layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
EPISODE 5

"அம்மா எனக்கு கொஞ்சம் TIREDAH இருக்கு .. குடிக்க எதுவும் கொண்டு வரிங்களா ... " என்று வீராவின் அருகில் சோபாவில் சரிந்தான்.

அப்போது தாமரை அதிதி ரூமிற்குள் இருந்து விஜய்யின் சத்தம் கேட்டு அவனை பார்ப்பதற்காக வெளியே வந்தாள் . அவளை பார்த்ததும் யாரா "ஏய் தாமரை நீ அப்போவே தலை வலிக்குதுன்னு சொன்னியே.. உனக்கும் குடிக்க சூடா எதுவும் எடுத்துட்டு வரட்டுமா ?" என்றாள் யாரா .

யாரா பேசிக்கொண்டு இருந்த திசையை ஆர்வமாக திரும்பி பார்த்த விஜய்க்கு அதிர்ச்சியானது முகமெல்லாம் அழுது வீங்கிப் போய் இருக்க... பாவாடை தாவணியில் விஜய்யை பார்த்தவாறு பொலிவிழந்த முகத்தோடு நடந்து வந்தவளின் கழுத்தில் மின்னிக்கொண்டு இருந்த புதிதாக கட்டி இருந்த மஞ்சள் கயிறை பார்த்தவன் உறைந்து போனான்.

அவன் புரியாமல் தாமரையையும், அவள் கழுத்தில் இருந்த தாலியையும் மாறி மாறி பார்த்தான் . அப்போது தன் ரூமில் இருந்து கீழே வந்த வம்சியை பார்த்து "அடடே !!வாங்க மருமகனே ... நீங்களும் வந்துட்டீங்களா ... புதுசா கல்யாணம் ஆனதும் ரெட்னு பெரும் வெட்கபட்டுட்டு ஆளுக்கு ஒரு ரூமுக்குள்ள போய் இவ்வளவு நேரம் இருந்துட்டீங்களா " என்று தன் மாப்பிள்ளையை கேலி செய்ய...

தாமரை கழுத்தில் இருந்த தாலியையும் , அதே போல வம்சியை தேவ் புதிதாக மாப்பிள்ளை என்றும் அவனுக்கு திருமணம் ஆனதியும் சொல்லியதை கேட்டவனுக்கு ஓரளவுக்கு எல்லாம் புரிந்து போனது .

உலகமே தன் காலடியில் சுழன்று சுக்குநூறாக வெடித்தது போல உணர்ந்தவன் வலி நிறைந்த பார்வையோடு தாமரையை பார்த்தவன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தன் அறைக்கு சென்றுவிட்டான்.

தாமரையும் செல்லும் அவனையே விழிகளில் நீரோடு நின்று இருந்தாள் .
 
Top