EPISODE 174
ஆதியை அறையில் படுக்க வைத்துவிட்டு வேலையாட்கள் கிளம்பிவிட… வாசல் கதவை அடைத்துவிட்டு மேலே தன் அறைக்கு வந்த துர்கா, கதவடைத்துவிட்டுத் திரும்ப…
அவள் எதிரில் இடிக்கும் அளவுக்கு நெருக்கமாக ஆதி தள்ளாடியபடி நின்றான்.
திடீரென்று ஆதி வந்து நிற்கவும், முதலில் அதிர்ந்தாலும், பின் தள்ளாடியபடி நின்றுகொண்டிருந்த ஆதி இப்படியும் அப்படியும் அசைந்து அப்படியே நின்றாற்போல் பின்னால் சாய்ந்து விழப் போக…
ஆதி திடீரென்று பின்னால் சாய்ந்தபடி விழப் போக…
துர்கா, ஆதி கீழே விழுந்துவிடப் போகிறான் என்று அவசரமாக ஆதியைப் பிடிக்க… தன் கையிலிருந்த ஊன்றுகோலை விட்டுவிட்டு ஆதியை விழாமல் பிடிக்க…
ஆதியோ துர்காவின் கையைப் பிடித்துக்கொண்டு கீழே விழ… அவன் மீது துர்கா நிலை தடுமாறி ‘பொத்தென’ விழுந்தாள்.
போதையில் இருந்த ஆதி, தன் மேல் இருந்த துர்காவைப் பார்த்து, “துர்கா டார்லிங்” என்று குலறிக்கொண்டே அழைக்க…
அவன் மேல் படுத்தபடியே துர்கா, ஆதி தன்னை ‘டார்லிங்’ என்று அழைத்தும் ஆச்சரியம் போல அவனை நிமிர்ந்து பார்த்தவள்.
“ஆதி… என்ன இது? வா, முதல்ல போய் குளிக்கலாம். பாரு நீயே எப்படி இருக்கேன்னு” என்று சொல்லி அவன் மேல் இருந்து துர்கா எழுந்திருக்கப் போக…
அவளை அவன் மேல் இருந்து எழுந்திருக்க விடாமல் பிடித்துக்கொண்டு…
“எப்படி இருக்கேன்?” என்று போதையில் ஆதி உளற…
“நீயே உன்னைப் பாரு… எப்படி இருக்கேன்னு சொல்லிட்டு. தலை எல்லாம் கலைந்து… கண்கள் எல்லாம் சிவந்து போய், பார்க்கவே குடிகா…” என்று சொல்ல வந்தவள் தன் நாக்கைக் கடித்துக்கொண்டு அவனைப் பார்க்க…
“என்ன துர்கா? சொல்ல வந்தே, முழுசா சொல்லிடு” என்று அவளைத் தன்னோடு சேர்த்து அழுத்திக்கொண்டே ஆதி கேட்க…
அவள், “ம்ஹும்… ஒன்றுமில்லை” என்று தலையை இட வலம் அசைக்க…
“நீ என்ன சொல்ல வந்தேன்னு நான் சொல்லட்டுமா?” என்றவன், அவள் நெற்றியை முடிக்கொண்டே, “நான் பார்ப்பதற்கு குடிகாரன் மாதிரி இருக்கேன்னு தானே சொல்ல வந்தே?” என்று ஆதி சிரித்துக்கொண்டே கேட்க…
துர்கா எதுவும் சொல்லாமல் ஆதியைப் பார்த்தாள்.
“என்ன டார்லிங் அப்படிப் பார்க்கிறே?” என்றவன், தன் மேல் இருந்தவளின் முதுகில் இருந்த தன் கையைத் தடவிக்கொண்டே கீழே வந்தவன் (முதுகில் தடவிக் கொண்டே கீழே வந்தவன்), “நான் இன்னிக்கு இவ்வளவு குடிக்கக் காரணமே நீதான்” என்றான் ஆதி.
“நானா?” என்றாள் துர்கா புரியாமல்.
“ஆமாம் நீதான்!” என்றவன். “அந்த சங்கவி என் மனசுக்குள்ள நீ மட்டும்தான் இருக்கேன்னு அவள்கிட்ட நிரூபிக்கணும்னா, ஒரு பாட்டில் மதுவையும் முழுவதுமாகக் குடித்தால்தான் என் மனதில் அவள் இல்லை, நீ இருக்கிறாய் என்று நம்புவேன் என்று சொல்லிவிட்டாள். எனக்கு அவளிடம் என்னைப் நிரூபிக்க அவசியம் எதுவும் இல்லை.”
“ஆனால் அவளுக்கு என் மனது மொத்தமும் நீ மட்டும்தான் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறாய் என்று புரிய வைக்க வேண்டும் என்று நினைத்து நான் ஒரு முழு பாட்டில் போதை நிறைந்த மதுவைக் குடித்தேன் தெரியுமா?” என்றான் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு.
அவன் மனது முழுவதும் தான் மட்டும்தான் இருக்கிறேன் என்று தெரிந்துகொண்ட துர்கா, ஆதியின் கண்களையே காதலோடு பார்க்க…
“ஏன் துர்கா…” என்றவன், துர்காவின் இடையில் கைபோட்டு துர்காவைத் தன்னோடு சேர்த்து இருக்கமாகக் அணைத்துக்கொண்டான்.
அவன் துர்காவின் முதுகைத் தடவிக்கொண்டு வர… துர்காவுக்கு உடல் எல்லாம் சிலிர்க்க ஆரம்பித்தது. அவன் ஸ்பரிசம் அவள் உடலில் படவும் துர்காவுக்கு வெட்கத்தில் முகம் எல்லாம் சிவந்துவிட்டது.
அவள் முகம் சிவந்திருப்பதை மங்கலாகத் தெரிந்த தன் கண்களை அழுந்த மூடி திறந்த ஆதி, கண்களைச் சுருக்கிக்கொண்டு அவள் முகத்தைப் பார்த்தவன், “என்ன துர்கா டார்லிங்? உன் முகம் எல்லாம் சிவப்பா இருக்கு?” என்று கேட்டான்.
ஆதி சொன்னதும், அவனிடம் தன் முகத்தைக் காட்டக் கூச்சப்பட்டுக்கொண்டு ஆதியின் மார்பில் துர்கா தன் முகத்தை மறைத்துக்கொள்ள…
அதுவே அவளுக்கு வினையாகிவிட்டது. ஆதியின் மார்பில் துர்கா முகம் புதைத்துக்கொள்ள… அவள் மூச்சுக் காற்று, திறந்திருந்த அவன் சட்டையைத் தாண்டி அவன் மார்பில் சூடாக வருட…
ஏற்கனவே போதையில் சூடாக இருந்த ஆதியின் உடல், இப்போது துர்காவின் மூச்சுக்காற்றில் மேலும் சூடேறிவிட… அவளைப் பிடித்திருந்த இடையில் மேலும் அழுத்தம் கூட்டி, தன் உடலோடு ஆதி மேலும் துர்காவை நெருக்கிக் கொண்டு இறுக்கிப் பிடிக்க…
அவன் இறுக்கியதில் அவள் பூ உடல் வலிக்க… துர்கா லேசாக வலியில் சத்தமிட…
“என்ன டார்லிங்? வலிக்குதா? ரொம்ப அழுத்திப் பிடிச்சிட்டேனா?” என்றான்.
அவள் எதுவும் பேசாமல் முகத்தை மறைத்தபடி ஆதியின் மார்பில் முகம் புதைத்து இருக்க…
“ஓய் டார்லிங்! ஏன் என் முகத்தைப் பார்க்க மாட்டியா?” என்றான் ஆதி.
அவள், “ம்ஹும்” என்று தலையை இட வலம் ஆட்ட…
அவன் மார்பில் அவள் தலை அசைந்ததும் ‘குரு குரு’வென்று இருக்க… ஆதி கூச்சத்தில் சிரித்தவன், “துர்கா, கூசுது டி…” என்று தன் மேல் இருந்தவளை விடாமல் பிடித்துக்கொண்டு துர்காவைத் தூக்கிக்கொண்டு மேலே எழுந்தவன்.
தள்ளாடியபடியே துர்காவை இடையோடு சேர்த்து ஒரு கையால் தூக்கியவன், தன் உடலோடு சேர்த்து, அவள் பாதம் தரையில் படும் அளவு ஒரு பக்கமாகத் தூக்கிப் பிடித்த ஆதி. மறுகையால் அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டு தலை குனிந்து இருந்த துர்காவின் முகத்தைப் பிடித்து, தன் முகத்தைப் பார்க்குமாறு நிமிர்த்த…
நாணத்தால் சிவந்த முகத்தோடு துர்கா தன் விழிகளை மெல்ல உயர்த்தி ஆதியைப் பார்க்க…
“உனக்காக நான் அந்த சங்கவிக்கி என்னோட மனசுல நீ மட்டும்தான் இருக்கேன்னு சொல்லி ஒரு பாட்டில் மதுவையும் ஒரே மூச்சில் குடிச்சேன்” என்றவன், அவள் கன்னத்தை அழுத்திப் பிடித்து அவள் முகத்தைத் தன் முகத்தோடு நெருங்கி கொண்டு வர…
அவன் துர்காவின் கன்னத்தில் கொடுத்த அழுத்தத்தில் துர்காவின் உதடுகள் மீன் வாய் போல குவிந்து வந்து ஆதியின் கவனத்தைச் சிதறடித்தது.
அவள் உதட்டைப் பார்த்தவாறே ஆதி, “ஒரு முழு பாட்டில் மதுவைக் குடித்தும் கூட எனக்குப் போதை ஏறவில்லை” என்றவன். அவள் ஆரஞ்சு சுளை போன்ற உதட்டைத் தன் கட்டை விரலால் வருடிக்கொண்டே, “எனக்கு இன்னும் தாகம் அடங்கவில்லை” என்று கூற…
துர்கா ஒன்றும் புரியாமல் ஆதியைப் பார்க்க…
துர்காவைத் தூக்கிக்கொண்டு தள்ளாடியபடியே நின்று இருந்தவன், அவளைத் தூக்கிக்கொண்டு மெத்தைக்கு வந்தவன், துர்காவை மெத்தையில் அமர வைத்துவிட்டு அவள் முன் தள்ளாடியபடியே நின்றவன்.
“ரொம்பச் சூடா இருக்கு” என்று சொல்லி எதையோ தேட…
துர்கா மெத்தையில் இருந்த ஏசி ரிமோட்டை எடுத்து அவன் முகத்திற்கு நேராக நீட்டியவள், “இதையா ஆதி தேடுறே?” என்று சொல்லி அவன் முகத்தைப் பார்க்க…
போதையோடு அவளைத் திரும்பிப் பார்த்த ஆதி, “இது… ஒதுங்கிப் போயிடுச்சு, ஆனா என்னோட துர்கா… எனக்கு என்ன தேவை என்று நான் சொல்லாமலேயே புரிந்துகொள்கிறாய்” என்றவன். அவள் கையில் இருந்த ரிமோட்டை வாங்கி, ஏற்கனவே சிலுசிலுவென்று இருந்த அறையை மேலும் குளிரூட்ட, ஏசியின் குழுமையை அதிகப்படுத்தினான்.
ஏசி காற்று குளிர் அதிகமாகிய சில நிமிடங்களில் துர்காவுக்குக் குளிர ஆரம்பித்தது. அவள் கைகள் தானாகக் குளிரில் தன் உடலைக் கட்டிக்கொள்ள…
அவள் செய்கையைப் பார்த்த ஆதி, “துர்கா, உனக்குக் குளிருதா?” என்றான்.
துர்கா, “ஆமாம்” என்று தலையை ஆட்ட…
“ஆனா எனக்குச் சூடா இருக்கே…” என்று சொல்லி தான் போட்டிருந்த கோட்டைக் கழட்டிவிட்டு, டையைக் கழற்றியவன். கழுத்து பட்டனைக் கழட்டிக்கொண்டே துர்காவின் அருகில் வந்தவன்.
“துர்கா, ஷர்ட் பட்டனைக் கழட்டி விடு டி… ரொம்பப் புழுக்கமா இருக்கு…” என்று உரிமையோடு அவள் முன் வந்து நெருங்கி, அவள் கால்களுக்கு நடுவில் தன் உடலை நுழைத்து நிற்க…
இதைச் சற்றும் எதிர்பார்க்காத துர்கா, ஆதியின் இந்த உரிமையும் புதிய பரிணாமமும் அவளை ஏதோ செய்ய… தன் கால்களுக்கு நடுவில் உடலை உரசிக்கொண்டு நின்று இருந்த ஆதியை நிமிர்ந்து துர்கா பார்த்தவள்.
“கா… ஆதி… நான்… நானா பட்டனை கழட்டி விடணும்?” என்று வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே துர்கா கேட்க…
அவள் தொண்டைக் குழிக்குள் எச்சில் இறங்குவத ரசித்தவன். “நீதான், வேற யாரு?” என்றான் தள்ளாடியபடியே.
துர்கா என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டே ஆதியைப் பார்க்க…
“என்ன துர்கா பார்க்கிறே… கழட்டு” என்று அரை போதையில் துர்காவிடம் கொஞ்சிக்கொண்டே அவள் இரு தோள்களிலும் தன் கையைப் போட்டு குனிந்து அவள் முகம் பார்க்க…
‘ஐயோ… இவனுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு? இப்படி எல்லாம் பண்ணுறான்’ என்று மனதிற்குள் பேசிக்கொண்டவள். அவள் கைகள் தானாகச் சென்று அவன் சட்டை பட்டனை ஒவ்வொன்றாகக் கழட்ட…
ஒவ்வொரு பட்டன் கழட்டும் போதும் தெரிந்த அவன் திடகாத்திரமான மார்பைப் பார்த்து துர்கா எச்சில் விழுங்கினாள்.
அவள் தோள் மேல் கைகளைப் போட்டு துர்காவின் அலைபாயும் கண்களைப் பார்த்துக் கொண்டே அவன் பார்வை அவள் உதட்டை நோக்கி கீழே வர…
அதற்குள் துர்கா மிகவும் தீவிரமாக தன் பிஞ்சு விரல்களால் அவன் பட்டனைக் குனிந்து கழட்டிக்கொண்டு இருக்க… அவள் குனிந்ததும் அவள் உதட்டை ரசித்துக்கொண்டு இருந்த ஆதி கடுப்பானவன்.
அவள் கைகளைப் பார்க்க… அவன் மார்பகங்களை ரசித்துக்கொண்டே பதட்டத்தோடு அவன் பட்டனை துர்கா கழட்டிக்கொண்டு இருக்க… அவள் விரல் பதட்டத்தில் சரியாகப் பட்டனைப் பிடித்து கழட்ட முடியாமல் அவள் மனம் போலவே தடுமாறிக்கொண்டிருக்க…
அதைப் பார்த்த ஆதி, துர்கா சட்டை பட்டனை கழட்ட சிரமப்படுவதைப் பார்த்தவன். அவள் கைகளைத் தன் ஒரு கையால் பிடித்துக்கொண்டே… “ரொம்பச் சூடா இருக்கு டி…” என்றவன், தன் ஒற்றைக் கையால் தன் சட்டையைக் கிழித்து வீசிவிட்டு துர்காவைக் கட்டிலில் தள்ளியவன்.
கட்டிலில் படுத்து இருந்தவளின் மேல் இருபக்கமும் கைகளை ஊன்றி அவள் உதட்டைப் பார்த்து… “நான் குடித்தது அந்த பாரிலேயே போதை அதிகம் தரக்கூடிய மது… ஆனால் இப்போது உன் உதட்டைப் பார்க்கும் போது, இதைவிடப் போதை இந்த உலகிலேயே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது” என்று சொல்லி அவள் உதட்டை நோக்கி கீழே குனிய…
ஆதி இப்படி போதையிலும் ரசித்துக்கொண்டே தன்னை நெருங்கி வரவும் பதட்டத்தில் துர்கா தன் கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.
