அயோக்கியன் 19
“ஓவி.. ஓவி… சீக்கிரம் வாடி இன்னும் உள்ள என்ன பண்ணிட்டு இருக்க?” என்று வெளியே இருந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தான் ராகவ்.
“ஷ்! என்ன ராகவ் வந்துச்சு இப்போ உனக்கு. என்னை நிம்மதியா குளிக்க கூட விட மாட்டேங்குற” என்று முகத்திற்கு சோப்பு போட்டுக்கொண்டிருந்தவள் உள்ளிருந்த படி குரல் கொடுக்க.
“ஏய் எனக்கு என்ன டி தெரியும் இப்பொண்ணு பாத்து வயிறு முட்டிகிட்டு வருது எனக்கு” என்று கத்தினான் வெளியே இருந்து.
“நான் குளிக்க வரும்போதே உன்கிட்டே கேட்டேனா?இல்லையா? ” என்று சலித்துக் கொண்டவள் ” இரு வரேன்” என்றவள் முகத்தை அவசரமாக கழுவிக்கொண்டு டவல் வார்டுரோபை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.
பாத்ரூம் கதவை அவள் திறந்து கொண்டு வெளியே வர.. “ஏய் நில்லு டி ” என்று அவளை நிறுத்தி இருந்தான் ராகவ்,
“என்ன ராகவ் ” என்றாள் அவனை பார்த்து.
“நான் சும்மா சொன்னேன் எனக்கு பாத்ரூம் போகணும்னு” என்று சிரித்தான்.
அவனை அதிர்ந்து பார்த்தவள் “உனக்கு நான் குளிக்கும்போது தான் வந்து விளையாடணுமா? பாரு நீ அவசரப்படுத்தினதும், நானும் அவசரமா குளிச்சிட்டு வந்துட்டேன்” என்றாள் கடுப்பாக.
அவளை பார்த்து சிரித்தவன் “ஓ! நீ சரியா குளிக்கலையா? சரி வா அப்போ ரெண்டு பேரும் சேர்த்து குளிக்கலாம்” என்று அவளை அப்டியே தள்ளிக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைய முற்பட்ட்டான்.
அவன் மார்பில் கை வைத்து தடுத்தவள் “இதுக்கு தான் என்னை அவ்ளோ அவசரமா கூப்டியா நீ..” என்று அவனை முறைத்தாள்.
அவனும் ம்ம்ம்… என்று வழிந்துகொண்டே சிரிக்க..
அவனை ஏகத்துக்கும் முறைத்துவிட்டு “ம்ஹும்.. முடியாது ” என்று ஓவியா ரூமிற்குள் போக முயல..
“ஏய்! ஓவி வாடி “என்று அவள் கையை பிடித்துக்கொண்டு அவன் கெஞ்ச
“ம்ஹும்.. “என்று தலையை ஆட்டியவள் அவனோடு செல்ல மறுக்க..
“நானும் கெஞ்சிட்டே இருக்கேன் ரொம்ப தான் பண்ற டி ” என்றான் ராகவ்வும் விரைப்பாக.
“ஆமா டா அப்படித்தான் பண்ணுவேன் என்ன டா பண்ணுவ ” என்று அவளும் வீம்பு பிடிக்க..
“நீ இப்படி எல்லாம் சொன்னா கேக்க மாட்ட.. உன்ன.. ” என்று அவளை நெருங்கினான்,
“என்ன… மிரட்டுறியா?” என்று அவளும் அவனிடம் மல்லுக்கு நிற்க..
சட்டென அவள் ஆடையை பிடித்து தன் பக்கம் இழுத்தவன் “ஒய் திருட்டு கழுதை .. நம்ம இங்க வந்ததே ஹனிமூனை என்ஜோய் பண்ண தான டி .. இப்படி எதுக்கு எடுத்தாலும் வீம்பு பண்ணினா உன் காக்கி பாவம் இல்லையா??” என்று பாவமாக அவன் பார்க்க..
“ம்ஹும் இல்ல… ” என்று அவன் கையை தட்டிவிட்டு திரும்பி ஓவியா நடக்க..
“இவளை.. ” என்று பின்னால் சென்றவன் ஓவியாவை அப்படியே தூக்கிக்கொண்டு பாத்ரூமிற்குள் சென்று கதவை அடைத்தான்.
“டேய் விடு .. விடு டா.. ” என்று ஓவியா திமிர..
“திருட்டு கழுதை உன் கழுத்துல நான் தாலி கடினத்துக்கு பிறகு ரொம்ப தான் துள்ளுற டி..” என்றான்.
அவனை ஏறிட்டவள் முறைக்க.. “என்ன டி முறைக்குற” என்று அவள் இதழ்களை குனிந்து பார்த்தவன் மெல்ல அவள் இதழில் முத்தம் வைக்க துவங்க,
“ராகவ் அவளது இதழ்களில் பதித்த அந்த முத்தம், ஓவியாவின் உடலில் ஒரு மின்சாரத்தைப் பாய்ச்சியது. அவளது பிடிவாதம், கோபம் எல்லாம் அந்த ஒரு நொடியில் பனி போல உருகிப் போனது. ராகவின் கரங்கள் அவளது இடையைச் சுற்றி இன்னும் பலமாக இறுகின.
“ராகவ்… விடுடா…” என்று அவள் முணுமுணுத்தாள். ஆனால் அவளது குரலில் எதிர்ப்பு இல்லை, ஒருவிதமான ஏக்கம் மட்டுமே இருந்தது.
“மாட்டேன் டி… இந்த நிமிஷத்துக்காக நான் எவ்வளவு நேரம் காத்துட்டு இருந்தேன் தெரியுமா? உன்னோட இந்த வெட்கம், இந்த கோபம் , பயம் … இது எல்லாமே எனக்குத்தான்,” என்று அவன் அவள் காதோரம் கிசுகிசுக்க, அவளது உடல் சிலிர்த்தது.
ராகவ் மெல்ல கையை நீட்டி ஷவரைத் திறந்து விட்டான். ஜில்லிடும் தண்ணீர் அவர்கள் இருவர் மீதும் அருவியாய் கொட்டியது. ஓவியா திடுக்கிட்டு அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
மேலிருந்து கொட்டும் தண்ணீரின் குளிர்ச்சி ஒருபுறம், ராகவின் உடலின் வெப்பம் மறுபுறம் என ஓவியா ஒரு புதுவிதமான உணர்வில் மிதந்தாள் அவன் அவளது ஈரமான கூந்தலை மெல்ல ஒதுக்கிவிட்டு, அவளது கழுத்து வளைவுகளில் முத்தமிடத் தொடங்கினான் ராகவன்
அதுவரை துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த அந்த ‘திருட்டு கழுதை’, இப்போது அவனிடம் முழுமையாகச் சரணடைந்தாள்.
“ஏய் ஓவி… கண்ணைத் திறந்து என்னைப் பாருடி,” என்றான் ராகவ் முகத்தோடு அவளை அழைத்தான்.
அவள் மெல்லக் கண்களைத் திறந்தாள். அவனது கண்களில் தெரிந்த காதலும், ஆசையும் அவளை நிலைகுலைய வைத்தது. அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டவள், “ராகவ்… எனக்கு ஒரு மாதிரி இருக்குடா,” என்றாள் மென்மையாக.
அவன் அவளை அப்படியே சுவரோரம் சாய்த்தான். அவளது ஈரமான ஆடை அவளது மேனியை ஒட்டி உறவாட, ராகவின் கண்கள் அவளது அழகில் லயித்தன. “நீ ரொம்ப அழகா இருக்க ஓவி… என் பொண்டாட்டிங்கிற திமிர் எனக்கு இப்ப ரொம்ப அதிகமா இருக்கு,” என்று சொல்லிக் கொண்டே அவளது நெற்றியில் நீண்ட முத்தம் ஒன்றை வழங்கினான்.
அவளது இதழ்கள் நடுங்கின. ராகவ் மீண்டும் அவளது இதழ்களைச் சிறைபிடித்தான். இந்த முறை அந்த முத்தத்தில் வேகம் இருந்தது, ஏக்கம் இருந்தது, எல்லாவற்றையும் விட மேலாக தீராத காதல் இருந்தது.
“நம்ம வந்த வேலை… ஹனிமூன்… இதோ இப்பதான் ஆரம்பிக்குது,” என்று அவன் குறும்புத்தனமாகச் சிரிக்க, ஓவியா வெட்கத்தில் அவன் தோளில் கிள்ளினாள்.
“ஆ… வலிக்குதுடி பிசாசே!” என்று அவன் கத்த,
“வேணும்டா உனக்கு… ரொம்பத்தான் பண்ற,” என்று அவள் சிரிக்க, அந்தச் சிரிப்பு மீண்டும் ஒரு முத்தத்தால் அடக்கப்பட்டது. சடுதியில் இருவரின் ஆடையும் விடுதலை கிடைத்த சந்தோசத்தில் தரையில் கிடைக்க.. இருவரும் ஷவருக்கு அடியில் ஒரு முத்த போராட்டத்தையே நடத்திக்கொண்டிருந்தனர்.
குளியலறையிலிருந்து அவளைத் தூக்கிக் கொண்டு மெல்ல அறைக்கு வந்தான் ராகவ். அவளை மென்மையான மெத்தையில் கிடத்தினான். அந்த அறையில் குளிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த காதல் நெருப்பு அந்த அறையை வெப்பமாக்கியது.
ராகவ் அவளது பாதங்களில் இருந்து முத்தமிடத் தொடங்கினான். ஓவியா தன் கைகளால் கண்களை மூடிக்கொண்டாள். “ராகவ்… போதும்டா…” என்று சிணுங்கினாள்.
“இப்பதானே ஆரம்பிச்சிருக்கேன்… அதுக்குள்ள போகுமா?” என்று அவன் அவளது கைகளை விலக்கி, அவளது கண்களை நேராகப் பார்த்தான்.
அந்த இரவு அவர்களுக்குப் புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொண்ட, தங்களை ஒருவருக்கொருவர் அர்ப்பணித்துக் கொண்ட அற்புதமான இரவு அது. ராகவின் ஒவ்வொரு அசைவிலும் ஓவியா தன்னைத் தொலைத்தாள். ஓவியாவின் ஒவ்வொரு மென்மையான தீண்டலிலும் ராகவ் அவள் ஆசை,காதல் , மோகம் என அனைத்தையும் உணர்ந்தான்.
ரூமுக்குள் வந்ததில் இருந்து இல்லை இல்லை இந்த வில்லாவிற்கு வந்ததில் இருந்து ரதி ராக்கியிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவளால் கண் முன் நடந்த அந்த கொலையை கண்டு அமைதியாக இருக்க முடியவில்லை.
“பீடா… ஓய்.. என் கூட பேசு டி இப்படி பேசாமையே எவ்ளோ நேரம் தான் நீ இருப்ப” என்றான்.
“எவ்ளோ நேரம் இல்ல எவ்ளோ நாள்னு கேளு” என்று திரும்பி அவனை முறைத்தவள். “ஏன் டா உனக்கு ஒரு உயிர்னா அவளோ ஈஸியா போயிருச்சா. உன்னால எப்படி யோசிக்காம ஒருத்தனை கொள்ள முடிஞ்சது” என்றாள்.
“ஏய் நான் சொல்றதை நீ புரிஞ்சுக்கவே மாட்டியா டி. நான் மட்டும் அவனை கொள்ளாம விட்டிருந்தா இன்னேரம் என் தங்கச்சி விதவையாகிருப்பா, ஏன் ராகவ் உன் கூடப்பிறந்தவன் தானே அவன் மேல உனக்கு பாசம் இல்ல. நீ சொன்ன மாதிரி அவனை கொள்ள வந்தவனை நான் எதுவும் பண்ணலையின்னா , அவன் ராகவ்வை போட்டு தள்ளிட்டு போயிட்டே இருந்திருப்பான் டி.” என்று கோபமாக பேசினான்.
“அதுக்கு.. அதுக்குன்னு அவனை பிடிச்சு தடுத்திருக்கலாம். அதை விட்டுட்டு யோசிக்காம துப்பாக்கி எடுத்து சுட்டுடுவியா நீ” என்றாள் கோபம் குறையாமல்.
“ஏய்! அவன் ராகவ் குறிபார்த்து சுட தயாரா இருந்தான் அந்த நேரத்துல நான் போய் தடுக்குறதுக்குள்ள என்ன வேணா நடந்திருக்கலாம். அவன் ராகவை சுடுறத நீயும் தான பார்த்த. ராகவ் மட்டும் இல்ல அந்த ஹோட்டல்ல சத்தம் கேட்டு எத்தனை பேர் வெளிய வந்தாங்க, அவங்களை எல்லாம் அவன் சுட்டிருந்த என்ன டி பண்றது. அவன் ஒருத்தன் உயிரை எடுக்க கூடாதுனு நீ சொல்ற. ஆனா விட்டிருந்தா அவன் அங்க இருந்த மொத்த பேரையும் சுட்டு தள்ளிட்டுப் போயிட்டே இருந்திருப்பான்” என்று பொறுக்க முடியாமல் பேசினான் ராக்கி.
ரதியோ அதுவும் அதன் பின் கேட்டுக்கொள்ளவில்லை பேசவும் இல்லை . திரும்பி படுத்துக்கொள்ள..
மூச்சு வாங்க பேசியவன் அவள் அமைதியாக படுத்துவிட்டதை பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டே அறையை திறந்து கொண்டு வெளியேறி இருந்தான்,
“ச்சே நம்ம கிட்டே இருக்க ஆளுக எல்லாமே வேஸ்ட் டா உதயா. அந்த வீணாப்போனவனை நம்பி எவ்ளோ பெரிய வேலையை கொடுத்தேன். நான் பாத்துக்கிறேன் கிழிச்சிருவேன் தலைவான்னு எவ்ளோ பேசினான். இது தான் அவன் பாக்குற லட்சணமா? இப்போ பாரு அவனையே கண்ணுல பாக்க முடியாத அளவுக்கு வெளிநாட்டுல போய் செத்துப் போயிருக்கான்” என்று புலம்பினார் பரமசிவம்.
“நடந்தது நடந்திருச்சு தலைவரே.. நமக்கு அந்த ராக்கியை போடறதுக்கு முன்னாடி அவன் உயிரையே வெச்சிருக்க அவ தங்கச்சி புருஷனை தான் முதல்ல போடணும். அவனை போட்டாலே அந்த ராக்கி ஆட்டம் காண ஆரம்பிச்சிருவான். அப்போ அவனை போடணும், துடி துடிக்க அவனை சாவடிக்கணும்”என்றான் உதயா அவனுக்கும் ராக்கிக்கும் இருந்த பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு.
“அந்த சுறாவ வேற வேணாம்னு தொரத்தி விட்டாச்சு , அவன் என்னடான்னா நேரா அந்த சிவராஜான்கிட்டேயே போய் வேளைக்கு சேருவான்னு நான் நினைச்சு கூட பாக்கல. இத்தனை வருசமா என்கிட்டே வேலை பார்த்தான். என்னோட லீகல் , இல்லீகல் எல்லாமே அவனுக்கு தெரியும் . ஆனா இப்போ அந்த சிவராஜன்கிட்டே போனதும் அவனுக்கு விசுவாசி ஆகி என்னை பத்தி எல்லாமே சொல்லிட்டா அப்பறோம் என் அரசியல் ஆணிவேரையே அந்த சிவராஜனும், அவன் புள்ள ராக்கியும் மொத்தமா அறுத்து எரிஞ்சிருவானுங்களே.. ” என்று கொதித்துக்கொண்டிருந்தார் பரமசிவம்.
“ஐயா! எதுக்கும் அந்த சுறாவை ஒரு முறை அழைச்சி பேசிப்பாருங்களேன். அவனை மறுபடியும் நம்ம பக்கம் இழுக்க முடியுமான்னு பாக்கலாமே”என்றான் உதயமூர்த்தி.
“அவன் அப்படி லேசுல கூப்பிட்டதும் வர ஆளு இல்ல உதயா” என்றார்.
“ஐயா நான் வேணும்னா ஒருவாட்டி அவனை கூப்டு பேசிப்பாக்குறேன். அப்பறோம் உங்ககிட்டே அழைச்சிட்டு வரட்டுமா?” என்றான் .
“ம்ம்ம் அப்படியா? ” என்று யோசித்தவர் “சரி பேசிப்பாரு, ஏதாவது கோக்கு மாக்கு வேலை அவன் பாக்குறான்னு தெரிஞ்சா அவனை அங்க வெச்சே போட்டு தள்ளிரு” என்றவர் எழுந்து சென்றுவிட..
“ம்ஹும். அவன்கிட்டே எவன் போய் சமாதானம் பேசுறேன்னு சொன்னது அவனை வர சொல்றதே அவனை போட்டு தள்ளத்தான்” என்று நினைத்தபடி சுறாவின் கையாளுக்கு போன் போட்டான் உதயமூர்த்தி
