logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
ராபர்ட் வீட்டில் அறிமுக படலம் எல்லாம் முடிந்து அனைவருடனும் பார்ட்டி ஆரம்பித்து இருந்தது.

ரொபேர்ட்டின் மனைவி பெல்லா சித்துவையும், ரோஜாவையும் அழைத்துக்கொண்டு அவர் வீட்டை சுற்றி காட்ட ஆரம்பித்து இருந்தார்.

அவருக்கு பிரெஞ்சு மட்டுமே சரளமாக பேச வரும் . பெல்லாவின் பூர்விகம் பிரான்ஸ் நகரில் உள்ள ஒரு கிராமம். ஆங்கிலம் ஓர் அளவுக்கு தான் பேசுவார். வந்தவர்களை வரவேற்க.. அவர்களுக்கு எதுவும் வேண்டுமா என்று பொதுவாக சில ஆங்கில வார்த்தைகளை பேச மட்டுமே அவருக்கு தெரியும் .

அவர் பிரான்சும், ஆங்கிலமும் கலந்து இருவரிடமும் பேசிக்கொண்டு இருக்க.. சித்து அவர் பேசும் ஆங்கிலத்தை வைத்து ஓரளவுக்கு புரிந்து கொண்டு பதில் பேசியபடி நடந்து சென்றான்.

அவர்களோடு வந்த ரோஜா அமைதியாக பெல்லா பேசுவதை பார்த்துக்கொண்டே வந்தவள் . ஒரு கட்டத்தில் பெல்லாவின் அருகில் வந்தவள் அவர் கையை பிடித்துக்கொண்டு "எனக்கு பிரெஞ்சு நன்றாக தெரியும் . நீங்க தாராளமா என்கிட்டே பிரெஞ்சுளையே பேசலாம் " என்று அவர் பாஷையிலே அவள் பேச..

அதை கேட்டு பெல்லாவுக்கோ மகிழ்ச்சி தல முடியவில்லை. ரோஜாவை கட்டி அணைத்துக்கொண்டவர் அவள் சரளமாக பேசுவதை கண்டு "உனக்கு எப்படி பிரெஞ்சு தெரியும். " என்றார் .

"நான் என்னோட ஸ்கூலில் செகண்ட் லாங்குவேஜ் பிரெஞ்சு தான் எடுத்திருந்தேன். எனக்கு இந்த மொழி புதுசாவும், வித்யாசமாவும் இருந்துச்சு. என்னோட பிரெண்ட்ஸ் சிலர் பிரெஞ்சு கிளாஸ் போனாங்க.. சரி நானும் அப்டியே போய் கொஞ்சம் காதுக்குவமேன்னு கத்துக்கிட்டது " என்றாள் .

"வாவ்! நீ உண்மையாவே ரொம்ப நல்ல பேசுற " என்று அவள் கை பிடித்து அழைத்துக்கொண்டு வீட்டை சுற்றி காட்டினார்.

இதையெல்ல கவனித்தவாறு அவர்கள் பின்னால் வந்த சித்து "இவ என்ன பெல்லா கூட இவ்வளவு சரளாமா பேசிட்டு போறா.. அப்போ இவளுக்கு அவங்க பேசுற லாங்குவேஜ் என்னனு தெரியும் போலையே.. பரவால்லையே இதை நான் பட்டிக்காட்டுகிட்டே இருந்து எதிர்பார்களையே " என்று அவளை நினைத்து ஆச்சர்யப்பட்டவன் அவர்கள் பின்னால் ரோஜாவை ரசித்தவண்ணம் சென்றான்.

அங்கே இருந்த ஸ்டடி ரூமை திறந்து கொண்டு உள்ளே சென்ற பெல்லா "இது என்னோட ஸ்டடி ரூம். என்னோட முக்கியமான வேலைகளை எனக்கு பிடித்த வேலைகளை நான் பெரும்பாலும் இங்க இருந்து தான் செய்வேன் " என்றார்.

