EPISODE 192
துர்கா ராதா, கீர்த்திகா, ஷிவு மூவருக்கும் கால் செய்து ஆதி தன்னிடம் சொன்ன விஷயத்தை சொல்லி அவர்களிடம் உதவி கேட்டிருந்தால்.
அனைவரும் துர்கா கேட்டாதற்கு ஒப்புக்கொள்ள…
அன்று இரவே நால்வரும் பிலைட் டிக்கெட்ஸ் புக் செய்து திருச்சிக்கு கிளம்பினர்.
பெண்களை மட்டும் தனியாக அனுப்ப ஆதி தயக்கத்தோடு இருக்க…
தாங்கள் எந்த வித சிகையிலும் மாட்டிக் கொள்ளாமல் வேலையை முடித்து விட்டு திரும்புவதாக சொல்லி அவனை சமாதானம் செட்டுவிட்டு தன் தங்கைகளை அழைத்துக் கொண்டு திருச்சி புறப்பட்டாள்.
மறுநாள் காலை திருச்சி வந்து தரை இறங்கியதும் நால்வரும் அவர்களுக்காக புக் செய்யப்பட்டு இருந்த ஹோட்டலுக்கு வந்து பிரெஷ் அப் ஆகிவிட்டு ஷிவுவை மட்டும் ரூமியிலேயே ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு.
தாங்கள் தேவை படும்போது அவளை அழைத்துக் கொள்வதாக சொல்லி ஷிவுவை வழுக்கட்டாயமாக ரூமியிலேயே தங்கம் வைத்துவிட்டனர்.
ஷிவு ரூமில் இருந்தவாறே அந்த ஆசிரமம் குறித்த தகவல்களை வெளியில் இருந்தாவாறே வலைத்தலங்களில் தேட ஆரம்பித்து இருந்தாள்.
மற்ற மூவரும் ஆசிரமத்தை குறித்து சுற்றி இருப்பவர்களை விசாரிக்க ஆரம்பித்தனர்.
அந்த ஆசிரமம் நடத்தும் நபரை பற்றியும் விசாரித்து தெரிந்து கொண்டவர்கள் அந்த ஆசிரமதிக்குள் தாங்கள் எந்த சந்தேகமும் இன்றி நுழைய வேண்டும்.
அதற்கு என்ன வழி என்று கண்டுபிடித்த மூவரும் இன்று வந்து வேலை செய்தது வரை போதும் என்று ஹோட்டலுக்கு கிளம்பினர்.
இவர்களை வரும்போது ஷிவு தான் சேகரித்து வைத்த தகவல்களை துர்காவிடம் கொடுக்க..
அதை வாங்கி பார்த்த துர்கா பரவாயில்லையே நீ எங்க வராமயே நாங்க தெரிஞ்சு வெச்சுகிட்ட தகவலை விட நீ நிறைய தகவல் சேகருச்சு வெச்சு இருக்க என்று ஷிவுவை பாராட்டினால்.
பின் அனைவரும் அடுத்த நாள் தாங்கள் செய்ய்ய வேண்டிய வேலைகளை கலந்து பேசிவிட்டு உறங்க சென்றனர்.
மறுநாள் காலை நேரமே நால்வரும் கிளம்பி நேராக ஆதி சொன்ன ஆசிராமத்தின் ஆபீஸ் ரூம் முன்பு போய் நின்றனர்.
இவர்கள் நால்வரையும் காத்திருக்க சொல்லிவிட் பியூன் உள்ளே சென்று அந்த ஆசிரமத்தை நடத்திக் கொண்டு இருக்கும் சிங்காரதிடம் சென்று அனுமதி வாங்கி வருவதாக கூறி சென்றார்.
உள்ளே சென்ற பியூன்,அய்யா உங்களை பார்க்க சென்னையில் இருக்க பிபி டிவி சேனலில் வேலை பார்க்குரவங்க வந்து இருகாங்க உங்ககிட்டே ஏற்கனவே அவங்க இங்கே வராதாக சொல்லி இருக்காங்கனு சொல்லி வெளியே வெயிட் பன்னிட்டு இருகாங்க என்றார்.
பியூன் சொன்னதை கேட்ட சிங்காரம் பிபி டிவியில் இருந்து வந்துட்டாங்களா!! வர சொல்லு வர சொல்லு… அவங்க நம்ம ஆசிரமத்தில் இருக்குறவங்களை எல்லாம் நேரில் பெட்டி எடுத்து அதை அவங்க டிவியில் போடா போறாங்கலாமா.
அப்படி மட்டும் அவங்க செய்தால் நம்ம ஆசிரமம் பற்றி வெளியே இருக்கவங்களுக்கும், வெளிநாட்டில் இந்த மாதிரி ஆசிரமதுக்கு உதவி செய்வதற்காக இருக்கிற டிரஸ்ட்களுக்கும் கவனம் போகும்.
அப்டி அவங்க கவனம் எல்லாம் நம்ம ஆசிரமம் பற்றி வெளியே தெரிய ஆரம்பித்தால் நம்ம ஆசிரமதுக்கு நிறைய டொனேஷன் வெளிநாடு, வெளி மாநிலம் னு நிறைய பணம் வரும்.
நம்ம ஆசிரமத்தையும் அவங்க கொடுக்கிற பணத்தை வெச்சு இன்னும் பெருசு படுத்தி இங்கே இருக்க நம்மளை நம்பி இருக்கவங்களுக்கு நாம நிறைய நல்லது செய்ய முடியும் என்றுவர் பியூனிடம் சொல்லி அவர்கள் நால்வரையும் உள்ளே வர சொல்லி அனுப்பி வைத்தார்.
பிபி டோவியில் இருந்து வருவதாக அவர்களை ஐடி கார்டில் அவர்களது நிறுவனத்தில் வேலை செய்வதகா கூறி போதியிடம் விபரம் சொல்லி அவனிடம் துர்கா உதவி கேட்டிருந்தால்.
அவள் கேட்டது போலவே சில டெக்னிசியங்களை துர்கா கேட்டது போல போதி அனுப்பி வைட்டான்.
தன் தோழி கேட்டு எதுவும் இல்லை என்று மறுத்துவிட அவனால் முடியுமா என்ன..
தனக்கு உதவுவதர்காக வந்து இருந்த ஆட்களை வெளியே இருக்க சொல்லிவிட்டு துர்காவும் ஷிவுவும் மட்டும் உள்ளே சென்றனர்.
அவர்கள் இருவரையும் பார்த்த சிங்காரம் எழுந்து நின்று அவர்களை வரவேற்றவர்.
நீங்க முன் வந்து எங்க ஆசிரமம் குறித்து வீடியோ எடுத்து எல்லாருக்கும் எங்க நிலைமையை பற்றி தெரிய படுத்த உதவுறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி என்றார் சிங்காரம்.
அச்சோ அதல்லாம் ஒன்னும் இல்லை நாங்க எங்க பாஸ் சொல்றதை தான் சொல்றோம் நீங்க நன்றி சொல்லனும்னா எங்க எம் டி மிஸ்டர் போதிக்கு தான் சொல்லணும் என்றாள் துர்கா.
பின் தாங்கள் ஒரு இரண்டு நாட்களுக்கு இங்கே தங்கி இருந்து ஆசிரமம் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்து வைத்துக்கொள் கொள்வேதாக கூற..
அவர்கள் குழுவுடன் இங்கே தங்குவதற்காக அறைகள் ஏற்பாடு செய்து கொடுத்தார் சிங்காரம்.
அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட…
தன் பியுனை அழைத்து நம்ம ஆளுங்க யாரும் ஒரு நாலு பேரை இவங்க இருக்க இடத்திற்கு சற்று தள்ளி நிறுத்திவை. இவங்க சந்தேகபடும்படியா எதுவும் செய்தாங்கன்னா உடனே எனக்கு இன்போர்ம் பண்ணு என்றார்.
அவர் சொன்னதை எல்லாம் அவர் அறையில் ஒட்டு கேட்பதற்காக வைக்கப்பப்டு இருந்தகருவி மூலம் அனைத்தையும் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே கேட்பதற்காக சிங்காரதின் டேபிள் அடியில் ஒரு சிறிய பத்து ரூபாய் காயின் அளவில் வடிவில் இருந்த அந்த கருவியை பொறுத்திவிட்டு ஷிங்காரம் உள்ளே என்ன பேசிகிறார் என்று அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்து ஷிவு கேட்டு விஷயத்தை துர்காவிமும் மற்றவர்களிடமும் விஷயத்தை பகிர்ந்து கொண்டு இருந்தால்.
ஏன் அக்கா நாம சந்தேக படும்படியா எதுவும் செய்தால் அவருக்கு இன்போர்ம் பன்ன சொல்ராங்களே அப்படி என்ன பண்ணுவாங்க நம்ம மாட்டிக்கிட்டா என்று கேட்டாள் ராதா.
ம்ம்ம்… நாம அவங்க கையில் மாட்டிக்கிட்டா தானே தெரியும் என்றாள் துர்கா.
சரி சரி டைம் வேஸ்ட் பண்ணாம ஆளுக்கு ஒரு பக்கம் போய் நாம எதுக்காக இங்கே வந்து இருக்கமோ அந்த வேலையை பாருங்க என்றாள்.
சரி என்று விட்டு அவர்களுக்காக அனுப்பியிருந்த டெக்னீசியன்களுடன் அவருக்கு ஒரு புறமாக ஆசிரமத்தில் தங்கி இருப்பவர்களிடம் பேட்டி எடுக்க சென்றனர்.
முதலில் சிங்காரத்திடம் தங்கள் எதற்காக வந்து இருக்கிறோம் சொல்லி இருந்தார்களோ அந்த வேலையை அவர நம்பும்படி செய்துவிட்டு பிறகு தங்கள் வந்து வேலையை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டனர்.
துர்கா டெக்னீஷங்களை அழைத்துக் கொண்டு நேராக ஆபீஸ் ரூம் இருக்கு சிங்காரத்தை பேட்டி எடுக்க சென்றாள் .
ஷிவு சிங்காரத்திற்கு பிறகு இந்த ஆசிரமத்தை முழுவதுமாக நிர்வாகிப்பவர் யார் என்று தேடி அவரை தேடி சென்றாள்.
ராதாவும் கீர்த்திகாவும் அங்கே ஆதரவு அற்றவர்கள் முகாமில் தங்கி இருக்கும் நபர்களை பேட்டி எடுக்க சென்றனர்.
அவர்கள் யாரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் எப்படி பேச வேண்டும் தங்களிடம் கோபமாகவோ அல்லது சோகமாகவும் நடந்து கொள்வோர்களிடம் எப்படி தங்கள் பதில் பேச வேண்டும் அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே போதி அனைத்தையும் இவர்களுக்கு முன்னமே தெரிவித்திருந்தான்.
அது அப்படியே அவர்கள் கொடுத்துவிட்ட கேள்வியையே தாங்கள் பேட்டி காண சென்றவர்களிடம் கேட்டனர் கீர்த்திகாவும் ராதாவும்.
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சொல்லி அழுகையில் ராதாவிற்கும் கீர்த்திகாவிற்கும் அவர்களோடு சேர்ந்து அழுகை வந்தது அவர்கள் நிலையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டனர்.
தங்களுக்கு என்று யாரும் இல்லாமல் ஒரு அனாதை போல வந்து இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களெல்லாம் இருப்பதை பார்த்த இருவருக்குமே மிகவும் மனது வலித்தது.
அவர்களை சமாதான செய்ய முடியாமல் ராதாவும் கீர்த்திகாவும் அமைதியாக அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அவர்களது தங்களை தேற்றிக்கொண்டு வரும்வரை பொறுமையாக காத்திருந்தனர்.
இந்த ஆசிரமத்தில் நீண்ட வருடங்களாக இருப்பவர்கள் யார் யார் என்று தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தனியாக பேட்டி எடுக்க ஒரு அரைக்க அழைத்துச் சென்றனர் இருவரும்.
சிலர் பத்து வருடங்களாக சிலர் 15 வருடங்கள் ஆக சிலர் 25 வருடங்களாக அந்த ஆசிரமத்தில் ஆதரவற்றவர்களாக வந்தவர்கள் பிறகு அந்த ஆசிரமத்தை விட்டு வெளியே செல்ல மனமில்லாமல் அங்கேயே ஒரு வேலையை செய்து ஆசிரமத்திற்கு உதவியாக இருந்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களெல்லாம் அழைத்த ராதாவும் கீர்த்திகாவும் அவர்களிடம் பொதுவாக சில கேள்விகளை கேட்டுவிட்டு.
சரியாக 20 வருடங்களுக்கு முன்னால் மும்பையில் இருந்த ஒரு தமிழ் ஆசிரமத்தில் இருந்து இங்கே அழைத்து வரப்பட்ட நபர்களைப் பற்றி கீர்த்திகா ஆசிரத்தில் மிகவும் நீண்ட வருடம் தங்கியிருப்பவரிடம் கேட்டால் .
கீர்த்திகா கேள்வி கேட்டதும் 25 வருட அனுபவம் மிக்க அந்த நபர் அவர்களை பற்றி இப்போ ஏன் கேக்குறீங்க அங்கே இருந்து மொத்தமே ஒரு 20 நபர்கள் வந்து இருப்பாங்க.
அதுல பெரியவங்க எல்லாம் ஒரு 15 பேருக்கு மேலயும் குழந்தைகள் ஒரு ஐந்து பேரும் இன வந்திருந்தாங்க.
அங்கு இருந்த பெரியவங்க எல்லாரும் கொஞ்ச நாள் இந்த ஆசிரமத்துல தான் எங்கே இருந்தாங்க அத்தனை பேரு வெச்சி இந்த ஆசிரமத்தில் சமாளிக்க முடியலேன்னு யாரெல்லாம் வெளியே தனியா இருந்து வேலை செய்ய அது போக இஷ்டப்பட்டார்களோ அவர்களை எல்லாம் அவரவர் விருப்பப்படியே அனுப்பி வச்சாங்க.
அதில் வயசானவர்களே இந்த ஆசிரமத்திலேயே வச்சுட்டாங்க அவங்க தனியா வெளியே போய் சமாளிப்பது ரொம்ப சிரமமாகிடும்.
அவங்களுக்கு என்ன மருத்துவ உதவிகள் எல்லாம் இங்கிருந்து செய்துக்கிட்டு அவங்களால இந்த ஆசிரமத்திற்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதை எல்லாம் இங்கேயே இருந்து செய்யட்டும்னு சிலரை அங்கேயே தங்க வச்சுக்கிட்டாங்க.
இரண்டு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் தான் இங்கே தங்கி இருந்தாங்க அந்த குழந்தைங்க எல்லாமே 18 வயசுக்கு மேல ஆனதும் இந்த ஆசிரமத்தை விட்டு வெளியே போய் அவர்களுக்கு தேவையான படிப்பையும் வேலையையோ தேர்ந்தெடுத்துக்க இந்த ஆசிரமம் உதவியது என்றார்.
உடனே கீர்த்திகா அந்த ஐந்து குழந்தைகளுமே 18 வயசு வரைக்கும் இந்த ஆசிரமத்தில் தான் இருந்தாங்களா இப்போ அவங்க எங்கே வெளியே போயிருக்காங்க என்ன பண்றாங்க என்கிற விஷயம் இல்ல யார் கிட்ட கேட்டா தெரியும் உங்களுக்கு எதுவும் தெரியுமா என்று கேட்டால்.
அந்த நபர் இல்ல அஞ்சு பேருமே ஆசிரமத்தை விட்டு வெளியே போகல அதுல ஒரே ஒரு குழந்தையை மட்டும் தத்து எடுத்துக்கிட்டாங்க.
மற்ற குழந்தைகள் எல்லாம் 18 வயசுக்கு மேல தான் எங்கிருந்து வெளியே போனாங்க என்றார்.
உங்களுக்கு விஷயம் எல்லாம் தெரிஞ்சுக்கணும்னா நீங்க அந்த ஆசிரமத்தை நடத்தவர்கிட்ட தான் கேட்டு தெரிந்துகொள்ளும் அவர் ரூம்ல தான் யார் யார் எங்கே போறாங்க வெளியே என்ன பண்றாங்க அப்படிங்கிற விபரம் எல்லாம் ஒரு பைலில் சேகரித்து வைத்திருக்கிறார் அவருக்கு தான் அது எல்லாம் நல்லா தெரியும் என்று அந்த நபர்.
அவர் சொன்னதைக் கேட்ட கீர்த்திகாவும் ராதாவும் புரிந்து கொண்டவர்கள் போல தங்கள் முகத்தை ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டு பின்பு அவர்களிடம் வேறு சில கேள்விகளை கேட்டுவிட்டு இத்தோடு இன்றைய வேலையை முடித்துக் கொள்ளலாம் என்று அங்கிருந்து நேராக துர்காவையும் ஷிவுவையும் பார்க்க சென்றனர்.

1 comment
Story semaya iruku sis 🥺🫂😘 neenga vera level ponga 😘🫂😘