EPISODE-200
போதியும் ஆதிக்கும் மாதவியை மீட்பதற்காக சங்கவியின் வீட்டுக்குள் சென்றனர்.
தன் பாடி கார்ட்ஸ்களுடன் போதி வந்திருக்க வீட்டு வாசலில் வெளியே நிற்க வைத்துவிட்டு போதியும் ஆதிக்கும் மட்டும் உள்ளே சென்றனர்.
உள்ளே செல்லும்போது சங்கவி சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க… அவளுக்கு எதிரே வேதாச்சலமும் சிவகாமியும் அமர்ந்திருந்தனர் .
சிவகாமியை அங்கு பார்த்ததில் சந்தோசமான ஆதி நேராக அவரிடம் வந்து மத்த நான் உங்ககிட்ட மாமா கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றான்.
அவர்கள் இருவரும் பேசாமல் ஆதி பேசுவதை கேட்டுவிட்டு அமைதியாக இருக்க அவர்களே புரியாமல் பார்த்து ஆதி ஏன் அத்தை எதுவும் பேச மாட்டேங்கறீங்க.
நான் உங்க ரெண்டு பேர் கிட்ட தனியா கொஞ்சம் பேசணும் என்றான் ஆதி.
அப்போதும் வேதாச்சலத்திடமும் சிவகாமி இடம்பெறும் இருந்தும் எந்த பதிலும் வராமல் போகவே குழப்பமாக அவர்களை ஆதி பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் இது அமர்ந்திருந்த சங்கவி தன் கையை நீட்டி விரலை சொடுக்கிட்டு ஹலோ ஆதிக் இங்கே ஒருத்தி உக்காந்திருக்கிறது உன் கண்ணுக்கு தெரியலையா என்ன விட்டுட்டு அவங்க ரெண்டு பேர் கிட்ட போய் அப்படி என்ன ரகசியம் பேச போற என்றாள்.
அதை உன் கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது நான் அத்தை மாமா கிட்ட பேசுகிறேன் என்றான் ஆதி.
நீ என்ன பேசினாலும் அவங்க ரெண்டு பேரும் நான் சொல்லாம உன்கிட்ட பேச மாட்டாங்க என்றால் சங்கவி.
இவ்வளவு நேரம் அவள் அருகில் நின்றிருந்த போதி ஏன் உன் மனசுல என்ன தாண்டி நெனச்சிட்டு இருக்க என் மாதவிலையும் என் கூட பேச விடாமல் செஞ்சுட்டேன் இப்போ உன்னோட அம்மா அப்பாவை கூட மிரட்டி உட்கார வச்சிருக்கியா அவ்வளவு பெரிய ஆளா நீ…
நீ ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குற உனக்கு என்னதான் வேணும் என்றான் போதி.
எனக்கு என்ன வேணும் வேணாங்குறத எல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு எனக்கு அவசியம் கிடையாது முதல்ல நீங்க எதுக்கு என் வீட்டுக்குள் வந்தீங்க இரண்டு பேரும் முதல்ல இங்கிருந்து வெளியே போங்க என்றால் ஆதிக்கையும் போதியையும் பார்த்து.
நான் மாதவியை என் கூட அழிச்சிட்டு போகாம இங்கிருந்து வெளியே போக மாட்டேன் என்றான் போதி.
அப்படியா அப்ப தாராளமா உன் மாதவிய கூட்டிட்டு போ யாரும் வேண்டாம்னு சொன்னது. அதோ அந்த ரூம்ல தான் அவ இருக்கா அவ வந்தா நீ உன் கூட கூட்டிட்டு போ என்றால் சங்கவி.
நான் கூப்பிட்டு தான் வரமாட்டேன்னு சொல்றாலே நீ என்னவோ சொல்லி அவளை மிரட்டி வச்சிருக்க அப்படி என்ன அவளை சொல்லி பயமுறுத்தி இருக்க.
மாதவியோட அம்மாவ எதுவும் செஞ்சுடுவேன்னு சொல்லித்தானே பயமுறுத்தி வச்சிருக்கேன் அவங்க அம்மா இப்போ எங்க கிட்ட பத்திரமா தான் இருக்காங்க நான் அதை சொல்லி மாதவியை என் கூட கூட்டிட்டு போகப் போறேன் என்று சொன்னவன் மாதிரியே அடுத்து வைத்திருந்த ரூமிற்கு வேறு மாதிரி சென்று
வெளியில் பூட்டி இருந்த கதவை திறந்து அறைக்கு செல்ல…மாதவி அங்கே தரையில் மூளையில் அமர்ந்து அழிந்து வந்து கொண்டு இருந்தால்.
