Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 242

உன் ரகசிய ரசிகை நான் 242

by Layas Tamil Novel
116 views

EPI 242

வெங்கடாச்சலம், விஷாலாக்ஷி தம்பதியதற்கு அறுபதாம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டு இருந்தது.

கதிர் கீர்த்தி இருவருமே துர்கா ஆதி டென்மார்க்கில் இருந்து திரும்பி வருவதற்குள் அவர்களுக்கு எந்த வேலையையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் தாங்களே பார்த்துவிட வேண்டும் என முழுமூச்சாக அவர்களின் அற்புதம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளின் மூழ்கி இருந்தனர்.

இந்த நேரத்தில் வெங்கடாசலத்தின் முதல் மனைவியான மரகதமும், அவர் மகள் அபியும் சங்கவியுடன் பேசியது போல.. அபி தான் வெங்கடாஜலத்தின் மூத்த தாரத்தின் மகள் என வெங்கடாசலத்தின் நெருங்கிய சொந்தங்களை தாண்டி மற்ற அனைவருக்கும் தெரிய வேண்டும் என முடிவெடுத்தனர்.

அதற்கான வேலைகளிலும் இருவரும் தீவிரமாக ஈடுபட்டு இருக்க அதையெல்லாம் பார்த்தபடி சங்கவி தான் நினைத்தது நடக்கப்போகிறது என சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.

ஹேமா துரையுடன் விஷாலாக்ஷியின் சொந்தங்களுக்கு பத்திரிக்கை வைக்க சென்றிருக்க… செண்பகம் மட்டும் சிவகாமியோடு வீட்டிலிருந்தார்.

சங்கவி, அபி இருவரும் வெளியில் ஷாப்பிங் செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்க மரகதம் அவருக்காக ஒதுக்கப்பட்டு இருந்த அறையில் இருந்தவர் விஷாலாக்ஷி, செண்பகமும் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் பார்க்க தன் அருகில் இருந்து வெளியே வந்தார்.

கிச்சனில் இருவரும் சிரித்து பேசியபடி சமைத்துக் கொண்டு இருந்தனர். வேலையாட்கள் எல்லாம் அவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க அதையெல்லாம் பார்த்த மரகதம் “நான் இருக்க வேண்டிய இடத்துல இந்த கேடுகெட்ட விஷாலாக்ஷி இருக்கா. இவ மட்டும் கொஞ்சம் ஒத்துழைச்சிருந்தா இந்த நேரம் நான் தான் இந்த வீட்டுக்கு மகாராணி ஆகி இருப்பேன்” என விசாலக்ஷி கரித்துக் கொட்டிக் கொண்டே வந்தவர்.

ஹாலில் இருந்த சோபாவில் நடுநாயமாக அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி கிச்சனை பார்த்து “ஏய் அங்க என்ன சத்தம் இல்லாம உங்களால் வேலை பார்க்க முடியாதா?” என ஹாலில் இருந்தவாறே கத்தினார் மரகதம்.

அவர் குரல் கேட்டதும் கிச்சனில் சிரித்து பேசிக் கொண்டிருந்த விஷலாக்ஷியும், செண்பகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள செண்பகத்திடம் “வந்துட்டா என்ன நீ இவ கொஞ்ச நாள் தான் நம்ம வீட்ல இருக்கிறதா சொன்னா ஆனா வரவர இவ அதிகாரம் தூள் பறக்குது என்னால இவ நடந்துக்ரதையும் பேசுகிறதையும் பார்த்துட்டு சும்மாவே இருக்க முடியல” என கோபமாக கேட்டார்.

“விடு செண்பகம் அவள பத்தி தான் நமக்கு நல்லாவே தெரியுமே. இன்னும் கொஞ்ச நாள் தானே அதுக்கப்புறம் அவ இங்க இருந்து கிளம்பி போய்ட போற நீ அதை நினைத்து ஏன் வீணா டென்ஷன் ஆகிற” என்ற விஷலாக்ஷி சமையலில் தன் கவனத்தை செலுத்தினார்.

வெங்கடாச்சலம் ஆதியின் ஆபீசில் சென்று அங்கு வேலைகள் எல்லாம் சரியாக நடக்கிறதா என பார்த்துவிட்டு கதிருக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்தவர் வீட்டிற்கு வந்தார்.

ஹாலில் நுழையும் போதே சோபாவில் அமர்ந்திருந்த மரகதத்தை வெங்கடாசலம் பார்த்துவிட்டார். அவரை கண்டும் காணாதவர் போல மரகதத்தை தாண்டி தன்னறைக்குச் செல்ல போக.

வெங்கடாச்சலம் உள்ளே வருவதை பார்த்த மரகதம் வேகமாக சோபாவில் இருந்து எழுந்து வெங்கடாஜலத்தின் முன்பு போய் வழியை மறைத்து நின்றவர் “என்ன நான் இங்க ஒருத்தி குத்துக்கல்லாட்டும் என்ன பார்த்தும் பார்க்காத மாதிரி போறீங்க…” என்றார்.

“உன்னை பார்த்து நான் என்ன பண்ண போறேன். நீ தான் வெட்டியா உட்கார்ந்துட்டு இருக்கேன்னா எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சுட்டியா? முதல்ல வழியை விடு” என்று அவரை தாண்டி வெங்கடாச்சலம் உள்ளே செல்ல போக…

மீண்டும் ஓடிவந்து அவர் குறுக்கே நின்று கொண்ட மரகதம் “இங்க பாருங்க நான் செய்தது தப்புதான் அதுக்காக அதையே இன்னும் நெனச்சிட்டு இத்தனை வருஷம் ஆகியும் என்கிட்ட முகம் கொடுத்து பேசாம இருந்தா என்ன அர்த்தம்” என்றார் மரகதம்.

“நீ செய்துட்டு போனது என்ன சாதாரண காரியமா? மறந்துட்டு உன்கிட்ட சகஜமா பேசுறதுக்கு. என்னை வேண்டாம்னு ஒதுக்கிட்டு போனவ தானே நீ. அதுதான் உனக்கும் எனக்கும் ஒட்டும் இல்ல உறவு இல்லைன்னு சொல்லி உனக்கு சேர வேண்டிய சொத்தில் இருந்து பிரிச்சு எல்லாத்தையும் வாங்கிட்டு போயிட்ட… இப்ப மறுபடியும் நீ இந்த வீட்டுக்கு வந்து இருக்கேன்னா சும்மாவா வந்திருப்ப ஏதோ பெரிய பிளானோட தான் வந்திருக்க… அது என்னனு நான் சீக்கிரமே கண்டுபிடிக்குறேன்” என்றார் வெங்கடாச்சலம்.

“ஐயோ என்ன இவரு நான் ஏதோ பிளான் ஓட தான் இந்த வீட்டுக்குள்ள வந்து இருக்கேன்னு சரியா சொல்றாரு நான் எதுக்காக வந்தேன்னு ஒரு வேளை கண்டுபிடித்து இருப்பாரோ?” என யோசனையோடு மரகதம் அவரைப் பார்க்க

அவரை முறைத்து விட்டு வெங்கடாசலம் கிச்சனிலிருந்து விஷலாட்சியிடம், “விசாலாட்சி எனக்கு ஒரு காபி கொண்டு வா” என்று விட்டு தன் ரூமிற்கு சென்றார்.

வெங்கடாச்சலம் சொன்னது மரகதம் மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டு இருந்தது வெங்கடாசலம் தங்கள் பிளானைக் கண்டுபிடிப்பதற்குள் தங்கள் பிளானை செயல்படுத்த வேண்டும் என நினைத்தவர் இந்த விஷயத்தை அபியிடம் சொல்ல வேண்டும் என்று போன் பேசுவதற்காக வேகமாக அவர் இருந்த அறைக்குள் நுழைந்தார் மரகதம்.

❤️

கதிர் நள்ளிரவு போல வீட்டிற்கு வந்திருக்கையில் அவனுக்கு தெரியாமல் அவனுடைய லேப்டாப்பை எடுத்து அதில் இருந்த தகவல்களை சங்கவி தன்னுடைய ஹார்ட் டிரைவில் ஒன்று விடாமல் காப்பி செய்து கொண்டாள். ஏற்கனவே அவனுக்கு தெரியாமல் அவனுடைய லேப்டாப்பில் பாஸ்வோர்டையும் தெரிந்து வைத்திருக்க அவளுடைய வேலை சுலபமாக முடிந்திருந்தது.

இது தெரியாத கதிர் மறுநாள் ஒரு முக்கியமான டெண்டர்காக விக்கியை அழைத்துக்கொண்டு டெண்டர் நடந்த இடத்திற்கு சென்றான்.

ஏற்கனவே அவர்கள் அந்த டென்டருக்காக கோட் செய்து இருக்க இந்த முறை இந்த டெண்டர் கண்டிப்பாக தங்களுக்கு தான் கிடைக்கும் என 100% உறுதியோடு கதிரும் விக்கியும் சென்று இருந்தனர்.

இவர்களைப் போலவே டெண்டர் கோட் செய்திருந்த அனைவரும் அங்கே வந்திருக்க ஏலம் படிப்பவர் டெண்டருக்கான தொகையை பற்றி படிக்க ஆரம்பித்தார்.

“நம்ம அரசாங்கத்துக்காக நடத்தப்பட்ட இந்த டென்டர்ல நம்ம ஊர் சார்பா இங்கே உற்பத்தி ஆகுற ஆடைகளை வெளிநாட்டிற்கு மிகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து எக்ஸ்போர்ட் செய்ய யார் மிகவும் குறைவாக டெண்டர் கோட் செய்து இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் இந்த டெண்டர் ஒப்படைக்கப்படும்” என்று அறிவித்தவர்.

“இந்த டெண்டலுக்கான தொகையை அரசாங்கம் நாலு கோடியே 28 லட்சமாக நிர்ணயித்திருக்க… அதை விடவும் மிகவும் குறைவாக இந்த ஏலத்துக்காக கோட் செய்திருந்த கம்பெனி AB என்டர்பிரைசஸ்” என சொன்னவர் “அதனுடைய நிறுவனர் இந்த ஏலத்தை நாலு கோடியே 9 லட்சத்தி, 90 ஆயிரத்தி, 999 ரூபாய்க்கு ஏலத்தில் கோட் செய்து இருக்கிறார்” என்றார்.

அவர் சொன்னதை கேட்ட கதிரும் விக்கியும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஏனென்றால் அவர்கள் இந்த ஏலத்திற்காக கோட் செய்து இருந்த தொகை AB என்டர்பிரைசஸ் கோட் செய்திருந்த தொகையை விட வெறும் ஒரு ரூபாய் அதிகம்.

தங்களை விட சரியாக எப்படி ஒரு ரூபாய் குறைத்து போட்டு இந்த டெண்டரை அவர்கள் எடுத்திருப்பார்கள்? யார் அந்த AB என்டர்பிரைசர்சின் நிறுவனர் என இருவரும் அந்த நிறுவனத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்க.

அப்போது அந்த ஏலத்திற்கான பணத்தை கட்டுவதற்காக அங்கே வந்த அந்த நிறுவனரையும், அவரோடு வந்தவரையும் பார்த்து இருவரும் அதிர்ச்சியாகினர்.

அந்தத் தொகையை கட்ட அங்கே வந்திருந்தது அபியும் அவளுடன் சேர்ந்து சங்கவியும்தான்.

அவர்கள் இருவரையும் கதிர், விக்கி இருவருமே இங்கு எதிர்பார்க்கவில்லை. அப்போ ஏபி என்டர்பிரைசஸ் நிறுவனர் அபியா? என இருவரும் ஆச்சரியமாக அவளை பார்க்க.. தாங்கள் முன்பணமாக முதலில் பத்து லட்சத்தை கட்டுவதாகவும், பேலன்ஸ் தொகையை டென்டருக்கான கடைசி தேதி முடிவதற்குள் கட்டி விடுவதாகவும் கூறிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

கதிருக்கு சங்கவியின் மீதுதான் ஆத்திரமாக வந்தது. ஏனென்றால் அபிக்கு இதைப் பற்றி எல்லாம் எதுவுமே தெரியாது. இத்தனை வருடத்தில் அவள் ஒருமுறை கூட தங்கள் குடும்பத்திலோ அல்லது தங்கள் தொழிலிலோ குறுக்கே வந்ததே இல்லை.

ஆனால் இப்போது முதல் முறையாக தாங்கள் ஏலம் எடுக்க இருந்த டென்டரை அபி தன் பெயரிலேயே தங்களுக்கு எதிராக கோட் செய்து வாங்கி இருக்கிறாள் என்றால் அவளுக்கு இந்த ஐடியாவை கண்டிப்பாக சங்கவி தான் கொடுத்திருக்க வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் தங்களுக்கு தெரியாமலே இந்த தொகையை பற்றிய விபரத்தை சங்கவி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என கதிருக்கு புரிந்து விட்டது.

“இவள…” என்று சங்கவியை முறைத்தவன் “இவள நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு நம்மளுக்கு எப்படி எல்லாம் குடைச்சல் கொடுக்கிற பாருடா விக்கி. இவள சும்மா விடக்கூடாது” என்று சொல்லி கதிர் அபி, சங்கவி இருவரை நோக்கி அவர்களிடம் பேசப்போக.

உடனே விக்கி கதிரை தடுத்து “அவசரப்படாத கதிர் இப்போ நீ போய் அவகிட்ட சண்டை போட்டாலும் எதுவும் ஆகப் போறதில்லை. இன்னும் அவங்க இந்த பணத்தை முழுசா கட்டி முடிக்கல. அவ்ளோ பெரிய தொகையை அலைஞ்சு தனியா கட்ட முடியாது. அதனால இன்னும் ரெண்டு நாள் கொஞ்சம் பொறுமையா இரு அப்படி அவங்க அந்த பணத்தை கட்டலைனா ஆட்டோமேட்டிக்கா நமக்கு இந்த டெண்டர் வந்து சேர்ந்திடும்” என்றான் விக்கி.

விக்கி சொல்வதிலும் லாஜிக் இருப்பதை உணர்ந்த கதிர் சற்று கோபம் தணிந்தவனாக “சரி வா விக்கி முதல்ல இந்த விஷயத்தை ஆதிகிட்ட சொல்லணும். அப்போதுதான் நமக்கு ஏதாவது வழி கிடைக்கும்” என்று விட்டு அங்கிருந்து நேராக தங்கள் ஆபீஸிற்கு இருவரும் கிளம்பினர்.

❤️

சங்கவியும், அபியும் தங்களின் தொழிலுக்கு எதிரியாக உருவாக்கிக் கொண்டிருப்பது தெரியாமல் ஆதி, துர்காவுடன் டென்மார்க்கின் வீதிகளில் சுற்றிக் கொண்டு இருந்தான்.

ரியாவிடம் தன் கார்டை கொடுத்து அவளுக்கு வேண்டியதை, விரும்பியதை எல்லாம் வாங்கிக்கொள்ள சொல்லிவிட்டு அவளையும், ஸ்ரீயையும் வெளியே அனுப்பி வைத்த கையோடு துர்கா ஆதியுடன் வெளியே கிளம்பினாள்.

ஆதியின் வீட்டில் போதியும், மாதவியும் இருக்க… இவர்கள் இருவரும் தனியாக இருக்க விரும்பி தங்கள் கார்ட்ஸ்களை கூட தங்களோடு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு டென்மார்க் வீதிகளில் ஆதி துர்காவுடன் கை கோர்த்து நகரின் முக்கிய இடங்களைச் சுற்றி பார்க்க சென்று இருந்தனர்.

ஒரு பெரிய பேலசின் முன்பு நின்று இருவரும் ஆதியின் போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது ஆதியின் போனிற்கு விடாமல் வாட்ஸாப்பில் செய்தி வந்துகொண்டே இருக்க… அவர்களால் செல்ஃபி எடுக்க முடியவில்லை.

“ச்சே… என் பொண்டாட்டி கூட ஒரு போட்டோ எடுக்க முடியுதா? இப்படி மெசேஜ் வந்துட்டே இருந்தா என்ன செய்றது” என்று சலித்துக் கொண்டவன், தனக்கு யார் மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள் என்று பார்க்க.. அது ஒரு புது நம்பரில் இருந்து அவனுக்கு மெசேஜ் வந்திருந்தது.

அந்த மெசேஜை திறந்து பார்த்த ஆதி புருவங்கள் முடிச்சிட… அதில் வந்திருந்த தகவல்களையும், கூடவே அதனோடு அட்டாச் செய்து இருந்த புகைப்படத்தையும் ஓபன் செய்து பார்த்தான்.

ஆதியின் முக மாற்றத்தை கண்ட துர்கா, “என்ன ஆச்சு ஆதி? ஏன் உன் முகம் ஏதோ போல இருக்கு.. அப்படி என்ன மெசேஜ் வந்து இருக்கும் உனக்கு?” என்று அவனை கேட்க…

அதே புருவ முடிச்சோடு ஆதி தன் கையில் இருந்த மொபைலை துர்காவிடம் நீட்ட… அதை வாங்கி பார்த்த துர்கா, அவன் காட்டிய புகைப்படமும், குறுஞ்செய்தியும் அவளை திடுக்கிடச் செய்தது.

“ஆதி… இது… இது… அப்பாவையும், அம்மாவையும் யார் இப்படி பிடிச்சு வெச்சு இருக்காங்க? அவங்களுக்கு என்ன ஆச்சு ஆதி? யாரோ அப்பா, அம்மாவை கட்டி போட்டிருக்காங்க…” என்று அந்த போட்டோவில் துறை, கனகா இருவரையும் யாரோ ஒரு இருட்டு அறையில் கட்டி வைத்து இருக்க அதை தான் புகைப்படமாக எடுத்து ஒரு புதிய நம்பரில் இருந்து ஆதியின் வாட்ஸாப்பிற்கு அனுப்பி வைத்து இருந்தனர்.

இப்படி ஒரு செயலை அதுவும், தாங்கள் இருவரும் ஊரில் இல்லாத நேரத்தில் இப்படி செய்து இருக்கிறார்களே என்று அதிர்ச்சியில் இருவரும் தங்களுக்கு வந்திருந்த புகைப்படத்தையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

துர்கா மிகவும் பதட்டமாக “ஆதி இப்போ என்ன செய்றது? அம்மா, அப்பாவை எப்படி காப்பாத்துறது? எனக்கு பயமா இருக்கு ஆதி, ப்ளீஸ் ஏதாவது பண்ணு ஆதி” என்று அவனைப் பிடித்து உலுக்கினாள் துர்கா.

அதில் அதிர்ச்சியில் இருந்து மீண்ட ஆதி, “லக்ஷு… ஒரு நிமிஷம் இரு நான் முதல்ல கதிருக்கு போன் பண்ணி அங்கே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம். நீ அவசர படாதே” என்று அவளுக்கு தைரியம் சொன்னவன் தன் மொபைலில் கதிரின் எண்ணிற்கு கால் செய்ய போக… அப்போது அவன் போனிற்கு வந்த அழைப்பை கண்டு ஆதியும், துர்காவும் அதிர்ந்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured