EPI 225
முதலிரவுக்கு தயாராகி வெளியே வந்த மாதவியை பார்த்து அவள் அழகில் உறைந்து போய் போதி அவளையே பார்த்துக் கொண்டு இருக்க..
ஆனால் அவனைக் கண்டு கொள்ளாமல் போதியின் பாட்டி சரளாவிடம் பேசிக்கொண்டே சாப்பிடச் சென்றாள்.
அவளுக்கும் போதியை பார்ப்பதற்கு வெட்கம் பிடுங்கி தின்ன, ஆனால் அவனும் மாதவி தன்னை ஒரு முறை கூட நிமிர்ந்து பார்க்க மாட்டேன் என்கிறாள் என்று அவள் மீது கோபமாக இருந்தான்.
மாதவியையும் போதியையும் அருகருகே சாப்பிட அமர வைத்து விட்டு மற்றவர்களும் அவர்களோடு அமர்ந்து கொள்ள அனைவருக்கும் போதியின் வீட்டு வேலையாட்கள் உணவு பரிமாற ஆரம்பத்தினர்.
தன் அருகில் போதி அமர்ந்திருந்தும் அவனை பார்க்காமல் தலையை குனிந்தபடி மாதவி அமர்ந்திருக்க… தன் காதல் மனைவி ஒருமுறை என்னும் தன்னை திரும்பி பார்க்க மாட்டாளா என்று ஏக்கத்தில் போதியும் தன் அருகில் அமர்ந்திருந்த மாதவியை அடிக்கடி திரும்பி பார்த்த படி அமர்ந்து இருந்தான்.
அதை பார்த்த போதியின் தங்கை தீபா, “அண்ணி நீங்க என் அண்ணனை பார்க்க இவ்வளவு வெட்கப்பட்டால் எப்படி… என் அண்ணனை பாருங்க, நீங்க ஒரு முறையாவது அவரை பார்த்து விட மாட்டீங்களான்னு உங்களையே பாத்துக்கிட்டு இருக்காரு” என்று போதியின் மனதை சரியாக படித்து சொல்ல…
அவள் சொன்னதை கேட்ட மாதவி தலை குனிந்து இருந்தவள் நிமிர்ந்து போதியை பார்க்க… அவள் மையிட்ட கண்களை பார்த்தபோது அவள் கண்களின் ஈர்ப்பில் அப்படியே உறைந்து போனான். என் மாதவி இமைகள் படபடக்க அவனையே பார்த்துக் கொண்டிருக்க… போதியோ அவள் பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல் உள்ளுக்குள் பூகம்பமே வெடித்து விடுவது போல உணர்ந்தவன் இத்தனை பேர் முன்னிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
இருவரும் இப்படி தங்களை மறந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்க அதை பார்த்து அங்கு இருந்தவர்கள் எல்லாம் தங்களுக்குள்ளேயே சிரித்துக் கொண்டனர்.
போதியின் எதிரே அமர்ந்து இருந்த ரதி “ஐயோ மாமா நாங்க எல்லாரும் இருக்கோம் அதுவும் இல்லாம இங்கே சிங்கிள்ஸ் நிறைய பேர் இருக்கோம். இப்படி எங்க முன்னாடி உங்க பொண்டாட்டிய கண்ணாலேயே பார்த்து ரொமான்ஸ் பண்ணி எங்களை எல்லாம் டென்ஷன் பண்ணாதீங்க” என்று அவர்கள் இருவரின் கவனத்தையும் கலைக்க… அவர் சொல்வதைக் கேட்ட மாதவியும் போதியும் சட்டென… ஒருவர் மீது இருந்து ஒருவர் பார்வையை திருப்பிக் கொள்ள… இருவரின் நடவடிக்கையும் பார்த்த அனைவராலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
“டேய் பேராண்டி நீ இன்னைக்கு ரொம்ப வெட்கப்படறடா… என் பேராண்டியையே வெட்கப்பட வெச்ச என் பேத்திய நெனச்சா எனக்கு சந்தோசமா இருக்கு” என்று சரளா போதியை கிண்டல் செய்ய… “பாட்டி சும்மா இருக்க மாட்ட நீ…” என்று அவரை அதற்றியவன் சாப்பிட ஆரம்பித்தான்.
போதியின் கை டேபிளுக்கு அடியில் மெதுவாக சென்று மாதவியின் கையைப் பிடித்துக் கொள்ள… அவளுக்கு சப்த நாடியும் அடங்கியது போல இருந்தது. மாதவி உறைந்து போய் போதியை பார்க்க… அவளை ‘என்ன’ என்பது போல புருவம் உயர்த்தி பார்த்தவன், “என்ன மாதவி என்னையே பாக்குற? சாப்பிடு” என்றான்.
அவனை முறைத்தவள் தன் பிளேட்டில் இருந்த உணவை எடுத்து சாப்பிட ஆரம்பிக்க, போதி அவள் கைகளை பிடித்துக் கொண்டிருந்தவன் அவள் விரலுக்குள் தன் விரல்களை கோர்த்துக் கொள்ள… அவன் கைக்குள் இருந்த தன் கையை மாதவி எடுத்துக் கொள்ள முயற்சிக்க அவளை விடாமல் பிடித்துக் கொண்டான் போதி.
மாதவி என்ன செய்வது என்று புரியாமல் தன் தட்டில் இருந்த உணவை கொரித்துக் கொண்டிருந்தாள். மாதவி சரியாக சாப்பிடாமல் உணவைக் கொறித்துக் கொண்டிருப்பதை பார்த்த போதியின் அம்மா, “என்ன மாதவி உனக்கு சாப்பாடு எதுவும் பிடிக்கலையா? ஏன் சாப்பிடாம அப்படியே வச்சிருக்க” என்று கேட்டார்.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அத்தை” என்றாள். உடனே மாதவியை பார்த்த போதியின் தம்பி ராகவ், “அம்மா என்னம்மா நீங்க புரியாம கேக்குறீங்க அண்ணிக்கு அண்ணன் ஊட்டிவிட்டால் தான் சாப்பாடு இறங்கும் அதனாலதான் சாப்பிடாம அப்படியே வச்சிருக்காங்க போல” என்றவன் போதியிடம் திரும்பி “அண்ணா நீ மட்டுமே சாப்பிட்டுட்டு இருக்க, அண்ணிக்கும் கொஞ்சம் ஊட்டி விடு… அவங்களும் சாப்பிட வேண்டும்” என்றான்.
ராகவ் சொன்னதை கேட்ட மாதவி அவசரமாக “அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க நானே சாப்பிட்டுக்குவேன்” என்று சொல்ல… அவள் பதட்டப்படுவதை பார்த்து அனைவரும் சிரித்து விட்டனர்.
“பரவாயில்லமா என் மகன் ஊட்டி விட்டு நீ சாப்பிட்டா நாங்க எதுவும் சொல்ல மாட்டோம். நீ தைரியமா அவன்கிட்ட வாங்கி சாப்பிடு, நாங்க வேணாலும் கண்ணை மூடிக்கட்டுமா?” என்றார் போதியின் அப்பா. “ஐயோ மாமா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நானே சாப்பிட்டுக்குவேன்” என்று தன் தட்டில் இருந்து உணவை எடுத்து சாப்பிட போக… அவள் வாய அருகே கையை கொண்டு போவதற்கு முன்னால் அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த கையைப் பிடித்து கொண்ட போதி தன் தட்டில் இருந்த உணவை எடுத்து அவள் வாய் முன் நீட்டி சாப்பிடச் சொன்னான்.
போதியை பாவமாக மாதவி பார்க்க “பரவாயில்ல சாப்பிடு யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று அவளுக்கு ஊட்டி விட அவளும் கூச்சப்பட்டு கொண்டே போதி ஊட்டிய உணவை சாப்பிட ஆரம்பித்தாள். தன் தட்டில் இருந்த உணவை கொஞ்சம் கொஞ்சமாக மாதவிக்கு ஊட்டி விட மாதவி அவன் கண்களை பார்த்துக் கொண்டே போதி ஊட்டிய உணவு முழுவதையும் சாப்பிட்டு முடித்தாள்.
மாதவியை இப்படி அக்கறையாக கவனித்துக் கொள்ளும் அவள் குடும்பத்தை பார்த்த மாதவியின் குடும்பத்திற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு பூஜை அறைக்கு போதியையும் மாதவியையும் அழைத்துச் சென்ற சரளா மாதவியை விளக்கேற்ற சொல்லி சாமி கும்பிட்டனர்.
பின் போதியை அவன் அறைக்கு முன்னால் செல்ல சொல்லி சரளா சொல்ல… “ஏன் பாட்டி என்ன முன்னாடி போக சொல்ற நான் என் பொண்டாட்டிய கூட்டிகிட்டு தான் போவேன். நான் முன்னாடி எல்லாம் போய் காத்துட்டு இருக்க மாட்டேன் எனக்கு அந்த பொறுமையும் இல்லை” என்றான் போதி.
“இப்படி என் மானத்தை வாங்காதேடா… சொல்றத கேளு நீ முன்னால் போய் ரூம்ல வெயிட் பண்ணு நாங்க பின்னாடி மாதவியை அனுப்பி வைக்கிறோம். அதுதான் முறை” என்று போதியின் அம்மா சொல்ல… “அதெல்லாம் முடியாது நான் மாதவியை கூட்டிட்டு தான் போவேன்” என்று பிடிவாதமாக போதி உள்ளே செல்ல மறுத்தபடி அங்கே நின்றிருந்தான்.
அவன் பிடிவாதம் பிடிப்பதை பார்த்த மாதவிக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. “கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம எவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறான் பாரு” என்று அவனையே மாதவி வெட்கத்தோடு பார்க்க… “பாட்டி ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிஞ்சது தானே நான் அவளை கூட்டிட்டு போறேன்” என்று மாதவியின் கையை பிடித்து இழுக்க…
“டேய் பேராண்டி நீ அப்படியே உன் தாத்தாவை உருச்சு வச்சிருக்கியேடா உருவத்தில் மட்டும் தான் நான் அவரை மாதிரி இருக்கன்னு நினைச்சேன். ஆனா நீ நடந்து கொள்வதை பார்த்தால் உன் தாத்தாவையும் மிஞ்சிடுவ போல இருக்கே” என்றார் சரளா. “ஏன் பாட்டி அப்படி சொல்ற?” என்றான் போதி.
“உன் தாத்தாவும் எங்களுக்கு கல்யாணமான அன்னைக்கு ராத்திரி இப்படித்தான் என்ன கையோடு கூட்டிட்டு போவேன் என்று பிடிவாதம் பண்ணினார் அப்போ இருந்த பெரியவர்கள் எல்லாம் அவரை உள்ள அனுப்பிச்சிட்டாங்க. அந்த கோபத்திலேயே உன் தாத்தா ரெண்டு மூணு நாளா யார் கூடையும் பேசாம இருந்தாரு” என்று சொல்லி சரளா வெட்கப்பட.. அவர் சொன்னதை கேட்ட அனைவரும் சிரித்தார்கள். பின் போதியிடம் “சொன்னது கேளடா நீ உள்ள போ மாதவியை இப்பவே உடனே பின்னாடி அனுப்பி வைக்கிறோம். நாங்க ஒன்னும் அவளை எங்கேயும் பிடிச்சு வச்சுக்க மாட்டோம்” என்றார் போதியின் அம்மா.
“அதெல்லாம் முடியாது நான் இப்பவே அவளை கூட்டிட்டு போறேன்” என்று அவள் கை பிடித்து இழுத்துச் செல்ல… “சரி ஒரு நிமிஷம் நில்லடா எப்படியும் நாங்க சொல்றத நீ கேக்க போறதில்ல” என்று சொன்னவர் வேலையாளை அழைத்து பால் செம்பை எடுத்து வரச் சொல்ல… அதை வாங்கிய போதியின் அம்மா மாதவியின் கையில் அந்த வெள்ளி பால் செம்பை கொடுத்து… “இந்தா அம்மா உன் புருஷன் ரொம்ப அவசரப்படுறான் நீ கெளம்பு” என்று அவள் கையில் பால் செம்பை திணித்துவிட்டு “அத்தை வாங்க போகலாம் இன்னும் இங்கு நின்னுட்டு இருந்தா நம்ம மரியாதை எல்லாம் உங்க பேரன் கெடுத்து விடுவான்” என்றவர் உள்ளே செல்ல மாதவியின் அம்மாவும், நிலானி, போதியின் பாட்டியும் அனைவரும் உள்ளே சென்று விட்டனர்.
இப்படி தன்னை அம்பு என்று விட்டுவிட்டு அனைவரும் சென்று விட மாதவிக்கு படபடப்பு அதிகமானது. அவள் கையில் வைத்திருந்த பால் செம்பும் அதன் மீது இருந்த டம்ளரும் தடதடவென ஆட… போதி ‘என்ன’ என்று அவளை பார்த்தான். அவள் பயத்தில் கைகள் நடுங்க அவனை பார்த்தபடி நின்று இருந்தாள்.
“ஏய் மாதவி என்ன ஆச்சு ஏன் உங்க கையெல்லாம் இப்படி நடுங்குது” என்றான் போதி. “எல்லாம் உங்கனால தான் அத்தை தான் சொல்றாங்களே உங்களை முன்னாடி போய் வெயிட் பண்ண சொல்லி இப்போ என் கூடவே தான் வந்து ஆகணுமா” என்று அவனிடம் முறைக்க… “ஏய் என்னடி இப்படி பேசுற என் பொண்டாட்டி கூட தான் நான் போகணும்னு நினைக்கிறது என்ன தப்பா? நீ என்ன வேணா நினைச்சுட்டு போ உன் கூடத்தான் நான் வருவேன்” என்றான். “நான் வரல நீங்க போங்க எனக்கு உங்க கூட வரதுக்கு பயமா இருக்கு” என்றாள் மாதவி.
“ஓஹோ பயமா இருக்கா உனக்கு இருட்டுனா தானே பயம் நான் இருக்கும் போது என்ன பயம் வேண்டி கிடக்கு” என்றான் போதி. “அதெல்லாம் முன்ன தான் எனக்கு பயமா இருந்துச்சு… இப்போ எதுவும் கிடையாது நீங்க போங்க நான் வரேன்” என்று அவனை விரட்ட.. “சரி நான் போறேன் சீக்கிரமா வா” என்று சொல்லி வேகமாக படிகளில் ஏறி மறைய… அவன் சென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்ட மாதவி அப்போதுதான் தன்னைச் சுற்றி திரும்பி பார்க்க ஹாலே மிகவும் அமைதியாக இருந்தது. “பேசாமல் அவர் கூடவே போயிருக்கலாம். பெரிய இவளாட்டம் அவரை துரத்தி விட்டுட்டு இப்போ எப்படி பயந்துட்டு இருக்கிறேன் பாரு” என்று தன் தலையிலேயே அடித்துக் கொண்டவள், பயந்த படியே படி ஏறப் போனவள் மேலே பார்க்க… அங்கே கையை கட்டிக்கொண்டு போதி நின்று இருந்தான்.
அவளைப் பார்த்தவாறு சிரித்தபடி கீழே இறங்கி வந்தவன் “எனக்கு தெரியும்டி நீ பயப்படுவ” என்று அவன் அவளை அப்படியே தன் கைகளில் ஏந்தியவன் முதலிரவு அறைக்கு தன் காதல் மனைவியை அழைத்துச் சென்றான். தன் அறைக்கு வந்ததும் கதவை காலால் எட்டி உதைக்க கதவு திறந்து கொண்டது. அவளை கைகளில் ஏந்தியப்படியே தன் அறைக்குள் அழைத்து வந்தவன் கீழே இறக்கிவிட்டு திரும்பி கதவடைத்தான்.
கையில் பால் செம்புடன் நின்ற மாதவி அவனையே பார்த்துக் கொண்டு இருக்க.. அவள் அருகில் வந்த போதி மாதவியின் கையில் இருந்த பால் செம்பை வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்தவன் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவள் கண்கள் இரண்டையும் பார்த்து “செல்லக்குட்டி… நீ இன்னைக்கு எவ்வளவு அழகாய் இருக்க தெரியுமாடி” என்றான். மாதவி எதுவும் பேசாமல் போதியின் கண்களையே பார்த்துக் கொண்டு இருக்க… “இந்த நாளுக்காக நான் எத்தனை நாள் காத்திருந்தேன் தெரியுமா” என்று சொல்லி போதி சிரிக்க… அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்த மாதவி வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள்.
“இன்னமும் இப்படி வெட்கப்பட்டுட்டு இருந்தா எப்படி பொண்டாட்டி நிமிர்ந்து என்னை பாரு” என்றான் போதி. தலையை குனிந்த வாரே “ம்ஹும்… மாட்டேன் எனக்கு வெட்கமா இருக்கு” என்று மாதவி சொல்ல… அவள் முகத்தை பிடித்து வலுக்கட்டாயமாக தன்னை பார்க்கும்படி நிமிர்த்தியவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்து அவனை பார்க்க முடியாமல் கண்கள் மூடி இருந்த மாதவியை பார்த்து “ரொம்ப வெட்கப்படாதடி நீ வெட்கப்படுறத பாக்குறப்போ எனக்கு உள்ளுக்குள்ள என்னென்னவோ செய்யுது” என்று சொல்லி அவள் மூடி இருந்த இமைகளில் முத்தம் வைத்தான்.
போதி முத்தம் வைத்ததும் மலரும் பூவை போல அவள் கண்களை விரித்து போதியை பார்த்தவள், போதியின் பார்வையை தாங்க முடியாமல் சட்டென திரும்பி நின்று கொண்டாள். அவள் தன்னை பார்க்க வெட்கப்படுவதை ரசித்தவரே பின்னால் இருந்து மாதவியை அணைத்துக் கொண்டவன் அவள் கூந்தலை விளக்கி அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டான். அவன் மீசை முடியின் குறுகுறுப்பும் போதியின் ஈர இதழ் முத்தமும் மாதவியை கூசச் செய்ய தன்னை கட்டிக்கொண்டிருந்த அவன் கையை விளக்கி விட்டு அவனை விட்டு தள்ளி சென்று நின்றாள்.
“இப்படி விலகி விலகி ஓடினா எப்படி நாம ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடுவது” என்றான் போதி ஏக்கமாக. அவன் சொல்வதைக் கேட்டு உள்ளுக்குள் சிரித்தாலும் வெட்கப்பட்டபடியே அவனைப் பார்க்காமல் அப்படியே நின்று இருக்க, “இப்போ என்ன நீ திரும்பி பாக்கல அப்புறம் நான் உன் கூட பேச மாட்டேன்” என்று போதி கோபமாக கூற… அவன் குரலில் இருந்த கோபத்தை உணர்ந்தவள் சட்டென திரும்பி போதியை பார்த்தாள்.
தன் காதல் மனைவியை அப்போதுதான் முழுவதுமாக பார்த்தான் போதி. செய்து வைத்த சிற்பம் போல வளைவு நெளிவுகளுடன் அம்சமாக அவன் முன்னாள் நின்று இருந்தாள். பச்சை நிற பட்டுடுத்தி… அதற்கு மேட்ச் ஆக ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் அணிந்து இருந்தாள். அது அவள் கைகள் இரண்டையும் மிகவும் கவர்ச்சியாக காட்டியது. லேசாக வெட்கப்பட்டுக் கொண்டே மாதவி அவனை பார்த்துக் கொண்டு இருக்க அவள் முகம் முழுவதும் வெட்கத்தில் சிவந்து இருந்தது. அவள் கன்னங்கள் இரண்டும் மூக்கின் நுனியும் சிவந்து இருக்க… அது அவளை மேலும் அழகாக காட்டியது. அவன் பாட்டி கொடுத்த நகைகளை எல்லாம் போட்டு தங்கச்சிலை போல ஜொலித்தாள் மாதவி.
அவளை பார்த்தவாறு நின்றிருந்த போதி மாதவியை அழைக்க… வெட்கத்தில் தலை குனிந்து இருந்தவள் மெதுவாக நிமிர்ந்து போதியை பார்த்தாள். அவள் தன்னைப் பார்த்ததும் தன் கைகள் இரண்டையும் அகல விரித்து அவளை அழைக்க… போதி ஆசையாக மாதவியை அழைத்ததும் ஓடி சென்று அவனை கட்டிக் கொண்டாள் மாதவி. அவள் ஓடிச் சென்று அவனை கட்டிக் கொண்டதும், “இவ்வளவு ஆசையை வச்சிக்கிட்டு அப்புறம் ஏண்டி வெட்கப்படற” என்று அவளை கட்டிக் கொண்டான் போதி.
அவள் எதுவும் பேசாமல் போதியை இருக்க கட்டிக்கொள்ள… அவள் முகத்தை பார்க்க தன்னிடம் இருந்து மாதவியை பிரிப்பதற்கு அவள் தோளை பிடித்து பின்னால் நகர்த்த… ஆனால் மாதவியும் அவனிடமிருந்து பிரிந்து செல்லாமல் அவனை மேலும் இறுக்கமாக கட்டிக் கொண்டாள். இரண்டு மூன்று முறை அவளை தன்னிடமிருந்து விலக்கப் பார்த்தும் அவள் விலகாமல் இருக்க அணைத்ததும், “நான் விடியுற வரைக்கும் இப்படியே கட்டிக்கிட்டு இருக்க போறியா பொண்டாட்டி?” என்றான் போதி.
அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே வெறும் தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டி ‘ஆமாம்’ என்றாள். “ஆனா எனக்கு கட்டிப்பிடிக்கிறது மட்டும் போதாதே வேற எல்லாம் வேண்டுமே” என்றான். அதற்கு இல்லை என்பது போல தலையை மறுப்பாக இடவலமாக மாதவி ஆட்ட… “என்னது முடியாதா?” என்றவன் தன்னை கட்டிக்கொண்டு இருந்தவளை வலுக்கட்டாயமாக தன்னிடம் இருந்து பிரித்தவன் அவளை தூக்கிக்கொண்டு போய் மெத்தையில் கிடத்தி அவள் மேல் விழுந்தான்.
மெத்தையில் அவள் மேல் படுத்தவன் அவள் முகத்தை பார்க்க… அவனை பார்க்க முடியாமல் மாதவி தன் முகத்தை மூடிக்கொண்டாள். அவள் மூடிய கைகளில் முத்தமிட்டவன், “ஏய் பொண்டாட்டி, ரொம்ப வெட்கப்படாதடி நீ இப்படி வெட்கப்பட்டுட்டு இருந்தா நான் என்ன பண்ணுவேன்” என்றான் போதி. “நீங்க எதுவும் பண்ண வேண்டாம்” என்றாள் முகத்தை மூடிய படியே. “என்னடி செல்லக்குட்டி நீ வந்ததுல இருந்து வேண்டாம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்க அப்புறம் எதுக்கு ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு வந்த? போ…” என்று கோபமானவன் அவள் மேல் இருந்து இறங்கி தள்ளி படுத்து கொண்டான் போதி.
மறுநாள் காலை, விடியற்காலையில் ஆதி மற்றும் துர்கா ஆகியோர் இந்த புது தம்பதியினரை பார்க்க வந்தனர்.