அந்தக் கோலத்தில் பார்த்த போதிக்கு கஷ்டமாக இருந்தது வேகமாக அவளிடம் வந்தவன் அவள் கையைப் பிடித்து மேலே தூக்கி எவன் என்ன ஆச்சு மாதவி ஏன் நீ இப்படி நடந்துக்கிற இந்த சங்கவியை எல்லாம் பார்த்து நீ பயப்படலாமா.
நான் இருக்கேன் என்னோட கார்ட்ஸ் எல்லாரையும் அழிச்சிட்டு வந்து இருக்கேன் ஆதிக்கும் வந்திருக்கான் அவன் குடும்பத்தோட வந்திருக்கான் நீ எதை பற்றியும் கவலைப்படாத உன் அம்மா என்கிட்ட தான் பத்திரமா இருக்காங்க என்று சொல்லி அவளை அறையை விட்டு வெளியே அழைத்து வந்தான் போதி.
மாதவியை அழைத்து வெளியே வந்த போதி சங்கவியிடம் நான் என்னோட மாதவியை இங்கிருந்து கூட்டிட்டு போறேன்.
உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சுக்கோ அதனால அவங்க அம்மா மேல கை வைக்க முடியாது அவங்க வெளியில பத்திரமா தான் இருக்காங்க என்றான் போதி.
போதி மாதவியின் கையைப் பிடித்து சங்கவியை தாண்டி அவளை இழுத்துக் கொண்டு செல்ல போக …
அவன் கையை உதறிய மாதவி நான் எங்கேயும் வரல என்ன எங்கேயும் கூப்பிடாதீங்க என்று அவனை மண்ணீராக பார்க்க முடியாமல் தலையை குனிந்த படி மாதவி கூற…
அவளை புரியாமல் பார்த்த போதி என்ன ஆச்சு மாதவி இவளைக் கண்டு எதுக்காக இப்படி பயப்படுற அவளால எதுவும் செய்து விட முடியாது உன் அம்மா பத்திரமா தான் இருக்காங்க தைரியமா என்கூட வா என்று போதி மாதவியை மீண்டும் அழைக்க…
இப்போது போதியின் அருகில் வந்த ஆதிக் அவன் தோளில் கை வைத்து நீ என்ன சொல்லி கூப்பிட்டாலும் மாதவி இப்போ இருக்கிற நிலைமையில் இந்த வீட்டை விட்டு ஒரு அடி கூட வெளியே எடுத்து வைக்க மாட்டாள் என்றான் ஆதிக்.
என்ன ஆதிக் சொல்ற எனக்கு எதுவுமே புரியல ஏன் அவர் இந்த வீட்டை விட்டு வெளியே வர மாட்ட அவளுக்கு என்னதான் ஆச்சு எதற்காக இப்படி பயந்து சாகுறா.
நான் எப்படி அவளுக்கு நம்பிக்கை கொடுத்து என் கூட கூட்டிட்டு போறதுன்னு தெரியல ஆதிக்.
என்ன நம்பி ஏன் அவ என் கூட வர மறுக்குறா என்று தன்னால் மாதவியை வெளியே அழைத்துச் செல்ல முடியவில்லை என்று வருத்தத்தில் ஆதிக்கிடம் புலம்பினான் போதி .
❤️
இங்கே வெளியே இருந்து அனைவரும் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி போய் தவித்தபடி நின்று இருக்க…
அப்போதுதான் திருச்சியில் இருந்து ஏர்போர்ட்டுக்கு வந்த விக்கிக்கு துர்கா கால் செய்து விபரம் கூறவும் வெற்றி நிலானியுடன் மற்றவர்களும் சேர்ந்து சங்கவியின் வீட்டிற்கு வந்தனர்.
அவர்களின் கார் சங்கவியின் வீட்டின் முன்பு நிற்கவும். காரில் இருந்து வேகமாக இறங்கிய விக்கி நேராக துர்காவிலும் வந்து துர்கா என்ன ஆச்சு ஏன் என்ன அவசரமா இங்கே கிளம்பி வரச் சொன்னேன் யாருக்கும் எதுவும் பிரச்சனையா என்று கேட்டான்.
ஆமா விக்கி ரொம்ப பெரிய பிரச்சினை தான் நீயும் கொஞ்சம் கூட இருந்தா சப்போட்டா இருக்கணும்னு தான் உன்னையும் வரச் சொன்னோம் என்றால் துர்கா.
துர்கா ஆதிக் எங்க ஏன் எல்லாரும் இங்கே இருக்கீங்க செண்பகம் அம்மா உடைய பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா என்று கேட்டான் விக்கி.
ஆதிக் போதியோட உள்ள தான் இருக்கான் என்றால் துர்கா.
போதியோடவா…. என்று புருவம் அதை சுருக்கி கேட்ட விக்கி போதி எதுக்கு இங்கே வந்தான் என்றான் புரியாமல்.
போதியோட லவ்வர் தான் மாதவி அவங்கள சங்கவி கடத்தி வச்சிக்கிட்டு வெளியே விடாம வீட்டுக்குள்ள வச்சு பூட்டி வச்சுருக்காங்க அந்த பொண்ணு மீட்கத்தான் போதி உள்ள போயிருக்கான். நாங்க தேடி வந்த மாதவியும் போதே தேடி வந்த மாதவியும் ஒன்றுதான் என்றால் துர்கா.
அப்போ செண்பகம் அம்மாவுடைய பொண்ணும் போதியோட லவ்வரும் வீட்டுக்குள்ள தான் இருக்காங்களா ரெண்டு பேரும் ஒரே ஆள் தானா என்றான் விக்கி.
ஆமா விக்கி நீ கொஞ்சம் உள்ளே போனா தான் சரியா இருக்கும் ஏன்னா சிவகாமி அம்மாவும் இங்கே வீட்டுக்குள்ள தான் இருக்காங்க என்று வீட்டை கைகாட்டி துர்கா கூற.
என் அம்மாவா அவங்க எப்போ இங்க வந்தாங்க எப்படி வந்தாங்க என்று கேட்டான் விக்கி
அது எனக்கு சரியா தெரியல விக்கி ஆனா அம்மாவும் உள்ள தான் இருக்காங்க அது நல்லா தெரியும் என்று எனக்கு ஏதோ சரியில்லைன்னு படுது நீ கொஞ்சம் சீக்கிரமாக உள்ளே போய் ஆதிக்கும் போதியும் உள்ளே போய் ரொம்ப நேரம் ஆயிடுச்சு என்றால் துர்கா பதட்டமாக.
இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக்கொண்டே அமைதியாக இருந்த செண்பகம் இப்போது குறுக்கே வந்து விக்கி நானும் உன் கூட வரேன் என் பொண்ண நானும் பார்க்கணும் என்றார்.
இல்லாம நீங்க இப்போ உள்ள போக வேண்டாம் அந்த சங்கவி கையில துப்பாக்கி வச்சிருக்கான்னு போதி சொன்னான் இல்லையா அவ கோவத்துல யாரையும் எதையும் செய்திடப் போறா. நீங்க கொஞ்சம் அமைதியா இங்கே இருங்க என்றால் துர்கா.
இல்ல துர்கா நான் உள்ளே போறேன் நான் உள்ள போனால் தான் எல்லாம் சரியாகும் என்று தன் அண்ணனை திரும்பி பார்க்க…
நான் சொன்னதை எல்லாம் நீ நினைவில் வைத்திருக்க தானே செண்பகம் எது பேசினாலும் பொறுமையா பேசு அவளுக்கு கோபம் வருகிற மாதிரி பேசாத கொஞ்சம் புரியிற மாதிரி அவகிட்ட பேசு என்றால் வெங்கடாச்சலம் .
அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று மற்றவர்களுக்கு புரியவில்லை ஆனால் வெளியில் நின்றிருந்த கொஞ்ச நேரத்தில் வெங்கடாசலம் செண்பகத்தை தனியாக அழைத்துச் சென்று ஏதோ கூறிக்கொண்டு இருந்தார்.
செண்பகமும் முதலில் அவர் சொன்னதை எல்லாம் கேட்டு அதிர்ச்சியானவர் பின்பு தன்னைத்தானே சமாதானப்படுத்தி கொண்டு சகஜ நிலைக்கு வர முயன்று கொண்டு இருந்தார்.
இப்போது விக்கியும் வந்துவிட அவருக்கு சற்று தைரியம் வந்தது போல தான் உள்ளே செல்வதாக கூறவும் மற்றவர்களுக்கும் வேறு வழியில்லாமல் செண்பகம் வீட்டுக்குள் செல்வதற்கு சம்மதித்தார்கள்.
செண்பகத்தையும், விக்கியை மட்டும் அனுப்ப மனமில்லாமல்ல மற்றவர்களும் உள்ளே சென்றனர்.
❤️
அனைவரும் வீட்டுக்குள் வந்து கொண்டு இருக்க அந்த நேரத்தில் தான் ஆதிக் போதியிடம் மாதவி இந்த நேரத்தில் நீ என்ன சொன்னாலும் இந்த வீட்டை விட்டு ஒரு அடி கூட வெளியே வர மாட்டாள் என்றால் ஆதிக்.
ஆதிக்கா மாதவி வரமாட்டா அவளோட அம்மா தானே வெளியே இருக்காங்களே அப்புறமும் இவ யாருக்காக பயந்துட்டு இங்கே இருக்க வேண்டும்..
அப்படி என்ன இந்த சங்கவி கிட்ட மாதவிக்கு பயம் வேண்டி இருக்கு என்று கேட்டான் போதி.
ஏன்னா மாதவியோட அம்மா வெளியே இல்ல இங்க அவ கண்ணு முன்னாடி சங்கவிக்கு பயந்துட்டு உக்காந்துட்டு இருக்காங்க என்று சொல்லி சிவகாமியை கைகாட்டி சொன்னான் ஆதிக்.
ஆதிக் சொன்னது நம்ப முடியாமல் போதி திரும்பி சிவகாமியை பார்க்க…
சிவகாமி என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு தன்மகள் மாதவியை பாசத்துடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.
மாதவியும் சிவகாமியை பார்த்து அம்மா என்று கதறியழ….சிவகாமியால் தன் மகளை ஆறுதல் படுத்த கூட அவள் அருகில் செல்ல முடியாமல் சங்கவியால் மிரட்டப்பட்டு சிவகாமி அமர்ந்திருந்தார்.
அப்போது உள்ளே வந்த அனைவருக்குமே ஆதிக் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.
ஆதிக் சொன்னதை கேட்டு அவனிடம் வேகமாக வந்த துர்கா என்ன சொல்ற ஆதிக்.
அப்போ நம்ம தேடி வந்தது இவங்கள இல்லையா என்று மாதவியை காட்டி கேட்க..
இல்லஎன்று தலை ஆட்டிய ஆதிக் நம்ம தேடி வந்த செண்பகம் அத்தையோட பொண்ணு சிவகாமி அத்தையோட பொண்ணு மாதவி இல்லை.
இதோ குத்துக்கல்லு மாதிரி எல்லாரையும் கலந்துடுச்சுட்டு உக்காந்திருக்காளே.
இவ தான் இந்த சங்கவி தான் நம்ம செண்பகம் அத்தை பொண்ணு மாதவி என்றான் ஆதிக்.
ஆதிக் சொல்வதே கேட்டு விக்கி குழப்பமாக ஆதிக்கு என்ன சொல்ற கொஞ்சம் தெளிவா சொல்லு எனக்கு புரியல என்று கேட்டான் விக்கி.
சிவகாமி அத்தையும் வேதாச்சலம் மாமாவும் மும்பை போயிருந்த அப்போ அவங்க பொண்ணு சங்கவியை தொலைச்சிட்டாங்க.
அவங்க தொலைச்ச குழந்தை கூட வயசு இதோ இங்க இருக்க சங்கவியோட வயசு கூட ரொம்ப சின்னது தான்.
நான் எங்கே தேடியும் அவங்க பொண்ணு கிடைக்காததால திரும்பி ஊருக்கு வரவே பிடிக்காம அங்கேயே தங்கி ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்திருக்காங்க.
வேற வழி இல்லாம இங்கிருந்து கிளம்பறப்போ இப்போ நீங்க திருச்சியில் போய் விசாரிச்சிட்டு வந்தீங்களே அந்த ஆசிரமம் முதல்ல மும்பையில்தான் இருந்துச்சு அந்த ஆசிரமத்தில் நடத்திக்கிட்டு இருந்த சிங்காரம் வேதா செல்லத்துக்கு கிட்ட கூப்பிட்டு ஒரு பொண்ணு இங்க அனாதையா வந்து இருக்கு அதுவும் தமிழ் பொண்ணு நீங்க குழந்தை இல்லைன்னு ரொம்ப வருத்தப்படுறீங்களே அந்த பொண்ண தத்து எடுத்துக்க முடியுமா என்று கேட்டு இருக்காங்க.
ஏற்கனவே பையனையும் பொண்ணையும் தொலைச்சிட்டு பரிதவிச்சிட்டு இருந்த வேதாச்சலமும் சிவகாமியும் தங்களுக்கு ஆதரவா ஒரு குழந்தை வேணும்னு சொல்லி ஆசிரமத்தில் இருந்து மாதவியை தத்தெடுத்துட்டு வந்து அவங்க தத்து எடுத்துட்டு வந்த செண்பகம் அத்தையோட பொண்ணுக்கு அவங்களோட காணாம போன பொண்ணோட பேர ஞாபகார்த்தமா வச்சு இவ்வளவு வருஷமும் வளர்த்துட்டு இருந்திருக்காங்க .
இவ்வளவு வருஷமா செண்பகம் அத்தையோட பொண்ணு தான் சங்கவி என்கிறது இவங்க ரெண்டு பேருக்குமே தெரியாது.
சமீபமா மாதவி வேதாச்சலத்தையும் சிவகாமியை பற்றியும் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டு அவளுக்கு தெரிஞ்ச ப்ரொபசர் மூலமாக வேதாச்சலத்துக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல…
ஏற்கனவே விக்கி சிவகாமியை சங்கவி கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போனா பாத்திரத்துல இருந்தா சங்கவி அதனால அவகிட்ட மாதவி பத்தி விஷயம் தெரிஞ்சுச்சுன்னா.
சங்கவி மாதவியை எதுவும் செய்துருவான்னு பயந்து தான் வேதாச்சலம் மாமா மாதவியை இந்த வீட்ல வேலைக்காரியா சேர்த்து இருக்காரு.
அவரோட சொந்த மகளையே தன் வீட்ல வேலைக்காரியை சேர்த்துக்கிட்டு அவளை பக்கத்தில் இருந்தாவது பாத்துக்கலாம்னு நினைச்சு தான் வேதாச்சலம் மாமா இத்தனை நாளும் சங்கவிக்கு தெரியாம பார்த்துக்கிட்டாரு.
ஆனா இந்த விஷயம் எப்படி சங்கவிக்கு தெரிஞ்சதுன்னு எனக்கு தெரியல என்றான் ஆதிக்.
இவ்வளவு நேரம் இங்கே நடந்ததை கேட்டு அமர்ந்திருந்த சங்கவி அதை நான் சொல்றேன் ஆதிக் என்றவாரு எழுந்து அவன் அருகில் வந்து நின்றாள்.
சங்கவி எழுந்து வர ஆதிக் அருகில் வந்து நின்ற செண்பகம் அவளை பாசத்தோடு பார்க்க…
சங்கவியோ ஆதிக் அருகில் நின்றிருந்த செண்பகத்தை திரும்பியும் பார்க்கவில்லை.
தன்னை நிராகரிக்கும் சங்கவியின் குணம் தெரிந்தும் தாய் பாசத்தினால் அவள். தன்னிடம் பேசுவாளா? தன்னை பார்பாளா? என்று ஏங்கியப்படி செண்பகம் அவளையே பார்த்த படி நின்று இருக்க…
ஆனால் சங்கவியோ மறந்தும் கூட பார்த்து செண்பகத்தின் வணக்கம் தன் பார்வை சென்று விடாதபடி இருந்தவள் ஆதிக்கு பார்த்து.
இத்தனை நாள் அப்பா அப்பா என்று உயிரை கொடுத்து பேசிக்கொண்டிருந்த சங்கவி இன்று இந்தப் பெரிய மனுஷன் எப்படி என்கிட்ட மாட்டிக்கிட்டாருன்னு நான் சொல்றேன் என்றவள்.
அவரை ஒரு புழுவை போல பார்த்துவிட்டு உனக்கு பெரிய மனசு செஞ்ச ஒரே தப்பு அன்னைக்கே விக்கி கூட இந்த வீட்டை விட்டு கிளம்பி போயிருந்தார்னா இன்னைக்கு இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவர் மகனுக்காக என்கிட்ட இருந்து சொத்து எல்லாம் காப்பாத்துறேன்னு வேணும்னே ஒரு பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு என்கூட வந்து இருந்தாரு.
நானும் இவரை நம்பி எனக்காகத்தான் வந்திருக்காருன்னு கூட வச்சிருந்தேன்.
ஆனா எண்ணிக்கு அந்த மாதவி இந்த வீட்டுக்குள்ள வந்தாலோ அப்போ இருந்து இந்த ஆளோட நடவடிக்கை சரி இல்ல.
ஒரு வேலைக்காரி கிட்ட சொல்ற பொண்ணு மாதிரி ரொம்ப அக்கறையா பாசமா இந்த ஆள் நடந்து கொண்டதை பார்த்து எனக்கு கொஞ்சம் சந்தேகமா தான் இருந்துச்சு.
நான் கூட இவ நல்லா சாப்பாடு செஞ்சு போடுறதுனால தான் அவகிட்ட பாசம் நடந்துக்கிறார்னு நினைச்சேன் ஆனா ஒரு நாள் இந்த ஆளு உடம்பு முடியலன்னு வீட்ல ரெஸ்ட் எடுக்கிறேன் நீ மட்டும் ஆபீஸ் போயிட்டு என்ன அனுப்பி வச்சிட்டு.
இதோ இங்க நிக்கிறாளே அவ ஆசை பொண்ணு அவளை கூட்டிக்கிட்டு கடைக்கு போயி அவளுக்கு துணிமணி நகை எல்லாம் வாங்கி கொடுத்துட்டு இருந்தார்.
இந்தாளோட கெட்ட நேரமா இல்ல என்னோட நல்ல நேரமா என்று தெரியல அப்போ இந்த ஆளும் மாதவியும் போன கடைக்கு என்னோட பிரண்டு போயிருக்கா.
அவதான் இவரு மாதவிக்கு கடையில் இருக்கிறது எல்லாத்தையும் வாங்கி கொடுத்துட்டு இருந்தத பாத்துட்டு எனக்கு போன் பண்ணி என் மனைவி அந்த போன் உன் அப்பா ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து கடையில நிறைய பொருள் வாங்கி கொடுக்குறாரு அவர் யார் அந்த பொண்ணு யாரு உன்னோட தங்கச்சியா உன்னோட சொந்தமான என்கிட்ட கேட்டா முதல்ல அவர் யாரை கூட்டிட்டு வந்தார்ன்னு எனக்கு தெரியல.
அந்த ஆளையும் மாதவியும் அவ போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ் அப் பண்ணதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சிச்சு எனக்கு தெரியாம இவள கூட்டிட்டு கடைக்கு வந்தேன்.
என்னோட பிரண்டு கிட்ட எதையோ சொல்லி சமாளிச்சுட்டு போனை வெச்சதும் அந்த மாதவியை பத்தி ஏற்கனவே நான் விசாரிக்க சொல்லி இருந்த ஆள் எனக்கு போன் பண்ணி அவளை பத்தின விவரத்தை எல்லாம் எனக்கு அனுப்பி இருந்தான் அதை எடுத்து பார்க்க போவது தான் தெரிஞ்சுச்சு நான் இவங்களோட உண்மையான பொண்ணு கிடையாது அந்த மாதவி தான் இவங்களோட உண்மையான பொண்ணுன்னு.
அதற்குப் பிறகு தான் என்னோட அம்மா அப்பா யாருன்னு தெரிஞ்சுக்க நான் நிறைய முயற்சி பண்ணி கடைசியிலதான் தெரிஞ்சிச்சு என்னை மும்பையில் இருந்த ஒரு ஆசிரமத்திலிருந்து தத்து எடுத்துட்டு வந்தாங்கன்னு அந்த ஆசிரமத்தை பத்தி விசாரிக்க போனப்பத்தான் அதே அதர்மத்தில் இருந்த மாதவி படிப்பு விஷயமா சென்னைக்கு போனதா கேள்விப்பட்டேன்.
நான் இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டது இந்த ஆளுக்கு இன்னைக்கு தான் தெரியும்.
இந்த ஆள் செய்த ஒரே தப்பு அவன் பொண்ணு கொண்டு வந்து ஒரே வீட்ல அதுவும் நான் இருக்கிற இடத்திலேயே இருக்க வச்சதுதான்.
என்னை ஏமாத்தின யாரையும் நான் நிம்மதியா விட்டதா சரிதனமே கிடையாது.
எவ்வளவு பெரிய பொய் சொல்லி என்னை ஏமாத்தி வெச்சி இருந்திருக்கான்.
விட அவன் பொண்ணு அவன் கூட சேர்ந்துட்டு அவளும் என்னை ஏமாற்றி இருக்கா இவகிட்ட நான் எப்படி பழகி இருந்தேன் தெரியுமா ஆனால் இவர் என்ன நம்ப வச்சு ஏமாற்றி கழுத்து அறுத்துட்டா அப்படி இருக்கிறவர்களை நான் சும்மா விடலாமா என்று சொல்லிக் கொண்டிருந்த சங்கவி உங்க ஊரு அடுத்த நிமிடம் தன் கையில் இருந்த துப்பாக்கியை நேராக உயர்த்தி அவளை சுடப் போக…
சங்கவி கையில் துப்பாக்கியை உயர்த்தியதும் அதை பார்த்த ஆதிக்கும் போதியும் பாய்ந்து வந்து அவள் கையில் இருந்த துப்பாக்கியை பிடிக்க போக அதற்குள் சங்கவி துப்பாக்கியால் மாதவியை நோக்கி சுட்டு விட்டாள்.
திடீரென சங்கவி இப்படி என் துப்பாக்கி எடுத்து மாதவியை சுடுவாள் என்று அங்குள்ள யாரும் எதிர்பார்க்கவே இல்லை அனைவரும் அதிர்ந்து போய் மாதவியை பார்க்க…
தன்னை சுட போகிறாள் என்று பயந்த மாதவி கண்களை இருக்க மூடியபடி நின்று இருக்க…
அவள் துப்பாக்கி கொண்டு பாயவில்லை என்று அனைவரும் சற்று நிம்மதியாக இருக்க….
அப்போது என்னங்க என்று கத்தியபடி சிவகாமி வேதாச்சலத்தை பிடித்துக் கொள்ள…
மாதவியை சுடப்போன சங்கவியின் முன்பு பாய்ந்து மாதவியின் மீது வந்த குண்டு வேதாச்சலம் தன் மார்பில் வாங்கிக் கொண்டார்.
இதை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வேதாச்சலத்தின் இதயத்தில் குண்டு பாய்ந்து அவர் சரிந்து தரையில் விட அவரை தாங்கிப் பிடித்தபடி சிவகாமி அவரோடு சேர்ந்து தரையில் விழுந்தார்.
இதை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவே இல்லை அதிர்ச்சியாக அனைவரும் வேதாச்சலத்திலும் ஓட…
தன் மகளை ஆசையாக காண வந்த செண்பகமோ சங்கவி இப்படி ஒரு செயலை செய்ததை கண்கூடாக பார்த்ததும் அதிர்ந்தவர்.
இப்படிப்பட்ட ஒரு பெண்ணையா நான் என் வயிற்றில் சுமந்தேன். இவளை பார்ப்பதற்காக தானா நான் இத்தனை வருடம் என் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தேன். இவள் என் மகளே கிடையாது. இவளை நான் பெற்றிருக்கவே கூடாது இவள் இந்த பூமிக்கு பாரமாக இருக்கவே கூடாது என்று மனதுக்குள் புலம்பியவர் வேகமாக சங்கரின் அருகில் வந்து அவள் கையில் இருந்து துப்பாக்கியை பிடுங்க…
இங்கு என்ன நடக்கிறது என்று சங்கவி சுதாரிப்பதற்குள் செண்பகம் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு சங்கவியை சுட்டுவிட்டார்.

4 comments
Akka nejamave sangaviya suttuttangala 😱🥹🥹😳😳 super akka ava pesina pechukkum ava panna velaikkum nalla venum akka inniku episode vera level akka 🥰🥰❤️❤️👌👌🫰🫰🫰🌹🌹🫶🫶🫶🎁🎁🎁🙂🙂🙂
💖💖❤️❤️🤩🤩🙏🙏 thank u
Ayooo akka sangaviku onnum aga kudathu Ava melaum entha thappum illa avala valathathu apdi avalum enna pannuva sangaviku ethuvum aga kudathu sis🥺ana intha twist ah🤔konjam kuda ethirparkala sis🫢
thank u thodarnthu story padinga sister 🤩🙏