அந்த அறையை பார்த்த ரோஜா வாயை பிளந்து விட்டாள் . அது வெறும் ஸடடி ரூம் என்று சொல்வதை விட ஒரு ஆர்ட் கேலரி என்றே சொல்லலாம். பெல்லாவின் கை வண்ணத்தில் விதவிதமான , வித்தியாசமான படங்கள் வரையப்பட்டு அந்த அரை முழுவதும் மாட்டப்பட்டு இருந்தது.

அவர் அங்கிருக்கும் படங்களை பற்றி விரித்துகொண்டு இருக்க.. "இதெல்லாம் உண்மையாவே நீங்க தான் வரைஞ்சின்களா " என்றாள் ஆர்வமாக,

"ஆமா " என்று அவர் ரோஜாவை பார்த்தவர். அவள் கண்களில் இருந்த ஆர்வத்தை பார்த்து "உனக்கு ட்ராயிங்க்ல இன்டெரெஸ்ட் இருக்கா.. நீ வரைஞ்சிருக்கியா இதுக்கு முன்ன... " என்றார்.

"ம்ம்... நான் இன்டெர்காலேஜ் காம்பெடிஷன்ல எல்லாம் கலந்து வின் பண்ணிருக்கேன் " என்றவள் தன் மொபைலை ஆன் செய்து அதில் கேலரியில் அவள் வரைத்து எடுத்த போட்டோக்களை பெல்லாவிடம் காட்டினாள்.

அதை ஆர்வமாக வாங்கி பார்க்க... அவரோடு சேர்ந்து ரோஜா தன் மொபைலில் என்ன காட்டுகிறாள் என்று பின் இருந்து அவள் மொபைலை எட்டி பார்த்தான்.

அதை பார்த்ததும் சித்துவின் கண்கள் ஆச்சர்யத்தில் ரோஜாவை ஏறிட்டது.

அதில் ரோஜா வரைந்து இருந்த ஓவியங்கள் மிகவும் தத்ரூபமாக இருந்தது. இயற்கை எழில் நிறைந்த காட்சிகள் , மழலையின் சிரிப்பு.. அழுகை என வித்தியாசமான உணர்வுகள். என நிறைய வரைந்து இருந்தாள் .

அதையெல்லாம் அவள் மொபைலில் பார்த்த பெல்லா ரோஜாவை பார்த்தவர் "நீ யார்கிட்டே கத்துகிட்ட இந்த மாதிரி தத்ரூபமா வரைய " என்றார் .

"இதுக்கெல்லாம் கிளாஸ் இருக்கா! " என்றவள் .

"நானா எனக்கு தெரிஞ்ச மாதிரி அப்போ அப்போ you tube ல வர விடியோவை பார்த்து கத்துக்கிட்டேன். நான் யாருகிட்டேயும் நேரடியா கிளாஸ் எல்லாம் போகல " என்றாள் .

அதை கேட்டு மேலும் ஆச்சர்யமானவர் சித்துவிடம் திரும்பி " she is such wonderful artist . If given proper training, Roja will definitely become a good artist. " என்றார்.

அவனும் அவர் சொல்வது சரி தான் என்பது போல தலையை ஆட்டினான்.

அப்போது அங்கு வந்த பணிப்பெண் பெல்லாவை ராபர்ட் கீழே அழைக்கிறார் என்று சொல்லவும் தன் கையில் இருந்த ரோஜாவின் போனை சித்துவின் கையில் கொடுத்துவிட்டு "EXCUSE ME .. " என்று அங்கிருந்து அவர் கிளம்ப.

மீதம் இருந்த போட்டோக்களை சித்து ஒவொன்றாக பார்த்தபடி ரோஜாவிடம் "உனக்குள்ள நிறைய திறமைகள் ஒளிஞ்சிருக்கும் போலையே .. இன்னும் என்ன என்ன திறமையை எல்லாம் நீ ஒளிச்சு வெச்சிருக்க... " என்றவாறு அவள் வரைந்த ஓவியங்களை பார்த்துக்கொண்டே கேட்டான் .

"நீ சொல்ற அளவுக்கு எல்லாம் பெருசா எதுவும் எனக்கு தெரியாது சின்னையா . அப்போ அப்போ தோணுறதை செய்வேன். எனக்கு என்ன திறமை இருக்குன்னு எனக்கே சரியா தெரியாது" என்றவாறு அவன் அருகில் வந்து அந்த போட்டோக்களை அவனுடன் சேர்ந்து ரோஜாவும் பார்த்துக்கொண்டே எந்த மாதிரி மனநிலையில் இருக்கும்போது இந்த புகைப்படங்களை எல்லாம் தான் வரைந்தேன் என்ரூ அவனிடம் சொல்லிக்கொண்டு வந்தாள் .

அப்படி பார்த்துக்கொண்டே அடுத்த புகைப்படத்தை பார்ப்பதற்காக நகர்த்தியவன் அதில் இருந்த புகைப்படத்தை கண்டதும் ஸ்தம்பித்துப்போனான். அதை பார்த்த அடுத்த நொடி சித்துவின் கையில் இருந்த தன் மொபைலை ரோஜா பிடுங்க போக... அவளிடம் அதை கொடுக்காமல் கையை பின்னால் இழுத்துக்கொண்டவன்.

"ஒரு நிமிஷம் இரு " என்றவன் போனை பார்க்க போக..


"சின்னையா போதும் பார்த்தது குடுங்க.. " என்று ரோஜா மீண்டும் போனை பிடுங்கப் போக..

அவளை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் போனை ஆன் செய்தான். அது லாக் போடப்பட்டு இருக்க.. ரோஜாவை பார்த்தவன் "password சொல்லு" என்றான்.

அவள் ம்ஹும் மாட்டேன் என்று தலையாட்ட..

"ம்ச்... சொல்லு.. " என்று அழுத்தமாக சித்து கேட்டான்.

"ம்ஹும்.. மாட்டேன்.. நீங்க அதுல இருக்க போட்டோவை பாத்துருவிங்க..." என்று பாஸ்வேர்டை சொல்ல மறுத்தாள்.

"அதான் நான் பார்த்துட்டேனே .. ஆனா சரியா பக்க முடியல அதுக்குள்ள தான் நீ போனை வாங்க வந்துட்டே " என்றவன். போனை அவள் முன்பு நீட்டியவன் பாஸ்வேட்டை போட சொன்னான்.

ரோஜா முடியாது என்பது போல மீண்டும் தலையை ஆட்ட..

அதில் சித்துவின் பொறுமை குறைந்து கோபம் தலைக்கு ஏறியது. அதே கோபத்தில் ரோஜாவை நெருங்கியவன் "இப்போ போன் லாக் எடுக்க போறியா? இல்லையா?" என்றான்.

ரோஜா அவன் கோபத்தை பார்த்தும் கொஞ்சம் இறங்கி வராமல் அழுத்தமாக அவனை பார்த்தாள்.

அதில் சித்துவிற்கு மொத்தமாக பொறுமையை இழக்க...

ரோஜாவின் கழுத்தை பிடித்து சுவற்றில் அழுத்தி பிடித்தவன் தன் கையை அவள் கன்னத்தில் வைத்து அழுத்தியவன் "ஏன் லாக் எடுக்க மாட்டேங்குற... உன் போன்ல என்கிட்டே காட்ட கூடாத பெர்சனல் எதுவும் இருக்கா ?" என்றான் கோபமாக.

"ம்ஹும்.. இல்ல.. " என்று திக்கி திணறி பேசியவள் . "நீங்க அந்த போட்டோவை பார்த்தா என்னை தப்பா... " என்று பார்வையை தாழ்த்திக்கொண்டு ரோஜா கூற..

"அந்த போட்டோவுல அப்படி ஒன்னும் தப்பா இருக்க மாதிரி எனக்கு தெரியல " என்றான் அவள் கன்னத்தில் அழுத்தம் கூட்டி ..

அதில் ரோஜாவின் உதடுகள் குவிந்து அவள் அணிந்து இருந்த லிப்ஸ்டிக் அவள் உதட்டை மேலும் எடுப்பாக காட்ட ..

அவள் உதட்டை அழுத்தி பிடித்து ரோஜாவின் செந்நிறம் பூசிய உதட்டை பார்த்துக்கொண்டே "கடைசியா கேக்குறேன் . ஓபன் பண்ண முடியுமா? முடியாதா?" என்றான்.

ரோஜா இப்போதும் அழுத்தமாக நிற்க... சிரித்தும் தாமதிக்காமல் அவள் குவிந்து இருந்த இதழை மொத்தமாக தன் இதழுக்குள் சிறைபிடித்திருந்தான்.

ரோஜா அதை எதிர்ப்பார்க்காதவள் பதற்றத்தில் கண்களை இருக்க மூடிக்கொள்ள..

மூர்க்கமாக அவளுக்கு முத்தமிட்டு பிரிந்தவன் மீண்டும் அதே கேள்வியை கேட்டான்."முடியுமா? முடியாதா?"

அவள் மூச்சு வாங்க சித்துவை பார்த்தவள் "சின்னையா நீங்க பண்றது சரி இல்ல... " என்று அவன் கேட்டதிற்கு பதில் சொல்லாமல் அவனை பார்த்தாள் .

அடுத்த நொடி மீண்டும் அவள் இதழை சிறையெடுத்திருக்க...

ரோஜாவிற்கு சிந்துவின் இந்த திடீர் செயல் மேலும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது . செய்வதறியாமல் சித்துவின் தோளில் கையை வைத்து அவனை பலம் கொண்ட மட்டும் தன்னிடம் இருந்து பிரித்தவள் "என்ன சின்னையா சாதாரண ஒரு போட்டோவுக்காக இப்படி எல்லாம் நடந்துபிங்களா நீங்க.. " என்றாள் மூச்சு வாங்கிக்கொண்டே.

"அதே தான் நானும் கேக்குறேன் . சாதாரண அந்த போட்டோவை ... அதுவும் என்னோட போட்டோவை என்கிட்டே காட்ட நீ ஏன் இவ்ளோ யோசிக்குற... நான் அதை சரியா பாக்கல... என் முகத்தை மட்டும் தான் பார்த்தேன். என்னோட படத்தை நீ எப்படி வரைஞ்சிருக்கேன்னு நானும் பாக்கணும்னு கேட்டா . என்னவோ லாக் எடுக்க மாட்டேங்குற.. " என்றான் கோபம் குறையாமல்.

"அது.. அது .. நான் சும்மா இருக்கும்போது வரைஞ்சது. அது சரியா வரல.. அந்த போட்டோவை நீங்க பார்த்தா என்னை தான் திட்டுவீங்க... " என்று ரோஜா ஏதாவது சொல்லி அவனிடம் இருந்து அந்த போட்டோவை காட்டாமல் சமாளிக்கலாம் என்று நினைத்து பேசினாள் .

"முதல்ல நான் அந்த போட்டோவை பாக்குறேன் அப்பறோம் பேசிக்கலாம். இப்போ மட்டும் நீ போன் லாக்கை எடுக்கல அப்பறோம் நான் மறுபடியும் உனக்கு.. " என்று சொல்லி அவள் முகத்தை இருகைகளாலும் ஏந்தி பிடித்தவன் அவன் முகத்தருகே ரோஜாவின் முகத்தை இழுக்க..

"சின்னையா இருங்க.. நான் போட்டோவை காட்டுறேன் " என்று சித்துவிடம் இருந்து முத்தத்தை வாங்குவதை விட அந்த போட்டோவை காட்டுவதே மேல் என்று நினைத்தவள் அவனிடம் இருந்த போனை வாங்கி அதன் லாக்கை ஓபன் செய்தாள் .

