EPI 244
சங்கவி, அபி செய்த கலேபுரத்தில் கதிர், விக்கியும் ஆபீசில் மிகவும் சோகமாக அமர்ந்திருக்க… அப்போது பவன், மது இருவரும் அவசர அவசரமாக அவர்கள் கேபினுக்குள் நுழைந்தனர்.
கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்த விக்கி அவர்கள் இருவரையும் பார்த்தான்.. மது விக்கியின் முன்பு வந்து “விக்கி நம்ம அக்கவுண்ட்ல இருந்து 4 கோடியே 99 லட்சத்தி 99 ஆயிரத்து 999 ரூபாய் டெபிட் ஆகி இருக்கு” என்றாள்.
அவள் சொன்ன தொகையைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியாகி கதிர், விக்கி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, விக்கி கதிரிடம் “ஏன்டா இப்போ மது சொன்ன எக்ஸாக்ட் அமௌன்ட் நம்ம இதுக்கு முன்னாடி எங்கேயோ கேட்டிருக்க மாதிரியே இருக்கு இல்ல” என்றான்.
“எங்கேயோ கேட்ட… இன்னைக்கு காலையில நம்ம கோட் பண்ண டெண்டர் அமௌன்ட்ட விட வெறும் ஒரே ஒரு ரூபாய் கம்மியா டெண்டர் கோட் பண்ணி நமக்கு வரவேண்டிய பெரிய ப்ராஜெக்ட் கிடைக்க விடாம செஞ்சாங்களே அபியும் சங்கவியும், அதனோட அமௌன்ட் தான் இது” என்றான் கதிர்.
“ஆமா இல்ல” என விக்கி அவனைப் பார்க்க, “ஆமா தான் இல்ல கிடையாது” என்றவன் மதுவிடம் திரும்பி “நீ சொன்ன எக்சாக்ட் அமௌன்ட் எப்போ நம்ம அக்கவுண்ட்ல இருந்து டெபிட் ஆச்சு, யார் அந்த பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணினாங்க” என்றான் கதிர்.
“சார் ஒரு ஒன் ஹவருக்கு முன்னாடி அந்த அமௌன்ட் ட்ரான்ஸ்பர் ஆகி இருக்கு. அதுவும் ஆதி சார் தான் அந்த அமௌண்ட்ட ட்ரான்ஸ்பர் பண்ணி இருக்காரு. அவர் அனுப்புன அந்த அக்கவுண்ட் ஹோல்டர் ஓட நேம் அபிநயா” என்றாள்.
இதைக்கேட்ட அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியானது. “டேய் ஆதி என்னடா நினைச்சிட்டு இருக்கான்? இவ்வளவு பெரிய தொகையை தூக்கி அந்த அபிக்கு கொடுத்திருக்கான். அவ ஏற்கனவே நமக்கு வரவேண்டிய ப்ராஜெக்ட் கிடைக்காமல் செஞ்சிருக்கா. இப்போ அவ அந்த ப்ராஜெக்ட்டுக்கு கட்ட வேண்டிய பணத்தை இவன் எதுக்காக அவளுக்கு அனுப்பி இருக்கான்? எனக்கு எதுவுமே புரியலை” என்றான் விக்கி.
“விக்கி அவசரப்படாதே பொறு, அண்ணாகிட்ட இத பத்தி நம்ம பேசலாம். காரணம் இல்லாம இவ்வளவு பெரிய தொகையை அவ அக்கவுண்ட்ல கண்டிப்பா டிரான்ஸ்பர் பண்ணி இருக்க மாட்டாரு” என கதிர் ஆதியின் மேல் நம்பிக்கையாக விக்கியிடம் கூறினான்.
“நீ சொல்றது வாஸ்தவம் தான் ஆனா போயும் போயும் உங்க குடும்பத்துக்குள்ள வந்து பிரச்சனை செய்ய நினைக்கிறவளுக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுக்கணுமா? அதை நினைச்சா தான் எனக்கு ஆத்திரமா வருது” என்றான் விக்கி.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே கதிரின் மொபைலுக்கு ஆதி கால் செய்திருந்தான். தன் பாக்கெட்டில் இருந்து மொபைலை வெளியே எடுத்த கதிர் ஆதியின் பெயர் வந்ததும் அதை விக்கியிடம் காட்டிவிட்டு போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டவன் “சொல்லு அண்ணா” என்றான்.
“நான் அபிக்கு அமௌன்ட் ட்ரான்ஸ்ஃபர் பண்ண விஷயம் இந்த நேரம் உனக்கு நியூஸ் வந்திருக்குன்னு நினைக்கிறேன்” என்றான் ஆதி.
“ஆமாண்ணா இப்பதான் மது வந்து அமௌன்ட் ட்ரான்ஸ்பர் ஆன விஷயத்தை என்கிட்ட சொன்னாங்க. அத பத்தி தான் நாங்க பேசிட்டு இருந்தோம். நீங்க காரணம் இல்லாம எதுவும் செய்ய மாட்டீங்கன்னு தெரியும். இருந்தாலும் விக்கிக்கு அவ்ளோ பெரிய அமௌன்ட் நீங்க அபிக்கு கொடுத்ததுல கொஞ்சம் கூட விருப்பமில்லை, ஏன் இப்படி செஞ்சீங்கன்னு உங்க மேல அவன் தான் ரொம்ப கோபமா இருக்கான்” என்றான்.
கதிர் சொல்லதை கேட்டு சிரித்த ஆதி, “அவனோட கோபம் வாஸ்தவம்தானே… நம்ம எவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொரு ஆர்டரையும் ஒவ்வொரு டெண்டரையும் எடுக்கிறோம், இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறோம். ஆனால் இப்படி நம்மளோட பணம் தேவையில்லாத ஒருத்தவங்க கைல போகுதுன்னு அவன் ஆதங்கப்படுறதுல எந்த தப்பும் இல்லையே” என்றான் ஆதி.
“இவ்வளவு பக்கமே வாய் கிழியப் பேசுறியேடா அப்புறம் எதுக்காக அவளுக்கு அத்தனை பணத்தை தூக்கி கொடுத்த? உன்கிட்ட நிறைய இருக்குன்னு சொல்லி இருந்தா அந்த பணத்தை நான் பேசாம நானே எடுத்து வச்சிருப்பேனே” என்றான் விக்கி கோபமாக.
“டேய் விக்கி தேவையில்லாம கோபப்படாத அவ கேட்டதும் சும்மா தூக்கி கொடுக்க நான் ஒன்னும் முட்டாள் கிடையாது. அவ கிட்ட நான் ஒரு டீல் பேசி தான் அந்த பணத்தை அனுப்பி இருக்கேன் சோ நீ கவலைப்படாதே” என்றான் ஆதி.
“என்ன அவகிட்ட டீல் பேசியிருக்கியா? அப்படி என்னடா பேசினீங்க?” என்றான் விக்கி. ஆதி அபியிடம் பேசியதை எல்லாம் ஒன்று விடாமல் கதிர், விக்கி இருவரிடமும் எடுத்துக் கூறினான். இதை கேட்ட இருவரும் “அப்போ அந்த அபியும் அவ அம்மாவும் நம்ம வீட்டை விட்டு இந்த நேரம் கிளம்பி போயிருப்பாங்களா அண்ணா?” என்றான் கதிர்.
“போயிருப்பாங்க இல்ல… அவங்க எப்பவோ கிளம்பி போயாச்சு. அவங்க கிளம்பினதும் அம்மா எனக்கு போன் பண்ணி சொன்னாங்க” என்றான் ஆதி. இத்தனையும் இவர்களிடம் சொன்ன ஆதி, துரையையும் கனகாவையும் அபியும் சங்கவியும் கடத்தி வைத்த விஷயத்தைச் சொல்லவில்லை. தெரிந்தால் இவர்கள் இருவரும் இன்னும் அதிகமாக கோபப்படுவார்கள் என்று தான் ஆதி அந்த விஷயத்தைச் சொல்லவில்லை.
“எப்படியோ அந்த குடும்பம் நம்ம வீட்டை விட்டு கிளம்பி போயிடுச்சு. இனியாவது அம்மா கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க. அந்த அபியோட அம்மா நம் அம்மாவை ரொம்ப காயப்படுத்திக் கொண்டே இருந்தாங்க அண்ணா எங்களால எதுவும் பண்ண முடியல” என்று வருத்தப்பட்டான் கதிர்.
“நீ பீல் பண்ணாத கதிர் எல்லாம் சரியாகும். நான் துர்காவும் இப்போ ஏர்போர்ட்ல தான் இருக்கோம் நாளைக்கு காலைல வந்துருவோம். நேர்ல வந்து மத்தத பேசிக்கலாம்” என்றான் ஆதி.
“என்ன என்ன சொல்றீங்க? ஏர்போர்ட்ல இருக்கீங்களா? ஏன் திடீர்னு கிளம்பி வரீங்க? நீங்களும் மத்தவங்களும் ரெண்டு நாள் கழிச்சு தானே இந்தியா வரதா இருந்துச்சு? ஏன் என்ன ஆச்சு இவ்வளவு அவசரமா கிளம்பிட்டீங்க?” என்றான் கதிர்.
“அது ஒன்னும் இல்ல… துர்கா தான் அம்மா அப்பாவோட அறுபதாம் கல்யாணத்தை பக்கத்துல இருந்து எல்லா வேலையும் செஞ்சு பார்த்துக்கணும்னு அடம் பிடிச்சுட்டே இருந்தா. அதனால்தான் நாங்க கிளம்பி வரோம். வேற எதுவும் இல்லை. எங்களோட போதியும் மாதவியும் வரல, ரியா ஸ்ரீ அவங்க இரண்டு பேரையும் போதி மாதிரி வரும்போது கூட கிளம்பி வர சொல்லிட்டு அதுவரைக்கும் அவங்க இங்க இருந்து டென்மார்க்கைச் சுத்தி பார்க்கட்டுமே” என்றான்.
“ஏய் துர்கா நீ ஏன் இப்படி இருக்க? நீங்க ரெண்டு பேரும் ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணனும் தானே டென்மார்க் கிளம்பி போனீங்க? ஏன் இங்க இத்தனை பேர் இருக்கோமே நாங்க இந்த கல்யாண ஏற்பாடுகளையெல்லாம் பார்க்க மாட்டோமா? நீ வந்து பார்த்து தான் எல்லா வேலையும் செய்ய போறியா?” என்று விக்கி துர்காவிடம் கோபித்துக் கொண்டான்.
இவர்கள் பேசியதெல்லாம் இவ்வளவு நேரம் ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த துர்கா, “பரவாயில்லடா அங்க எல்லாரும் வேலை பாத்துட்டு இருக்குறப்போ நான் மட்டும் இங்க தனியா ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்குற மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது அதனால்தான் நான் கிளம்பி வந்துட்டேன். ஏன் இப்ப நான் இங்க வர கூடாதா என்ன? வரவே விட மாட்டேங்கிறீங்களே என்ன விஷயம்? எனக்கு தெரியாம எதுவும் செய்து இருக்கீங்களா?” என்றாள் துர்கா.
“அப்படி எல்லாம் எதுவும் இல்ல. நீ இந்த மாதிரி வெளியே போறது ரொம்ப அபூர்வம். அதனாலதான் நான் போனது போனீங்க இன்னும் ரெண்டு நாள் இருந்து நல்லா என்ஜாய் பண்ணிட்டு வந்திருக்கலாமேன்னு ஒரு ஆதங்கத்தில் கேட்டேன் வேற ஒன்னும் இல்லை” என்றான் விக்கி.
“அதையெல்லாம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லடா. நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல பிளைட் ஏறிடுவோம் காலையில் பார்க்கலாம்” என்ற துர்கா ஃபோனை கட் செய்தாள்.
பிறகு ஆதியிடம் திரும்பி, “ஏன் ஆதி அம்மாவையும் அப்பாவையும் சங்கவியும் அபியும் கடத்தி வச்ச விஷயத்தை இவங்க கிட்ட சொல்லல?” என்றாள் துர்கா.
“அது போன்ல சொல்ற விஷயம் இல்ல துர்கா. ஒருவேளை நம்ம இந்த விஷயத்தை சொல்லி கதிர் கோபத்துல அபி கிட்டயும் சங்கவி கிட்டயும் எதுவும் பிரச்சனை பண்ணிட்டன்னா என்ன செய்யறது? அதனால்தான் நான் சொல்லல. நேர்ல போயி பொறுமையா இந்த விஷயத்தைப் பற்றி அவங்க கிட்ட எடுத்து சொல்லிக்கலாம்” என்றான் ஆதி. இருவரும் பிறகு செக்கிங் செய்து கொண்டு இந்தியாவிற்கு கிளம்பினர்.
❤️
ஸ்ரீ ஊரில் இல்லாதது சந்தோஷ் ராதாவிற்கு மிகவும் சௌகரியமாக போய்விட்டது. இருவர் மட்டுமே வீட்டில் இருக்க காலேஜிற்கு லீவ் போட்டு விட்டு அவளுக்காக சந்தோஷ் ராதா உடனேயே வீட்டில் இருந்தான். இந்த இரண்டு நாட்களும் அவளை உட்கார வைத்து அனைத்து வேலைகளையும் செய்து ராதாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்தான் சந்தோஷ். அதை அவளால் நம்பவே முடியவில்லை. சந்தோஷ் தான் இத்தனை வேலைகளையும் செய்கிறானா என்று ஒரு புறம் ஆச்சரியமாக இருந்தாலும் மற்றொருபுறம் ஜாலியாக அந்த இரண்டு நாள் லீவைக் கழித்தாள்.
மாலை போல அவளுக்காக ஸ்நாக்ஸ் செய்து எடுத்து வந்த சந்தோஷ் பெட்ரூமில் படுத்துக்கொண்டு ஐபேடில் நெட்பிளிக்ஸ் படம் பார்த்துக் கொண்டிருந்த ராதா, சரியாக சந்தோஷ் உள்ளே வரவும் வேகமாக ஐபேடை ஆஃப் செய்து மூடி வைக்க…
“ஏய் இப்ப எதுக்குடி ஐபேடை ஆஃப் பண்ணி மூடி வச்ச? அதுவும் நான் வந்த உடனே? அப்படி என்ன பார்த்துட்டு இருந்த அதுல?” என்று கேட்டவாறு தான் கொண்டு வந்த ஸ்நாக்ஸை அவளிடம் நீட்டினான் சந்தோஷ்.
“அது ஒன்னும் இல்லடா சும்மா படம் பார்த்துட்டு இருந்தேன். என் புருஷன் எனக்காக ஸ்நாக்ஸ் செய்து எடுத்துட்டு வந்தானே, உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு ஐபேடை ஆஃப் பண்ணி வைச்சேன். இப்ப என்ன அதுக்கு?” என்றாள்.
“ஏய் ஏய் குள்ளச்சி பொய் சொல்லாத… நீ ஏதோ கசமுசா படம் தானே அதுல பார்த்துட்டு இருந்த? நான் உள்ள வரும்போது அதுல சவுண்ட் எல்லாம் ஒரு மாதிரி கேட்டுச்சு. கரெக்டா நான் வந்ததும் டக்குனு ஆஃப் பண்ணி வச்சுட்டே. எனக்கு தெரியாதுன்னு நெனச்சிட்டியா?” என்று அவளை பார்த்து குறும்பாக சிரித்தான் சந்தோஷ்.
சந்தோஷ் சொன்னதை கேட்டு ஷாக்கான ராதா, “வெறும் ஒரு சின்ன சத்தத்தை வைத்து நான் அந்த மாதிரி படம் தான் பாத்துட்டு இருந்தேன்னு உனக்கு எப்படி டா தெரியும்?” என கேட்டாள்.
“நான் சாதாரணமாவே எந்த படத்துல இந்த மாதிரி எல்லாம் ஒரு சத்தத்தோட சீன் எடுக்குறாங்கன்னு எனக்குத் தெரியாதா? இப்படி வித்தியாசமா சத்தம் வந்தாலே அது சீன் படம் தான்னு எனக்குத் தெரியாதா என்ன?” என்றான் சந்தோஷ்.
“அப்போ அந்த சத்தத்தை வச்சு நான் அந்த மாதிரி படம் தான் பாக்குறேன்னு நீ கண்டுபிடிச்சிட்டேன்னா இதுக்கு முன்னாடி நீ இந்த மாதிரி படம் எல்லாம் பார்த்து இருக்க அப்படித்தானே?” என்றாள் ராதா.
“பாக்கலைன்னு சொல்ல முடியாது பார்த்தேன்னு சொல்ல முடியாது… சும்மா அப்பப்ப போரடிக்கிறப்ப இந்த மாதிரி படத்துல கொஞ்சம் பார்ப்பேன்” என்று அதான் செய்து கொண்டு வந்த ஸ்நாக்ஸ்சை அவளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டே சொன்னான்.
“ஏண்டா பசங்களுக்கு போரடிச்சா கபடி ஆட, கிரிக்கெட் விளையாடனு கிளம்பி போவாங்கன்னு தான் கேள்விப்பட்டிருக்கேன். உனக்கு மட்டும் போரடிச்சா இந்த மாதிரி படம் பார்க்க தோணுமோ?” என்றாள் அவன் ஊட்டி விட்ட ஸ்நாக்ஸை சாப்பிட்டபடியே.
“ஒவ்வொருத்தரும் போர் அடிச்சா ஒரு மாதிரி விஷயத்தை செய்வாங்க. எனக்கு போர் அடிச்சா நான் இந்த மாதிரி படம் பார்ப்பேன் இதில் என்ன பிரச்சனை டி?” என்றான்.
“அதுவும் சரிதான் ஆனால் நமக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு மாதம் ஆச்சு. இத்தனை மாதத்தில் ஒரு முறை கூட நீ இந்த மாதிரி படம் பார்த்ததை நான் கவனிச்சதே இல்லையே” என்றாள்.
“எனக்குத்தான் இப்போ போர் அடிக்கிறதே இல்லையே. அப்படியே போர் அடிச்சாலும் நான் ஏன் அந்த மாதிரி படம் எல்லாம் இப்போ பாக்க போறேன். அந்த படத்துல பார்த்ததை எல்லாம் செய்து பார்க்கத்தான் நீ இருக்கியே” என்று அவன் கண்ணடித்துக் கூற…
“அடப்பாவி” என அவனை முறைத்தவள் “அப்போ நான் என்கிட்ட நீ நெருங்கி வரும் போதெல்லாம் உனக்கு போரடிக்கிறதுனால தான் வந்திருக்கியா? என்ன பிடிச்சு என் கூட சந்தோஷமா இருக்கணும்னு வரல அப்படித்தானே?” என்றாள் சற்று கோபமாக.
“ஏய் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நீ என்ன இப்படி பேசுற” என்றான் சந்தோஷ்.
“ஆமா கல்யாணத்துக்கு முன்னாடி போர் அடிச்சா அந்த மாதிரி படம் பார்த்தேன்னு சொன்ன. அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் போரடிக்கலையான்னு கேட்டதுக்கு அந்த படம் பாக்குறதுக்கு பதிலா தான் என்கூட ஒன்னா இருக்கேன்னு சொல்ற. அப்படின்னா என்ன அர்த்தம்? உனக்கு போர் அடிச்சா தான் நீ என்கிட்ட வரேன்னு அர்த்தம் அப்படித்தானே?” என்றாள்.
“ஐயோ ராதா அப்படி எல்லாம் கிடையாதுடி நான் சொல்றத நீ தப்பா புரிஞ்சுகிட்ட” என்றான் சந்தோஷ்.
“நான் ரொம்ப சரியா தான் புரிஞ்சுகிட்டேன் போடா இனிமேல் என்கிட்ட வந்த அவ்வளவுதான்” என்று அவள் கோபமாக கட்டில் இருந்து எழுந்து சென்றாள்.
“ஐயையோ இது என்ன நான் சொன்ன விஷயத்தை தப்பா புரிஞ்சுகிட்டு இவ்வளவு கோபமா எந்திரிச்சு போறாளே? இவ போற வேகத்தைப் பார்த்தா என் கூட பேசவே மாட்டா போல இருக்கே! நானே வாய் கொடுத்து ரொம்ப விலைக்கு வாங்கிட்டேனோ” என நினைத்த சந்தோஷ் ராதாவை சமாதானம் செய்ய அவள் பின்னால் சென்றான்.
