logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
“அது என்ன சித்து பொண்ணுங்களுக்கு உள்ளான குணம் போல ஷாப்பிங் போறோம்னு எவ்ளோ சந்தோசமா இருக்கா ரோஜா” என்று சித்துவின் அருகில் அமர்ந்து இருந்த ரோஜாவை திரும்பிப் பார்த்து கேட்டான் விஷ்ணு.

“ அண்ணா இது உங்களுக்கு புரியல ஷாப்பிங் பண்ணும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா நமக்கு இருக்கிற ஸ்ட்ரெஸ் எல்லாம் ரிலீவ் ஆகும் புதுசு புதுசா டிரஸ் புதுசு புதுசா நிறைய விஷயங்களை பார்க்கிறப்ப மனசுக்குள்ள அவ்வளவு சந்தோசமா இருக்கும்” என்றாள்.

“அதுக்காக இவ்வளவு சீக்கிரமாவே கிளம்பனுமா மணியை பாரு 9 தான் ஆகுது. இங்க எல்லாம் இவ்வளவு சீக்கிரம் கடை திறந்து வைப்பாங்களா” என்ற படி விஷ்ணு சித்துவை பார்க்க.

“ நான் ஆல்ரெடி ஒரு டிசைனர்கிட்ட பேசிட்டேன் டா அவர்கிட்ட தான் நம்ம போய் ரோஜாவுக்கு டிரஸ் எடுக்க போறோம்” என்றான் சித்து

“ ஓஹோ எனக்கு தெரியாமலேயே டிரஸ் எடுக்க டிசைனர் வர பேசியாச்சா பரவாயில்ல பொண்டாட்டி வந்ததும் எல்லாம் மாறும் போல… நமக்கும் எப்போ எப்படி ஒரு கல்யாணம் நடந்து நானும் என் பொண்டாட்டிக்காக மாறுபொருளும் தெரியல” என்று நினைத்தவன்.

“ நம்ம ஷாப்பிங் முடிச்சுட்டு நேரம் அப்படியே ராபர்ட் ஓட வீட்டுக்கு தானே போறோம். வேற எதுவும் பிளான் இருக்கா?” என்றான் விஷ்ணு.

“இப்போதைக்கு எந்த பிளானும் இல்ல முதல்ல ஷாப்பிங் முடிக்கலாம்” என்றான்.

“ ஐயோ சின்னையா! ஷாப்பிங் பண்ணிட்டு வந்து டிரஸ் மாத்திக்கிட்டு போக வேண்டாமா? நீங்க அங்க இருந்து அப்படியே லஞ்சுக்கு போலாம்னு சொல்றீங்க. அங்க எல்லாரும் அழகாக டிரஸ் பண்ணிட்டு வருவாங்கள்ள” என்றாள் ரோஜா இடைமறித்து.

“ரோஜா அதப்பத்தி நீ கவலைப்படாத அந்த டிசைனரை எல்லா செட்டப்பும் வெச்சிருப்பார். உனக்கு பொருத்தமா எந்த டிரஸ் செலக்ட் பண்றியோ அதுக்கு தகுந்த மாதிரி மேக்கப்ல இருந்து மத்த ஆக்சஸரீஸ் வரைக்கும் அவங்களே பார்த்துப்பாங்க. அதனால நம்ம ஒரே இடத்துல ஷாப்பிங் முடிச்சிட்டு நேரா ராபர்ட் பார்க்க அவர் வீட்டுக்கு போறோம்” என்றான் விஷ்ணு.

“ என்னது ஒரே இடத்துல ஷாப்பிங் முடிக்க போறோமா! அப்போ நிறைய கடைக்கு போகலையா? என்ன இந்த லண்டன சுத்தி காட்டலையா?” என்று சோகமாக விஷ்ணுவிடம் கேட்டாள் ரோஜா.

“ஓஹோ! நீ ஷாப்பிங்னா அப்படி நினைச்சிட்டியோ.. அதான் இல்ல இப்ப நமக்கு டைமும் இல்ல அதனால இதை விட்டா வேற சாய்ஸும் இல்ல” என்றான் விஷ்ணு.

“ ம்ஹும்… நான் எவ்ளோ கனவு கண்டு வைத்திருந்தேன் இவங்க இப்படி ஒரே இடத்தில் எல்லா வேலையும் முடிச்சுட்டோம்னு சொல்லிட்டாங்களே” என்று தனக்குள்ளேயே வருத்தப்பட்டவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

ரோஜாவின் இந்த சோகமான முகத்தை சித்துவும் கவனிக்கத்தான் செய்தான் ஆனால் என்ன செய்வது அவர்களுக்கு இப்போது வாய்ப்பு இல்லை.

சிறிது நேரத்தில் அந்த டிசைனர் இருக்கும் ஸ்டுடியோவிற்கு வர..

“சித்து.. நீயும் ரோஜாவும் டிரஸ் செலக்ட் பண்ணி ரெடியா இருங்க. நான் போய் ராபர்ட் மீட் பண்றப்ப அவருக்கு கொடுக்க கிப்ட் எதுவும் வாங்கிட்டு வரேன்” என்று அவர்களை டிராப் செய்துவிட்டு விஷ்ணு கிளம்பி இருந்தான்.

இவர்களுக்காக ஏற்கனவே தயாராக எடுத்து வைத்திருந்த ஆடைகளை சித்து விற்கும் ரோஜாவிற்கும் அந்த ஸ்டுடியோவில் வேலை செய்யும் சேல்ஸ் கேர்ள் ஆடைகளை காட்டினாள்.

ஒவ்வொன்றாக சித்து பார்த்துக் கொண்டு வர ரோஜா அவன் பின்னால் அமைதியாக நடந்து வந்தாள்.

அவளிடம் திரும்பி “ஹே க்யூட்டி! என்ன அமைதியா வர ஷாப்பிங் போகணும்னு நைட்ல இருந்து தாம் தூம்னு கொதிச்சிட்டு இருந்த நான் இப்ப என்னவோ அமைதியா இருக்க உனக்கு என்ன டிரஸ் பிடிச்சிருக்கோ அதை எடுத்துக்கோ” என்றான்

“இல்ல சின்னையா நீங்களே உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதை செலக்ட் பண்ணி குடுங்க” என்றால் சோகமாக.


“ ஏன் ரோஜா உனக்கு இங்க இந்த வருஷம் பிடிக்கலையா சொல்லு நம்ம வேற டிசைனர் கூட பார்க்கலாம்” என்றான்


“ அய்யய்யோ! அதெல்லாம் ஒன்னும் இல்ல இங்க இருக்குற டிரஸ் எல்லாம் பார்த்தா ரொம்ப விலை அதிகமா இருக்கும் போல. எனக்கு இவ்ளோ காஸ்ட்லி டிரஸ் பார்த்தாலே பயந்து வருது” என்று பின் வாங்கினாள்.

“விலையை பத்தி நீ ஏன் கவலைப்படுற அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். உனக்கு எந்த டிரஸ் பிடிக்குதோ அதை நீ எடுத்துக்கோ இங்க இருக்குற எந்த டிரஸ் வேணும்னாலும் அதை வாங்கி கொடுக்கிற அளவுக்கு என்கிட்ட பணம் இருக்கு. போ என்ன பிடிக்குதோ அதை எடு” என்று தன் பின்னால் நின்றிருந்தவள் கையை பிடித்து முன்னே இழுத்து விட்டான்..

அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக அங்க இருந்த ஆடைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தவள் கூடவே அதன் விலையையும் பார்த்துவிட்டு “சின்னையா எல்லா டிரெஸ்ஸும் ரொம்ப விலை அதிகமா இருக்கும் போல எல்லாம் டாலர் கணக்குல விலை போட்டு இருக்கு எனக்கு வேண்டாம் ஸ்ருதி அக்கா ஊர்ல இருந்து எனக்கு கொடுத்துவிட்டு டிரஸ் நிறைய இருக்கு நான் அதிலிருந்து ஏதாவது ஒன்னு போட்டு இருக்கேன் வாங்கணுமா ஹோட்டலுக்கே போலாம் அங்க போயி அங்க இருக்குற டிரஸ் போட்டுட்டு ராபர்ட் சார் வீட்டுக்கு போகலாம்” என்றாள்

நீ சொன்னா கேக்க மாட்ட நானே உனக்கு ட்ரெஸ் செலக்ட் பண்றேன் என்று அவளை தாண்டி அங்கிருந்து உடைகளை பார்க்க ஆரம்பித்தான் அங்கே ஒரு தாமரை நிறத்தில் லாங்க்வுன் ஒன்று இருக்க அதை பார்த்ததும் அது ரோஜாவிற்கு அழகாக இருக்கும் என்று சித்துவிற்கு தோன்றியது அந்த ஆடையை சர்டிபிகேட் உங்களிடம் சுட்டிக்காட்டி இதை ரோஜாவை அழைத்துப் போய் ட்ரையல் பார்க்கச் சொல்லி அனுப்பி வைத்தான்.

இந்த ஆடையை பார்த்ததும் ரோஜாவிற்கும் அது பிடித்திருக்கிறது என்று அவள் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை வைத்து புரிந்து கொண்டான்.

பணிப்பெண்ணோடு உள்ளே சென்ற ரோஜாவிடம் அந்தப் பெண் அந்த ஆடையை கொடுத்துவிட்டு “மேடம் நீங்க டிரஸ் மாத்திட்டு கூப்பிடுங்க” என்று அந்தப் பெண் வெளியே வர..

அதற்குள் அங்கு வேலை பார்க்கும் மேனேஜர் அந்த பணி பெண்ணை ஏதோ வேலையாக அழைத்தார்.

அவர் சென்றதும் தன் போட்டு வந்திருந்த ஆடையை கழற்றி விட்டு சித்து அவளுக்காக தேர்ந்தெடுத்த தாமரை வண்ண ஆடையை உடுத்தியவள் அதிலிருந்து ஜிப்பை போடுவதற்காக கையை பின்னால் கொண்டு செல்ல அவளுக்கு அந்த ஜிப் எட்டவில்லை வெளியே இருக்கும் சேல்ஸ் கடை அளிக்கலாம் என்று அங்கு இருந்த திரையை விலக்கி தலையை மட்டும் வெளியே நீட்டி அந்த பணி பெண்ணை தேடினால்.

அந்தப் பெண் அங்கு இல்லாதது கண்டு “எங்க போனா அந்த பொண்ணு.. இப்ப நான் எப்படி வெளியே போறது இந்த ஜிப்பை வேற போடணுமே” என்று அவள் சுற்றிலும் பார்க்க..

சோபாவில் கால் மேல் கால் போட்ட படி அங்கிருக்கும் மேகசீனை புரட்டிக் கொண்டிருந்த சித்தவை தான் பார்த்தாள்.

“ஷ்.. ஷ்…” என்று சத்தமிட்டு சித்துவை அழைத்தாள் ரோஜா.

மேக்சினை புரட்டிக் கொண்டிருந்தவன் சத்தம் வந்ததும் அவளை பார்க்க

“சார் இங்க இருந்து அந்த பொண்ணு எங்க” என்றாள்.

சுற்றிலும் பார்த்துவிட்டு தெரியல ஏன் என்றான்.

அவள் சித்துவிடும் எப்படி சொல்வது என்று தயக்கத்தோடு அமைதியாக இருக்க..

“என்ன ரோஜா எதற்காக அந்த பொண்ணு தேடுறேன்னு சொன்னாதானே நான் எதுவும் செய்ய முடியும் இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்” என்றான்.


“ என்னோட டிரஸ்ல ஜிப் போடணும் எனக்கு எட்டல அதான் அந்த பொண்ணு கேட்டேன்” என்று கூச்சத்தோடும் தயக்கத்தோடும் அவனிடம் கூறினாள்.

“இதுக்கு ஏன் அந்த பொண்ண கூப்பிடுற இரு நானே வரேன்” என்று மேக்சிஜனை டேபிளில் வைத்து விட்டு எழுந்து அவள் இருந்த இடத்தை நோக்கி சித்து செல்ல..


சிறிதும் யோசிக்காமல் தன் ஆடையை சரி செய்ய வருகிறேன் என்று சொல்பவனை அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.


TELEGRAM LINK

FACEBOOK GROUP

WHAATSAPP CHANNEL

PRATILIPI LINK
 

Author: layastamilnovel
Article Title: யாரடி நீ 15
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top