Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 278

உன் ரகசிய ரசிகை நான் 278

by Layas Tamil Novel
50 views

EPISODE 278

நர்மதாவின் அலுவலகம்

திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாள் தான் இருக்கும் நிலையில் தன் ஆஃபீஸில் அனைவரிடமும் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பாகவே வரச் சொல்லி அவள் வேலையை ரிசைன் செய்வதாகக் கூறி ராஜினாமா கடிதத்தை ரூபேஷிடம் கொடுத்துவிட்டு ஆஃபீஸில் இருந்து கிளம்பினாள் நர்மதா.

ஷிவுவின் வீடு

அங்கிருந்து நேராக ஷிவுவை பார்க்க அவள் வீட்டிற்கு தான் சென்றாள்.

அவள் வருவதை ஏற்கனவே சொல்லி இருக்க, ஷிவு நர்மதாவிற்காக காத்திருந்தாள்.

“வா நர்மதா! ஆஃபீஸ்ல எல்லார்கிட்டயும் பேசியாச்சா?” என்றால் ஷிவு சிரித்தபடி அவளை வரவேற்று.

“எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன் மேடம். என்னோட ரெசிக்னேஷன் லெட்டரை சார்கிட்ட கொடுத்துட்டேன்” என்றாள்.

“என்கிட்டக் கூடச் சொல்லாம என்னைக் டிஸ்கஸ் பண்ணாம உன்னை யாரு ரெசிக்னேஷனை கொடுக்கச் சொன்னது?” என்றால் ஷிவு சற்று கோபமாக.

“மேடம், என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவருக்கு நான் வேலைக்குப் போறது சுத்தமா பிடிக்கல. அவர் கல்யாணத்துக்கு முன்னாடி வேலையை ராஜினாமா பண்ணனும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. அதனால தான் நான் இந்த வேலையை வேண்டாமேன்னு எழுதி கொடுத்துட்டேன்” என்றால்.

“என்ன நர்மதா! புரிஞ்சுதான் பேசுறியா? இது உன்னோட ட்ரீம் ஜாப்னு எனக்கு நல்லாவே தெரியும். இந்த வேலைக்காக நீ எவ்வளவு உழைச்சிருக்க, மனக்கட்டு இருக்கேன்னு நம்ம ஆஃபீஸ்ல இருக்குற எல்லாருக்குமே உன்னோட உழைப்பைப் பற்றி நல்லா தெரியும். அப்படி இருக்கிறப்போ உனக்குப் பிடிச்ச வேலையை நீ தொடர்ந்து செய்ய வேண்டியதுதானே?” என்றாள் ஷிவு.

“இல்ல மேடம், நான் வேலை வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன். இனி திரும்பி அதைக் மாத்திக்கிற எண்ணம் எனக்கு இல்ல. முதல்ல என் கல்யாணம் முடியட்டும், அதுக்கப்புறம் பார்த்துக்கொள்ளலாம்” என்றால் நர்மதா விரக்தியாக.

“நீ பேசுறது வெச்சே உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு எனக்குத் தோணுது. அப்படின்னு விருப்பம் இல்லாத ஒரு விஷயத்தை நீ இவ்வளவு தூரம் கட்டாயப்படுத்தி உன்னையே அதுக்குள்ள திணிச்சுக்குறே” என்றாள்.

“மேடம், அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு ஏற்கனவே இந்தச் சம்பந்தம் பேசி முடிச்சு ரொம்ப நாளாச்சு. நான் தான் கல்யாணம் உறுதியான பிறகு எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம்னு அமைதியா இருந்துட்டேன். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. நான் ரிசைன் பண்ணின விஷயத்தை உங்ககிட்ட நேர்ல சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். உங்க உடம்பு எப்படி இருக்கு மேடம்?” என்றால் நர்மதா.

“எனக்கென்ன நான் நல்லாத்தான் இருக்கேன். இன்னும் பத்து பதினைந்து நாள்ல டெலிவரி ஆகிடும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க” என்றால் ஷிவு.

“ஓகே மேடம், குழந்தை பிறந்ததும் மறக்காம எனக்குச் சொல்லி அனுப்புங்க. நான் தான் முதலாள வந்து உங்க குழந்தையைப் பார்ப்பேன்” என்றால் சிரித்துக் கொண்டே.

“கண்டிப்பா சொல்றேன்” என்ற ஷிவு. “சரி வா, நம்ம போய் சாப்பிட்டு வரலாம்” என்று அவளைச் சாப்பிட அழைத்தாள்.

“இல்ல மேடம், எனக்குப் பசிக்கல. நீங்க சாப்பிடுங்க. எனக்கு நான் நிறைய பர்சேஸ் இருக்கு. போகும்போது அது எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்குப் போகவே லேட் ஆயிடும். அதனால நான் கிளம்புறேன்” என்று சோஃபாவில் இருந்து எழுந்தாள்.

ஷிவுவும் நர்மதாவைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தவில்லை. “சரி அப்போ உன் கல்யாணம் முடிஞ்சதும் உன் வீட்டுக்காரரையும் அழிச்சிட்டு வா… ரெண்டு பேருக்கும் சேர்ந்து விருந்து வச்சிடறேன்” என்றாள்.

“ஓகே மேடம், நீங்களும் உடம்பைப் பத்திரமாப் பாத்துக்கோங்க. குழந்தை பிறந்ததும் மறக்காம எனக்குச் சொல்லி அனுப்புங்க” என்று விட்டு ஷிவுவிடமும் அவள் அத்தையிடமும் விடைபெற்ற நர்மதா சென்றாள்.

நர்மதா கிளம்பிச் செல்லும் வரை அமைதியாக இருந்த ரூபேஷின் அம்மா, “ஏன் ஷிவு, அந்தப் பொண்ணு எப்பவுமே கலகலன்னு சிரிச்சுப் பேசிகிட்டு தானே இருக்கும். ஆனால் இப்போ ஏன் அவ முகம் ரொம்ப வாட்டமா இருக்கு? அவளுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையா? எதுவும் நீ அவ கிட்ட பேசினியா?” என்றார்.

“நானும் கேட்டுப் பார்த்துவிட்டேன் அத்தை. அவ என்கிட்ட ஒன்னும் இல்லைன்னு சொல்லிச் சமாளிக்கிறா” என்றாள்.

“நீ இருக்கும் கொஞ்ச நேரம் பொறுத்து அந்தப் பொண்ணுக்கு போன் போட்டுப் பேசு. அவள் மனசுல என்ன நினைக்கிறான்னு நீயாவது கேட்டுத் தெரிஞ்சுக்க. பாவம், எனக்கு அவளும் முகத்தைப் பார்த்தாலே என்னவோ போல இருக்கு” என்றவர் உள்ளே சென்றுவிட, ஷிவுவும் அதே யோசனையில் இருந்தவள் தன் மொபைலை எடுத்து ரூபேஷிற்கு அழைத்தாள்.

அவள் அழைத்த இரண்டாவது நிமிடத்தில் போனை அட்டென்ட் செய்தவன், “சொல்லு ஷிவு! வலி எதுவும் வந்திருச்சா? ஹாஸ்பிடல் போகணுமா? நான் கிளம்பி வரட்டுமா?” என்றான் பதட்டமாக.

“டேய் டேய்! நான் எவ்வளவு முறை சொல்லி இருக்கேன்? நான் போன் பண்ணினா முதல்ல என்னப் பேச விடு. அதுக்கு அப்புறம் நீ கேள்வி கேளுன்னு சொன்னேனா இல்லையா? போன் அட்டென்ட் பண்ணுனதும் வரிசையா எழுதி வைத்து மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிற மாதிரி கேள்வியாக் கேட்டுட்டு இருக்க” என்று அவனை அதட்டினால் ஷிவு.

“சாரி சாரி. நீ சொல்லு நான் எதுவும் பேசல” என்று அமைதியாக ரூபேஷ் இருக்க.. மெல்லச் சிரித்த ஷிவு, “முட்டாள்! நான் மிரட்டினால் உடனே சரின்னு அடங்கிப் போயிடனுமா? திருப்பி என் கூட சண்டை போடுடா” என்றாள்.

“ஏன்? என் பொண்டாட்டிகிட்ட தானே நான் அடங்கிப் போறேன். இதுல என்ன இருக்கு?” என்றவன், “சரி சொல்லு, நீ எதுக்காகப் போன் பண்ணின?” என்றான்.

“சரி, நர்மதா உன்கிட்ட ரெசிக்னேஷன் லெட்டர் கொண்டு வந்து கொடுத்தாளா?” என்றாள்.

“ஆமா ஷிவு. நானே உனக்குக் கால் பண்ணலாம்னு இருந்தேன். நர்மதா தான், ‘நான் வீட்டுக்குத் தான் போறேன் சார். நானே மேடம்கிட்ட நேர்ல சொல்லிக்கிறேன்னு’ என்னைச் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டா” என்றான்.

“அவ நம்ம ஆஃபீஸ்ல யார்கிட்டயாவது ரொம்ப க்ளோஸா பழகுறாளா உனக்கு எதுவும் தெரியுமா? நான் என்ன நான் இருக்கிற வரைக்கும் அவ என் பின்னாடி தான் சுத்திக்கிட்டு இருப்பா. வேற யாரு கூடையும் அவ்வளவா அட்டாச் ஆக மாட்டா. நானும் இப்ப ஆஃபீஸ் வருவதில்லையே. அதனால தான் கேட்கிறேன்” என்றாள்.

ஷிவு சொன்னதைச் சிறிது யோசித்தவன், “ஆமாம் ஷிவு, ஒரே ஒரு பொண்ணு கிட்ட மட்டும் அப்போ நர்மதா பேசுறதைக் கேட்டு இருக்கேன். அதுவும் அந்தப் பொண்ணு கூடப் பேசும்போது இவ ரொம்பச் சோகமா இருப்பா. அப்ப மட்டும் தான் கவனிச்சு இருக்கேன்” என்றான்.

“அந்தப் பொண்ணு யாரு என்னன்னு விசாரிச்சு, அவகிட்ட போன் நம்பர் வாங்கி எனக்குச் சென்ட் பண்ணு” என்றால்.

“ஏன் ஷிவு? எதுவும் பிரச்சனையா?” என்றான்.

“ஆமாடா. இப்போ நர்மதா ஆஃபீஸ்ல ரிசைன் பண்ணிட்டுப் போயாச்சு. இனி அடுத்தது நீ வேற ஆளை கண்டிப்பா எடுத்து தானே ஆகணும். அதனால நீ அடுத்து உனக்கு அசிஸ்டென்டா அப்பாயிண்ட் பண்ணப் போறவங்க ஆம்பளையா பொம்பளையா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.”

“நீ செலக்ட் பண்றது ஒரு பொண்ணா இருந்தா அந்தப் பொண்ணு கிட்ட நீ எப்படிப் பேசுற, பழகுற, உன்னோட மோட்டிவ் என்னங்கறத நான் தெரிஞ்சுக்க வேண்டாமா? இத்தனை நாள் நர்மதா அங்க இருந்தா, உன்னைப்பத்தி எல்லாமே எனக்கு அப்டேட் வந்திட்டே இருக்கும். இப்பதான் அவளும் இல்லையே. அதனாலதான் அந்தப் பொண்ணோட போன் நம்பர் கேட்கிறேன். அவ போன் நம்பரை நீ எனக்கு முதல்ல அனுப்ப. உன்னை நான் ஃபாலோ பண்ணுவேன் வீட்டிலிருந்தே” என்றால்.

“அப்போ இத்தனை நாள் நீ எனக்குத் தெரியாம நர்மதாவை ஸ்பையா வச்சிருந்தியா? அவதான் உன்கிட்ட எல்லா விஷயத்தையும் வந்து போட்டு கொடுத்துட்டு இருந்தா? இல்ல? இது இத்தனை நாள் எனக்குத் தெரியாமப் போயிடுச்சே. தெரிஞ்சிருந்தா…” என அவன் கோபமாகப் பேசுவது போல ஷிவுவிடம் பேச.

“ஆமாம், அப்படித்தான் செஞ்சேன். இப்ப என்னடா உனக்கு? என்ன சரக்கு கோபம் வேற வருது? என்கிட்டச் சண்டைக்கு வரியா நீ?” என்றால் அவளும் பதிலுக்கு.

“ஹே ஹே! இப்ப எதுக்கு டென்ஷன் ஆகுற? டென்ஷன் ஆனா உனக்குப் பிபி ஏறும். பிபி ஏறும். அது உனக்கு உடம்புக்கு நல்லதில்ல. உனக்கு உடம்பு எதுவும் ஆச்சுன்னா வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் எதுவும் பிரச்சனை வரும். நான் சும்மாதான் உன்னிடம் கோவமா இருக்கிறது போலப் பேசினேன். நீ தேவையில்லாமல் டென்ஷன் ஆகாதே. உனக்கு என்ன இப்போ அந்தப் பொண்ணோட போன் நம்பர் வேணும் அவ்வளவு தானே? இன்னும் அஞ்சு நிமிஷம் உன் வாட்ஸ்அப்புக்கு அந்தப் பொண்ணோட போன் நம்பர் இல்ல, அந்தப் பொண்ணு ஜாதகத்தை அனுப்பி வைக்கிறேன்” என்றான்.

“அந்தப் பொண்ணு ஜாதகத்தை வாங்கி நான் என்ன அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறேன்? ஒழுங்கா சொன்னது மட்டும் செய்டா” என்று போனை வைத்து விட்டாள்.

ஷிவு தன்னிடம் எப்படிப் பேசினாலும் அவனுக்கு அவள் தன்னிடம் அன்பாகப் பேசுவது போல எப்போதுமே தோன்றும் போல. அவள் போனை வைத்ததும் சிரித்துக் கொண்டே தன் கேபினிலிருந்து ரிசப்ஷனுக்கு அழைத்தவன், நர்மதா பேசும் அந்தப் பெண்ணின் அடையாளத்தைச் சொல்லி அவளைத் தென்ரூவிற்கு வரச் சொன்னான்.

அவள் வந்ததும், நான் அவளிடம் அவள் போன் நம்பரை கேட்டு விபரங்களைச் சொல்லிவிட்டு அவளை அனுப்பி வைத்து, அதை ஷிவுவிற்கும் whatsapp செய்தான்.

வெங்கடாச்சலம் தன் காரை அபியின் வீட்டிற்கு அனுப்பி அவளைக் கோவிலுக்கு அழைத்து வர சொல்லி இருந்தார். காரை விட்டு இறங்கிய மரகதமும் அபியும் கோவில் வாசலில் அவர்களுக்காக வெங்கடாச்சலமும் விசாலட்சியமும் காத்திருப்பதைப் பார்த்துவிட்டு அவர்களிடம் வர, அபியைப் பார்த்ததும் அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தனர் இருவரும். அவர்களோடு மரகதமும் பின்னால் சென்றார்.

கோவிலுக்குள் சென்றவர்கள், அங்கே வெங்கடாச்சலம் விசாலாட்சியின் மொத்த குடும்பமும் வந்திருப்பதைப் பார்த்தவள் புரியாமல் திரும்பி வெங்கடாச்சலத்தைப் பார்க்க..

“என்னம்மா பாக்குற? இவங்க எல்லாரும் உன்னோட கல்யாணத்துக்காகத் தான் இங்கே வந்து இருக்காங்க” என்றார் வெங்கடாச்சலம்.

அவர் அபிக்கு திருமணம் என்று சொன்னதும் மரகதமும் அபியும் உறைந்து போய் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்தவர்கள், அதே அதிர்ச்சியோடு திரும்பி வெங்கடாச்சலத்தையும் விசாலட்சியையும் பார்க்க. “நீ இப்படி எங்களோட குடும்ப கவுரத்துக்காக உன்னோட உயிரையே கொடுக்க நினைச்சதுக்கு அப்புறம் உனக்கு நினைச்ச மாதிரி ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்காம நானும் இவரும் எப்படிம்மா நிம்மதியா இருக்க முடியும்? அதனாலதான் உன்னை ஹாஸ்பிடலில் இருந்து பார்த்துட்டு வந்த பிறகு நாங்க எல்லாரும் சேர்ந்து கஷ்டப்பட்டுத் தேடிப் பிடிச்சு உன்னோட குணத்திற்கும் உன்னோட எதிர்பார்ப்புக்கும் ஏற்ற மாதிரி ஒரு வரனைப் பார்த்திருக்கோம். கண்டிப்பா உனக்கு அந்தப் பையனைப் பிடிக்கும்னு நாங்க நம்புறோம்” என்றாள் விசாலாட்சி.

தான் போட்ட டிராமாவில் எப்படியும் தனக்கு ஒரு நல்ல வரனைத் தன் அப்பா பார்த்து விடுவார் என்று அபிக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் அவள் திருமணத்திற்கு அவர் ஏற்பாடு செய்வார் என்று அபி சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

அவள் பேச்சுற்று அங்கு இருப்பவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருக்க… அவள் அருகில் வந்த துர்காவும் கீர்த்திகாவும், “வா அபி, உனக்காக எல்லாமே தயாரா இருக்கு” என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றனர்.

அபிக்கு இந்தக் திருமணத்தை ஏற்றுக் கொள்வதா? மறுப்பதா? என்று எந்த ஒரு யோசனையுமே இல்லை. அவள் ஜடம் போல நின்றிருக்க அவளைக் கைபிடித்து இருவரும் அழைத்துச் சென்றனர். மரகதமும் என்ன செய்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்தபடி அங்கே நின்றிருந்தார்.

ஏற்கனவே அபி சேலை கட்டிக்கொண்டு வந்திருக்க, அதே சேலையோடு அவளுக்கு நகைகளையும் சில சாதாரணமான அலங்காரங்களையும் செய்துவிட்டு அவளை மணமேடைக்கு அழைத்து வந்தார்கள் துர்காவும் கீர்த்திகாவும்.

அவள் மணமேடைக்கு வரும் வழியில் சங்கவி கபிலனுடன் ஜோடியாக நின்று கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

திருமணத்தை வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என நினைத்திருந்த அபியின் குழப்பமான மனநிலை, சங்கவியைக் கபிலனுடன் பார்த்ததும் ‘இவளுக்கே கல்யாணம் ஆகி செட்டில் ஆகிட்டா, ஏன் நான் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது? அப்பா பார்த்திருக்கிற மாப்பிள்ளை கண்டிப்பா நல்லவராத் தான் இருக்கணும்’ என்ன நம்பிக்கை கொண்டவள், சங்கவியை முறைத்துவிட்டு மணவரைக்குத் திமிராகச் சென்றாள்.

அபியின் ஓங்குதாங்கான உயரத்திற்கும், கம்பீரமான நடக்கும், அவள் சேலை அணிந்து வீறாக நடந்து வருவதை மணமேடையில் அவளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாப்பிள்ளை அவள் வரும் திசையைப் பார்த்து ஆச்சரியமானான். ‘தனக்கு இவ்வளவு அழகான ஒரு பெண்ணா?’ என யோசித்துவாறே அவளையே வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, அவன் அருகில் நின்றிருந்த மாப்பிள்ளையின் தோழன், “டேய் ஜீவா! பார்த்தது போதும்டா. அவங்க உன்னைப் பத்தி எதுவும் தப்பா நினைச்சுக்கப் போறாங்க. முதல்ல வாயை மூடு” என மாப்பிள்ளை ஜீவாவைக் கிண்டல் செய்ய, திரும்பித் தன் நண்பனை முறைத்தவன், அமைதியாக ஐயர் சொல்லும் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு இருந்தான்.

வரும் வழியிலேயே மணமேடையில் அமர்ந்திருந்த ஜீவாவைப் பார்த்தாள் அபி. அவளுக்கும் அவனைப் பார்த்ததுமே அவனைப் பிடித்து விட்டது. அவளுடைய எதிர்பார்ப்பிற்கு அவன் ஒன்றும் சலித்தவன் இல்லை என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே உணர்ந்து கொண்டாள் அபி.

அவளை அழைத்துக் கொண்டு வந்து மணமேடையில் அமர வைத்தனர் துர்காவும் கீர்த்திகாவும். அபியின் கையில் மாலையைக் கொடுத்து அவள் கழுத்தில் போடச் சொன்ன ஐயர், அவளிடம் அட்சதையை கொடுத்து அக்னிகுண்டத்தில் அதைப் போட்டு அவர் சொல்லும் மந்திரத்தைச் சொல்லச் சொன்னார்.

சிறிது நேரத்தில் சடங்குகள் எல்லாம் முடிந்து தாலியை எடுத்துக்கொண்டு போய் அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வந்த துர்காவிடம் இருந்து வெங்கடாச்சலமும் விசாலட்சியும் தாலியை வாங்கி கண்கள் மூடி மனப்பூர்வமாக இறைவனைப் பிரார்த்தித்து, அதை ஜீவாவின் கையில் கொடுத்து அபியின் கழுத்தில் கட்டச் சொன்னார்கள்.

அவனும் திருப்தியாக மங்கலத்தை வாங்கி அதை அபியின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு விட்டான்.

கையில் ஏற்படுத்திய காயத்தின் கட்டை கூட அவிழ்த்து இருக்காத நிலையில், அவள் கேட்டதை மறுத்து விடாமல் விடிவதற்குள் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்திருந்த தன் அப்பாவை அவள் பெருமையாகப் பார்த்தாள்.

வேகமாக மணவரையிலிருந்து எழுந்து வந்த அபி ஓடிச் சென்று வெங்கடாச்சலத்தைக் கட்டிக்கொண்டு, “அப்பா!” எனக் குரல் தழுதழுக்க அணைத்தபடி கண்ணீர் வடித்தால்.

“அழாத அபி. சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் இது. உனக்குப் பார்த்திருக்கிற ஜீவா உண்மையாவே ரொம்ப நல்ல பையன். நாங்க அவனைப் பற்றி நிறைய விசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டுத் தான் உனக்கு அவனை கல்யாணம் செய்து வச்சிருக்கோம். இப்படித் திடீர்னு கல்யாணம் பண்ணி வச்சுட்டோமேன்னு எதுவும் கோபம் வந்து அந்தக் கோபத்தை ஜீவா மேல காட்டிடாதே. உங்க குடும்ப வாழ்க்கை நல்லபடியா அமையணும்னு நினைச்சுத் தான் நான் இதைச் சொல்றேன், புரிஞ்சுக்கோ” என்றார்.

அபியும் “சரி” என்று தலையாட்டி விட்டு அவரைப் பிரிந்து நிற்க, அங்கே ஜீவா வந்தவன், “அங்கிள்! எங்க ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று சொல்லி அவர் காலில் ஜீவா விழ, அபியும் குனிந்து தன் அப்பாவின் காலில் ஆசிர்வாதம் வாங்கினாள்.

அதன் பிறகு மரகதத்திடம் வந்து அபி மரகதத்தைப் பார்க்க, “நீ சொன்னது போலவே உன் அப்பா செஞ்சிட்டாருடி. ஆனா இவ்வளவு சீக்கிரம் செய்வாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றார். அவளும் சிரித்துக் கொண்டே, “அதுதான் என் அப்பா” எனப் பெருமையாகச் சொன்னவள், “அம்மா எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றால்.

மரகதமும் தன் மகள் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்து இருவருக்கும் அட்சதையைத் தூவி ஆசீர்வாதம் செய்தார்.

ஜீவாவின் பெற்றோரின் காலிலும் அவர்கள் இருவரும் ஆசீர்வாதம் வாங்கிவிட, அப்போது அபியை அழைத்தார் வெங்கடாச்சலம். கூடவே ஜீவாவையும் அழைத்தார். அவர்கள் இருவரும் வெங்கடாச்சலத்திடம் வர, ஆதி என அவர் அழைக்கவும், ஆதி கையில் ஒரு பத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து வெங்கடாச்சலத்திடம் கையில் கொடுத்தான்.

அதை வாங்கியவர் சங்கவி, ஜீவா இருவரையும் பார்த்து, “நியாயப்படி இந்தச் சொத்துக்களை உங்க ரெண்டு பேருக்கும் குழந்தை பிறந்த பிறகுதான் தரணும். ஆனா இதை நான் உனக்கும் சங்கவிக்கும் இப்பவே தரேன். அதுக்குக் காரணம் நீங்க நாங்க எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டு கல்யாணம் செய்து விட்டதுனால தான். இந்தச் சொத்துக்கள் எல்லாம் இன்னைக்கு இருந்தாலும் உங்க ரெண்டு பேருக்கும் வந்து சேரப் போறது தான். உங்க ரெண்டு பேர் கிட்டயுமே இருக்கட்டும். இதை நீங்க உபயோகப்படுத்தணும், வேற எதுவும் செய்யணும்னா உங்க ரெண்டு பேருக்குமே குழந்தை பிறந்த பிறகுதான் இந்தச் சொத்துக்களை எல்லாம் நீங்க அனுபவிக்க முடியும்” என்று ஒரு செக்கும் வைத்தார் வெங்கடாச்சலம் அதனுடன் சேர்ந்து.

பிறகு அபியிடம் வந்த ஆதி, “அக்கா, உனக்கு எங்களைப் பிடிக்குதோ பிடிக்கலையோ எனக்குத் தெரியல. ஆனா அக்கான்னு எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் நீதான். உன்னை எங்களால எதிரியா பார்க்க முடியல. ஆனா நீ தான் உன் அம்மாவோட சேர்ந்துட்டு எங்களை எப்பவுமே தூரத்தில் வைத்துப் பார்த்துட்ட. பரவாயில்லை” என்றவன், அவன் பங்கிற்கு அவன் கையில் இருந்த ஒரு டாக்குமென்ட்டைக் கொடுத்து, “இது டென்மார்க்கில் இருக்கிற என்னுடைய வீடு, அங்கே இருக்கிற நான் சம்பாதிச்ச ஆஃபீஸ் அதோட டாக்குமென்ட்ஸும் டீடெயிலும் இருக்கு. அங்கே இருக்கிற பிசினஸையும் வீட்டையும் நீயே வச்சுக்க. நம்ம எல்லாரும் ஒன்னா ஒரே குடும்பமா இந்தத் தொழிலைச் சரி விடாமல் உயர்த்தி நிற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றான் ஆதி.

அவன் அபிக்கு சொன்னதைச் செய்வான் என்று அபிக்கு ஆதி மீது நம்பிக்கை இருந்தது. ஆனால் சொன்னதை விடவும் அதிகம் மடங்கு இப்போது தன் வீட்டில் இருப்பவர்கள் தனக்குச் செய்திருப்பதைப் பார்த்த அபிக்குப் பேச வார்த்தைகளே எழவில்லை. அவள் ஆதியைப் பார்க்க…

“அக்கா, இன்னைக்கு ஈவினிங் உனக்கும், பெரியம்மாவுக்கும், ஜீவா உங்க மூணு பேருக்குமே டென்மார்க் போவதற்கான ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணிட்டேன். நீ உன்னுடைய திருமண வாழ்க்கையை டென்மார்க்ல போய் ஆரம்பிக்கணும் என்பது எங்களோட ஆசை” என்றான்.

“என்ன ஆதி இப்படித் திடீர்னு சொல்ற? ஆனா நான் அதுக்காக எந்த ஏற்பாடும் செய்யலையே. இன்னும் எந்த திங்கும் நான் பேக் கூட பண்ணலையே” என்றாள்.

“அக்கா, அதைப் பத்தி நீ எதுவும் கவலைப்படாதே. உனக்கு வேண்டியதெல்லாம் இன்னும் ஒரு வாரத்துல அங்கே வந்து சேர்ந்திடும். நீ அங்கே போய் உனக்கு என்னென்ன வேணுங்குற லிஸ்ட் மட்டும் எனக்கு அனுப்பிவிடு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

மரகதத்திற்கு இங்கே நடப்பதெல்லாம் கனவா நினைவா என்பது போல இருந்தது. அனைத்தையும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு அவர்கள் நின்று இருக்க, அபி அவர் அருகில் வந்து, “அம்மா, ஆதி சொன்னதைக் கேட்டியா? எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல” என்றால்.

“இங்கே இருக்கலாமா? இல்ல டென்மார்க் போகலாமா? எனக்கு ஒண்ணுமே புரியல மா” என்றாள் அபி.

அவள் சொன்னதைக் கேட்டு அபியின் கையைப் பிடித்து தனியாக அழைத்து வந்த மரகதம், “ஏன் உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இங்கே இருக்கேன்னு சொல்ற? உன் அப்பா உனக்குச் சேர வேண்டிய சொத்தை எல்லாத்தையும் இப்பவே உன் கையில, உன் பேர்ல மாத்திக் கொடுத்துட்டாரு. அது போதும். அது என்ன டென்மார்க்கில் இருக்கிற அவ்வளவு பெரிய வீட்டையும் அவனோட பிசினஸையும் ஆதி உனக்கு எழுதிக் கொடுத்துட்டான். இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்? உன்னைக் கல்யாணம் பண்ணி இருக்கிறவனும் நல்லா வசதியான விட்டுப் பையன் மாதிரி தான் தெரிகிறான். உனக்கு லைஃப் செட்டில் ரெடி. உன் கூடச் சேர்ந்து இந்த அம்மாவோட லைஃபும் செட்டில் ஆயிடுச்சுன்னு நான் சந்தோஷத்தில் இருக்கேன். நீ இந்தியாவிலேயே இருக்கலாமா வேணாமான்னு யோசிக்கிறேன்னு சொல்ற? பேசாம மூட்டையை கட்டு. மத்ததெல்லாம் அங்க போய் பார்த்துக்கலாம்” என்றார் மரகதம் இன்னமும் தன் புத்தி மாறாமல்.

அபி அவர் அம்மா சொல்வதைக் கேட்டுவிட்டு அவரை முறைத்தவள் பின் திரும்பி ஆதியைப் பார்த்து, “சரி ஆதி, நாங்க இன்னைக்கு ஊருக்குக் கிளம்புறோம்” என்றால்.

சொன்னது போலவே மாலைக்குள் தனக்கு அப்போதைக்கு என்ன வேண்டுமோ அதை எல்லாம் மரகதமும் அபியும் பேக் செய்து வைத்திருக்க, ஜீவாவிற்கு ஏற்கனவே டென்மார்க் செல்லும் விஷயம் அவர்கள் வீட்டில் பேசி விட்டதால் அவனுக்கு அனைத்தும் முன்கூட்டியே பேக் செய்து வைக்கப்பட்டு இருந்தது. மூவரும் ஏர்போர்ட்டில் ஃப்ளைட்டிற்காக காத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் இவர்கள் செல்ல இருந்த விமானம் புறப்படும் தகவல் ஒலிபெருக்கியில் ஒளிபரப்பப்பட… அவளோடு நின்றிருந்த வெங்கடாச்சலம், விசாலட்சி, ஆதி, துர்கா, கீர்த்திகா, கதிர் என அனைவரும் அவர்களைச் சந்தோசமாக வழி அனுப்பி வைத்தனர்.

அவர்கள் மூவரும் ஃப்ளைட்டில் ஏறி டென்மார்க் சென்று விட்டார்கள் என்பதை உறுதி செய்த பின்பு தான் ஏர்போர்ட்டில் இருந்து அனைவரும் வெளியேறினர்.

வெளியே வந்த துர்காவும் கீர்த்திகாவும் ஆதியைப் பார்த்து, “ஆதி! ஒரு வழியா ஒரு பெரிய பிரச்சினையை மூட்டை கட்டி டென்மார்க்குக்கு அனுப்பியாச்சு. இல்ல இல்ல, ஒன்னும் இல்ல, ரெண்டு பெரிய பிரச்சினையை முட்டக்கட்டி டென்மார்க்குக்கு அனுப்பியாச்சு. ஆனா பாவம் அந்த ஜீவா தான் இவங்களப் பத்தி முழுசா தெரியாம அவங்க கூட போறாரு” என ஜீவாவிற்காகப் பரிந்து பேசினால் துர்கா.

“அதைப்பற்றி எல்லாம் நீ ஏன் துர்கா கவலைப்படுற? அதையெல்லாம் ஜீவா பாத்துக்குவான். நான் அபியைப் பத்தியும் அவங்களோட அம்மாவைப் பத்தியும் முழுசா அவனுக்கு ஏற்கனவே எடுத்துச் சொல்லிட்டேன். எல்லாம் தெரிஞ்சுதான் அவன் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னான். அதனால எந்தப் பிராப்ளமும் இல்லை. அவன் அதை எல்லாம் பாத்துக்குவான். நீ கவலைப்படாத” என்பவன், “எப்படியோ பெரியம்மாவையும் அபியையும் நாட்டை விட்டு நாடு கடத்தி ஆச்சு” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ஆதி.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured