- Joined
- Oct 6, 2024
- Messages
- 308
மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்த சித்து அங்கே அவனுக்கு முன்பாக அமர்ந்திருந்த ரித்திகாவையும் ராகுலையும் பார்த்தான்.
அவர்கள் இருவரையும் பார்த்தவன் கடுப்பாக திரும்பி விஷ்ணுவிடம் "இவங்க ரெண்டு பேரும் எதுக்கு இங்க வந்திருக்காங்க. இவங்களுக்கு இங்க என்ன வேலை" என்று கேட்டான்.
"என்னை ஏன் முறைக்கிற இந்த ப்ராஜெக்ட்ல அவளை கமிட் பண்ணினதே நீதானே. அப்பறோம் அவ இங்க வராம எப்படி இருப்பா" என்றான் விஷ்ணு.
"அப்போ இருந்த சூழ்நிலை வேற... ஆனா அவ இந்த ப்ராஜெக்ட்ல இருக்கக் கூடாது. எனக்கு அவ இந்த ப்ராஜெக்ட்ல இருக்க வேணாம். அவ இந்த ப்ரொஜெக்ட்ல இருந்தா நான் இந்த ப்ரொஜெக்ட்ட்ல இருந்து விலகிடுறேன்" என்றவன் உள்ளே செல்லாமல் அபப்டியே நிற்க...
"என்ன சித்து இது .. நீ இப்படி லாஸ்ட் மினிட்ல சொன்னா என்னடா செய்றது" என்று விஷ்ணு யோசிக்க..
"அப்போ உன்னால முடியாது அப்படி தானே... அப்போ நான் வரல இந்த ப்ரொஜெக்ட்ல இருந்து விலகிக்கிறேன்னு ராபர்ட்கிட்டே சொல்லிடு . நான் இப்பவே இந்தியா கிளம்பறேன் " என்று திரும்பி வெளியே வேகமாக சென்றான் சித்து.
"ஐயோ! இவன் என்ன இவ்ளோ தூரம் வந்துட்டு இப்படி முடியாதுன்னு சொல்லிட்டு போறான். இவ வேற கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம பண்றதையும் பண்ணிட்டு வந்து எப்படி வந்து அவன்கூட ஜோடியா இங்க வந்திருக்கா பாரு" என்று ரித்திகாவை முறைக்க...
அவளோ சித்து வெளியே சென்றதை பார்த்து நக்கலாக சிரித்தவள் "என்ன விஷ்ணு.. உன் பிரெண்டு எங்களை பார்த்ததும் இந்த ப்ரொஜெக்ட்டே வேணாம்னு திரும்பி போய்ட்டானா" என்றாள் .
"ஏய் ரித்திகா ரொம்ப பேசாத என்ன.. வெட்கமில்லாம அவன் போட்ட பிச்சையில இங்க வந்து உகந்ந்துட்டு அவனையே பேசுவ நீ.. ஒழுங்கா இந்த ப்ரொஜெக்ட் வேணாம்னு நீயாவே எழுதி குடுத்துட்டு போய்ட்டு.. இல்ல... " என்று ரித்திகாவை எச்சரிக்க..
"இல்லென்னா என்ன டா பண்ணுவ.. என்ன பண்ணுவ.. என்ன ரொம்ப திமிரா பேசுற.. " என்று ராகுல் எழுந்து விஷ்ணுவிடம் சண்டைக்கு செல்ல...
"அப்படி தான் டா பேசுவேன். இப்படி ஒரு கேவலமானவளை கல்யாணம் பண்ணிட்டு கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம அவகூட சேர்ந்து எங்க சித்து காசுல ஹனிமூன் கொண்டாட வந்திருக்க.. நீ இதை பத்தி பேச அருகதை இல்லாதவன். வாயை திறந்த.. நானே உன் வாயை அடித்து உடைச்சிருவேன்" என்று விஷ்ணு கோபத்தில் ராகுலை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு செல்ல...
