Home Uncategorized உன் ரகசிய ரசிகை நான் 256

 உன் ரகசிய ரசிகை நான் 256

by Layas Tamil Novel
59 views

EPI 256

ஆதி, கதிர் இருவரும் அவரவர் கேபினில் பிஸியாக இருக்க.

டென்மார்க் டூர் சென்று விட்டு ஸ்ரீயும், ரியாவும் அப்போதுதான் ஆபீசுக்கு வந்தனர். அவர்கள் இருவரும் வந்ததும் ஆபீஸில் இருந்தவர்கள் எல்லாம் ஸ்ரீயையும், ரியாவையும் சூழ்ந்து கொண்டு அவர்கள் பயணம் குறித்தும் டென்மார்க் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

உங்களிடம் எல்லாம் பேசி சமாளித்துவிட்டு இருவரும் தங்கள் கேபினுக்கு வருவதற்குள் போதும் என்றாகிவிட்டது.

துர்கா, ஆதி சென்று வந்ததை விட ரியாவும், ஸ்ரீயும் டென்மார்க் சென்று விட்டு வந்ததைத் தான் அங்கே பெரிதாகப் பேசினர்.

வந்ததும் ரியா தன் பேக்கை வைத்துவிட்டு நேராக மதுவைப் பார்க்கத்தான் சென்றாள். ஏனென்றால் அவளுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பவனுடன் திருமணம் நடக்கப் போகிறது. தன் தோழியை காண்பதற்காக ஆர்வமாக அவள் செல்ல…

தன் தோழியை காண்பதற்காக மதுவின் கேபின் கதவைத் திறந்து கொண்டு ரியா உள்ளே செல்ல… அங்கே மது கன்னத்தில் கை வைத்து சோகமாக அமர்ந்திருந்தால்.

அதை கவனிக்காத ரியா, மதுவைப் பார்த்ததும் சிரித்தவள், “ஏ மது! நான் வந்துட்டேன்,” என சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள்.

ஆனால் மதுவோ ரியா பேசியதற்கு எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் அதே நிலையில் அமர்ந்திருக்க, அவள் அருகில் வந்த ரியா மதுவின் முகத்திற்கு நேராக தன் கைகளை ஆட்டி, “ஏ மது! என்னடி? நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன பகல் கனவு காண்ற? இன்னும் மூணு நாள்ல உனக்கு கல்யாணம் நடக்க போகுதே. அத நெனச்சு இப்பவே கனவுலகத்திற்கு போயிட்டியா?” என சொல்லி கிண்டல் செய்தவாறே அவள் தோளைப் பிடித்து உலுக்க…

அப்போதுதான் குரல் கேட்டு நிமிர்ந்து தனக்கு எதிரே சிரித்த முகமாக நின்றிருந்த ரியாவைப் பார்த்தவள், “வந்துட்டியா ரியா? எப்படி வந்த? டூர் எல்லாம் எப்படி இருந்துச்சு?” எனக் கேட்டாள்.

“சரியா போச்சு போ! நான் வந்து உன்கிட்ட பேசிட்டு இருக்கேன். அதையெல்லாம் கவனிக்காம நான் எப்ப வந்தேன்னு என்கிட்ட கேக்குறியா? நான் ஆபீஸ் வந்து அரை மணி நேரத்துக்கு மேல் ஆச்சு. வந்ததும் நேரா உன்ன பாக்கலாம்னு தான் இருந்தேன். அதுக்குள்ள நம்ம கூட ஒர்க் பண்றவங்க எல்லாம் என்ன ரவுண்டு கட்டிட்டாங்க,” எனச் சொல்லி சிரித்தவள்.

“ஆமா! நான் உன் கூட பேசிக்கிட்டே உள்ள வந்தேன். ஆனா நான் பேசுனது கூட நீ காதுல வாங்காம அப்படி என்னடி தீவிரமா யோசிச்சிட்டு இருந்த?” எனக் கேட்டாள் ரியா.

“அதை ஏண்டி கேக்குற?” எனச் சலித்துக் கொண்ட மது, ஒருமுறை கதவுக்கு வெளியே யாரேனும் நிற்கிறார்களா எனப் பார்த்துவிட்டு, ரியாவின் தோளைப் பிடித்து சேரில் அமர வைத்துவிட்டு, அவளுக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்தாள். மது, ரியாவிற்கு மிக அருகில் சென்று, “நான் சொல்றத நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது. முக்கியமா பவனுக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது. இந்த விஷயத்தை யாராவது கிட்ட சொன்னாதான் எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்னு நானும் இந்த ஒரு வாரமா என் மனசுக்குள்ளே இந்த விஷயத்தை போட்டு பூட்டி வச்சுட்டு இருக்கேன். ஒரு வழியா நீ வந்துட்ட. என்னோட மனசுக்குள்ள இவ்வளவு நாளா மறைத்து வைத்திருக்கிறதை சொன்னா தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்” என்றால்.

“நீ பேசுவதைப் பார்த்தால் எதுவும் ரொம்ப பெரிய முக்கியமான விஷயம் இருக்கும் போல இருக்கு. அப்படி என்ன முக்கியமான விஷயம்? அதுவும் நான் வரவரைக்கும் யார்கிட்டயும் சொல்லாமல் பவனுக்கு கூட தெரிய கூடாதுன்னு சொல்ற? சீக்கிரம் சொல்லு. எனக்கு சஸ்பென்ஸ் தாங்கல,” என்றாள் ரியா.

“என் பிரச்சனை உனக்கு சஸ்பென்ஸா?” என அவளை முறைத்தவள் மறுபடியும் தன் அறைக்கு வெளியே பார்த்துவிட்டு ரியாவின் காதருகே வந்து மது இவ்வளவு நாள் தன் மனதில் பூட்டி வைத்திருந்த விஷயத்தை ரியாவிடம் கூற.

அதைக் கேட்டதும் ரியா அப்படியே ஷாக் ஆகிவிட்டாள். அதே அதிர்ச்சியோடு மதுவைப் பார்த்து, “ஏ மது! நீ சொல்றதெல்லாம் உண்மையா? என்னடி இது…” என அடுத்து பேச வர, சட்டென அவள் வாயைப் பொத்தியவள் கதவருகே யாரோ வருவதைப் பார்த்தாள். அப்போது தான் மதுவின் ரூம் கதவைத் திறந்து கொண்டு பவன் உள்ளே வந்தான்.

உள்ளே வந்தவன் மது ரியாவின் வாயைப் பொத்தியபடி அமர்ந்திருக்க, அவர்கள் இருவரையும் புரியாமல் பார்த்தவன், “என்ன மது செஞ்சிட்டு இருக்க? ஏன் ரியா வாயை பொத்திட்டு இருக்க?” எனக் கேட்டான்.

“அதுவா? அது வந்து, அவ டென்மார்க் போயிட்டு வந்தாளே. என்னடி ஸ்பெஷல்னு கேட்டேன். அங்க இவ ஸ்ரீ கூட சேர்ந்து என்னென்ன பண்ணினாலோ அதையெல்லாம் வெட்கமில்லாமல் என்கிட்ட சொல்லிட்டு இருக்கா பவன். அதான், சரியா நீ வேற உள்ள வந்தியா? அது எதுவும் நீ கேட்டுட போறியோன்னு அவ வாயைப் பொத்திட்டேன்,” என்றால்.

“என்ன? சொன்னா? அவளும் நம்மள மாதிரியே கல்யாணத்துக்கு முன்னாடியே ம்ம்ம்… ம்ம்ம்…” என சொல்லி சொல்லி சிரிக்க.

அதைக் கேட்டதும் ரியாவிற்கு பவன் மேல் கோபம் வந்தது. தானும் ஸ்ரீயும் எவ்வளவு கட்டுக்கோப்பாக இவ்வளவு நாள் அங்கே இருந்து வந்திருக்கிறோம். இவனைப் போல என்னையும் அவனையும் நினைத்து விட்டானா என கோபம் கொண்டவள் தன் வாயிலிருந்து மதுவின் கையை எடுத்துவிட்டு, “டேய் ராஸ்கல்! யாரைப் பார்த்து என்னடா பேசுற? ஸ்ரீ என்ன உன்ன மாதிரியா? கல்யாணத்துக்கு முன்னாடியே கட்டிக்கப் போற பொண்ணை கர்ப்பமாக்கறதுக்கு? அவன் உன்னை மாதிரி ஒன்னும் கிடையாது” என்றால் கோபமாக.

“எதற்கு கோபப்படுற? நான் சும்மா கிண்டலுக்கு தான் பேசினேன். ஆமா! யாரு கர்ப்பமா…” என வார்த்தையை பாதியில் நிறுத்தியவன் அதிர்ந்து போய் மதுவைப் பார்க்க.

மதுவோ ரியாவைப் பார்த்து கண்களாலேயே, ‘நான் சொல்லப் போற விஷயம் அவனுக்கு தெரியக்கூடாதுன்னு சொன்னேனடி! இப்படி அவன் கிட்டயே போட்டு உடைத்து விட்டாயே?’ என அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தால்.

அதைப் பார்த்ததும் ரியா மதுவிடம் கண்களாலேயே, ‘சாரிடி,’ என கேட்க, அவளை முறைத்துக் கொண்டு எழுந்து அந்த அறையை விட்டு வெளியே செல்லப் போனால் மது.

ரியா வேகமாக ஓடிவந்து மதுவின் கையைப் பிடித்து இழுத்து வந்தவள், “வயித்துல குழந்தையை வச்சுட்டு இவ்வளவு வேகமா எதுக்குடி நடந்து போற? ஒழுங்க வந்து உட்காரு” என அவளை இழுத்துக் கொண்டு வந்து சேரில் அமர வைத்தவள். மதுவின் முன்பு தரையில் மண்டி போட்டு அமர்ந்தவள், “சாரிடி. நான் என்ன எதுவும் இவன் சொல்லியிருந்தா பரவாயில்லை. எப்படி ஸ்ரீயை பத்தி இவன் தப்பா சொல்லலாம்? அதனாலதான் கோவத்துல நீ என்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லியும் நான் உளறி கொட்டிட்டேன்,” என்றாள் ரியா பாவமாக.

இதை கேட்டுக் கொண்டிருந்த பவன், “ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க? எனக்கு ஒண்ணுமே புரியல. யார் கர்ப்பமா இருக்கா? என்ன ஆச்சு? ஏதாவது புரியும்படியா எனக்கு சொல்லுங்களேன்” என்றான்.

“அட முட்டாள் பவன்! இன்னுமா உனக்கு புரியல? கல்யாணத்துக்கு முன்னாடி நீ பண்ணுன கசமுசாவால மது இப்போ பிரக்னன்டா இருக்காடா முட்டாள்!” என்றால் ரியா.

ரியா சொன்னதை கேட்டு நம்ப முடியாமல் அவன் மதுவைப் பார்க்க, எங்கே பவன் தான் திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமாகி விட்டதாய் தெரிந்து இந்த திருமணத்தை நிறுத்தி விடுவானோ அல்லது தன் மீது எதுவும் கோபப்படுவானோ என பயந்தபடி அவனையே பார்த்தாள்.

மிகுந்த அதிர்ச்சியோடு மதுவைப் பார்த்து, “மது… ரியா சொல்றதெல்லாம் உண்மையா? நீ நிஜமாவே பிரக்னன்டா இருக்கியா?” என்றான்.

மது பயந்த விழிகளோடு, ‘ஆமாம்’ என்று மெதுவாக தயங்கியபடி தலையை மேலும் கீழும் ஆட்ட.

“மது! உண்மையா தான் சொல்றியா? நிஜமாவே நீ பிரக்னன்டா இருக்கியா?” என்றான் மீண்டும் நம்ப முடியாமல். அவன் தலையில் வேகமாக அடித்த ரியா, “ஏண்டா! இந்த விஷயத்துல யாராவது பொய் சொல்லுவாங்களா? மறுபடியும் மறுபடியும் அவர்கிட்ட உண்மையா உண்மையான கேட்டுட்டே இருக்க?” என்று ரியா அவனை அதட்ட…

அதை சட்டை செய்யாமல் சேரில் அமர்ந்திருந்த மதுவின் அருகில் சென்றான் பவன். தன்னையே பார்த்துக் கொண்டு வருவதைப் பார்த்த மது தானாக சேரிலிருந்து எழுந்து அவனிடம், “பவன்! அது… அது வந்து… இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இதுக்கு நானும் நான்தான் முக்கிய காரணம். நீ எவ்வளவோ சொன்ன நான் தான் கேட்காமல்” என மது பேச வர, அதற்குள் அவள் கண்களில் கண்ணீர் தேங்கி விட்டது. அதைப் பார்த்ததும் சட்டென அவள் முகத்தைப் பிடித்து அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன், அவள் கண்ணீரைத் துடைத்து, “ஏன் இப்ப எதுக்குடி அழற? என்கிட்ட நீ சந்தோஷமான விஷயம்தான் சொல்லி இருக்க. நான் அப்பா ஆகிட்டேன்!” என்று சொல்லி சந்தோஷமாக பவன் சிரிக்க.

இவன் என்ன மாதிரியான ஆள் என்பது போல ரியா அவனை அதிசயமாகப் பார்க்க, மதுவிற்கோ பவன் தன் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டு தன்னை எதுவும் சொல்வான், தன் மீது கோபித்துக் கொள்வான் என நினைத்திருந்தவள் மாறாக பவன் தான் அப்பா ஆகிவிட்டேன் எனச் சொல்லி சந்தோஷப்படுவதைப் பார்த்ததும் மதுவிற்கு இவ்வளவு நேரம் மனதில் இருந்த பயம் காற்றில் பறந்தது போல உணர்ந்தாள்.

அவளைத் தூக்கிக் கரகரவென சுற்றியவன், “நான் அப்பா ஆகிட்டேன்! நான் அப்பா ஆகிட்டேன்!” எனக் கத்த, உடனே மது அவன் வாயைப் பொத்தியவள், “மெதுவா பேசுடா. நீ பேசறது கேட்டுட போறாங்க. கல்யாணத்துக்கு முன்னாடியே நீ அப்பாவாகிட்டேன்னு சொன்னா உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க, என்னை தான் தப்பா நினைப்பாங்க” என்றால் மது.

“இருக்கட்டும்! எனக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. நான் அப்பா ஆயிட்டேன், அவ்வளவுதான்!” என்றான்.

ரியாவிற்கு அவனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. மதுவிடம் பேசவே பயந்து கொண்டு இருந்தவன் இன்று திருமணத்திற்கு முன்பாகவே அவளை அப்பா ஆக்கிவிட்டேன் என கொஞ்சம் கூட வருத்தமும் இல்லாமல் சந்தோஷமாகப் பேசுவதைப் பார்த்தவள் வேகமாக அவனிடம் வந்து, “முதல்ல அவளை கீழே இறக்கி விடுடா” என்றால்.

“முடியாதுடி! நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்,” என சொல்லி அவளை சுற்றிக் கொண்டே இருக்க, “இப்போ அவளை கீழே இவர் இறக்கி விட போறியா இல்லையா?” என ரியா கத்தினாள்.

‘இவளுக்கு என்னதான் ஆச்சு?’ என அவளை முறைத்துக் கொண்டே மதுவை மெதுவாக கீழே இறக்க, அவள் இறங்கிய அடுத்த நிமிடம் ரியா பலார் என பவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

இதை சற்றும் எதிர்பாராத பவனும் மதுவும் அதிர்ந்து போய் ரியாவைப் பார்க்க.

“என்னடா பாக்குற? பண்றது எல்லாம் பண்ணிட்டு இதுல உனக்கு பெருமை வேறயா?” என்றவள்.

“கல்யாணத்துக்கு அப்புறம் நடக்க வேண்டிய விஷயத்தை எல்லாம் இப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே பண்ணிட்டு வந்து அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிற. உனக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியா இல்லையா? மது மனசளவுல எவ்வளவு காயப்பட்டு இருப்பா, வருத்தப்பட்டு இருப்பான்னு உனக்கு கொஞ்சமாவது தோணி இருக்கணுமா? வேண்டாமா? அதையெல்லாம் விட்டுட்டு என்னமோ பெரிய இவனாட்டம் அப்பாவாகிட்டேன்னு பெருமை பேசிக்கிற. நீ இதையே போய் இப்போ எங்கேயாவது வெளியே சொல்லி பாரு, உன்னை பார்த்து எல்லாரும் அசிங்கமா பேசுவாங்க,” என்றாள் ரியா.

ரியாவின் கோபத்தில் இருந்த நியாயத்தை அவன் உணரத்தான் செய்தான். அவளிடம் வந்தவன், “**இங்கு ரியா! நான் பண்ணினது சரின்னு இப்போ வரைக்கும் நான் சொல்லவே இல்லையே. நான் செஞ்சது மிகப்பெரிய தப்புதான். கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு பொண்ணு கிட்ட அத்துமீறினதும் தப்புதான். அதனால் அவள் அம்மா ஆகியிருக்கிறதும் தப்புதான். இப்போ என்னை என்ன சொல்ற? நடந்தது நடந்துருச்சு. அதுக்காக நான் வருத்தப்பட்டுட்டு இருந்தா நல்லா இருக்குமா? எங்க கல்யாணம் இன்னும் மூணு நாள்ல நடக்கப் போகுது. எனக்கு மனைவியான அப்புறம்தான் மனைவியோட சுக துக்கங்கள்ல, சந்தோஷங்களை பங்கு எடுத்துக்கணும்னு அவசியம் இல்லையே. நான் பண்ணிய காரியத்துக்கு நானும் அவளிடம் வருத்தப்பட்டு இருந்தா அவள் மனசு இன்னும் தானே கஷ்டப்படும்.

அதனால் தான் நான் சந்தோஷமா இருக்கேன். நான் ஒன்னும் ‘எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை’ன்னு பொறுப்பிலிருந்து விலகிப் போகவில்லையே. இதுக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். இதுல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது**” என்றான் அவன்.

“நான் கூட உன்னை என்னமோ ஏதோ நினைச்சேன். நீ இந்த அளவுக்கு யோசிக்கிறது என்னால நம்பவே முடியல பவன்,” என்றவள்.

“சரி. நீ இன்னும் ரெண்டு மூணு நாள் வாயை வச்சுக்கிட்டு யார்கிட்டயும் இந்த விஷயத்தை உடனே கொட்டாம சும்மா இரு. கல்யாணத்துக்குப் பிறகு ஒரு மாசம் கழிச்சு மெதுவா இந்த விஷயத்தை வெளியே சொல்லிக்கலாம்,” என்றால் ரியா.

“சரி ரியா! நீ சொல்றது எனக்கு புரியுது. நான் இதை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்,” என்றான் அவன். அப்போது அவர்கள் அறை கதவைத் தட்டிக் கொண்டு ஸ்ரீ உள்ளே வர, அவனை பார்த்ததும் மூவரும் கப்சிப் என்று ஆகினர்.

அவர்கள் மூவரின் முகமே சரியில்லை என உணர்ந்த ஸ்ரீ, “என்ன? மூணு பேரும் எதையோ விழுங்கின மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க? என்ன ஆச்சு?” என்றான்.

“ம்ஹும்.. ஒன்னும் இல்லையே,” என்ற ரியா, “இப்ப நீ எதுக்கு இங்க வந்த?” என்றாள்.

“அதுவா? அது ஒன்னும் இல்லடி. பவனை ஆதி சார் கூப்பிட்டாரு. அத சொல்லத் தான் வந்தேன்,” என்றான் ஸ்ரீ.

“சரி, நீ போ. பவன் வருவான்,” என ரியா சொல்ல, “அதெல்லாம் முடியாது. நான் அவனை கூட்டிட்டு தான் போவேன்,” என்றவன்.

“ஆமா! நீயே நான் உள்ள வந்ததிலிருந்து என்ன துரத்திக்கிட்டே இருக்க,” என்றான் அவளை முறைத்துக் கொண்டு.

“இப்ப என்ன உனக்கு? என்ன பவனை உன் கூட கூட்டிட்டு போகணும் அவ்வளவு தானே? கூட்டிட்டு போ!” என சொல்லி பவனின் கையைப் பிடித்து இழுத்து ஸ்ரீயிடம் தள்ளி விட்டாள்.

அவள் தள்ளிய வேகத்தில் பவன் ஸ்ரீயின் மேல் மோதி நின்றவன், மதுவைப் பார்த்து, “நான் போயிட்டு சீக்கிரம் வந்துருவேன். அதுவரைக்கும் நீ எங்கேயும் போகாத. எந்த வேலையும் செய்யாமல் இங்கே ரெஸ்ட் எடு. நான் வந்து உன்னை பார்த்துக்கிறேன்” என்றான் சிரித்துக் கொண்டே.

மதுவும் அவனைப் பார்த்து வெட்கப்பட்டபடி ‘சரி’ என்று தலையாட்ட, இவர்கள் இருவரும் கமஜிக் கொள்வதைப் பார்த்து ஸ்ரீக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன ஆச்சு இவனுக்கு? இன்னிக்கும் இல்லாம இன்னிக்கு மது கிட்டே இப்படி வழியுறான்’ என்று யோசித்தான்.

பவன், மது இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ரியாவிற்கு தான் கடுப்பாக இருந்தது. தன் தலையில் தட்டிக் கொண்டவள், “என்னமோ பண்ணுங்க!” என்று விட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured