Home Uncategorizedதீயில் விழுந்த தூரிகை 1 TO 5

தீயில் விழுந்த தூரிகை 1 TO 5

by Layas Tamil Novel
80 views

EPISODE 1 TO 5

EPISODE 1

“தலைவா! வா… உனக்காகத்தான் எல்லாரும் காத்திருக்காங்க..,” என்று ஒருவன் குரல் கொடுக்க, “டேய், என்ன அவசரம்? பொறு! தலைவன் கிளம்பி வர வேண்டாமா? சும்மா அவரை அவசரப்படுத்துற,” என்றான் அந்தத் தலைவனின் மற்றொரு அல்லக்கை.

“காலையிலேயே ஆரம்பிச்சுட்டீங்களாடா உங்க அலப்பறையை? கொஞ்சம் பொறுங்கடா! உங்க தலைவன், நான் பெத்த தறுதலை, இப்போதான் அவங்க அம்மா கையால் ஊட்டிவிடச் சொல்லி சாப்பிட்டு இருக்கான். நீங்க என்ன கத்தினாலும் வரமாட்டான் அந்தத் தறுதலை. அவன் அம்மாவும் அவன் சாப்பிடாமல் அனுப்ப மாட்டா,” என்று தன் மகனைப் பெருமையாகக் கழுவி ஊற்றிக்கொண்டு இருந்தார் ராஜன். 

“என்ன அண்ணாத்த இப்படி நீயே நம்ம தலைவன் காலை வாருற?” என்று கையில் ஒரு பெரிய கேக் பெட்டியோடு அங்கு வந்தான் தம்பிரான் என்கிற தம்பி, அந்தத் தலைவனின் தீவிர தொண்டன், ரசிகன், எடுபிடி அனைத்தும் என்று கூடச் சொல்லலாம்.

“வாடா, நீ மட்டும்தான் பாக்கி. எங்கே காணோமேன்னு நினைச்சேன். அவனை கெடுக்குறதே நீங்க தாண்டா! ‘படி படி’ன்னு சொன்னா கேட்கமாட்டேன்னு இப்படி மார்க்கெட்டைப் பார்க்குறேன்னு கல்லூரியை விட்டு நின்னுட்டான். சரி, மார்க்கெட்டில் நல்ல பையனா இருப்பானு பார்த்தா, ஆரம்பத்துல நான் எப்படி இருந்தேனோ அதே மாதிரி இந்தத் தறுதலையும் இருக்கான்,” என்று புலம்பினான் ராஜன்.

“டேய் யுவா, எதுக்குடா என் பையனை சும்மா தறுதலைன்னு சொல்ற? அவனுக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதைச் செய்றான். உனக்கு என்னடா வந்துச்சு?” என்று அங்கு வந்தாள் இதழ்யா. “நீ என்னவோ ரொம்ப நல்லவன் மாதிரியும் என் பையன் உள்ளுக்குள்ளேயே மோசமானவன் மாதிரி இல்ல பேசிட்டு இருக்க. நீ அப்போ மார்க்கெட்டில் இருந்த மாதிரி ஒண்ணும் என் பிள்ளை இல்லை அவன். கட்டப் பஞ்சாயத்து பண்றான், வட்டிக்கு விட்டு வசூல் பண்றான், யாராவது தப்பு செஞ்சா தட்டி கேக்குறான். ஆனா, நீ இதை மட்டுமா மார்க்கெட்டுல பண்ணிட்டு இருந்த? ஊர்ல ஒருத்தியை விடலையே,” என்றாள்.

“ஏய் ஏய்! அதெல்லாம் அந்த வயசுல பண்ணினதுடி. அதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு மொத்தமா மாறிட்டேனே. அப்பறம் ஏன் அதை இப்போ இழுத்துட்டு வர? நான் பாவம் இல்லையா?” என்று அவள் யுவராஜன் இதழ்யாவின் தோளைச் சுரண்டினான்.

“அதான் சொல்றேன், என் மகன் அந்த விஷயத்துல தங்கம்டா. இன்னொரு வாட்டி நீ அவனை தறுதலைன்னு சொல்லு. அப்பறம் உனக்கு வராண்டாவில் தான் பாயைப் போடணும், பார்த்துக்க!” என்றாள்.

“ஐயோ, இப்படி அடிமடியில கை வைக்கலாமா? என் பாப்பா, நான் உன் மகனை எதுவும் சொல்லலைடி, எதுவுமே சொல்லலை. போதுமா?” என்று இதழ்யாவிடம் சரண்டர் ஆனான்.

“என்ன அண்ணாத்த, அம்மா கிட்டே இப்படிப் பம்முறிங்க?” என்று சிரித்தான் தம்பி.

“டேய், உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல இல்ல? அப்படிதான் பேசுவ,” என்ற ராஜன், “எங்கடி உன் அருமைப் புத்திரன்? அவன் பிறந்தநாளுக்கு மார்க்கெட் ஆளுங்க எல்லாரும் இங்கே இருக்காங்க. இவனைக் என்னடி இன்னும் காணல?” என்றான்.

“இப்போதான் சாப்பிட்டான். இருங்க, புது டிரஸ் எடுத்து வெச்சிருக்கேன். போட்டுட்டு வர வேண்டாமா?” என்றாள்.

“ரொம்பத்தான் அவனைத் தாங்குறடி,” என்று முறுக்கினான் ராஜன்.

“சும்மா இரு யுவா,” என்றவள், “அக்னி கண்ணா, ரெடியாகிட்டியா? எல்லாரும் உனக்காகத்தான் காத்திருக்காங்க. வாடா,” என்று குரல் கொடுத்தாள்.

“தலைவா, வா… வந்து கேக்கை வெட்டு தலைவா,” என்று தம்பி குரல் கொடுக்க, உள்ளிருந்து நீல ஜீன்ஸ் அணிந்து, பழுப்பு நிற லினன் சட்டை அணிந்து, முறுக்கு மீசையை மேலும் முறுக்கிவிட்டபடி, தாடியைத் தடவியபடி வந்தவன், “ஹாய் செல்லம்ஸ், எல்லாரும் வந்தாச்சா?” என்றான் சிரித்தபடி. ராஜன், இதழ்யாவின் புத்திரன் அக்னிமித்ரன்.

“வந்தாச்சு அக்னி. நீ வந்து முதல்ல கேக்கை வெட்டு,” என்று அக்னியிடம் வந்தான் தம்பி.

அவன் தோளில் கையைப் போட்ட அக்னி, “என்னடா, காலையிலேயே கேக்கை எடுத்துட்டு வந்துட்ட? நான் தான் ஈவினிங் மார்க்கெட்டில் பார்ட்டி பண்ணலாம்னு சொன்னேனே,” என்றான் ரகசியமாக.

“அட, என்ன அக்னி நீ? வீட்டில் எப்படியும் அம்மா கேக் வெட்டி உன் பிறந்தநாளைக் கொண்டாடுவாங்க. நாங்க எதுவும் பண்ணாம அமைதியா இருந்தா சந்தேகம் வரும் இல்ல?” என்றான்.

“ம்ம்ம்… பரவாயில்லை. என்கூட சேர்ந்ததுல இருந்து நீயும் உன் மூளையும் வேலை செய்யுது,” என்று சிரித்தவன், “சரி வா, நம்ம கேக் வெட்டலாம்,” என்று திருப்பி நிறுத்தப்பட்டிருந்த காரின் ட்ரங்க் மீது வைத்திருந்த கேக்கை வெட்ட வர, அவன் அருகில் வந்து இதழ்யா நின்றார்.

ராஜனை அழைக்க, அவன், “நான் இங்கே இருந்தே பார்த்துக்கிறேன். நீயே உன் புள்ளை பிறந்தநாளைக் கொண்டாடு. நான் என் பொண்ணு பிறந்தநாளை இதைவிடச் சிறப்பா கொண்டாடிக்கிறேன்,” என்றவன், ராஜன் அருகில் தடியை ஊன்றி நடக்க முடியாமல் வந்து நின்ற பழனியிடம், “ஏய் தாய்க் கிழவி, எங்க நந்துவை காணோம்?” என்றான்.

“அவளா? ஆபீஸ் கிளம்புறேன்னு வந்தாளே,” என்று நடுங்கிக்கொண்டே கிழவி நந்து என்கிற யதுநந்தினியைத் தேடியது.

“அக்னி, இந்த கேக்கை வெட்டு,” என்று கேக் வெட்டும் கத்தியை அவனிடம் நீட்டினார் இதழ்யா.

சுற்றி இருந்தவர்கள் பிறந்தநாள் பாடல் பாட, அதைக் கேட்டுக்கொண்டே கேக்கை வெட்டுவதற்காக அக்னி குனிய, அப்போது திடீரென்று காரின் ட்ரங்க் திறந்தது. அதில், ட்ரங்க் மீது வைத்திருந்த கேக் வழுக்கி கீழே விழுந்துவிட, அதில் இருந்து சிதறிய கேக் அக்னியின் முகத்திலும், சட்டையிலும் அப்பியது.

“ஹேய், யாருடா அது? என் தலைவன் கேக் வெட்டுற நேரத்தில் கார் டிக்கியைத் திறந்தது?” என்று ஒருவன் பொங்கி எழ, “ஏன்? நான் தான் திறந்தேன். என்ன இப்போ?” என்றபடி காரைத் திறந்து கொண்டு வந்தாள் யதுநந்தினி, ராஜன், இதழின் முதல் புதல்வி.

“அங்கே பார்றா, என் செல்லக்குட்டி சரியான நேரத்துல என்ட்ரி கொடுத்திருக்கா,” என்று கைதட்டி அங்கு நடந்த நிகழ்வை ரசித்து ராஜன் பேச, முகத்தில் வழிந்த கேக்கை துடைத்துக்கொண்டே அக்னி திரும்பி ராஜனை முறைத்தான்.

“போடா” என்பது போல அவனை அசால்ட்டாகப் பார்த்துவிட்டுத் திரும்பியவன் இதழ்யாவின் கனல் பார்வைக்குள் மாட்டிக்கொண்டான்.

“அய்யய்யோ, இவ இருப்பது தெரியாமல் வாயை விட்டுட்டேனே,” என்று ராஜன் பம்மிக்கொண்டு பழனியின் பின்னால் ஒளிந்துகொண்டான்.

“டேட், சீக்கிரம் கிளம்பி வாங்க. எனக்கு மீட்டிங்குக்கு நேரம் ஆச்சு,” என்று நந்தினி அழைக்க, “நேரம் காலம் தெரியாமல் என்னை இன்னிக்குன்னு பார்த்து மீட்டிங்குக்குக் கூப்பிடறாளே,” என்று பம்மிக்கொண்டே அந்த அரண்மனைப் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்தவன், “ஹெஹெஹெ, முகத்தைத் துடைச்சுக்கப்பா,” என்று மகனையும், மனைவியையும் பார்த்து வழிந்தான்.

“என்ன நந்து, இப்படி பண்ணி வெச்சிருக்க? ஆத்தாளும் புள்ளையும் சேர்ந்து இன்னிக்கு என்ன எல்லாம் பண்ணப் போறாங்களோ,” என்றான் ராஜன்.

“டேட், விடுங்க, பார்த்துக்கலாம்,” என்று நந்தினி திரும்பி காரை எடுக்கப் போக, “ஏய், நில்லுடி,” என்று இதழ் அதட்டவும், “வாட் மாம்? எனக்கு மீட்டிங்குக்கு நேரம் ஆச்சு. சீக்கிரம் சொல்லுங்க,” என்று அழுதுகொண்டாள் நந்தினி.

“எதுக்குடி இப்படி பண்ணின? மற்ற நாளில் தான் அவன்கிட்டே எப்பவும் ஏதாவது வம்பு வளர்த்து இருப்ப. இன்னிக்குமா இப்படி நடந்துக்கணும்? இன்னிக்கு அவனோட பிறந்தநாள்டி. நியாயப்படி பார்த்தா அவனுக்கு நீதானே முதல் ஆளா வாழ்த்து சொல்லியிருக்கணும்,” என்றார்.

“மாம், எனக்கு முக்கியமானவங்க பிறந்தநாளாக இருந்தால் நான் முதல் ஆளா வாழ்த்து சொல்லியிருப்பேன். இவனுக்கெல்லாம் வாழ்த்து சொல்லி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பலை,” என்றாள்.

“சரி, நீ வாழ்த்து சொல்ல வேண்டாம், பரவாயில்லை, போகட்டும். எதுக்கு இப்படி அவன் கேக் வெட்டுற நேரம் கார் ட்ரங்க்கை திறந்த? பாரு, கேக் மொத்தமும் நாஸ்தி ஆகிடுச்சு. அது கூட பரவாயில்லை, அவன் டிரஸ், முகம் எல்லாம் அப்பிருச்சு,” என்றாள் மகன் பிறந்தநாள் விழா இப்படி கெட்டுவிட்டதே என்ற ஆதங்கத்தில்.

“மாம், எனக்கு மீட்டிங்குக்கு நேரம் ஆச்சு. நான் ஆபீஸ் கிளம்ப இருந்தா என் கார் மேல கேக் வெச்சு ஆள் எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. இது எவ்வளவு காஸ்ட்லியான கார் தெரியுமா? இதுல வந்து கேக்கை வெச்சு இந்த சில்லியோட பிறந்தநாளைக் கொண்டாடனுமா? அதான் வேண்டுமென்றே பண்ணினேன்,” என்றாள் தெனாவெட்டாக.

“ஏய், யாருடி சில்லி? நீதான்டி சில்லியா நடந்துகிட்டு இருக்க,” என்றான் கோபம் தாங்காமல் அக்னி.

“டேய், போடா! வந்துட்டான், படிக்காமல் ஊரைச் சுத்திட்டு ரவுடியிசம் பண்ணிட்டு இருக்க. நீ எல்லாம் என் முன்னாடி நின்னு பேசக்கூட தகுதி இல்லாதவன்,” என்றவள், “டேட், வாங்க, போகலாம்,” என்று கார் கதவைத் திறந்து உள்ளே ஏறி அமர்ந்தாள்.

“ஏய், என்னடி சொன்ன?” என்று அக்னி ஆத்திரம் கொண்டு அவளிடம் செல்லப் போக, “டேய் அக்னி, வேண்டாம் விடு. அவளைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே. பிறந்தநாளும் அதுவுமா நீ இப்படி டென்ஷன் ஆகிட்டு இருக்காத,” என்றவள், “டேய் தம்பி, மேல அக்னி ரூமில் வேற புது சட்டை இருக்கு. அதை எடுத்துட்டு வா,” என்று அவனை அனுப்பி வைத்தவள், “அக்னி, நீ கிளம்பு. மார்க்கெட்டுக்கு நேரம் ஆச்சு இல்ல? இதை நினைத்து இந்த நாளை வீணாக்கிக்காதே, ஓகேவா?” என்று மகனைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.

மார்க்கெட்டில் இருக்கும் அவர்கள் பழைய வீட்டில், சோபாவில் சாய்ந்து படுத்து இருந்தவன் அருகில் வந்த தம்பி, “அக்னி, நம்ம மார்க்கெட் ஆளுங்க உன் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு செஞ்சு வெச்சிருக்காங்க. நீ வந்தா கேக் வெட்டிரலாம்,” என்றான்.

“நான் எங்கேயும் வரல,” என்றான் அக்னி.

“என்ன அக்னி இப்படிச் சொல்ற? நம்ம மார்க்கெட் ஆளுங்க உனக்காக எவ்வளவு பண்ணி வெச்சிருக்காங்க? நீ இப்படி சொல்லலாமா?” என்றான் தம்பி.

“டேய், எனக்கு மூடு இல்லை,” என்றான் எரிச்சலாக.

“அக்னி…” என்று தம்பி மீண்டும் அழைக்க, விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்தவன், “காலையில் அவ என்னை அவமானப்படுத்தினது போதாதாடா? இங்கே வெச்சும் என்னை கடுப்பேத்தனுமா?” என்றான்.

“அப்படியெல்லாம் இல்லை அக்னி. நீ வா,” என்று அவன் கையைப் பிடித்து நேராக மார்க்கெட்டிற்கு அழைத்துச் சென்றான்.

அது மாலை வேளை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. மார்க்கெட் ஆட்கள் தோரணம் கட்டி, பலூன் எல்லாம் தொங்கவிட்டு, அந்த இடத்தை ஒரு விழா நடக்கும் இடம் போல மாற்றி இருந்தனர்.

மார்க்கெட்டின் மையத்தில் ஒரு பெரிய டேபிள் போடப்பட்டிருந்தது. அதன் மையத்தில் பெரிய கேக் வைக்கப்பட்டிருந்தது.

“பார்த்தியா? நம்ம ஆளுங்க ஏற்பாட்டை,” என்றவன், “வா அக்னி,” என்று அழைத்துச் சென்றான்.

அனைவரும் அக்னியைப் பார்த்ததும் கைதட்டி ஆரவாரம் செய்து அவனை வரவேற்றனர். பொருள் வாங்க அங்கு வந்திருந்த ஆட்களின் கவனம் எல்லாம் இங்கேதான் இருந்தது.

“இந்த அக்னி, கேக்கை வெட்டு. இன்னைக்கு நைட் ஒரு ஸ்பெஷல் பார்ட்டி இங்கே பண்ணியிருக்கேன்,” என்றான் தம்பி.

“இதுக்கு மேல என்னடா பார்ட்டி?” என்று சிரித்தவன் கேக்கை வெட்டினான்.

வெட்டிய கேக்கை கையில் எடுத்தவன், அதை யாருக்கு ஊட்டலாம் என்று சுற்றிலும் பார்த்தான். அங்கே நான்கு வயதுப் பெண் குழந்தை, இவர்கள் கேக் வெட்டுவதை ஆர்வமாகக் கவனித்துக் கொண்டிருந்தது.

“இங்கே வா,” என்று அந்தக் குழந்தையை அழைத்தான் அக்னி.

தன் அம்மாவின் கையை விட்டுவிட்டு, அவன் கூப்பிட்டதும் ஓடி அவனிடம் வந்தது அந்தக் குழந்தை.

“கேக் சாப்பிடுறியா?” என்றான்.

“ம்ம்ம்… வேணும்,” என்றது மழலை மொழியில்.

கையில் இருந்த கேக்கை அந்தக் குழந்தைக்கு ஊட்டிவிடப் போக, அவன் கையைத் தட்டிவிட்டு, வேகமாக குழந்தையைத் தூக்கித் தன் இடுப்பில் வைத்துக்கொண்டு, திரும்பி அவள் நடக்க, “ஹலோ… ஒரு நிமிஷம்,” என்று சுண்டி அந்தப் பெண்ணை அழைத்தான்.

அவள் விழிகளைக் கண்டான். ஏதோ ஒன்று அவள் விழிகளில் தெரிந்தது. அது சோகமா, கவலையா, கோபமா, அழுகையா என்று ஏதோ ஒன்று அந்தப் பார்வையில் தெரிந்தது அவனுக்கு.

“ஒரு கேக் தானே கொடுத்தேன்?” என்றான்.

“நீ யாரு என் பொண்ணுக்கு கேக் கொடுக்க? இது எவனை அடிச்சி புடுங்கி வாங்குன காசோ? யாருக்குத் தெரியும்? கண்டவன் கொடுக்கிறதை எல்லாம் வாங்கிச் சாப்பிட எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை,” என்று விருட்டென அவள் நடந்து அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் பேசியதைக் கேட்டு அப்படியே நின்று இருந்தான் அக்னி.

காலையில் அவன் மூடைக் கெடுத்தாள் நந்தினி. இப்போது இந்தப் பெண், இவன் யார், என்ன என்று எதுவும் தெரியாமல், நினைத்ததை அப்படியே பேசிவிட்டு அக்னியின் கோபத்திற்கு நீர் வார்த்துவிட்டுச் சென்று இருந்தாள்.

மன்னிக்கவும், நீங்கள் கொடுத்த தமிழ் உரையில் திருத்தங்களைச் செய்து, நிறுத்தற்குறிகளைச் சேர்க்கிறேன்.


EPISODE 2

“என்னை பார்த்து எப்படி அவ சொல்லலாம்? யார்றா அவ? என்னைப் பார்த்து கண்டவன்னு சொல்லிட்டாடா!” என்று முழு போதையில், மார்க்கெட்டின் நடுவில் நிறுத்தி இருந்த காரின் பானெட்டில் படுத்து புலம்பிக் கொண்டு இருந்தான் அக்னி.

“அக்னி, நீ இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கியா? விடு, அது யாரு என்னன்னே தெரியல. உன்னை பத்தி சரியா தெரியாது போல அந்தப் பொண்ணுக்கு,” என்றான் தம்பி.

இருவரும் மட்டும்தான் மார்க்கெட்டில் இருந்தனர். நள்ளிரவு கடந்திருந்தது. லோடு இறக்குபவர்கள் மட்டும் இவர்கள் புலம்புவதைக் கேட்டபடி தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

“அது எப்படி தம்பி அவ அப்படி சொல்லலாம்? நான் என்ன அவ கையைப் பிடிச்சா இழுத்தேன்? என்னைக் கண்டவன்னு திட்டுறதுக்கு? அந்தக் குட்டி பாப்பா என் கையில் இருந்த கேக்கைப் பார்த்துட்டு இருந்துச்சுன்னு தானே நான் கேக் சாப்பிட கூப்பிட்டேன்? அதுக்கு போய் என்னைப் இப்படிப் பேசிட்டாளே?” என்று புலம்பினான்.

“இப்போ என்ன பண்ணலாம் மச்சி? நீயே சொல்லு,” என்றான் தம்பி.

“டேய், எனக்கு அவ யாருன்னு தெரியணும். அவளை நேர்ல பார்த்து நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கக் கேட்கணும்,” என்றவன் காரிலிருந்து கீழே குதித்து, கையில் மது பாட்டிலை எடுத்து அதை வாயில் வைத்து சிரித்தபடி நடந்து செல்ல, “டேய் அக்னி, மச்சி, நில்லு, நானும் வரேன்,” என்று அவன் பின்னால் சென்றான் தம்பி.