அவள் பாஸ்வர்ட் போடும்போது அவள் ஷ்க்ரீனை பார்த்தான் அவள் ஒவ்வொரு எழுத்தாக அழுத்த அதை படித்துக்கொண்டே வந்தவன் "s ..i ...d ...h ...u ... "என்று முழுவதும் பார்த்தவனுக்கு ஆச்சர்யமானது.

சித்து பாஸ்வெர்டை படித்தது ரோஜா கவனிக்கவில்லை . அவள் இருந்த பதட்டத்தில் அதை அவள் மறந்துவிட்டாள் .

தன் பெயரை அவள் மொபைல் லோக்கல் செட் செய்து வைத்திருப்பவளை பார்த்துக்கொண்டே அவள் கொடுத்த போனை வாங்கி அதில் இருந்த அவன் போட்டோவை பார்த்தவனுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது,

அவன் போட்டோவை ஆள் உயரத்திற்கு வரைந்திருந்தாள் ரோஜா. அதை பார்த்தவன் "இது என்ன வேஷ்டி சட்டை போட்டு வரைஞ்சிருக்க.. அதுவும் கிராமத்து ஸ்டைலில் " என்றான்.

"அது... அது வந்து .. எங்க ஊர்ல வயலுக்கு போறவங்க எல்லாம் இப்படி தான் டிரஸ் பண்ணிருப்பாங்க. அதை பார்த்ததும் உங்களை இப்படி வரைஞ்சு பாக்கணும்னு தோணிச்சு அதான் அப்படி வரைஞ்சேன் " என்றாள்.

"ம்ம்ம்... " என்று தலையை ஆட்டிக்கொண்டே ஜூம் செய்து இருந்த போட்டோவை சிரியதாக்கிவிட்டு அடுத்த போட்டோவை நகர்த்த போக..

"அதான் பாத்துட்டீங்க இல்ல.. போனை குடுங்க.. " என்று போனை வாங்க போக...'

"இரு கியூட்டி என்ன அவசரம் இன்னும் என்னை எந்த மாதிரி எல்லாம் பாக்கணும்னு நீ கற்பனை பண்ணி வரைஞ்சு வெச்சிருக்கேன்னு நான் பாக்க வேணாமா.. " என்று அவளிடம் போனை தர மறுத்து அடுத்தடுத்த போட்டோக்களை பார்க்க ஆரம்பித்தான்.

தான் நடித்த படங்களில் அணிந்து வந்த ஆடைகளை தனக்கு வரைந்து நிறைய போட்டோ எடுத்து வைத்து இருந்தாள் ரோஜா. அதையெல்லாம் பார்த்த படி அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு அடுத்த போட்டோவை பார்த்தவன் வாயடைத்து போய்விட்டான்.

அதை கவனித்த ரோஜா "என்ன சின்னையா இப்படி பிரீஸ் ஆகிருக்காரு.. அப்படி பிரீஸ் ஆகுற அளவுக்கு " என்ன போட்டோவா இருக்கும் என்று யோசித்தவள் அடுத்த நிமிடம் அவன் பாத்திருக்கும் போட்டோ என்ன என்பதை புரிந்துவிட "ஐயோ! சின்னையா!" என்று அவன் கையில் இருந்த மொபைலை பிடுங்கிக்கொண்டு ஒரே ஓட்டமாக அந்த அறையை விட்டு வெளியே ஓடிவிட...

தான் பார்த்த போட்டோவை நினைத்து சித்துவின் உடல் எல்லாம் ஏதோ ஒரு பரவசத்தை அடைந்ததாக அவனுக்கு தோன்றியது . மீண்டும் அந்த போட்டோவை ஆசை தீர பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் அவனுக்கு தோன்ற.. அவனிடம் மாட்டிக்கொள்ளாமல் ஓடுபவளை துரத்திக்கொண்டே அவள் பின்னால் சென்றான் சித்து
 

Author: layastamilnovel
Article Title: யாரடி நீ 17
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

preethi

Member
Joined
Oct 6, 2024
Messages
61
I think sid roja and avenga pasanga la erukum crt ta sis . Daily ud poduga sis super 😊 I always waiting for this stry.
 
Top