"WHAT IS HAPPENING HEAR !!! " என்று ராபர்ட் அங்கு நடப்பதை பார்த்து சத்தமிட்டவர் விறுவிறுவென உள்ளே நுழைந்தார்,
ராபர்ட் வருவதை பார்த்த மூவரும் அமைதியாகிவிட...
அவரோடு வந்த சித்து ரித்திகாவையும், ராகுலையும் முறைத்துவிட்டு வந்து அவனுக்காக போட்டிருந்த சேரில் அமர்ந்தவன் "விஷ்ணு !!" என்று அழைத்தான்.
சித்துவின் ஒற்றை குரலில் மறுபேச்சு இல்லாமல் வந்து அவன் அருகில் அமர்ந்தான்.
ராபர்ட் சித்துவையும், ரித்திகாவையும் பார்த்தவர்.
"இந்த மீட்டிங் இங்கே பண்ணினது நம்ம ப்ராஜெக்ட் பத்தி மட்டும் பேச நான் இங்க வரல... நான் ஒரு முடிவை எடுத்துட்டு தான் இங்க வந்திருக்கேன்" என்றவர்.
"சித்துவோட பியான்ஸே அப்படிங்குறதுனால தான் நான் உங்களை இந்த மீவில கமிட் பண்ணவே சம்மதிச்சேன். பட் நீங்க மிஸ்டர் சித்துவை BETRAY பண்ணிருக்கீங்க... இது உங்க ரெண்டு பேருக்குள்ள மட்டும் நடந்திருந்தா எந்த பிரச்னையும் வந்திருக்காது. ஆனா வேர்ல்ட் வைடா நீங்க மிஸ்டர் சித்துவை BETRAY பண்ணின விஷயம் டிவியில் லைவா டெலிகாஸ்ட் ஆகியிருக்கு . அதனால இந்த மூவியில இருந்து உங்களை நீக்கிட்டோம் " என்று ரித்திகாவை பார்த்து ராபர்ட் கூற...
"சார் என்ன இப்படி திடீர்னு வந்து என்னை இந்த படத்துல இருந்து நீக்கிட்டேன்னு சொல்றிங்க.. இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். யாரை கேட்டு இப்படி முடிவெடுத்தீங்க... " என்று ரொபெர்ட்டிடம் சண்டையிட்டாள்.
"மிஸ் ரித்திகா THIS IS MY PROJECT . I KNOW WHAT TO DO... WHO SHOULD BE THERE IN THIS PROJECT KNOW I HAVE DECIDED , YOU ARE NOT IN THIS PROJECT " என்று ஒரே முடிவாக ராபர்ட் கூறிவிட...
அதற்கு மேல் எதுவும் பேசமுடியாமல் ரித்திகா வாயடைத்து அமர்ந்து இருக்க...
"ராபர்ட் சார் சொன்னதை கேட்ட தானே.. சத்தம் போடாம இங்க இருந்து கிளம்பு " என்றான் நக்கலாக.
"டேய் நீ தேவை இல்லாம பேசாத.." என்று ரித்திகா கோபமாக பேச...
"மிஸ் ரித்திகா ப்ளீஸ் ... " என்று ராபர்ட் அவளை அந்த மீட்டிங் ஹாலை விட்டு போக சொல்லி கையை வாசலை நோக்கி நீட்டி இருக்க...
அதை பார்த்து கோபமானவள் "ராகுல் கிளம்பு... " என்று விருட்டென எழுந்து அந்த ஹாலை விட்டு வெளியேறி இருந்தாள்.
"அப்பாடா ஒரு வழியா சனியன் ஒழிஞ்சிது" என்று விஷ்ணு நிம்மதியானவன் சித்துவை பார்த்தான்.
ஆனால் அவன் இன்னும் கோபம் குறையாமல் ரித்திகா சென்ற திசையையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
"சித்து... சித்து... " என்று விஷ்ணு மெல்ல அழைக்க...
அவன் அழைப்பில் திரும்பியவன் "என்ன டா... " என்றான் சற்று கடுப்பாக.
"அவ தான் போய்ட்டா இல்ல... ராபர்ட் சார் கிட்டே பேசு.." என்றான்.
ராபர்ட்டை பார்த்தவன் "சாரி மிஸ்டர் ராபர்ட் என்னால உங்களுக்கு தான் வீண் டென்ஷன் " என்றான்.
"இட்ஸ் ஓகே மிஸ்டர் சித்து. லீவ் இட் .. " என்றவர் .
அடுத்து அவர்கள் ஆரம்பிக்கப்போகும் புது படத்தை பற்றிய பேச்சுவார்த்தையை துவங்கினர் இருவரும் மிகவும் தீவிரமாக தங்கள் அடுத்த ப்ராஜெக்ட் பற்றி பேசி முடிவெடுக்கும்போது இரவு 9 ஐ தொட்டிருந்தது.
அனைத்தையும் பேசி முடிவெடுத்த பின் "மிஸ்டர் சித்து இந்த மூவிக்கான காஸ்டியூம், மத்த டீடெயில்ஸ் எல்லாம் பிரிப்பர் பண்ண எப்படியும் ஒரு 10 டேஸ் ஆகிடும். நீங்க இருந்து எல்லா ஒர்க்கும் முடிச்சு கொடுக்கிறீர்களா .. இல்ல உங்க வைப் கூட நீங்க உங்க மேரேஜ் செலிப்ரேஷன்ஸ் எல்லாம் முடிச்சிட்டு வந்து நம்ம மூவி ஒர்க் பாத்துக்கலாமா ... " என்றார்.
"செலிப்ரேஷன்ஸ்!! " என்று சித்து சற்று கடுப்பாக கேட்க...
"அஹ் ! சித்து கொஞ்சம் பொறுமையா இரு... நான் பேசிக்கிறேன் " என்ற சித்து,
"சார் சித்து வைப்புக்கு ஒரு எக்ஸாம் இருக்கு . அதை முடிச்சுட்டு அவங்க சித்து கூட ஹனிமூன் கொண்டாட லண்டன் தான் வராங்க.. அநேகமா அவங்க இந்த நேரம் கிளம்பி லண்டனுக்கு வந்துட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்றான்.
"OH ! REALLY ! " என்று சந்தோசமான ராபர்ட்.
"ஓகே அவங்க இங்க வந்ததும் நம்ம ப்ரொடக்ஷ்ன் டீம் சார்பா ஒரு சின்ன பார்ட்டியை நான் அரேஞ் பண்றேன். டுமாரோ ஈவினிங் பார்ட்டி வெச்சுக்கலாம். நான் உங்களுக்கு TIME , VENUE டிசைட் பண்ணிட்டு கால் பண்றேன் " என்றவர் இருவரிடமும் விடைபெற்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
"அப்பாடா எப்படியோ நீ நினைச்ச வேலை நல்ல படியா முடிஞ்சிருச்சு. இத்தனை நாளா நீ எதிர்பார்த்துட்டு இருந்த ப்ராஜெக்ட் நல்ல படியா ஆரம்பிக்க போறோம். எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா மச்சான் " என்று சித்துவை கட்டிக்கொண்டு தன் நண்பனின் நீண்ட நாள் கனவு நனவானதை நினைத்து சந்தோஷப்பட்டான் விஷ்ணு.
அவனை போலவே சித்துவிற்கும் இந்த ப்ராஜெக்ட் நல்ல படியாக முடிந்ததில் சந்தோஷமானான்.
ஆனாலும் காலை அவன் அறை முன்பு வந்த ரித்திகாவும், ராகுலும் சித்து ரோஜாவை பற்றி பேசியது இன்னமும் அவன் மனதில் ஓடிக்கொண்டு இருக்க.. ரோஜா எழுதிய கடிதம் என அனைத்தும் அவன் மனதை அலைகழித்திருந்தது.
"அவ எப்போ டா லண்டன் வரா... " என்றான் அந்த ஹாலைவிட்டு வெளியே கிளம்பிய படி..
"எவ.. "என்றவன் சித்து ரோஜாவை தான் கேட்கிறான் என்று புரிந்து கொண்டவன்.
"மதியம் 1.55 பிலைட்ல ரோஜாவை அனுப்பிட்டதா நீங்க மீட்டிங்கில் இருக்கும்போதே எனக்கு ஸ்ருதி மேடம் மெசேஜ் அனுப்பிட்டாங்க. நான் தான் மீட்டிங் முடிஞ்சதும் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். எப்படியும் நைட் 10, 11 மணிக்குள்ள ரோஜா லண்டன் வந்திருவாங்க " என்றான்,
"என்ன புதுசா வாங்க போங்கன்னு அவளுக்கு மரியாதை" என்றான் சித்து காரில் ஏறிக்கொண்டே...
"முதல்ல ரோஜா நம்ம பாப்பாவோட பொண்ணு. ஆனா இப்போ உன்னோட வைப் இல்லையா அப்போ அதுக்குண்டான மரியாதையை நான் குடுக்கணும் தானே" என்று சொல்லிக்கொண்டே காரின் முன் சீட்டில் அமர்ந்தவன் .
"டிரைவர் ஹோட்டலுக்கு போங்க.. " என்றான்.
"இப்போ எதுக்கு ஹோட்டல் போகணும் " என்றான் சித்து.
"வேற எங்க போறது சித்து " என்றான் விஷ்ணு புரியாமல்.
"ஏர்போர்ட் " என்றான்.
சித்து சொன்னதை கேட்டு யோசித்த விஷ்ணு தன் வாட்சில் மணியை காட்ட.. மணி இரவு 9. 50 என்று காட்டியது.
"ரோஜா வர இன்னும் 2 ஹௌர்ஸ் ஆகும் சித்து நம்ம அதுவர ஏர்போர்ட்ல இருந்து என்ன பண்ண போறோம் " என்றான்.
"இங்க இருந்து நம்ம இருக்க ஹோட்டலுக்கு எவ்ளோ நேரம் ஆகும் " என்றான்.
"ஒரு 45 மினிட்ஸ்.. " என்றான் விஷ்ணு .
"நம்ம ஹோட்டல்ல என்னை ட்ரோப் பண்ணிட்டு ஏர்போர்ட் போக எவ்ளோ நேரம் ஆகும் " என்றான் சித்து.
"ஒரு 1 அண்ட் ஹல்ப் ஹௌர் " என்றான் .
"இங்க இருந்து ஏர்போர்ட்டுக்கு எவ்ளோ ஹௌர் ஆகும்" என்றான்.
"எப்படியும் ஒரு ஒன்றரை மணி நேரம் ஆகும் "என்றான்.
"அப்போ நீயே யோசிச்சுக்க எது உனக்கு அலைச்சல் இல்லாம சுலபமா இருக்கும்னு " என்று கூறிவிட்டு சித்து சீட்டில் சாய்ந்து வசதியாக அமர்ந்து கொள்ள...
விஷ்ணு கணக்கு போட்டு பார்த்தவன் "டிரைவர் ஏர்போர்ட் போங்க.. " என்றவன் "நல்ல வேலை நேரா ஏர்போர்ட் போறோம் இல்லேன்னா.. நான் ரோஜாவை அழைச்சிட்டு வாரத்துக்கு லேட் நைட் ஆகிருக்கும் . " என்றான் சித்துவிடம்.
சித்து எந்த பதிலும் பேசாமல் கண்மூடி படுத்திருந்தான்.
விஷ்ணுவிற்கு தன் வேலையை சித்து சுலபப்படுத்தி விட்டான் என்று சந்தோசமாக இருக்க...
இங்கே சித்துவோ ரோஜா வரும் வரை அவனால் தனியாக ரித்திகாவின் முன்பு ஹோட்டலில் தங்க முடியாது என்று நினைத்து தான் . ஹோட்டலுக்கு செல்லும்போது தன்னோடு சேர்ந்து ரோஜாவையும் அழைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்ற முடிவோடு தான் விஷ்ணுவிடம் ஏர்போர்ட் போகலாம் என்று சொல்லி இருக்கிறான் என்று விஷ்ணுவிற்கு தெரியாது.