“பாப்பா, சொன்னா கேளுடி. அவளே இப்பதான் வேலையை முடிச்சிட்டு வந்திருக்கா. டயர்டா இருப்பாடி. விடு, காலையில கொடுக்கலாம்,” என்று ராஜன் இதழ்யாவிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

“இங்க பாரு யுவா, இந்த விஷயத்துல நீ தலையிடாதே. அவளுக்கு வர வர திமிரு அதிகமா ஆகிடுச்சு. என் பிள்ளையை மதிக்கவே மாட்டேங்குறா. எப்போ பார்த்தாலும் அவனை ஏதாவது சொல்லி கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்கா. இன்னைக்கு எனக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும். இன்னும் எத்தனை நாளைக்கு இவ இப்படி முறுக்கிக்கிட்டே திரிய போறா? அவளுக்குன்னு இருக்குற ஒரே சொந்தம் இவன் தானே. இவனைப் பகைச்சிட்டு இவளுக்கு என்ன ஆகப்போகுது?” என்று வெடித்துக் கொண்டு இருந்தார் இதழ்யா.

“ஏய் பாப்பா, விடுடி. இவங்க ரெண்டு பேரும் இப்படித்தான் என்று தெரியும் இல்ல. அப்புறம் இப்போ வீணா கோபப்பட்டு என்னடி ஆகப்போகுது?” என்று தன் பாப்பாவை சமாதானம் செய்ய முயன்றான் ராஜன்.

“இங்க பாருடா, நந்தினியும் அக்னியும் எனக்கு ஒண்ணுதான். அவங்க எப்படி ஒத்தமையா இருந்தாங்கன்னு உனக்கே தெரியும். என் தம்பி, என் தம்பின்னு எப்பவும் சொல்லிட்டு இருப்பா தானே. இப்போ என்ன வந்துச்சு இவளுக்கு?” என்றவள் சோஃபாவிலிருந்து எழுந்து வேகமாக டைனிங் ரூமுக்குச் சென்றாள்.

அங்கே வேலையாள் உணவு பரிமாறிக்கொண்டிருக்க, இவர்கள் இருவரும் ஹாலில் பேசியதை எல்லாம் கேட்டபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்த நந்தினி, அவள் அருகில் இதழ்யா வந்ததும், “தம்பின்னு என் தலையில் தூக்கி வெச்சு தாங்கினதுக்குத்தான் நல்லா வெச்சு செஞ்சுட்டேனே. இனி முன்ன மாதிரி நான் அவன்கூட பேசிப் பழகுவேன்னு எதிர்பார்க்காதீங்க. எங்களுக்குள்ள எதுவும் இல்லை,” என்றவள், “அக்கா எனக்குப் போதும்,” என்று கையை கழுவி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

நந்தினி பேசியதும் பதில் பேச முடியாமல் இதழ் நின்று இருக்க, “பாப்பா என் கூட வா,” என்றார் ராஜன். அவர் தோளை தட்டி, “அவ கிட்ட நான் பேசுறேன். உனக்கு நந்துவும், உன் பிள்ளையும் பழைய படி இருக்கணும் அவ்வளவு தானே? அதை என்கிட்ட விட்டுடு. நான் பார்த்துக்கிறேன்,” என்றான்.

“அது என்னடா என் பிள்ளை?” என்று ராஜனை முறைத்தவள், “அம்பலப் பிள்ளை வேணும்னு அடம்பிடிச்சு நீதான்டா வேணும்னு என்னை நச்சரிச்சு பிள்ளை பெத்துகிட்டே. இப்போ என் பிள்ளை உன் பிள்ளைன்னு பிரிச்சு பேசுற,” என்று கடுப்பான இதழ், “இன்னிக்கு நீ ஹால்லேயே படுத்துக் கிட,” என்று பெட்ரூம் சென்றார்.

“பாப்பா, என் தங்கம்,” என்று ராஜன் இதழிடம் கெஞ்சிக்கொண்டே செல்ல, “இப்படியே கெஞ்சு,” என்று தலையணையை தூக்கி அவன் முகத்தில் விட்டெறிந்தவர், கதவை சாற்றிவிட்டுப் போய்விட, “ம்ஹும், வாயை வெச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம். எல்லாம் என் நேரம்,” என்று தலையணையைக் கொண்டு வந்து தரையில் போட்டவன் அப்படியே விட்டதைப் பார்த்துப் படுத்துக் கொள்ள, “என்ன ராசா, பாப்பா இன்னைக்கும் உன்னை வெளிய அனுப்பிடுச்சா?” என்று அங்கு வந்த பழனியை தலையைத் தூக்கிப் பார்த்தவன், “அம்மா கிழவி, அவ பிள்ளையை…” என்று சொன்னவன், நாக்கைக் கடித்துக் கொண்டு திரும்பி அவர்கள் பெட்ரூமை ஒருமுறை பார்த்துவிட்டு, “நல்லவேளை அவ கேட்கல,” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவன், “அந்தத் தருதலையை தலையில் தூக்கி வெச்சிட்டு ஆடுறது இன்னைக்கு நேத்தா நடக்குது. அவனை யாராவது ஏதாவது சொன்னா அவ்வளவு தான். என் பொண்டாட்டிக்குக் கோபம் பார்த்துகிட்டு வந்திருமே,” என்றான்.

“அது பிள்ளை மேல வெச்சிருக்கப் பாசம் ராசா. நீ எப்படி நம்ம நந்தக்குட்டி மேல பாசமா இருக்க அது மாதிரிதான் பாப்பாவுக்கு நம்ம குட்டித்தம்பி மேல பாசம்,” என்றார் பழனி.

“நந்துவும் இவனும் ஒண்ணா கிழவி? நந்து எவ்வளவு பொறுப்பா கம்பெனியை பார்த்துக்குறா? ஆனா இவன் ஊர்வம்பை விலைக்கு வாங்கிட்டு, சொன்ன பேச்சைக் கேட்காம மார்க்கெட்டே கதின்னு இருக்கானே. இவன் பொறுப்பா கம்பெனியை பார்க்கணும்னு நினைக்கிறேன். நாளைக்கு நந்து கல்யாணம் பண்ணிட்டு போனா எல்லாமே இவன்தான் பார்த்துக்கணும்,” என்றான் ராஜன்.

“என்கிட்ட சொன்னதை நீ குட்டித்தம்பி கிட்டேயே சொல்ல வேண்டியது தானே ராசா?” என்றார் பழனி.

“யாரு அவன்கிட்டேயா? என் பாப்பா சொல்லியே முடியாதுன்னு போனவன் அவன். நான் சொல்லியா கேட்கப் போறான்?” என்றவன் வாசலில் அக்னியின் கார் வரும் சத்தம் கேட்டதும், “வந்துட்டேன் உன் குட்டித்தம்பி,” என்றார் கண்களைக் காட்டி.

“நீ சும்மா இரு ராசா,” என்றவர் உள்ளே தள்ளாடியபடியே வந்த அக்னியிடம் வந்தவர், “குட்டித்தம்பி, சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்றார்.

“வேண்டாம் கிழவி, நான் சாப்பிட்டேன்,” என்று தள்ளாடிக்கொண்டே மாடி என்ற போனவன், அங்கே தரையில் லுங்கியை கட்டிக்கொண்டு தலைக்கு கை வைத்து படுத்தபடி இவனையே பார்த்துக் கொண்டிருந்த ராஜனைப் பார்த்தான்.

“இன்னைக்கும் அம்மாகிட்ட வாங்கி காட்டிக்கிட்டியா?” என்றவன், “உன்னை எல்லாம் ஹால்ல படுக்கச் சொல்லக் கூடாது. வெளியே வராண்டாவுல படுக்க விட்டிருக்கணும்,” என்றான்.

அதை கேட்டதும் வேகமாக எழுந்த ராஜன், “டேய், ஏன்டா சொல்ல மாட்டேன்? இது நான் சம்பாரிச்சுக் கட்டின வீடு. நான் ஹால்ல படுப்பேன், கிச்சேன்ல படுப்பேன். உனக்கு என்னடா வந்துச்சு? என் பொண்டாட்டி இப்போ வெளியே கதவை சாத்துவா. கொஞ்ச நேரத்துல அவளே வந்து என்னை உள்ள கூப்பிட்டுக்குவா. உனக்கு என்னடா வந்துச்சு?” என்றான்.

அவரை ஏறி இறங்கப் பார்த்தவன், “நீ மட்டும் சம்பாரிக்கல. என் அம்மாவும் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசுல கட்டுன வீடு இது,” என்றான்.

“டேய், அவ சம்பாரிச்சா என்ன? நான் சம்பாரிச்சா என்ன?” என்றார் ராஜன்.

“இங்க பாரு, நானே கடுப்புல இருக்கேன். நீ ஏதாவது பேசி என்னை டென்ஷன் பண்ணாம போய்ட்டு…” என்று திரும்பி நடக்க, அவன் நடையில் இருந்த மாறுதலைக் கவனித்த ராஜன், “உன் வயசுல நானும் தான்டா ஆட்டம் போட்டேன். ஆனா உன்னை மாதிரி நான் இல்லடா. குடிச்சுட்டு நம்ம வீட்டுக்குள்ள வர உனக்கு எவ்வளவு தைரியம்?” என்றார்.

“நம்ம வீட்டுக்குத்தானே வந்தேன். கல்யாணத்துக்கு முன்ன நீ பண்ணினதை விட நான் பரவாயில்லைதான்,” என்று திரும்பி தன் அறைக்குச் செல்ல, “டேய், என்னடா சொன்ன? நில்லுடா, நில்லு,” என்று ராஜன் கத்தினார்.

“டேய், அவன் குடிச்சிருக்கானா நீ குடிச்சிருக்கியான்னே தெரியல. பேசாம வந்து உள்ள படுடா. இனி எங்கயாச்சு சத்தம் வந்துச்சு?” என்று அறைக்கதவை திறந்து கொண்டு இதழ் கத்த, “பாப்பா, நீ இன்னும் தூங்கலையா? இதோ வரேன் பாப்பா,” என்று லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு, தலையணையை கக்கத்தில் சொருகியபடி இதழ் அழைத்ததும் வேகமாக உள்ளே சென்றுவிட, “இந்த ராசாவுக்கு இத்தனை வயசாகியும் புத்தியே வரல. பாப்பாவைப் பார்த்ததும் எல்லாத்தையும் மறைந்துருந்து,” என்று புலம்பியவாறு தன் அறைக்குச் சென்றுவிட்டார் பழனி.

மேலே அறைக்குச் சென்றவன், தன் அம்மா அழைத்ததும் மறுபேச்சின்றி ரூமுக்குள் சென்ற ராஜனைக் கண்டு சிரித்தவன், தலையில் அடித்துக்கொண்டு இந்த ஆளை திருத்தவே முடியாது என்று நினைத்துக் கொண்டான்.

அவன் அறைக்குள் செல்லப்போக, அப்போது தன் ரூமில் இருந்து தண்ணீர் குடிக்க வெளியே வந்த நந்தினியைப் பார்த்தவன், “உனக்கு இருக்குடி,” என்று உள்ளே சென்றுவிட்டான்.

மறுநாள் காலை அக்னியின் வீடே அமர்க்களப்பட்டுக் கொண்டு இருந்தது. ஆளுக்கு ஒரு பக்கம் கையில் வாலியுடன் ஓடிக்கொண்டு இருந்தனர்.

“டேய் சிவா, சீக்கிரம் ஃபயர் சர்வீஸுக்கு போன் பண்ணு. யாரு பார்த்த வேலைடா இது? இப்படி ஆகிப் போயிருச்சே,” என்று ராஜன் இங்கும் அங்கும் பற்றி எரிந்த காரைச் சுற்றி வந்தபடி புலம்பினான்.

நந்தினியின் கார் நிறுத்தி வைத்த இடத்தில் பற்றி எரிந்து கொண்டு இருந்தது. ராஜனும் கிழவியும் வேலை செய்பவர்களும் தான் பதறிக்கொண்டிருந்தனர்.

தான் சம்பாதித்த பணத்தில் ஆசையாக வாங்கிய கார் இப்படி கண் முன் எரிந்து கொண்டு இருப்பதைப் பார்த்தும் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் சோஃபாவில் அமர்ந்தபடி, அந்த எரிந்து கொண்டு இருந்த தீப்பிழம்பையே பார்த்துக் கொண்டு இருந்தாள் யதுநந்தினி.

அவளைப் போலவே எந்தப் பதட்டமும் இல்லாமல் கை கட்டியபடி நின்று பார்த்துக் கொண்டு இருந்தார் இதழ்யா.

சோஃபாவிலிருந்து எழுந்து இதழ்யா அருகில் வந்த நந்தினி, “இப்போ திருப்தியா இருக்குமே உங்க பிள்ளைக்கு? இது என்னோட ஃபேவரைட்னு தெரிஞ்சும் இப்படி சாம்பல் ஆகிட்டான்ல,” என்றவள், “சொல்லி வையுங்க உங்க பிள்ளைகிட்ட. இதுக்கு கண்டிப்பா அவன் எனக்குப் பதில் சொல்லியே ஆகணும்,” என்றவள் தன் அறைக்குச் சென்றுவிட, “என்னைக்கு இந்த உட்கட்சிப் பூசல் சரியாகுமோ?” என்று நினைத்து பெருமூச்சுவிட்டாள் இதழ்யா.

இங்கு இவ்வளவு களேபரம் நடந்து கொண்டு இருக்க, நம்ம ஹீரோ அக்னிமித்ரன் தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல ஆழ்ந்து தூங்கிக்கொண்டு இருந்தான்.

EPISODE 3

ஏன் டா அக்னி இப்படி பண்ணின ஒரு கேக்குக்காக அவ காரையே கொளுத்தி போடுவியா என்று சாப்பிட்டுக்கொண்டு இருந்த அக்னியின் தலையை வருடியபடி கேட்டார் இதழ்

ம்மா நான் அதுக்காக இப்படி பண்ணல அவ வண்டியை இந்த நிலைமைக்கு ஆளாக்கினது  நான் இல்ல உன் புருஷன் தான் என்றான் அக்னி

உடனே இதழ் திரும்பி ராஜனை பார்க்க

அதை கேட்டதும் சாப்பிட்டுக்கொண்டு இருந்த ராஜனுக்கு புரையேற டேய் தறுதலை நான் என்ன டா பண்ணினேன் என்றார் பதற்றமாக

யுவா என்று இதழ் அதட்ட

என்னை ஏன் டி பாப்பா அதட்டுற இதோ எல்லாத்தையும் செஞ்சுட்டு கூலா சாப்டுட்டு இருக்கான் பாரு என்றவர் 

உன்கிட்டேயே நான் தான் பண்ணினேன்னு சொல்றான் நீயும் அதை கேட்டும் கேக்காம இருக்க இவன் என்னவோ நந்து கார் எரிஞ்சதுக்கு காரணம் நான் தான்னு சொல்றான் நான் என்ன டா பண்ணினேன் என்று அக்னியை முறைத்தார்

நேத்து நான் அமைதியா எந்த வம்பும் வேண்டாம்னு தான் ரூமுக்கு போனேன் ஆனா இவரு என்னை இழுத்து வெச்சு கடுப்பேத்திவிட்டுட்டாரு தான் அவர் மேல இருக்க கடுப்பை இப்படி தீர்த்துக்கிட்டேன் என்றான்

டேய் அதுக்கு நீ என் காரை இல்ல எரிச்சிருக்கனும் எதுக்கு டா கத்துக்குட்டி காரை எரிச்ச என்றான் ராஜன்

ம்ம்ம் உன் கார் நீ கேட்டேன்னு என் அம்மா ஆசையா கிப்ட் பண்ணினது. உன்னை கடுப்பேத்தனும்னா உன் பொண்ணை கொஞ்சம் சீண்டினாலே போதுமே அதான் என்றான்

அவன் பேசியது கேட்டு ராஜன் வாயடைத்து அமர்ந்து இருக்க

அவன் வாயில் ஒரு இட்லியை திணித்த இதழ்யா விடு யுவா நான் நந்துவுக்கு வேற கார் வாங்கி கொடுத்துட்றேன் என்றார்

நோ தேங்க்ஸ் மாம் நான் கார் புக் பண்ணிட்டேன் நாளைக்கு டெலிவெர் ஆகிடும் என்றவள்

டேட் சாப்பிட்டியா என்னை ஆபீஸ்ல ட்ரோப் பண்ணிட்ரியா  என்றாள்

வாயில் இருந்த இட்லியை அவசரமாக மென்ற ராஜன் தண்ணீரை குடித்துவிட்டு எழுந்து தன் மகளுடன் சென்றார்

அவர்கள் சென்றதும் டேய் அக்னி உன் கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்க டா இவ்ளோ கோபம் ஆகாது  அப்பறோம் நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனபிறகு உன் பொண்டாட்டி  என்ன புள்ள வளர்த்தி  வெச்சிருக்கேன்னு என்னை வந்து திட்டுவா டா என்றார்

அவ திட்டும்போது சொல்லும்மா நான் அவ வாயை உடைச்சிடறேன் என்றவன்

ஓகே ம்மா நான் கிளம்பறேன் இன்னிக்கு நிரைய வேலை இருக்கு என்று சாப்பிட்டு முடித்து கிளம்பி இருந்தான்

ஏன் டா அக்னி இப்படி பண்ணின ஒரு கேக்குக்காக அவ காரையே கொளுத்தி போடுவியா என்று சாப்பிட்டுக்கொண்டு இருந்த அக்னியின் தலையை வருடியபடி கேட்டார் இதழ்

ம்மா நான் அதுக்காக இப்படி பண்ணல அவ வண்டியை இந்த நிலைமைக்கு ஆளாக்கினது  நான் இல்ல உன் புருஷன் தான் என்றான் அக்னி

உடனே இதழ் திரும்பி ராஜனை பார்க்க

அதை கேட்டதும் சாப்பிட்டுக்கொண்டு இருந்த ராஜனுக்கு புரையேற டேய் தறுதலை நான் என்ன டா பண்ணினேன் என்றார் பதற்றமாக

யுவா என்று இதழ் அதட்ட

என்னை ஏன் டி பாப்பா அதட்டுற இதோ எல்லாத்தையும் செஞ்சுட்டு கூலா சாப்டுட்டு இருக்கான் பாரு என்றவர் 

உன்கிட்டேயே நான் தான் பண்ணினேன்னு சொல்றான் நீயும் அதை கேட்டும் கேக்காம இருக்க இவன் என்னவோ நந்து கார் எரிஞ்சதுக்கு காரணம் நான் தான்னு சொல்றான் நான் என்ன டா பண்ணினேன் என்று அக்னியை முறைத்தார்

நேத்து நான் அமைதியா எந்த வம்பும் வேண்டாம்னு தான் ரூமுக்கு போனேன் ஆனா இவரு என்னை இழுத்து வெச்சு கடுப்பேத்திவிட்டுட்டாரு தான் அவர் மேல இருக்க கடுப்பை இப்படி தீர்த்துக்கிட்டேன் என்றான்

டேய் அதுக்கு நீ என் காரை இல்ல எரிச்சிருக்கனும் எதுக்கு டா கத்துக்குட்டி காரை எரிச்ச என்றான் ராஜன்

ம்ம்ம் உன் கார் நீ கேட்டேன்னு என் அம்மா ஆசையா கிப்ட் பண்ணினது. உன்னை கடுப்பேத்தனும்னா உன் பொண்ணை கொஞ்சம் சீண்டினாலே போதுமே அதான் என்றான்

அவன் பேசியது கேட்டு ராஜன் வாயடைத்து அமர்ந்து இருக்க

அவன் வாயில் ஒரு இட்லியை திணித்த இதழ்யா விடு யுவா நான் நந்துவுக்கு வேற கார் வாங்கி கொடுத்துட்றேன் என்றார்

நோ தேங்க்ஸ் மாம் நான் கார் புக் பண்ணிட்டேன் நாளைக்கு டெலிவெர் ஆகிடும் என்றவள்

டேட் சாப்பிட்டியா என்னை ஆபீஸ்ல ட்ரோப் பண்ணிட்ரியா  என்றாள்

வாயில் இருந்த இட்லியை அவசரமாக மென்ற ராஜன் தண்ணீரை குடித்துவிட்டு எழுந்து தன் மகளுடன் சென்றார்

அவர்கள் சென்றதும் டேய் அக்னி உன் கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்க டா இவ்ளோ கோபம் ஆகாது  அப்பறோம் நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனபிறகு உன் பொண்டாட்டி  என்ன புள்ள வளர்த்தி  வெச்சிருக்கேன்னு என்னை வந்து திட்டுவா டா என்றார்

அவ திட்டும்போது சொல்லும்மா நான் அவ வாயை உடைச்சிடறேன் என்றவன்

ஓகே ம்மா நான் கிளம்பறேன் இன்னிக்கு நிரைய வேலை இருக்கு என்று சாப்பிட்டு முடித்து கிளம்பி இருந்தான்

ஆபிஸிற்கு வந்ததும் நந்தினியின் பிஏ பார்வதி அவளிடம் வேகமாக வந்தவள் மேம் ஒரு ப்ரோப்லேம் என்றாள்

என்ன ம்மா பிரச்சனை என்கிட்டே சொல்லு நான் பாத்துக்கிறேன் என்று ராஜன் வர

டேட் நீங்க பிரீயா விடுங்க நான் பார்த்துக்கிறேன் என்றவள்

பாரு நீ வா என்று தன் கேபினுக்குள் நுழைந்தவன்

சொல்லு பாரு வாட்ஸ் தி ப்ரோப்லேம் என்று தன் சீட்டில் போய் அமர்ந்தாள்

மேம்  நம்ம நியூ கிளைன்ட் மிஸ்டர் அபிமன்யு இன்னிக்கு கால் பண்ணி இருந்தார் அவரோட IT  பைல் பண்றதுல ப்ரச்சனை அதை எடுத்து சொல்ல போன நம்ம முருகன் சாறை திட்டி அனுப்பிட்டாரு உங்களை நேர்ல மீட்பண்ணனும்னு அவர் ஆபிசுக்கு வர சொல்லி இருக்கார் என்றாள்

என்ன பிரச்சனை என்று நந்தினி அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டவள் சரி ஓகே வா போகலாம் என்று பார்வதியும் , முருகனையும் தன்னோடு அழைத்துக்கொண்டு ராஜனை ஆபிஸிலேயே இருக்க சொன்னவள் அவர் ஜீப்பின் கீயை வாங்கிக்கொண்டு கிளம்பி இருந்தாள்

‘என்ன அண்ணா, பணம் வாங்கி மூணு வாரம் ஆச்சு, இன்னும் வார வட்டி வந்த பாடில்லையே? இப்படியே இழுத்துட்டு இருந்தேன்னு வை, அப்பறோம் கடையை காலி பண்ண வெச்சிருவேன் பார்த்துக்கோ!’ என்று வசூல் செய்ய வந்தவன், அவனுக்குப் பணம் தர முடியாமல் இழுத்தடித்த கடைக்காரனை மிரட்டிக்கொண்டு இருந்தான் அக்னி.

‘இல்லை அக்னி, நான் வேணும்னு கொடுக்காம எல்லாம் இல்லை. வியாபாரம் கொஞ்சம் டல்லா இருக்கு, அதான் என்னால கொடுக்க முடியல,’ என்றார் அவர்.

‘அப்படியா?’ என்று நக்கலாகக் கேட்டவனிடம்,

‘ஆமாம்பா, கொஞ்ச நாளாவே வியாபாரம் படுத்திருச்சு. எப்போ சூடு பிடிக்கும்னே தெரியல. சீக்கிரமே உன் பணத்தை வட்டியும் முதலுமா சேர்த்து செட்டில் பண்ணிட்றேன்,’ என்றார் அந்தக் கடைக்காரர்.

‘அது என்னது, இந்த மார்க்கெட்டில் இருக்க எல்லாருக்கும் வியாபாரம் அமோகமா போயிட்டு இருக்கு, அப்போ உன் கடையில் மட்டும் வியாபாரம் படுத்துகிச்சுனு சொல்ற?’ என்றான் அவன்.

‘அது… அது வந்து அக்னி,’ என்று அவர் திணற,

‘சரி விடுண்ணே, ஒரு நிமிஷம், இதை பாரு நீ,’ என்று தாபமியிடம் இருந்து ஒரு சிறிய காகிதத்தை வாங்கி நீட்டினான்.

‘என்ன அக்னி இது?’ என்று அதை வாங்கிப் பிரிந்தவர் முகம் அதிர்ச்சியில் உறைந்துவிட,

‘என்ன ஷாக்கா?’ என்றவன்,

‘இது என்னன்னு தெரியுதா? நேத்து நீயும் உன் பொண்டாட்டியும் இந்தக் கடையில் 48 பவுன் நகை வாங்குனதுக்கான ரசீது. அதுல சிலது வைரமாமே? பலே ஆளுதான் நீ. வியாபாரமே ஆகாத கடையில் இருந்து சம்பாதிச்ச காசை வெச்சு, தங்கம் வைரம்னு உன் பொண்ணுக்கு வாங்கி குவிக்கிற போல,’ என்றான்.

‘என்ன, அப்படி பார்க்குற? இந்த நகை பில் எப்படி என் கைல சிக்குச்சுன்னு பார்த்தியா? நீ வாங்குன நகை கடைக்காரனுக்கே நான் தான் வட்டிக்கு பணம் கொடுத்துட்டு இருக்கேன்,’ என்றான்.

‘அக்னி, அது… அது வந்து, அவள் கல்யாணம்,’ என்று அவர் பதில் சொல்லத் தடுமாறினார்.

‘எதுக்குண்ணே இப்போ இவ்ளோ டென்ஷன் ஆகுற? ரிலாக்ஸா இரு,’ என்றவன் சுற்றிப் பார்த்து, கடைக்குள் இருந்தவரிடம் வந்தான். ‘நீ இங்க என்கிட்டே வட்டிக்கு லட்சத்துல வாங்கி வியாபாரம் பண்ணி, அதுல வந்த லாபத்துல உன் பொண்ணு கல்யாணத்துக்கு நகை சேர்த்துட்டு இருக்க. ஆனா, உன் பொண்ணு எவனோ புல்லிங்கோ பையன் கூட ஊரை சுத்திட்டு இருக்கலாமே? அவனைதான் கல்யாணம் பண்ணிக்கப் போறதா கேள்விப்பட்டேன்,’ என்றான்.

ஏற்கனவே பயத்தில் வியர்த்திருந்த அவர் முகம், அக்னி சொன்னதைக் கேட்டு மேலும் அதிர்ந்து இருக்க,

‘அட, எதுக்கு உனக்கு இப்படி வேர்க்குது? இதை துடைச்சுக்க,’ என்று அவர் அருகில் கிடந்த துண்டை எடுத்து அவர் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டான்.

அவர் இன்னமும் அதிர்ச்சி மாறாமல் இருக்க, ‘இங்க பாரு, நீ உன் பொண்ணுக்கு என்ன வேணா வாங்கி சேர்த்து. நான் உன்னை எதுவும் கேட்கப் போறதில்ல. ஆனா, எனக்கு வரவேண்டியதை கொடுக்காம இழுத்தடிச்சுட்டு, ‘டிமிக்கி’ கொடுத்துட்டு இருந்தேன்னு வை, அந்த புல்லிங்கோ பையன் யாருன்னு தேடி பிடிச்சு, நானே உன் பொண்ணுக்கும் அவனுக்கும் முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வெச்சிருவேன். எப்படி வசதி?’ என்றான்.

‘ஐயோ அக்னி! அப்படி எதுவும் பண்ணிடாதப்பா. என் பொண்ணு வாழ்க்கையை சீரழிச்சிராத,’ என்று அவனை கைகூப்பி கும்பிட்டவர், ‘ஒரு நிமிஷம் இருப்பா,’ என்றவர் உள்ளே சென்று, அக்னிக்கு கொடுக்க வேண்டிய அசல், வட்டி இரண்டையும் மொத்தமாக கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார்.

‘டேய் தம்பி…’ என்று அக்னி ராகம் பாட,

‘இதோ, வாங்கிட்டேன்,’ என்று அவனும் ராகம் பாடிக்கொண்டே வந்து அந்தப் பணத்தை வாங்கிப் பையில் போட்டான்.

‘பரவால்லையே! நான் வந்த நேரம் உன் கடையில வியாபாரம் சூடு பிடிச்சிருச்சு போல! நிமிசத்துல வட்டியும் அசலும் திருப்பி கொடுக்குற அளவுக்கு வசூல் ஆகியிருக்கு,’ என்று நக்கல் செய்தவன், ‘இங்க பாருண்ணே, பணம் காசு விஷயத்துல எனக்கு சரியா எல்லாம் நடக்கணும். இப்படி என்னை ஏமாத்தணும்னு நினைச்சிட்டு இருந்த, அப்பறோம் கடையை காலி பண்ணிட்டு நீ வீட்டில் தான் உட்கார்ந்திருக்கணும். ஜாக்கிரதை,’ என்று அவரை எச்சரித்தான்.

‘இல்லை இல்லை அக்னி, நான் இனிமேல் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்,’ என்று அவசரமாக அவர் தலையை ஆட்ட,

‘சரி, நான் கிளம்புறேன். பார்த்து இருந்துக்க,’ என்று அங்கிருந்து கிளம்பியவன், ‘என்னடா, ரொம்ப நாளா வசூல் ஆகாம இருந்த பணத்தை வசூல் பண்ணியாச்சு. சந்தோஷம் தானே இப்போ உனக்கு?’ என்றான்.

‘ம்ம்ம், ஆமாம் மச்சி,’ என்றவன்,

‘இதை நம்ம மார்க்கெட் வீட்ல வைக்கட்டுமா? இல்லை, நீ வீட்டுக்கு போகும்போது எடுத்துட்டு போறியா?’ என்றான்.

‘இன்னிக்கு வீட்டுக்குதான் போறேன்டா. வீட்டுக்கு கெஸ்ட் வராங்க,’ என்றான்.

‘அப்படியா? அப்போ சரி மச்சி,’ என்று வசூல் செய்த பணத்தை அவன் காரில் வைத்து லாக் செய்தவன், அடுத்தடுத்த கடைகளுக்கு வசூல் செய்ய கிளம்பிவிட்டனர்.

எல்லாம் முடித்துவிட்டு கிளம்பப் போனவன், கார் கண்ணாடியில் தன் முகம் பார்த்து மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு இருந்தவன், அதன் வழியே தெரிந்த பெண்ணை திரும்பி பார்த்தான்.

EPISODE 4

நேற்று அவன் பிறந்தநாள் பார்ட்டியை ஸ்பாயில் செய்த புண்ணியவதி, தன் குழந்தையோடு காய்கறி வாங்கிக்கொண்டு இருந்தாள்.

அவள் சேலைத் தலைப்பை பிடித்துக்கொண்டு நின்றிருந்த குழந்தை, தூரத்தில் இருந்து அவனையே பார்த்துக்கொண்டு இருந்தது.

உடனே, அந்தக் குழந்தையை தன்னிடம் வரச்சொல்லி சைகை செய்து அழைத்தான். அந்தக் குழந்தை தயக்கமாக நிமிர்ந்து அவள் அம்மாவைப் பார்க்க,

‘ஷ்…’ என்று தன் வாயில் விரல் வைத்து சைகை செய்தவன், காருக்குள் இருந்த சாக்லேட்டை எடுத்து அந்தச் சிறு பெண்ணிடம் காட்டி வரச் சொல்ல, மிட்டாயைப் பார்த்ததும் அவள் அம்மாவிடம் இருந்து ஓடி அவனிடம் வந்தது.

அந்தக் குழந்தைக்கு மிட்டாயைக் கொடுத்தவன், கையில் குழந்தையை ஏந்திக்கொண்டு நேராக தன் மார்க்கெட் வீட்டிற்கு வண்டியை விட்டான்

இங்கு பொருட்களை வாங்கி முடித்த அந்தப் பெண், தன் மகளை திரும்பிப் பார்க்க, அவள் அங்கு இல்லாதது கண்டு பயந்துபோனாள்.

மார்க்கெட் முழுவதும் சல்லடை போட்டுத் தேடியும் அந்தக் குழந்தை கிடைக்கவே இல்லை. வேறு வழியே இல்லாமல், நடுங்கிய குரலில் தன் கணவனுக்கு அழைத்து விபரத்தைச் சொன்னாள்.

அவனும் மார்க்கெட் வந்தவன், வந்ததும் என்ன, ஏது என்று கூட யோசிக்காமல், அவளை ஓங்கி அறைந்தவன், ‘உன்னால என் பொண்ணை ஒழுங்கா பார்த்துக்கக் கூட முடியாதா? அப்படி என்ன, பொண்ணு காணாம போறது கூட தெரியாம, எவன்கிட்டேயோ பல்லை காட்டிட்டு இருந்த?’ என்று நாக்கூசாமல் அத்தனை பேர் முன்னிலையில் கத்தினான்.

அவமானம் தாங்க முடியாமல், தன் புடவைத் தலைப்பை வாயில் வைத்து வந்த அழுகையை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு இருந்தாள்.

அதையெல்லாம் காருக்குள் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த அக்னிக்கு, அப்போதுதான் விளையாட்டாகத் தான் செய்த செயல் அந்தப் பெண்ணை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்தான்.

நேராக குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கு வந்தவன், அந்தப் பெண்ணை அப்போதுதான் கவனித்தான். சோர்ந்து வழிந்த முகம், கலைந்த தலைமுடி, அழுத விழிகள் என்று அவள் குழந்தையை தேடி அலைந்ததை உணர்ந்தவன்,

‘ச்சே… நான் விளையாட்டா செய்தது இந்தப் பெண்ணை எவ்ளோ கஷ்டப்படுத்திருச்சு! போதாததுக்கு அவ புருஷன் வேற வாய்க்கு வந்ததை யோசிக்காம பேசிட்டானே,’ என்று நினைத்தவன், அந்தப் பழுப்பேறிய புடவையை கட்டியிருந்த பெண்ணை ஏறிட்டான்.

அழுது கொண்டிருந்தவள், அவன் கையில் இருந்த தன் குழந்தையைப் பார்த்ததும், ‘ஆராதனா!’ என்று அவளை வாரி அணைத்துக்கொண்டாள்.

‘டேய், யாரு நீ? என் பொண்ணு எப்படி உன் கையில? நீதான் அவளைக் கடத்தி வெச்சிருந்தியா? உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்ணைக் கடத்தி வெச்சிருப்ப? உன்னை எல்லாம் போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்தா தான் சரியா வரும்,’ என்றவன் தன் மொபைலை எடுத்து போலீஸிற்கு அழைக்கப் போக,

‘யோவ், யார்ரா நீ? குழந்தையைக் கடத்தணும்னு நினைச்சிருந்தா, நான் ஏன்யா உன்கிட்டே கொண்டு வந்து திரும்ப குழந்தையைக் கொடுக்கப் போறேன்? நேத்து என் பர்த்டே பார்ட்டியில் ஆசையா ‘கேக்’ வேணும்னு கேட்டுச்சு. அதைக் கொடுக்குறதுக்குள்ள உன் பொண்டாட்டி புள்ளையை தூக்கிட்டு போய்டுச்சு. சரி, இன்னிக்கு ஒரு சாக்லேட் வாங்கிக் கொடுக்கலாம்னு கூப்பிட்டுப் போனேன். நான் வாங்கிக் கொடுத்து கூட்டிட்டு வரதுக்குள்ள உன் பொண்டாட்டி புள்ளையைக் காணோம்னு மார்க்கெட்டையே அமர்களப்படுத்திருச்சு,’ என்றான்.

‘நீதான் என் பொண்ணைத் தூக்கிட்டுப் போனியா? யார்ரா நீ? என் பொண்ணுக்கு எதுக்கு நீ சாக்லேட் வாங்கிக் கொடுக்கணும்?’ என்றவன், திரும்பி நின்று இருந்த பெண்ணை முறைத்தவன், ‘ஏன்டீ, இவனை பார்க்க தான் நீ டெய்லி மார்க்கெட் வர்றியா?’ என்றான்.

அவள் ‘இல்லை’ என்று அவசரமாக தலையை ஆட்ட,

‘என்னடீ நடிக்குற? நீ அவன் கூட பேசிப் பழகாம எப்படிடீ இவன் மிட்டாய் வாங்கிக் கொடுக்கிறேன்னு கூப்பிட்டதும் அவன் கூட போனா?’ என்றவன் மீண்டும் அந்தப் பெண்ணை ஓங்கி அறைய,

அதைச் சற்றும் எதிர்பார்க்காத அக்னி, ‘டேய் பைத்தியம்!’ என்று அடுத்து அடிக்கப் போனவன் கையைப் பற்றி நிறுத்தி இருக்க,

‘யார்ரா நீ? அவளை அடிக்கப் போனா உனக்கு எங்கடா வலிக்குது? விடுடா என் கையை,’ என்று உதறியவன், ‘சொல்லு, எவ்ளோ நாளா அவளுக்கும் உனக்கும் பழக்கம்?’ என்றான்.

எத்தனையோ பிரச்சனைகளைச் சந்தித்து, அதைக் கடந்தும் வந்திருக்கிறான் அக்னி. ஆனால், இன்று இப்படித் திருமணமான பெண்ணுடன் தன்னை இணைத்துப் பேசியதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் எதிரே நின்றிருந்தவனை எரித்துவிடுவது போல பார்த்தவன்,

‘என்னடா சொன்ன?’ என்று அவனை ஓங்கி அறைந்தான்.

இதைச் சற்றும் எதிர்பாராத அந்தப் பெண்ணின் கணவன், அக்னி அடித்ததில் தலை கிறுகிறுவென்று சுற்றவும், கண்களை அழுந்த திறந்து மூடி தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன்,

‘யாருடீ இவன் உனக்கு? ஒண்ணுன்னா என்னையே வந்து அடிக்கிறான்? அந்த அளவுக்கு இவனுக்கு இடம் கொடுத்து வெச்சிருக்கியா நீ? இவனுக்கு எப்போ முந்தி விரிச்ச?’ என்று அவளை அடிக்கப் போக,

அதில் ஆராதனா பயந்துபோனவள், ‘அப்பா, அம்மாவை அடிக்காதே. நான் தான் மிட்டாய் வாங்க போனேன்,’ என்று அந்த மழலை தன் அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு பயந்துகொண்டே சொன்னது.

‘ஓஹோ! உன் அம்மாவோட சேர்ந்து இப்போ இருந்தே நீயும் அவளை மாதிரியே பழகுறியா?’ என்று நாக்கூசாமல் அந்தச் சிறு பிள்ளையிடம் பேசியவன், ‘உங்க ரெண்டு பேரையும் வெளிய தனியா விட்டதே தப்பு,’ என்று அந்தக் குழந்தையை அவள் கையில் இருந்து பிடுங்கியவன், ‘வாடீ, போலாம்,’ என்று அவள் கையைப் பிடித்து மார்க்கெட்டில் இருந்து தரதரவென இழுத்துச் சென்றான்.

ஊருக்கே பஞ்சாயத்துப் பேசிய அக்னி, தன்னால் ஒரு பெண்ணிற்கு பிரச்சனை வந்தும், அதைப் பார்த்துக்கொண்டு நிற்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அழுது வடிந்த முகத்தோடு சென்ற அந்தப் பெண்ணைப் பார்த்தவன் உள்ளம் ஏனோ பதைபதைத்தது. எதுவும் செய்யமுடியாமல் நின்று இருந்தான் நம் நாயகன்.

இங்கே, அபிமன்யுவைப் பார்க்க வந்திருந்த நந்தினி, ‘ரிசப்ஷனில்’ தான் வந்திருப்பதைச் சொல்லி அவனுக்காகக் காத்திருந்தவள், அந்த இடத்தை சுற்றி ஆராய்ந்தாள்.

ஒரு பெரிய உருவப்படம் மாட்டி இருந்தது. அதில் ஒரு பெண்மணியின் ஓவியம் வரையப்பட்டு, அந்த ஆளுயரப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

அந்த இடத்தை சுற்றிலும் நேர்த்தியாகக் கட்டப்பட்டு மிகவும் அழகாக இருந்தது. ‘காரிடாரில்’ ஒரு ‘ஃபௌன்டெய்ன்’ இருக்க, அதை எழுந்து வந்து பார்த்தாள். உள்ளே குட்டியும் பெருசுமாக மீன்கள் நீந்திக்கொண்டு இருக்க, அதை ரசித்துக்கொண்டு இருந்தாள். அப்போது அங்கே ஒரு கிளி வந்து அந்த நீரூற்றில் அமர்ந்து குளிக்கத் துவங்கியது.

தண்ணீரை தன் சிறிய காலால் நனைத்து, தன் இறக்கையை நனைத்து, உடலைத் துடைத்து, முகத்தைச் சுத்தம் செய்து என்று அது செய்த செயல் ‘கியூட்டாக’ இருக்க, அதை ரசித்துக்கொண்டு நின்று இருந்தாள்.

அவள் அருகில் இருந்த பார்வதி மேம், ‘ரொம்ப அழகா இருக்குல்ல இந்த இடமும் சூழலும்? பார்க்குறதுக்கு ஆபீஸ் போலவே இல்ல,’ என்றாள்.

அதை ஆமோதிப்பது போல நந்தினி தலையை ஆட்ட,

‘எக்ஸ்கியூஸ் மீ மேம், சார் உங்களை உள்ள வரச் சொன்னார்,’ என்று ரிசப்ஷனிஸ்ட் வந்து சொல்ல,

‘போலாமா?’ என்று முருகனையும், பார்வதியையும் தன்னோடு அழைத்துக்கொண்டு ‘லிஃப்டில்’ ஏறினாள்.

நான்காவது மாடியில் அபிமன்யுவின் அலுவலக அறை இருக்க, அங்கே வந்து நின்றதும், லிஃப்டை விட்டு இறங்கியவளுக்கு, அவன் அறைக்கதவைக் கண்டு ஆச்சர்யமானது. பிரம்மாண்டமான அந்தக் கதவில் ஒரு சிறு துவாரம் இருந்தது. அதைக் கண்டவள் ஏதோ ‘டிசைன்’ போல என்று நினைத்துக்கொண்டு கதவைத் திறக்கப் போக,

அப்போது, அந்த நீரூற்றில் குளித்துக்கொண்டிருந்த கிளி அவள் முகத்தை உரசிக்கொண்டு, அந்தத் துவாரத்தின் வழியே அபிமன்யுவின் ‘கேபினுக்குள்’ சென்றது.

அது உதறிச் சென்ற நீர் துளி அவள் முகத்தில் தெரிந்து இருக்க, சிரித்தபடி தன் கைக்குட்டையை எடுத்து முகத்தில் ஒற்றி எடுத்தபடி கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

அவள் வந்ததிலிருந்து, இப்போது அறைக்குள் வருவது வரை தன் ‘மானிட்டரில்’ பார்த்துக்கொண்டு இருந்த அபிமன்யு, மிடுக்கு நடையோடு கம்பீரமாக வந்த நந்தினியை நேரில் கண்டு அசந்துவிட்டான்.

அவன் முன்னே வந்தவள், ‘ஹாய், ஐ அம் நந்தினி யுவநந்தினி,’ என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள,

அவளையே விழி விலகாமல் பார்த்துக்கொண்டு இருந்தவன், ‘அபிமன்யு,’ என்றவன் அவளுக்குக் கை கொடுக்காமல் இருக்கையை தன் பார்வையால் சுட்டிக்காட்டி, ‘டேக் யுவர் சீட்,’ என்றான்.

அவன் செயலில் அடிபட்டது போல உணர்ந்தாள் நந்தினி. தன்னை மதித்துக் கை கூடக் கொடுக்க விரும்பாதவன் இடத்தில் தனக்கு எந்த வேலையும் இல்லை என்று நினைத்தவள்,

‘நோ, தேங்ஸ்,’ என்றவள், ‘பார்வதி,’ என்றாள் உட்காராமலேயே.

‘மேம்,’ என்று அவளிடம் வந்தவளிடம், ‘அந்த ‘டாக்குமெண்ட்’ பைலை சார்கிட்ட கொடுத்திரு,’ என்றவள்,

‘மிஸ்டர் அபிமன்யு, உங்களுக்கும் எங்க கம்பெனிக்கும் இருக்க டீலை இன்னைக்கோட முடிச்சுக்கலாம். நீங்க வேற ஆளை வெச்சு உங்க ‘ஒர்க்கை’ பார்த்துக்கோங்க,’ என்றவள், ‘வாங்கள், போகலாம்,’ என்று அங்கிருந்து கிளம்பி இருக்க,

பார்வதிக்கு ஒன்றும் புரியவில்லை. நந்தினியை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்தவனை ஒரு முறை பார்த்துவிட்டு, நந்தினியின் பின்னால் ஓடினாள்.

‘சுயமரியாதை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போல,’ என்று நினைத்துக்கொண்டவன், ‘இன்ட்ரஸ்டிங்,’ என்று அவன் முன் இருந்த பைலை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான்.

இங்கே மார்க்கெட்டில் நடந்த சம்பவத்தை நினைத்து வருத்தத்தில் இருந்தான் அக்னி.

‘என்ன அக்னி, இன்னும் அதையே யோசிச்சுட்டு இருக்கியா? விடு, என்ன பண்றது? பாவம், அந்த மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்தப் பொண்ணு கஷ்டப்படணும்னு எழுதி இருக்கு,’ என்றான் தம்பிரான்.

‘அதான்டா நானும் யோசிக்கிறேன். இந்தப் பொண்ணுங்களுக்கு அறிவுங்கிறதே கிடையாதா? இப்படி இருக்குற ஆளுங்களைத் தேடிப் போயி கல்யாணம் பண்ணுவாங்களா?’ என்று எரிச்சலாகக் கேட்டான்.

‘காலம் அப்படி தானே இருக்கு மச்சி,’ என்றான் தம்பி.

‘எனக்கு அந்தப் பொண்ணு அழுது வடிஞ்சு போனதைப் பார்த்ததுல இருந்து ஏதோ போல இருக்குடா,’ என்றவாறு, முன்னே மேஜையில் இருந்த மதுவை குடிக்கத் துவங்கி இருந்தான்.

தம்பிரானும் இன்று அக்னி வீட்டிற்குப் போக மாட்டான் என்று உறுதி செய்தவன், காரில் இருந்த வசூலித்த பணத்தை எடுத்து வந்து மார்க்கெட் வீட்டில் உள்ள லாக்கரில் வைத்துப் பூட்டியவன், ‘சரி அக்னி, நீ கதவைப் பூட்டிக்கோ. நான் வீட்டுக்கு கிளம்புறேன். அம்மா தனியா இருக்கும்,’ என்று கிளம்பி இருந்தான்.

அவனை அனுப்பிவிட்டு கதவைத் தாளிட்டவன், அந்தப் பெண்ணையும் அவள் குழந்தையையும் பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தான். எவ்வளவு நேரம் மது அருந்தினான், எவ்வளவு அருந்தினான் என்றே தெரியவில்லை. குடித்துவிட்டு அப்படியே சோபாவில் சரிந்து இருந்தான்.

EPISODE 5

நிச்சயமாக, நீங்கள் கொடுத்த பத்தியில் உள்ள எழுத்துப்பிழை, வாக்கியப் பிழை, மற்றும் நிறுத்தற்குறிகளை திருத்தி, இலக்கணப் பிழைகள் இல்லாத ஒரு தெளிவான கதையாக மாற்றித் தருகிறேன்.

விடாமல் ரிங் போய்க்கொண்டே இருந்தது. மணி 7-ஐ கடந்தும் தூங்கிக்கொண்டிருந்தவன் தூக்கம், ரிங் சத்தம் கேட்டதும் கலைந்தது.

“ம்..ம்ம்… யார்ரா அது விடாமல் போன் போட்டுக்கிட்டு இருக்கறது? மனுசனை நிம்மதியா தூங்க விடுறாங்களா?” என்று உடலை முறுக்கிக்கொண்டு எழுந்தவன், போனை எடுத்துப் பார்க்க, ராஜன் தான் அழைத்திருந்தார்.

“அதானே! நான் நிம்மதியா இருந்தா இந்த ஆளுக்கு பொறுக்காதே!” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே போனை எடுத்து, “சொல்லு” என்றான்.

“எங்கடா இருக்க? நைட்டெல்லாம் வீட்டுக்கு வராம என்ன பண்ணிட்டு இருக்க?” என்றார் ராஜன்.

“ம்ம்ம்… நைட்டெல்லாம் மார்க்கெட் வீட்ல ஒரு குட்டியோட இருந்தேன். என்ன இப்போ உனக்கு?” என்றான் நக்கலாக.

அதைக்கேட்டு அதிர்ந்த ராஜன், “டேய்! என்னடா சொல்ற? உண்மையாவே பொண்ணை கூட்டிட்டு மார்க்கெட் வீட்டுக்கு போய்ட்டியா?” என்றார், நம்ப முடியாமல்.

“அட லூசு! நான் சொன்னதை அப்படியே நம்பிடுச்சு. சரிதான், இந்த ஆளைப் போய் என் அம்மா அப்படி, இப்படின்னு சின்ன வயசுல பில்டப் வேற கொடுத்தாங்க!” என்று நினைத்தவன், “ஆமா, அதுக்கு என்ன இப்போ? நீ எதுக்கு எனக்கு போன் பண்ணின? முதல்ல அதைச் சொல்லு” என்றான்.

“ஆமாவா? டேய்! நீ முதல்ல வீட்டுக்குக் கிளம்பி வாடா! நைட் வந்த உன் மாமனும் அத்தையும் உன்னை காணோம்னு உன் அம்மாகிட்ட கேட்டுக்கிட்டு இருக்காங்க” என்றார்.

“அத்தையும் மாமாவும்?” என்று யோசித்தவன், “ஐயோ, அஞ்சனாவும் வந்திருக்காளா?” என்றான்.

“ம்ம்… ஆமாடா! அவதான் உன் அம்மாகிட்டே உன்னைப் பத்தி போட்டு கொடுத்துட்டு இருக்கா. போனாப் போகுது, நான் பெத்ததாச்சேன்னு உன்னைக் கூப்பிட்டு விவரம் சொல்லலாம்னா, நீ என்னடான்னா, எனக்கு என்னனு, எவளோ ஒருத்தி கூட நைட்டெல்லாம் கூத்தடிச்சுட்டு இருக்க! இந்த விஷயம் மட்டும் உன் அம்மாவுக்கு தெரிஞ்சுது, நீ அவ்ளோதான்டா மவனே!” என்று நக்கலடித்த ராஜன், “ஒரு க்ளூ கொடுக்கிறேன், யோசிச்சுக்கோ… எந்தத் தப்பைச் செஞ்சாலும் இப்படி ஓப்பனா ஒத்துக்கக் கூடாது. சரியா?” என்றார்.

“இப்போ அது ரொம்ப முக்கியம். நீ போனை வை, நான் கிளம்பி வரேன்” என்று போனை வைத்துவிட்டு, பாத்ரூம் சென்று ஃப்ரெஷப் ஆனவன், சட்டையை மாட்டிக்கொண்டு வாசல்கதவைத் திறந்தான். அப்படியே நின்றான்.

வாசலில் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த குழந்தையை எங்கேயோ பார்த்தது போல இருக்க, கதவை சாத்திவிட்டு வந்தவன், படியில் இறங்கி வந்தான். அப்போது அழுதுகொண்டிருந்த ஆராதனா, பார்க்க, அவளைப் பார்த்ததும் வேகமாக அவளிடம் வந்தான்.

“ஆராதனா! நீ இங்க என்னடா பண்ற? உன் அம்மா வரலையா?” என்று அவள் அம்மாவைச் சுற்றிலும் தேடினான்.

“ம்ஹும்…ம்ஹும்…” என்று தேம்பி அழுதவள், “அம்மா… அம்மாவுக்கு காய்ச்சல். அப்பா அம்மாவை போட்டு நைட் அடிச்சிட்டாரு” என்றாள்.

“அம்மாவுக்கு காய்ச்சலா? ஹாஸ்பிடல் போகலையா?” என்றான்.

“ம்ஹும்… போகல” என்று அழுதாள்.

அவள் தேம்பித் தேம்பி அழுவதைப் பார்த்து என்னவோ போல இருந்தது அக்னிக்கு. தெரிந்தோ தெரியாமலோ, அந்தப் பெண்ணின் இந்த நிலைக்குத் தான் காரணம் என்று உள்ளுக்குள் உறுத்தியது அவனுக்கு.

ஆராதனாவைத் தூக்கியவன், “நீ ஏன் அம்மா கூட இல்லாம இங்க வந்து உட்கார்ந்திருக்க?” என்றான்.

“நீங்க பெரிய ரவுடி தானே?” என்றாள்.

அதைக்கேட்டு தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு. “யார் சொன்னா நான் ரவுடின்னு? யாரு சொன்னது உன்கிட்ட?” என்றான்.

“அப்பா நேத்து வீட்டுக்கு போனதும் ‘அந்த ரவுடிகிட்ட எப்படிடி பேசுனே?’ன்னு அம்மாவை போட்டு அடிச்சாரு” என்றாள்.

“அந்த நாதாரிக்கு குழந்தை முன்னாடி எப்படி நடந்துகணும்னு தெரியலையே!” என்றவன், “சரி, நீ எதுக்காக இங்க வந்த? உனக்கு இந்த வீடு எப்படி தெரியும்?” என்றான்.

“நான் உன்னை காணோம்னு தேடினேன். ஒரு தாத்தா வந்து ‘யாரைத் தேடுற?’ன்னு கேட்டாரு. நான் ‘ரவுடி மாமாவை காணோம்’னு அழுதேனா, அவருதான் இங்க கொண்டு வந்து விட்டுட்டு, எனக்கு சாப்பிட மிட்டாய் வாங்கிட்டு வரேன்னு போனாரு” என்றாள்.

“ம்ஹும்… நான் ரவுடின்னு முடிவு பண்ணிட்டாங்க எல்லாரும்” என்று நினைத்தவன், “என்னை எதுக்குத் தேடுனீங்க ஆராதனா செல்லம்?” என்று அவள் கண்ணீரை துடைத்துவிட்டபடி கேட்டான்.

“நான் படத்துல எல்லாம் பார்த்திருக்கேன். ரவுடிங்க கிட்டே காசை கொடுத்தா அடிப்பாங்களாம். நான் கொஞ்சம் காசு கொண்டு வந்திருக்கேன். என் அப்பாவை அடிச்சு போட்டுட்டு என் அம்மாவை காப்பாத்துறியா நீ?” என்று இவ்வளவு நேரம் கைக்குள் வைத்து இருந்த பணத்தை அவன் முன் நீட்டினாள்.

அவள் பிஞ்சுக் கைக்குள் மறைத்து வைத்திருந்த 5 ரூபாய் நாணயங்கள் இரண்டைப் பார்த்தவன், அவள் அம்மாவின் மீது எவ்வளவு பாசம் இருந்தால் இவ்வளவு தூரம் தனியாக வந்திருப்பாள் என்று நினைத்தான். பணத்தின் மதிப்பை பெரிதாக நினைத்து வாழும் உலகில், தன் அம்மாவுக்காக இவ்வளவு தூரம் வந்திருந்த ஆராதனாவை அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.

ஒரு பிஞ்சு மனதில் எவ்வளவு ஆழமாக பதிந்திருந்தால் தன் அப்பாவை அடிக்கச் சொல்லி இங்கு வருவாள்? அவள் அம்மாவை அந்த ஆள் எப்படி கொடுமை செய்திருந்தால் ஆராதனா இப்படி வந்திருப்பாள்? என்று தோன்றியது.

அவன் யோசனையில் மூழ்கியிருக்க, “என் அம்மாவை காப்பாத்துறியா?” என்றாள் அவன் முகத்தின் முன் தலையை சாய்த்து கேட்டு.

அதில் நினைவு வந்தவன், “காப்பாத்திடலாம்” என்று சிரித்தவன், “உன் வீடு எங்கன்னு சொல்லு, போலாம்” என்று பேசிக்கொண்டே படியில் இறங்கினான்.

அப்போது அவன் கையிலிருந்து ஆராதனாவை வெடுக்கென்று பிடுங்கிய அவள் அப்பா சாமிநாதன், “ஏன்டி, உன் அம்மாவை மாதிரிதான் நீயும் இவன்கிட்ட? உனக்கு என்னடி வேலை? நீ இங்க வந்து என்ன செய்ற?” என்றான்.

அவனிடம் போனதும் ஓவென அழ ஆரம்பித்தாள் ஆராதனா. அழுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வேகமாக சாமிநாதனிடம் வந்தவன், “டேய்! அறிவு இருக்கா உனக்கு? குழந்தைகிட்ட இப்படித்தான் பேசுவியா நீ?” என்று அவன் கையில் இருந்த குழந்தையை வெடுக்கென்று வாங்கிக்கொண்டான்.

ஆராதனா அக்னியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தேம்பி அழ,

“ஆராதனா குட்டி அழாதீங்க! மாமா இருக்கேன் இல்ல! அழாதீங்க!” என்றவன், அவன் முன்னே கத்திக்கொண்டிருந்த சாமிநாதனைப் பார்த்ததும், “டேய்! வாயை மூடு!” என்று ஒரு அதட்டு அதட்டினான்.

சாமிநாதன் கப்சிப் என்று அடங்கிவிட, “குழந்தைகிட்ட முதல்ல பொறுமையா, பாசமா பேசு! இப்படி இருந்தா எப்படி ஆராதனா உன்கிட்ட ஒட்டுவா?” என்றான்.

“என் பொண்ணுகிட்ட எனக்கு எப்படி நடந்துகணும்னு தெரியும். நீ முதல்ல அவளை என்கிட்ட கொடு” என்று அவன் கையிலிருந்து ஆராதனாவை சாமிநாதன் இழுக்க,

“ம்ஹும்… நான் போகல மாமா! அப்பா அடிப்பாரு!” என்று அவள் அழ,

“யோவ்! இருடா கொஞ்சம் பொறு! நானே அவளை சமாதானம் பண்ணி உன் வீட்ல விடறேன்” என்றான்.

“எதுக்கு? அப்படியே என் வீட்டு அட்ரெஸை கண்டுபிடிச்சு நான் இல்லாத நேரம் தூரிகாவை பார்க்க வரலாம்னு இருக்கியா?” என்றவன், ஆராதனாவை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

“தூரிகா” என்று உச்சரித்து பார்த்தவன், ஆராதனாவின் அம்மாவின் பெயர் இதுதானா? என்று நினைக்கையில், ஆராதனாவின் குரல் அவனை உலுக்கியது.

அவள் அழுதுகொண்டே அக்னியை பார்த்து, “ரவுடி மாமா! நான் போகல. நீயும் வா அம்மா போவோம்” என்று அழுதுகொண்டே சென்றாள்.

அந்தக் காட்சியை அவனால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அந்தக் கொடுமைக்காரனிடமிருந்து அவளை அழைத்துக்கொள்ளவும் முடியவில்லை அவனால்.

தன் இயலாமையை நினைத்து அவனுக்கே வெட்கமாக இருந்தது. கனத்த இதயத்தோடு வீட்டிற்கு கிளம்பி இருந்தான் அக்னிமித்ரன்.

அதே யோசனையோடு வீட்டிற்கு வந்தவனை, அவனுக்காகக் காத்திருந்த செல்வம், சகுந்தலா இருவரும் வரவேற்றனர்.

“மாப்பிள்ளை வந்தாச்சா? என்ன மாப்பிள்ளை, நீ நேத்தே வரேன்னு சொன்ன. நாங்க வந்தது ஞாபகம் இல்லையா உனக்கு?” என்று வந்து அவனை கட்டிக்கொண்டார் செல்வம்.

“இல்லை மாமா, மறக்கவெல்லாம் இல்லை. கொஞ்சம் வேலை அதிகம். மார்க்கெட்டில் லோடு எல்லாம் வந்து அதைச் சரிபார்த்து வைக்கவே நேரம் ஆகிடுச்சு. சரி, அந்த நேரத்தில் வந்தாலும் நீங்க எல்லாரும் தூங்கியிருப்பீங்கன்னுதான் மார்க்கெட் வீட்டிலேயே படுத்துட்டேன்” என்றான்.

“ம்கூம்… இவனுக்கு மார்க்கெட்ல வேலை அதிகம்னு சொன்னா எவனும் நம்புவானா? இவனுக்கு வேலை பார்க்க அத்தனை பசங்களும் அங்கேதான் இருக்கானுங்க. நைட்டெல்லாம் எவ கூடவோ கூத்தடிச்சிட்டு இப்போ வந்து எப்படி நடிக்கிறான் பாரு” என்று அவனை முறைத்துக்கொண்டு ராஜன் நின்று இருக்க,

“யுவா! எதுக்காக என் பையனை முறைச்சிட்டு இருக்க நீ?” என்றார் இதழ்யா.

“நான் எங்கடி அவனை முறைச்சேன்? உன் பையன் பேசுறதை  கேட்டு ஆச்சரியமா அவனை பார்த்துட்டு இருந்தேன்” என்று சமாளித்தார் ராஜன்.

அவர்கள் பேசுவதைக் கேட்ட அக்னி, “அம்மா, நேத்து நைட் நான் என்ன வேலை பண்ணினேன்னு அப்பாகிட்ட காலையில ஃபோன்ல சொல்லிட்டு இருந்தேன். அதான் அப்பாவுக்கு இவ்ளோ ஷாக்” என்று சிரித்தவன்,

“என்ன அத்தை, எப்படி இருக்கீங்க? எங்க நீங்க பெத்த ரெண்டும்?” என்றான்.

“அதுவா, அவங்க இவ்ளோ நேரம் நீ வருவேன்னு தான் பார்த்துட்டு இருந்தாங்க. நீ வர லேட் ஆனதும் நந்தினி அவங்களை ஷாப்பிங் கூப்பிட்டு போயிட்டா” என்றவர், “என்னடா, ஆளே கருத்துப் போயிட்ட?” என்றார்.

“அதுவா, கொஞ்சம் அலைச்சல் அத்தை. பார்த்துக்கலாம் விடு. என் அப்பனை விடவா நான் கருப்பா இருக்கேன்?” என்றான்.

“ஐயோ! அந்த அளவுக்கு எல்லாம் கருப்பு இல்லைடா மாப்பிள்ளை நீ. என் தங்கச்சியை விட கொஞ்சம் தான் கலர் கம்மி” என்றார் செல்வம்.

அவர்கள் தன் நிறத்தைப் பற்றிப் பேசவும், இருவரையும் ராஜன் முறைத்துக்கொண்டு நின்று இருக்க,

“டேய்! அவங்க என்ன வேணா சொல்லட்டும். எனக்கு இந்த கலர்தான் ரொம்ப பிடிச்சிருக்கு” என்று இதழ்யா ராஜனின் கன்னத்தைக் கிள்ளினாள்.

“இது போதும்டி பாப்பா! எவன் என்ன பேசினாலும் எனக்கு என்ன?” என்று செல்வத்தையும், அக்னியையும் முறைத்தான்.

அதை கண்டுகொள்ளாத இருவரும், “வா மாப்பிள்ளை! நம்ம உள்ள போலாம்” என்று அக்னியின் தோளில் கையைப் போட்டு உள்ளே அழைத்துச் சென்றார் செல்வம்.

இங்கே, அஞ்சனாவும், அவள் தம்பி தர்மாவும் காரில் ஒரு ஷாப்பிங் மாலுக்குள் நுழைய, அவர்களோடு வந்த நந்தினி, “நீங்க உள்ள போங்க, நான் ஃபோன் பேசிட்டு வரேன்” என்று அவர்களை அனுப்பியவள், தன் மொபைலில் வந்திருந்த பார்வதியின் அழைப்பை ஏற்றாள்.

“சொல்லு பாரு” என்றால் காலை அட்டென்ட் செய்து.

“மேம், அந்த அபிமன்யு கன்ஸ்ட்ரக்ஷன் CEO மிஸ்டர். அபிமன்யு உங்க மேலேயும், நம்ம கம்பெனி மேலேயும் கேஸ் போடப்போறதா அவங்க வக்கீல் மூலமா நமக்கு மெயில் அனுப்பி இருக்கார்” என்றாள்.

“வாட்? கேஸா?” என்றவள், “சரி, நீ அந்த மெயிலை எனக்கு ஃபார்வர்ட் பண்ணு. நான் பார்த்துக்கிறேன்” என்று ஃபோனை வைத்தாள்.

தன் மொபைலில் இருந்த மெயிலை ஓபன் செய்த நந்தினி, அதில் வந்திருந்த அபிமன்யுவின் மெயிலைப் படித்தவள், “ராஸ்கல்! கொஞ்சமாவது லாஜிக்னு ஏதாவது இருக்கா இந்த மெயில்ல?” என்று அவனை வசைபாடியவள், “இவனை நேர்ல மீட் பண்ணித்தான் பேசணும்” என்று நினைத்தவள், பார்வதிக்கு அபிமன்யுவை மீட் பண்ண அப்பாயிண்ட்மென்ட் வாங்கச் சொல்லி மெசேஜ் அனுப்பிவிட்டு, அஞ்சனாவையும், தர்மனையும் தேடிச் சென்றாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured