Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 176

உன் ரகசிய ரசிகை நான் 176

by Layas Tamil Novel
201 views

EPISODE 176

சிவகாமியின் சோகத்திற்கான தீர்வு என்ன என்று யோசிப்பதாகச் சொன்ன நிலானி, கன்னத்தில் கை வைத்து மிகவும் தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தவள், விக்கியிடம், “ஏங்க, அத்தை ஏன் இன்னிக்கு சோகமா இருக்காங்கனு நான் கண்டு பிடிச்சுட்டேன்” என்றாள்.

“அப்படியா? என்ன நிலா குட்டி? சொல்லு, அம்மா ஏன் சோகமா இருக்காங்க?” என்று கேட்டான்.

“இன்னிக்கு சங்கவி அண்ணிக்கு பிறந்தநாள், உங்களுக்குத் தெரியுமா?” என்றாள்.

“இல்லையே, தெரியாது நிலாகுட்டி” என்றவன். “ஆமா, உனக்கு எப்படித் தெரியும் அவளுக்குப் பிறந்தநாள் என்று?”

“நான் அவங்க பிசினஸ் செய்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை (page) ஃபாலோ பண்றேங்க. அவங்க தனிப்பட்ட கணக்கை (பர்சனல் அக்கௌன்ட்டை) பிரைவேட்ல போட்டு வெச்சிருக்காங்க. அதனால, எதுக்கும் இருக்கட்டும்னு பிசினஸ் பக்கத்தை ஃபாலோ பண்றேன்.”

“அதுல அவங்க அவங்க பிறந்தநாளைக் குறிப்பிட்டு போஸ்ட், ஸ்டோரி எல்லாம் போட்டு இருந்தாங்க. அதை வெச்சுத் தான் இன்னிக்கு சங்கவி அண்ணிக்குப் பிறந்தநாள்னு சொன்னேன்” என்றாள்.

“என்ன, ஒருவேளை அத்தை இன்னைக்கு சங்கவி அன்னிக்குப் பிறந்தநாள் என்பதால் அவங்களை பார்க்க முடியலைன்னு வருத்தத்துல கூட இருக்கலாம் இல்ல?” என்று கேட்டாள்.

“ஒரு போனை கையில வச்சுக்கிட்டு, யார் என்ன பண்றாங்கன்னு இருந்த இடத்திலிருந்து எல்லா விஷயத்தையும் தெரிஞ்சு வச்சிருக்க நீ!” என்று நிலானியைப் பார்த்துக் கூறியவன். “ஆமா நிலா குட்டி, நீ சொல்றதும் சரிதான். ஒருவேளை அம்மாவுக்கு சங்கவியோட பிறந்தநாள் அப்போ அவ கூட இல்லை என்று வருத்தம் இருக்கலாம். பேசாம நம்ம போய் அம்மாகிட்ட சொல்லி, சங்கவியைப் பார்க்க கூட்டிட்டுப் போகலாமா?” என்று கேட்டான்.

“இல்லங்க, வேண்டாம். அப்படின்னு நம்ம போய் அத்தைகிட்ட கேட்டா, அவங்க கண்டிப்பா வரமாட்டேன் என்று தான் சொல்லுவாங்க. ஏன்னா நம்மளை சங்கவி அண்ணி பார்த்தா, நம்மளை எதுவும் திட்டிடுவாங்கன்னு அம்மா பயப்படுவாங்க. அதனால நம்ம போக வேண்டாம்” என்றால்.

“அப்போ என்ன பண்றது?” என்று கேட்டான் விக்கி.

“நம்ம சங்கவி அண்ணியையும் அத்தையையும் எங்கேயாவது பொதுவில் எதார்த்தமா சந்திக்கும்படி (மீட் பண்ற மாதிரி) செய்யணும்” என்று சொன்னாள் நிலானி.

“அது எப்படி முடியும் நிலா குட்டி? அம்மாவை ஏதாவது சொல்லி நம்ம வெளியே அழைச்சிட்டுப் போகலாம். ஆனால் சங்கவியை எப்படி நம்ம சந்திக்க வைக்கிறது?” என்று கேட்டான்.

“அதுக்குத் தாங்க என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன். சும்மா நானே எல்லாத்தையும் கண்டுபிடித்து உங்ககிட்டச் சொல்லனுமா? உங்க தலைக்குள்ள இருக்குற அந்த மூளைக்குக் கொஞ்சம் தூசி தட்டி வேலை குடுங்க. இல்லைன்னா அது துரு பிடிச்சுப் போயிடப் போகுது” என்றால் நக்கலாக.

“பார்ரா என் நிலா குட்டி கிண்டல் செய்றத…. உன் மூளைக்கு ஒரே ஒரு வேலை மட்டும்தான் இருக்கு. அது என் நிலா குட்டியை கொஞ்சறது மட்டும்தான்” என்று தன் மடியில் இருந்தவளின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவன். “செல்லக்குட்டி, இப்படிப் பண்ணுனா என்ன?” என்று கேட்டான்.

“எப்படி?” என்றாள் நிலானி.

“இன்னைக்கு எங்க அலுவலகத்தில் (ஆபீஸ்ல) ஒரு கிளைன்ட் கிட்ட ஆர்டர் சம்பந்தமா பேசுற முக்கியமான மீட்டிங் இருக்கு. அந்த மீட்டிங்க்கு கண்டிப்பா எப்படியும் சங்கவி வருவா… நான் வேணா அம்மாவ ‘வெளியில போலாம்’னு சொல்லி, ஆபீஸ்க்கு கூட்டிட்டுப் போய் அவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வைக்கலாமா?” என்று கேட்டான்.

“ஐயோ… சூப்பருங்க! பரவாயில்லையே, உங்களுக்கு மூளை அப்பப்போ நல்லா தான் வேலை செய்து” என்று அவன் தலையில் நன்னு என்று நிலானி கொட்ட…

“வர வர உனக்கு ரொம்ப குறும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு நிலா குட்டி” என்றவன் அவளை அப்படியே கட்டிலில் தள்ளி அவள் மேல் படுக்க…

“ஏங்க, என்ன பண்றீங்க…. முதல்ல இருந்து ஆரம்பிக்காதீங்க! வாங்க போய் முதல்ல அத்தை கிட்ட ஏதாவது சொல்லி நம்ம கூட அழைச்சிட்டுப் போகலாம்” என்றாள்.

“ஒரு முத்தம்கூட மாமாவுக்குக் கிடையாதா?” என்று முகத்தில் பாவமாக வைத்து அவள் உதடுகளைப் பார்த்து கேட்டான்.

உன் முகத்திற்கு மிக நெருக்கமாக இருந்த விக்கியின் முகத்தைப் பிடித்துத் திருப்பியவள். அவன் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு, “இப்போதைக்கு இது போதும், வாங்க போகலாம்” என்று தன் மேல் இருந்தவனை மெத்தையில் தள்ளிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து வாசல் பக்கம் ஓடிவிட்டாள்.

“உன்னை நைட்டு வந்து நான் கவனிச்சிக்கிறேன்” என்று சொல்லி கட்டிலில் இருந்து எழுந்தவன் அவள் பின்னால் சென்றார்.

இருவரும் சாப்பிட டைனிங் டேபிளிற்க்கு வர, இருவருக்கும் உணவை எடுத்து வைத்துவிட்டு ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தார் சிவகாமியி.

அவர் அமர்ந்திருந்ததைப் பார்த்த நிலானி, தன்னுடன் வந்த விக்கியை இடித்து, “ஏங்க, அங்க பாருங்க. நான் சொன்ன மாதிரியே அத்தை எப்படி உக்காந்திருக்காங்கன்னு. நீங்க எப்படியாவது பேசி அத்தையை உங்க கூட ஆபீஸ்க்கு கூட்டிட்டுப் போய் சங்கவி அண்ணி கூடப் பேச வைங்க” என்றாள்.

“சரி” என்று தலையாட்டிய அவன் அம்மாவின் அருகில் சென்று அமர்ந்து, “இன்னைக்கு என்ன ஸ்பெஷல்மா செஞ்சு வச்சு இருக்கீங்க?” என்று கேட்டான்.

“எதுவும் ஸ்பெஷலா செய்யலைடா. எப்பவும் போல இட்லி, சாம்பார், சட்னி தான் இன்னைக்கு செஞ்சிருக்கேன். கூட சேமியா பாயசம் மட்டும் செய்தேன்” என்றார் சிவகாமியி.

“அம்மா, சேமியா பாயசமா? என்ன விஷயம்?” என்றான்.

“சும்மா செய்யணும்னு தோணுச்சு, அதுதாண்டா செய்தேன். வேற எதுவும் இல்ல. சரி, ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்று சொல்லி இருவருக்கும் உணவு எடுத்து வைத்தார்.

விக்கிக்குப் வைத்த பாயசத்தைக் குடித்தவன், “அம்மா, ரொம்ப அருமையா இருக்கு இந்தப் பாயசம்” என்றவன். “அம்மா, நீங்களும் சாப்பிடுங்க. நம்ம ரெண்டு பேரும் வெளியே போறோம்” என்றான்.

“எங்கடா?” என்று கேட்டார் சிவகாமியி.

“சேமியா பாயசம் செய்து வச்சிருக்கீங்களே, ஆதிக்கு ரொம்பப் பிடிக்கும். அதுதான், அதை உங்க கையாலேயே அவனுக்குக் கொண்டு போய்க் கொடுக்கத்தான் என்னோட வரச் சொல்றேன்” என்றான் விக்கி.

“ஏ விக்கி, ஒரு பாயசம் கொடுக்க நானே நேர்ல வரணுமா? நீ கொண்டு போய்க் கொடுக்கலாம்தானே?” என்றார்.

“நான் கொண்டு போய்க் கொடுக்கலாம் தான். சும்மா என் கூட வாங்க…. நீங்க இதுவரைக்கும் என்னோட அலுவலகத்தைப் (ஆபீஸ்) பார்த்ததே இல்லைதானே அம்மா. இன்னைக்கு என்னவோ உங்களை என்னோட ஆபீஸ் கூட்டிட்டுப் போகணும் போல இருக்கு. ப்ளீஸ் வாங்க…” என்று விக்கி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க.

அவன் பாவமான முகத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்த சிவகாமியி, “சரி, நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுகிட்டு இருங்க. நான் போய் பாயசத்தைப் பாத்திரத்தில் ஊற்றி எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி சென்றார்.

சிவகாமியி தயாராக உள்ளே சென்றதும் விக்கி நிலானியைப் பார்த்து, “நிலா குட்டி, எப்படி? உன் மாமா சொன்னது போலவே அம்மாவை கூட்டிட்டு ஆபீஸ் போகப் போறேன் பாத்தியா?” என்று கேட்டான்.

“ம்… என்னவோ நீங்களே ஏதாவது ஐடியா பண்ணி அத்தையை கூட்டிட்டுப் போற மாதிரி பேசுறீங்க. அத்தை நான் ஏற்கனவே பாயசம் செய்து வச்சிருந்தாங்க. அந்தப் பாயசம் நமக்குன்னு நினைக்கிறீங்களா?” என்றால்.

“ஆமாம். ‘இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?’ என்று கேட்டப்போ அம்மா கூட சொன்னாங்களே சேமியா பாயசம்” என்றான்.

“அப்படியா? ஒரு நிமிஷம் இருங்க” என்று சொல்லித் தன் மொபைலை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஓபன் செய்தவள், அதில் சங்கவியினுடைய பர்சனல் கணக்கை ஓபன் செய்து, ஸ்டோரியை எடுத்து இடம் காட்டி, “இங்க பாருங்க” என்று காட்டினால்.

அவள் கையில் இருந்த போனை வாங்கியதுமே விக்கிக்குத் தெரிந்துவிட்டது. அது சங்கவி இன்ஸ்டாகிராம் பக்கம் தான் என்று.

“ஆமாம், அவ சண்டை போட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் தான். பிரைவேட்ல இருக்கே அப்புறம் எப்படி உனக்கு அவங்க ஸ்டோரி காட்டுச்சு?” என்று கேட்க..

“சங்கவி அண்ணி தான் உங்க கூடப் பிறந்தவங்கன்னு தெரிஞ்ச பிறகு நான் அப்போவே அவங்களுக்கு ஃபாலோ ரெக்வெஸ்ட் கொடுத்துட்டேன். இத்தனை நாளா ஏத்துக்காதவங்க, இன்னைக்கு தான், அதுவும் கொஞ்ச நேரம் முன்பு தான் என்னோட கோரிக்கையை (ரெகுவஸ்ட்) ஏற்றுக்கொண்டிருப்பாங்க போல இருக்கு. நான் போன் நோண்டிட்டு இருக்கும்போது எனக்கு நோட்டிபிகேஷன் வந்தது” என்று சொல்லிப் போனைப் பார்க்கச் சொல்ல…

அதில் சங்கவியின் ஸ்டேட்டஸில் சிவகாமியி செய்தது போலவே சேமியா பாயசம் செய்த போட்டோவை ஸ்டோரியில் போட்டு, “மை ஃபேவரிட் பாயாசம்! ஹாப்பி பர்த்டே டூ யூ” என்று சங்கவி ஸ்டோரி போட்டு இருந்தால்.

“இப்போ இந்த பாயசம் எனக்காக இல்லையா? சங்கவிக்காகவா?” என்றான் சோகமாக.

நிலானி தன் வாயில் கைபொத்தி சிரித்தவள், “ஆமாங்க, இது சங்கவி அண்ணிக்கு தான்” என்றால்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சிவகாமியி தயாராகி வந்துவிட, மூவரும் கிளம்பி சென்றனர்.


🌅 ஆதி: உணர்ந்த வருத்தம்

காலை வழக்கம் போல வேலையாட்கள் எல்லாம் நேரமே வீட்டிற்கு வந்து தங்கள் வேலையைத் தொடங்கி இருக்க, எப்போதுமே ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து ஜாக்கிங் செல்லும் ஆதி இன்னும் தன் அறையை விட்டு கீழே வரவில்லை.

நேற்று இரவு அவன் மது அருந்திவிட்டுப் போதையில் வீட்டிற்கு வந்ததை அனைவரும் பார்த்து இருக்க, ஒருவேளை அதனால் அவன் இன்னும் எழுந்து வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டனர். வேலையாட்கள் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு தங்கள் வேலையில் மூழ்கி இருக்க…

மணி எட்டைக் கடந்தும் ஆதியும், துர்காவும் தங்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருக்க… முத்து தாத்தாவிற்கு அவர்கள் அறைக்குச் சென்று இருவரையும் எழுப்பலாமா? வேண்டாமா? என்ற யோசனையிலேயே வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.

துர்காவைத் தன் கைவளைவிற்குள் படுக்க வைத்துக் கொண்டு அவள் தூங்கும் அழகை ரசித்துக்கொண்டு படுத்து இருந்தான் ஆதி. பிறந்த குழந்தைகள் போல உடலில் துணி இல்லாமல் போர்வைக்குள் தங்களை மறைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்கிக் கொண்டிருக்க….

ஆதி முதலில் கண்விழித்தான். கண்விழித்ததும் மெத்தையில் இருந்து எழுந்திருக்கப் போக… தன்னை எழுந்திருக்க விடாமல் யாரோ பிடித்திருப்பதை உணர்ந்தவன் திரும்பித் தன் அருகில் பார்க்க… அருகில் துர்கா அவனைக் கட்டிக்கொண்டு படுத்திருப்பதைப் பார்த்தவன்.

நேற்று இரவு நடந்தது எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குக் கிளம்பியது, சங்கவியைப் பாரில் சந்தித்தது, சங்கவியுடன் தன் மனதில் துர்கா மட்டுமே இருக்கிறாள் என்று அவளிடம் வாதிட்டு ஒரு முழு பாட்டில் மதுவைக் குடித்தது வரை நினைவிற்கு வந்தது.

அதற்குப் பின் நடந்த விஷயங்கள் சிதறி சிதறி அவன் சிந்தனையில் வந்து போக… துர்காவைத் தன் சட்டை பட்டனை கழட்டச் சொன்னது. அவளை மெத்தையில் தள்ளியது, தனக்கு அவள் வேண்டும் என்று துர்காவிடம் தன் மனதை திறந்து கூறியது, அவள் தன்னை கொடுக்கச் சம்மதித்தது, அதன் பின் அவளை முழுமையாகத் தனதாக்கிக்கொள்ள எண்ணி அவள் உடைகளைக் கிழித்து எறிந்தது. இருவரும் கூடலில் இணைந்தது, அவளைப் பூ போல மென்மையாய் நடத்தாமல் மிருகம் போல நடந்துகொண்டது என்று ஒன்று விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவன் நினைவிற்கு வந்து போக…

தன்னை நினைத்துத் தானே நொந்துகொள்ளும் அளவுக்கு இப்படித் தன் துர்காவிடம் மிருகம் போல நடந்துகொண்டதை எண்ணி மனம் வருந்தியவன். தன் அருகில் இரவெல்லாம் அவனுடன் ஒன்றாகக் கூடி கலைத்த களைப்பில் உறங்கிக்கொண்டு இருந்தவளைப் பார்த்தான்.

அவள் உதடுகள் லேசாகத் தடித்துக் காயம் ஏற்பட்டு இருக்க… அதைப் பார்த்தவனுக்குப் புரிந்தது தான் எத்தனை வன்மையை அவளிடம் கையாண்டு இருக்கிறேன் என்று. மார்பு வரை போர்த்தி இருந்தவளின் கழுத்தில் பல் தடம் பதிந்து இருக்க… அவள் தோள்களில் அவன் துர்காவுடன் உறவில் இருந்த பொழுது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் தோளில் தன் கைகளை வைத்து அழுத்தம் கொடுத்ததில் அவள் சிவந்த மேனி செக்கச் செவேல் என்று சிவந்து கன்றிப் போய் இருக்க…

அதைப் பார்த்தவனுக்குத் தன் துர்காவுடன் முதன் முறையாக மறக்கமுடியாத தருணமாக இருக்க வேண்டிய முதல் இரவை இப்படி அவளிடம் வன்மையைக் காட்டி அவளைக் காயப்படுத்தி இருக்கிறேனே என்று தனியே நினைத்து நொந்துகொண்டான்.

லேசாகத் தெரிந்த அவள் உடலில் இத்தனை தழும்புகளும், காயங்களும் இருக்கிறது என்றால். அப்போது அவள் உடல் எந்த நிலையில் இருக்கும் என்று நினைத்தவன் சிறிதும் யோசிக்காமல் அவள் மேல் போர்த்தி இருந்த போர்வையைத் தூக்கி எறிந்தவன் அவள் உடலைப் பார்க்க…

துர்காவின் உடலைப் பார்த்ததும் உறைந்து ஆதி கட்டிலில் இருந்து எழுந்து நின்றவன். துர்காவின் உடல் முழுவதும் ஆங்காங்கே ஆதியின் பல் தடங்களும், அவன் கைகள் அவளை எவ்வளவு வன்மையாகக் கையாண்டு இருக்கிறது என்று அவள் கன்றிப் போயிருந்த உடல் பாகங்களும் அவனுக்கு உணர்த்தியது.

அவன் போர்வையை இழுத்த வேகத்தில் கண் விழித்துவிட்ட துர்கா தன் மேல் துணி இல்லாமல், போர்வையும் இல்லாமல் இருக்கவும். பதறி அடித்துக்கொண்டு கையில் கிடைத்ததை வைத்துத் தன் உடலை மறைத்தபடி ஆதியைப் பார்க்க…

அவள் இவ்வளவு அவசரமாகத் தன் உடலை ஆதியிடம் இருந்து மறைப்பதற்குள் தான் ஆதி துர்காவின் உடலில் இருந்த காயங்களையும், தழும்புகளையும் பார்த்துவிட்டான்.

துர்கா கண் விழித்ததும் அவன் முன் ஆடையின்றி இருக்க கூச்சப்பட்டுக்கொண்டு நெளிந்துகொண்டே ஆதியைப் பார்க்க… அவனோ துர்காவை கவனிக்காமல் தான் அவளை இப்படி காயப்படுத்தி விட்டோமே என்று மிகவும் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

ஆதியின் முகம் சரி இல்லை என்பதை உணர்ந்த துர்கா. அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று புரியாமல் ஆதியைப் பார்க்க.. அவள் பார்வையை நேராகச் சந்திக்க முடியாமல் கூனிப்போவது போல ஆதி உணர்ந்தான்.

தன் பார்வையை துர்காவிடம் இருந்து விலக்கி அவள் பார்வையைத் தவிர்த்தவன் அங்கிருந்து செல்லப் போக… அவள் கையை எட்டிப் பிடித்த துர்கா, “ஆதி, ஏன் என் கிட்ட எதுவும் பேசாமல் போற?” என்று கேட்டாள்.

“எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை துர்கா… நீயே உன் உடலைப் பார். எத்தனை காயங்கள், தழும்புகள் உன் உடல் முழுவதும் ஆகி இருக்கிறது. நான் உன்னை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்தேன் தெரியுமா?”

“ஆனால் நானே இப்படி உன்னைக் காயப்படுத்தி இருக்கிறேனே… உன் முன் ஒரு ஆண் மகனாகத் தோற்று இருக்கிறேன் துர்கா நான்” என்று தலை குனிந்து நின்றான் ஆதி.

அவன் ஏன் தன்னைத் தவிர்த்தான் என்று இப்போது தான் துர்காவுக்குப் புரிந்தது. அவன் கையைப் பிடித்துத் தன் அருகில் அமர வைத்தவள். தலை குனிந்து இருந்த ஆதியின் முகத்தைத் தன் இரு கைகளிலும் ஏந்தியவள். “ஆதி, நீ ஒன்றும் என்னை வற்புறுத்தி, என் விருப்பம் இல்லாமல் எல்லாம் நீ இருக்கவில்லை ஆதி. அத்தனை போதையிலும் நீ என் சம்மதம் கேட்ட பிறகு தான் என்னை உனதாக்கிக் கொண்டாய் ஆதி.”

“உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க நீயும் எவ்வளவோ போராடினாய். நீ தவிப்பதைப் பார்த்து தான் நானே என்னைக் கொடுக்க முன் வந்தேன் ஆதி. உன் மீது எந்தத் தவறும் இல்லை… தவிர என் உடலில் இருக்கும் காயங்களை எல்லாம் பார்த்து நீ நினைக்கும் அளவுக்கு என்னிடம் முரடனைப் போல் எல்லாம் நீ நடந்துகொள்ளவில்லை ஆதி.”

“நீ அத்தனை போதையில் இருந்தும் கூட என்னை மட்டுமே நினைத்து, என்னுடன் மட்டுமே ஒன்றாக இருக்க வேண்டும், அதுவும் என் சம்மதத்தோடு தான் நடக்க வேண்டும் என்று நீ இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஆதி.”

“என் உடம்பில் இருக்கும் வடுக்களை எல்லாம் நீ உன் முரட்டுத் தனத்தால் ஏற்படுத்தியது என்று நீ நினைத்துக்கொண்டு இருக்கிறாய். ஆனால் அதை எல்லாம் நீ என் மீது வைத்திருக்கும் ஆசையை வெளிப்படுத்தியதாகத் தான் நான் நினைக்கிறேன். காயத்தின் ஆழத்தை நீ பார்க்கிறாய். ஆனால் அதில் உன் காதலின் ஆழத்தை நான் உணர்ந்தேன் ஆதி.”

“என் பெயரை ஆசையோடு அழைத்து, என்னுடன் நீ ஒன்றாக இருந்த அந்தத் தருணங்கள் ஒவ்வொன்றையும் நான் உன்னுடன் சேர்ந்து ரசித்து, அனுபவித்து உன்னுடன் இருந்த இந்த என் முதல் இரவை நான் பொக்கிஷம் போல என் மனதில் அப்படியே சேமித்து வைத்து இருக்கிறேன் ஆதி.”

“நீ வீணாக எதையும் நினைத்து உன்னை வருத்திக்கொள்ளாதே… நீ அப்படி இருந்தால் எனக்குத் தான் கஷ்டமாக இருக்கும் ஆதி. நான் இப்போது வரை என் ஆதி என்னுடன் ஆசையாக என்னைப் பிடித்து என்னுடன் இருந்தான் என்று இப்போது வரை நினைத்து இருக்கிறேன். ஆனால் இப்படி நீ முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு வருத்தப்படுவதைப் பார்த்தால், உனக்கு என்னைப் பிடிக்கவில்லையோ…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பு…

அவள் பின் கழுத்தில் கை கொடுத்து துர்காவைத் தன் அருகில் இழுத்து அவள் இதழை உணர்ச்சி வசத்துடன் சிறை செய்து இருந்தான்.

அந்த ஒற்றை முத்தத்திலேயே ‘உன்னை விரும்பி தான் உன்னுடன் ஒன்றாக இணைந்தேன்’ என்று ஆதி சொல்லாமல் துர்காவுக்குப் புரிய வைத்துவிட்டான்.


💖 மாதவி – போதி: காதல் சண்டை

ஒரு வாரத்திற்கு மேலாக கல்லூரியில் (காலேஜில்) உள்ள ஆய்வுக்கூடங்களைக் (லேப்) கட்டிக்கொண்டு இருப்பது விஷயமாக போதி மிகவும் பிசியாக இருக்க… அவனைப் பார்க்க முடியாமல் மாதவி தவித்துத்தான் போய் இருந்தாள்.

போதியை நேரில் பார்த்து சங்கவி தனக்கு வாங்கி கொடுத்த செல் போனை அவனிடம் காட்ட வேண்டும் என்று மாதவி நினைத்து இருந்தாள்.

தன் காதலைச் சொன்ன அடுத்த நாள், தன்னை வீட்டில் உள்ளவர்களிடம் அறிமுகம் செய்து விட்டுத் தன்னை வீட்டில் விட்டதோடு சரி. அதன் பிறகு தான் என்ன செய்கிறேன், தன்னை எங்கு எப்படி சந்திக்கலாம் என்று எதுவும் முயற்சி பண்ணாமல் போதி இருப்பதை நினைத்து மாதவிக்குக் கவலையாக இருந்தது.

அதே கவலையில் தான் மாதவி கல்லூரிக்கு வந்து போய்க்கொண்டு இருந்தால். அவள் தோழி லேகா கூட, ஏன் சோகமாக இருக்கிறாள் என்று கேட்டதற்கு, அவளிடம் போதி தன்னைப் பார்க்கவே இல்லை என்று வருத்தப்பட்டாள்.

காதலர்களுக்குள் எதுவும் பிரச்சனை வந்தால் அவர்கள் இருவருக்கும் இடையில் செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த லேகா, அதனால் பின் மாதவியிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அவளைச் சகஜமாக்க நினைத்து, “ஏய் மாதவி, வாடி நாம ரெண்டு பேரும் கேன்டீன் போய்ட்டு வரலாம். எனக்கு ரொம்பப் பசிக்குது” என்றாள்.

“ஏய், இப்போ ஒரு மணி நேரத்துக்கு முன்னே மதிய உணவு நேரத்தில் தானே அவ்வளவு சாப்பிட்டே? நான் கொண்டு வந்த பாயசத்தையும் சேர்த்து மொத்தமா கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் நீயே குடிச்சியே.. அதுக்குள்ள பசிக்குதா டி.. உனக்கு?” என்று கேட்டாள்.

“என்ன டி செய்யறதுன்னு சொல்றது? என் மூளைக்கு உறைக்குது, ஆனால் என் வயிற்றுக்கு உறைக்க வில்லையே” என்ற லேகா, “இப்போ நீ என்கூட வரப் போறியா இல்லையா?” என்று கோபமாக இருப்பது போல நடிக்க…

“சரி சரி டி.. வா போகலாம்” என்று மாதவி லேகாவுடன் சென்றாள்.

இருவரும் பேசிக்கொண்டு கேன்டீனுக்குச் செல்ல…

அப்போது தான் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு மாதவியை நேரில் சென்று பார்க்கலாம் என்று போதி, மாதவியின் கிளாஸ் ரூமிற்குச் சென்றான்.

சென்றவன் மாதவி அங்கு இல்லாமல், தன் தோழியுடன் கேன்டீன் சென்று இருப்பதை அவள் வகுப்பில் இருக்கும் மாணவியிடம் கேட்டு தெரிந்து கொண்டவன்.

‘என்னை ஒரு வாரமாகப் பார்க்கவில்லை என்று கொஞ்சம் கூடக் கவலை இல்லாமல் அவள் ஃபிரெண்ட் உடன் கேன்டீனில் இருக்கிறாள். அதுவும் வகுப்பைக் கட் அடித்துவிட்டு கேன்டீன் சென்று இருக்கிறாள்’ என்று கோபத்தில் மாதவியைப் பார்க்க, கேன்டீன் நோக்கி விரைந்தான் போதி.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured