EPISODE 276
சங்கவி திருமணம் ஆன கையோடு கபிலன் வீட்டிற்குச் சென்றுவிட, அவளோடு செண்பகமும் அங்கேயே தங்கி விட்டார்.
திடீரென இருவருக்கும் திருமணம் நடந்ததால், மற்ற விஷயங்களை எல்லாம் முறையாக ஜோசியரிடம் பேசி கலந்தாலோசித்து, இவர்கள் இருவருக்கும் சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என கபிலனின் அப்பா சங்கரும், அவர் மனைவி சரஸ்வதியும் கூறிவிட்டனர்.
அதனால் சங்கவிக்கும் செண்பகத்திற்கும் ஒரு அறையைக் கொடுத்து அவர்கள் இருவரையும் அங்கே தங்க வைத்துவிட்டு, அவர்களோடு சேர்ந்து சரஸ்வதியும் அவர்கள் இருவரும் இருந்த அறையிலேயே தங்கி கொண்டார்.
திருமணம் முடிந்த மறுநாள் காலையே கபிலனின் பெற்றோரும், அவருடன் செண்பகமும் ஜோசியரை பார்க்க கிளம்பி சென்று விட்டனர்.
கபிலனின் வீட்டிற்கு வந்ததிலிருந்து சங்கவி அவள் அருகில் இருந்து வெளியே வரவே இல்லை. அவளுக்குத் தனக்குத் திருமணம் ஆகிவிட்ட செய்தி இன்னும் நம்ப முடியாமலேயே இருக்க, அவளால் வெளியே வந்து சகஜமாக யாரையும் பார்த்துப் பேச முடியவில்லை.
சரஸ்வதியும் கூட சங்கவியிடம் பேச முயற்சிக்க, சரஸ்வதி எதுவும் கேட்டால் அதற்கு மட்டுமே பதில் கூறிவிட்டு அமைதியாக இருந்துவிட்டாள் சங்கவி.
இப்போது வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக அறையை விட்டு வெளியே வந்த சங்கவி தயங்கியபடியே கிச்சனுக்குச் சென்றாள்.
அவள் வந்ததைப் பார்த்ததும் அவர்கள் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்த வேலையாள் அவரிடம் வந்து, “வாங்கம்மா, எதுவும் சாப்பிடுறீங்களா?” எனக் கேட்டாள் பணிவாக.
“லேசாத் தலை வலிக்கிற மாதிரி இருக்கு. எனக்கு ஒரு கப் காபி வேணும்” என்றால் சங்கவி.
“இங்கே உட்காருங்கம்மா. ரெண்டு நிமிஷம் நான் காபி போட்டு எடுத்துட்டு வந்துட்டேன்” என்று பணிவாக அந்தப் பெண் டைனிங் டேபிளை சங்கவிக்குக் காட்டிவிட்டு கிச்சனுக்குள் விரைந்தார்.
டைனிங் டேபிளில் அமர்ந்தவாறே தான் இருந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தாள் சங்கவி.
அறையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த ஒரு மேஜையைக் கவனித்தாள். அதில் சின்னதும் பெருசுமாகச் சில போட்டோக்கள் ஃபிரேம் செய்து வரிசையாக அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
பார்த்ததும் அது என்ன எனப் பார்க்கும் ஆர்வம் அவளுக்குத் தோன்ற, உடனே அந்த டேபிளின் அருகில் சென்றவள் அங்கே இருந்த ஒரு படத்தைக் கையில் வைத்துக் பார்த்தாள்.
அதில் இரண்டு குழந்தைகள் ஒரு கையால் முடியையும், மற்றொரு கையால் ஒரு பொம்மையையும் பிடித்துக்கொண்டு சண்டையிடுவது போல ஒரு போட்டோ அழகாக எடுக்கப்பட்டிருந்தது.
இருந்த ஒரு சிறியவனின் முகம் அழுது படிந்து பார்க்கவே பாவமாக இருக்க, மற்றொரு குழந்தையின் முகம் சற்று கோபமாகவும், பிடிவாதத்துடனும் இருப்பதைக் கண்டாள்.
அந்த இரு குழந்தைகளின் முகத்தையும் போட்டுப் பார்த்த சங்கவிக்கு, அழுது கொண்டிருந்த சிறுவனின் முகம் கமலையும், கோபமாக பிடிவாதத்துடன் இருந்த முகம் கபிலனையும் அவளுக்கு ஞாபகப்படுத்தியது.
அந்தப் போட்டோவை நன்றாகக் கவனித்தவள் அது கபிலன் தான் என்று உறுதி செய்த மறுகணமே அவள் முகத்தில் அவளையும் அறியாமல் சிறு புன்னகை பூத்தது.
“இந்தப் போட்டோவை யாருக்கும் பார்வைக்கும் வைக்காதீங்கன்னு எவ்வளவு முறை சொல்றது? அம்மா! எங்கே அவங்ககிட்ட ஒரு முறை சொன்னால் கேட்கவே மாட்டாங்களா?” என்றபடி சங்கவியின் பின்னால் இருந்து எட்டி அவள் கையில் இருந்த போட்டோவைப் பறித்துக் கொண்டான் கபிலன்.
பின்னாலிருந்து கபிலனின் குரல் வந்ததும் சங்கவிக்கு ஒரு நிமிடம் பதட்டம் ஆகிவிட்டது. சட்டெனத் தன் கையில் இருந்த போட்டோவை அவன் புடுங்கவும், திரும்பி அவனை முறைத்தவள், “ஏன் இப்போ அதை என் கையில் இருந்து பிடுங்கினாய்?” என கேட்டாள் கபிலனிடம்.
“இந்த போட்டோவை நான் யாருக்கும் காட்டக் கூடாதுன்னு உள்ளே எடுத்து வைக்கச் சொல்லி இருந்தேன். இதை யார் கொண்டு வந்து இங்க வச்சாங்கன்னு தெரியல. அது யாரும் பார்க்க எனக்கு விருப்பமில்லை” என்றான் கபிலன்.
“ஏன் அப்படி யாரும் பார்க்க முடியாத அளவுக்கு அந்தப் போட்டோ ஒன்னும் அவ்வளவு மோசமா இல்லையே. நல்லாத்தானே இருக்கு? நான் பார்த்துட்டுத் தரேன்” என்று அவன் நோக்கிச் சங்கவி கையை நீட்ட.
அந்தப் போட்டோவை அப்படியே பார்க்க வேண்டாம் என்றதும் தன் கையைச் சற்று நேரம் அவளிடம் இருந்து பின்னால் எடுத்துக் கொண்டான்.
“ஏன் கபிலா, உன் போட்டோவை நான் பார்க்கக் கூடாதா? நம்ம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் தானே? உன்னோட போட்டோவை நான் பார்க்கிறதுல என்ன தப்பு இருக்கு?” என்றாள்.
“இல்ல… விடுங்க” என்று அவளிடம் இருந்து வாங்கிய போட்டோவை எடுத்துக் கொண்டு கபிலன் தன் அறை நோக்கி நடக்க… அவனிடமிருந்து அந்தப் போட்டோவை எடுக்க வேண்டும் என்ற ஆசை சங்கவிக்குத் தோன்றியது.
இருந்தும் கபிலனை வற்புறுத்த அவளுக்கு விருப்பமில்லை. அதனால் அமைதியாக அவன் செல்வதையே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள் வேலையாள் காபி கொண்டு வந்து சங்கவியை அழைக்க… மீண்டும் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தவள் சூடாக வந்த காபியைக் கண் மூடி ரசித்துக் குடிக்க ஆரம்பித்தாள்.
‘இந்த அம்மாவுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாது. சங்கவி வேற இந்தப் போட்டோவைப் பார்த்துட்டா… இந்தப் போட்டோல நான் வேற ரொம்ப அடம்பிடிச்சுக் கமல் கையில் இருந்து பொம்மையை வாங்குற மாதிரி இருக்கு. அதைப் பார்த்துட்டுச் சங்கவி என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பா? சரியான பிடிவாதக்காரர் மாதிரி தானே அவளுக்குத் தெரியும்’ என்று நினைத்துக் கொள்ள… அவனுடைய மற்றொரு மனம், ‘நீ சொல்லலேன்னாலும் பிடிவாதக்காரன் தானேடா! எப்படி இருந்தாலும் அவளுக்கு இன்னைக்கு இல்லனாலும் இன்னும் ஒரு நாள் உன்னைப் பத்தித் தெரியத்தான் போகுது. அதை மறைத்து வைத்து என்ன பண்ணப் போற? அது என்ன பெரிய பொக்கிஷமா என்ன?’ என்று அவனைத் திட்டிக் கொண்டிருந்தது.
‘உனக்கு என்ன! உள்ளே உட்கார்ந்துட்டுப் பெரிய நியாயத்தைப் போலப் பேசுவ. ஏற்கனவே அவளுக்கும் எனக்கும் கை, கால் தகராறு வராதது மட்டும்தான் மிச்சம். காலேஜ் படிக்கும்போது நாங்க ரெண்டு பேருமே சண்டை போட்டுக்காத நாளே கிடையாது. இப்படி இருக்கிறப்போ அவரையே நான் கல்யாணம் வேற பண்ணிக்கிட்டேன். என்னைப் பத்திக் காலேஜ் படிக்கிறப்போ என்ன நினைச்சிருந்தாலும், அதையே தானே இப்பவும் நினைச்சிருப்பா? இப்ப நான் எப்படி அவளை ஃபேஸ் பண்ணுவேன்?’ எனப் புலம்பினான் தன் அறைக்குள் இருந்தபடி கபிலன்.
தன்னந்தனியாக தனக்குத்தானே பேசிக் கொண்டு இருக்க… கபிலனின் அறைக்கதவு வெளியே இருந்து தட்டப்பட்டது.
கையில் இருந்த போட்டோவை மெத்தையில் தூக்கிப் போட்டவன் வந்து கதவைத் திறக்க, அவன் அறை முன்பு சங்கவி நின்றிருந்தாள்.
அவளைப் பார்த்ததும், “வா சங்கவி, எதுவும் என்கிட்ட பேசணுமா?” என்றான்.
“ஆமா கபிலா! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்னு தான் உன்னைப் பாக்க வந்தேன். நீ ஃப்ரீயா? வெளியே எங்கேயும் கிளம்பிட்டயா?” என்று அவன் அறைக்குள் வந்தபடி கேட்டாள் சங்கவி.
“இல்ல இல்ல. அம்மா இன்னும் ஒரு வாரத்துக்கு என்ன வெளியே எங்கேயும் போகக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. அதனால நான் வீட்டிலேயே தான் இருக்கேன்” என்றான்.
“இந்த பெரியவங்க எப்பவுமே இப்படித்தான். இதைப் பண்ணாதீங்க, அதை பண்ணாதீங்கன்னு ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அதையெல்லாம் பார்த்துகிட்டு இருந்தா, அப்புறம் நம்ம பிசினஸ் ரன் பண்றது ரொம்பக் கஷ்டமாயிடும்” என்றால் ஒரு தேர்ந்த தொழிலதிபர் போல.
அவள் சொன்னதற்கு “ஆமாம்” என்று தலையாட்டியவன், “எனக்கு இந்த நாலு செவுத்துக்குள்ளேயே அடைந்து கிடக்கிறது சுத்தமாகப் பிடிக்காது. என் அம்மா சொன்னாங்கன்னு ஒரே காரணத்துக்காகத் தான் நான் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருக்கிறேன்” என்றான் கபிலன்.
அவன் சொன்னதைக் கேட்டு மெல்லச் சிரித்தவள், “உன் அம்மா மேல உனக்கு அவ்வளவு பாசமா?” என்றாள்.
“ஆமாம்” என்று தலையாட்டியவன், “தான் எனக்கு எல்லாமே” என்றான்.
“சோ குட்” என்றாள்.
“சொல்லு சங்கவி, என்கிட்ட எதுவும் பேசணும்னு வந்த? ஏதாவது சொல்லனுமா?” என்றான் கபிலன்.
“ஆமா கபிலா, நம்ம கல்யாணத்தைப் பத்தி தான் பேச வந்தேன்” என்றால் சங்கவி.
“கல்யாணமா? அதுதான் நடந்து முடிஞ்சிடுச்சு. இனி என்ன அதைப் பத்திப் பேச இருக்கு?” என்றால் கபிலன்.
“அது நடந்து முடிந்தாலும் வாழப் போற வாழ்க்கை நம்மளோட தானே கபிலா? ஏதோ அம்மாவும் ஆதியும் கூட அப்பா அம்மாவும் வற்புறுத்தி வேற வழி இல்லாம நான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டேன்.
நல்லவேளை நீயும் என்னோட மனநிலையைப் புரிஞ்சுகிட்டு, ‘நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும்’னு சொன்னதும் நீயும் எல்லாரையும் நம்ப வைக்கிற மாதிரி நீயும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி, என்னை அவங்க கிட்ட இருந்து காப்பாத்திட்ட. ரொம்ப தேங்க்ஸ் கபிலா. அதுக்காகத்தான் உன்கிட்ட நன்றி சொல்ல வந்தேன்” என்றாள்.
அவள் பேசுவதைக் கேட்டு அமைதியாக கபிலன் சங்கவியையே பார்த்துக் கொண்டிருக்க…
“எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுங்கறது என்னால இன்னும் நம்ப முடியல கபிலா… நம்ம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸா இருக்கிறதுனால சூழ்நிலைகளைப் புரிஞ்சுகிட்டு ஒருத்தர் ஒருத்தர அனுசரிச்சு நடந்துக்கலாம்.
கொஞ்ச நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் இப்படியே இருப்போம். எங்க வீட்டுல எப்படியாவது பேசி எனக்குச் சேர வேண்டிய சொத்துக்களை எல்லாம் நான் எழுதி வாங்கிக்கிறேன். அதுக்கப்புறம் நீயும் நானும் அவரவர் வழியில் போயிடலாம்” என்றால் சங்கவி.
“என்ன சங்கவி சொல்ற? நீ சொல்றதெல்லாம் பாக்குறப்போ நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சு போறது மாதிரி இல்ல. நீ பேசிக்கிட்டு இருக்க. நேத்து தான் உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. ஞாபகம் இருக்கா? அதுக்குள்ள ரெண்டு பேரும் பிரியறதப் பத்திப் பேசிக்கிட்டு இருக்க?” என்று சற்று கோபமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டான்.
“அதனாலதான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதம் சொன்னேன் கபிலா. இதுவே கமலை நான் கல்யாணம் பண்ணி இருந்தா, அவன் கிட்ட என்னோட சூழ்நிலையை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கிறது ரொம்பக் கஷ்டம். ஆனால் நீ என்னோட ஃபிரெண்ட். என்னைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும். எனக்கு இந்தக் கல்யாணம், குடும்பம் அப்படிங்கறது எல்லாம் சுத்தமா நம்பிக்கை இல்லை.
இவங்களுக்காக வேணா நம்ம கணவன் மனைவியா நடிக்கலாம். ஆனால் நீயும் நானும் உண்மையாவே கணவன் மனைவியாக வாழ்ந்திட முடியாது இல்லையா கபிலா?” என்றாள் சங்கவி.
அவள் பேசுவதைக் கபிலனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருமணமான அடுத்த நாளே டைவர்ஸ் பற்றிப் பேசும் சங்கவியைக் கண்டு கபிலனுக்கு ஆத்திரமாக வந்தது.
“இங்க பாரு சங்கவி. நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ. உன்ன மாதிரி எல்லாத்தையும் ஜஸ்ட் லைக் தட் அப்படின்னு எடுத்துட்டுப் போற கேரக்டர் நான் கிடையாது. ஒரு விஷயத்துல நான் எங்கிட்ட நான் அதிலிருந்து பின்வாங்குறதோ, அதை விட்டு விலகிப் போறதோ என் அகராதியிலேயே கிடையாது.
இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. உனக்கு என் கையால நான் தாலி கட்டின போது, உன்னை நான் என் மனைவியா முழு மனசோட ஏத்துக்கிட்டேன். உனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாட்டியும் நீதான் என் பொண்டாட்டி. நான் தான் உன் புருஷன். இதுல எந்த மாற்றமும் கிடையாது. நீ என்கிட்ட இருந்து பிரிஞ்சு போறது பத்தியோ, டைவர்ஸ் பற்றியும் இனிமேல் பேசாத. அப்படியே நீ பேசினாலும் அது நடக்காத காரியம்” என்றால் தீர்க்கமாக.
கபிலன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியானால் சங்கவி. சிறுவயதிலிருந்தே அவளுக்கு அவனைத் தெரியும் என்பதாலும், அவன் தன் சூழ்நிலையைப் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையிலும் தான் கமலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு கபிலனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொன்னாள்.
ஆனால் அவனும் குடும்பம் சென்டிமென்ட் என்று பிடிவாதமாகப் பேசுவதைப் பார்த்ததும், அவளுக்கும் கோபம் வந்தவளாக, “என்ன கபிலா! விளையாட்டுறியா? நம்ம ரெண்டு பேரும் எப்படி ஒண்ணா கணவன் மனைவியா வாழ முடியும்? அதுக்கு வாய்ப்பு இல்ல. உன்ன நான் அப்படி நினைச்சதும் கிடையாது. நீ என்னோட ஃபிரெண்ட். அவ்வளவுதான் ஞாபகம் வச்சுக்கோ. சீக்கிரமே நான் உனக்கு டைவர்ஸ் பேப்பர் அனுப்புறேன். அதுல கையெழுத்துப் போடத் தயாராக இரு” என்று விட்டு அவன் பதிலைக் கூடக் கேட்டுவிடாமல் அவன் அறையை விட்டுச் சங்கவி வெளியே செல்லப் போக…
“நான் சொல்வதை துளியும் யோசிக்காமல், அதிலுள்ள விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் இப்படி டைவர்ஸ் பேப்பர் அனுப்புகிறேன்” என்று சங்கவி சொல்லிவிட்டுச் செல்வதைப் பார்த்த கபிலனுக்குக் கோபம் உச்சத்தில் ஏறிவிட, வேகமாக அவள் பின்னால் வந்த கபிலன் சங்கவியின் கையைப் பிடித்து இழுத்துச் சுவற்றில் தள்ளி நிற்க வைத்தவன்.
“என்ன சொன்ன? சீக்கிரமே டைவர்ஸ் எனக்குக் கொடுக்கப் போறியா? அது நடக்காது” என்றான் கோபமாக.
“என்ன பண்ற? என்ன விடு!” என்று தன் கழுத்தில் கை வைத்து அழுத்தி இருந்த கபிலனின் கையில் அடித்து அவனைத் தன்னிடமிருந்து பிரிக்க முயற்சித்தால். ஆனால் அவன் பிடியை முன்பை விட இப்போது அதிகமாகவே உணர்ந்து கொண்டாள். அவனை அடிப்பதை விட்டுவிட்டு, “கபிலா, நான் சொல்றதைக் கேளு. நீயும் நானும் ஃபிரண்ட்ஸ். நமக்குள்ள எப்படி குடும்பம், குழந்தை, இல்லம் அதெல்லாம் சரியா வராது. அதனாலதான் நான் நமக்கு டைவர்ஸ் வாங்கணும்னு சொல்றேன். புரிஞ்சுக்கோ” என்று அவனைப் பார்த்துச் சங்கவி கூற.
“ஐயோ! சும்மா ஃபிரண்ட்ஸ் ஃபிரண்ட்ஸ்னு என்னையே வெறுப்பேத்தாத! அது எல்லாம் இன்னைக்கு காலேஜ்ல லாஸ்ட் டேவில நீயும் நானும் தெரிஞ்சோமோ, அந்த அன்னைக்கு அந்த ஃபிரெண்ட்ஷிப் என்ற வார்த்தையை நான் தூக்கி போட்டுட்டேன்.
நீ இப்போ என்னோட மனைவி. அது மட்டும் உன் மனசுல பதிய வச்சுக்கோ” என்றான்.
“டேய் கபிலா, என்னடா இது இப்படிப் பேசுற?” எனச் சங்கவி புரியாமல் அவனைப் பார்க்க…
“நான் வார்த்தையால சொல்ல வர விஷயத்தை உன்னால புரிஞ்சுக்க முடியலையா?” என்றவன் அடுத்த நொடி அவளிடம் புரிய வைக்கத் தன் செயலால் காட்டினான்.
அவன் செய்த செயலைச் சங்கவி துளியும் எதிர்பார்க்கவே இல்லை. தன்னைக் கண்டாலே பயந்து நடுங்கும் ஆண்களுக்கு மத்தியில் ஆதிக்குப் பிறகு இப்போது கபிலன் மட்டும்தான் அவளை எதிர்த்துப் பேசுகிறான். ஆதி பேசுவதோடு விட்டுவிட, இங்கே கபிலன் சங்கவியின் கணவன் என்ற உரிமையால் அவளிடம் அவள் விருப்பம் இல்லாமலேயே எடுத்துக் கொண்டான். அவள் திமிரத் திமிர சங்கவியை உன்னிடமிருந்து விலகவிடாமல் சுவற்றில் தள்ளி அவள் இரு கைகளையும் சுவற்றில் அழுத்திப் பிடித்தவன், குனிந்து அவள் இதழில் மூர்க்கமாக முத்தம் வைத்தான்.
சங்கவிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவனிடமிருந்து அவளால் பிரிந்து செல்லவும் முடியவில்லை. தன் கைகளை இறுக்கிப் பிடித்து அவள் முகத்தைத் திருப்பவிடாமல் அழுத்தி முத்தமிட்டுக் கொண்டிருந்தவனை எப்படிப் பிரிவது என யோசித்தவள், உடனே தன் காலை மேலே தூக்க, அவள் கையைப் பிடித்திருந்தவன் இரண்டு கையையும் தூக்கி அவள் தலைக்கு மேலே சேர்த்துப் பிடித்தவன், சட்டென அவள் தூக்கிய காலைப் பிடித்து அழுத்தித் தன்னிடத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டான்.
சங்கவிக்குத் தன் நிலையை நினைத்துத் தனக்கே வெட்கமாக இருந்தது. ‘இவனிடம் வந்து தானாகவே இப்படி மாட்டிக்கொண்டோமோ’ என்று அவளுக்குத் தோன்றும் அளவிற்கு அவன் முத்தம் வன்முறையாக இருந்தது.
இதழில் இருந்து பிரிந்த கபிலன் சிவந்திருந்த அவள் உதட்டைத் தன் விரலால் தடவியபடி அவள் கண்களைப் பார்த்து, “இனிமேல் டைவர்ஸ், ஃபிரண்ட்ஸ் அப்படிங்கற பேச்சுக்கு இடம் இல்லை. அதை ஞாபகம் வச்சுக்கோ” என்று விட்டு அவளை விட்டு விலகி நின்றான்.
சங்கவியை விட்டுப் பிரிந்தவனை நோக்கி அடுத்த நொடி, “யோவ் ராஸ்கல்! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் எனக்கு முத்தம் கொடுப்ப?” என்று அவன் அருகில் கோபமாக வந்தவள் சிறிதும் யோசிக்காமல் கபிலனின் கன்னத்தில் ‘பளார்’ என ஓங்கி அறைந்து விட்டாள்.
கபிலனை அறைந்ததும் அவன் ஷாக் ஆகிச் சங்கவியைப் பார்க்க… அவன் பார்வையில் இருந்த அதிர்ச்சியைக் கண்டு, அப்போது தான் ‘இப்படி அவசரப்பட்டு கபிலனிடம் கை நீட்டி விட்டோமே’ என்று அவளுக்குத் தோன்ற… “கபிலா, சாரி, சாரிடா… நான் வேணும்னு எதுவும் செய்யல. நீ தான் என்கிட்டே… தப்பா…” என்று அவள் முடிக்கும் முன், அவள் முகத்திற்கு நேராகக் கையை நீட்டி அவளைப் பேசவிடாமல் தடுத்தவன்.
வேகமாக அவன் அறையை விட்டு வெளியே கிளம்பினான்.
‘அவசரப்பட்டு அவனிடம் கை நீட்டிவிட்டோமோ’ என்று அவளுக்குத் தோன்றியது. ‘நான் எதும் பண்ணலையே. அவன் தான் என்னை இழுத்து வெச்சு… முத்தம்…’ என்று நினைத்தவள் முகம் சட்டென்று சிவந்து விட்டது.
