EPISODE 281
கபிலனை குறிபார்த்து உதைக்க இருந்த சங்கவியின் காலைப் பிடித்தவன், அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய்க் கட்டிலில் கிடத்திவிட்டு, தன் சட்டையைக் கழற்றிவிட்டு அவள் மீது பாய்ந்தான்.
இதைச் சற்றும் எதிர்பாராத சங்கவி, அவன் தன் அருகில் வருவதைப் பார்த்ததும் சட்டென கட்டிலில் உருண்டு அவனை விட்டுத் தள்ளிப் புரண்டு போனாள்.
மெத்தையில் பொத்தென விழுந்தவன் தனக்குக் கீழே சங்கவி இல்லாதது கண்டு ஏமாற்றம் அடைந்தான். ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதுபோல, தன்னிடமிருந்து தப்பிவிட்ட சங்கவியைத் திரும்பிப் பார்த்தவன், அப்படியே கட்டிலில் படுத்துத் தன் தலையில் கை வைத்துப் படுத்துக்கொண்டு, “என்ன சங்கவி! என்கிட்ட இருந்து மிஸ் ஆகிருவோம்னு நினைச்சியா?” என்றவன், எழுந்து நிற்கப் போனவளின் சேலைத் தலைப்பைப் பிடித்து இழுக்க…
அவள் சென்ற வேகமும், இவன் சேலையை இழுத்த வேகமும் ஒன்று சேர்ந்து சங்கவியின் உடலில் இருந்த மொத்த சேலையும் அவிழ்ந்து விட்டது.
இதைச் சற்றும் எதிர்பாராத சங்கவி, அவன் கையில் இருந்த சேலையின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் தன் மார்பை மறைத்தவாறு அவன் முன் நின்றிருந்தவள், “கபிலா, இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கவே இல்லடா. நீ இவ்வளவு மோசமானவன்னு தெரிஞ்சிருந்தா உன்னை நான் கல்யாணம் செய்திருக்கவே மாட்டேன். உன் விருப்பம் இல்லாம எப்படி நடந்துக்கிற? ச்சீ… நான் உன்னை என்னோட நண்பன்னு சொல்லவே எனக்கு வெக்கமா இருக்கு” என்று அவன் மீது வெறுப்பு உமிழும் வார்த்தைகளை வீசினாள் சங்கவி.
“அதைத்தான் நானும் சொல்றேன். நான் உன்னோட நண்பனே இல்லை. உன்னை எத்தனை வருஷமா ஒன்சைடா லவ் பண்ணிட்டு இருந்த ஒரு தீவிரக் காதல் வெறியன்னு தெரிஞ்சுக்கோ” என்று, தன் கையில் இருந்த சேலையைச் சுருட்டி வேகமாகக் கிழுக்க… சேலையின் மறுபக்கத்தைப் பிடித்திருந்த சங்கவி, அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது போய்க் கட்டிலில் விழுந்தாள்.
அவன் வெற்று மேனியில் சேலையில்லாமல் சங்கவி விழுந்துவிட… அவள் கைகள் இரண்டும் அவன் மார்பில் முழுவதுமாகப் படர்ந்து இருக்க, அவனை அவ்வளவு நெருக்கத்தில் அவள் பார்த்ததும் சங்கவியின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
விழிகள் படபடக்க, இதயம் அவள் காதுவரை மட்டும்… கபிலனின் மார்போடு அவள் மார்பு அழுத்தி இருக்க, அவள் இதயத் துடிப்பைக் கபிலன் கண்டு, “என்ன சங்கவி? உன்னோட ஹார்ட் இவ்வளவு வேகமாத் துடிக்குது?” என்று கேட்டான்.
அவன் கேட்டதும் தான், அவன் மீது இன்னமும் படுத்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவள், வேகமாக அவனிடம் இருந்து எழுந்திருக்கப் போக…
அவள் இடுப்பைக் கட்டிக்கொண்டு விடாமல் பிடித்திருந்தவன், தன் மேல் படுத்து இருந்தவளைப் பார்த்து, “இங்கே பார் சங்கவி. நீ நினைக்கிற மாதிரி நான் அவ்வளவு மோசமானவன் கிடையாது. உண்மைய சொல்லப் போனா உன்கிட்ட நான் மோசமா நடந்துக்குவேன். அப்படி நான் மோசமா நடந்துக்கணும்னா நீ எனக்கு முழுசா சம்மதம் சொன்னா மட்டுமே நடக்கும். உன்னைப் பயமுறுத்த தான் நான் இந்த மாதிரி எல்லாம் செஞ்சேன். அதை புரிஞ்சுக்கோ.”
“எப்பவுமே நீதானே எல்லாரையும் பயன்படுத்திப் பார்ப்ப? நீ பயந்தா எப்படி இருக்கும்னு பார்க்க வேண்டாமா? அதுக்காகத்தான் நான் இப்படிச் செஞ்சேன்” என்றவன், அவள் இடையில் இருந்த தன் பிடியை லேசாகத் தளர்த்திவிட்டு அவர் முகத்தைப் பார்த்தவன், தன் ஒற்றைக் கையால் அவள் முகத்தில் படர்ந்து இருந்த முடியை அவள் காதோரம் ஒதுக்கி விட்டவன்.
“நான் உன்னை ரொம்ப வருஷமா ஒன்சைடா லவ் பண்ணிட்டு இருக்கேன் சங்கவி. ஆனால் உன்னோட விருப்பம் வேற மாதிரி இருந்தது. அதனால என் காதலை உன்கிட்டச் சொல்லாமலே இவ்வளவு வருஷமும் மறைச்சுட்டேன். ஆனா அந்தக் கடவுளுக்கே நான் இவ்வளவு வருஷம் உனக்காக நினைச்சுக்கிட்டு இருந்தது தெரிஞ்சிருச்சு போல. அதனாலதான் உன்னைச் சரியா எனக்குக் கிடைக்கும்படி செஞ்சுட்டாரு. அந்தக் கடவுளுக்கு நான் கண்டிப்பா நன்றி சொல்லியே தீருவேன்” என்று தன் ரூமின் விட்டத்தைப் பார்த்தவன்,
“தலைவா, யூ ஆர் கிரேட்! தேங்க்ஸ் தலைவா” என்று சொன்னவன்.
“உன்னோட விருப்பம் இல்லாம உன்னை நான் எடுத்துக்க மாட்டேன் சங்கவி. அதுல நான் உறுதியாக இருக்கேன். நீ பயப்படாம தூங்கு” என்றான்.
இவ்வளவு நேரம் அவன் தன்னை எதுவும் செய்து விடுவானோ என்று பயந்த சங்கவி, இப்போது அவன் பேசியதைக் கேட்டு, போன நம்பிக்கை திரும்ப வந்ததுபோல உணர்ந்தாள்.
“தேங்க்ஸ் கபிலா. என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்துப் பேசுறது எனக்குச் சந்தோசம் தான்” என்று அவன் மார்பில் கை ஊன்றி எழுந்திருக்கப் போனவள், அப்போதுதான் அதைக் கண்டாள்.
அவன் இடது மார்பில் சங்கவியின் பெயர் டாட்டூவாகக் குத்தி இருந்தான்.
தானாக அவள் விரல்கள் சென்று அவன் மார்பில் இருந்த தன் பெயரை வருடிப் பார்த்தவள். நிமிர்ந்து அவனைப் பார்க்க.
இடையில் இருந்த தன் கைகளின் அழுத்தம் கூட்டி அவளை நெருக்கமாக அணைத்துக்கொண்டவன், “நல்லா இருக்கா?” என்றான்.
முகத்தில் இருந்த உணர்வுகளை அவனிடம் காட்ட மறுத்தவள் சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டு, “என்னை விடு” என்று எழுந்திருக்கப் போக…
“என்ன சங்கவி? கேட்டதுக்குப் பதில் சொல்ல மாட்டியா?” என்றான்.
“எனக்குப் பதில் சொல்ற மாதிரி இப்ப இல்லை. தூக்கம் வருது. என்னை விடு நான் தூங்குறேன்” என்றாள்.
“சரி தூங்கு” என்றான் கபிலன்.
அவனைத் திரும்பி முறைத்தவள், “இப்படி என்ன விடாமல் பிடிச்சுக்கிட்டு இருந்தா நான் எப்படிப் படுத்துத் தூங்குவது கபிலா?” என்றாள்.
“ஏன் என் மேல் படுத்து அப்படியே தூங்கலாமே” என்றான்.
“எனக்கு வேற ஆளைப் பாரு” என்றவள், அவன் கைக்குள் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்து எழுந்திருக்கப் போக.
“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போய் வேற ஆளைப் பார்த்தால் நல்லாவா இருக்கும்?”
“அப்படியே நான் வேற பொண்ணு கூட ஒரு மாதிரி இருந்தா, நீ என்ன சும்மா விடுவ என்று நினைக்கிறாயா? அதுக்கு வாய்ப்பே இல்லை” என்றான் கபிலன்.
“நான் எதுவும் நினைக்க மாட்டேன். என்னை நிம்மதியா விட்டுட்டு நீ எந்தப் பொண்ணு கூட வேணா போய் பேசு, பழகு. வேணும்னா என்னைத் டைவர்ஸ் பண்ணிட்டு கூட இன்னொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க. ஆனா தயவு செய்து என்னை விட்டுடுடா சாமி” என்றாள்.
அப்படிச் சொன்னதும் கோபம் வந்துவிட்டது கபிலனுக்கு. அவள் தாடையைப் பிடித்து அழுத்தியவன், “என்னடி சொன்ன? என்ன வார்த்தை சொன்ன? உன்னை விட்டுட்டு வேற ஒருத்தி கூடப் போகவா? உன்னை டைவர்ஸ் பண்ணிக்கிட்டு! எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே இந்த வார்த்தையைச் சொல்லுவ? உன்னை டைவர்ஸ் பண்றதுக்காகவா இத்தனை வருஷம் வெயிட் பண்ணி உன்னைக் கல்யாணம் பண்ணினேன்?”
“இங்க பார் சங்கவி. நீ என் காலம் முழுக்க என்னிடம் நெருங்கி வராமலே இருந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா என் வாழ்க்கையில் ஒரு பொண்ணு இருக்கான்னா அது நீ மட்டும் தான். அதை ஞாபகம் வச்சுக்கோ. இனிமேல் என் முன்னாடி இந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்காதே. இப்போ பொறுமையாப் பேசுற மாதிரி மத்த நேரத்துல நான் இருக்க மாட்டேன்” என்றவன், அவளின் இடையில் இருந்து தன் பிடியைத் தளர்த்த.
சட்டென அவனிடமிருந்து விலகி எழுந்திருக்கப் போக… பிடியைத் தளர்த்தியவன், அவள் இடையில் லேசாகக் கை கொடுத்துத் தூக்கிக் கட்டிலில் அவளை நன்றாகப் படுக்க வைத்தவன், அப்படியே அவள் இடையில் கை கொடுத்துக் கட்டிக்கொண்டு, அவள் மார்பில் முகம் வைத்துக் கண் மூடி அமைதியாகப் படுத்துவிட்டான்.
இதைச் சற்றும் எதிர்பாராத சங்கவி, தன் மார்பில் அவன் முகம் உரச, முகத்தில் இருந்த குட்டி ரோமங்கள் அவளைச் சிறுசிறு ஊசிகளாகக் குத்தி அவளை ஏதோ செய்தது.
“என்ன இது? தயவுசெய்து என்னை விடு. நான் அங்க இருக்கிற சோபாவுல படுத்துகிறேன்” என்றாள்.
“நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி. கல்யாணம் ஆன பிறகு நீ தனியா நான் தனியாப் படுத்துத் தூங்குறதா? அதுக்கு வாய்ப்பே இல்லை. இந்தத் தருணத்திற்காக நான் எவ்வளவு நாள் காத்திருந்தேன்னு உனக்கு எங்கே தெரியப்போகுது? பேசாமப் படுத்துத் தூங்கு. இல்லைன்னா நடக்கிறது வேற” என்று எட்டி அவளைத் தாண்டி இருந்த மின்விளக்கின் சுவிட்சை ஆஃப் செய்தான்.
அவனைத் தன்னிடமிருந்து விலக்க முடியாமல் போராடிய சங்கவி, வேறு வழியே இல்லாமல் அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.
இவ்வளவு நேரம் அவள் போராடியதை எல்லாம் ரசித்துக்கொண்டே அவளை அணைத்தபடி படுத்திருந்தவன், சங்கவி சிறிது நேரத்தில் நன்கு உறங்கிவிட, விழித்து நிமிர்ந்து உறங்கும் அவளைப் பார்த்தான்.
மெல்லச் சிரித்தவன், அவள் மார்பில் தலை வைத்துப் படுத்திருந்தவன் குனிந்து அங்கே பார்க்க, லேசாக வெளியில் எட்டிப் பார்த்திருந்த அவளது மான் குட்டிகள் இரண்டையும் ரசித்தவன், அதில் தன் இதழ் வைத்து அழுந்த முத்தமிட்டு, “சீக்கிரமே நீங்க எல்லாரும் எனக்குச் சொந்தம்” என்றவன், மீண்டும் அவள் மார்பில் தலை வைத்துப் படுத்து உறங்கத் தொடங்கினான்.
அவள் மார்பில் முத்தம் கொடுத்ததில் சில்லென்று இருந்த அவன் இதழும், குறுகுறுத்த மீசை முடியும் தூங்காமல் நடித்துக் கொண்டிருந்தவளை ஏதோ செய்தது.
லேசாகக் கண்விழித்து, மார்பில் தலை வைத்து உறங்குபவனைப் பார்த்தவள்.
‘நண்பன்’ என்று நினைத்துத் திருமணம் செய்து கொண்டவன், இன்றுதான் ‘உனக்கு நண்பன் இல்லை, கணவன்’ என்று உணர்த்துவது அவளைச் சொல்ல முடியாத குழப்பத்தில் ஆழ்த்தியது. இனி தன்னுடைய வாழ்க்கை எப்படிப் போகப்போகிறது, என்ன ஆகப்போகிறது என்ற எந்த ஒரு யோசனையும் இல்லாமல் நான் இருப்பதாக உணர்ந்தவள்.
அதே யோசனையோடு நீண்ட நேரம் விழித்துக் கொண்டிருந்தவள், அவளையும் அறியாமல் கண் மூடி உறங்கிவிட்டாள்.
