Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 212

உன் ரகசிய ரசிகை நான் 212

by Layas Tamil Novel
99 views

EPI 212

கனகா தன்னுடைய குடும்பத்தை மட்டும் அமர வைத்து சமைத்து வைத்த உணவை அவர்களுக்கு மட்டும் பரிமாற…

அனைவரும் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு டைனிங் டேபிள் மிகவும் பெரிதாகத்தான் இருந்தது கனகா நினைத்திருந்தால் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து அவர்களுக்கு உணவு பரிமாறு சாப்பிட வைத்து இருக்கலாம் ஆனால் அப்படி செய்யாமல் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் முதலில் அமர வைத்து உணவு பரிமாறிக் கொண்டிருக்க…

அதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த விசாலாட்சி இந்த வீட்டில் இவ்வளவு நாட்களாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு தான் பழக்கம் அதுவும் முக்கியமான விசேஷ நாட்களில் அனைவரும் ஒன்று கூடி பேசி சிரித்து சாப்பிடுவது வழக்கம்.

ஆனால் இன்று அந்தப் பழக்கத்தை எல்லாம் உடைத்து எறிந்து கனகா தன் குடும்பத்தை மட்டும் அமர வைத்து சாப்பிட சொல்லிக் கொண்டிருக்க…

அதை பார்த்த விசாலாட்சி டைனிங் டேபிளில் நோக்கி வர..

மாதவியுடன் பேசிக் கொண்டிருந்த சங்கவி இன்று ஒரு பெரிய சம்பவம் நிகழ காத்திருக்கிறது என்று அதை கண்டு சந்தோஷப்படுவதற்காக விசாலாட்சியையும் கனகாவையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தால்.

கைக்கு மருந்து போட்டுக்கொண்டு வந்த துர்காவையும் சேர்த்து சாப்பிட அமர வைத்திருந்த கனகா அவர்களுக்கு பரிமாறி சாப்பிடச் சொல்ல…

துர்கா அவள் அம்மாவிடம் அம்மா ஏன் நம்ம மட்டும் உக்காந்து சாப்பிடுறோம் எல்லாரையும் கூப்பிடுங்க எல்லாரும் சேர்ந்து ஒண்ணா சாப்பிடலாம் இது என்ன நம்ம மட்டும்தான் தனியா உட்கார்ந்து சாப்பிட்டால் நல்லவா இருக்கு என்று கேட்டால்.

உடனே கனகாவின் அம்மா அதெல்லாம் அவங்களாவே வந்து சாப்பிட்டுக்கு வாங்க நீ முதல்ல உக்காந்து சாப்பிடு என்று துர்கா சாப்பிட சொல்லி வற்புறுத்த…

என்னது அவங்களாக வந்து சாப்பிட்டுக்குவாங்களா இது நம்ம வீடு அவங்க நம்ம வீட்டுக்கு விருந்தாளிகளா வந்து இருக்காங்க.

முதல்ல நம்ம தான் அவங்கள கூப்பிட்டு அவங்களுக்கு பரிமாறி சாப்பிட வச்சு அவங்க சாப்பிட்டு முடிச்ச பிறகுதான் நம்ம சாப்பிடணும்.

அந்த பழக்கம் தான் இந்த வீட்டில் இத்தனை வருஷமா இருக்கு இப்படி புதுசா எதையெதையோ கொண்டு வந்து திணிக்காதீங்க என்றவள் தன் அம்மா என்று கூட பார்க்காமல் அவர் மீது கோபப்பட்ட துர்கா ஆதியிடம் வா ஆதி நம்ம அப்புறம் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சொல்லி அவனை அழைக்க…

தன்னுடைய அம்மா செய்த தவறை எடுத்துக்காட்டி துர்கா கனகாவிடம் பேசியதெல்லாம் கேட்டுக் கொண்டு வந்த விஷாலாட்சி தன் மருமகளை நினைத்து உண்மையாகவே மெச்சிக் கொண்டார்.

எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கோபமாக டைனிங் டேபிள் இருந்து எழுந்த துர்கா அங்கிருந்து செல்லப் போக…

இப்போது அங்கே வந்த விசாலாட்சி சாப்பிடாமல் டைனிங் டேபிளில் இருந்து எழுந்திருக்க போன துர்காவையும் ஆதியையும் பார்த்து ஏய் ரெண்டு பேரும் எங்கே சாப்பிட உட்கார்ந்துட்டு எழுந்து போறீங்க.

அதெல்லாம் செய்யக்கூடாது பேசாம உட்காருங்க இப்போ கனகா என்ன செஞ்சுட்டா நீ அவ கிட்டே கோச்சிட்டு சாப்பிடாம போற…

அவளோட குழந்தைகளை உட்கார வச்சு சாப்பிடுறதை அழகு பாக்கணும் தானே ஆசைப்பட்டா… இதுல என்ன தப்பு இருக்கு அவகிட்ட கோவிச்சுக்க என்ற விஷாலாட்சி.

கனகா நீ இவங்களுக்கு எல்லாம் பரிமாறு நான் மத்தவங்களை அழைச்சிட்டு வரேன் எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு விசாலாட்சி சிரித்து முகமாக சென்று அனைவரையும் சாப்பிட அழைக்க…

தான் அனைவரையும் ஒதுக்கிவிட்டு தன் குடும்பத்தை மட்டும் கவனிக்க அதை கூட பெரிது படுத்தாமல் விசாலாட்சி தனக்கு சாதகமாக பேசி தன் மகளிடமே தனக்காக பேசியதை பார்த்த கனகாவிற்கு இவ்வளவு நேரம் தான் தப்பு செய்து விட்டோமே என்று நினைக்க ஆரம்பித்தார்.

அவர் அருகில் அமர்ந்திருந்த துரை கூட கனகா இப்படி செய்ததை நினைத்து எதுவும் பேச முடியாமல் சங்கடத்தில் தான் அமர்ந்து இருந்தார்.

விசாலாட்சி இப்படி வந்து சொல்லிவிட்டு சென்ற பிறகு தன் அருகில் நின்றிருந்த கனகாவை பார்த்து நீ நம்ம குடும்பத்தை பாக்கணும்னு நினைக்கிறது தப்பு இல்ல கனகா.

ஆனா வந்திருந்தவங்களையும் கவனிக்கணும் தானே…. நீ இப்படி உனக்கு உன்னோட குடும்பம்னு மட்டும் யோசிக்கிறவள் கிடையாது கனகா.

இந்த மாதிரி இனிமேல் நடந்துக்காத எனக்கு இந்த மாதிரி இருக்கிற கனகா பிடிக்கல அடுத்தவங்களை பத்தி கவலைப்படற அடுத்தவங்களுக்காக அக்கறை காட்டுற கனகா தான் என்னுடைய மனைவி எப்பவுமே தனக்காக யோசிக்கிறவள் என்னுடன் மனைவி கிடையாது என்றார் துரை.

அவர் சொன்னதில் மனம் நெகிழ்ந்து போன கனகா என்ன மன்னிச்சிடுங்க நான் ஏதோ கேட்பார் பேச்சை கேட்டு இந்த மாதிரி நடந்து கொண்டேன் இனிமேல் இப்படி நடந்துக்க மாட்டேன் என்று சொன்னவர் சிரித்து முகமாக அனைவரையும் அழைத்துக் கொண்டு டைனிங் டேபிள் இருக்கு வந்த விஷாலாட்சியிடம் ஓடிச் சென்று அவர் கையைப் பிடித்தவர்.

அண்ணி…. என்ன மன்னிச்சிடுங்க நான் ஏதோ தெரியாம இப்படி எல்லாம் நடந்து கொண்டேன். நான் எதுவும் உங்களை கஷ்டப்படுத்தி இருந்தா என்ன தயவுசெய்து மன்னித்துவிடுங்கள் என்று கனகா ஆத்மார்த்தமாக விசாலாட்சி இடம் மன்னிப்பு கேட்க…

கனகா எதுக்காக இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் மன்னிப்பு கேட்டுட்டு இருக்க நான் இதையெல்லாம் பெரிதாகவே எடுத்துக் கொள்ளல உனக்கு உன் குழந்தைகளை பார்த்துக்கணும்னு ஆசை இதுல என்ன இருக்கு என்றார் விசாலாட்சி.

சரி… சரி… வா நாம பேசிகிட்டு இருக்காம எல்லாரும் சாப்பிட வந்துட்டாங்க பாரு என்று சொல்லி விசாலாட்சி கனகாவை அழைக்க.. அவருடன் செண்பகமும் சேர்ந்து கொண்டு அனைவரையும் அமர வைத்து ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து வந்திருந்தவர்களுக்காக துர்கா செய்திருந்த உணவை பரிமாறி அவர்கள் வயிறார சாப்பிடுவதை பார்த்து சந்தோஷப்பட்டனர் .

ச்சே….நான் பத்தவைத்த வெடி இப்படி புஸ்… என்று போய்விட்டதே என்று சங்கவி உள்ளுக்குள் குமைந்து கொண்டு இருந்தாள்.

அனைவரும் திருப்தியாக சாப்பிட்டு முடித்த பிறகு ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க…

அப்போது சிவகாமியும் வேதாச்சலமும் மாதவியின் திருமணத்திற்காக கொண்டு வந்திருந்த பத்திரிகையை குடும்பம் மொத்தமும் ஆக அனைவரையும் நிற்க வைத்து அவர்களிடம் கொடுத்து இந்த திருமணத்திற்கு முன்னமே வந்து இருந்து மாதவியை ஆசிர்வதிக்குமாறு கூறினர்.

செண்பகத்தையும் சங்கவியையும் தங்கள் வீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் சிவகாமி.

விருந்திற்கு வந்தவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வீட்டிற்கு கிளம்பி விட கடைசியில் துர்காவின் வீட்டு ஆட்கள் மட்டுமே அங்கே இருந்தனர்.

அவர்களுக்கு எல்லாம் காபி போடுவதற்காக விஷாலாட்சி சமையல் அறைக்கு வந்துவிட…அவருக்கு உதவுவதாக சொல்லி துர்கா அவரோடு சேர்ந்து சமையல் அறைக்கு வந்து விட்டாள்.

துர்கா உள்ளே வந்ததும் நீ எதுக்கு துர்கா இந்த காயமான கைய வச்சுக்கிட்டு கிச்சன் பக்கம் வரேன். நீ பேசாம போயி ஆதி கூட உட்காரு நான் பார்த்துக்கிறேன் என்று விசாலாட்சி அவளிடம் கூற…

பரவால்ல அத்தை நானா காபி போட போறேன் நான் சும்மா உங்க கூட துணைக்கு தான் வந்து நிக்கிறேன் நீங்கதானே காபி போட போறீங்க என்று சிரித்தவாறு அவரிடம் வந்து நின்றால் துர்கா.

அவள் வந்து நின்றதும் அவளை பார்த்து சிரித்தவர் தங்களை சுற்றி யாரேனும் இருக்கிறார்களா என்று ஒரு முறை பார்த்துவிட்டு துர்கா இடம் திரும்பி…

துர்கா நீ சொன்னது சரிதான் அந்த சங்கவி இன்னும் மாறவே இல்லை அவ கனகா கிட்ட ஏதேதோ பேசி கனகா மனசையே எப்படி மாற்றி வைத்துவிட்டாள் பாத்தியா!!

நல்ல வேலை சட்டுனு கனகா அவ செஞ்ச தப்பே உணர்ந்துக்கிட்டதுனால இன்னைக்கு எந்த பிரச்சனையும் இல்லாம விசேஷம் நல்லபடியா முடிஞ்சுது.

ஒருவேளை சங்கவி பேச்ச கேட்டுட்டு கனகா எதுவும் பிரச்சினை பண்ணி இருந்தா இன்னைக்கு விசேஷ வீடு மாதிரியே நம்ம வீடு இருந்திருக்காது இல்ல என்றார் விஷாலாட்சி.

ஆமா அத்தை அதனால் தான் அம்மா செய்த தவற அவங்க உணர்ந்துக்கணும்னு தான் நான் வேணும்னே கோபிச்சிட்டு போற மாதிரி சாப்பிடாம போக பார்த்தேன் என்றால் துர்கா.

ஆமா துர்கா நீ என் கனகா கிட்ட கோவிச்சுக்கிட்டது கூட ஒரு வகையில நல்லது தான்.அவளுக்கு தான் செய்த தவறு ஏதோ ஒரு விதிசத்துல உணர்ந்து இருக்கு அதுவும் இல்லாம துரையும் கூட கனகாகிட்ட நல்ல விதமாக பேசி அவளுக்கு புரிய வச்சிட்டான் என்றார் விசாலாட்சி.

அது எல்லாம் விட நீங்கதான் அத்தை ரொம்ப பொறுமையா நடந்துக்கிட்டிங்க சங்கவி செய்த விஷயத்தால கனகா அம்மா உங்க மனசு நோகும்படியா ரெண்டு மூணு தரம் நடந்துக்கிட்டாங்க நானும் அதை கவனிச்சுட்டு தான் இருந்தேன்.

ஆனால் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் நீங்க கனகா அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசினது தான் இவ்வளவு சீக்கிரம் அவங்க மனசு மாறினதுக்கு காரணம் என்றால் துர்கா.

அப்படி னான் என்ன செய்துவிட்டேன் துர்கா நீ ஏற்கனவே சங்கவிய பத்தி என்கிட்ட சொல்லி இருந்ததால தான் என்னால சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நடந்துக்க முடிஞ்சது.

அப்படி இல்லாம நீ எதுவும் என்கிட்ட சொல்லாம விட்டிருந்தா நானும் கனகா செய்தது எல்லாம் பாத்துட்டு அவகிட்ட கோவிச்சு இருப்பேனோ என்னவோ என்றார் விசாலாட்சி.

நான் சங்கவிய பத்தி உங்ககிட்ட சொல்லாம இருந்திருந்தால் கூட நீங்க எப்பவும் பொறுமையா இதே குணத்தோட தான் இருப்பீங்க அதுல எந்த சந்தேகமும் இல்லை என்றால் துர்கா.

சரி சரி நீ ரொம்ப என்ன புகழ்ற எனக்கு வெக்கமா இருக்கு நீ போய் ஆதி கிட்ட உட்காரு நான் காப்பி போட்டு எடுத்துட்டு வரேன் என்று சொன்னார்.

இந்த வயதிலும் ஏன் அத்தைக்கு வெட்கத்தை பாரு இருங்க நான் போய் மாமாவை வர சொல்றேன் நீங்க வெட்கப்படுவதை பார்த்து அவர் ரசிக்கட்டும் என்று துர்கா சொல்ல…

விசாலட்சியின் முகம் பக்கத்தில் லேசாக சிவந்து இருக்க துர்கா வெங்கடாஜலத்தை வரச் சொல்கிறேன் என்று சொன்னதும் அவர் முகம் முழுவதும் சிவந்து விட…

அதை பார்த்த துர்கா அய்யோ அத்தை உங்களுக்கு என்ன முகம் எல்லாம் இப்படி சிவந்திருச்சு என்றவள்.

உடனே ஹாலில் அமர்ந்து அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்த வெங்கடாசலத்தை பார்த்து மாமா ஒரு நிமிஷம் இங்க வாங்களேன் அத்தை உங்ககிட்ட ஏதோ கேட்கணும்னு சொல்ராங்க என்று துர்கா கிச்சனிலிருந்து கத்த…

ஏய் துர்கா இப்போ எதுக்கு அவரை தேவையில்லாம கூப்பிடுற பேசாம இருக்க மாட்டேன் என்று அவள் தோளில் அடித்தார் விசாலாட்சி.

நீங்க பேசாம இருங்க அத்தை நான் போய் மாமாவ வரச் சொல்றேன் என்று கிச்சனிலிருந்து ஒரே ஓட்டமாக ஆளுக்கு வந்தவள் மாமா அத்தை உங்கள கூப்பிடுறாங்கன்னு சொல்றேன் இன்னும் இவங்க கூட உட்கார்ந்து என்ன பேசிட்டு இருக்கீங்க….

போங்க…. அத்தைக்கு ஏதோ சந்தேகம்ன்னு சொல்லி உங்ககிட்ட தான் கேட்கணும்னு சொல்றாங்க என்று சொல்லி அவரை வலுக்கட்டாயமாக கிச்சனுக்கு அனுப்பி வைத்தாள்.

துர்கா எதற்காக தன்னை கிச்சனுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறாள் என்று யோசித்துவாரு எழுந்து சென்றார் வெங்கடாசலம்.

அவரை அனுப்பிவிட்டு வந்து ஆதியிடம் துர்கா அமர்ந்தாள்.

என் அப்பாவுக்கு கிச்சன்ல என்னடி வேலை இருக்கு அவர எதுக்காக இப்படி சம்பந்தம் இல்லாமல் கிச்சனுக்கு அனுப்பி வச்ச…. கண்டிப்பா என் அம்மா அவரை கிச்சனுக்கு எல்லாம் கூப்பிட்டு இருக்க மாட்டாங்க என்றான் ஆதி.

எப்படி ஆதி இப்படி கரெக்டா சொல்லிட்ட அத்தை இன்னும் மாமாவ கிச்சனுக்கு வரச் சொல்லல நான் தான் அத்தை வரச் சொன்னதாக பொய் சொல்லி மாமாவை கிச்சனுக்கு அனுப்பி வைத்தேன் என்றால் அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக…

அவளை ஆச்சரியமாக பார்த்த துர்கா உனக்கு எதுக்குடி இந்த வேலை எல்லாம் என்ன பண்ணி வைக்க அவன் என் அப்பாவை கிச்சனுக்கு அனுப்பி வச்ச என்று கேட்டான் ஆதி.

அது மாமாவும் அத்தையும் மட்டும் பேசிக்க வேண்டிய விஷயம் உன்கிட்ட எல்லாம் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை என்றால் துர்கா.

ஓஹோ அது என்ன எனக்கு தெரியாம அவங்க ரெண்டு பேரும் பேசிக்க போறாங்க இரு அப்படி என்ன ரெண்டு பேரும் பேசிக்கிறாங்கன்னு நான் போய் பார்த்துட்டு வரேன் என்று ஆதி எழுந்து கிச்சனுக்கு செல்ல போக…

அவன் கையைப்பிடித்து இழுத்து தன் அருகில் அமர வைத்த துர்கா ஐயோ…. ஆதி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?

அத்தையும் மாமாவும் கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும் நீ பாட்டுக்கு உள்ள போறேன்னு சொல்ற பேசாம இரு அவங்களே கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க என்று அவனை அடக்கி தன்னருகில் அமர வைத்தாள்.

தன் கைக்குள் ஆதியின் கையை கோர்த்து அவனை தன்னிடமிருந்து நகர்விடாமல் அமர வைத்திருந்த துர்கா பார்த்தவன் அவள் கையோடு தன் கையை அவனும் சேர்த்து பிடித்துக் கொண்டு துர்கா மற்றவர்களிடம் பேசுவதை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured