிக்க) தான் போதியிடம் கெஞ்சி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறான் நண்பர்களே!’

“அடுத்தது பாட்டுப் போட்டி…” என்று அறிவித்தவர்கள், அதில் கலந்து கொண்டவர்களை எல்லாம் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்க, ஒவ்வொருவரும் தங்கள் திறமையை இங்கு காட்டினர்.

“அடுத்ததாக மாதவி…” என்று அழைக்க.. இவ்வளவு நேரம் எதற்காகக் காத்துக் கொண்டு இருந்தானோ, அந்தத் தருணம் வந்து விட்டது என்று போதி தன் காதுகளைத் தீட்டி ஆர்வமாக மாதவி பாடுவதைக் கேட்கத் தயாரானான்.

“சங்கடம் (வாழ்வு) தான் டா உனக்கு! ஒரு பக்கம் உன்னோட முன்னாள் காதலி (Ex-Lover), அவள் கணவனோடு உட்கார்ந்து இருக்கா… இன்னொரு பக்கம் உன்னோட தற்போதைய காதலி (Current Lover) மாதவி பாடப் போறா…” என்ற மித்ரன். “எனக்கு இங்கே ஒரு காதலிக்குக்கே யோக்கியதை (வக்கு) இல்லை. ஆனா இங்கே என்னடான்னா ஒருத்தன் ஒரு காதல் தோல்வி அடைஞ்சு கொஞ்ச நாளுலேயே ஐநூறு காதலுக்கு ரூட் போட்டுட்டு இருக்கான்,” என்றான் மித்ரன்.

அவன் அருகில் அமர்ந்து இருந்த போதி, மித்ரன் சொன்னதைக் கேட்டுத் திரும்பி அவனை முறைக்க… ‘ஆத்தி…. இவன் என்ன இப்படிப் பார்க்கிறான்? நாம கொஞ்சம் இன்னிக்கு அதிகமாகப் (Over) பேசிட்டமோ?’ என்று நினைத்த மித்ரன். ‘எதற்கும் இவன் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்போம்’ என்று தான் அமர்ந்து இருந்த நாற்காலியை நகர்த்திப் போட்டு அமர்ந்தான்.

மாதவி மேடை ஏறி, மேடைக்குக் கீழ் இருந்த அனைவரையும் பார்த்து வணக்கம் சொன்னவள். பின் திரும்பி மேடையில் இருந்த அனைவரையும் பார்த்து வணக்கம் சொல்லத் திரும்ப… அவள் திரும்பியதும் மேடையில் முதலாவதாக அவள் கண்களில் பட்டது போதி தான். அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். இருவரின் கண்களும் ஒரு முறை தங்கள் இதயம் வரை சென்று தொட்டு நீண்டது.

அவனைப் பார்த்த மாதவி ஒரு நிமிடம் தடுமாறியவள். பின் சுதாரித்துக் கொண்டு திரும்பி மேடையில் இருந்த ஆதி, துர்காவைப் பார்த்து வணக்கம் வைக்க… ஆதி அப்போது தான் மாதவியை நன்கு கவனித்தான். ‘அவளை இதற்கு முன்பு எங்கோ பார்த்து இருக்கிறோமே?’ என்று யோசனையுடன் மாதவியைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவர்களைத் தாண்டி போதியைப் பார்த்தவள், அவனுக்கு அவசரமாக வணக்கம் வைத்துவிட்டு, அவன் அருகில் இருந்த மித்ரனைப் பார்த்ததும் சிரித்த முகமாக வணக்கம் வைக்க..

“பாத்தியா டா? என் தங்கச்சி என்னை பார்த்து மட்டும் எப்படி அழகாச் சிரிச்சிட்டே வணக்கம் வைக்குறான்னு,” என்றான் மித்ரன்.

“ஆமாம் டா. இந்த பைத்தியம் (லூசு) எங்கே டா இங்கே வந்து இருக்கன்னு நினைச்சு உன்னைப் பார்த்து சிரிச்சு இருப்பான்,” என்றான் போதி.

அவனை முறைத்த மித்ரன், “சரி சரி, என் தங்கச்சி பாடப் போறா. கொஞ்ச நேரம் அமைதியா இரு,” என்று மித்ரன் மாதவி பாடுவதைக் கவனிக்க ஆரம்பித்தான்.

மித்ரனை முறைத்துக் கொண்டு இருந்த போதி, மாதவி பாட ஆரம்பித்ததும் அப்படியே ஸ்தம்பித்து போய், அவள் குரலைக் கேட்டு அப்படியே உறைந்து போய் கண்கள் மூடிப் பாடிக்கொண்டு இருந்த மாதவியை ஆச்சரியம் விலகாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் போதி.

கண்கள் மூடி மெய் மறந்து பாட ஆரம்பித்தாள் மாதவி. அவள் பாட ஆரம்பித்ததும் அவள் குரலைக் கேட்டு, அரங்கமே அவள் குரலில் அமைதியாகி அவள் பாடுவதைத் தங்களை மறந்து கேட்க ஆரம்பித்தனர். மாதவியின் குரல் அவ்வளவு இனிமையாக இருந்தது. அவள் பாடிய காதல் பாடலைக் கேட்டு அனைவரும் ரசித்துக் கொண்டு இருக்க…

மாதவி பாடிய காதல் வரிகள் நிறைந்த பாடலைக் கேட்ட போதி, அவள் பாடுவதையே ரசித்துக் கொண்டு கேட்டுக் கொண்டு இருக்க.. அவன் அருகில் அமர்ந்து இருந்த மித்ரன், “என்னடா, இந்தக் காதலும் உனக்குப் (புட்டுக்கும் போல இருக்கு… இப்படி மெய் மறந்து கண்ணை மூடி உருகி உருகி என் தங்கச்சி பாடுறதைப் பார்த்தால், அவ வேற யாரையோ காதலிப்பால் போல இருக்கே,” என்று கூற…

மித்ரன் கூறியதைக் கேட்ட போதிக்கு ஒரு நிமிடம் தன் இதயமே நின்று விடும் போல இருந்தது. அவன் சொல்வது போலவே மாதவி பாடுவதைப் பார்த்தால், யாரையோ உருகி உருகிக் காதல் செய்வாள் போல இருக்கே… என்று போதிக்கும் தோன்ற ஆரம்பித்தது.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured